செவ்வாய், பிப்ரவரி 02, 2016

100 முட்டாள்க(ல்)ள்

உலகம் சமநிலை பெறவேண்டும்.
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்.

ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில், ஒரு ஊரில், ஒரு தெருவில், ஏன் ? ஒரு வீட்டில்கூட இந்நிலை வரவில்லையே... காரணம் என்ன ? மனிதமனம் சுருங்கி விட்டது நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் இல்லை எல்லோருமே சுயநலவாதிகள் இதற்கு அடிப்படை காரணம் இறை பயமில்லை அதற்கும் காரணம் மக்களைப்போல தெய்வங்களும் பெருக்கி விட்டது தனது தலைவன் அரசியலில் ஊழல் செய்துதான் இத்தனை சொத்துக்களும் சேர்க்க முடியும் என்பது தொண்டனுக்கு நன்றாகவே தெரிகிறது இருப்பினும் தலைவனை குற்றவாளி என்றோ ? தண்டனை கொடுப்பதையோ ? ஏற்க மறுக்கிறான் ஆனால் ? அந்த தலைவனோ.. குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு தத்துவம் பேசுகின்றான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தொண்டனுக்கு அறிக்கை விடுகிறான் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதீர்... பேரூந்துகளுக்கு தீ வைக்காதீர் என்கிறான் இதன் முழு அர்த்தமென்ன ? இதைச்செய் என்பதுதான் இதை அன்றே 1971ல் வெளியான முகம்மது பின் துக்ளக் என்ற திரைப்படத்தில் நடிகர் சோ அவர்கள் வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் பாமரப்பயல் தொண்டனுக்கு இதன் சூத்திரம் தெரிவதில்லை காரணம் அறியாமை இதற்கு காரணமென்ன ? இவனுடைய தந்தை இந்த தலைவனின் அப்பனுக்கு கொடி பிடித்தவன் நாளை இந்த தலைவனின் மகனுக்கு கொடி பிடிக்கப் போவதும் இந்தத் தொண்டனின் மகனே வாழையடி வாழையாக இதுதானே நடக்கிறது இந்தியாவின் மக்கள் தொகை கூடிக்கொண்டே இருக்கிறது இதில் பெருமையா ? ஒரு நாட்டில் 100 முட்டாள்கள் இருப்பதைவிட 5 அறிவாளிகள் போதுமே நாட்டை வளர்க்க... படித்தவன்கூட திரைப்பட நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் இருந்து கொண்டு தன்னை மாவட்டத் தலைவர் என்றும், மாவட்டச் செயலளார் என்றும், மாவட்டப் பொருளாளர் என்றும் போட்டுக் கொள்கிறான், இதைவிட மானக்கேடு தந்தையின் பெயரைச் சேர்க்க வேண்டிய இடத்தில் அந்த நடிகனின் பெயர் தற்போது கிரிக்கெட் மோகம் வேறு உயிரை கொடுக்கத் தயாராக இருக்கிறான் கிரிக்கெட் கிறுக்கன் இப்படிப்பட்டவர்களால் நாடு முன்னேறுமா ? இல்லை பின்னேறுமா ? நாடு இளைஞர்களின் கையில் இருக்கிறது என்று சொன்னாரே மதிப்பிற்குறிய ஐயா திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இதன் அர்த்தம் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லையே ! என்பதே எமது ஆதங்கம்.

58 கருத்துகள்:

 1. அன்பின் ஜி..

  இதை ஆயிரம் பிரதியெடுத்து ஊருக்கெல்லாம் வழங்கி உபதேசித்தாலும் திருந்த வேண்டியவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!..

  ஆனாலும் - முயற்சி திருவினையாக்கும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   உண்மைதான் இருப்பினும் முயல்வோம்.

   நீக்கு
 2. அரசியல்வாதிகளிடமும் திரைப்படத்துறையினரிடமும் கிரிக்கட்டின் மீதும் உங்கள் காழ்ப்பு உணர்ச்சி நன்கு தெரிகிறது. இவற்றை நீக்க இயலாது என்றும் புரிகிறதா ஜீ. நல்லவை நம்மிலிருந்து தொடங்கட்டும் சிறு துளி பெருவெள்ளம் என்பது உங்களுக்குத் தெரியாதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 3. நாம் எவ்வளவு தான் மனம் குமைந்தாலும் சமூக மாற்றம் எப்போ என்பது ???? சகோ,

  நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ என்றாவது ஒருநாள் மாறும் என்று நம்பிக்கை வைப்போம்

   நீக்கு
 4. நொந்துக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை :)

  பதிலளிநீக்கு
 5. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாது இந்நிலை. ஒரு பாக்கெட் பாலை 100 ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத நிலையில் இருந்த அதே தமிழன்தான் அடுத்த வாரமே தனக்குப்பிடித்த நடிகரின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தான்! (இதைச் சொன்னது அன்புமணி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே முயன்றவரை முயல்வோம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. ஆஹா ஜி..என்ன ஒரு ஆதங்கம்...பற்றித்தான் எரிகிறது...
  ஆனால் சீக்கிரம் ஒரு மாற்றம் வரவேண்டும் ஜி..

