தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 21, 2018

தலையடி மந்திரம்


இப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

மதுரை ரிட்டயர்டு வாத்தியார் வரதராஜன் வீடு மனைவி மாலாவின் மடியில் கிடந்தான் மகேஷ்...

ஏங்க நீங்க பேங்க் லோனுல எடுக்கிற டாக்ஸியை உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு கொடுக்கப் போறாராம் உங்க அப்பா அப்படியா ?
ஆமா அப்படித்தான்.
என்ன நொப்படித்தான் உங்க லோனுல வாங்குற டாக்ஸியை எப்படி அவருக்கு கொடுக்கலாம் ?
அதுனால என்னடி ஒங்க அண்ணன்தானே..?   
இப்படியே போனா ரெண்டு அண்ணனாகி போயிடுமே யேன் வயித்துல வளர்ற ஒம்புள்ளைக்கு என்ன சொல்றது ?
அடிக்கள்ளி இப்பவே புள்ளையப்பத்தி கவலைப்படுறியே...
இந்த நோண்டல்லாம் எங்கிட்ட வேண்டாம் கேட்டதுக்கு சொல்லு ?
அடியே நம்ம புள்ள சம்பாரிச்சு ஆட்டோ ஓட்டி எல்லோரையும், காப்பாத்துவான்டி.
யோவ் நான் நீ கார் ஓட்டணும்னு சொன்னா எம்புள்ளயவும் உன்னைப்போல ஆட்டோ ஓட்டுவான்னு சொல்றே..
என்னாச்சு ஒனக்கு எங்கம்மா ஏதும் சொல்லுச்சா ?
ஒங்கம்மாகிட்ட மனுஷி பேச முடியுமா ?
ஏண்டி ஒரு மாதிரியாவே பேசுறே...
யோவ் நேரா விசயத்துக்கு வர்றேன் வாங்குற காரை நீ ஓட்டணும் அப்படியே.. நரிமேட்டுல ஒரு வீடு வாடகைக்கு பார்த்து இருக்கேன் நாம தனிக்குடித்தனம் போறோம்.
கொஞ்சம் பொறுடி எங்கப்பாட்ட கேக்றேன்.
ஒங்கப்பன் ஒத்து வரமாட்டாரு, யேன் ஓன்லோனு பணத்துல வாங்குற காரை ஓட்டுறதுல ஒனகென்னயா கஷ்டம் ?
எனக்கு காரெல்லாம் ஓட்டத் தெரியாதுடி...
யேன் முடியாது நம்ம லிம்பு ஓட்றான், அராத்து ஓட்றான், முஷ்ருகூட ஓட்றான் நீ யேன் ஓட்டமுடியாது ? கார் ஓட்டத்தெரியாத ஒனக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி எங்க மச்சான் கில்லர்ஜி அழகா கையை விட்டுட்டு கார் ஓட்டுவாரு.
இன்னைக்கு அவங்க பூராம் ரோட்ல திரியிறாங்கடி இது வேண்டான்டி.
அப்ப நான் எங்க அம்மாட்டே போறேன்.
மாலா அடுத்த வாரம் ஒனக்கு வளைகாப்புடி.
எங்க அம்மா வீட்லயே செஞ்சுகிறலாம் நீ வந்து சாப்டுப்போ.
சொன்னாக்கேளு வேண்டாம்டி.

மகேஷ் சொல்லும் போதே பட்டுனு எந்திரிச்சு கதவைத் திறந்தவள் வராண்டாவில் பத்தமடைப்பாயை விரித்து படுத்துக் கொண்டாள் மாலா.

காணொளி

அடுத்து இதை இன்னொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி

73 கருத்துகள்:

  1. ஓ....
    அடுத்த ஜன்மத்திலயும் இதே பிரச்னை ஆரம்பமா...

