தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

மீசை मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــب

திரு. நக்கீரன் கோபால் அவர்கள்
இதன் தொடர்பான முந்தைய பதிவு போவோமா... ஊர்கோலம்...

ந்த பாக்கிஸ்தான் பெரியவர் என்னை ஏன் முறைத்தார் ? எனது மீசைதான் எனது மீசை அவரை என்ன செய்தது ? மீசை பெரிதாக வைத்தவன் அராமி அதாவது அயோக்கியன், கெட்டவன் என்பது அரேபியர்கள், லெபனானியர்கள், எஜிப்தியர்கள், சிரியர்கள், குவைத்தியர்கள், சவூதியர்கள், பஹ்ரைனியர்கள், கத்தாரியர்கள், சூடானியர்கள், ஒமானியர்கள், யெமனியர்கள் மொத்தத்தில் அரபு மொழி பேசும் தேசத்தினரின் எண்ணம். அந்த வரிசையில் பாக்கிஸ்தான் வாலாக்களும் உண்டு. பதிலுக்கு வழக்கம் போலவே நானும் முறைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டே வந்தேன். மனங்களையும், அவர்களின் குணங்களையும் ஊடுறுவிப் பார்க்கும் அறிவுத்திறன் இவர்களுக்கு கிடையாது என்னைப்பற்றி இவர்களுக்கு க்யா மாலுமே ?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
Thanks to Kaviyarasu Kannadasan (1978)

நான் வருடத்திற்கு ஒருமுறை மீசையின் வடிவமைப்பை மாற்றி விடவேண்டும் என்பது ஸ்காட்லாண்டிலிருந்து வந்த இரகசிய தகவல் இதை இதுவரை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை எனது அலுவலகத்தில் அரேபியர்கள் கேட்பார்கள்.

அதா ஸினப் மாஃபி ஜெயின் சவி தர்த்திப் ஸஹீர்
இந்த மீசை சரியில்லை சிறியதாக சரி செய்

இன்ஷா அல்லாஹ் புக்கரா சவி தர்த்திப்
இறைவன் நினைத்தால் நாளை சரி செய்கிறேன்

மறுநாள் கேட்பார்கள்

லேஷ் இந்தே மாஃபி சவி தர்த்திப் ?
ஏன் நீ சரி செய்யவில்லை ?

இன்ஷா அல்லாஹ் புக்கரா
இறைவன் நினைத்தால் நாளை

அம்ஸு இந்தே கூல் அதா ஸகில்
நேற்றும் இதேதான் சொன்னாய்

ஐவா, அம்ஸு கூல் புக்கரா மாஃபி அல்யூம்
ஆமா, நேற்று சொன்னது நாளை இன்றல்ல

இந்தே முஸீபத் கலம்த் மாஃபி ஜெயின்
நீ வில்லங்கம் புடிச்சவன் பேசுறது சரியில்லை

கடைசிவரை இன்று போய் நாளை வா கதைதான். அவர்கள் விட்டு விடுவார்கள் சைத்தான் தொலையட்டும் என்று ஒரு நாளா ? இரண்டு நாளா ? இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது எனது சமாளிப்பு அன்பின் ஜி குவைத் மன்னர் திரு.துரை செல்வராஜூ அவர்களுக்கு தெரியும் நான் மீசையை வெள்ளாமை போட்டு களை எடுத்து பாத்தி கட்டுவதற்கு பட்ட கஷ்டங்கள் அடுத்து நான் சொல்லப் போகும் ஒரே விசயம் பலமுறை சந்தித்து இருக்கிறேன் பில்டிங்கில் ஃப்ளாட்டுக்கு போவதற்கு லிப்டுக்காக கீழே நின்றிருப்பேன் அப்பொழுது என்னைப் போலவே மேலே போவதற்கு பலரும் வருவார்கள் குறிப்பாக எஜிப்தியர்கள் என்னைக் கண்டதும் ஏதோ நான் அவனது கொழுந்தியாள் கையைப் பிடித்து இழுத்து விட்டவனைப்போல் என்னை முறைப்பார்கள் லிப்ட் புறப்படும் பொழுது நான் தயாராகி விடுவேன் அடுத்து என்ன கேட்பான் ? இதற்கு பதில் என்ன சொல்ல ?

லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

இதற்கு என்ன சொல்வது ? உனக்கென்ன என்று கேட்பதா ? இல்லை நான் ஆசைப்படுகிறேன் என்று விளக்கம் சொல்வதா ? இல்லை மறைந்து விட்ட என்னவள் ஆசைப்பட்டாள் என்று சொல்வதா ? எனக்கு அரபு பேசத்தெரியாமல் இல்லை மணிக்கணக்காய், நாட்கணக்காய் பேசுவேன் வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டு விட்டு பேசுவேன் முதலில் இவன் யாரோ வழிப்போக்கன் (வலைப்பதிவர் திரு.வலிப்போக்கன் அல்ல) சந்திப்பே இரண்டு, அல்லது மூன்று நிமிடமே எதற்காக வாதம் ? பிறகு அவன் மதவாதம் பேசுவான் நம்ம வாயும் சும்மா இருக்காது ஏற்கனவே எனது வாய் காதுவரை இருக்கிறது என்று கலீஜ் டைம்ஸ் நாளிதழில் போட்டவங்கே.... பேசினால் சண்டை வரும் பிறகு அந்த சண்டையைப்பற்றி விரல் வலிக்க டைப்பி பதிவு எழுத வேண்டும் எதற்கு வம்பு நாமும் சமாதானப்புறாவாக பறப்போமே... முடிவு ? அவன் தனது வாழ்நாளில் இனி யாரையும் இந்தக்கேள்வி கேட்ககூடாது அப்படியொரு பதில் சொல்ல வேண்டும் அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து மாஃபி என்ற வார்த்தை சேர்த்து சொன்னேன் இல்லை கேட்டேன் என்று சொல்லல் நன்று ஆம்...

அவர்கள் கேட்டது...
லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

நான் சொன்னது...
லேஷ் இந்தே மாஃபி ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வைக்கவில்லை ?

அவர்களுக்கு எப்படியிருக்கும் ? இந்த மாதிரி மீசை வைப்பது இறைகுற்றம் என ஆத்மார்த்தமாய் நம்புபவன், பிறரையும் இப்படி வைக்ககூடாது என்று சொல்பவனை நீயும் இந்த மாதிரி மீசை வை என்று சொன்னால் ? மறுமொழி இல்லாமல் அதிர்ந்து இருக்கின்றார்கள் பலர். பல தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் சாதாரண மயிர் அதற்காக பிரச்சனையை வளர்க்கிறாய் ? அது மயிர்தான் என்னை விட்டு போகும் பொழுது அதுவரை அதற்கும் இறுக்கிறது உயிர் நான் மீசையை வளர்த்து பராமரிப்பதைவிட கேள்விக்கணை மனிதர்களை சமாளிப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இதே எனது இந்தியாவில் எவனாவது கேட்க முடியுமா ?

மீசையை வைத்து பராமரிப்பது ஒரு கலையே இது எல்லோருக்கும் புரியாது ஏன் இந்தியாவில் வடநாட்டில் வாழ்பவனுக்கே புரியாதே... அது பரம்பரையில் ஏற்படும் இரத்தஉணர்வு எனது தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா அதாவது புரியும்படி ஜொள்ளு’’கிறேன்.

எனது சேயோனார் தெய்வத்திரு. உமையன் ஆச்சாரியார்
எனது ஓட்டனார் தெய்வத்திரு. உ. வெள்ளையன் ஆச்சாரியார்
எனது பூட்டனார் தெய்வத்திரு. வெ. முத்து மரையான் ஆச்சாரி
எனது பாட்டனார் தெய்வத்திரு. மு. தென்கரை முத்து ஆச்சாரி
எனது தாத்தனார் தெய்வத்திரு. தெ. பூவலிங்கம் ஆசாரி
எனது தகப்பனார் தெய்வத்திரு. பூ. கணபதி ஆசாரி

இவர்கள் எல்லோரும் மீசை கட்டி வாழ்ந்தவர்கள் அவர்கள் வழியில் வந்த நாந்தேன் கில்லர்ஜி எனக்கு மட்டும் அந்த ஆசைகளும், மீசை உணர்வுகளும் வராதா ? எனது மகன் தமிழ்வாணனுக்கே வந்து விட்டதே மீசைக்கு எதிராக யூ.ஏ.ஈ படையென்ன ? யூ.எஸ்.ஏ. படைகளே வந்தாலும் எதிர்ப்பேன்.