  பதிலளிநீக்கு
 7. தங்களின் ஆதங்கம்தான் நமது ஆதங்கமும்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 8. கில்லர் ஜி நாம் ஆதங்கத்தான்பட முடியுமே அல்லாமல் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாற்றம் வர வேண்டும் என்று நேர்மறை எண்ணத்துடன் நாம் தொடங்கினாலும்...பெரும்பான்மைக் கூட்டம் உணர்ந்தாலொழிய எதுவும் ந்டக்கப் போவதில்லை. வெள்ளம் வந்து 2 மாதங்கள் ஆகின்றன்றது. மாற்றம் ஏதேனும் வந்தது என்று நினைக்கின்றீர்களா? நினைத்தீர்கள், நம்பினீர்கள் என்றால் நீங்கள்தான் முட்டாள் என்பேன். தவறாக நினைக்காதீர்கள், அதில் நாம் எல்லோருமே அடக்கம். ஏனென்றால் இங்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. எங்கள் தளத்தில் கேடில் விழுச்செல்வம் கல்விக்கு இபுஞா கொடுத்திருக்கும் கருத்தைப் பாருங்கள் அதுதான் நம் நாட்டின் நிலைமை.
  நிதர்சனமான நிலைமை. நீங்கள் ஆட்சிக்கு வர நிற்கின்றீர்களா? சொல்லுங்கள் அல்லது ஒரு தலைவராக வரத் தயாராக இருக்கின்றீர்களா சொல்லுங்கள். வரவேற்கின்றோம்.

  ஒரு வேளைச் சோற்றிற்கே வழியில்லாதவன் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் போது என்ன சொல்ல ஜி...

  அது சரி பிரதமர் வேட்பாளர்/முதல்வர் வேட்பாளர் உங்கள் ஓட்டுப் பெட்டி எங்கே போயிற்று? உங்கள் மீது பொறாமை கொண்ட எதிர்கட்சியின் சதியாக இருக்குமோ?ஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான விபரங்களுக்கு நன்றி இனியெனும் மாற்றம் வரும் என்ற நப்பாசைதான் நான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மாறுபட்ட ஆட்சிதான் ஆனால் 1 சதவீதம்கூட என்னை அடையாளம் தெரியாத தமிழக மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
   ஓட்டுப் பெட்டியை காணோமா ?
   நல்ல நாளிலேயே நீங்க தில்லை நாயகம் இப்ப சொல்லவா வேணும்.

   நீக்கு
 9. இவனுங்கள திருத்தவே முடியாது...மாற்றம் என்று வரும் என்பது...கனவே...பார்க்கலாம் என்று வருகிறது என்று...

  தம. ௬

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் த.ம. ௬ ஆஆஆஆஆஆஆ அடடே படித்துக் கொண்டீர்களா ? சந்தோஷம்

   நீக்கு
 10. அட! நாங்க சொன்னது எதிர்க்கட்சியினரின் காதில் விழுந்துவிட்டது போலும். ஓட்டுப்பெட்டி வந்துவிட்டதே!!

  என்ன நடந்தாலும் கேள்வி கேட்க இயலாத, மாற்றம் வரும் என்று நம்பிக் கொண்டிருக்கும் 100 முட்டாள்கள் கூட்டதில் ஒருவராக (இருவர் என்றாலும் ஒரு ஓட்டுதானே போடமுடிகின்றது..) ஓட்டு போட்டுவிட்டோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ள ஓட்டு 1 போடலாமே... சுயநலம்தான் ஹி ஹி ஹி

   நீக்கு
 11. ஹ்ம்ம் சரியான ஆதங்கம் சகோ! மாற ஒரு பக்கம் போராடினால் மாற விடாமல் மறுபக்கம் வலுவாக இலவசமாகப் போராடுகிறார்களே!

