தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

போவோமா... ஊர்கோலம்...


புதாபி நகரப்பேருந்து இதில் ஆடவர்களுக்கு 22 இருக்கைகளும், பூவையர்களுக்கு 12 இருக்கைகளும், ஊனமுற்றோரின் ஊர்தி நிறுத்துவதற்கு ஒரு இடமும் மிகுதி இடங்கள் அனைத்தும் நின்று கொண்டு பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆடவர்களின் அனைத்து இருக்கைகளும் நிறைந்து, பூவையரின் 5 இருக்கைகள் காலியாகி இருக்க, நான் நின்று கொண்டு பயணித்து கொண்டிருந்தேன் சூரிய பகவான்ஜி மானிடர்களின் அக்கிரமச் செயல்களை தண்டிக்க வழியின்றி இதுதான் தருணமென உச்சியில் நின்று சுட்டெரித்து கொண்டிருந்தார் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, ஞானி ஸ்ரீபூவு மாதிரி இருந்த பெரியவர் ஒருவர் ஏறினார் பார்த்ததுமே அவர் பாக்கிஸ்தானியர் என்பது தெரிந்தது இருக்கைகள் அனைத்தும் மனிதர்கல்ள் அந்தப் பெரியவர் உட்காருவதற்கு யாருமே எழுந்து இடம் கொடுக்க முன்வரவில்லை அவர் கம்பியை பிடித்துக் கொண்டு நின்றார் நானாக இருந்தால் நிச்சயமாக எழுந்து இடம் கொடுப்பேன் ஆனால் நானே நின்று கொண்டுதானே வருகிறேன் என்ன செய்ய முடியும் ? நான் பலமுறை விமானத்தில் போகும் பொழுது பெரியவர்களுக்கு இருக்கை இல்லாவிட்டால் எனது இருக்கையை கொடுத்து விட்டு நின்று கொண்டு பயணித்து இருக்கிறேன்.

நான் இப்படி நடந்து கொண்டதற்கு காரணமென்ன ? இவ்வகை உதவிகளை இறைவன் நேரலையில் காண்கிறான் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு ஆகவே உலகையறிந்த இரண்டேகால் வயதிலிருந்து இந்த செயல்கள் அறிந்தோ, அறியாமலோ எம்மை பற்றிக்கொண்டு விட்டது இவைகளை செய்யாமல் இறைவனையோ, இறைவியையோ, இறைதூதர்கள் என்று சொல்லப்படும் நித்தியானந்தா போன்ற ஞானிகளையோ தொழுவதில் எமக்கு உடன்பாடில்லை காரணம் யாம் மதவாதி இல்லை மிதவாதி. இந்த இடத்தில் இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டதை இந்தியச்சுவர்களில் எழுதியிருந்த ஒரு வாசகம் எமது மனக்கண்ணில் வந்து செல்கிறது நல்லதை யார் சொன்னால் என்ன ? சொன்னது நல்லவையா ? இதைத்தான் பார்க்க வேண்டும் இப்படிப் பார்த்திருந்தால் பெரியார் சொன்ன நல்லவைகளையும் ஆத்திகர்கள் கேட்டிருக்கலாம், கிருபானந்த வாரியார் சொன்ன நல்லவைகளையும் நாத்திகர்கள் கேட்டிருக்கலாம் இதுவே நல்ல சிந்தனையாளனுக்கு அழகு ஆனால் நம்மில் மனம் அழுக்கானவர்களே அதிகம் ஆகவேதான் அ.தி.மு.க செய்வதை தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை, தி.மு.க செய்வதை, அ.தி.மு.க. ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக நாடு நஷ்டம் சரி அது கிடக்கட்டுமே சாக்கடை நாம் வந்த விடயத்துக்குள் செல்வோமே.... அந்த சுவர் வாசகம் இதோ...

