தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

முழுசும் எதற்கு ?

வணக்கம் மேடம் சுதந்திர தினத்துக்காக பேட்டி கொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
வன்க்காம் எண்ணுடொயா ரசிகாருக்கு சொதந்திரா வாத்துகால்

நீங்கள் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தது எப்படி அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?
ஆக்செலி இத்து ஆக்ஸிடெண்ட்தான் ணான் லண்டன் கேம் ப்ரிட்ஜ் கோலேஜ்ல ஃபைனல் இயர் பன்னிகுட்டி இருந்துச்சு அப்போதான் டைரக்டர் மிஸ்டர் பாடாவதி ராஜா கன்னுல பட்ருச்சு சட்டர்ன்லி நீங்க ஃபிலிம்ல ஆக்ட் பன்னு முடியிதானு கேட்டுச்சு ணான் மம்மி, டாடியை கேட்டு சொல்லுதுனு சொல்லி ஆப்டர் பெர்மிஷன் ஐ ஸ்டார்டட் ஆக்ட்டிங்

உங்களுடைய முதல் படம் முழுசும் எதற்கு இதில் நீங்கள் நடித்த முதல் காட்சி அந்த அனுபவம் பற்றி....
ஆங் ஃபர்ஸ்ட் ஸீன் ஃபர்ஸ்ட் நைட்தான் காமெரா மென்னடி நிக்குராதுக்கு வெளக்கமாரு... ஸாரி வெக்குமாச்சு ஹீரோ ஸார்தான் அத்தை கொஞ்சும் கொஞ்சும் சறியாக்கிச்சு.

இந்த படத்தின் ஹீரோ மிஸ்டர். ஜீரா இவரைப்பற்றி என்ன நினைக்கிறீங்க ?
அவுறு வெறி ஜென்டில்மேன் என்கூ நடுப்பு ஜொள்ளி கொடுத்துச்சு

நீங்க ரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்களே எப்படி ?
ஆக்செலி எங்கு டாடி இண்டியாவுல பன்டிசெறிக்கார்ருதான் மம்மிதான் லண்டன். ஹவுஸ்ல ணான் டமில் பேச்சூம்

தமிழ் நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர் யார் ?
என்கூ புட்சது சவுத்ரி மேடம் நடுப்புதான் ணானும் அவுங்களா மாறி பேருடக்கணும்.

தமிழ் ரசிகர்களைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ?
ரெம்பே நள்ளுவங்க ஃபிலிம் ரிலிஸ் அணைக்கு ணான், டைரக்டர், ஹீரோ முன்னுபேரும் தியேட்டருக்கு போச்சு ரசிகாரு எண்ணுடொயா கட்டவுட்டுக்கு பாளுத்துச்சு.

முதல் முறையாக தியேட்டரில் நீங்கள் நடித்த படத்தை காணும் பொழுது அதுவும் படத்தின் டைரக்டரும், ஹீரோவும் வந்துருக்காங்க நீங்க பெரிய அதிஷ்டசாலிதான் அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்களேன்
டைரக்டரூம், ஹீரோவூம் என்கூ லெப்ட் அன்ட் ரைட்ல உக்கந்து நள்ளா கோமெடி பன்னிகுட்டி இருந்துச்சு தட் வாஸ் எ குட் எக்ஸ்பீரியன்ஸ்

உங்களுக்கு சகோதரர்கள், சகோதரிகள் ?
எங்கூ ஃபேமிலியில ணான் மட்டும்தான்

நீங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் செல்லப்பிள்ளை இல்லையா.... இப்போ உங்களுடைய அம்மா அப்பா எங்கே இருக்காங்க ?
மம்மி டாடியை டைவேர்ஸ் பன்னிட்டு அவுங்குளுட ஓல்ட் பாய் ஃப்ரண்ட்கூட செட்டில் ஆகிச்சு டாடி ஐ..... திங்க் நௌ ஸ்டேய்ஸ் இன் ஃப்ரான்ஸ்

இப்பொழுது உங்களுடைய பாதுகாப்புக்கு யார் ?
இப்பூ எங்கூட மை கோலேஜ் ஃப்ரண்ட் மிஸ்டர். ஃப்ரேய் இருக்கூ

மிஸ்டர். ஃப்ரேய்தான் உங்களை திருமணம் செய்வாரா ?
அத்து மை பாய் ஃப்ரண்ட் மிஸ்டர். கெண்ட்லிய கேட்டு டெஸைட் செய்யும்

நல்லது தங்களது திருமண வாழ்க்கை நல்ல விதமாக அமைய எங்களது மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகள். சுதந்திர தினத்துக்காக உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?
ரசிகாரு அல்லாரும் சொதந்திராவுக்கு தியேட்டருல பொய்யி படாம் பாருங்கானு சொள்ளி வாத்துகால்.

