தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 03, 2017

என் நூல் அகம் 11


வணக்கம் நட்பூக்களே... என் நூலகத்திற்குள் நுழைந்து சிறிது காலமாகி விட்டதல்லவா... இதோ இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் மாணவர் திரு.கே.எஸ்.வேலு அவர்கள் தனது செல்வ மகளின் பெயரான நிவேதிதா என்ற பெயரில் எழுதிய நல்லதொரு குடும்பம் என்ற பல்கலைக்கழகத்தினுள் சென்று வருவோமா ?

புதிய வலைப்பதிவர், முதல் நூல் என்ற அறிமுகத்தை ஏற்பது சற்று கடினமான விடயமே காரணம் மனிதர் தனது பதிவுகளில் சொல்லி வரும் விடயம் மட்டுமல்ல தனது முதல் நாவலை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார் இன்றைய குடும்ப உறவுகள் அவசர வாழ்க்கையின் வேகத்தில் எவ்வளவு விடயங்களை இழந்து நிற்கிறது என்பதை காட்சிப்படுத்திய விதம் அழகு இதற்கு இரண்டு பெண்களை முன்னிருத்தி இருக்கின்றார்.

அமெரிக்காவில் சற்றே காலம் வாழ்ந்து பழக்கப்பட்ட இந்திய பெண் திருமதி. தேவிகா இந்திய கலாச்சாரம் என்ன என்பதையே அறியாமல் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கடைசியில் உணர்ந்து திருந்துகிறார், மற்றொரு பெண் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து இந்தியக் கலாச்சாரத்தை முழுவதும் அறிந்து இந்தியனை திருமணம் செய்து கொண்ட திருமதி. நான்ஸி என்பவள் வருடம் ஒருமுறை இந்தியாவுக்கு வந்து புஞ்சை கொஞ்சி விளையும் தஞ்சை அருகிலிருக்கும் குக்கிராமத்தில் பொங்கல் கொண்டாடிச் செல்பவள் இதன் கதையை அழகாக முடித்து வைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே ருத்ரமூர்த்தி என்ற பெரியவர்.

பூண்டி மிராசுதாரின் நிலைமையை பார்த்தியா ? சென்னையில் ஒதுங்க இடமில்லாமல் முருகன் கோவிலில் உட்கார்ந்து இருக்கான் என்றபடியே முருகன் இருக்கும் திசையை நோக்கி கும்பிடு போட்ட பெரியவர் சரவணன் ‘’முருகா இதுவே என் மகன் வீட்டுக்கு வரும் கடைசி பயணமாக இருக்கணும் என்னால் இந்த அவமானங்களை தாங்க முடியல’’ என்று வேண்டும்போது இன்றைய பல பெற்றோர்களின் நிலையை நம் கண்முன் நிறுத்தி விடுகிறார் தனது குடும்பத்து பெரியவர்களின் மதிப்பு அவர்களது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை ஆனால் பிறர் சொல்லி அறிந்து கொள்ளும் போது மனம் சற்று வேதனைப்படுவது உண்மையே இது இன்றைய சமூகத்தில் பரவலாக உள்ள விடயமே....


திரு.கில்லர்ஜி, திரு.கே.எஸ்.வேலு மற்றும் செல்வி.நிவேதிதா

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருப்பது இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் தனது மாணவருக்கு இதைவிட வேறென்ன பெருமை இருக்கிறது நண்பர் திரு.கே.எஸ்.வேலு அவர்களின் தன்னுரையை படித்ததும் அவர்மீது சற்று பொறாமையே உண்டாயிற்று காரணம் இந்நூல் எழுதுவதற்கு தனது குடும்பத்தினரின் ஊக்குவிப்பை பட்டியலிட்டு இருக்கிறார் இவைகள் அனைத்தும் எனக்கு முரண் இப்படியொரு ஆதரவும், ஊக்குவிப்பும் எனக்கு கிடைத்து இருந்தால் நான் இருபது வருடங்களுக்கு முன்பே நூல்கள் வெளியிட்டு இருப்பேன் அதேநேரம் நமக்கு கிடைக்காத ஆதரவு நண்பருக்காவது கிடைத்து இருக்கிறதே என்ற சந்தோஷமும் எமக்கு வராமல் இல்லை நண்பர் மென்மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நண்பரை சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் குடும்பத்தினருடன் சந்தித்தேன் இந்நிகழ்வுகள் பிறகு புகைப்படங்களுடன் பதிவாக வரும்.


எனது முந்தைய நூல் விமர்சனங்கள் காண சொடுக்குக...


அன்புடன் கில்லர்ஜி தேவகோட்டை

49 கருத்துகள்:

 1. அருமையான நூல் பற்றிய விமர்சனம் மற்றும் அறிமுகமும் நன்று.

  பலருக்கும் புத்தகம் எழுதி வெளியிடுவதற்கும் சரி, ஏன் பதிவுகள் எழுதுவதற்குக் கூட ஆதரவு இல்லாமல் தான் சூழல்கள் இருக்கிறது கில்லர்ஜி. கொஞ்சம் மறைமுகமாகத்தான் செய்ய வேண்டியுள்ளது. அதில் சில சமயம் பொய்களும் கலந்துதான் விடுகின்றன. நல்லதுக்குப் பொய் சொல்லலாமே என்று மனதிற்குள் திருவள்ளுவரை அங்கு நம் ஆதரவுக்குக் கொண்டுவந்து மனதை சமாதானப்படுத்தலும் அவசியமாகிப் போகிறது.

