தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 22, 2017

விஸ்வநாத் & ரூபன்


ரூபன் எப்படி இருக்கே ?
வா... விஸ்வா நல்லாயிருக்கேன் விஸ்வரூபம் வருமா ?
கமல் ஸார் நல்லாத்தானே படம் எடுத்துக்கிட்டு வந்தாரு தீடீர்னு ஏன் இப்படி ?
ஆமா அவுங்க ஆளுகளே... அவருக்கு பிரச்சனை கொடுக்கிறாங்க...
என்னையா சொல்றே அவுங்க ஆளுக யாரு ?
முஸ்லீம்
முஸ்லீம் அவுங்க ஆளா ? என்னையா குழப்புறே... அவரு ஐயங்கார் இது எல்லோருக்கும் தெரியுமே...
அவரு பேரென்ன ?
கமல் ஹாசன்.
அவரு பேரு கமல் ஹாசன் இல்லே கமால் ஹசன்
யாருய்யா சொன்னா உனக்கு... துணை எழுத்த தூக்கி வேற இடத்துல போட்டு புதுசா குழப்புறே ?
நீ அவரு பேரை இங்கிலீஷ்ல எழுது.
KAMAL HASSAN இந்தா படி
பார்த்தியா ? கமால் ஹசன்
உன்னைச் சொல்லி குற்றமில்லை பிறந்ததிலேருந்து உனக்கு தமிழை ஊட்டி வளர்க்காம உங்க அப்பா உன்னை ஊட்டி இங்கிலீஷ் காண்வெண்ட் ஸ்கூல்ல. படிக்க வச்சாருல அதான் இப்படி தமிழே தெரியாம வளர்ந்துட்டே அது மட்டுமில்லை ஆரம்பத்திலே கமலஹாசன்’’னு இருந்ததை கமல் ஹாசன் னு’’ மாத்துனாருல அதான் இனிமே நீ தமிழ் நாட்டு விசயங்களை படிக்காதே நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிடுவே பிறகு வெட்டும், குத்தும் நடக்கும்.


விஸ்வரூபம் வெளியான நேரத்தில் வெளியிட்டு நான் மட்டுமே படித்த பதிவு காரணம் அன்று அப்பாவி கில்லர்ஜியை யாருக்கும் தெரியாது. மூலப்பதிவை நீக்கி இதோ தங்களின் பார்வைக்கு...

காணொளி

48 கருத்துகள்:

 1. அன்ரு நீங்கள் மட்டும் படித்ததையும் இன்று நானும் படித்துவிட்டேன் அன்று பிரபலம் ஆகாதவர் ஆனால் இன்று அந்த முருக்கு மீசையை கண்டால் பயந்த எங்களைப் போல குழந்தைங்க( நான் என்றும் குழந்தைதான்) முருக்கு மீசை வைச்சாலும் இவர் எங்க நேருமாமா போல அமைதியானவர் என்று புரிஞ்சுகிடோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரு மாமாவா ஹிஹிஹி ரொம்ப ஓவரா இருக்குதே.....

   நீக்கு
 2. ஆஆஆஆவ்வ்வ்வ் மீதான்ன் 1ச்ட்டூஊஊஊஊ:)... நில்லுங்கோ சிறீ சிவசம்போ அங்கிளையும் காணல்ல.. சாம்பசிவம் அங்கிளையும் காணல்ல... இது எல்லாமே புது முகமா இருக்கே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமல் ஹாசன் புது முகமா ?

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கமல்ஹாசனைப்பற்றி பேசுகிறார்களெல்லோ.. ஆனா பேசுவோர் பற்றித்தான் மீ ஜொன்னேன்:)..

   நீக்கு
 3. கில்லர்ஜி .... ரூபனை மாதிரித்தான் நானும் நேற்று ஆங்கிலத்தை தமிழாக்கமாக்கி விஜயபதி என்றேன்:)... அடிக்க வந்திட்டாங்க:)...

  அது போகட்டும் கில்லர்ஜி உடனடியா பிரித்தானியக் காண்ட் கோட் படி ஏறவும்:)... என் கொப்பி வலதை கொப்பி பண்ணிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:) ...
  /// அப்பாவி கில்லர்ஜி// :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கில்லர்ஜி ..இந்த நியாயத்தை நீங்களே சொல்லுங்க
   viyapathi ..இதில் தமிழில் எழுதும்போது வியபதி னு தானே வரும்
   எங்கிருந்து ஜ முளைச்சது :) அதான் ஒட்டினோம் பூஸாரை

   நீக்கு
  2. ஏஞ்சல் இதை நான் நேற்று பார்த்து ஓட்ட முடியாமல் போய்விட்டது...என் கணினி ரொம்பவே கவிப்புயலுக்கு சசப்போர்ட்..அதனால...இப்பவும்.....ஹாஹாஹா..

   கீதா..

   நீக்கு
  3. To கவிப்புயல்
   வாங்க அடிக்கத்தானே வந்தாங்க அடிக்கவில்லையே....
   நான் இந்தப்பதிவு எழுதியது இன்றல்ல... விஸ்வரூபம் வெளியானபோது
   நான் இப்பத்தான் உகாண்டாவிலிருந்து வந்தேன் வரத்தோது இல்லை.

   நீக்கு
  4. To Angelin
   நீங்கள் கேட்டது நியாயமே....

   நீக்கு
  5. கில்லர்ஜி நீங்களுமா இதை நியாஆஆஆஆஆயப் படுத்திறீங்க கர்:))..

   இப்ப பாருங்கோ, தெரியாத ஒரு கடைக்குப் போய் பொருட்கள் வாங்குறோம், கடைக்காரர் நம் முகத்துக்காக எக்ஸ்றா வா ஏதும் தூக்கிப் போட்டுத்தருவதில்லையா?:)..

   அப்போ தெரியாத ஒருவரே எக்ஸ்ரா வா ஒன்றைத்தரும்போது:).. எனக்குத் தெரிஞ்ச அந்த ஐயாவுக்காக:) அவரின் பெயரில ஒரு எழுத்தைக் கூட்டிச் சொன்னது டப்பாஆஆஆஆஆஆ?:))..

   ஆங் இப்ப ஜொள்ளுங்கோ நியாயத்தை:))

   நீக்கு
  6. இது உகாண்டா நாட்டு நியாயம் மாதிரி தெரியுதே.....

   நீக்கு
 4. நேசமணி பொன்னையாவை நாசமானி போனீயா வா ஆக்கினமாதிரி :)
  ஒரு துணை எழுத்து எல்லாத்தையும் மாத்திடுச்சே :)

  வதனி என்ற பேரை ஒரு ஜெர்மன் காரர் வாடிநீ னு சொல்லி கூப்பிட்டார் :) நினைவுக்கு வந்தது இப்போ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்குத்தான் இப்போ எல்லாம் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் சமயம் நெடில் வரும் இடத்தில் இரண்டு எழுத்துகளும் குறில் வரும் இடத்தில் ஓரெழுத்தும் என்று எழுதப்படுகிறது....Kamal......Kamaal.....எல்லாம் அல்ல....மாங்காய் mango நுதான் வருது....ஆனால் சில தமிழ் பாடல்களை என் உறவினர் குழந்தைகளுக்கு அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டியுள்ளதால்...

   கீதா

   நீக்கு
  2. To Angelin
   ஹாஹாஹா ஸூப்பர் காமெடி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்
   வதனி எனக்கு புதுசு.

   முன்பு விமான நிலையத்தில் எஜிப்தியன் இந்துக்களின் பெயரை அரபியில் படித்தது ஞாபகம் வருகிறது.

   வடிவேலு – வாடிவீலு
   வரதராஜன் – வாராதேராஜான்
   சரவணா – சாராவாணா
   கண்ணன் – காண்நாண்
   நிறைய பெயர் இருக்கிறது என்னுடன் சென்றவர்களின் லிஸ்ட் எடுக்கிறேன்
   மேலும் ஒன்று சொல்லவா ?
   கீதா - ஜீடா

   நீக்கு
  3. ஆமா ஆமா.. உப்பூடித்தான் சிலர் அதிராவை அடிரா என்கீனம்:)) ஹா ஹா ஹா:)

   நீக்கு
 5. ஹாஹாஹா, இன்னிக்குக் கமல்ஹாசன் மாட்டிக்கிட்டாரா? அப்புறமா ஒரு விஷயம்! அவர் ஐயர் இல்லை! ஐயங்கார். வைஷ்ணவ சம்பிரதாயம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா ஐயங்கார் னு தானே சொல்லிருக்கார்...ஓ உங்க கமெண்ட் பார்த்துட்டு மாத்திட்டார் போல....

   கீதா

   நீக்கு
  2. தகவலுக்கு நன்றி மாற்றி விட்டேன் சகோ.

   நீக்கு
 6. ஒரு முஸ்லீம் நண்பரின் நினைவாகத்தான் அவர் தந்தை அவருக்கு அந்தப் பெயரை வைத்தாராம். முன்னர் குமுதத்தில் இவர் கமால் உசேனோ என்று நகைச்சுவையாகக் கேள்வி கேட்டிருந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை புது செய்தி....ஸ்ரீராம்....அவர் தந்தைக்கு முஸ்லீம் நண்பர் உண்டு எனவதே எங்கோ போகிற போக்கில் வாசித்த நினைவு..அவர்கள் அப்போது இருந்தது.பரமக்குடி அல்லவா...

   கீதா

   நீக்கு
  2. வருக ஸ்ரீராம்ஜி நானும் படித்து இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

   To வில்லங்கத்தார்
   ஆமாம் இப்பொழுது கமல் ஹாசனின் தாய்மாமன் வகையறாக்கள் மட்டும் பரமக்குடியில் இருக்கின்றார்கள்

   நீக்கு
 7. ஆகா
  நண்பரே,ஞாயிற்றுக் கிழமை புதுகைக்கு வாருங்கள்
  தம+1

  பதிலளிநீக்கு
 8. சரி.. இன்னைக்கு பொழுது நல்லா போகும் போல இருக்கு...

  நாம அங்கிட்டா..ல போயி கடையப் போடுவோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கடையில ரெண்டு வடையைப் போடுங்க....

   நீக்கு
 9. ஹா ஹா ஹா...கமல். இல்லை கமால்... ஓகே. உங்க பெயர் கில்லர்ஜி (கீ) யா....கில்லெர்ஜி...யா..ஆங்கிலத்தில்....killerji..யா.நீங்கள்..killergee என்று போடுவதால் அதா..ஆங்கில எழுத்து g யை தமிழ் ல அப்படியே உச்சரிப்பில் போடுவதால்...ஹிஹிஹிஹி....

  பாருங்க உங்க சிவாஸ் வரலைன்னு... அவரு வந்திருந்தா இந்தக் கேள்வியை கேட்டுருப்பார் னு...சொல்ல வரோம்..ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவாஸ் வில்லங்கம்னு தெரிஞ்சுதான் கழட்டி விட்டோம்.

   நீக்கு
 10. கமல் என்றாலே குழப்பம்தானோ? இதை மீள் பதிவாக போட்டதன்
  காரணம் புரியவில்லை சகோ.

  அரபு நாட்டில் கீதாவை ஜீதா என்பார்கள், ஆனால் ராஜு ராகுவாகிவிடுவார் ..ஹா..ஹா ..ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தற்போது கமல் மயமாக இருக்கிறது மேலும் இது யாரும் படிக்காத பதிவு ஆகவே பகிர்ந்தேன்.

   ஆம் ஜீடா என்றும், ஜீதா என்றும் எழுதுவார்கள்.

   உங்கள் பெயர் எப்படி தெரியுமா ?
   بانوماثي فينكاتيسواران
   உச்சரிப்பு
   பானுமாடி ஃபின்காடீஸ்வாரான்

   பானுமாத்தி என்றும் உச்சரிப்பார்கள்.

   நீக்கு
 11. கில்லர்ஜி - கமல் தந்தை ஸ்ரீனிவாசன் அவர்களின் நெருங்கிய நண்பர் ஹசன் என்ற முஸ்லீம் அன்பர். அவர் செய்த மறக்கமுடியாத உதவியினால்தான் தன் பசங்களுக்கு 'ஹசன்' என்று முடியும்படியாக பெயர் சூட்டினார் என்று சாருஹாசன் அவர்கள் அவரது புத்தத்தில் எழுதியிருக்கிறார். 'கமல்ஹசன்' என்பதை தொடர்ச்சியாக திரையில் வரும்போது, 'கமலா ஹசன்' என்ற பெண் பெயரில் படித்துவிடுகிறார்கள் என்பதால் 'கமல் ஹசன்' என்று பிரித்து எழுத ஆரம்பித்தார். நாம ஆரம்பத்திலிருந்தே 'கமலஹாசன்' என்றே சொல்லிவந்திருக்கிறோம்.

  நீங்க விசுவரூபம் 2 க்கும் இதே பதிவை வெளியிட்டாலும் ஒரு வித்தியாசமும் இருக்காது. இன்னும் அந்தப் படம் வெளிவரவில்லை (தயாரிப்பாளர் துண்டைப் போட்டுக்கொண்டார் என நினைக்கிறேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான விளக்கம் நன்றி

   நண்பரே உண்மையில் விஸ்வரூபம் 2 இதற்காகவே பொறுமை காத்தேன் அது வருவது போல் தெரியவில்லை ஆகவே பகிர்ந்தேன்.

   நீக்கு
 12. சினிமாவையும் சினிமாக்காரர்களையும் எதிர்ப்பதே இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பதால்தானோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. என்னங்கய்யா என்னைப்போயி சினிமாவுக்கு எதிரினு பொய் சொல்றீங்க... ?

   நீக்கு
 13. இதிலிருந்து எனக்கு தெரிவது என்னவென்றால்...........அய்யோ...எனக்கு ஒன்னுமே தெரியமாட்டேங்குது....விஸ்வரூபம் பற்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூபன் என்றால் கிருஷ்டியன் பெயர்தானே நண்பரே அப்படியானால் கிருஷ்ணன் எந்த மதம் ?

   தெளிவாக குழப்புங்கள் பார்க்கலாம்.

   நீக்கு
 14. ஹா ஹா இதுவும் நல்ல இருக்கு ஜி இப்ப வச்சி செய்றாங்கன்னு சொல்லறாங்களே அதுபோலவா..........பழைய பதிவை சொன்னேன் (2 சி -க்களும் பிசியோ வரவில்லை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருகைக்கு நன்றி
   யாரு..... சிவசம்போவா அது எங்கிட்டாவது எட்டாம் நம்பர் கடைப்பக்கம் திரியும்.

   நீக்கு
 15. உச்சரிப்பு குழப்பம் எங்கும் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ ஞான் உத்ததிப்பில் கொசம்வே மாத்தேன்.

   நீக்கு
 16. ஹா... ஹா...
  பெயர்க்குழப்பம் பெருங்குழப்பம்தான்.

  பதிலளிநீக்கு
 17. பெயர் குழப்பத்தை தீர்த்து வைப்பதாய் தொலைகாட்சியில் ஒருவர் சொல்லுவார். பெயரை அப்படி மாற்றுங்கள், இப்படி மாற்றுங்கள் உங்கள் தலைஎழுத்தே மாறிவிடும் என்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அதுக்காக இப்படியா ? இது குடும்பத்துக்குள்ள பிரச்சனையை கொடுக்குமே....

   நீக்கு
 18. புதிய பிரச்சினையை நீங்கள் ஆரம்பிப்பதுபோல தெரிகிறதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இது விஸ்வநாத்தும், ரூபனும் பேசிக்கொண்டது எனக்கு இதில் பந்தம் இல்லை.

   நீக்கு
 19. பாவம் தமிழ்! படாத பாடு படுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. வாங்க ஐயா இங்கிலீஷ்தானே படாதபாடு படுகிறது.

   நீக்கு