ஜாதியை சுட்டிக்காட்டி இருப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்ந்து முடிந்த எமது முன்னோர்களை பெயரோடு மட்டும் நிறுத்தினால் அவர்களை நான் அவமதித்ததாக ஆகிவிடும் என்று நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு தந்தை போன்றவர்களின் கருத்துகளை ஏற்று எழுத வேண்டிய சூழ்நிலை நான் அனைவரையும் சமாளிப்பது கடினமான காரியம் காரணம் எனது தந்தையாரோடு பிறந்தவர்கள் பதினாறு நபர்கள். அதாவது எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் வாரிசுகள் இருப்பினும் ஜாதி அழிந்து கொண்டு வந்ததை எனது வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கிறேன். எனது தந்தையாரோடு முடித்து விட்டேன் இனிமேல் ஜாதி வரக்கூடாது எம்மைப் பொருத்தவரை ஜாதிகள் இல்லையடி பாப்பா ஆனால் இப்பொழுதும் இருக்குதடி டாப்பா.

ஆகவே முகத்துக்கொரு மீசை வளர்ப்போம். இந்த வாசகம் எமது சந்ததியினருக்கு மற்றவர்களும் ஏற்றுக்கொண்டால் சந்தோஷமே...

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள்
திரு. அடோல்ஃப் ஹிட்லர் அவர்கள்
திரு. வீரப்பன் அவர்கள்
திரு. மொக்கைராசு அவர்கள்
திரு. கில்லர்ஜி அவர்கள்
திரு. ரிச்சர்ட் ஸ்டீவன் அவர்கள்

பிற மொழிகளில் மீசையின் பெயர்
 (Tamil) மீசை
मूछ (Hindi) மூஜ்
మీసం (Telugu) மீசம்
മീശ (Malayalam) மீச
ಮೀಸೆ (Kannada) மீசே
(Arabic) ஸினப்شنـــب
(Sri Lanka) ரவுலே
Bigote (Philippine) பிகோட்டி
Mustache (English) முஸ்டாஜ்

தேவகோட்டை கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
என்னங்கையா... இது பழனி சித்த வைத்தியசாலை மாதிரி இருக்கு.

Chivas Regal சிவசம்போ-
பள்ளிக்கூடத்துல சேர்க்கும் பொழுது என்ன ஜாதினு கேட்டுப்புட்டு மறுநாள் ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாடம் நடத்துன கதைதான்.

சாம்பசிவம்-
குடிகார மட்டையா இருந்தாலும் கேள்வி நல்லாத்தான் கேட்கிறே...

70 கருத்துகள்:

  1. ரைட்.. அரபி சாத்திரப்படி (?) மீசை தப்பு.. தாடி மப்பு.. மறந்தே விட்டது. அதான் முறைப்பா?

    "நீ ஏன் இந்த மாதிரி மீசை வைக்கவில்லை?" சரியான attitude.

    விசயத்துக்கு வாங்க.. பதிவு தொடருமா?

    ஆச்சாரி என்பது ஜாதியா? ஆச்சாரி என்பதற்கும் ஆசாரி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா (அல்லது ச் விட்டுப் போச்சா?). உங்கள் பாரம்பரியப் பெருமை பாராட்டுக்குரியது.

    இந்தியாவில்.. உலகில்.. ஜாதிகள் அழிய வாய்ப்பு மிகக் குறைவு என்று நினைக்கிறேன். ஆத்திகம் மறையும் நாளில் ஜாதிகள் அழியலாம் - அதுவும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாதிகள் அழிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் ஆகவே எழுத்துகளை குறைத்தேன்.

      இடையில் "ச்" போட்டு உச்சரிப்பதே சரியென்று பெரியவாள் சொல்கிறார்கள் என்னைப்பொருத்தவரை மொத்தமாக தூக்குவதே சரி

      இனிவரும் காலங்களில் காதல் திருமணங்கள் நிகழ்ந்து, ஜாதிகள் கலந்து, ஜாதிகள் கலைந்து விடும் என்பது எமது கணிப்பு நண்பரே.

