வெள்ளி, மார்ச் 17, 2017

கா.கா.தி.ஹைக்கூ


கார்பெண்டரின்... ஹைக்கூ.
அன்று உன் விழியால் குத்தி
வலியால் துடிக்க விட்டாய் என்னை,
இன்று என் உளியால் குத்தி
பழி வாங்கினேன் உன்னை
ஆகவே நீ போனாய் மேலூருக்கு...
நான் போனேன் வேலூருக்கு...

காதலனின்... ஹைக்கூ.
கண்ணே என்றேன் கனிவாய் உன்னை,
களங்கப்படுத்தி விட்டான் என்றாய் என்னை,
கலக்கத்தை மனதில் உண்டாக்கினாய் நீ
களங்கத்தை உறுதிப் படுத்தினேன் நான்
களங்கத்தால் நீ போனாய், திரும்பாக்கோட்டை
கைதாகி நான் போனேன், பாளையங்கோட்டை.

திருடரின்... ஹைக்கூ.
பறிக்க வந்தேன் செயினை
மறிக்க வந்தாள் செல்லாயி
பிடித்து விட்டேன் கைப்பையை
கடித்து விட்டாள் என்கையை
ஜெயில் எனக்கு, செயின் போலீசுக்கு
ஆனால் உனக்கு ? ? ? 
திருந்துவீர் திருமதிகளே...
உதவுவீர் திரு. திருடர்களுக்கு.

சாம்பசிவம்
புடிபடவும் திரு திருனு முழிச்சுருப்பானே... திருடன் திருநாவுக்கரசு மன்னிக்கவும் திரு. திருடர். திருநாவுக்கரசர்ரர்ர்ர்ர்ர்ர்ர

44 கருத்துகள்:

 1. இப்படியெல்லாம் இருக்கின்றதா?..
  திருந்தாத ஜன்மங்களுக்கு ஜெயில் தான்..

  பதிலளிநீக்கு
 2. ‘ஹைக்கூ’ கவிதை வரிகள் அருமை. அரசியல்வாதிகளுக்கான ஹைக்கூ என்னவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்.கே தொகுதி தீர்ப்பு வரட்டும் ஓகே செய்வோம் நண்பரே

   நீக்கு
 3. இதெல்லம் ஹைக்கூ அல்ல
  நாமெல்லாம் சிந்திக்க வைக்கின்ற
  தலையிடி தரும் புதுக்கவிதைகளே!

  பதிலளிநீக்கு
 4. மனதைக் கவர்ந்த நல்ல சந்தமும் கருத்தும் பொதிந்த கவிதைகள்.

  கில்லர்ஜியின் படைப்பாற்றல் மேலும் வளர்க.

  பதிலளிநீக்கு
 5. திருடர்கள் பொன் முட்டையிடும் வாத்தைப் போன்றவர்கள் ,போலீஸ் அவர்களின் மொத்தப் பங்கையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் :)

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் யாழ்பாவாணனின் கருத்தே தோன்ற்யதுநான் ஹைக்கூ என்று நினைத்ததே வேறு இவை நல்ல கருத்துள்ள புதுக்கவிதைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மையிலேயே எனக்கு இந்த வேறுபாடுகள் அறியேன்
   நல்ல கருத்து என்றமைக்கு நன்றி

   நீக்கு
 7. ரசித்தேன் அனைத்தையும் நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. அகா அருமை ..அருமையிலும் அருமையாக திருடனின் கைக்கூ கவிதை அபாரம்...நண்பரே...

  பதிலளிநீக்கு
 9. அசத்தல் கவிதைகள்!!! கில்லர்ஜி! நிறைய இப்படி எழுதத் தொடங்குங்க....வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. சாம்பசிவம் உங்களையும் மிஞ்சி விடுவார் போலிருக்கே கமென்டடிச்சு....ஹஹ்ஹஹ

  கீதா

  பதிலளிநீக்கு
 11. வருக வரும (போலிகளை) வறுக்க வருக.

  பதிலளிநீக்கு
 12. புதுக்கவிதைகள் நல்லா இருக்கு. கடைசியில் உள்ள 'திருடன்' புதுக்கவிதை இன்னும் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா3/19/2017 7:26 பிற்பகல்

  கவிதை வரிகள் நன்றாக உள்ளது சகோதரா.
  தமிழ் மணம் - 11

  பதிலளிநீக்கு
 14. ஆழமான கருத்துள்ள கவிதை ஹைக்கூ விதிகளில் வரவில்லை என்றாலும் , புதுக்கவிதை என்ற தலைப்பில் சேர்க்கலாம்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...