தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 04, 2017

My, Society


இந்த சமுதாயத்தில் எந்த ஒரு திறமைசாலியையும் தட்டிக் கொடுத்து உயர்த்தி விடுபவர்களை விட அவனை மட்டம் தட்டி கவுத்தி விடுபவர்கள்தான் அதிகம் பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத் தொட்டி அதன் விளக்கம்.

ஒரு குப்பைத் தொட்டியில் சிறிதளவு மலம் கிடந்தாலும் சரி அதே குப்பைத் தொட்டியில் பெரிதளவு சந்தனம் கிடந்தாலும் சரி அதே நாற்றம்தான் வரும் இதைப் போலவே நல்லதோ கெட்டதோ எந்தக் காரியத்தை செய்தாலும் இந்த சமுதாயம் குறை சொல்லிக் கொண்டே.. இருக்கும் நம் மனதுக்கு நல்லது என்று மனசாட்சி சொல்வதை செய்து கொண்டே இருக்க வேண்டும் நியாயமான மனசாட்சிக்கு நிகரான நீதிபதி மட்டுமல்ல இறைவன்கூட வேறு யாருமில்லை ஆகவே என்னைப் பொருத்தவரை இந்த சமுதாயம் ஒரு குப்பைத்தொட்டி.

Chivas Regal சிவசம்போ-
குப்பைத்தொட்டி நாற்றம் வரும்னு கண்டு புடிச்சவரு இவருதான்.

31 கருத்துகள்:

  1. வெளியூர் மறுமொழி இட தாமதமாகலாம் மன்னிக்க...

    பதிலளிநீக்கு
  2. சந்தணமாக இருந்தாலும் தங்கமாக இருந்தாலும் அது குப்பை தொட்டியில் இருந்தால் அதுவும் குப்பைதான். அதனால் அந்த குப்பை தொட்டியில் இருந்து வெளிவர முயற்சிப்பதுதான் நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாழையங்கோட்டைக் கூழையனை முந்திடோணும் என ஓடி வந்தேன், ஆனா அதுக்குள் "அமலாபுரம்" :)... அமீர்ருத் முந்திட்டார்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  3. ஆஆஆஆவ்வ்வ்வ் பாழையங்கோட்டை கூழையன் வரமுன் நான் வந்திடோணும் என ஓரே ஓட்டமாய் வந்தேன் முதல் கொமெண்ட்டுக்கு:)

    பதிலளிநீக்கு
  4. முதல்ல நல்லா ஓடிச்சுப் பாருங்கோ கில்லர்ஜி... நம் மனமே ஒரு குப்பைத் தொட்டிதான்... அதைவிட்டுப்போட்டு சமுதாயத்தில எதுக்குக் கை வைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)...

    சிறீ சிவசம்போ அங்கிளுக்கு இது...
    https://us.123rf.com/450wm/mashatu/mashatu1501/mashatu150100022/35380208-cat-with-a-bouquet-of-flowers-vector.jpg?ver=6

    பதிலளிநீக்கு
  5. இருப்பினும் மனச்சாட்சி பற்றிய விடயம் ரொம்ப கரெக்ட்...

    வாழ்ந்தாலும் பேசும்... தாழ்ந்தாலும் பேசும் வையகம்.... சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதே:)...

    என் கொள்கையும் அதேதான்.. மனச்சாட்சிக்கு விரோதமான செயல், அடுத்தவர் மனம் நோகும் செயல் எதுவும் செய்யக்கூடாது...

    பதிலளிநீக்கு
  6. மீதான் 1ச்ட் வோட் கனகாலத்தின் பின்பு போட்டேன் இன்று(முதலாவதுக்கு சொன்னேன்).

    பதிலளிநீக்கு
  7. அப்பாவி சரியாத் தான் சொல்கிறார். இந்த மனம் என்னும் குப்பைத்தொட்டியிலிருந்து நீக்கவேண்டியவை இருக்கையில் சமுதாயத்தை எப்படிச் சொல்ல முடியும்! :(

    பதிலளிநீக்கு
  8. அதிரா சொல்வது போல ஒவ்வொருவர் மனமுமே குப்பைத் தொட்டிதான். சமுதாயம் நம்மை மட்டம் தட்டினாலும் உடனே நம்மை மறந்து விடும். ஏனெனில் அதற்கு மறதி ஜாஸ்தி!

