100-ஐ சுற்றி மூன்று வலம்,
இடம் தாயும், மகனும் வீட்டில்....
அம்மா
நான் சினிமாவுக்கு போகணும், நூறுரூபா கொடு.
அப்படி
என்ன சினிமா பார்க்கப் போறே கண்ணா ?
நூறாவது
நாள்.
அந்த
மாதிரி சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது நீ கெட்டுப் போயிருவே நான் பணம்
தரமாட்டேன்.
அப்படினா
அவசர போலீஸ் நூறு சினிமாவுக்கு போறேன்.
ஆங்...
உங்க அப்பா போலீஸ்ல வேலை பார்த்து கிழிச்சட்டுட்டாரு நீ வேற அவசர போலீஸாம்
அதெல்லாம் பார்க்க கூடாது.
அப்படினா
நாகேஷ் நடிச்ச நூற்றுக்கு நூறு சினிமாவுக்கு போறேன்.
முதல்ல
நூற்றுக்கு நூறு மார்க் எடுத்துட்டு வா ! அப்புறமா நூறென்ன ? நூற்றெண்பது சினிமாவுக்கு
நான் கூட்டிட்டுப் போறேன்.
அதுக்கு
நான் இன்னும் நூறு மாசம் படிக்கணுமே.
இடம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரும், மாணவனும்....
இன்னைக்கு
நாம சோசியல் பாடம் நடத்தப் போறோம். எத்திராஜ் நீ எந்திரி உனக்கிட்ட ஒரு கேள்வி
கேட்கப் போறேன் இதுக்கு நீ சரியான பதில் சொன்னால் உனக்கு நூறு மார்க் தருவேன்
சரியா சொல்லலைனா, உன் தலையில நூறு கொட்டு தருவேன் இது ரெண்டுல நீ எதை விரும்புறே ?
இது
ரெண்டையுமே நான் விரும்பலை ஸார்.
வேற
எதை விரும்புறே ?
உங்ககிட்டருந்து
ஒரு நூறு ரூபா செலவுக்கு வாங்குறதை விரும்புறேன் ஸார்.
நான்
ஏன் உனக்கு பணம் கொடுக்கணும் ?
ஏன் ஸார்
கோபப்படுறீங்க ? நூறு ரூபா கூடஇல்லாம எதுக்கு
ஸார் வாத்தியார் வேலைக்கு வர்றீங்க ?
உட்கார்டா
நீ பதிலே சொல்ல வேண்டாம்.
Place – Noor Islamic Bank Coimbatore
வணக்கம்
ஸார்.
வாங்க
வணக்கம் என்ன விசயம் ?
எனக்கு
உங்க பேங்க்ல லோன் வேணும்
உட்காருங்க
உங்க பேர் ?
நூர்
முஹம்மது.
எங்கே
வேலை செய்றீங்க ?
நூரா
ஹாஸ்பிட்டல்ல,
கல்யாணம்
ஆயிடுச்சா ?
ஆயிடுச்சு
ஸார்.
மனைவி
பேர் என்ன ?
நூர்ஜஹான்.
கல்யாணம்
ஆகி எவ்வளவு காலமாச்சு ?
இன்னையோட
நூறு நாள்தான் ஆகுது ஸார்.
சொந்த
ஊரு இதுதானா ?
ஆமா
ஸார்.
சொந்த
வீடு இருக்கா ?
இருக்கு
ஸார்.
வீடு
யாரு... பேருல இருக்கு ?
எங்க
வாப்பா, நூருல்அமீன் பேருல இருக்கு ஸார்.
வீட்ல
எத்தனை பேருக்கு பங்கு இருக்கு ?
எனக்கும்,
எங்க அண்ணன் நூருல்ஹக் ரெண்டு பேருக்கு மட்டும் ஸார்.
புது
வீடா ?
பழைய
வீடுதான் கட்டி நூறு வருசம் இருக்கும் ஸார்.
வீடு
எங்கே இருக்கு ?
நூறடி
ரோட்ல.
எத்தனை
செண்டு இருக்கும் ?
பெரிய
வீடு பின்னால காலி இடத்தையும் சேர்த்தா நூறு செண்ட் இருக்கும் ஸார்.
எவ்வளவு
லோன் எதிர் பார்க்கிறீங்க ?
ஒரு
நூறு கோடி ரூபாய்.
எவ்வளவு
நாள்ல கட்டி முடிக்கலாம் ?
ஒரு நூறு
வருசத்துல கட்டிடலாம் ஸார்.
நூறுக்குள் நூர் முகம்மது!..
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்..
வருக ஜி தங்களுக்கும் வாழ்த்துகள்
நீக்குஹாஹா :) நூறில் ஆரம்பிச்சு நூறில் முடிச்சிருக்கீங்க :) செம கலக்கல் .அனைத்தையும் ரசித்தேன் .
பதிலளிநீக்குவருக ரசித்தமைக்கு நன்றி
நீக்குநூறு முறை சிரிச்சேன். :)
பதிலளிநீக்குஎண்ணிக்கொண்டே சிரித்தீர்களோ.?
நீக்குரசித்தேன். (நூறு முறை படித்துக் கொள்ளவும்!)
பதிலளிநீக்குஹா.. ஹா.. இப்படியும் படிக்கலாமோ...
நீக்குஇன்னைக்கென்ன நூறா இருக்கு. எல்லாவற்றையும் ரசித்தேன். த ம. மறக்கலை
பதிலளிநீக்குவருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி
நீக்கு‘நூறு’க்குள் புகுந்து விளையாடிவிட்டீர்கள்! கில்லர்ஜி நூற்றில் ஒருவரல்ல; நூறாயிரத்தில் ஒருவர்!!
