அன்பு
நெஞ்சங்களே.... நான் நகைக்கடை அதிபரானால் எப்படி விளம்பரச் செலவு இல்லாமல்
வியாபாரத்தை அமோகமாக செய்வேன் என்பதை விளக்குகிறேன்.
அதாவது
பிரபலமான அவர்கள்
பீஸ் போனவர்கள் அதனால்தான் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் என்பது எமது தனிப்பட்ட
கருத்து இதை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதும் வேறு விடயம். நடிகர் - நடிகைகளுக்கு வருடத்துக்கு
இத்தனை கோடியென ஒப்பந்தம் செய்து விளம்பரப்படம் எடுக்கும் நிறுவனங்களுக்கும் செலவு
செய்து அதை ஊடகங்களிலும் விளம்பரம் கொடுத்து அதற்கு செய்யும் செலவை நான் வேறு
வகையில் செய்வேன் காரணம் லாபத்தில் வரும் பணத்தைத்தானே இந்த பணமுதலைகள் பணக்கார
முதலைகளுக்கே கொடுக்கிறார்கள். முதலில் விபச்.... SORRY நடிகைகளை
வைத்து கடையை திறப்பதால் அதில் உள்ள நிறை?குறைகளைப் பார்ப்போம். அதாவது செய்யும்
தொழிலே தெய்வம் அதன் திறமைதான் நமது செல்வம் என்று நமது முன்னோர்கள் சொல்லித் தந்ததை
நம்புகிறோம் இல்லையா ? ஆம்
நகைக்கடைகளில் சாமி படங்கள் இல்லாத ஒரு கடையையாவது காண்பித்து விடுங்கள் முடியாது
அரபு நாடுகளில் நகைக்கடைகள் வைத்திருப்பவர்கள் கூட தங்கச்சிலையில் கடவுளை
வைத்திருக்கின்றார்களே, இதில் அனைத்து மதத்தினரும் உண்டு ஆக இவர்கள் கடவுளை
நம்புகிறார்கள் என்பது உண்மை அப்படியானால், மேலே நான் குறிப்பிட்ட பெரியோர்களின்
பொன்மொழியையும் நம்பித்தான் ஆகவேண்டும் சரியா ?
இப்படிப்பட்டவர்கள்
ஒழுக்கங்கெட்ட சிரிக்கிகளை வைத்து கடையை திறப்பது இரண்டு நிலைப்பாட்டைக்
காட்டுகிறதே... இந்த வகையில் திரைப்பட இயக்குனர் திரு. வேலு பிரபாகரன்
அவர்களின் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆம் அவரது படத்துவக்க விழாவுக்கு
பலரையும் அழைத்திருந்தாலும் குத்து விளக்கு ஏற்றுவது அவரது மனைவி மட்டுமே...
இதற்கு அவர் சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக மட்டும் கருதாமல் சிந்தித்துப்
பார்த்தால் இன்றைய மானி(ட்)டர்களின் அவலம் புரியும் ஆம்
அதாவது பெரிய இயக்குனர் என்று கணித்து யாராவது ஒருவரை அழைத்து குத்து விளக்கு
ஏற்றச் சொன்னாலும் அவரும் ஏற்றுவார் ஆனால் அவரின் மனதுக்குள் நினைப்பதென்ன ? இத்தோடு இவன் ஒழிஞ்சிடணும் ஒரு
மாதிரியாகத்தான் படம் எடுக்கிறான் நம்மளையே மிஞ்சிடுவான் போல என்று நினைத்துக்
கொண்டு விளக்கு ஏற்றுவார் விளங்குமா அந்த விளக்கு ? விளக்குங்கள் எனக்கு...
ஆனால்
பெற்ற அன்னையோ, மனைவியோ, ஒரு போதும் அப்படி நினைக்க மாட்டார்கள் என்பது உறுதிதானே
ஆகவே அவர் தனது மனைவியைத்தான் குத்து விளக்கு ஏற்றச் சொல்வார் இந்தக்கொள்கை
எனக்கும் பிடிக்கும் ஆகவே நானும் நகைக்கடை அதிபரானால் ? எனது அன்னையார் திருமதி.
மீனாம்பாள் கணபதி அவர்கள் குத்து விளக்கு ஏற்றுவார்கள், வலைப்பூ நண்பர்கள்
அனைவரும் விருந்தினர்களாக வந்து வாழ்த்துவார்கள் என்றும் அவர்களுக்கு 1 ¼ பவுனில் ஒரு மோதிரம்
பரிசளிக்கப்படும் என்பதை இன்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடுகிறேன்.
