தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 03, 2018

நாளைய மன்னர்கள்


நட்புகளே... பார்த்தீர்களா ? இளைஞர்களுக்கு ‘’நாளைய மன்னர்கள்’’ என்றொரு பெயரும் உண்டு ஆனால் இந்த இழி செயலைச் செய்யும் அனைவருமே இளைஞர்களே.. இவர்களை சட்டப்படி தண்டிக்க நமது சட்டத்தில் இடமுண்டு ஆனால் நாளடைவில் இதற்கு சட்டத்தில் இடமில்லையோ என்று நினைக்கும் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் இது பொது மக்களுக்கு இடையூறு செய்யும் செயல் மட்டுமல்ல ! உணவுக்கு மரியாதை தராமல் அதை பாழாக்கும் செயலும்கூட இதை நாட்டை ஆளுபவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர்கள் இனிவரும் காலங்களில் இதை தடுக்கும் நோக்கத்தோடு செயல்பட மாட்டார்கள் காரணம் இப்படிப்பட்ட அறியாமைவாதிகளால்தான் அரசியல்வாதிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே செல்கிறது காரணம் இன்று ஆள்பவர்கள்கூட நேற்று இதே பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களே... மேலும் இவர்களின் வாரிசுகளும் இந்நிலைக்கு வர வரிசையில் நிற்கின்றார்கள் ஆகவே இதை தடுப்பது அவசியமில்லாத வேலை மேலும் இதை தடுத்தால் பதாகைகளில் நிற்பவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு குரல் கொடுத்தால் போதும் வாக்குகள் தடம் மாறும் என்பதை அறிந்த அறிவாளிகள் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கின்றது என்று நாம் யாராவது எதிர்க்குரல் கொடுக்கப் போவதும் இல்லை கொடுத்தால் ? குரல்வளை நெறிக்கப்படும் என்று அறிந்த அறிவாளிகள் நாம் ஆகவே வேண்டாமே வெட்டிவேலை என்னவொன்று சாலையில் செல்லும் யாராவது பாவப்பட்டவர்கள் வழுக்கி விழுந்து கை, கால் முறிந்தால் இருக்கவே இருக்கின்றது அரசு மருத்துவமனை நண்பர் திரு. வலிப்போக்கன் போன்ற நல்லமனம் படைத்த வழிப்போக்கர்கள் யாராவது தூக்கி கொண்டுபோய் போட்டு விடுவார்கள் பிறகு அவர் எழுந்து நடப்பது விதியின் வழி.

விஞ்ஞானம் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கின்றது எப்படி ? சிந்தனையால்தானே... ஆனால் இவர்களில் யாருக்கும் இது தவறென்ற சிந்தை மட்டும் தோன்றவேயில்லை அதுதான் காலத்தின் கோலம் இதெல்லாம் உலக அழிவை நோக்கியே செல்கிறது ஏற்கனவே விஞ்ஞானம் அதை குறி வைத்தே செல்கிறது என்பது வேறு விடயம் நம் முன்னோர்கள் கலிகாலம் என்று சொல்லிச் சென்றார்களே... இதைத்தானோ ? அதேபோல தெய்வத்துக்கு செலுத்தும் காணிக்கைகளின் செயல் முறைகள் கதி கலங்க வைக்கின்றது ஆம் சமீபத்தில் நாட்டை ஆளும் மந்திரிமார்களின் காணிக்கைகள் இருக்கும் தெய்வ நம்பிக்கையை மேலும், மேலும் குறைத்து விட்டது என்பது உண்மையே... யாரை யாரோடு இணை வைப்பது என்ற கோட்பாடே தமிழனுக்கு இல்லாமல் போய் விட்டதே அதனால்தானே குஷ்புவுக்கு கோயில் கட்டினான், நமீதாவுக்கு கூட நீதிபதி என்ற பதவி கிடைத்தது முனைவர் (Doctor) பட்டம் யாருக்கு கொடுப்பது என்ற முறையே இல்லாமல் போய் விட்டது இரண்டு திரைப்படங்களில் நீதியை நிலை நாட்டுபவனாக நடித்தால் முனைவர் பட்டம் உண்மையில் நடைமுறை வாழ்வில் செய்து காண்பிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் போன்றவர்களுக்கு கொடுத்தாலும் அது நியாயம் நல்லவேளை நீதி தேவதையை கண்ணைக்கட்டி வைத்தார்கள் இல்லையெனில் என்னாகும்.

பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டத்தில் உள்ள அறிவாளிகள் துபாய், அபுதாபியிலும் உண்டு ஆனால் இந்த மாதிரியான கோமாளிகளுக்கு அங்கு வேலையில்லை சாலை ஓரங்களில் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் தண்ணீர்க்குழாய் எதேச்சையாக உடைந்து விட்டது எனறு வைத்துக் கொள்வோம் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைக்கு வந்து அதற்கான வழிகளில் ஓடி மறுநிமிடமே ஒளிந்து விடும் ஆனால் போக்குவரத்து துறை சாலையை அசிங்கப்படுத்திய குற்றத்துக்காக நகரசபை மீது வழக்கு தொடுத்து அதற்கான அபராதத்தை நீதி மன்றங்களின் வாயிலாக ஒரு வாரகால அவகாசங்களில் பெற்று விடும் இத்தனைக்கும் மூன்று துறைகளுமே அரசுதான் அதேநேரம் தனியாரின் கட்டடங்களிலிருந்து தண்ணீர் வெறியேறினால் அவர்களின் நிலை ? இதுதான் அந்நாடு இந்த இடத்தில் நான் ஆழ்ந்து சிந்திப்பது என்னவென்றால் ? அரேபியர்களைவிட இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அறிவாளிகள்தானே ஆனால் நடைமுறையில் ஏன் ? இந்த முரண்பாடு.

நம்மூருக்காரன் அங்கு பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வானா ? ஆனால் ஆசையிருக்கு முடியாதே... ஒருமுறை அபுதாபியில் எலக்ட்ரா சாலையில் எல்லோராடோ என்ற திரையரங்கம் உள்ளது
(அருகில்தான் நமது முன்னணி வலைப்பதிவர் ‘’மனசு’’ திரு. சே.குமார் அவர்கள் தங்கியிருக்கின்றார் அதனால்தான் அடிக்கடி திரைப்படங்கள் கண்டு விமர்சனம் எழுதுகிறார் அவரின் விரிவான விமர்சனம் படிப்பதின் மூலம் எமக்கு திரைப்படத்துக்கு செல்லும் செலவு மிச்சமாகியது)
அங்கு சில நேரங்களில் தமிழ்ப்படங்களும் ஓடும் அங்கு திரையரங்கம் கட்டடங்களில்தான் இருக்கும் நம்மூருபோல ஏக்கர் கணக்கில் இடமிருக்காது அதே கட்டடத்தின் பி. பிரிவின் முதல் தளத்தில் எனது நண்பரின் நிறுவன அலுவலகம் உள்ளது நானும் அடிக்கடி அவரை சந்திக்க போவேன் ஒருமுறை எனது சீரூந்தை திரையரங்கத்தின் முகப்பில் நிறுத்துவதற்கு இடம் கிடைக்க பொதுவாக இந்தப்பகுதியில் நிறுத்துமிடம் கிடைப்பதே அரிது நிறுத்திவிட்டு இறங்கினேன் பார்த்தால் ஒரே தமிழர்கள் கூட்டம் புதிய தமிழ்த் திரைப்படம் வெளியீடு இதுவே காரணம் அனைவரது இதயங்களிலும் கசாநாயகனின் புகைப்படம் பொருந்திய அட்டைகள் தொங்கியது சரியென நான் வழக்கம் போல போகவும் தடுத்து நிறுத்தியது ஒருகுரல்
கில்லர்ஜி சௌக்கியமா ?
நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்கே ?
என்ன தலைவன் படத்துக்கா ?
எனக்கு எப்படியிருக்கும் ? உடலில் ஓடிக்கொண்டு இருக்கும் ரத்தஓட்டம் திடீரென தீப்பிடித்து ஓடியது தலைவனா ? பொதுவாக நான் தமிழனையே தலைவன் என்று சொல்ல மாட்டேன் இவன் எந்தக்காட்டான் ?
ஏண்டா நான் தினமும் வந்து போகுமிடம் இது என்னைப்பார்த்து எனக்கும் தலைவன் என்று சொல்லிட்டியடா...
கேட்டேன் நாலு கேள்வி தன் வாழ்நாளில் மரணகாலம்வரை அவன் மறக்க மாட்டான் மன்னிக்கவும் அந்த வார்த்தைகளை இங்கு தட்டச்சு செய்ய முடியாது பிறகு கோபமாக சென்ற நான் மீண்டும் சீருந்தையும், ரசிகர் கூட்டத்தையும் பார்த்தேன் வேண்டாம் பல தெரிந்த கிறுக்குப்பயல்கள் நிற்கின்றார்கள் ஒருவேளை எனது சீருந்தை அடையாளம் தெரிந்தவர்கள் நானும் திரைப்படத்துக்கு வந்து இருக்கிறேன் என்று நினைத்து விட்டால் இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும் ? சட்டென சீருந்தை எடுத்து கட்டடத்தை விட்டு சுமார் 4580 கஜதூர அளவில் நிறுத்தி விட்டு மீண்டும் நண்பரைக் காணச் சென்றேன்.

