தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 06, 2019

அழகாகவே இருக்கிறது

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...


மனிதனின் கற்பனை வாழ்க்கை அழகாகவே இருக்கிறது
ஆனால்
நடைமுறையில்தான் அலங்கோலமாகவே காட்சி தருகிறது.

பிறருக்கு அறிவுரைகள் வழங்குவது இனிப்பாகவே இருக்கிறது
ஆனால்
தனக்கு நடைமுறை படுத்த மட்டுமே மனதுக்கு கசக்கிறது.

அரசியல்வாதிகளுக்கு நாட்டை வளப்படுத்தவே ஆசையாக இருக்கிறது
ஆனால்
பதவி சுகத்தில் அனைத்துமே மறந்து போகிறது.

திரைப்பட நடிகனாகும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது
ஆனால்
லைட்பாயாக வாழ்க்கையை கடத்துவதே நிரந்தரமாகிறது.

கழிவறையை சுத்தம் செய்ய ஜாதி தடுக்கிறது
ஆனால்
பொதுக்கழிப்பறையை ஏலம் எடுக்கவே மனது நினைக்கிறது.

முன்னாள் காதலியை கண்டு கொஞ்சி பேச மனம் துடிக்கிறது
ஆனால்
அவளது கணவனை நினைத்தால் மனம் பதைக்கிறது.

நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டுமென்று  வாய் பேசுகிறது
ஆனால்
வாக்கை விற்க இருபுறமும் பணம் வாங்க கை மட்டும் நீள்கிறது.

கொழுந்தியாளுக்கு வைரமூக்குத்தி வாங்கி கொடுக்க மனம் நினைக்கிறது
ஆனால்
வங்கியில் பணம் இல்லாதது கண்டு மனம் வேதனையில் கனக்கிறது.

சைக்கிளில் மிதித்து செல்வது உடல் நலத்துக்கு நலமாகிறது
ஆனால்
மகிழுந்தில் சென்று வருவதையே உடல் விரும்புகிறது.

காற்று நமக்கு தேவையென்று வாய் சொல்கிறது
ஆனால்
மரம் வளர்க்க மட்டும் நமக்கு வலிக்கிறது.

நாம் செல்வந்தராக வேண்டுமென்று மனம் துடிக்கிறது
ஆனால்
பிறர் வேகமாக செல்வந்தரானால் மட்டும் இடிக்கிறது.

கிரிக்கெட்டில் நுழைந்து பணமும் புகழும் பெறும் எண்ணம் இருக்கிறது
ஆனால்
அரசியல் பலமும் ஜாதி வளமும் தடுக்கிறது.

பதிவுக்கு வித்து மேற்கண்ட புகைப்படமே...

55 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

    கருத்துகள் அனைத்தும் ரசித்தேன் ஜி! கொழுந்தியாள், காதலி ஆஹா ..

    ஆமாம் சைக்கிள் இருந்தும் மகிழுந்து...எல்லாம் சரிதான் ஜி...கொழுந்தியாளுக்கும் காதலியின் விவரங்களைக் கொடுத்துட்டுப் போங்க.....காதலிக்கிட்ட கொழுந்தியாளுக்கு வைரமூக்கித்தி வாங்கிக் கொடுத்ததா சொல்லிப்புட்டா ஆச்சு!! ஹிஹிஹி! ஒரு சீரியல் தேரிடும்!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இங்க மீ தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ....கா போ வந்தவங்களுக்கு காதுல விழுந்துச்சானு தெரியலை....ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதாரிது புதுவரவு???:)

      நீக்கு
    3. தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. முதல் செய்தி பற்றி ஒரு திரைப்பப்படத்திலும் காட்டியிருப்பார்கள். ஜீவா என்று நினைவு.

    தொடரும் வரிகள் சுவாரஸ்ய நகைமுரண்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனது சிந்தனையில் உதித்து எழுதினேன்.

      திரைப்படத்தில் வந்ததை நான் அறிந்திருக்கவில்லை.

      நீக்கு
  3. கில்லர்ஜி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் மற்றவர்கள் இந்த ஆட்டத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள நினைப்பது இல்லையோ? இத்தனைக்கும் பயிற்சி மையமெல்லாம் உண்டு. இனியாவது மற்றவர்களும் பங்கு பெறும் வண்ணம் எல்லோருக்கும் இடம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா பயிற்சி மையங்கள் உண்டுதான். அதில் யார் வேண்டுமானாலும் சேரலாம்தான் ஆனால் அதற்கான செலவுகள்.....எல்லாராலும் முடியாதே.