சரி
அடுத்து விளம்பரச் செலவை என்ன செய்வேன் என்று பார்ப்போமா ?
அதாவது
மொள்ளமாறிப் பயல்களுக்கும், முடிசவித்த சிரிக்கிகளுக்கும், விளம்பரத்தில் நடிப்பதற்காகவும்,
ஊடகங்களுக்கு கட்டியழும் பணத்திற்காக ஒரு வருடத்திற்கு சுமார் எட்டுகோடி ரூபாய்
செலவு ஆகிறது என்று வைத்துக் கொள்வோம் இதை இன்றைய வியாபாரிகள் கடைகளை பிரமாண்டமாய்
அலங்காரம் செய்து விலையையும் கூட்டித்தான் செலவு செய்கிறார்கள் என்பது அனைவரும்
அறிந்ததே வண்ண
விளக்குகள் போட்ட கடையில் வாங்கிய நகையும், முட்டுச்சந்தில் கரிப்பிடித்த
பட்டறையில் ஒரு ஆச்சாரி செய்து விற்கும் நகையும் ஒரே மதிப்புதான் இன்னும் சொல்லப் போனால்
அவைகள் எல்லாம் இங்கு தயாரிக்கப்பட்டே அந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் போனது
என்பதும் உண்மை. நான் வித்தியாசமாக அந்த
எட்டுக்கோடி ரூபாயையும் ஒரு வருடக்கணக்கு எடுத்து விலை குறைப்பு செய்வேன் இதன்
மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் எல்லோருமே நமது கடைக்கே வருவார்கள்.
இதில்
பலருக்கும் பல சந்தேகங்கள் முளைத்திருக்குமே ஆம் தமிழருக்கா வராது சந்தேகம் இதோ அந்த
சந்தேகங்கள்.
01. இதற்கு மற்ற நகைக்கடை
உரிமையாளர்கள் சங்கம் மூலம் எதிர்ப்பார்களே.
02. வாடிக்கையாளர்களே எதற்காக இவன்
இவ்வளவு குறைவான விலையில் விற்கிறான் ஒருவேளை சைனாவிலிருந்து நகட்டிக் கொண்டு
வந்தவனா ?
03. அரசாங்கமே ஒரு கண் வைத்து
விடும்.
04. சொந்தங்கள் ஏன்... இப்படி
கில்லர்ஜி கோவணத்துக்கு ஆசைப்படலானார் ?
இதுதானே
உங்களது சந்தேகம் ? ? ? ?
இதற்கு
முடிந்தவரை சங்கத்தை எதிர்ப்பேன் முடியாத பட்சத்தில் அடங்கிப் போய் உள் வேலையில்
இறங்கி விடுவேன் ஆம் கடையை திறக்கும் அன்று ஒரு பவுன் நகை வாங்குபவர்களுக்கு
செய்கூலி இலவசம் இரண்டு பவுன் நகை வாங்குபவர்களுக்கு ¼ பவுன் இலவசம் மூன்று பவுன் நகை
வாங்குபவர்களுக்கு ¾ பவுன்
இலவசம் மேலும் திறந்த அன்றே நகை வாங்குபவர்களுக்கு இவ்வருட அக்ஷய திரிதியன்று ஒரு
குண்டுமணி பரிசு இதெல்லாம் முன்கூட்டியே தட்டிகளில் எழுதி ஊரெல்லாம் விளம்பரம் செய்யப்படும் இது மட்டும் விளம்பரம் ஆகாதா ? என்று கேட்டு விடாதீர்கள் நன்மைகளை கருதி சில
இலக்குகளை தொட நினைத்தவர்கள் பலரும் சில விடயங்களை சகித்துக்கொண்டே
வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு.