      நீக்கு
    2. கருத்தொருமித்தாலும் ஜாதிகள் அழியச் சாத்தியம் குறைவு தான். சாதி கடந்த காதல் திருமணங்கள் குறுகிய சாதிக்கலப்பு அனுசரிப்பை உருவாக்குமே ஒழிய சாதிகள் ஒழிய வழி வகுக்குமா ஐயம் தான். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் காதல் திருமணங்கள் தானே ? சாதிகள் ஒழிந்தா விட்டன?

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே சற்றே யோசிக்க வைத்த விடயம்.

      நீக்கு
  2. தி தனபாலனுக்கும் அற்புதமான மீசை உண்டு. ஏனோ திடீரென்று எடுத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது மீசையும் அழகே அதாவது "கட்டி மீசை"

      நீக்கு
  3. பதில்கள்
    1. 2015-ல் நீங்கள் வெளியிட்ட இப்பதிவுக்கு அன்றும் கருத்துரை இட்டேன் இன்றும் கருத்து இட்டு இருக்கிறேன் வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
    2. நிஜமாகவே உங்கள் மீசையின் பரமரசிகன் நான்.

      நீக்கு
    3. நன்றி நண்பரே...

      நீக்கு
  4. மீசை புராணம். வித்தியாசமான பதில். தமிழ் இலக்கிய விமரிசகர் ரசிகமணி டி.கே.சி அவர்களும் பெரிய மீசைக்கு சொந்தக்காரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எமக்கு புதிய தகவல் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. ரசிகமணியின் மீசை முத்திரை மீசை.
      பாரதியார் மீசையும் கம்பீரம்.

      நீக்கு
  5. மீசைககார நண்பரே
    தங்களது மீசை புராணம்அருமை
    மீசை வளர்த்துப் பார்த்தவர்களுக்குத்தானே அதன் அருமை தெரியும்
    வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்களும் முன்பு பெரிய மீசை வைத்திருந்தவர்கள் உங்களுக்கு தெரியாததா ?

      நீக்கு
  6. ஆசையாக வளர்க்கும் மீசைக்கு(ம்) ஒரு வரலாறு உண்டு. அது சரி, முறுக்கினால்தான் மீசையா? புசுபுசுவென்று வாயை மூடும் மீசை, அளவாக நறுக்கி விடப்படும் பென்சில் மீசை.. நம் பதிவர்கள் மேசையில் யார் யார் எந்தெந்த வகை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம் பதிவர்கள் மேசையில்//

      பதிவர்கள் மீசையில் என்று படிக்கவும்!

      :))

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம் ஜி அடுத்த பதிவுக்கு அடி போடுவது போல தெரிகிறதே...

      உண்மையிலேயே பல பதிவர்களின் புகைப்படத்தை தேர்வு செய்தேன் பிறகு வேண்டாமென வெளிநபர்களின் படங்கள் இட்டேன்.

      நீக்கு
    3. ஹலோ ஸ்ரீராம் நீங்க உங்க மீசையை மாத்திக்கிட்டே இருந்தீங்கனா எந்த வகையில சேர்க்கறதாம்....நீங்க ஃப்ரென்ச் ஸ்டைல் வைச்சிருந்ததா ஞாபகம்!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. ஜீ நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டுட்டாரு...நம்ம பதிவர்கள் ஃபோட்டோ போட்டு ஸ்டைல் எழுதியிருக்கலாமேனு சொல்ல நினைத்தேன்...அதை இங்கே மீண்டும் வைக்கிறேன்...நீங்க அவங்க பெர்மிஷன் கேட்டுட்டுக் கூடப் போடலாமே....மீசை ஆராய்ச்சி!!???!!!

      கீதா

      நீக்கு
  7. ஆகா.. மீசை புராணத்திற்குள் என்னையும் இழுத்து விட்டாயிற்றா!..

    இருந்தாலும் - அவனுங்களை நீங்க இந்தப் பாடு படுத்தியிருக்கக் கூடாது..

    இனி எவனும் அரபு நாட்டில் இப்படி மீசையுடன் திரிவதற்கில்லை..

    அப்படியே திரிந்தாலும் - ஏன் மீசை இத்தனை பெரிதாய் வைத்திருக்கின்றாய்?.. - என்று கேட்பவரும் இல்லை..