குறிப்பு - நானும் திரைப்படம் பார்த்தவனே.. பார்க்கின்றவனே... பார்ப்பவனே... அது திரைப்படமாக இருக்கும் கில்லர்ஜி


50 கருத்துகள்:

  1. பெரும்பாலும் நம்மவர்கள் உணர்வுகளால் உந்தப்படுபவர்கள் அறிவால் அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. கட்டவுட்டுக்கு பாலாபிஷேகத்தைப் பற்றிய உங்கள் கேள்வி சரியே. துபாயில் சாலையில் நீர்-மாநகராட்சியின் பொறுப்பு என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதும் உண்மை. ஆனால், அதீத மக்கள் தொகையும், அதில் பெரும்பாலானவர்கள் கல்வி அறிவில்லாதவர்கள் என்பதாலும்தான் நம்ம ஊரில் பிரச்சனை என்று தோன்றுகிறது.

    "எனக்கும் தலைவன் என்று சொல்லிட்டயேடா" - படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, 'என்னை ஏண்டா இந்தக் கேள்வி கேட்ட' என்று கரகாட்டக்காரனில், செந்திலை கவுண்டமணி அடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

    நான் இருக்கும் ஊரில், முதல் முறையாக, மோகன்லால் படத்துக்கு பெரிய விளம்பரத் தட்டியை (கட்டவுட் மாதிரி, ஆனால் 7 அடி உயரம்) தியேட்டரில் வைத்திருந்தார்கள். அதேமாதிரி, சில ஷோக்களில் தமிழர்களின் விசில் சத்தமும் உண்டு. என்ன செய்ய, 'தமிழன் என்பது தனி இனமல்லவா?'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி
      கடைசியில் கவுண்டமணி நகைச்சுயாகி விட்டதா ? ஹா.. ஹா..

      நீக்கு
  3. அறிவுள்ள தமிழ்நாடு கெட்டது யாராலே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொண்டர்கள் என்று சொல்லித் திரியும் வெட்டிக் கூட்டத்தினராலே... நண்பரே

      நீக்கு
  4. பூ பறிக்க கோடரியா? என்று தான் கேட்டிருக்கிறீர்கள்.
    பாலாபிஷேகம் செய்யலாம்.மொத்த வியர்வையையும் இதிலேயே
    நீர் பாய்ச்சலாம்.ஆனால் (சிந்தனைக்கோடரி கொண்டு) வெட்ட வெட்ட வளரும் "இந்த நிழற்பூதங்களின்" மகசூல்களும் இங்கு நெட்டை நிழல்களே.அறிவின் வெளிச்சமே அலர்ஜியாகிப்போன தேசம் ஆகிவிட்டது.
    உங்கள் கோபம் மிக மிக நியாயமானதே.

