தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 30, 2017

சந்தோஷப்பட முடியுமா ?

30.08.2017

கலைச்செல்வி கில்லர்ஜி

சேனா இன்று நமது திருமணநாள் இந்நாளில் நான் சந்தோஷப்பட முடியுமா ?
நீ இல்லாததால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் விடை அறியாத வாழ்வு.


க. வனிதா

வனிதா இன்று உனது பிறந்தநாள் இந்நாளில் நான் சந்தோஷப்பட முடியுமா ?
நீ மறைந்து போனதால் இன்று எனது வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்.

என்னவளுக்காக எனது முந்தைய கவிதை தொடர்கள் கீழே...

26 கருத்துகள்:

  1. இழந்தவர்களுக்குத்தான் இழப்பின் வலிகள் புரியும். ஒரே நாளில் திருமண நாளும், பிறந்த நாளும் கொண்டாடும் நெருங்கிய இருவரின் இழப்புத்தரும் வலிகளை எவராலும் எதனாலும் ஈடுசெய்ய முடியாது தான். ஆனாலும் மனதினை தேற்றிக்கொள்ளுங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  2. கவலைப்படாதீர்கள் நண்பரே காலம் எல்லா வலிகளையும் போக்கும் சக்தி படைத்தது அது வேறு உருவங்களில் உங்கள் கவலைகளுக்கு மருந்தளிக்கும் நம்பிக்கை கொள்ளுங்கள் .

    பதிலளிநீக்கு
  3. சந்தோசமாகக் கொண்டாடப்பட வேண்டிய இரு விசயங்கள் ஒரே நாளில்.. ஆனா கொண்டாட வேண்டியவர்களை தன்னோடு எடுத்துவிட்டாரே இறைவன்.. ஆறுதல் சொல்லத் தெரியவில்லை.. கடந்த காலத்தைத்திரும்பிப் பார்த்தால் வாழ முடியாது... இப்போதையதை மட்டும் பாருங்கோ... மகிழ்ச்சியாக இருங்கோ... நாம் யாரும் நிரந்தரமாக இங்கு தங்கிட முடியாதே...

    பதிலளிநீக்கு
  4. மனத்தின் காயங்கள் ஆறட்டும். இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.​

    பதிலளிநீக்கு
  5. இருவரின் நினைவுகளையும் போற்றுவதற்குரிய நாள்தான் நண்பரே
    கவலைப் படாதீர்கள்
    இருவரின் நீங்க நினைவுகளையும் மனதில் சுமந்து, எதிர்காலக் கடமைகளை நிறைவேற்றத் தொடங்குங்கள்

    பதிலளிநீக்கு
  6. காலம் காயங்களை ஆற்றட்டும்..

    பதிலளிநீக்கு
  7. உங்களால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதே சமயம் உங்களின் பகிர்வு மனச்சுமையை குறைக்கும்.

    பதிலளிநீக்கு
  8. மறக்க முடியாத இழப்பு.... காலம் உங்கள் மனவலியைப் போக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  9. காலம் மாறும்போது கவலைகள் தீரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. காலஙகள் மனத்துயரங்களை மாற்றும் என்பார்கள், ஆனால் உங்கள் சோகங்கள் மேலும் மேலும் அதிகமாகிறது.
    எப்படி ஆறுதல் சொல்வது! என் வாழ்கையிலும் நிறைய இழப்புகளை சந்திருக்கிறேன். மனம் எண்ணி எண்ணி வேதனை படும். உங்கள் எல்லோரிடமும் உரையாடி கொண்டு இருப்பதால் கவலைகளை மறந்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. என்றும் அவர்கள் நினைவு தங்கள் மனதில்....

    நினைவுகளோடு வாழ்க்கையை வாழ பழகலாம் ...

    இதை தான் அவர்களும் விரும்புவார்கள்...

    பதிலளிநீக்கு
  12. உங்கள் குழந்தைகளுக்காக வாழ ஆரம்பியுங்கள்! அவர்கள் மகிழ்ச்சியில் நீங்களும் மகிழ்ச்சி அடையுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் திருமண நாளும் உங்கள் தங்கை மறைந்த நாளும் ஒன்றா? மிகவும் வருந்துகிறேன்!! சொற்களால் ஆறுதல் சொல்வதற்கில்லை. பிள்ளைகள் முகம் பாருங்கள்! அமைதி கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு எனது திருமண நாளும், தங்கையின் பிறந்த நாளும் ஒன்று.

      நீக்கு
    2. ஓ! தவறாகப் புரிந்து கொண்டேன்.

      நீக்கு
  14. ஆறுதல் பெறுக! த ம 7

    பதிலளிநீக்கு
  15. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு. (திருக்குறள் 336)

    பொருள்: நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை உடையது இவ்வுலகம்.

    எனவே நண்பரே மன அமைதி பெற்று, இயல்புநிலைக்கு திரும்பவும்.

    பதிலளிநீக்கு
  16. இனிய நினைவுகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  17. காலம் காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றும். மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. இரு மகிழ்வான நாட்கள்! ஆனால் கொண்டாட முடியாத நிலை...சொல்லிட வார்த்தைகள் இல்லை. அவர்களுடனான இனிய நினைவுகளில் வாழ்ந்து உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து, அவர்களின் முன்னேற்றத்தில் மனதைச் செலுத்திடுங்கள் ஜி! வேறு என்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
  19. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்றாலும் இரண்டுக்கும் இடையில் சாவு என்பது மிகுந்த துக்கம் தரக் கூடியதே ,மனதை தேற்றிக் கொள்ளுங்கள் ஜி :(

    பதிலளிநீக்கு
  20. ‘படைத்தோன் மன்ற பண்பிலாளன்’ என்னும் சங்கப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

    ஆறுதல் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  21. காலம் ஒருநாள் மாறும்..தங்கள் கவலைகள் எல்லாம் தீரும்..

    பதிலளிநீக்கு
  22. மனதின் காயங்கள் பல நாளடைவில் ஆறும். ஆனால் நம் பிரியத்துக்குரியவர்களின் இழப்பினால் ஏற்பட்ட காயங்கள் என்றுமே ஆறுவதில்லை. ஆனாலும் அவைகளினால் ஏற்பட்ட மன வேதனை காலப்போக்கில் குறைவதற்கு என் பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  23. மனம் மிக வருந்துகிறது தேவ கோட்டையாரே.ஆறுதல் அடையுங்கள். எத்தனை இழப்பை நீ தாங்குகிறாய் என்று இறைவன் என்னையும் பதம் பார்த்தான் 2017ஆம் வருடம்.
    இணையத் தோழமைகளின் அன்பு காத்து வருகிறது.

    பதிலளிநீக்கு