    நம்மைப் பொறுத்தவரை மீசை புராணம் மிகப் பெரிது.. இனிது..

    என்ன ஒரு பிரச்னை என்றால் -

    ஏ.. சாமீ.. வயசான காலத்தில ஒனக்கு இதெல்லாம் தேவையா!?..

    சரி.. அப்புறம் பார்ப்போம்..

    வாழ்க மீசை.. வளர்க மீசை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கடைசி கோஷம் புன்னகைக்க வைக்கிறது.

      நீக்கு
  8. துளசி: ஆஹா!! மீசை புராணம் செம கில்லர்ஜி!! ஆமாம் அரபு பேசுபவர்கள் மீசைக்கு எதிரிகள்! மட்டுமல்ல நம் நாட்டிலும் நீங்கள் சொல்லுவது போல் பெரும்பான்மையான வட இந்தியர்கள். நானும் ஒரு காலத்தில் ஆசையுடன் மீசை வைத்திருந்தேன். வெகு சீக்கிரமாகவே தலை முடி முழுவதும் வெள்ளையாகிவிட்டதால் வீட்டில் டை அடிக்க வேண்டும் என்று சொல்வதை மறுக்க முடியுமா? ஐயையோ அப்போ மீசைக்கும் டை அடிக்கணுமே..அடித்துக் கொண்டே இருக்கனுமே என்று எடுத்தவன் தான்...ஹிஹிஹி...

    கீதா: ஜி எங்கேனும் நம்ம வீரப்பனின் படம் போடாமப் போயிருவீங்களோனு நினைச்சேன்...நல்ல காலம் போட்டுட்டீங்க! அது சரி கில்லர்ஜி காது வரைக்கும் மீசை எக்ஸ்டன்ட் ஆகுதே அப்போ காது பக்கத்துலதான் முறுக்குவீங்களோ!!ஹஹஹஹ்...

    இன்னொன்னு நல்ல கலரா தளதளனு இருக்கற அந்த நாட்டவங்க எல்லாம் அதான் நீங்க சொல்லிருக்கற அரபு பேசுறவங்கதான் கறு கறுனு மீசை வைச்சா எவ்வளவு அழகா நல்ல வெள்ளையும் கருப்புமா காம்பினேஷன் சூப்பரா இருக்கும் ல...ச்சே ரசனை கெட்ட பசங்க விடுங்க ஜி!! போகுதுங்க ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்க கூழுக்கு ஆசைப்பட்டீங்க, நான் மீசைக்கு ஆசைப்பட்டேன் அவ்வளவுதான் விடயம்.

      எங்க அண்ணன் போட்டோ போடாமல் மீசையைப் பற்றிய பதிவு சரியாகுமா ?

      உண்மை அவர்களின் நிறத்துக்கு மட்டுமல்ல அல்ல அவர்கள் சிறு வயது தொடங்கி துர்க்கீஷ் என்று சொல்லப்படும் காஃபி மற்றும் காவா என்று சொல்லப்படும் கசாயம் குடிப்பார்கள் இதனால் அவர்களின் தாடி அடர்த்தியாக, வெகு காலத்துக்கு கருமையாக வளர்வதாக அரேபியர்கள் சொல்வார்கள் ஆகவே நானும் அலுவலகத்தில் தொடர்ந்து குடிப்பேன் அதாவது சிறிய அளவுதான் ஆனால் அடிக்கடி குடிப்பார்கள்.

      நீக்கு
  9. நன்றி ஜி...

    மீசை பற்றி அசத்தலான ரசனையான பதிவு...

    நம்ம கரந்தையார் அவர்களுக்கும் அற்புதமான மீசை உண்டு...

    உங்களைப் போலவே இருக்கும் Indian Opening batsman Shikhar Dhawan அவர்களுக்கு, முன்பு உங்களைப் போல மீசை... உங்களைப் போல எதிர்கேள்வி கேட்கத் தெரியாமல் இப்போது மீசையை மாற்றிக் கொண்டார் போல...! ஹா... ஹா...