    அப்போ வளைகாப்பு விருந்து உண்டா.. இல்லையா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைகாப்பு விருந்தா ஹா ஹா ஹா ஹா அந்தப் பொண்ணோட ஹஸ்பன்ட் மட்டும் தான் கூப்பிட்ட போக முடியும்...இதுல நாம எங்க....ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    2. கேட்டுட்டீங்க இல்லையா துரை அண்ணா கில்லர்ஜி பாருங்க விருந்து கொடுப்பார்....அந்தப் பொண்ணுதான் கூப்பிடலை நான் கொடுக்கேன் அப்படினு..
      ஹிஹிஹிஹி அதனால நீங்க வளைகாப்பு விருந்து கொடுக்கும் சமயம் இவரும் கொடுப்பாரோ...ஆஹா இப்பவே நாம யோசிச்சு வைக்கணும் போல இருக்கே...ரெண்டையும் அட்டென்ட் பண்ண..அது சரி ஜோடி தேம்ஸ்லருந்து வந்தாச்சா?

      கீதா

      நீக்கு
    3. வாங்க ஜி நல்ல குடும்பமாக இருந்தால் நம்மைப் போன்றவர்களையும் விருந்துக்கு அழைப்பாங்க... வர, வர இது சந்தி சிரிச்ச குடும்பமாவுல போகுது...

      இவங்க சண்டையில நமக்கு சோறு கிடைக்குமா ?

      நீக்கு
  2. இன்னும் திருந்தாத உலகம் என்றால் அது தலையணை மந்திரம் ஓதும் கூட்டம் தான் ஜீ!)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூம் பூம் மாடுகள் உள்ளவரை இப்படித்தான் நண்பரே...

      நீக்கு
  3. கில்லர்ஜீ சூப்பராக வண்டி ஓட்டுவார் ஆனால் அண்ணாசாலையில் கைநடுங்கும்)))கொழுத்திப்போடுவம்)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா....சென்னையில்...யெஸ்... அதை விட தில்லியில் ஓட்டணும்...அங்கு நம் காரை இடித்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்....நிற்கவே மாட்டார்கள்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. இரண்டு பேரும் சேர்ந்து என்னை மாட்டி விட்ருவீங்க போலயே...

      நீக்கு
  4. ஹா ஹா ஹா வாழ்க துரை அண்ணன்;) வளரட்டும் அவர் சேவை:)... குலம் வாழ கொற்றம் வாழ வாழ்த்துகிறேன்( நான் ஸ்ரீராமை ஒண்ணும் கொப்பி பண்ணல்லே:))
    .......

    முதல் வருகை தந்தோரை வாழ்த்துவோர் சங்கம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சங்கம் தொடங்கியது எப்போ ?

      நீக்கு
    2. நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ நு கத்தி கத்தி முடியலைப்பானு ஆனப்புறம் தொடங்கிய சங்கம் இல்லையா பூஸாரே!! பாருங்க கில்லர்ஜிக்குத் தெரியவே இல்லை...

      கீதா

      நீக்கு
    3. அப்படியா ? இதன் தலைவர் யாரு ?

      நீக்கு
    4. வேற யாரு பூஸாரேதான்...!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. ///எங்க மச்சான் கில்லர்ஜி அழகா கையை விட்டுட்டு கார் ஓட்டுவாரு.
    இன்னைக்கு அவங்க பூராம் ரோட்ல திரியிறாங்கடி இது வேண்டான்டி.////
    ஹா ஹா ஹா...:).

    ஆ எண்டாலும் ஊ எண்டாலும் அம்மா வீடுதானா?:) ஏன் நீங்க வீட்டால வெளிக்கிடுங்கோ என விரட்டினால் என்னவாம் கணவனை:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது வீட்டோடு மாப்பிள்ளையாய் போவோருக்கு நடக்கிறது.

      நீக்கு
  6. லிம்பு முஷ்ரு அராத்து :))) பேரே அதிரவைக்குது :)

    அந்த காணொளி டெரர் :) கடைசீ சீன பார்த்து மயக்கம் வராத குறைதான் :)
    தலையணை தலையடி அடுத்தது என்னாகப்போகுதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அடுத்து எப்படிப்பட்ட குடும்பம் வரப்போகுதோ...?

      நீக்கு
  7. தலையாட்டும் கூட்டங்களைப் பற்றி அடுத்த பதிவா?
    சொல்பவர்கள் சொன்னால் கேட்பவருக்கு எங்கே போச்சு புத்தி?
    காணொளி அருமை, முடிவு நான் நினைத்த மாதிரியே!
    சிரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நல்ல நியாயமான கேள்வி மந்திரத்துக்கு கட்டுப்பட்டு மனைவி சொல் கேட்கா விட்டால்....???

      என்னவொன்று வாழ்க்கையை இழக்க வேண்டியது வரும்.

      நீக்கு
  8. ஆஜர்...இதோ. வாசிக்கிறேன் ..
    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஏன் கில்லர்ஜி உங்களுக்கு என்னாச்சு...இந்த வெறி ஹா ஹா ஹா ஹா...ஹலோ இந்த்த் தலையனை மந்திரம்னு காலம் காலமா சொல்லப்படுது...கணவனுக்கு எங்க போச்சு மூளை....நான் நினைச்சதேதான் ஆவியானப்புறம் இல்லைனா செவ்வா கிரகத்துலயும் இதேதான் நு இல்லைனா ஏலியன் கூட்டத்துலயும் இதேதான்னு சொல்லப் போறீங்களோ....
    ஹா ஹா ஹா

    காணொளி அருமை...முடிவு தெரிந்துவிட்டது...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும்தானோ...

      உகாண்டா நாட்டு பெண்களுக்கு இப்படிப் பிரச்சனை இல்லையாமே...

      நீக்கு
  10. அந்தப் பொண்ணோட மச்சான் கில்லர்ஜி யோட என்னையும் போட்டுக்கங்க....கை எடுத்துட்டுக் கார் ஓட்டறதுக்குத்தான்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் இருப்பது நானில்லையே...

      நீக்கு
    2. காணொளியைப் பத்தி யார் சொன்னது...பதிவுல...

      கீதா

      நீக்கு
  11. அதென்ன அவுக அம்மா வூடு வூட்டு வாசலிலே கீதாக்கும்" அங்கனயே படுத்துக்கினாங்க...? அப்ப வளகாப்பு அங்கனயேதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைகாப்பு கணவன் வீட்டில் நடத்துவதுதானே முறை.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமா இப்பவே இடம் போட்டாச்சு ஹிஹிஹிஹி....துரை அண்னா வேற நடத்துவார்...அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி ஓடி...பார்க்க வேண்டி வந்துருமோ...

      கீதா

      நீக்கு
    3. குவைத் ஜி வளைகாப்பு நடத்தினால் விருந்தில் சாப்பிடலாம்.

      நம்ம கூட்டம் போக்கு சரியில்லையே... அடுத்த குடும்பம் எப்படியோ...?

      நீக்கு
  12. பெயரெல்லாம் உங்களுக்குனு கிடைக்குது பாருங்க லிம்பு, முஷ்ரு....அராத்து...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்துல நிறையபேர் இப்படி திரியிறாங்களே...

      நீக்கு
  13. ஆனாக்க அந்த தங்கச்சி சொல்றதுலயும் ஒரு ஞாயம் இருக்கு அண்ணாச்சி.... தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும் சொல்வாங்க இல்லோ.... கேள்விப்பட்டதில்லையா.. தன் குடும்பத்தைப் பாரு அண்ணாச்சி.... அத்த முன்னேத்து.... நாளக்கி பின்ன இன்னும் நாலு பேரை காப்பாத்தலாம் பாருங்க... இன்னா நான் சொல்றது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இதுவரை வந்த மூன்று தங்கைகளும் இதைத்தானே சொன்னாங்க...

      நீக்கு
    2. ஆனா கில்லர்ஜி .நானும் பலவருஷ வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவரைக்கும் வெள்ளைக்கார சிஸ்டர்ஸ் இப்படி தான் தன் குடும்பனு யோசிச்சோ இல்லை இப்படி pillow அட்வைஸ் குடுத்தோ கேள்விப்படலை .