நன்றி வணக்கம்.
நண்ரி வன்க்காம்.

சிவாதாமஸ்அலி-
கொட்டாம்பட்டி கண்மாயில விறகு பொறுக்கி வித்தவ... கொஞ்சம் எடுப்பா இருந்ததால சினிமா சான்ஸ் கிடைச்சதும் தமிழே தெரியாதது மாதிரி என்னா... உடான்ஸ் விடுறா...

சாம்பசிவம்-
இது அழகான தமிழாடா ? அடப்பேதியில ஓயிறுவியலா எல்லாப் பயலும் வாய் கூசாமல் எல்லாச் சிறுக்கிகளையும் இப்படித்தானடா சொல்றீங்க... உங்க வாயில வசம்பு வச்சு தேய்க்கணும்டா... நான் மட்டும் ஆச்சியை புடிச்சேன்

Chivas Regal சிவசம்போ-
அடப்பாவிகளா... வெள்ளைக்காரன் கிட்டே அடி வாங்கி இன்னும் தழும்போடு இருக்கிற எத்தனையோ ஐயாக்கள்மார் ஊர்ல இருக்காங்க தெரியுமாடா ? சுதந்திரத்தைப்பற்றி முடிச்சவித்த சிறுக்கிகளுக்கு என்னங்கடா தெரியும் ?

நட்பூக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – கில்லர்ஜி 

60 கருத்துகள்:

 1. அங்கே ஸ்ரீராம் அவர்களுடைய தளத்தில் வெளியாகியுள்ள எனது கதையை நானே பாராட்டி விட்டு இங்கே வந்தால் -

  சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கின்றது..

  அல்லாருக்கும் சொதந்திரா தீனா வாத்துகால்...

  அட..

  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தொலைக்காட்சியைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது இன்று கௌரவப்படுத்த வேண்டியவர்களை மறந்து விட்டு வி................களை வைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் அந்த வேதனையில் பிறந்த பதிவே இது.
   என்னைப் பொருத்தவரை இது நகைச்சுவை அல்ல...

   நீக்கு
  2. அன்பின் ஜி..

   உண்மைதான்.. இது நகைச்சுவை அல்ல.. வேதனையின் வெளிப்பாடு..

   தங்கள் கருத்தினை வழிமொழிகின்றேன்..

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 2. ஹாஹாஹாஹா...ஆமாம் இப்படித்தான் எல்லா சானல்களும் சுதந்திரதின விழாவைக் கொண்டாடுகின்றன...

  சரி தலைப்பு புரியலையே..ஜி..

  பேசாம சாம்பசிவத்தை ஒரு நாள் முதல்வனா வரச்சொல்லி ஆச்சியைப் பிடிக்கச் சொல்லுங்க...ஹிஹிஹி

  சுதந்திர தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது சுதந்திர தின பதிவு அல்ல கொட்டாம்பட்டிக்காரியின் வாழ்வாதாரம் கொடிகட்டி பறக்கும் பதிவு..

   நீக்கு
 3. சுதந்திரதினக்காலையிலே உங்க தளத்திலே ஜோரா நம்ப கொடி பறக்குதேன்னு ஓடி வந்தா, என்னய்யா இது இந்த நடிகையோட ஒரே பேஜாராப்போச்சு! எங்கே புடிச்சீங்க இப்பேர்ப்பட்ட அளகிய ! இன்னா அறுவு! இன்னா தெளுவு !

  சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ''இவளை எங்கே புடிச்சீங்க ?''

   இதை என்னிடம் கேட்ககூடாது மோடோ தொ(ல்)லைக்காட்சிகாரனிடம் கேளுங்கள்.

   நீக்கு
 4. அல்கு தாமில்லே நட்பின் கல்றாசியே அரிமுக்ம் செஞ்த்துக்கு நன்ரி.

  பதிலளிநீக்கு
 5. பன்னிகுட்டி, ஜொள்ளி கொடுத்துச்சு - பேசுவதைப் போன்றே 'டைப்' செய்து பதிவிட்டது அசத்தல் ! சுதந்திரதின வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மோடோ தொலைக்காட்சியில் இப்படித்தான் சொன்னாங்கே...