  பதிலளிநீக்கு
 12. உண்மை தான்! இப்படிப்பட்ட இளைஞர்கள் 50 சதவிகிதம் இருக்கிறார்கள் என்றால் இந்த நாடு முன்னேற தரமான கண்டுபிடிப்புகள், தளராத உழைப்பு, தன்னலமற்ற தியாகங்கள் மூலம் பிரகாசிக்கும் 50 சதவிகித இளைஞர்களும் இருக்கிறார்கள். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பாஸிடிவ் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். பாக்கி 50 சதவிகித இளைஞர்களும் விரைவில் மாறுவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்! நம்பிக்கை தானே வாழ்க்கை!

  இதில் ஏன் கிரிக்கெட்டை சேர்த்தீர்கள்? உலக சாதனைகள் பலவற்றை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததும் உலக தரவரிசையில் முதல் இடத்தை பலமுறை பிடித்து உலகின் முன் மதிப்பை சேர்த்ததும் கிரிக்கெட் தான்! அது மட்டுமல்ல, மிக மோசமான அடித்தளத்திலிருந்து கடின உழைப்பின் மூலம் சாதனைகள் புரிந்து கொண்டிருப்பவர்களும் நம் கிரிக்கெட் இளைஞர்கள் தான்!!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி கிரிக்கெட்டால் நாட்டையே காட்டிக் கொடுக்கும் கிறுக்கன் இந்தியாவில் குறிப்பாக இங்கும் இருக்கின்றான்
   பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி சொந்த பணத்தில் 100 கோடி ரூபாயில் கேன்ஸருக்கான மருத்துவமனை கட்டிக் கொடுத்தார்
   இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கர் சொந்த பணத்தில் 100 கோடி ரூபாய்க்கு ஆடம்பர மாளிகை கட்டிக் கொண்டான்

   இதில் மனிதம் பொருந்திய மனிதன் யார் ? நாடு மறந்து மதம் மறந்து மனிதம் மட்டும் பார்ப்போமே...

   மேலும் இந்திய கிரிக்கெட் வீரன் அனைவருமே மது வகைகள் விளம்பரத்தில் நடித்துக் கொண்டு சோடாவை காண்பிக்கின்றான்.

   நீக்கு
 13. மாற்றம் ...
  முன்னேற்றம் ...
  எதிர்பார்ப்பு!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 14. எங்தவனை விட்டுட்டு அம்மை நோவி என்ன பயன்... நண்பரே.. தாங்கள் குறிப்பிட்ட சோ... படத்தில்தான் அப்படி... ஆனால் நிஜத்தில் வேறு மாதிரியானவர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இவரும் ஜாதிவெறி உள்ளவர்தான் வெளியில் காட்ட மாட்டார்

   நீக்கு
 15. அன்புச் சகோதரருக்கு!

  உங்களுக்கு சச்சின் டெண்டுல்கர் செய்து வரும் சேவைகள் பற்றி தெரியவில்லை என்று புரிகிறது! அவர் செய்து வரும் சில சேவைகள் பற்றி இந்த இணைப்பில் படித்துப்பாருங்கள்! இவற்றால் தான் அவரின் புகழையும் தாண்டி மிக உயர்ந்த மனிதர் என்று எல்லோராலும் இன்று மதிக்கப்படுகிறார்!

  http://www.sportskeeda.com/vote/sachin-tendulkars-charity-work%20

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ இந்த இணைப்பை தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும் கண்டிப்பாக பார்ப்பேன்

   நீக்கு
 16. ஆதங்கம்...
  ஆனாலும் எத்தனை சொன்னாலும் யாரும் திருந்தப்போவதில்லை...
  கொடி பிடிப்பதும்... பாலபிஷேகம் பண்ணுவதும் வாழையடி வாழைதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே மாறும் என்று நம்புவோம்

   நீக்கு
 17. பதிவு போட்டதும் பேஸ்புக்கில் கண்டு நான் தான் முதல் ஒட்டு போட்டேன் தெரியுமா?உங்க ஒட்டுப்பட்டை பூஜ்ஜியமாய் இருந்தது நான் ஒன்றாக்கி விட்டு போய் தூங்கிட்டேன், அப்புறம் கண்டுக்கல்லை என கோபிச்சிக்காதிங்க சார்!

  இப்பத்தைய நிலவரம் என்னன்னா 100 முட்டாள்களும் 5 அறிவாளிகளுடன் சேர்ந்து 105 முட்டாளாக மாறி விட்டிருவாங்க. அதனால அறிவாளிகள் யாருமே இல்லையாம் கில்லர்ஜீ சார்!

  இதில் நானும் நீங்களும் தான் அடங்கிப்போயிட்டோமே!