    அன்புடன் ருத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. துளசிதரன் : உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் நீங்கள் வளைகுடா நாட்டில் இருந்ததால் அதுவும் கேரளத்தவருடன் வருடக்கணக்கில் வாழ்ந்திருப்பதால். கேரளத்தில் அரசியல் விழிப்புணர்வு அதிகம். இதையேதான் எங்கள் ப்ளாக் பதிவிலும் சொல்லியிருக்கிறேன். கேரளத்தில் அத்தனை எளிதாக மக்களை விலைக்கு வாங்க முடியாது. இங்கும் சினிமாத் துறையினர் அரசியலுக்குள் நுழைகின்றனர்தான் ஆனால் மக்கள் அத்தனை எளிதாக மயங்குவதில்லை. யாராக இருந்தாலும் எதிர்த்துக் கொடி பிடித்துவிடுவார்கள். தாக்குப்பிடிப்பது கடினம் தான்...

    கீதா: கில்லர்ஜி தமிழன் என்றாலே என்ன சொல்வார்கள்? உணர்வு பூர்வமானவர்கள் என்று சொல்லுவது உண்டு இல்லையா??!!! அதான் எல்லாத்துகுமே கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்படுவாங்க!! உணர்ச்சிவசப்படுவது தவறில்லை ஆனால் ஓவராகப் போகும் போது அறிவு மழுங்கிப் போகிறது. நம் மக்களில் பெரும்பான்மையினர் கல்வி அறிவும்- கல்வி அறிவு மட்டும் போதாது...விழிப்புணர்வும் இல்லாதவர்கள். அந்த விழிப்புணர்வு வரும் வரை மக்கள் மாயவலையிலிருந்து மீளும் வரை நாம் எதிர்பார்க்கும் எதுவும் நடக்காது ஜி. பெரும்பானமியினர் ஏழ்மையில் இருக்கின்றனர். தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? பணம் தான். இந்த ஏழ்மைக்காரர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்தால் ஓட்டு காணாமல் போய்விடுமே..அப்போது கூட இவர்கள் ஆஹா நாம் நல்லது செய்தால் மக்கள் நம் பக்கம் இருப்பார்கள் என்று அந்த அறிவு கூட இல்லை? ஏன் பணம் ஈட்ட முடியாது அதான்...மக்கள் விழிப்புணர்வு அடையாத வரை போங்க ஜி..நாளை சிற்பிகள் அதான் கட் அவுட் வைக்கிறார்கள்!!! சிற்புகள் இல்லைஅய...



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையை அழகாக சொன்னீர்கள்
      ஒருமுறை மலையாள நண்பர்களிடம் கேட்டேன் //மம்முக்கா பார்ட்டி உண்டாக்கலையா ?// என்று அதற்கு...

      ஆயாளுக்கு அபிநயம் மாத்ரமே அறியும் அது மதி. ராஷ்ட்ரியத்தினு மற்ற ஆளுகாரு உண்டு.

      இந்தியாவிலேயே தமிழன் மட்டுமே மயக்கத்திலிருந்து வெளி வரத்தயங்குகின்றான் இதுதான் எனக்கு புரியவே இல்லை.

      நீக்கு
  6. நம்மை பெற்று எடுத்து கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை கடவுளாக பார்க்காத சமுகம் திரைப்படத்தில் நல்லவானக நடிக்கும் ஒரு கெட்டவனை கடவுளாக கருதி சேவை செய்யும் நம் தமிழ் சமுகம்தான் அறிவாளிகள் நிறைந்த சமுகம் என்று நமக்கு நாமே பீத்திக் கொண்டிருக்கிறோம்... நம் மாநிலத்தை விட்டு வெளியே சென்றால் காரி துப்புகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் தொடக்கம் தொட்டு சொல்வது இந்த விடயமே அயல் தேசங்களில் தமிழனுக்கு உள்ள மரியாதை தமிழ் நாட்டை விட்டு வெளியேறிய தமிழனுக்கே தெரியும்.

      நீக்கு
    2. உண்மை கில்லர்ஜி. நாம சும்மா 'தமிழன் என்றொரு இனம்' என்று பெருமையா சொல்லிக்கலாம். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல குணங்கள் (இனம் சம்பந்தப்பட்டது) நம்மிடம் கிடையாது. இதைப் பற்றி எழுதினா நிறையபேர் வருத்தப்படுவாங்க. கேரளத்தவர்களிடம் உள்ள அரசியல் அறிவும், சமூக அறிவும், சக மலையாளிகளிடம் உள்ள அன்பும், இனத்திற்குறிய பண்டிகைகளை மதம் சாராது கொண்டாடுவதும்-குறைந்த பட்சம் அங்கீகரிப்பதும், மற்ற இனங்களின் முன், மலையாளிகள் ஒரு டீம் ஆக காணப்படும் தன்மையும் தமிழர்களிடம் கிடையாது.

      நீக்கு
    3. ஆம் நண்பரே நீங்களும் என்னைப்போல பலகாலம் அரபு நாட்டில் வசிப்பவரே என்னைப்போல் பிறமொழிக்காரனிடம் அவமானப்பட்டு இருப்பீர்கள்.

      தமிழ் நாட்டில் வசிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் கிடையாது.

      நீக்கு
    4. அங்க இருக்கறவங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கும். உதாரணமா, ஜெயலலிதா அவர்களின் சடலம் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தபோது, கேரள முதல்வர், எதிர்கட்சித் தலைவர், இன்னொரு தலைவர், கேரள கவர்னர்-தமிழர் இவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து வந்தனர். இரங்கல் செய்தியை 'நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க' என்று ஒருவருக்கொருவர் சொன்னார்கள்-கடைசியில் கவர்னர் சதாசிவம் அவர்களும் அங்கேயே இரங்கல் செய்தி சொன்னார் என்று தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம்.

      நமக்குத் தெரிந்து, தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், கவர்னர் போன்றோர் சேர்ந்து ஒரே டீமாக ஏதேனும் இடத்திற்குப் போயிருக்கிறார்களா (பிரதமரைப் பார்த்துக் கேட்க, அல்லது வேறு தமிழக நலம் சார்ந்த விஷயங்களுக்கு).

      இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

      நீக்கு
    5. அற்புதமான உண்மையை அழகாக விவரித்தீர்கள் நண்பரே

      நீக்கு
  7. திரையரங்கில் அரசியல்தலைவர்களைத் தேடுவது வேதனை நண்பரே
    கலைஞர்களை கலைஞர்களாக மட்டும் பார்க்கும் பார்வை நம் இளைஞர்களுக்கு என்று வருமோ
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது தமிழ் நாட்டு இளைஞர்களுக்குத்தான் சாபக்கேடாக இருக்கிறது.

      நீக்கு
  8. இந்த கட்டவுட் கலாச்சாரம் கூட கேரளத்தில் இல்லை என்று நினைக்கிறேன். ரசிகர்களின் எந்த வெறி, அபிலாஷை அவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறும் என்ற நம்பிக்கை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை காணும் பொழுது இன்னும் மோசமாகும் என்றே தோன்றுகிறது.

      நீக்கு
    2. nooo sriram அந்த கத்தி படத்துக்கு Jayabharat Theatre at Vadakkancherry
      பாலபிஷேகம் பண்ணும்போது ஒரு :( சரி போன உயிரை திட்டி என்ன யூஸ்
      லிங்க் https://www.thenewsminute.com/keralas/331

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  9. பெற்றவர்களின் தாகத்துக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்காத முண்டங்கள் தான் இப்படி தண்டங்களாய் பிண்டங்களாய் வெற்றுப் பண்டங்களாய்....