    அப்புறம் ஒரு இனிய ஞாபகம்... பெண் பார்க்க (எனது துனணவியை) சென்றிருந்தபோது, எனது காதில் கேட்ட குரல் :

    "அடியேய்... மாப்பிள்ளைக்கு காபியை ஆடையோடு கவலைப்படாமல் தாராளமாக தரலாம்... ஆடை தானே பில்டர் ஆகி விடும்...!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முதலில் நண்பர் திரு. கரந்தையார் உங்களது மற்றும் சிலரின் புகைப்படம் எடுத்து வைத்தேன் பிறகு பதிவர்களின் புகைப்படம் மீசையால் மனக்கசப்பு வருமோ என்று சந்தேகத்தால் மாற்றி விட்டேன்.

      ஆடை பில்டர் ஆகிவிடும் ஹா... ஹா... ஹா... ஸூப்பர் டயலாக் ஜி

      நீக்கு
    2. மீசை பில்டர்.. ஹாஹா

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  10. நண்பரே ஒன்று சொல்ல மறந்து விட்டேன். திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் (அரியமங்கலம் காட்டூரில்) உள்ள ஒரு அசைவ ஹோட்டலின் பெயர் ‘மீசை’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல தகவல் நண்பரே ஒருநாள் இந்த பெயருக்காகவே போய் சாப்பிட வேண்டும் நன்றி

      நீக்கு
  11. சுவையான மீசை புராணம்! பதிவர்களில் எனக்குத் தெரிந்து டிடியும், நீங்களும் தான் மீசைக்காரர்கள். இப்போ டிடி எடுத்துட்டதாச் சொல்றீங்க! சமீபத்திய புகைப்படத்தைப் பார்க்கலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் ஜியெம்பி ஐயா, கரந்தையார், டாக்டர். கந்தசாமி ஐயா இருக்கின்றார்களே.... வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
    2. முனைவர், செல்லப்பா சார், பாலகணேஷ் அண்ணா, அரசன், ஆவி அப்பப்ப மாத்திட்டே இருப்பார்....வெங்கட்ஜி...இன்னும் யாராவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்கப்பா...அப்புறம் அவங்க மீசையை முறுகிட்டு வந்து...... ஹஹஹ

      கீதா

      நீக்கு
    3. லிஸ்ட் நீளுதே...?

      நீக்கு
  12. மீசையில் ஆசை! த ம 9

    பதிலளிநீக்கு
  13. அந்தக்காலத்தில் வீரனுக்கு அழகு மீசை என்பார்கள்.
    சராதியாய் தேர் ஓட்டிய பார்த்தனுக்கு மீசை உண்டு.
    திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு மீசை உண்டு.
    சீர்காழி கோவிந்தராஜன் பாடலில் மீசை அழகும் வெற்றி ரகசியம் , பாரதபோர் நடத்தி வைத்த யுக்தி ரகசியம் என்ற பாடல் கேட்டு இருப்பீர்கள்.

    என் பெரிய மாமா உங்களை போல் மீசை வைத்து இருப்பார்கள்.
    சின்னமாமா பென்சிலில் எழுதியது போல் கோடு மீசை வைத்து இருப்பார்கள். அப்பா சினிமா இயக்குனர் ஸ்ரீதர் போல் வைத்து இருப்பார்கள்.

    என் கணவர் ஒரு காலத்தில் முறுக்கு மீசை வைத்து இருந்தார்கள்.
    மீசை, கிருதா வளர்ப்பது பெரிய கலை.

    பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையர் பெரிய மீசை வைத்து இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உண்மை வீரனுக்கு அழகு மீசையும்தான்.
      ஆனால் தற்போது ரௌடிதான் வீரன் என்ற நிலை வந்து விட்டது.

      தங்களது குடும்பத்தினரின் நினைவுகளை தூண்டி விட்டதோ பதிவு வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  14. மீசை மகாத்மியம்ன்னு ஒரு புக்கே போடலாம் போல

    பதிலளிநீக்கு
  15. மீசை புராணம் நல்லாத்தான் இருக்கு. எங்க அரபி மறந்துவிடுமோ என்று அப்போ அப்போ எழுதிப் பாத்துக்கிறீங்கன்னு நினைக்கறேன்.

    நான் ஷார்ட்ஸ்லதான் (அரை டவுசர்) சமயத்துல பயணம் பண்ணுவேன் (ஃப்ளைட்ல). அப்போ ஓரிரு தடவை ஏர்போர்ட்ல (ரமதான் சமயம் என்று ஞாபகம்) அரபிகள் ஒரு சிலர் வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள்.