//தேவையுடையவருக்கும், அனாதைகளுக்கும் உதவுவதற்காக பெரும் முயற்சி கொள்பவர் இறைவனின் பாதையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவரை போன்றவராவார் இரவு முழுவதும் நின்று வணங்கக்கூடிய முறிக்காமல் தொடர்ந்து நோன்பு வைக்கக்கூடிய மனிதரைப் போன்றவராவார்//


ஆனால் இன்றைய மனிதர்கள் இதில் நம்பிக்கை வைத்து இப்படி இருக்கின்றார்களா ? என்பது நமக்கு அவசியமில்லாத விசயம் சரி நம்ம பேருந்துக்குள் போவோமே... அந்தப் பெரியவருக்கு யாருமே இடம் தராததால் ச்சே என்ன மனிதர்கள் என்று ஒவ்வொரு மனிதராக முகம் படித்தேன் மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா ? மனிதநேயம் செத்து விட்டதா ? மனதுக்குள் அவர்களை வெறுத்து அழகான எனது முகத்தால் கஷ்டப்பட்டு கொடூரமாக முறைத்தேன். முறைப்படி, வரிசைப்படி முறைத்து வந்தவன் அந்தப் பெரியவரை பார்த்ததும் திடுக்கிட்டேன் காரணம் அவர் என்னை கர்ண கொடூரமாய் முறைத்துக் கொண்டு நின்றார் பிறகுதான் எனக்கு புரிந்தது அவரா நீ ? உனக்காகவா நான் இரக்கப்பட்டேன் ? இத்தனை வருடங்களில் எத்தனை நாட்டுக்காரனை பார்த்திருப்பேன், எத்தனை காவல்துறையினரை சந்தித்து இருப்பேன் இதற்காக நமது உதவி செய்யும் மனப்போக்கை மாற்றிக்கொள்ள முடியுமா ?

சரி அவர் ஏன் உங்களை முறைத்தார் ? என்று கேட்பது எனக்கு புரிகிறது நண்பர் திரு. அப்பாதுரை அவர்களே... வேறென்ன ? எனது மீசைதான். மீசை அவரை என்ன செய்தது ? அடுத்த பதிவில் பார்ப்போமே....

இதோ தலைப்பு.
 मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــبமீசை 

52 கருத்துகள்:

  1. அவனா நீன்னு வடிவேலு கேட்பாரா ,அந்த இனமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அந்த கிராக்கி முறைக்காதே.... சிரிக்குமே...

      நீக்கு
  2. மீசை தான் காரணமா.... என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    த.ம. இரண்டாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மீசையைக் கண்டாலே பாக்ஸ்களுக்கு பிடிக்கமாட்டுதே....

      நீக்கு
    2. பொறாமையா இருக்கும் :-)

      நீக்கு
    3. பொறாமை கிடையாது நண்பரே இது வேறுவகை நம்மைவிட அவர்கள் கம்பீரமாக மீசை வளர்க்கலாம் ஆனால் மாட்டார்கள். காரணம் இது தவறு என்ற நம்பிக்கை மற்றும் கொள்கை.

      நீக்கு
  3. சொல்லுங்க.. மீசை என்ன பண்ணுச்சு?


    பதிலளிநீக்கு
  4. ஓசைப்படாமல் ஓடிப் போய் விடு!.. - என்று சொல்லியிருக்குமோ - மீசை!...

    எதற்கும் அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்த மாதிரி பெருசுகளை நான் நிறைய சந்தித்து விட்டேன் ஜி

      நீக்கு
  5. மீசைக்கார நண்பா , பாசக்கார நண்பா அவாலாய் இருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல உதவிகளை நேரலையில் காண்கிறார் என்பது உண்மைதான்.
    அடுத்த பதிவை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மை இதை நான் நம்புகிறேன்.
      ஆவலுக்கு நன்றி

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாங்க ஜி உசுப்பேற்றி விட்டது நீங்களும்தானே...

      நீக்கு
  8. நான்காவது வாக்கை இட்டு ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு
  9. உங்க மீசை நிறைய பேரைப் பயமுறுத்தியிருக்னு தெரியுமே! வில்லங்கமா!! சரி என்னாச்சுனு அடுத்ததுக்கு வெயிட்டிங்க்...

    உங்க மீசை ஒரு புறம் இருக்கட்டும்....விமானத்துல ஸ்டாண்டிங்க் எப்ப போட்டான்??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேலு சினிமாவில் சொனனால் நம்புவீங்க, நான் சொன்னால் சந்தேகமா ?
      வேணும்னா விஜய் மல்லையாவிடம் கேட்டுகோங்க...

      நீக்கு
  10. 'விமானத்தில் போகும்போது' - தவறு. நீங்கள் பேருந்தைச் சொல்லியிருக்கவேண்டும். த ம. மீதியைப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்தில் போகும்போது என்றால் நம்பமாட்டார்கள் நண்பரே...

      நீக்கு
  11. அது அவங்க மத சம்பந்தமானதாக இருக்கு. (அல்லது அவங்களுக்கு பஞ்சாப் சம்பவங்கள், சீக்கியர்கள் ஞாபகம் வந்திருக்கும்).

    பெண்கள் இருக்கை காலியாக இருந்தாலும் அதில் உட்காரக்கூடாது என்பது எல்லாச் சமயங்களிலும் பின்பற்றப்படுவதில்லையே (துபாயில் நான் பார்த்திருக்கிறேன். நானே ஓரிரு முறை அப்படி ஏர்போர்ட்டிலிருந்து பயணித்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் வந்துவிட்டாலும், இடத்தைக் காலிசெய்ய வேண்டும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை பலரும் பஞ்சாபி என்று நினைத்து இருக்கின்றார்கள்

      அபுதாபி பேருந்திலும் பெண்கள் வந்து விட்பால் எழுந்து விடணும்

      நீக்கு
  12. நீதி :உருவு கண்டு இல்லை இல்லை மீசை ....அடுத்த பதிவு வந்ததும் காமெண்ட்டை தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  13. அடுத்த பதிவிற்காக ஆவலாய் காத்திருக்கிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  14. மீசையைப் பார்த்து முறைத்தவர் என்ன ஆனார் ? காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  15. நாங்கள் துபாய் சென்றிருந்தபோது பேரூந்துகளில் பயணிக்கும் அனுபவம் கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரயிலில் போனீர்களா ஐயா ? 2009-ல் இரயில் விட தொடங்கி விட்டார்கள்.

      நீக்கு
  16. விமானத்தில் நின்று கொண்டு பயணமா ? பார்க்கவுமில்லை கேள்விப்பட்டதுமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும் போது அப்படி, இப்படி வந்துருக்கும் ஐயா இதுக்கு போயி அலட்டிகலாமா ?

      நீக்கு
  17. மீசையை பார்த்து முறைச்சவரை சும்மாவா விட்டீங்க?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ என்ன செய்வது தினம் இதே வேலையாகப் போச்சு.

      நீக்கு
  18. அடுத்த பதிவிட்காக காத்திருக்கிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்று நள்ளிரவு சரியாக 12:00 மணிக்கு....

      நீக்கு
  19. ஙே!!!!!!!!!!!!!!! உங்க மீசை அவரைப் பயமுறுத்திடுச்சா என்ன? ஹெஹெஹெஹெ, சரியா சஸ்பென்ஸ் வைச்சு திகிலைக் கொடுத்துட்டு நிறுத்தி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நாங்களும் எப்பதான் எழுதிப்பழகுறது....

      நீக்கு
  20. ஆகா... மீசைகை்குள் ஒரு கதை....சச்சு பென்சு தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  21. மீசை அந்த பெரியவரை என்ன செய்தது என அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  22. பேருந்தில் ஒரு முதிய பெண்மணி நின்று கொண்டிருக்கிறார். அருகில் உள்ள இரு இருக்கைகளில் ஒன்றில் ஒரு சிறிய குழந்தையை அதனுடைய அம்மா அமர்த்திக் கொண்டார். மூதாட்டி கெஞ்சும் வகையில் இடம் கேட்கிறார். அந்த பெண்மணி மறுத்த துடன் இல்லாமல் என் குழந்தை சீட் பிடிச்சா யாருக்கும் தரமாட்டான் பெருமையாக பேசினார். கடைசியில் வெறுப்புடன் இடம் தந்தார். இதுபோல் பிள்ளைகளை வளர்ப்பது தவறுதானே. அதுபோலவே இப்பதிவும் நன்று த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே இப்படி நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      நீக்கு