    .... இதுகளையும் சிந்திக்க வேண்டியதாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உங்களுக்கு தெரியாததா ? மாறுமா ? தமிழ்நாடு தேறுமா ?

      நீக்கு
    2. வாக்கு கேட்டு வருபவனிடம் இருந்து எவ்வளவு தேறும்?.. - என்று யோசிக்கின்றது தமிழகம்..

      சரி.. இருப்பதில் எதையாவது தாரும்!.. - என்று கை நீட்டுகின்றது தமிழகம்..

      இதெல்லாம் மாறும் தீரும் தேறும் என்பது முயல் கொம்பு தான்..

      நீக்கு
    3. வருக ஜி உண்மைதான் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. ஃபோட்டோ ஸூப்பர் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  11. சிறீ சிவசம்போ அங்கிளைக் கொஞ்சம் கூப்பிடுங்கோ கில்லர்ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எந்த டாஸ்மாக் கடையில வம்பு இழுத்துக்கிட்டு கிடக்குதோ...

      நீக்கு
  12. பதில்கள்
    1. நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு மன்னிக்கவும் தங்களது கருத்துரை தவறுதலாக நீக்கமாகி விட்டது மீண்டும் சாரி....

      நீக்கு
  13. தலைப்பை நாளைய கோமாளிகள் என்று வைத்திருக்கலாம் ..இந்த பேப்பருக்கு பால் ஊற்றும் ஜென்மங்களை ரூமுக்குள்ள போட்டு கண்ணையும் கையையும் காலையும் கட்டி 10 நாள் பட்டினிபோட்டு
    அதுங்க முன்னாடி பிரியாணி போடணும் ஏழைகளுக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான தண்டனை கொடுத்தீர்கள் சில ஜென்மங்களை இப்படித்தான் திருத்த வேண்டும்.

      நீக்கு
  14. தனி மனிதனைத் துதிப்பதும் வணங்குவதும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கிறது. மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் தான் இதற்கு ஓர் விடிவு காலம் வரும். அதுவும் சினிமா நடிகர்கள் சொல்வதை, அவர்கள் எழுதிக் கொடுக்கும் வசனங்களைப் பேசுவதில் அந்தக் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்களுக்கு வெறியே வந்து விடுகிறது. அதையே உண்மை என எடுத்துக் கொள்கின்றனர். சினிமா உலகமும் அரசியல் சார்புக்கு வந்தும் எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன! ஆகவே மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். என்ன செய்வது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கின்றது என்ன செய்வது முட்டாள் ஜனங்களால் எல்லா மக்களும் பாதிக்கப்படுகின்றார்களே...

      நீக்கு
  15. இதுபோன்றோரைத் திருத்த வாய்ப்பு கிடையாது என்றே நினைக்கிறேன். அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே திருடர்களின் நிலைப்பாடுதானோ.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. நடிகனை மூடத்தனமாகத் தொடரும் மாக்கள் கூட்டம். பலமுறை தில்லி நண்பர்கள் தமிழர்களின் இவ்வழக்கத்தினை கிண்டல் செய்யும்போது சமாளிக்க திணறியதுண்டு. திருந்தாத ஜென்மங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இந்நிலை தமிழ் நாட்டை விட்டு வெளியேறிய உங்களுக்கும் இருக்கும் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  17. நடிக நடிகையர் மோகம் தமிழ் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது. உங்கள் பதிவு இதை விரிவாக சொல்லியுள்ளது. இந்த நிலை எப்போது மாறுமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. ஆர். முத்துச்சாமி அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்...

      என்றாவது ஒருநாள் மாறும் என்று நம்புவோம் நண்பரே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அரசியலை பற்றி அவ்வளவாக அறிந்து கொண்டதில்லை.ஆனால் உங்கள் மனவருத்தத்தினால்,எழுந்த கோபம் நியாயமானதாக தோன்றுகிறது.மக்கள் திருந்தும் நாளை வரவேற்போம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  19. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் என் பக்கம் வந்து பாருங்க

    பதிலளிநீக்கு