      நீக்கு
    3. இப்பிரச்சனை நமது நாட்டுக்கு மட்டுமே!

      நீக்கு
  14. காணொளி கண்டேன்.. முதல் சில நொடிகளிலேயே - அதாவது குறிப்பிட்ட திரெட் வரும் முன்னரேயே வண்டி ஓடுவதில் ஒரு சந்தேகம் வந்தது. சரியாய்ப் போயிற்று!

    பதிலளிநீக்கு
  15. எங்கே என் கமெண்ட்ஸ் காணோம்? திருப்பி அடிக்கக் கூட முடியாதே... 3 கமெண்ட்ஸ் போட்டேனே... நான் கமெண்ட் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கீதாவோட கமெண்ட்ஸ் மட்டும் வந்திருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே... பிறகுதான் வந்தது ஆனால் நேரம் குழப்புகிறதே...

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... ஹிஹிஹிஹிஹிஹி....தக்னிக்கு!!!!

      (யப்பா இன்னா சந்தோஷம்பா இதுல!!! )

      கீதா

      நீக்கு
  16. கதையை விட கார் ஓட்டல் நன்றாக இருந்தது.
    எங்களுக்கெல்லாம் இந்த மந்திரம் தெரியாம போச்சே.
    ஹாஹா.
    கோமதி சொல்வது போல சொல்றதைக் கேட்டே ஆகணுமா என்ன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தொடர் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    ஆகா, மூன்றாவது தலைமுறையும் இப்படித்தானா? ஒரு வித்தியாசம் தலைபணையிலிருந்து தலையடியாக மாறியிருக்கிறது. இந்தமாதிரி பிடிவாதகாரங்களை திருத்தவே முடியாது போலிருக்கே!மொத்தத்தில் இந்த மாதிரி ஆண்களுக்கு "தலையிடி" மந்திரந்தான். அடுத்த கதா நாயகி கட்டாந்தரையில் படுததுக் கொள்வாளோ? ஹா ஹா. ஜோக்குக்குதான் கணிக்கிறேன். சுவாரஸ்யமாக நகர்கிறது. மந்திரங்களை விட தங்களின் எழுத்து பாணி மிகவும் நன்றாக கவர்கிறது.
    காணொளி அருமை.என்னடா இவர் கொஞ்சமும் பயமின்றி படுத்து உருண்டு கார் ஓட்டுகிரறே என எண்ணம் வரும்போது முடிவு சுவாரஸ்யம். உங்களுக்குதான் இந்த மாதிரி காணொளியெல்லாம் எப்படி கிடைக்கிறதோ!அருமை.

    அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உங்களது கணிப்பு கண்டு பிரமிப்பு வருகிறது.

      அடுத்த நாயகியாவது புருஷனை மதித்து பேசுவாள் என்று நம்புவோம் வேறென்ன செய்வது ?

      விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. காணொளியை பார்த்ததும் நடுக்கமே வந்துவிட்டது. இப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு திருச்சி-சென்னை போகும்போது பஸ்ல உள்ள ஒருவன் driver ஐ உசுபேத்தினதால ஏற்பட்டது.
    இன்னமும் கதை முடியலயா..அடுத்து வரும் குடும்பம் எப்படி இருக்கபோகுதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அடுத்த குடும்பம்
      சமூகத்தில் கௌரவமான, ஆச்சாரமான குடும்ப பெண்மணிதான்.

      நீக்கு
  19. அடுத்து புதிய கதையா... / இதன் தொடர்ச்சியா ஜி....?

    பதிலளிநீக்கு
  20. தலையணை மந்திரம் வாராவாரம் சுவாரஸ்யம் கூடுகிறது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. அரச குடும்பத்திலிருந்து ஆட்டோ ஓட்டுனர் குடும்பம் வரை ஒரே கதைதான் போல.

    சந்தடி சாக்கில் உங்கள் மச்சினி வீட்டு விஷயத்தை வெளியே சொல்லிட்டீங்களே கில்லெர்ஜீ. அவங்க கோவிச்சிக்கப்போறாங்க. எதுக்கும் அவங்கள சமாதானப்படுத்த தயாரா இருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்கு கொழுந்தியாள், மச்சினன் கிடையாது ஆகவே அந்த பயம் எனக்கு கிடையாது.

      எனது பெயரை 'கில்லர்ஜி' என்று எழுதவும் இல்லையெனில் தெய்வகுற்றமாகி விடும்.

      நீக்கு
  22. அடுத்து என்ன மந்திரமோ? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு
  23. என்ன... தலையணை மந்திரத்துல இறங்கிட்டீங்க?

    இந்தியாவைத் தவிர பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை. ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி. கல்யாணம் ஆயாச்சுன்னா, தனிக் குடும்பம்தான். பெற்றோரே, பசங்களுக்கு 18 வயசு ஆச்சுன்னா, 'டாட்டா' காண்பித்துடுவாங்க.

    காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன். நம்ம ஊருக்க்கு வந்தால் சைக்கிள்கூட ஓட்டமுடியாது போலிருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதை எழுதியே ரொம்ப காலமாகி விட்டது அதன் காரணத்தை முடிவில் சொல்வேன்.

      நானும் அறிய நமது நாட்டில் மட்டுமே மாமியார்-மருமகள் சண்டை வருகிறது.

      நீக்கு
  24. இப்படித் தொடர்ச்சியாக எழுதவும், பெயர் வைக்கவும் தங்களால்தான் முடியும் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  25. கார் போற மாதிரியே அப்படியே ஒரு ப்ளோ வா போகுது உங்க நடை . இன்னொரு கோணத்தையும் பாக்க ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதன் முந்தைய பதிவு "தலையணை மந்திரம்" படித்தீர்களா ?

      நீக்கு
  26. மிகவும் துணிச்சல் தான் அந்த வாகன ஒட்டிக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முந்தைய பதிவுகளை படித்தீர்களா ?

      நீக்கு
  27. கில்லர்ஜி இப்படித்தான் கை விட்டு கார் ஓட்டுவாரோ பெண்களே உறவுகளுக்குத் தடை என்கிறீர்களா அவர்களுக்கு என்று ஒரு மந்திரம் ஏன் கணவர்களுக்கு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கணவர்கள் மயங்குவதற்கே படைக்கப்பட்டவர்கள் மயக்கும் பக்குவம் இல்லையோ என்னவோ...

      நீக்கு
  28. வித்தியாசமான பெயர்கள். அதே சமயம் தொய்வின்றி எடுத்துச்செல்லும் பாணி. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  29. கதை நல்லாதான்ஓடுது.. எங்கிருந்து காணொளி ?!!. கதை முடவில வர்ற பத்தமடை பாய்..கில்லர்ஜி.. தப்பு தப்பா எதாவது சொல்லிடாதீங்க.பத்தமடை பொம்பளைங்க பொல்லாதவங்க! My native is pattamadai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்கள் முந்திய பதிவு படித்தீர்களா ?
      ஆஹா உள்ளூர்ககாரவுங்களா.... சொல்லவேயில்லை.

      நீக்கு
  30. வளைகாப்பே நடக்க விடமாட்டாங்க போல! அதோட எங்க பக்கமெல்லாம் பொண்ணு வீட்டில் வளைகாப்பு நடக்கும். சீமந்தம் தான் பிள்ளை வீட்டில்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் தி கிரேட் தேவகோட்டையில் மாப்பிள்ளை வீட்டில்தான் நடக்கும்.

      நீக்கு
  31. தமிழ்நாட்டில் மாமியார்-மருமகள் சண்டைன்னா வெளிநாடுகளில் மாமியார்--மருமகன் சண்டை உண்டுனு கேள்வி! :)))) மாமனார் பாவம், எந்த நாட்டில் இருந்தாலும் செல்வாக்கோ, சொல்வாக்கோ இல்லாத மனிதர்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா... மாமனார் செல்லாக்காசு என்று சொல்கிறீர்கள்.

      நீக்கு