    முதல் படத்துல இருக்கிற ம.பொ.சி ஐயா அவர்களிடமிருந்துதான் 'வரைதலுக்கு' பரிசு பெற்றேன் (79ல்). கடைசி படத்தில் உள்ளவரைப் போன்றவரை (ஒருவேளை அவரேதானா.. பழைய புகைப்படங்களைப் பார்க்கணும்) நான் தெய்ரா துபாயில் மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 10 திர்ஹாம் எல்லோரிடமும் வாங்கினார். நாம காசை செலவழிச்சுருவோமா? தூரத்திலிருந்தே புகைப்படமும் வீடியோவும் எடுத்தேன்.

    வட இந்தியர்கள் (சீக்கியர்கள்) அவர்களது தலைமுடி, மீசை/தாடியைப் பராமரிப்பதே பெரிய வேலை. தினமும் 45 நிமிஷத்துக்குமேல அதுக்குச் செலவழிப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே எதையும் புழக்கத்தில், பழக்கத்தில் வைத்திருக்க வேண்டும் இல்லையேல் மறந்து போககூடும் வயதும் பதினாறைக் கடந்து விட்டதே....

      நானும் ஒருமுறை ஒமான் நாட்டுக்கு போனபோது பல அரேபியர்கள் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்

      துபாய் மாலில் சில முறை இப்படி நடந்து கொண்டார்கள் எனக்கு சங்கடமாக இருந்தது நாம் காட்சிப்பொருளாக ஆகி விட்டோமோ... என்று.

      என்னை சீக்கியர் என்று நினைத்த பாலஸ்தீனிய இராணுவவீரன் ஒருமுறை சிறிய கார் விபத்தில் விபத்து நடக்கவில்லை நடந்து விடுமோ என்று கருதியவன் போலீஸை வரவைத்து விட்டான். அவர்களிடம் வாதாடியதில் மூன்றுநாள் சிறை தண்டணையை தவிர்க்க... 500/ திர்ஹாம்ஸ் அபராதம் கட்டினேன்.

      நீக்கு
    2. ம.பொ.சி. ஐயாவிடமிருந்து பரிசு பெற்றீர்களா ? பெரிய விடயம் நண்பரே... வாழ்த்துகள்.

      நீக்கு
  16. பார்பனராக பிறந்த 68 வயது கிழவன் நாங்களே மீசை வைத்து பல யுகங்கள் ஆயிற்றே!!கில்லர். உமக்கென்ன? பிறப்புரிமையை விட்டு கொடுக்காதீர்.ஸ்ரீநாத்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மீசை வைப்பது அவரவர் உரிமை இதற்கு ஜாதியென்ன ? மதமென்ன ? எனக்கு பிடித்து இருக்கிறது நான் வைப்பேன்.
      இதற்கு மேல் எழுதினால் மீசை வைத்தவர்களுக்கு ரேசன் அரிசி இல்லை என்பார்கள்.
      வருகைக்கு நன்றி ஐயா தொடர்ந்தால் நல்லது.

      நீக்கு
  17. யம்மோவ் ...ஒரு நூறு பதிவுக்கான மேட்டர் கிடைக்கும் போல இருக்கே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே உங்களுக்கு நூறு பதிவா ? பரவாயில்லை உங்களை வைத்தாவது நானும் பிரபலம் ஆவேன் நன்றி எழுதுங்கள்.

      நீக்கு
  18. வயது ஏறினால் மீசை நரைக்கும் அப்போதும் மீசை ஆசை மாறுமா என் மீசையைப் பராமரிக்க சிரமமாக இருக்கிறது குஷ்வந்த் சிங் தெரியுமா அவரிடம் யாரோ கேட்டர்களாம் இந்த மீசை தாடியெல்லம் இரவில் என்ன செய்வீர்கள் என்று( கேட்டதுஒரு பெண்மணி ) அவர் பதில் சொன்னாராம் ஒரு இரவு என்னுடன் இருந்துபாருங்களேன் என்று .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அவருடைய பதில் வில்லங்கமாக இருக்கிறதே....
      ஹா.. ஹா.. ஹா.. நன்றி ஐயா.