      இங்கு மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன். கோயம்புத்தூரில் இருந்தப்ப என் மகன் பள்ளியில் கராத்தே வகுப்பு நடந்தது என் மகனையும் அதில் சேர்த்தேன். என் மகனுக்கு மைன்ட் பாடி கோஆர்டினேஷனின் அவசியமும் இருந்தது. எங்கள் இருவருக்குமே கராத்தே கலையும் பிடிக்கும். அவன் நன்றாகச் செய்வதாக கராத்தே பயிற்சியாளர் சொன்னர். கூடவே வேறொன்றும் சொன்னார். ஜாதி குறிப்பிட்டு. அதுவும் அவர் தனியாக நடத்தும் பயிற்சி வகுப்பிற்கு காலையில் 5 மணிக்கு அழைத்துவரச் சொன்னார். ஆனால் கூடவே சாதி அவர்களுக்கு இடர்பட்டது. இவனால் மேலும் தொடர்ந்து செய்ய முடியுமா என்று. எனக்கு ஒரு வைராக்கியமும் வந்தது. சாதி இதற்குக் குறுக்கீடு அல்ல மகனால் செய்ய முடியும் என்று. மாஸ்டரிடம் நான் முடியும் என்று உறுதி அளித்தேன். அதே போல் அவன் ப்ளாக் பெல்ட் இரண்டு வரை வாங்க முடிந்தது. கட்டா போடும் போட்டியில் நேஷனல் லெவல் வந்து இன்டெர்னாஷனல் போட்டிக்கு செலக்ட் ஆனான். ஆனால் நானும் கூடச் செல்ல வேண்டும் என்றதால் செலவு செய்ய முடியாது என்று செல்லவில்லை. நான் மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மற்றும் அரசுத் துறைக்கும் சென்று ஸ்பான்சர் செய்வாங்களானு முயற்சி செய்தேன் ஆனால் கராத்தேவுக்கு இல்லை என்று அப்போது சொல்லிவிட்டார்கள் ஏனென்றால் அது உலக விளையாட்டுப் போட்டிகளில் அப்போது பட்டியலில் இல்லை.

      அமெரிக்காவில் மகன் உலக அளவில் புகழ்பெற்ற மறைந்த க்ரான்ட் மாஸ்டரின் நேரடி ஸ்டூடண்டான கார்னல் வாட்சனிடம் பயிற்சியும் பெற்றான். ஃபீஸ் அதிகம் எல்லாம் கிடையாது. அங்கு அவனைச் சேர்த்துக் கொள்ள எந்த சாதியும் இடராக இல்லை.

      இப்போது அவன் ப்ரொஃபெஷன் காரணமாகத் தொடர முடியவில்லை...

      கீதா

      நீக்கு
    2. கீ.சா அவர்களுக்கு...
      தங்களது உயர்ந்த எண்ணங்களுக்கு எமது நன்றி.

      நீக்கு
    3. தில்லை அகத்தாரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  4. பதிவுக்கு வித்து மேற்கண்ட புகைப்படமேனு சொல்லி இருக்கீங்க. ஆனால் புகைப்படம் ஏதும் காணோமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலேயுள்ள தகவல்கள்தான் புகைப்படம் இது நான் தனியாக உருவாக்கிய படம்.

      நீக்கு
    2. உத்தரபிரதேசத்தில் கழிவறை சுத்தம் செய்வதிலும், ஆட்டோ, டாக்சி ஓட்டுவதிலும் பிராமணர்களே அதிகம்! அதிலும் தில்லியில் நிறைய பிராமணர்கள், அதிகம் படித்தவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் இருக்கின்றனர்.

      நீக்கு
    3. கிரிக்கெட் பார்க்கிறவங்க யாரும் ஜாதி பார்த்துக்கொண்டு ஆதரிப்பதாகத் தெரியலை! கபிலையும் ஆதரித்தார்கள். ரவி சாஸ்திரியையும் ஆதரித்தார்கள். ஆர்வம் வேண்டும். மற்ற விளையாட்டுகளில் மற்றவர்கள் இருக்காங்க தானே! அப்படி இருக்கையில் கிரிக்கெட்டில் அதிகம் பங்கெடுக்காததற்கு அவரவர் மனப்பான்மையே காரணம். அதோடு தி/கீதா சொன்னாப்போல் பயிற்சி நிலையத்துக்குச் செலவு செய்ய வேண்டியதும் ஒரு காரணம்! ஸ்பான்ஸர்கள் வேண்டும். இப்போ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வாங்கிய கோமதி பிராமணர் அல்ல. ஆனால் அவரை எல்லாருமே ஜாதி வித்தியாசம் பார்க்காமல் மனம் உவந்து பாராட்டத் தான் செய்தார்கள்! இதே போல் மாற்றுத் திறனாளியான விளையாட்டு வீரர் ஒருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன! இது அவரவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொறுத்து அமையும்.பயிற்சிக்கு யாரும் வந்து அவர்களை விரட்டினதாகத் தெரியலை!

      நீக்கு
    4. மீள் வருகை தந்து விளக்கமாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. உண்மைதான் எல்லோருக்கும் புத்திமதி சொல்வது சுலபம்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய மனிதனின் வாடிக்கையான வாழ்க்கைப் பதிவு அருமை நண்பரே,
    பிராமணர்கள் மட்டுமே கிரிக்கெட்டில் இருப்பது வருத்தமான விஷயம் தான்...