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி
நீக்குஇந்த பதிவுக்கு நான் தரும் மதிப்பெண்கள் நூற்றுக்கு நூறு!
பதிலளிநீக்குஎல்லோருமே 100-ஐ பிடித்துக் கொண்டீர்களே...
நீக்குநூறு மார்க்...
பதிலளிநீக்குஹா.. ஹா.. நன்றி ஜி
நீக்குமுதலில் பதிவுக்கு 100 மார்க்ஸ் :)
பதிலளிநீக்குஎல்லா 'நூறு' களையும் ரசித்தேன். தொகுத்தவிதம் சூப்பர்.
இந்த ஒரு பதிவ படிச்சா, நூறு பதிவு படிச்ச மாதிரி இருக்கு :) :)
வாங்க நண்பா வருகைக்கு நன்றி
நீக்குநூறை வைத்தே வார்த்தை விளையாட்டு கீப் இட் அப்
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஎன்னைய இப்படித்தான் ஒரு வாத்தியாரு பத்தாவதுல அஞ்சு வருசமா உடகார வச்சுட்டாரு நண்பரே...
பதிலளிநீக்குவருக நண்பரே அப்படீனாக்க... ஸ்ட்ராங்காத்தான் படிச்சு இருக்கீங்க...
நீக்குநூத்துக்கு நூறு அருமை.
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குநூறாண்டுகள் இதே போல் பகிர்க.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... இதுக்கு அந்த பேங்க் மேனேஜரே தேவலை போலயே....
நீக்குநூர் இஸ்லாமிய வங்கியில் வட்டியில்லா கடன் பெற்று கொள்ள கில்லர்ஜி ஏதோ ரிப்ஸ் தருகிறார் என்றல்லவா ஓடி வந்தேன்.
பதிலளிநீக்குபரவாயில்ல வாழ்த்துக்கள்.
வாங்க நண்பா தலைப்பு இப்படி வைத்தால்தான் பதிவுக்கு வர்றீங்க... மற்ற நேரம் வரமாட்றீங்களே நண்பா.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி
ஆகா
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
தம 10
வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி
நீக்குநூறு நூறாய் இருக்கு வாழ்க்கை,சொன்ன உங்களுக்கும் படித்த எங்களுக்கும் நூறு மார்க் போட்டுக்கொள்கிறோம்.
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஇதான் ஈத் ஸ்பெசலா ஜி :)
பதிலளிநீக்குவாங்க ஜி இதுக்காக நான் பிரியாணியா போட முடியும் ?
பதிலளிநீக்குஹா ஹா ஹா 100 ஐ வச்சே ஒரு பதிவை ஒப்பேத்திட்டீங்க.. அருமையான சிந்தனை...
பதிலளிநீக்குஅனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரம்ளான் வாழ்த்துக்கள்.
அருமையான சிந்தனைனு சொல்லிட்டு பிறகு ஒப்பேத்திட்டீங்க என்றால் என்ன அர்த்தம் ?
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஎன்னடா இது பதிவு எல்லாம் நூறா இருக்கே என்று பார்த்தா கடைசியில் ரமழான் வாழ்த்து அருமை ஜி !
அனைத்து இஸ்லாமிய நட்புகளுக்கும் இனிய ரமழான் தின
நல் வாழ்த்துகள் வாழ்க நலம்
தம +1
வருக பாவலரே வாழ்த்து புதுமையாக இருக்கப்டுமே...
நீக்குவித்தியாசமான வாழ்த்துகள்ண்ணே
பதிலளிநீக்குவருக சகோ மிக்க நன்றி
நீக்குசுக்கு நூறாய்க் கிடந்த மனச
பதிலளிநீக்குஅக்கு வேறு ஆணி வேறாய் ஆக்காமல்
சிக்கு புக்கு ரயிலாய் மாற்றிய
கிக்கு கில்லர்ஜீக்கு மனமார நன்றிகள் :)
அரபுத்தமிழனின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் மிக்க நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
100கிலோ மீற்றர்?கேட்டவுடன் நானும் சோர்ந்து விட்டேன் நல்ல நகைச்சுவையாக சொல்லியுள்ளீர்கள் த.ம15
வணக்கம்
ஐயா
முகம் காட்டாதவர்களை நான் சேர்ப்பதில்லை...மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக நண்பரே நன்றி.
நீக்குபகுதி கருத்து கவிஞர் திரு. ரமணி.S அவர்களின் பதிவுக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.
நூறு நூறு ரசித்தேன் சகோ.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குரசித்தோம் ஜி..வில்லங்கத்தார் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி..இது எப்படி இருக்கு.....
பதிலளிநீக்குஇது இந்த பதிவுக்கு மட்டும்தானே...
நீக்குஎன் நண்பர் நூர்மொகமதுவுக்கு
பதிலளிநீக்குலிங்க் கொடுத்தேன்
ரொம்ப சந்தோசப்பட்டார்
நூறு படா ஜோரு
வாழ்த்துக்களுடன்...
கவிஞருக்கும், தங்களது நண்பர் நூர் முஹம்மதுவுக்கும் நன்றி
நீக்குபல நூறு வாழ்த்துகள் தங்களின் திறனுக்கு.
பதிலளிநீக்குமுனைவரின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குhahaha nootrukku nooru super. anaithaiyum rasithen :)
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்கு