தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 21, 2017

7 வதில் 7 ½


ஏண்டா அந்த வக்கீலு பேரு, ஏன் துண்டு துரைனு சொல்றாங்க ?
வேறொண்ணுமில்லே அவருக்கிட்ட கேஸை கொண்டு போனா போனவனை கடைசியிலே இடுப்புல துண்டு மட்டும்தான் மிச்சம் விடுவாராம், 
* * * * * * *01* * * * * * *
எதுக்கு... இங்கே போலி போலீஸ் ஸ்டேஷன்னு எழுதிபோட்டு இருக்காங்க ?
இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க யாரு வந்தாலும் அவன் மேல போலியா ஒரு கேஸ் எழுதுவாங்களாம், அதுனாலதான்
* * * * * * *02* * * * * * *
இந்த பல் டாக்டரை எல்லாரும் ஏன் கொரடு கொம்பையானு சொல்றாங்க ?
இவருட்ட யாரு, பல் வலிக்கு வந்தாலும் பல்லை புடுங்காம விடமாட்டாராம்.
* * * * * * *03* * * * * * *
இந்த கடைக்கு ஏன் மறந்து மருந்துகடைனு பேர் வச்சுருக்காங்க ?
இந்தக் கடையிலே ஒரு தடவை மருந்து வாங்குறவன் உடனே மறந்துடுவானாம்... ஏன்னா அவன்தான் செத்துடுவானே.
* * * * * * *04* * * * * * *
இந்த ஆபீஸரை ஏன் செக் செல்லமுத்துனு சொல்றாங்க ?
இவருக்கு லஞ்ச பணத்தை செக்கா கொடுத்தாதான் வேலை நடக்குமாம்.
* * * * * * *05* * * * * * *
இவனை ஏன் தீ தீனதயாளன்னு சொல்றாங்க ?
கடன் கொடுத்தவன், திருப்பி கேட்டால்.... வீட்டுக்கு தீ வச்சுடுவானாம்.
* * * * * * *06* * * * * * *
சரி உன்னை ஏன் எல்லோரும் படாபட் பட்டாபினு சொல்றாங்க ?
நான் பேசிக்கிட்டு இருக்கும்போதே, படார் படார்னு அறைஞ்சிடுவேனாம்.
* * * * * * *07* * * * * * *
சொல்லிக் கொண்டு, இருக்கும்போதே... படார் படார் என அறைந்து கொண்டிருக்க... கேட்டவன் தெறித்து ஓடிக்கொண்டிருந்தான்.... 

48 கருத்துகள்:

  1. ம்ம்ம், ச்சும்மா தெறிக்க வுடுறீக. நன்றி மீண்டு ம் வருக.

    பதிலளிநீக்கு
  2. 1. துண்டைக்காணோம் துணியைக் காணோம்னு ஜட்ஜை ஓடவிட்டுடுவாரோன்னு பார்த்தேன்!

    2. புகார் கொடுக்க வர்றவங்க கிட்ட எல்லாம் எதிர்ல இருக்கற வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்லேருந்து போளி வாங்கி வரச் சொல்வார்களாம். போளி ஸ்டேஷன்னு எழுதச் சொன்னா எழுதியவர் போலி ஸ்டேஷன்னு எழுதிட்டாராம்!

    3. பல்லைப் பிடுங்கி பின்னர் ஃபீஸைப் பிடுங்குவார்!

    4. சரியான என்ன மருந்து கொடுக்கணும்னு மறந்து போற கடை!

    5. லஞ்சம் கொடுக்காட்டி அந்த வேலைக்கு செக் வச்சுடுவார் போல!

    6. தயாளன் என்னும் வார்த்தையை நீக்கக் கோருகிறேன்!

    7. பட்டாபி - ரொம்பக் கெட்டாபி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவைவிட சிறப்பான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. பல் டாக்டர் நம் பல்லை புடுங்குகிறாரோ இல்லையோ நம் பர்ஸில் உள்ள பணத்தை நம் கண்முன்னாலே புடுங்குகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அனுபவம் எல்லோருக்கும் உண்டு நண்பரே

      நீக்கு
  4. ஆஹா... அனைத்துமே அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. இவரை ஏன் கி கில்லர்ஜீ என்கிறோம்.
    இவர் எல்லோரையும் தனது பதிவின் மூலம் ‘கிச்சுகிச்சு’ மூட்டுவதால்!
    (உரிமையுடன் எழுதியுள்ளேன்.தவறாக எண்ணவேண்டாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதென்ன புதுசா இருக்கு ? கி.கி. ஹா.. ஹா.. ஹா..

      நமக்கு மூன்றடுக்கு வந்தால் பொருந்துமே...

      நீக்கு
  6. நீங்கள் பேசாமல் ஆர் கெ நகரில் நில்லுங்கள்

    நான்கு வாக்குகள் ...
    என்னோடு ஐந்து பேர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்மீது சாக்கடையை தெளிக்க திட்டமா தோழரே ?

      நீக்கு
  7. எல்லாருடைய நிலையும் இப்படியிருக்க
    ஏழரையின் நிலை எப்படியிருக்கும்?..

    நல்லவேளை எட்டரை பத்தரை என்று இருந்தால் என்னாவது?..

    பதிலளிநீக்கு
  8. ...ஹஹஹ....அது சரி பர்ஸை காலியாக்காத பல் டாக்டர் உண்டோ..செக் கொடுக்கலைநா உங்க வேலைக்கு செக்...பரவால்ல லஞ்சம் கூட அக்கவுண்ட்ல வந்துருதே ...அப்ப அது லஞ்சமாகுமா!!!!!

    சரி..இப்படிச் சொன்னதுக்கு படார்னு அறைஞ்சிடாம இருக்கணும் ஸோ எஸ்கேப்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் சொன்னதுபோல பட்டாம்பியிடம் சொல்லிடாதீங்க...

      நீக்கு
  9. ரசித்தேன். ஃபார்முக்குத் திரும்பிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  10. சிரிக்க வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  11. அறைஞ்சிடுவேணாம் என்றால் பட்டாபி நிதானத்தில் இருக்க மாட்டாரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக் வகையறா இப்படித்தான் இருப்பானோ ஜி ?

      நீக்கு
  12. ஆஹா அருமை ஐயா.இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. துண்டாவது மிஞ்சியதே!

    பதிலளிநீக்கு
  14. படித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு எதுவும் ஏழரை ஆகாதுங்களா,,,????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நீங்க பட்டாபியிடம் கேட்கணும் நண்பரே

      நீக்கு
  15. பல தடவை வாய்விட்டுச் சிரித்தேன் நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்தமை அறிந்து ரசித்தேன் நண்பரே

      நீக்கு
  16. உங்கள் பதிவையும் ரசித்தேன், ஶ்ரீராமின் பதில்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. பிச்சி ஓதரிட்டீங்க நண்பரே!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  18. இந்த மாதிரி எல்லாம் உங்களால் மட்டுமே எழுத முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  19. அருமையான கேள்விக் கணைகள்
    பயனுள்ள கருத்துகள்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு