தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 09, 2017

MONEY மண்டபம்


செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு விரோதம் கிடையாது அவர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது மேலும் அவர் பச்சைத்தமிழன் அதில் நாம் அனைவரும் இணைந்தே பெருமை கொள்வோம். அவருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகின்றார்கள் அவருடைய ரசிகர்கள் இதற்கு மறுப்பு சொல்வார்களா ? மாட்டார்கள் காரணம் தமிழர்கள் ரசிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை சிறை படுத்திக்கொண்ட பிறகு திரைப்பட வசனகர்த்தாவின் சுய அறிவில் உதித்ததை தனது தலைவன் வாயசைத்து சொன்னதை வேதவாக்காக நினைக்கிறான். அதனால்தான் அவர்களை முதல்வர் ஆக்கவும் துடிக்கின்றான். பொதுநலத்துக்கு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டுமென்பது தமிழகத்தைப் பொருத்தவரை அவசியமற்றுப் போய்விட்டது ஆகவே ரசிகர்களுக்கு அவன் நாலு மனைவிகளை திருமணம் செய்து ஏழு நபர்களை வைத்திருந்தாலும் அது தவறாக தோன்றுவதில்லை எல்லாம் சரி எதுவும் சரி இந்த வார்த்தைகள் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சொல்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் வேறு யார் ? நிறைய நபர்களை சொல்லலாம்.

ஒரு முறை ஆந்திராவில் ஒரு நடிகர் வாய்த்தகராறில் தயாரிப்பாளரை கைத்துப்பாக்கியால் சுட குண்டு அவரில் தோல்பட்டையில் பட்டு மயங்கி விழுந்தார் நடிகரை கைது செய்ய வந்த காவல்துறையினரை கல்லெறிந்து போராட்டம் செய்த ரசிகர்களை கண்டோம் அப்படிப்பட்ட அறிவுஜீவிகளை கொண்டது நமது நாடு இதில் நியாயம், தர்மம் உண்டா ? இறைவனுக்கு பயந்து நீதி நேர்மையோடு வாழ்பவனுக்கு இதில் குற்றம் குறை காணஇயலும் ரசிகனுக்கு ? அவனுக்கு குதிரைக்கு கண்ணை அணைகட்டி ஓட்டி விட்ட நிலைதான் அதைப்போல் இந்த மணி மண்டபத்தால் மக்களுக்கு பலன் உண்டா ? என்று ஆலோசித்து பார்க்க வேண்டும் இதை மக்களின் பணமான அரசு செலவில் செய்வது நியாயமா ? பல கோடிகள் சம்பாரிக்கும் நடிகர்கள் தங்களது சங்கப்பணத்தில் கட்டக்கூடாதா ? அல்லது முடியாதா ? அவ்வளவு ஏன் சமீபத்தில் யாரோவொரு பதிவர் கேட்டது போல அவரது குடும்பத்தினர் தங்களது பணத்தில் கட்டக்கூடாதா ? எவ்வளவு சொத்து சேர்த்து வைத்து சென்றுள்ளார் தனது தந்தை இறந்ததற்கு தலை முடியைக்கூட இழக்க விரும்பாதவர் அவருடைய மகன் பிரபு ஆனால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் ரசிகர்கள் முடி இறக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது. இவரா மணி மண்டபத்துக்கு பணம் ஒதுக்கப்போகிறார் இந்த மூஞ்சிதான் டிவியில சொல்லுது எல்லோருக்கும் ஐஸ்வர்யம் கிடைக்கணும்னு காலக்கொடுமை.

சிலைகள் அவசியமில்லை என்பது எமது பொதுநலக்கருத்து ஏற்கனவே இதனைக்குறித்து எழுதியும் இருக்கிறேன். நாட்டுக்காக சிறை சென்ற நல்ல உள்ளங்களுக்கு மரியாதை நிமித்தமாக சாலையில் சிலைகள் வைத்து எதைக்கண்டோம் ? அவைகள் இன்று ஜாதிய பிரச்சனையில் வந்து நடுத்தெருவில் சிலைகளை கம்பிகளால் பூட்டி சிறை வைத்து இருக்கிறோம் அவர்களின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம் இல்லையா ? இனி வரும் காலங்களில் ஜாதிக்கொடுமை இன்னும் தலைவிரித்தாடும் அப்பொழுது எல்லாச் ஜாதிக்காரனும் தனது தலைவனுக்கு சிலை வைக்க சொல்லி நச்சரித்து இடப்பற்றாக்குறை காரணமாக சாலையின் நடுவிலேயே நட்டு வைக்கும் தைரியம் நமது ஜாதி அமைப்புகளுக்கு உருவாகும் இதற்கு நாளை அனைத்து ஜாதிக்காரர்களும் வருவார்கள். அன்று அடிமட்டத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் காரணம் ஒரே கட்சிக்கு நான்கு தலைமைகள் இன்று தலைவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெறுகி வருகின்றார்கள் இதன் காரணமாகவே தொண்டர்கள் பற்றாக்குறை வந்து விட்டது. காரைக்குடியில் கவியரசர் திரு. கண்ணதாசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டினார்கள் யார் அங்கு போய் வாழ்வாதாரம் படித்துக் கொள்கிறார்கள் ? கேட்பாரற்று கிடக்கிறது மக்கள் பணம்தானே.... அந்தப்பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாமே... ஏன் செய்யவில்லை ? நாளை சிவாஜி மணி மண்டபமும் இதேநிலைதான். எல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் சுயநல சித்து விளையாட்டு. நாட்டை ஆண்டதற்காக சிலை வைத்தோம் அதன் மூலம் நமக்கு நாமே வாழ்வுக்கு உலை வைத்தோம்.

எனது எதிர்ப்பை திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதால் மட்டும் எழுதவில்லை நாளை திரு. ஓமக்குச்சி நரசிம்மன் அவர்களுக்கு கட்டினாலும் எழுதுவேன் காரணம் எந்த நடிகனின் வார்த்தைகளும், எந்த அரசியல்வாதியின் செயலும், எந்த கிரிக்கெட்காரனின் ஸிக்சரும் என்னை ஆளுமை படுத்தி விடமுடியாது அவனும் என்னைப் போலவே மனிதனே அவனிடம் என்னைவிட மனிதம் இருந்தால் அவன் மாமனிதன்.

40 கருத்துகள்:

  1. சிறீ சாம்பசிவம் அங்கிளைத் தேடினேன்.. இன்று காணவில்லை, நித்திரையாகிட்டார்போலும்:).. மணிமண்டபம் வாசித்தேன்.. எனக்கேதும் சொல்லத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்க அங்கிள் உகாண்டா போயிருப்பாரோ...

      நீக்கு
  2. சிலை வைப்பதோடு சீரழியாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இன்று சிலைகளை நடுரோட்டில் சிறை வைத்து இருக்கின்றார்களே.....
      எவன் உடைப்பான் என்ற நிலை ஏனிந்த அவலம் ?

      நீக்கு
  3. மணிமண்டபம் பற்றிச் சொல்லத் தெரியலை! ஆனாலும் அதற்கான செலவு குறித்துச் சொல்வது சரியே! ஊதுற சங்கை ஊதிடுவோம்! நடக்கிறபடி நடக்கட்டும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஊதி வைப்போம் என்றாவது உண்மை உணரப்படலாம்.

      நீக்கு
  4. எனக்கும் சிவாஜி கணேசனைப் பிடிக்கும். அதே சமயம் எனக்கும் சிலை வைப்பது, மணி மண்டபம் கட்டுவது போன்றவற்றில் எதிர்ப்புதான். வீண் செலவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி சூரக்கோட்டையாரின் நடிப்பை யாருக்குத்தான் பிடிக்காது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. நியாயமான கருத்துகள்..

    ஆனால் இதையெல்லாம் யார் கேட்கப்போகிறார்கள்!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்ஜி
      உண்மைதான் இயன்றவரை முயல்வோம் நன்றி ஜி

      நீக்கு
  6. சிவாஜியின் நடிப்பை வியந்தவன். நம்மைக் கட்டிப்போட்டது அவரது பல படங்கள். பாராட்டுதலுக்குரியவர்.

    சிலை எதற்காக வைக்கவேண்டும்? அதுவும் அரசுப் பணத்தில்? இப்போல்லாம் அரசாங்கத்தை, கூட்டம் சேர்த்துக்கொண்டு மிரட்டுவது ஃபேஷனாகிவிட்டது. வேறு என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை இதில் சிலர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்பதும் உண்மை.

      நீக்கு
  7. 3000 கோடி வல்லபாய் சிலையையும், 300கோடி ராமர் சிலையையும் விட்டுடுவீங்க. சிவாஜி சிலையும் மணிமண்டபமும் கண்ணை உறுத்துதாக்கும். சிலருக்கு அவசியம் என்பது மற்றவருக்கு அனாவசியம். ஊருடன் ஒத்து வாழ்வதே சிறப்பு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் அனைத்து மனிதர்களின் மண்டபங்களும், சிலைகளும் கலைக்கப்படல் வேண்டும் என்கிறேன் இப்படியே போனால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் மனிதர்கள் நிற்பதற்கு இடம் கிடைக்காது

      ஊரோடு ஒத்துப்போகத்தான் மக்கள் நினைக்கின்றனர் ஆனால் அரசியல்வாதிகள் ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கின்றார்கள் அதையும் மனதில் கொள்ளவேண்டும்.

      பொதுநலக் கண்ணோட்டத்துடன் அர்த்தம் காணல் நன்று.

      நீக்கு
  8. தற்போது சிலைகள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, சிலை வைக்காமல் இருப்பதே சரி என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இப்பொழுது எல்லா ஊரிலுமே சிலைகளை கம்பி வேலி அடைத்து சிறை வைக்கின்றனர் சமீபத்தில் பேருந்தில் வரும் பொழுது ஒரு கிராமத்தில் கண்டேன் காந்தி சிலையை பூட்டி வைத்துள்ளனர். ஊரின் பெயர் நினைவில் இல்லை.

      நீக்கு
  9. சிலை வைப்பது..சில்லரை சேர்க்கும் வழிதான்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே முடிவு பணம் சீட்டிங்தானே... வேறென்ன ?

      நீக்கு
  10. துளசி: என்ன சொல்லனு தெரியலையே கில்லர்ஜி! ஏனென்றால் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை எழுப்பியிருப்பதைப் பற்றி, விவேகானந்தர் மண்டபம் பற்றியும் பாராட்டி, உயர்வாகச் சொல்லி பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்.அதனால்... மற்றபடி அரசுப் பணத்தில் மக்களின் பணத்தில் செய்வது கண்டிக்கத்தக்கதுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

    கீதா: கில்லர்ஜி!! யெஸ்!! சிவாஜியின் நடிப்பாற்றல், திறமை எல்லாம் சிறப்புதான். நமக்கும் பிடிக்கும் தான். ஆனால் சிலை வைப்பது, மண்டபம் கட்டுவது இதிலெல்லாம் எனக்கும் சுத்தமாக உடன்பாடில்லை. அதுவும் மக்கள்/அரசுப் பணத்தில். சும்மானாலும் பிறந்த நாள், இறந்தநாள் அன்று கூட்டமா வந்து கோவிந்தா போட்டு மாலை போட்டுட்டு நாலு வார்த்தை அவரைப் பத்தி பேசுவதை விட கட்சியைப் பத்தி பேசிட்டுப் போய்டுவாங்க...அப்புறம் அந்த சிலை மேலே ஏதாவது ஒரு பறவை பெரும்பாலும் காக்கை ரெஸ்ட் எடுக்கும், கக்கா போகும். சிலைக்குக் கக்காபிஷேகம்!!! பரவால்ல கில்லர்ஜி மனுஷங்களுக்கே டாய்லெட் கு வழியில்லை..இந்த ஜீவன்கள் எல்லாம் பாவம் டாய்லெட் கட்டித்தானு மனு போடவா முடியும்?!!. அதுக்காச்சும் பயன்படுதே!!!!!!!

    நல்ல கருத்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் யாரோடு யாரை ஒப்பிடுகின்றீர்கள் ? விவேகானந்தர் துறவி உலக மக்களுக்கு அறிவுரை சொல்லிச் சென்றவர் திருவள்ளுவரும் இவ்வகைதான்

      இவர் சுயநலமாக சம்பாரித்துக் கொண்ட கூத்தாடி இருவரும் ஒன்றாக சாத்தியமில்லை.

      ************

      ஆம் சிலைகள் வைத்து அவர்களை அவமதிப்பது போல்தான் இருக்கிறது எந்தவொரு பராமரிப்பும் இல்லை எல்லா மனிதர்களுமே ஜாதி அடிப்படையில் காண்கின்றனர். பதிலுக்கு பதில் சிலை வைப்பது, அவரைவிட நமது சிலை பெரிதாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. நல்ல கேள்வி எல்லோர் மனதிலும் எழும் கேள்விதான் ஆனாலும் ஏன் என்ற கேள்விகள் கேட்கப்படாமலேயே வாழ்க்கையை நடத்துகிறோம் அவர் அதிகம்பணம் உதவியுள்ளார் நாட்டுக்கு என்று ஒரு பதிவில் படித்தேன் இருக்கட்டுமே இறந்தும் நல்லவைகள் தொடரட்டுமே ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும் அவரை பற்றிய குறிப்புகளை ஸ்லைடுகளாய் காண்பித்து நினைவில் நிறுத்த முயற்சிகளை செய்யலாம் சினிமா உலகம் இப்படி சிலை வைப்பதற்க்கு ரோஸ் கலரில் உள்ள வரிகலில் உள்ள குமுறல்கள் அத்தனையும் உண்மை அப்படி ஒரு நிலைமையும் வரும் ஜாதிகளால் சாலைகளுக்கு தட்டி எடுத்தவனெல்லாம் தாண்டவராயன் போல் ஆளுக்கு ஆள் ஆடப்போறாங்க கேட்பாரற்று கிடைக்கும் சிலைகளுக்கு செய்யும் செலவை கேட்டு கேட்டு பிச்சை எடுப்பவர்களுக்கு செய்ய மாட்டார்கள் ஜி மனிதம் இருந்தால் மாமனிதன் எஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மிகவும் அழகாக விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி
      நிச்சயம் எதிர்காலத்தில் இப்படி நடக்க சாத்தியம் உண்டு

      நீக்கு
  12. முதலில் இந்த சிலை சிவாஜிதானானே டவுட்டு வருது பார்க்க sv ரங்காராவ் மாதிரியில்லையா இருக்கு ..
    மக்கள் பணம் மக்களுக்கு அவசரகாலத்தில் உதவபயன்படுத்த வேண்டும் .
    ஒரு நடிகராக அவரை பிடிக்கும் அவ்வளவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இவர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்தான். இவரின் நடிப்பை யாரும் குறை சொல்லிட இயலுமா ?

      நீக்கு
  13. அரசியல் லாபத்துக்காக வல்லபபாய்ப் படேல் சிலையும் அதே ஆதாரத்துக்காக ஒரு இடத்தை இடித்து அங்கு ராமர் கோவிலும் சிலையும் வைகத் துடிக்கிறார்களே இதை என்ன சொல்ல யாருமெதிர்ப்பு சொல்ல வில்லை இல்லை சொல்ல பயமா எதுவும் நடக்கலாம் நான் சிவாஜி கணேசனுக்கு சிலை வைப்பதுபற்றி கருத்து சொல்லவில்லை ஒன்று சரியாகுமானால் இதுவும் சரியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இப்பொழுது நடக்கும் கூத்து எல்லாம் மக்கள் நலனுக்காக அல்லவே.... எல்லோருமே தனக்கு பிரதிபலனை நோக்கியே காய் நகர்த்துகின்றார்கள்.
      வல்லபாய் படேல் சரித்திரம் நான் அறியவில்லை ஐயா அதேநேரம் அரசியல் லாபம் என்றால் அதுவும் தவறே...

      பாபர் மசூதியை இடித்தது எக்காலமும் குற்றமே... இதுவா பக்தி ?
      இதை இரண்டு தரப்பு இறைவனும் கேட்கவில்லை மூன்றாம் தரப்பு இறைவனும் தட்டிக் கேட்கவில்லை இறை நம்பிக்கை மழுங்கிப் போவதின் அடிப்படையே இதுதான் ஐயா

      அப்படியே உண்மையாக இருப்பின் விட்டுக் கொடுப்பதுதானே நல்ல இதயம் படைத்த மனிதனுக்கு அழகு நடந்தது இழுக்கு வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. வணக்கம்
    ஜி
    தங்களின் பதிவில் ஆதங்கம் தெரிகிறது என்ன செய்வது...காலம் பதில் சொல்லும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -த.ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ?
      கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. நண்பரே சிலை வைத்தல், மணிமண்டபம் கட்டுதல் என்பது குறித்தான உங்களது கருத்துக்கள் சரியானவைதான் என்றாலும், நாட்டு நடப்பில் இவைகளைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே? பல இடங்களில் சிலைகள் அந்த தலைவர்களைப் போலவே இல்லை. திருச்சியில் ஒரு இடத்தில் ஜவஹர்லால் நேருவுக்கு சிலை வைத்து இருக்கிறார்கள்; பார்ப்பதற்கு வட்டிக்கடை சேட்டு சிலை போல இருக்கிறது; உயரமாயும் இல்லை. நிற்க.
    பெரும்பாலும் உங்களுடைய பதிவுகளில் சினிமா கலைஞர்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம், நடிகர் எம்.ஆர்.ராதாவின் ‘மலேசியா பேச்சு’ பாணியில் இருப்பதாகவே நினைக்கிறேன். இந்த பதிவினில் கூட நீங்கள், சிவாஜியைப் பற்றி குறிப்பிடும் போது, ஒரு மறுமொழியில், ’இவர் சுயநலமாக சம்பாதித்துக் கொண்ட கூத்தாடி’ என்று சொல்லி இருப்பது நெருடலாகவே உள்ளது. ஒரு காலத்தில் நாடகக் கலைஞர்கள் கூத்தாடி என்று அழைக்கப் பட்டனர். பிற்பாடு அவ்வாறு அழைப்பது இல்லை. ஆனால் எம்.ஆர்.ராதா மட்டும், எம்.ஜி.ஆர் மீதுள்ள வெறுப்பில் ஒட்டு மொத்த நடிப்புக் கலைஞர்களையும் கூத்தாடி, கூத்தாடி என்று தன்னையும் சேர்த்து, அந்த மலேசியா பேச்சில் சொல்லி இருப்பார்.
    காற்றுள்ள போதே தூற்றிக் கொள் – என்பதற்கு ஏற்ப அவர்கள் கொடுப்பவர்கள் இருப்பதால் அதிக சம்பளம் வாங்கிக் கொள்கிறார்கள்.. இதில் தப்பு ஏதும் இல்லை. ஒவ்வொருவரும் சம்பாதிப்பது, அவரவர் குடும்பம், பிள்ளைகள் என்ற சுயநலம்தானே? மேலும் எந்த தலைவரும் அல்லது நடிகரும் எனக்கு சிலை வையுங்கள் என்று கேட்டு இருக்க மாட்டார்கள். இதுமாதிரி சிலை வைத்தல், மணிமண்டபம் கட்டுதல் என்பவை இங்குள்ள உணர்ச்சிகரமான தமிழர்களுக்கு ஒரு வேலையாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் திரைப்பட நடிகர்களை தாக்கி எழுதுவதோ, பேசுவதோ பெரிதல்ல!

      தாங்கள் சொல்வது போல் திரு. எம்.ஆர் ராதா அவர்கள் அடிக்கடி சொல்வார் கூத்தாடிகளை நம்பாதே! என்று நான் பலமுறை அவரைக்கண்டு வியந்து இருக்கிறேன் நானாவது நான்காவதுவரை படித்து இருக்கிறேன். அவர் எதுவுமே படிக்காதவர்.

      வசனங்களை மனப்பாடமாக கேட்டுக்கொண்டே பேசி, நடித்தவர்.

      திரு. சிவாஜி அவர்கள் மட்டுமல்ல அனைவருமே பிழைக்க வந்த சுயநலவாதிகள்தான் அந்த இடத்தில் தாங்களோ, நானோ இருந்தாலும் இவ்வழிதான்.

      நான் மக்களுக்கு தொண்டு செய்தவர்களுக்கு மக்கள் பணத்தை செலவு செய்யலாம் என்றே சொல்கிறேன்.

      இது தற்பொழுது ஜாதிப்பிரச்சனையை கொண்டு வந்து மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது. திரு. சிவாஜி அவர்கள் தமிழக குடும்பங்களுக்கு பொதுவானவராகவே மக்கள் மனதில் இருப்பார்.

      மேலும் எனது கருத்து இந்த செலவை நடிகர் சங்கம் ஏன் செய்யக்கூடாது என்பதே பிரதான கேள்வி.

      மற்றபடி அவர் ஒரு பிறவிக்கலைஞன் அதில் பெருமிதம் கொள்வோம்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. தனக்குத் தானே சிலை வைத்துக்கொண்டவர்கள் உண்டு. மாயாவதி.

      --
      Jayakumar

      நீக்கு
    3. இதுவும் தவறுதான் சுயவிளம்பரம்தானே...

      நீக்கு
  16. அவர் பெயரில் நன்றாக நடிக்கும் நடிகர்களுக்கு விருது வழங்கலாம்.
    நலிவுற்ற நடிகர், நடிகர்களுக்கு உதவலாம்.
    மணிமண்டபத்தை விட இது நல்லது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையான, உயர்வான யோசனை தங்களுடையது.

      நீக்கு
  17. உலகம் பலவிதம்!அதிலே இதுவும் ஒன்று!

    பதிலளிநீக்கு
  18. காரைக்குடியில் இரண்டு தலைவர்களுக்கு சிலை வைத்து அவர்களைக் கூண்டு போட்டுப் பாதுகாக்கிறார்கள் சகோ. ரொம்பக் கொடுமை. சரியான கட்டுரை. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வருக சகோ நானும் பார்த்தேன் இது காரைக்குடியில் மட்டுமில்லை தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களின் நிலைப்பாடே....

    தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது காரணம் காரைக்குடியில் கண்ட காட்சியே என்னை இப்பதிவு எழுத வைத்தது.

    பதிலளிநீக்கு
  20. சிலை வைப்பதென்பது இங்கே ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. மக்களின் மன நிலை மாறினாலொழிய இதை நிறுத்தமுடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள் அடிப்படை மக்களே...

      நீக்கு