மலத்தில் இரண்டு அரிசி
கிடக்கிறது என்பதற்காக அதை எடுத்து வந்து மீண்டும் உலையில் போட்டு விட முடியுமா ? தொலையுது மூதேவி என்று நாம் வந்து விடுவது
இல்லையா ? அதைப்போலத்தான் இதையும் நினைத்துக்
கொள்ளவேண்டும் இப்படிச் செய்யும் பொழுது
வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்து விடுவார்கள் வருபவர்களை புன்னகையுடன்
வரவேற்கும் அன்பானவர்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுவார்கள் வாடிக்கையாளரிடம்
சண்டை போட்டால் அவர்கள் வேலையிலிருந்து உடனடி நீக்கம் இதில் உள் வேளை என்னவென்றால் ? சராசரி கடையைப்போல தங்கத்தின்
விலை ஆனால் செய்கூலி சொல்லப்படும் அதேநேரம் சும்மாக்காச்சுக்கும்
வாடிக்கையாளர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் கேட்டும் விலைக்கே கொடுக்கப்படும் (அதாவது அந்த எட்டுக்கோடி
பட்ஜெட்டுக்குள் முன் கூட்டியே வரையறுக்கப்படும்)
நம்மவர்களும்
சாதாரணமானவர்களா ? நகைக்கடையிலும்
சிலபேர் கத்திரிக்காய் போல விலை கேட்கிறார்கள் இவைகளையெல்லாம் நடத்தி மக்கள்
மனதில் நியாயமான நகைக்கடைதான், தரமான நகைகள்தான் என இடம்பெற சில வருடங்கள் ஆகலாம்
அதேநேரம் நிச்சயமாக நமது லாபங்கள் (அதாவது யதார்தமான லாபங்கள்) குறையாது
ஆனால் மிகப்பெரிய பேரெடுக்கும் உங்கள் கில்லர்ஜி ஜூவல்லர்ஸ் என்பது நிதர்சனமான
உண்மை.
எல்லாம்
சரி நகைக்கடை வைக்கும் அளவுக்கு நான் வருவேனா ? என்பதுதான் எனது ஐயம்
ஒருக்கால் வரலாம் எனது சொந்த பந்தங்கள் வைத்திருக்கின்றார்கள் எனது குடும்பத்தில்
உள்ளவர்களுக்கு என்னைத் தவிர நகை வேலை தெரியும் ஆகவே வைக்கலாம். ஏன் நகைக்கடை
வைத்துதான் இப்படி செய்ய வேண்டுமா என்று கேட்கிறீர்களா ? எந்த வகையான வியாபாரத்துக்கும்
இதே கொள்கையை கடைப்பிடிக்கலாம் என்பதும் உண்மையே.
எல்லாம் சரி
கடைசியில் கடையின் பெயர்ப்பலகை கில்லர்ஜி ஜூவல்லர்ஸ் என்று இல்லாமல் ஸ்ரீராம்
ஜூவல்லர்ஸ் என்று இருக்கிறதே... என்ற ஐயம் வருகிறதா ? அதாவது இது எங்கள் பிளாக்
குரூப் என்னுடன் பொறாமை கொண்டு நான் தொடங்குவது அறிந்து, உடனே தொடங்கி
விட்டார்கள்.
தங்கமான மனசு....
பதிலளிநீக்குஇருந்தாலும் சீக்கிரமா கடையத் தொறந்து போடுங்கோ...
ஒன்னேகால் பவுன்!... ஆகா!..
வாங்க ஜி திறந்திடலாம்.
நீக்குநான் கடவுள் இயக்குநர் பாலா? சிரிக்கிகள் - சிறுக்கிகள். இன்னும் படித்து முடிக்கலை
பதிலளிநீக்குநன்றி தமிழரே மாற்றி விட்டேன்.
நீக்குதங்கமான மனிதர் என்றால் அது நீங்கள்தான். திட்டங்கள் எல்லாம் விரிவாக இருப்பதைப் பார்த்தால் கடை சீக்கிரமே திறந்து விடுவீர்கள் போலவே...... இருக்கட்டும்... என் பங்கு கால் பவுனை மட்டும் அட்வான்ஸாக இப்போதே அனுப்பி விடுங்கள்!!!!
பதிலளிநீக்குஉங்களோட சேர்ந்து பார்ட்னர்ஷிப்லதான் கடை திறக்கப்போறார் கில்லர்ஜி் (கடை பெயர் பலகை பாருங்க). எனக்கு கடை திறக்கும்வரை பொறுமையில்லை. நாளைக்கு உங்க வீட்டுப்பக்கம் வந்து முக்கால் பவுன் வாங்கிக்கவா? மீதி அரை பவுன் கடை திறந்தபிறகு. சீக்கிரம் கன்ஃபர்ம் பண்ணுங்க...
நீக்குதலைப்பில் கில்லர்ஜி ஜுவல்லர்ஸ். படத்தில் ஸ்ரீராம் ஜுவல்லர்ஸ்... குழப்பறாரே....
நீக்குவருக இருவருக்குமே இதோ வருகிறது பார்சல்.
நீக்குஅப்போ எனக்கு?:) எனக்கு ஒரு பவுண் வேணும்:)
நீக்குஒன்னேகாலே கிடைக்கும்.
நீக்குசீக்கிரம் தொடங்குங்க. சும்மா இலவசமாப் பவுன் கிடைக்குமே! காத்திருக்கேன். :))))))
பதிலளிநீக்குநல்லது சகோ உங்கள் வாக்கு பொன்னாகட்டும்
நீக்குகடைக்கு வரும் வலைபூ நண்பர்கள் அனைவருக்கும் கால் பவுன் மோதிரம் பரிசு !
பதிலளிநீக்குநல்லா இருக்கிறது இந்த திட்டம்.
தாயின் கையால் குத்து விளக்குஏற்றபட்ட கடை மேலும் மேலும் சிறப்பாய் வளரும்.
வாழ்த்துக்கள்.
வருக சகோ ஒன்னேகால் பவுன் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவிரைவில் நகைக்கடைத் தொடங்கிட வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஒரே ஒரு சந்தேகம்
வலைப் பூ நண்பர்களுக்கு 1 1/4 பவுன் மோதிரம் அன்பளிப்பு
அதென்ன 1 1/4 பவுன்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே ஒன்னேகால் பட்ஜெட்டில் வருவது நண்பரே...
நீக்குகடையின் பெயர் வைப்பதில்கூட மற்றவருக்கு மரியாதையோ? அல்லது அவர்களை சிக்கவைக்க ஒரு உத்தியோ?
பதிலளிநீக்குவருமானவரித்துறை பிரச்சனை வரும்போது பார்ட்னர் இருந்தால் சிக்கலில் வழி கிடைக்குமே...
நீக்குகில்லர்ஜி... பஹ்ரைன்ல நகைக் கடைகள் ஏராளம். ஒவ்வொரு நகையும் அரசாங்கத்தால் seal போடப்படுகிறது, அதன் தரத்துக்காக. அதனால் எப்போ எந்தக் கடைல கொடுத்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக்குவாங்க. நமக்கு செய்கூலிக்கு கொடுத்ததுதான் வீணாகும் (நகையை வாங்கும்போது)..
பதிலளிநீக்குநம்ம ஊர்ல அநியாய போட்டி காரணமாக, 22 கேரட்னு சொல்லி 20,18 என தள்ளிவிடறாங்க. சரவணா, பித்தளைல தங்கமுலாம் பூசி வித்ததும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்குள் மெழுகை அடைத்து தங்க விலைக்கு விற்றதும் செய்திகளாக வந்ததே.
கல்யாண் கோல்மால் என்பது உலகறிந்த விடயமாகி விட்டது. இருப்பினும் பிரபு, அமிதாப் தொல்லை தாங்கமுடியலை.
நீக்குகல்லாவிற்கு மேல் கோடரியை மட்டும் வைக்க மறந்து விடாதீர்கள் ஜி...
பதிலளிநீக்குஹா.... ஹா... ஹா.... ஸூப்பர் தனபாலன்.
நீக்குவாங்க ஜி அதெப்படி மறப்பேன்.
நீக்குதங்கமான மனசு உங்களுக்கு.
பதிலளிநீக்குசினிமா நடிகர்/நடிகை விளம்பரம் - வேதனை தான்.
அட பதிவர்களுக்கு இலவசமா.... இலவசம் எனக்குப் பிடிப்பதில்லை கில்லர்ஜி! ஏற்கனவே இலவசம் கொடுத்துக் கொடுத்து பலரையும் சோம்பேறிகளாக்கி இருக்கிறோம் நம் ஊரில்.
இலவசம் வேண்டாம் ஸூப்பர் ஜி
நீக்குசீக்கிரம் கடையை திறவுங்கள் சகோ.
பதிலளிநீக்குஅனைவரும் காத்திருக்கிறோம்.நியாயமான விலையில் வாங்கிக் கொள்ள தான்.
திட்டங்கள் எல்லாம் பக்காவாக இருக்கிறது.
நன்றி.
வாங்க சகோ வருகைக்கு நன்றி
நீக்குதைரியமா கடையைத் திறந்துடுங்க. என் பேரன் பேத்தி திருமணங்களுக்கு நகை வாங்க உங்க கடைக்குத்தான் வருவோம்.
பதிலளிநீக்குஆங்ங்ங் நான் தேன் கத்திரிக்கோலால கட் பண்ணி... ரிபனைச்சொன்னேன்:).. கடை திறப்பேன்ன்ன்ன்ன்ன்... கில்லர்ஜி போஸ்டர் அடியுங்கோ.. திறப்பு விழா நாயகி:)) அதிரா என ஹா ஹா ஹா:)).. பட்டம் பதவி கேட்டா எடுத்து விடுங்கோ என் பட்டங்களை:))
நீக்குவருக நண்பரே ஆதரவுக்கு நன்றி
நீக்குஅதிரா நீங்க என்ன கலர்ல பட்டம் வாங்குனீங்க ?
நீக்குஸ்ஸ்ஸ்ஸ் கடை திறக்க வர நான் ஒத்துக்கொண்டதை பெரிசா நினைக்காமல் இப்பூடிக் கிண்டல் பண்ணலாமோ கில்லர்ஜி:)) எதுக்கும் தங்கத்துக்கு நல்ல பாதுகாப்புக் குடுங்கோ இல்லை எனில் நானே கடத்திப்போடுவேன்:)) ஜாக்க்க்க்ர்ர்தை:))
நீக்குஇந்தக் கருத்துரையை போட்டோ எடுத்துக் கொண்டேன் நாளை போலீஸுக்கு உதவும்.ஏ
நீக்குதங்களின் ஆதங்கம் புரிகிறது. சீக்கிரமா நகைக்கடை துவங்குங்கள் வியாபாரம் ஆமோகம் ஆகட்டும் நடிகைகள் நடிக்க அனுமதி இல்லை நகைகள் வாங்க மட்டுமே அனுமதி போர்டு வையுங்கள்
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குஎன்னாதூஊஊஊஊஉ ஸ்ரீராம் நகைக்கடையும் வச்சிருக்கிறாரோ? ஜொள்ளவே இல்லை:) அடுத்த ஆடித்தள்ளுபடிக்கு மீ அங்குதான் போகப்போறேன்ன்:))..
பதிலளிநீக்குகில்லர்ஜி இப்போ எதுக்கு உங்களுக்கு திடீரெனப் பொன்னாசை:) வந்திருக்கு:)) ஹையோ நான் கில்லர்ஜி ஜீவலேர்ஸ் திறப்பதைச் சொன்னேன்:))
பொன்னாசைதானே... பெண்ணாசை போல ஜொள்ளு'றீங்க...
நீக்குநான் வரப்புயர:) என்பதைப்போல ஜொன்னேன்ன் அது டப்பா?:) ஹா ஹா ஹா:)
நீக்குஇன்னொன்று கில்லர்ஜி ஒரு மிசுரேக்கு இங்கின பண்ணிட்டீங்க.. ஒரு நகைக்கடையை சமீபத்தில அமலாபோல் ஒரு வெள்ளைச்சாறி கட்டியபடி திறந்தாவே.. அந்த சாறிப்படத்தைப் போட்டிருக்கலாம்ம்:)).. அதைப் பார்த்து எல்லோரும் காவேரியில குதிச்சிருப்பினம் ஹையோ ஹையோ..:))
பதிலளிநீக்குஅமலாபாலா ? அல்லது அமலா போலவா ? கொஞ்சம் விளக்குங்க 'ப்ளீச்"
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சினிமாவில அதுவும் குறிப்பா ஹீரோயின்ஸ் ஐ எல்லாம் லெஃப்ட்டூ ரைட்டூ எனக் கலக்கி வச்சிருக்கும் உங்களுக்கே பெயரில ஜந்தேகமோ?:).. நான் ஜினிமா பார்ப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே ஊரிலுள்ள சினிமாக் கதை எல்லாம் பேசும் கீசாக்கா போலவேஎ இருக்கிறீங்க:)) ஹையோ இண்டைக்கு எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்ச்:)) மீ என்பக்கம் ஓடுறேன் எனக்கு வேலை இருக்கு:).
நீக்குஎனக்கு உண்மையிலேயே அமலாபாலோடு பழக்கம் கிடையாது நம்புங்க...
நீக்குநீங்கள் எத்தனை நகைக்கடை வைத்துள்ளீர்கள் ஜி
பதிலளிநீக்குஇப்பத்தான் பிள்ளையார் சுழி போடப்போறேன் ஐயா
நீக்குகில்லர்ஜி இல்ல ஸ்ரீராம்ன்னு யார் கடை திறந்தாலும் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பும், டிஸ்கவுண்ட்டும் இருக்குல்ல!!!
பதிலளிநீக்குவாங்க சகோ உங்களுக்கு கண்டிப்பாக உண்டு.
நீக்குஅரைகுறை ஆடைதான் கடைக்கு விளம்பரமே! எங்க ஊர் பக்கம் கல்யாண் ஜுவல்லரிக்கு பிரபு கடைன்னுதான் பேரு/
பதிலளிநீக்குகல்யாண் என்றால் பிரபு, பிரபு என்றால் கல்யாண்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல அமர்க்களமான திட்டம். பெயரே பொருத்தமாக இருக்கிறதே.. (கில்லர்ஜி ஜுவல்லர்ஸ்) நகைக்கடை திறப்பு விழாவுக்கு நாங்கள் கண்டிப்பாக வருகிறோம். அங்கும் அதன் மூலமாக ஒரு பதிவர் சந்திப்பு விழா நடக்கட்டும். நாங்களும் தங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.
தங்கள் தாயாரை வைத்து விளக்கேற்றி திறப்பு விழா நடத்துவேன் என்று தாங்கள் சொன்ன அந்த தாய்ப் பாசத்தைக் கண்டு எங்களுக்கெல்லாம் ஒன்னேகால் பவுன் தங்கம் தருவேன் என்று நீங்கள் சொன்னதை விடவும் எனக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது.
நகைக்கடை திறப்பினும் தாயின் மனம் குளிர அவர்கள் ஆசியுடன் திறவுங்கள். நாங்களும் வந்து நியாயமான கடையில் நகைகள் வாங்கிய திருப்தியை அடைவோம்.
வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது கருத்துரைக்கும் ஆதரவுக்கும் நன்றி
நீக்குகடையை திறப்பதற்கு முன்னமே 1 1/4 பவுனா என்று வாய் பிளக்கிற சத்தம் கேட்கிறது நண்பரே.....
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. வருக நண்பரே...
நீக்குபத்தரை மாற்று தங்கத்தில் ஒரு மனிதரை செய்திருக்கிறது என்றால் அது நீங்கள்தான். நகை சேமிப்பு திட்டத்தை மறக்காதீர்கள். ஆவலி வெயிட்டிங் ஃபார் கில்லர்ஜி ஜூவல்லரி :)))
பதிலளிநீக்குவாங்க மேடம் விரைவில் திறப்பு விழா.
நீக்குபொன்னகை அதிபரின் பொன்னான விளம்பர வியூகங்கள் அருமை. வலைப்பதிவர்களுக்கு 1/2 பவுன் மோதிரம் கண்டிப்பாக தருவீர்கள் தானே!
பதிலளிநீக்குநிச்சயம் உண்டு நண்பரே
நீக்குதுள்சிதரன்: அட! கில்லர்ஜி நகைக்கடை திறக்கப் போறீங்களா?!! உங்க திட்டம் எல்லாம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக நம்ம ஜி நேர்மையானவர் என்பதால் உள்குத்து இருக்காது. 24 கேரட்!!!! எனவே நான் கண்டிப்பாக உங்கள் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிடுவேன். அப்படியே ஸேவிங்க்ஸ் உண்டுதானே? இப்ப மணப்புரம் கோல்ட் லோன் போல அதுவும் உண்டா உங்கள் கடையில்!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா: கில்லர்ஜி!!! பொன்நகை க்குப் பதில் புன்னகைதான். எனவே உங்களைப் பார்க்க கடை திறப்பு விழாவுக்கு எல்லாம் வருவேன். உங்களை வாழ்த்துவேன் எப்போதும். ஆனால் தங்கம் அல்லது தங்க நகை வாங்கும் பழக்கம் இல்லை. சும்மா கொடுத்தாலும் கூட!!!!!ஆனா வேறு வகைல உதவ ரெடி. டிசைன் எல்லாம் போட்டுத் தரேன்..இது எப்பூடி?!!! ஹிஹிஹிஹி....
தங்கள் இருவரது கருத்துரைக்கும் நன்றி.
நீக்கு