    பதிலளிநீக்கு
  7. அந்த 03 சதவிகிதம் பேர்தான தமிழால் வயிறு வளர்த்துக்கொண்டு காலைக்கதிர், தினமலர் நாளிதழ்களைப் போல தமிழை அவமதிப்பதிலும்[சிலர் விதிவிலக்கு], மூடநம்பிக்கை வளர்ப்பிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.

    கருத்து தவறானது என்றால் அன்புகொண்டு வெளியிட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை திட்டி கருத்துரை இட்டிருந்தாலும் வெளியிடுவேன்.

      நீக்கு
  8. கில்லர்ஜி... நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். ஆனாலும் விளையாட்டில் திறமை பெரிய கிரைடீரியான்னு நினைக்கறேன் திறமை இல்லாதவர்கள் யாரும் தாக்குப்பிடிக்க முடியாது.. இதே கேள்வியை இதுவரை இருந்த தமிழக முதலமைச்சர்கள் பற்றியும், கருணாநிதி உள்பட, கேட்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் யாரிடமும் கேள்வி கேட்பதில் தயங்கியதில்லை.

      நீக்கு
  9. அழகாக உங்கள் வேதனையை சொல்லியுள்ளீர்கள்.
    இதற்கு மூல காரணமான புகைபடம் பொய்யாக இருக்க வேண்டுமென ஆசை படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் உள்ள தகவல்கள் உண்மைதானே...
      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  10. எலியும் தவளையுமாக மக்களின் மனநிலை..
    தங்களால் மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்க முடியும்!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கிரிக்கெட்டில் மட்டும் இல்லை ஜி... இந்தியா முழுவதுமே மற்ற அனைத்து துறைகளிலும்...

    பதிலளிநீக்கு
  12. இப்படியிருந்திருக்கலாம்...

    கொழுந்தியாளுக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுக்க மனம் நினைக்கிறது..

    ஆனால் -

    மனைவி கையில் இருக்கும் வெட்டுக் கத்தி தடுக்கிறது...

    பதிலளிநீக்கு
  13. சாதிகளை களைய நினைக்க வேண்டும் கிரிக்கட்டில் மட்டுமல்ல அநேக துறைகளிலும் பிராம்மணர் முன்னில் இருக்கிறார்கள் அதை தடுக்கவே எல்லா துறைகளிலும் முன்னேறவகுப்பீடுகள்வழங்கப் படுகிறது சுதந்திரம்கிடைத்த நாளிலிருந்து ஆனல் பிற ஜாதியர்களின்னும் அந்த மாயையிலிருந்து விடுபட வில்லை பிராம்மணர் கள் இப்போதெல்லாம் ஜாதி பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை இட ஒதுக்கீடுகள் பெறுவோர் தங்கள் ஜாதியை முன்னேற விடுவதில்லை கிடைக்கும் சலுகைகளை தாங்களே அனுபவிக்கிறர்கள் திறமை உள்ளவன் முன்னேறுவான் எந்த சாதியானாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. காற்று நமக்கு தேவை என்று வாய் சொல்லுது, மரங்களை வளர்க்க வலிக்கிறது என்று சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.
    மரங்களை புதிதாக் நட வேண்டாம், அழிக்காமல் இருந்தால் போதும்.

    அழகர் கோவில் செல்லும் பாதை எல்லாம் மரங்கல் ழகாய் நிழல் தரும் இப்போது பாதை விரிவாக்க திட்டத்தால் மரங்களை வெட்டி விட்டார்கள்.

    வாயில் எளிதாக சொல்லும் அறிவுரை, அதை செயல்படுத்துவது கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. கொளுந்தியாளும் முன்னால் காடலியும்:) சூப்பர்:)

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    தாங்கள் எழுதியது அத்தனையும் மிக அழகாகவே இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. அழகும், விருப்பமும் செம.

    கிரிக்கெட் ஒரு குலத்தவரிடம் போய் ரொம்ப நாள் ஆச்சு

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் என்னதான் கூறினாலும் சிந்திக்கும் நிலையில் இல்லாதவரைப் பற்றி சிந்தித்து என்ன பயன் நண்பரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்தும் சரியே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. கொளுந்தியாளுக்கு வைர மூக்குத்தியா...ஐயோ வீட்டுக்கு தெரிஞ்சாஈ என்னாகும்???? நாட்டு நலன் - ல அக்கறை செலுத்துறேன்னு சொல்லிட்டு வீட்டு நலன்ல கோட்டை விட்டுடாதீங்க ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாட்டோடு, வீட்டையும் கவனிக்கணும்.

      நீக்கு
  20. கொடுத்த காசிற்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ் வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்துக் கைதட்டிவிட்டு வரலாம்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே கை தட்டுவதற்குதானே தமிழன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. கிரிகெட் அவாள் விளையாட்டு என்று மனு சாஸ்திரத்திலே எழுதி வைத்துவிட்டார்கள்.. நண்பரே!!

    பதிலளிநீக்கு