   உங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. சொதந்துர துன வாள்த்துக்கள் மச்சான்....

  சும்மா கலாய்ப்புக்கு மச்சான்ன்னு சொன்னேண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காங்கிரஸ் தியாகி நமீதா மேடம் இப்படித்தானே சொல்வாங்க...

   தங்களுக்கும் வாத்துகால்.

   நீக்கு
 7. சும்மா சொல்லக்கூடாது..தமிழு அந்தம்மா நாவில கொஞ்சி கூத்தடிக்கஙிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே அவள் வாயில் (சி.ஆர்) சரஸ்வதி குடியிருக்காளோ... ?

   நீக்கு
 8. நகர்ப்புறங்களில், நாட்டு நடப்பு அப்படித்தான் இருக்கிறது. இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. நாக்கு சுளுக்கிடிச்சி!!!

  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலு படம் ஹிட் ஆனால் நாக்கு சரியாகி விடும் நண்பரே

   நீக்கு
 10. சுதந்திர தினத்திற்கும் ..இந்த சினிமாவுக்கும் என்ன தான் சம்பந்தம் ன்னு தெரியல..

  ஒவ்வொரு வருசமும் சுதந்திர தின சிறப்பு திரைப்படம், பேட்டிகள் னு பார்க்கும் போது இது தான் தோணுது...


  என்னமோ சிவ சம்போ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக எனக்கு இவைகளை காணும் பொழுது கோபம்தான் வருகிறது

   கோபத்தால் டி.வி.யை உடைத்து விடுவேனோ... என்ற பயத்தால் பல நேரங்களில் பார்ப்பதில்லை.

   நீக்கு
 11. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அனேகமா எல்லாரும் இப்படித்தான் பேசறாங்க.

  நான்கூட நீங்க, என் ஒருபடக் கனவுக்கன்னியான எமி ஜாக்சனைத்தான் பேட்டி எடுத்தீங்களோன்னு நினைச்சேன்.

  நம்ம தொலைக்காட்சிகளும், சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பேட்டி எடுத்தா, 'என்னடா இவங்களுக்கும் வேற வேலையில்லையா.. பொதிகை மாதிரி ஆரம்பிச்சுட்டாங்களே'ன்னு நம்ம மக்களும் மற்ற சானல்களுக்கு மாறிடறாங்க. அப்புறம் அவங்களும் என்னதான் செய்வாங்க?

  சாம்பசிவம்ட சொல்லுங்க ('நான் மட்டும் ஆச்சியைப் பிடிச்சேன்') - மனோரமா ஆச்சி செத்து நாளாச்சுன்னு.

  த.ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உங்கள் கனவுக்க(ன்)னி எமி ஜாக்ஸனா ?

   உண்மைதான் தவறுகளை தாமே தொடங்கி விட்டு சமூகத்தை குறை சொல்கின்றோம்.

   சாம்பசிவம் ஆட்சிக்குத்தான், ஆச்சி'னு சொல்லி இருப்பார். அந்த நடிகை பேசியதை கேட்டதில் இவரும்...
   குசம்பி பொய்யிடாரூனு ணான் நெனைக்கேன்

   நீக்கு
 12. "எனது அம்மாவுக்கு என்னைவிட தனக்கு துளியும் பயனில்லாமல், உருப்படாமல் போன பிள்ளைகள் மீதே அதிக பாசம் இது எனக்கு தெரிந்தும் நானே பார்த்துக் கொண்டு வருகிறேன் " - எப்போதும் எல்லோருக்கும் 'காணாமல் போனவைகளின்மீது' உள்ள ஆர்வம், அன்பு, இருப்பவைகளின்மீது கிடையாது. இதனை பைபிள், 'காணாமல்போன ஆடு' என்று குறிப்பிடும்.

  அதுவும்தவிர, தாய்க்கு, நன்றாக இருப்பவனைவிட, நிலைமை தாழ்ந்து இருப்பவர்களை, கஷ்டப்படுபவர்களைத்தான் மிகவும் பிடிக்கும். இது உலக இயல்பு. அங்கு எழுத நினைத்து, இங்கு எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலைமை தாழ்ந்து போனவர்கள் மீது பாசம் வைப்பதில் தவறில்லை நண்பரே...