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்ல வந்ததை அதிரா சொல்லிவிட்டார்....நாம் தானே சமுதாயம்...நம் மனதிலும் அழுக்குத்தான்....எனவே....கில்லர்ஜி ஐடியலிஸ்டிக் சமுதாயத்தை நாம் எதிர்பார்க்காமல் அதில் நடக்கும் நல்லதை கண்டு, நம்மால் முடிந்த நல்லதை செய்வோமே...செய்யாட்டாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட நல்லத்தையேனும் நினைப்போமே.....பாசிட்டிவாக பார்ப்போமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மனசாட்சி ஆம் நம்மை நல்வழிப்படுத்தும்...அந்த மனசாட்சி எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவதற்காகத்தான் நல்லதை பார், செய், கேள் என்பதை நல்ல நீதிக் கதைகளை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குத்
    ப் போதிக்கச் சொல்லப்படுவது.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பிறரின் சொல்லுக்காக எதையும் செய்யவேண்டாம். நம் மனசாட்சி சொல்படி செய்வோமே. சமூகத்துக்காக எதைச் செய்தாலும் அதில் சிலர் குற்றம் கண்டுபிடிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  12. மனச்சாட்சி கொடுக்கும் தண்டனையை வேறு எதுவுமில்லை...

    பதிலளிநீக்கு
  13. குப்பைத் தொட்டியில் இருந்து வெளிவந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  14. எனது மனசாட்சிக்கு நல்லது..
    ஆனா, அவனுக்கு கெட்டதாக இருக்கே!..

    அவன் கெட்டதாக இருக்கு..ன்னு சொன்னதுக்காக
    நான் எனக்கு நல்லது..ன்னு பட்டதை செய்யாமப் போனா
    என் மனசாட்சி என்னை குத்திக் குடையுமே!..

    கெட்டது..ன்னு சொன்னவன் நிம்மதியான தூங்கறான்..

    நல்லது செய்யாமப் போனதால நான் நடுச்சாமத்தில
    ஆந்தையா அலைகிறேன்..

    இது எப்படி இருக்கு!?..

    பதிலளிநீக்கு
  15. திரு மதுரைத் தமிழன் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். குப்பைத் தொட்டியில் என்ன இருக்கிறது என்பதை விட்டு நாம் வெளியே வருவதே சரி!

    பதிலளிநீக்கு
  16. நமக்குள் நாம் நம்மை க்ளீனா வச்சுப்போம் ..நான் எப்பவும் தீயவற்றை கிட்டவே நெருங்க விடுவதில்லை .நாம் இடம் கொடுத்தாதானே அவை இருக்கும் ..நாமும் சமுதாயத்தின் அங்கம் அதனால் தீயதை எரிப்போம் .
    மனசாட்சிக்கு நேர்மையா நடந்தா போதும் நாம்

    பதிலளிநீக்கு
  17. மனிதனின் மனமே குப்பை தொட்டியாகத்தான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  18. நாம் நல் வழியில் பயணிப்போம் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  19. குப்பைத் தொட்டி எதையும் ஏற்றுக் கொள்ளும்! பக்குவப் பட்ட மனமும் குன்பைத் தொட்டிதான்

    பதிலளிநீக்கு
  20. மனசாட்சி விட பெரியது எதுவுமில்லை நம்மை வழிநடத்த கூடவே இருந்து நம்மை முழவிழி திறந்து உற்று உறுத்து பார்க்கும் நம் செயல்களை கெட்டது அலட்சியப்படுத்தும் நல்லது பயப்படும்

    பதிலளிநீக்கு
  21. வித்தியாசமான சிந்தனை..

    பதிலளிநீக்கு
  22. //வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்// பாடல் நினைவுக்கு வந்தது....

    பதிலளிநீக்கு
  23. எல்லோரையும் ஒரே கணக்கில் வைத்து பார்க்கக் கூடாது நண்பரே

    பதிலளிநீக்கு
  24. மனசாட்சிக்கு பயப்படுவோம் !

    பதிலளிநீக்கு
  25. மனசாட்சி என்பது எப்படி வளைத்தாலும் வளையும் யாராவது மனசாட்சிக்கு எதிராகச் செயல் படுவதாகக் கூறு கிறார் களா

    பதிலளிநீக்கு
  26. மனச்சாட்சி பற்றிய கருத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. மனசாட்சியின் பதிவு மனசாட்சிப்படி நன்று

    பதிலளிநீக்கு
  28. கூட்டு மனப்பான்மை எப்போதுமே குப்பை தொட்டி தானே. அதிதீதமாக சரியோ தவறோ கூப்பாடுபோடுவது கூட்டு சமூகத்தின் இயல்பு.

    பதிலளிநீக்கு