  எனவே புத்தகம் எழுதுபவர்களையும், வெளியிடுபவர்களையும் மனதார வாழ்த்துவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக என்னைப் பொருத்தவரை நான் எல்லோரையும், எல்லாதுறைகளில் உள்ளவர்களையும் ஊக்குவிப்பேன் இதில ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது மனதால் உயர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்

   இன்றும்கூட பதிவர்களிடம் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் நிறைந்து இருக்கிறது பழைய பதிவர்கள் பதிவு எழுதாவிட்டாலும் புதிய பதிவர்களை ஊக்குவிக்கலாம் அதன் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கிடைக்கலாம்.

   நீக்கு
  2. ஆம் கில்லர்ஜி! புதிய பதிவர்களையும் ஊக்குவிப்போம்!! ஏற்றுக் கொள்கிறோம்..

   கீதா

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி இதனைப்போல் அனைத்து பதிவர்களும் மாறணும்.

   நீக்கு
  4. அற்புதமான மனப்பாங்கு மிஸ்டர் வெள்ளந்தி. இனிய நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  5. நண்பரின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. நல்லதொரு விமர்சனப் பகிர்வு. நம் கலாச்சாரங்களை மறக்க வைக்கும் மேல் நட்டு மோகம் ஏற்படுத்தும் பிரச்னைகளை பேசும் நாவல் போலும். மேல்நாட்டு மருமகள் என்றொரு பழைய படம் கூட நினைவுக்கு வருகிறது. சினிமாவில் சொல்ல முடியாத உணர்ச்சிக்கு கலவைகளை புத்தகத்தில் வெளிப்படுத்த முடியும். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி நல்லதொரு நாவல்தான் விலை 60 ரூபாய் மட்டுமே....

   நீக்கு
 3. புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

  படங்கள் அருமை. உங்கள் மீசை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதை எப்படி வளர்த்தீர்கள் பரமரிக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுத்துகள். அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உங்களைப் போன்றோர் கண்ணேறு பட்டுத்தான் இரண்டு நாட்களாக மீசையின் ஓரிடங்களில் ‘’வெள்ளைக்கரு’’ இட்டு இருக்கிறது போலும்.

   நண்பரே உங்களுக்காக பராமரிப்பு செலவு விபரங்கள் குறித்து எழுதுகிறேன் வருகைக்கு நன்றி

   நேரமிருப்பின் எனது தளத்தில் 2013 செப்டம்பர்-19 மாத பதிவு ‘’Tie’’ பார்க்கவும் இதோ இணைப்பு

   http://killergee.blogspot.com/2013/09/tie_7271.html

   நீக்கு
 4. திரு கே எஸ் வேலு அவர்களின் "நல்லதொரு குடும்பம் " விமரிசனம், நூல் அறிமுகம் சிறப்பா எழுதியிருக்கீங்க. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கிறேன். த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கண்டிப்பாக படியுங்கள் விலை ரூபாய் 60 மட்டுமே...

   நீக்கு
 5. அருமையான நூல் விமர்சனம் நண்பரே
  நண்பர் திரு கே.எஸ்.வேலு அவர்களை நேரில் சந்தித்தது கண்டு மகிழ்கின்றன் நண்பரே
  எழுத்தாற்றல் மிக்க நண்பர்கள் இருவரின் சந்திப்பு மகிழ்வினைத் தருகின்றது
  இதுபோன்ற சந்திப்புகள் தொடரவேண்டும்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும் கனிவான கருத்துரைக்கும் நன்றி நிச்சயம் தொடரும் நண்பரே...

   நீக்கு
 6. விமர்சனம் நன்று. தொடரட்டும் விமர்சனப் பதிவு.

  பதிலளிநீக்கு
 7. அருமையான நூல் விமர்சனம்.
  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. மதுரையில் புத்தகத் திருவிழா நடை பெற்று வருகிறது ,வாங்கிப் படிக்கிறேன் ஜி :)

  பதிலளிநீக்கு
 9. விமர்சனம் அருமை...

  திரு.கே.எஸ்.வேலு அவர்களின் குடுபத்திற்கும் வாழ்த்துகள்...

  திரு.அப்பாதுரை அவர்களின் (மீ)ஆசையை நிறைவேற்றுங்கள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரித்திரத்தை தோண்டச் சொல்லிட்டீங்க... ரைட்டு.

   நீக்கு
 10. இருவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. கரந்தையார் அவர்களும் இந்தப் புத்தக வெளியீட்டின் போது எழுதி இருந்த நினைவு! விமரிசனம் நன்றாக இருக்கிறது. உங்கள் நூலகத்திற்கு என் முதல் வருகை! நேரம் இருக்கையில் மற்றவற்றையும் பார்வை இடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அதன் இணைப்பும் கொடுத்து இருக்கிறேன்.

   நன்று மற்றவைகளையும் பாருங்கள்

   நீக்கு
 12. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. குருவே தன் மாணவனுக்கு வழங்கியது போல, நண்பரின் முயற்சிக்கு ஊக்கம் தந்து பதிவிட்டு உங்களுக்கும் பெருமை தேடிக் கொண்டுள்ளீர்கள் ! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 14. நல்ல நூல் மதிப்புரைக்கு நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் நூலகத்தின் துவக்கமே நான் எழுதி வெளியிட்டிருந்த வாழ்வின் விளிம்பில்தான் என்று அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ஐயா இதில் எனக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் உண்டு வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. நூல் விமரிசனம் சுருக்கமாக இருந்தாலும் அருமை!

  பதிலளிநீக்கு
 17. பல நூறு பூக்கள் மலரட்டும் வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 18. நூல் நயம் நன்று த.ம. வாக்குடன்

  பதிலளிநீக்கு