   நல்லா இருப்பவன் எவ்வளவோ உதவியும் அதன் அருமை தெரியாமல் அழித்து விடுபவர்களை சற்றே ஒதுக்கி வைத்தால்தான் புத்தி வந்து திருந்துவார்கள்

   அளவுக்கு மீறி ஆதரவு கொடுத்தால் எவனும் திருந்த மாட்டான்

   நான் வாழாமல் பிறரை வாழவைத்து பணத்தை இழந்தவன் ஆகவே எனது கோபம் சட்டென அடங்கி விடாது.

   இருப்பினும் எல்லா குடும்பங்களிலும் நீங்கள் சொன்னதே நடக்கிறது.

   நீக்கு
 13. ரொம்ப நல்லா இருந்தது! :) உண்மையில் இப்படித் தானே பேசறாங்க! அதனால் அதிர்ச்சியாக இல்லை. ஆனால் நாங்க விடுமுறைதினச் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் பார்ப்பதில்லை. அன்னிக்கும் செய்தி சானல்கள் தான்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இன்றைய நிகழ்ச்சிகளில் பட்டி மன்றம் மட்டுமே பார்ப்பேன்
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 15. அலகு தம்ளில் அவர் பேசியதுகூட புரியுது ,உங்க தலைப்புதான் புரியலே ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இது சுதந்திரத்தை குறித்த பதிவு அல்ல!
   கொட்டாம்பட்டிக்காரியின் முதல் படத்தின் பெயர்.

   நீக்கு
 16. எந்த நிகழ்வும் உங்களுக்குள் இருக்கும் தார்மீகக் கோபத்தை வெளிக்கொண்டுவருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது எனது பிறவிக்குணம் இறுதிவரை இப்படித்தான் இருக்குமோ...

   நீக்கு
 17. அந்த பேட்டியைப் படிக்கும்போது அவர் வேற்று மாநிலத்தவர் போலும் என எண்ணினேன். கடைசியில் அவர் கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் என சொல்லி இன்னும் கோபப்பட வைத்துவிட்டீர்கள்.

  என் செய்ய? நம்மவர்களுக்கு திரைப்பட மோகம் இருக்கும்வரை இதுபோன்ற பேட்டிகளை விடுதலை நாட்கள் போன்ற நாட்களில் கேட்டு/பார்த்து தொலைக்க வேண்டியதுதான்.

  விடுதலை நாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தமிழர்களே, தமிழர்களை ஏமாற்றுவதுதான் மிகவும் வேதனையான விடயம்.

   நீக்கு
 18. வாழ்த்துகள் ஜி . படிக்க படிக்க உற்சாகமாய் இருந்தது அடுத்தபாகம் இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகள் நண்பரே வருகைக்கு நன்றி அடுத்த பாகம் இருந்தால் தொடரும் போட்டு விடுவேன்.

   நீக்கு
 19. வாழ்த்துகள்!த ம 14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 20. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 21. ஜி அந்த ஹீரோயின் பேசுறது எந்த ஸ்லேங்...

  நமீதா பேஸ்ற மாத்ரி இர்க்குது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கொட்டாம்பட்டி ஏரியாவாக இருக்குமோ....?

   நீக்கு
 22. ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 23. ரசித்தேன் நண்பரே
  இன்றைய நிலை இதுதானே
  சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே
  தம ஸ்ர+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் ரசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி

   நீக்கு
 24. நீங்கள் தொலைக்காட்சி கூத்தை நன்றாக சொன்னீர்கள்.
  நீங்கள் நல்ல தியாகிகளை பற்றி பகிர்ந்து இருக்கலாம். தேவகோட்டைஜி.
  பாரதி போல் நெஞ்சுபொறுக்கு திலையே பாட வேண்டும் போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நெஞ்சு பொறுக்காமல் எழுதியதே இப்பதிவு.

   நீக்கு
 25. பாரத சமுதாயம் வாழ்கவே! பாரத சமுதாயம் வாழ்கவே!

  பதிலளிநீக்கு
 26. வாத்துகால்.... :) இப்படித்தான் இருக்கிறது சினிமா உலகமும், சின்னத்திரையும்! சுதந்திரத்திற்கும் இந்த நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம்!

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 27. நடிகைகளின் பேட்டியைக் கேட்டால் பி.பி. எகிறும். டி.வி.யை பார்க்காம விட்டுட வேண்டியதுதான். விழா நாட்களை விட சாதாரண நாட்களில் நிகழ்ச்சிகள் நன்று த.ம. வாக்கு ஏற்கனவே பதிவிடப்பட்டது என்று காண்பிக்கிறது. ஏதேனும் பிழையிருக்குமோ

  பதிலளிநீக்கு