வெள்ளி, மார்ச் 09, 2018

கண்ணங்குடி, கண்புடுங்கி கண்ணப்பன்


நான் என்ன தவறிழைத்தேன்
சொல்லடி செல்லப் பெண்ணே
என்னை அழகில்லை என்று
சொல்லி விட்டாய் கண்ணே

உன்னை மறக்க நான் உலகை
மறக்க வேண்டும் பெண்ணே
என்னை துறக்க என்றுமே எனக்கு
உடன்பாடு இல்லை கண்ணே

உன் நினைவுகளே என்னை
கொன்று விடுமோ பெண்ணே
நான் இறந்தால் கண்ணை எடுத்து
விடச்சொல்வேன் கண்ணே

அந்தக் கண்ணை ஒரு ஆணுக்கே
பொருத்தச் சொல்லி பெண்ணே
அவனை தினம் உன்னை பார்த்து
ரசிக்கச் சொல்வேன் கண்ணே

மனித அன்பை உணந்து அறிந்திட
தெரியாத அழகிய பெண்ணே
அவனையாவது நீ புரிந்து கொள்ள
முயற்சி செய்வாய் கண்ணே

நானறிவேன் உனது பதி எனது
கண்ணை பொருத்தியவனே பெண்ணே
காரணம் அவன் உறுதியாக
செல்வந்தனாகத்தான் இருப்பான் கண்ணே

என் கண்ணோடு நீ நீடூழி காலம்
வாழ்ந்து நலம் பெறுவாய் பெண்ணே
அவன் உன்னை கண்ணோடு கண்ணாக
பார்த்து கொள்வான் கண்ணே

மறுபிறவியில் எனக்கு மீண்டும்
மானிடப்பிறவி இருந்தால் பெண்ணே
நிச்சயமாய் நான் அழுக்கில்லா
அழகப்பனாக பிறந்து வருவேன் கண்ணே

அப்பொழுதாவது என்னை அன்புடனே
ஏற்றுக்கொள்வாயா பெண்ணே
மீண்டும் என்னை யாசித்தால்
கண்ணை பிடுங்கி எறிவேன் கண்ணே


சிவாதாமஸ்அலி-
நீ மறுபிறவி எடுத்து வந்து என்ன ஆயிடப்போகுது ? உன்னைப்போல கூதரைகளைத்தான்டா ஐயா அப்துல் கலாம் மேலே தேடிக்கிட்டு இருக்காரு...

51 கருத்துகள்:

 1. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)... இல்லையெனில்.... இல்லை எனில்......ஒண்ணும் பண்ண மாய்ட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா அணிக்கு நீங்க என் காதுக்கு விட்ட நுளம்பு இன்னும் குடையுது...அதான்...ஹாஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் சொல்லி மிரட்டி 1ஸ்ட்டா வர, கஸ்டப்படவேண்டிக்கிடக்கூ:)... இதுக்கு ஏன் கில்லர்ஜி பரிசு தரக்கூடாது?:)...

   நீக்கு
  3. இதுக்குத்தானே "அதிரடி அதிரா" பட்டம் கொடுத்து இருக்கிறோம்.

   நீக்கு
 2. ஆஆஆஅவ்வ்வ்வ் கில்லர்ஜி எப்போ கவிஞரானார் ?? ஜொள்ளவேயில்லையே:))).... அழகான கதை சொல்வதுபோன்ற கவிதை...

  ////உன்னை மறக்க நான் உலகை
  மறக்க வேண்டும் பெண்ணே
  என்னை துறக்க என்றுமே எனக்கு
  உடன்பாடு இல்லை கண்ணே////

  மிக அழகிய வரிகள்.... கடைசிப் படம் போடாமல் விட்டிருந்தால் மார்க்ஸ் ஐ இன்னும் கூட்டியிருப்பேன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா கில்லர்ஜி எப்பவோ கவிஞர் ஆகிட்டாரே..ஏற்கனவே கும்மி பாட்டு, நம்மள எல்லாம் போட் ல ஏத்தாம.. ஐலேசா. பாட்டு எல்லாம் பாடியிருக்காரே.. !!..

   கேதா

   நீக்கு
  2. வாங்க ஆதாரத்துக்கு திரு. கண்ணப்பன் புகைப்படம் வேண்டாமா ?

   நீக்கு
 3. கண்ணு மேலே எவ்ளோ பாசம் நேசம் :) அப்படின்னு படிச்சிட்டே வந்தா பதி செல்வந்தனில் பாதி புரிந்து அழுக்கில்லா அழகப்பனில் முழுதும் விளங்கியது ..சரி விடுங்க அந்த பொண்ணுக்கு கண்ணிருந்தும் அறிவில்லை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ இன்று கண்ணிருந்தும் குருடர்கள் சமூகத்தில் நிறைய உண்டு.

   நீக்கு
 4. ஆஜர்.....

  நல்லாருக்கு கில்லர்ஜி!.ஆனா எப்பவும் இடிக்காம முட்டாம வார்த்தைகள் உங்களுக்கு அமையும்....இந்த முறை கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு முட்டிக்கது....காரணம்....அவன் காதல் ஏற்கப்படாமல் போனதால்...வேதனையில் மூச்சு முட்டியதால் இருக்கும்!!!!!!!!!!! ..அந்தப் படம் பயமுறுத்துது...ஹாஹாஹா

  சிவதாமஸ் அலி..ஹாஹாஹாஹா போட்டார் ஒரு போடு....ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூச்சு முட்டியதாவ் வார்த்தைகள் அடைபட்டிருக்கலாம்.

   நீக்கு

 5. உண்மையான நேசிக்க தெரிந்த மனதின் புலம்பல்.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 6. நல்லா இருக்கு கவிதை. இத்தனை தியாகமும் வீணாகாமல் இருந்தால் சரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அவன்தான் மேலே போறானே அப்படினா தியாகம் மண்ணாப் போனதாகத்தானே அர்த்தம்.

   நீக்கு
 7. கவி கில்லர்ஜியின் கவிதையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. கவிஞரின் பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி

   நீக்கு
 9. உங்கள் மனம் தான் என்றும் அழகு ஜி...

  பதிலளிநீக்கு
 10. கண்ணாயி கண்ணுக்கு
  கண்ணான கண்ணப்பன்...

  நல்லவேளை..

  மதுக்குடி மன்னப்பன் என்றிருந்தால்!?...

  அந்தப் பக்கம் சலங்கைச் சாமி சுத்திக்கிட்டு இருக்குதாம்..
  நா ஓடிடுறேன்!..

  பதிலளிநீக்கு
 11. அழகில்லையென நிராகரிப்பு. அடுத்தபிறப்பில் அழகான அழகப்பனாகதானே பிறக்கவேண்டும். அழுக்கில்லா அழகப்பனாகவா...ஙே...? காதலுக்கு கண்ணில்லை.
  கவிதை நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அழுக்கில்லாதவன், அழகானவனாகத்தானே இருப்பான்.

   நீக்கு
 12. என்னைப் பொறுத்தவரை கிட்டாதாயின் வெட்டென மறத்தல்தான் சரி

  பதிலளிநீக்கு
 13. கண்ணு புடுங்குறது, நாக்கை வெட்டிக்குறதுலாம் ஓல்ட் பேஷன், இப்பலாம் ஆசிட் அடிக்குறது, தீ வச்சு கொளுத்துறது, வாயை வெட்டுறதுன்னு இப்ப இதான் பேஷன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அடியாத்தி ய்யேன்... இந்த கொலைவெறி ???

   நீக்கு
  2. காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்ண்ணே

   நீக்கு
  3. என்னால் முடியவில்லையே...

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  அருமையான கவிதை. அழகில்லை என்பதினால், மன அழுக்கான பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டும் அவள் நிராகரித்ததினால் வந்த கவியோ? காதலுக்கு என்றும் கண்ணில்லை என்பதை அவன் உணரவில்லை போலும்!பாவம்! அடுத்த பிறவியிலும் இவளே வேண்டுமென்பதற்கு இவனிடம் நல்லமனம் இருக்கிறது.அதை பரிந்து கொண்டால் வரும் பிறவியிலாவது அவள் இவனை கண் மூடி காதலிப்பாள். கவிதைக்கு பாராட்டுக்ள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 15. காதலை ஏற்காவிட்டால் இப்படி கவிதை ஆகிவிடும் என்றால் பரவாயில்லை..
  கவிதை நன்று சகோ வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 16. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

  தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

  பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

  உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

  நன்றி .
  தமிழ்அருவி திரட்டி

  பதிலளிநீக்கு
 17. அழுக்கில்லா அழகப்பனாக பிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வாழ்த்து கண்ணப்பனுக்கு பலிக்கட்டும்.

   நீக்கு
 18. மனத்தைக் கொடுத்து வந்த காதல்! கண்ணைப் பிடுங்கிக் கொ(கெ)டுத்து இறைஞ்சும் காதல்!! மறுபிறவியிலும் புனர்ஜென்மம் எடுக்குமா? நல்ல கவிதை...

  பதிலளிநீக்கு
 19. வாசகர் உள்ளம் தொட்டுச் செல்லும்
  அருமையான பாடல்

  தங்கள் கவிதை ஒன்றை எனது மின்நூலுக்கு அனுப்பி உதவுங்கள்.
  விபரமறிய: https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்கு கவிதையும் நன்றாக வருகிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 21. கவிதையை இரசித்தேன்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...