  எனக்கெல்லாம் அறிவாளியாய் இருப்பதை விட கும்பலில் கோவிந்தா போடும் முழு முட்டாளாய் இருப்பவன் தான் அறிவாளி என தோன்றுகின்றது.நாங்க மாத்தி யோசித்து பார்த்தோம்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஓட்டுப் போட்டு விட்டு மறுநாள் ரிசல்ட் காண வந்தமைக்கு நன்றி
   மாத்தியோசி நீங்க விஜய் டி.வி பார்ப்பீங்களோ... அடிக்கடி பார்க்காதீங்க.

   நீக்கு
  2. விஜய் டி.வி?அப்படின்னு ஒன்று இருக்கின்றதோ? நான் எந்த டி.வியும் பார்ப்பதில்லை சார்!

   நீக்கு
  3. ஆமாம் அந்த நிகழ்ச்சிதான் மாத்தி யோசி

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  உலகம் இதிலே அடங்கிது... உண்மையும் பொய்யும் விளங்கிது...!

  நன்றி.

  த.ம.12

  பதிலளிநீக்கு
 19. சரியான ஆதங்கம். முகமது பின் துக்ளக் திரைப்படத்திற்கான போஸ்டர்களைப் பார்த்த நினைப்பு இன்னும் உள்ளது. போஸ்டரின் அடியில் சாணி அடிப்பவர்கள் இங்கே அடிக்கவும் என்று போட்டிருககும். ஒவ்வொரு நிலையிலும் வித்தியாசமாகக் கூறியவர் சோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் முனைவரே திரு. சோ அவர்கள் தனது துக்ளக் முதல் இதழின் முகப்பில் கழுதை புகைப்படத்தை வெளியிட்டு மாற்றம் கொடுத்தவர்தானே...

   நீக்கு
 20. பெயரில்லா2/03/2016 7:37 முற்பகல்

  ஒரு நாட்டில் 100 முட்டாள்கள் இருப்பதைவிட 5அறிவாளிகள் போதுமே நாட்டை வளர்க்க.

  இதுதான் என்னை சிந்தனைக்குள் தள்ளியது...
  அவனவன் அவனவன் சுயநலத்துலயே இருக்கானுக
  எவனும் பொது நலத்துல அக்கரை இருந்தும் இல்லாமலே இருக்கானுக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பர் திரு. அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே தங்களின் முதல் வருகைக்கு வந்தனம் உண்மைதான் எல்லோருமே சுயநலவாதிகள்தான் என்ன செய்வது மாற்றம் வரும் என்று நம்புவோம் நண்பரே...

   நீக்கு
 21. ‘காலம் ஒரு நாள் மாறும் நம் கனவுகள் யாவும் தீரும்.’ என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

  பதிலளிநீக்கு

 22. "உலகம் சமநிலை பெற வேண்டும்
  உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

  நிறைவே காணும் மனம் வேண்டும்
  இறைவா அதை நீ தர வேண்டும்"

  பாடலை இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் அவர்களது கருத்தில் காலூன்றி பதிவை பவனி வரச் செய்தமைக்கு பாராட்டுக்கள்.
  உண்மையின் வெப்பம் பாலைவன மணலைக் காட்டிலும் அதிகமாகவே சுடுகிறது நண்பா!
  வெப்பம் தணிய நல்ல புத்தியை
  இறைவா அதை நீ தர வேண்டும்"
  நன்றி! த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா உளுந்தூர் பேட்டையாரைப்பற்றி விபரம் தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 23. சமூக மாற்றம் எப்போது வருமோ தெரியவில்லை.
  த ம 16

  பதிலளிநீக்கு
 24. சுய நலப்போக்கு வேரோடிவிட்டது. அதன் ஆணிவேர் ஆசை! ஆசை இருக்கும் வரை இம்மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு நண்பரே! தேவை இராணுவ ஆட்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இராணுவ ஆட்சி வந்தால்தான் மாற்றத்தை அதிரடியாக கொண்டு வரமுடியும்

   நீக்கு
 25. ஒருகை தட்டி ஓசை வராது. நீங்க எழுதி தங்கள் ஆற்றாமையை தீர்த்துக்கலாம். திருடனாய்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது போலதான் இதுவும்...

  பதிலளிநீக்கு
 26. ஏன் கில்லர்ஜீ ஜெயலலிதா என்ன அறிவில் குறைந்தவரா? கருணாநிதியின் தந்திரம் குள்ளநரிக்கே வராதே?!!

  அறிவு இருக்கு,நல்ல மனம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல மனம் இருந்தால் இயலாமை மனிதர்களாக இருக்கின்றார்கள் நண்பரே

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...