      நீக்கு
  19. அசத்தல்!!!!
    "சல்வேடார் டாலி"யின் மீசையையும் காண்டியிருக்கலாம்.😃😃😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தெரியாத விடயம் தேடுவேன் நண்பரே...

      நீக்கு
  20. மீசை புராணம்! ஹாஹா... பெரிய அக்கப்போரே நடத்தி இருக்கீங்க போல!

    நடத்துங்க....

    எனக்குக் கூட ஹாண்டில் பார் மீசை வெச்சுக்கணும்னு ஆசை உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி காசா... பணமா... வைக்க வேண்டியதுதானே...

      நீக்கு
  21. என்ன கில்லர்ஜி தலைப்பிலேயே கெட்ட வார்தையில் திட்டியிருக்கிறீங்க:)...
    உலகில் எத்தனையோ நாடிருக்க ஸ்கொட்லாண்டில் இருந்தா கேட்டாய்ங்க? நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர்.. தேவ கோட்டையில் இருக்கிறீங்க:)...
    எந்தாப் பெரிய தலைமயிரிலெல்லாம் இல்லாத ரகசியம் உங்கட அரை அங்குல மீசைக்குள் இருப்பதை எண்ணி நான் வியக்கேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நலமா ?
      பிரயாணம் எல்லாம் எப்படி போனது ? அதனைக்குறித்த பதிவுகள் வரட்டும்.

      சரி இந்த ஸ்கோட்லாண்ட் மேட்டர் இரகசியம் வியப்போடு இருக்கட்டும் வெளியில் யாரிடமும் சொல்லிடாதீங்க... அப்புறம் நான் தேம்ஸ் ஊரணிக்கு வரவேண்டிய நிலையை உருவாக்கிடாதீங்க...

      நீக்கு
  22. ஒவ்வொருத்தரின் மீசையையும்...சே.... ஆசையை நிறை வேற்றும் நண்பர்க்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  23. 'மீசை...மீசை முறுக்குவது..பேராசை இப்பொழுது...'-ன்னு பாட்டு ஓடிச்சு...படிக்கற போது !

    பதிலளிநீக்கு
  24. மொக்கை ராசு மாதிரி பெரிய மீசை வைத்து இருந்தவர்கள் எல்லாம் ,கூனிக் குறுகி நிற்பதையும் , கொஞ்சமும் வெட்கமில்ல்லாமல் காலில் விழுவதையும் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த பாடல்....மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான விசயம் சொன்னீர்கள் ஜி
      நானும் பலமுறை இந்த காட்சிகளை பார்த்து வியந்து இருக்கிறேன்

      உண்மையிலேயே இவர்கள் மீசை வைக்கவே கூடாது ஜி

      இதை தொடங்கி வைத்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

      நீக்கு
  25. மீசைக்கார நண்பரே! தங்களுக்கு மீசை மேல் பாசம் அதிகம் என்பதை பதிவு மூலம் சொல்லிவிட்டீர்கள்.மீசை ஏன் வைத்திருக்கிறாய் எனக் கேட்டற்கு தாங்கள் தந்த பதில் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  26. உங்களது மீசாயணம் பதிவை இப்போதுதான் படித்துமுடித்தேன். பரம்பரை பரம்பரையாக வருவதை அரபிக்காரன் முணுமுணுக்கிறான் என்பதற்காக விட்டுவிடமுடியுமா! அவிங்களுக்கு இதல்லாம் எங்கே புரியப்போகுது !

    சார்லி சாப்ளின், பாரதியின் மீசைகளையும் சேர்த்திருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள்.
      அவர்கள் நினைவுக்கு வரவில்லை நண்பரே தவறுதான்.

      நீக்கு
  27. மீசை பெரிதாக வைத்திருப்பவர்கள் சுத்த உணர்வு குறைந்தவர்கள் என்னும் அபிப்பிராயம் இங்கு ( சுவிஸ்) உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கு எமது வநதனம் நண்பரே...

      இது புதிய விடயமாக இருக்கிறதே அங்கு கூழு குடிப்பவர்கள் இப்படி இருக்கலாமோ...

      நீக்கு
  28. மீசைக் கார நண்பருக்கு பாராட்டுகள் பல்வேறு மொழிகளில் கலக்குகிறீர்கள் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு