1998 நான் அபுதாபி மனநல
மருத்துவமனையில் வேலை செய்த காலகட்டம் வேலை நேரம் காலை 06:30 மணி ஆனால் அதிகாலை 05:00 மணிக்கே எனது நிறுவனம் குப்பை அள்ளும் சிறிய லாரி
போலிருக்கும் வண்டியில் பணியாட்களை கொண்டு வந்து கொட்டிச் செல்லும் அப்பொழுதெல்லாம்
இப்பொழுது மாதிரி பேருந்துகள் கிடையாது கடுங்குளிரிலும் ஊரைவிட்டு வெளியே பாலைவனத்தில்
அறுபது கி.மீ தூரமிருக்கும் விடுதியிலிருந்து நகரத்துக்குள் வரணும்.
அப்படி என்றால்
எத்தனை மணிக்கு எழுந்து குளிக்க வேண்டும் அப்படியானால் மிகவும் அதிகமான சம்பளமாக
இருக்குமோ என்று எண்ண வேண்டாம் அடி மட்ட சம்பளமும் இதுவே அடி மட்ட வேலையும் இதுவே
நான் தொடக்கம் முதலே பேசப்பழகிக்கொண்டு வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு எனது
தகுதிக்கும் மீறிய உச்சாணிக் கொம்புக்கும் போய் விட்டேன் முதன் முதலில் நான்
படித்த பாடம் இங்கு உயர்வதற்கு படிப்பறிவு வேண்டும் என்பதே அது நமக்கு
எட்டாக்கனியாகி விட்டது இனி செய்ய வேண்டியது என்ன ? அரபு மொழி மட்டுமல்ல எந்த
மொழியும் தெரிய வேண்டும். வாழ்வில் உயரலாம் இதையறிந்த நான் தொடக்கம் முதலே எல்லா
மொழிகளிலும் ஆர்வம் காட்டி பேசப்பழகினேன். மொழி பயில்வதை ஒரு வேலையாகவே கருதினேன்.
இந்த மொழி என்று இல்லை தொடர்பே இல்லாத பிலிப்பைன்ஸ் மொழியைக் கூட சரளமாக பேசினேன்.
தற்பொழுது கொஞ்சம் தூரமாகி விட்டது மட்டுமல்ல மறதியும் கூடவே காரணம் வயதும் கடந்து
விட்டதே... அன்று என்னோடு சென்று இன்றுவரை எந்த மொழியும் பழகாத நண்பர்களும் அங்கு
உண்டு. வாழ்வும் அந்நிலையே காரணம் விரிவான சிந்தனை உணர்வுகள் கிடையாது இதற்கு
முக்கிய காரணம் இன்னும்கூட திரைப்பட நடிகனின், அரசியல் தலைவனின் அடிமையாய்
இருக்கின்றோமே என்று உணராதவர்கள். இதற்கு மேல் நடிகனைப்பற்றி எழுதினால் திரு.
ஜியெம்பி ஐயா அவர்கள் கோபப்படலாம் நான் இப்பதிவை எழுதுவதே திரு. ஜியெம்பி ஐயா
அவர்கள் கேட்டுக் கொண்டதற்காகவும், நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்காகவுமே..
சரி இனி விடயத்துக்குள் செல்வோம். காலை
வந்தவுடன் அந்த அரையிருட்டில் நோயாளிகள் மட்டுமல்ல இரவுப்பணி செவிலியர்களும்
உறங்கி கொண்டுதான் இருப்பார்கள் நான் உள்ளே வந்தவுடன் நேராக தொலைக்காட்சி காணும்
கூடத்துக்குப் போயி உட்கார்ந்து விடுவேன் மற்ற நண்பர்கள் ஒருமணி நேரம் உறங்கி விடுவார்கள்
அப்பொழுது அரபு நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை விரும்பி பார்ப்பேன் முக்கிய
காரணம் அதிலிருந்தும் சில வார்த்தைகளை புரிந்து கொள்ள இயலும் என்பதால் இதில் ஒட்டக
பந்தயக் காட்சிகளை தினமும் பார்ப்பேன் அதில் ஒட்டகத்தை இயக்கி செல்வது எட்டு வயது
முதல் பதினைந்து வயது வரையுள்ள ஆண் குழந்தைகள் அரேபியர்களின் உடைணிந்து இருக்கும்
முதுகில் உட்கார்ந்து லாவகமாக விரட்டிச் செல்வதைக் கண்டு அரபி குழந்தைகள்
திறமைசாலிகள்தான் என்று வியந்ததுண்டு வெகுகாலமாக பார்த்து வந்த நான் ஒருமுறை
செவிலியர்களின் முதன்மையாளர் பாலஸ்தீனியர் பெயர் வலீத் முகம்மத் நான் மிகவும்
மதிப்பவர் எனக்கு பல வகைகளிலும் உதவியாய் இருந்தவர் மொழி சொல்லிக்
கொடுத்ததிலும்கூட மனிதனிடம் மதம் காணாமல் மனிதம் காணும் மாமனிதர் எமது நண்பர்
திரு.வலீத் முஹம்மத் அவர்கள். இக்குணம் பாலஸ்தீனியரிடம் காண்பது மிகவும், மிகவும்,
மிகவும் அபூர்வம். நான் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது அவர் வந்தார் எழுந்த
என்னை உட்கார் என்று சொன்னதோடு நான் இரசித்து பார்க்கிறேன் என்பதால் அலைவரிசையை மாற்றாமல்
பார்த்துக் கொண்டு இருந்தவர் என்னிடம் கேட்டார்.
இந்தக் குழந்தைகள் எந்த நாடு தெரியுமா ?
இந்த நாட்டு அரபிகளின் குழந்தைகள்தானே...
சற்றே விரக்தியாய் சிரித்தவர் சொன்னார்.
இது எல்லாமே உனது நாட்டுக் குழந்தைகள்தான்.
திடுக்கிட்டு ஆச்சயர்யமாய்....
எப்படி இது..... ?
இந்த பந்தயத்துக்காக இந்தியா, பங்களாதேஷ்,
ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளிடமிருந்து கடத்தப்பட்டு வரும் குழந்தைகளே இவர்கள்.
அப்படினா.... இது காவல்துறைக்கு தெரியாதா ? இந்தக் குழந்தைகள் மீண்டும்
இந்தியா போகுமா ?
இது அடுத்து போவது அல்லாவிடம்தான்.
அதிர்ச்சியில் சட்டென எழுந்த என்னை உட்காரச் சொல்லி சைகை காட்டினார்..
இது கடத்தப்பட்டு வந்தாலும்
சட்டப்படி விலைக்கு வாங்கி விசா கொடுத்து கொண்டு வரப்படுகிறது இந்த நாட்டுக்காரன்
மீது கோபப்படாதே இவர்களை விற்ற உனது நாட்டுக்காரன் மீது கோபப்படு. அதற்காக இவன்
செய்தது நியாயமென்று நான் சொல்லவில்லை. இந்தக் குழந்தையின் ஆயுள் காலம் இந்த
ஒருநாள்தான் இது பிழைத்தால் மீண்டும் அடுத்த பந்தய நாளில் நிச்சயமாக இறந்து
விடும்.
எப்படி ?
இந்த ஒட்டகம் எப்படி ஓடுதுன்னு நினைக்கிறே ?
அந்தக் குழந்தைகள் விரட்டுவதால்.
இல்லை உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் இந்த
பந்தயத்தில் குழந்தைகள் கையில் கயிற்றை பிடித்து இருப்பது தெரிகிறது ஒட்டகத்தின்
வயிற்றோடு குழந்தைகள் கட்டி இருக்கும். பந்தயத்திடலின் இருபுறமும் வரும் சீறுந்தை
காட்டுகின்றார்கள் ஒட்டகம் ஓடுவதை காட்டுகின்றார்கள் எந்தக் குழந்தையையாவது
நெருக்கமான காட்சியில் பார்த்து இருக்கின்றாயா ?
இல்லையே ஏன் ?
காட்ட மாட்டார்கள் காட்டினால் அது அரேபியக்
குழந்தைகள் இல்லை என்பது தெரிந்து விடும் அதனுடைய உடைகள் மட்டுமே அரபி மற்றபடி
இந்த ஒட்டகம் வேகமாக ஓடுவது எதனால் என்றால் இந்தக் குழந்தைகள் பயந்து அலறும் இந்த
சப்தம் ஒட்டகத்துக்கு பிடிக்காது அதனால் மிரண்டு ஓடும், வேகமாக ஓடும். குழந்தைகள்
முடிந்தவரை அலறி இறந்து விடும் அதையும் மீறி பந்தயம் முடியும்வரை குழந்தை பிழைத்து
இருந்தால் அரபிகளின் அதிர்ஷ்டம் அடுத்த பந்தயம்வரை அதற்கு சோறு போட்டு
வளர்ப்பார்கள். பிறகு மீண்டும் பந்தயத்தில் ஓடவிட கட்டி விடுவார்கள். அதிக பட்சம்
மூன்று தடவை ஓடலாம் பிறகு கண்டிப்பாக குழந்தை இறந்து விடும்.
இதெல்லாம் எதற்காக ?
குறிக்கோள் முதல்பரிசை நமது ஒட்டகம்
பெறவேண்டும்.
முடிவில் பணம்தானே... ?
ஆமாம் வேறென்ன ?
கேட்டுக்கொண்டு இருந்த எனது விழிகளின் ஓரம் ஈரம்
கசிந்தது. எழுந்தவர் எனது முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டு உள்ளே
சென்றார். ச்சே பணத்துக்காக குழந்தைகளின் உயிரில் விளையாட்டா ? இதற்கு அடிப்படை காரணம் நமது
நாட்டை ஆள்பவர்களின் அவலட்சணம்தானே.... இந்த நாட்டுக் குழந்தை ஒன்றையாவது நமது
நாட்டுக்கு கடத்தி செல்ல இயலுமா ? காரணமென்ன ? சட்டம் மக்களை சரியான
வகையில் பாதுகாக்கிறது சிறிய நாட்டில், சிறிய மக்கள் தொகையில் செயல்பாடு
அறிவாற்றலோடு இருக்கிறது. பரந்து விரிந்த மக்கள் தொகை நிறைந்த இந்தியாவில் ? ? ? இதற்கெல்லாம் ஆரம்ப காரணம்
மக்கள்தானே அறியாமையாய் தேர்தலில் மை இட்டுச்சென்றதால் வந்த வினையா ? இது இறைவனுக்கு தெரியாதா ? உலகையே காக்கும் பரம்பொருள்
என்கின்றார்களே அப்படியானால் இது வேற்றுக்கிரகமா ? தமிழ்க்கடவுள் முருகன்
என்கின்றார்களே அப்படியானால் அவருக்கு அரபு பேசத்தெரியாதா ? எனக்கு இறை நம்பிக்கை அரை
நம்பிக்கையாய் மாறுவது இந்த தருணங்களில் மட்டுமே எல்லா மனிதனும் தன் மதம்
உயர்வானது என்றும், தனது கடவுளே உயர்ந்தவர் என்றும் கூவுகின்றனர். இவைகளை தடுக்க
எந்த மதக்கடவுள் வருவார் ?
அதன் பிறகு காணொளிக் காட்சிகளை கூர்ந்து
கவனித்தேன் ஆமாம் எந்தக் குழந்தைகளையும் அடையாளம் காண்பது கடினமாய் இருந்தது
காரணம் நெருக்கமாக காட்டுவதில்லை. இந்த ஒட்டகத்தில் குழந்தை மடிந்து கிடக்கிறதே...
ஏன் ? ஒருவேளை
குழந்தை இறந்து விட்டதோ இந்த ஒட்டகத்தில் குழந்தையை காணவில்லையே ஏன் ? ஒருவேளை குழந்தை கீழே
விழுந்து விட்டதோ ஓடும் ஒட்டகக் கூட்டத்தின் இடையில் தவறி விழுந்தால் அந்தக்
குழந்தையின் நிலை ? இறைவா
நீ இருப்பின் இவைகளை தடுக்க வேண்டும் இல்லையேல் மொத்தமாய் உலகை அழிக்க வேண்டும். நமது
நாட்டில் மாட்டு வண்டி பந்தயங்களில் ஓடும் மாட்டின் வாலை முறுக்குவதும், அதை
கடிப்பதையும் கண்டு கோபப்பட்டு இருக்கிறேன். பணத்துக்காக மாட்டை வதைக்கின்றார்களே
என்று கேட்டால் முதல் பரிசுக்காக என்கின்றார்களே அதுவும் பணம்தானே இங்கு மனித
உயிர்களே அதுவும் பிஞ்சு உயிர்கள் சிதைக்கப்படுகிறது என்னால் என்ன செய்யக்கூடும் ?
///அநியாயங்களை
தட்டிக் கேட்க முடியவில்லை
என்றால்
மனதால் வெறுத்து ஒதுங்கு///
இது இஸ்லாம் மதத்தில்
சொல்லப்பட்டது என்பதை நண்பர் திரு. வலீத் முகம்மத் அவர்கள் அன்று எனக்கு சொன்னது நான்
இதையே பாவிக்கிறேன் அதன் பிறகு தொலைக்காட்சியில் அவைகளை பார்ப்பதை நிறுத்தி
விட்டேன் நல்லதை யார் சொன்னால் என்ன ? நான்
திரு. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவையும் கேட்டவன், திரு. தந்தை
பெரியார் அவர்களின் பேச்சையும் கேட்டவன் – கில்லர்ஜி
கணினி பிரச்சனை
காரணமாக காணொளியில் சித்து வேலை செய்ய இயலவில்லை ஆகவே யூட்டியூப் இணைப்பு இதோ...
குழந்தைகளை ஒட்டகத்தின் முதுகின்மீது கட்டி ஓட்டுவதைப் பற்றி முன்னரே படித்துள்ளேன். அதிகம் வருந்தினேன். தற்போது உங்கள் பதிவு மூலமாக மேலும் செய்திகளை அறிந்தேன். உங்களுடைய அனுபவப் பகிர்வுகள் மூலம் நாங்கள் அறியாத பல புதியவற்றை அறிகிறோம்.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களின் முதல் கருத்துரையை பதிந்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஒவ்வொரு வெவ்வேறுவிதமான அவலங்கள் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.... இந்தக் கொடுமைகள அல்லாவானாலும் சரி, முருகனாலும்சரி..ஒரு இம்மிளவு கூட தடுத்து நிறுத்த முடியாது... நண்பரே....
பதிலளிநீக்குவருக நண்பரே உங்களது கருத்தை எதிர்த்து சொல்வது கடினமே வருகைக்கு நன்றி
நீக்குநான் இதை விட பயங்கரங்களை பார்த் இருக்கிறேன்
நீக்குநண்பர் திரு. Baker Block அவர்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் வருகைக்கு நன்றி
நீக்குஇந்தக் கொடுமை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். விற்கும் நம் மனிதர்களை என்னவென்று சொல்ல! வேதனைதான் வருகிறது. எவ்வளவு கொடூரம்...
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி மனிதம் உலக அளவில் அழிந்து விட்டது முடிவு உலகமே அழிந்தால்தான் சரியாகும்.
நீக்குஎன்ன இது.. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை... இவர்களெல்லாம் மனிதர்கள்தானா???...
பதிலளிநீக்குவருக மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றே சொல்லலாம் என்ன செய்வது இதையும் நாம் கடக்க வேண்டும்.
நீக்குஅரபு நாடுகளில் peta கிடையாதா? ஒட்டகப் பந்தயம் தடை செய்ய.
பதிலளிநீக்குவாங்க ஐயா இஸ்லாமிய நாட்டு சட்டத்துக்குள் எந்த நாடும் தலையிட்டு நான் அறிந்ததில்லையே....
நீக்குஒட்டகமல்ல மனிதர்கள் தான் மிருகங்கள்!
பதிலளிநீக்குவாங்க ஐயா சரியாக சொன்னீர்கள்.
நீக்குஅன்பின் ஜி..
பதிலளிநீக்குநீங்கள் 1998 - என குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்..
நான் 1991 - ன்பிற்பகுதியில் இருந்து இங்கே இருக்கின்றேன்..
ஈராக் படைகள் துரத்தியடிக்கப்பட்டிருந்த நேரம் அது..
அப்போது பாலைவன வெளியில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் -
ஈராக் எல்லையில் பட்டறை போட்டிருந்த வீரர்களுக்கு உணவு கொடுக்கும் பணி ..
அந்த சூழ்நிலையிலும் இவன்கள் அடங்கவில்லை..
பாலைவன வெளியில் ஒட்டகங்களுடன் சின்னஞ்சிறு பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள்..
அதற்கு முன்பே நான் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் -
என்னுடைய மேற்பார்வையாளர் திரு இஃப்திகார் அகமது (பாகிஸ்தானியர்)
அவர்களிடம் எனது வருத்தத்தைச் சொன்னேன்...
அவர் மேலும் பல அதிர்ச்சியான விவரங்களைச் சொன்னார்...
உங்கள் பதிவின் மூலமாக -
அந்த நாட்களை மீண்டும் கொண்டு வந்து விட்டீர்கள்..
மற்றபடி திரு JK22384 - அவர்கள் கேட்டிருக்கின்றார்கள்...
அரபு நாடுகளில் Peta கிடையாதா?.. - என்று..
அதெல்லாம் இங்கே நடக்காது..
கூட்டுக் களவாணிகள் கும்மியடிக்கும் நாட்டில் தான் -
Peta வுக்கும் மற்ற தில்லாலங்கடிகளுக்கும்
வெண்கொற்றக் குடை பிடித்து ஆலவட்டம் சுற்றுவதெல்லாம்!..
அன்பின் ஜி
நீக்குஉங்களிடமிருந்து கருத்துரையை ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தேன் உங்களுக்கு தெரியாத விடயங்களா ? நான் சொல்லி விடப்போகிறேன்.
தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்கள் நினைவு படுத்தி விட்டார் ஆகவே எழுதினேன் வருகைக்கு நன்றி ஜி
வேதனையும் கொடுமையும் :(
பதிலளிநீக்குயாரை க்குற்றம் சொல்வது பணத்துக்காக குழந்தைகளை விற்ற பெற்றோரையா :(
வெற்றி பெற இப்படி குழந்தைகளை பயன்படுத்தும் கேவல பண முதலைகளையா :(
சொன்னாற்போல ஒரேநேரம் உலகம் அழிஞ்சா இந்த கொடுமைலாம் தெரியாம போயிரும் :(
நீங்க மேற்சொன்ன ஆசிய நாடுகளில் 4/5 வயதுள்ள பிள்ளைகளை கார்பெட் செய்ய வைச்சி ..(சின்ன விரல்கள்தான் ஊசியை வேகமா இடைவெளி இல்லாம தைப்பாங்களாம் :((( ஏற்றுமதி செய்ததை கண்டு பிடிச்சி இப்போ அந்த நாடுகளில் தீவிர கண்காணிப்புக்கு பின்தான் பொருட்களை வாங்கறாங்க ..
இதுபோல் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு இந்தியர் கற்றல் குறைபாடுள்ள குழந்தையை கேரளாவில் இருந்து தத்தெடுத்து கொன்னிருக்கான் :(
சில மனுஷங்க மிருகமாக மாறல்ல அரக்கர்களாக மாறுகிறாங்க :(
வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி. உண்மை உலகம் அழிந்து மீண்டும் தோன்றவேண்டும்.
நீக்குஉங்களின் வேதனையான பதிவு மனதில் வலியை ஏற்படுத்துகிறது. 2000ம் ஆண்டு பிற்பகுதியில் அபுதாபி ஷேக் உத்தரவின் பேரில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு, ரோபோ மனிதர்களை உபயோகப்படுத்துவது நடைமுறையாக்கப்பட்டு விட்டது.
பதிலளிநீக்குhttp://blog.raynatours.com/5-interesting-facts-dubai-camel-racing-festival/
வருக சகோ தங்களின் ஆதாரப்பூர்வமான தகவலுக்கு நன்றி
நீக்குவருடம் 2000-ம் என்றால் இது பெரியவரின் உத்தரவாகத்தான் இருக்கும் இறப்பதற்கு முன் அவர் செய்து விட்டுப் போன நல்ல செயல்.
அவரது ஆன்மாவுக்கு சாந்திகள் உண்டாகட்டும்.
உங்களின் இந்த பதிவை படிப்பதா வேண்டாமா என்று எனக்குள் ஒரு தயக்கம். படித்தவுடன் மனதில் ஒருவித படபடப்பு. ஏனெனில் இது ஏற்கனவே நான் படித்த கொடுமையான விஷயம். இன்னும் அந்த வழக்கம் அரபு நாடுகளில் இருப்பது வேதனையான ஒன்று.
பதிலளிநீக்குவருக நண்பரே மேலே சகோ திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் தகவல் சொல்லி இருக்கின்றார்கள்.
நீக்குஆனால் இது எல்லா அரபு நாட்டிலும் கடைப்பிடித்தால் சந்தோஷமே...
ரொம்ப வேதனைப் பட வைத்த விஷயம். இப்படி எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை! :(
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ
நீக்குஜீரணிக்கக் கடினமான விஷயம். ஒட்டகங்கள் வெயிலில் ஓடுவதும் பரிதாபமானதுதான். நிச்சயம் பார்வையாளர்கள் குளிர்சாதன வசதியுள்ள இடத்திலிருந்துதான் பார்ப்பார்கள். என் எண்ணம், விலங்குகளை எந்த விதத்திலும் பாரம்பர்யம், கலாச்சாரம் என்று சொல்லித் துன்புறுத்தக்கூடாது. அது ஜல்லிக்கட்டாயிருந்தாலும் சேவல் சண்டையாக இருந்தாலும்.
பதிலளிநீக்குவிலங்குகளுக்கே இப்படி என்றால், சிறுவர்களுக்கு?
உண்மைதான் நண்பரே இறைவன் படைத்த விலங்குகளை ஆளுமை படுத்தும் உரிமையை மனிதனாக எடுத்துக் கொண்டான்.
நீக்குசில நேரங்களில் நான் நினைப்பதுண்டு அவைகளுக்கும் பேசும் வல்லமை இருந்தால் ?
விவசாயத,துக்கு உபயோகப்படுத்துவது, தன் குடும்ப உறுப்பினராக எண்ணி எல்லாவித்த்திலும் கவனித்துக்கொள்வது ஏற்கத்தக்கது. ஆனால் கொடுமைப்படுத்துவது, அடித்து வண்டி இழுக்கச்செய்வது, ஜல்லிக்கட்டு கோன்றவைகளெல்லாம் எப்படி ஏற்கமுடியும்? ஒவ்வொரு போர் வீரனும் அவன் குதிரையை சகோதரன்போல் கவனித்துக்கொள்வான். ஆனால் இதுபோல் கொடுமைப்படுத்துவது (ஒட்டக ரேஸ் போன்று) என்ன கலாச்சாரமோ.
நீக்குநீங்கள் சொல்வதுபோல் அதனை குடும்ப உறுப்பினர் போல பேணி வளர்க்க வேண்டும்.
நீக்குபடிக்கும்போதே மனம் கனத்தது !
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குபடிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
பதிலளிநீக்குமனிதம் என்பதே மரித்துத்தான் போய்விட்டது
தம+1
வருக நண்பரே இன்னும் நாம் அநியாயங்களை காண வேண்டியது வரும்.
நீக்குதுளசி: இதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். ஒட்டக ரேஸ் என்று ஏதோ எங்கேயோ வாசித்த நினைவு ஆனால் கொடூரம் தெரியாது. மிகவும் கொடுமைக்காரர்களாக இருப்பார்கள் போல! மனிதம் என்பதே இல்லையோ..
பதிலளிநீக்குகீதா: இதைப் பற்றி நிறைய வாசித்திருக்கேன் கில்லர்ஜி.....மிகவும் கொடூரம்! ஆனால் நல்ல காலம் அதைத் தடை செய்து விட்டு இயந்திர மனிதனால் இயக்கப்படுவதும் அறிந்திருக்கேன் ஜி. எனக்கும் மகனுக்கும் இப்படி ஒவ்வொரு நாட்டிலும் என்ன செய்கிறார்கள் என்று அறிய நினைத்து வாசித்தோம்...
இன்னும் எழுத நினைத்தென்... சரி கணினி கொஞ்சம் மூட்ல இருக்கு...வேற பதிவுகளையும் பார்க்கனும்...ஸோ இப்ப ஜூட்!!!
வருக தங்களின் விரிவான கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குநானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா.
பதிலளிநீக்குஇந்த அரக்க குணத்தை...
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஎன்ன ஒரு குரூரம். இந்தப் பந்தயத்தைப் பார்த்து மகிழ்பவன் நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது.
பதிலளிநீக்குஆம் நண்பரே மனிதர்கள் இல்லைதான்.
நீக்குகாரணங்களோடு நானும் எழுதினேன் போஸ்ட் பண்ணிவிட்டேன் என்று நினைத்து இருக்கேன் பார்த்தால் இங்கு இல்லை அதாவது உங்க போஸ்ட் வருவதற்கு முதல் நாள் தான் 7 news சேனலில் அரசு நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து குழந்தை காணாமல் போவதும் வெளிநாடு ஏன் அழைத்து செல்கிறார்கள் என்ற விவரமும் அறியமுடியாமல் அரெஸ்ட் செய்து இருக்கிறார்கள் ஆட்கள் சிலரை அதை பற்றியே யோசித்து கொண்டு இருதேன் நீங்க இதுமாதிரி பதிவு போடுகிறீர்கள் இதைப்பற்றி அன்று(சேனலில் ) பேசியதை எழுதி போஸ்டு போட்டுவிட்டேன் என்று நினைக்க நான் போஸ்டு போடவில்லை என்று நீங்களும் சொல்கறிர்கள் ஜி என்ன சொல்ல போஸ்டை காபி பண்ணவிட்டு அனுப்ப மறந்துவிட்டேன் போல
பதிலளிநீக்குவருக தங்களது கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குகுழந்தைகளை அரபு நாட்டுக்கு அனுப்பும் பலருக்கு இந்தக் கொடுமை தெரியாது என்றே நினைக்கிறேன் வேலைக்கு வருபவர்கள் படும் கஷ்டங்களும் இஙிருப்போருக்குத் தெரியாது நிறைய பணம்கிடைக்கிறதே அதுதான்குறிக்கோள் அங்கிருந்து வேலைக்கு சென்று வருபவர்களும் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதில்லை நம்கஷ்டம்நம்மோடு போகட்டும் என்றே நினைத்து கடனை அடைத்து பொன் ஆபரணங்கள் சிலவற்றைக் கொடுத்து வீட்டிலிருப்போர் அறியாமையைப் போகுவதில்லை சில நாட்கள் துபாயில் இருந்த என் கண்களுக்கு அங்கிருப்போரின் ஏழைகளின் நிலைதான் தெரிந்தது அதுவே உங்களை அங்கு நிலவும் நிலையை எழுதக் கேட்டுக் கொண்டது
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் ஐயா.
நீக்குஇன்னும் பல விடயங்கள் எழுதுவேன். வருகைக்கு நன்றி