புதன், மே 01, 2019

மே தினம் மேன்மை தினமே...


.
ணக்கம் நட்பூக்களே... அனைவருக்கும் எமது இனிய மே தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக உழைப்பே உயர்வுக்கு உறுதுணை உண்மையான உழைப்பு என்றுமே நம்மை கை விடுவதில்லை.

நான் இன்றைய நொடிவரை பிறரின் உழைப்பில் வாழ்ந்ததில்லை யாருடைய உழைப்பையும் சுரண்டியதில்லை அரேபியர்களை மிக சுலபமாக ஏமாற்றி பணம் பார்த்து விடலாம் இருப்பினும் நான் இறுதிவரை அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைத்ததேயில்லை. என்னைப்போலவே என்னை சுற்றி உள்ளவர்களும் இருக்க வேண்டுமென்று நினைப்பது தவறே இருப்பினும் நான் அப்படியே நினைத்து வாழ்ந்து விட்டேன் எனது நம்பிக்கைக்கு உரிய பந்துக்கள், ரத்த உறவுகள் அனைத்துமே எனக்கு துரோகம் இழைத்து விட்டனர்.

யார் எனக்கு துரோகம் செய்யவில்லை ?

பிறமதத்து நண்பர்கள், பிறஜாதி நண்பர்கள், பிறநாட்டு நண்பர்கள், பிறமாநில நண்பர்கள், பிறமொழி நண்பர்கள் மட்டுமே...

எனது நம்பிக்கை முழுமையாக அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே எனது நேர்மையான வாழ்க்கைக்கு எனக்கு இறைவன் இப்படிப்பட்ட நட்புகளை பரிசாக தந்து இருக்கின்றான் என்றே கருதுகின்றேன்.

இந்த காரணங்களுக்குக்காகவே நான் இறுதி காலம்வரை நேர்மை தவறாமல் உண்மையான உழைப்பாளியாகவே இருப்போமென இன்றைய உழைப்பாளர் தினத்தில் உறுதிமொழி எடுக்கிறேன்.

மீண்டும் உழைப்பாளர் தின வாழ்த்துகளுடன்
தேவகோட்டை கில்லர்ஜி

44 கருத்துகள்:

 1. உழைக்கும் கைகளே...
  உருவாக்கும் கைகளே...
  உலகைப் புது முறையில்
  உண்டாக்கும் கைகளே!...

  அன்பின் இனிய மே தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களுக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்

   நீக்கு
 2. மே தின வாழ்த்துக்கள் !
  உங்கள் வருத்தங்கள் மாறி குடும்பத்தினருடன் மகிழ்ந்து இருக்க வேண்டும்.
  நட்புகளுடன் மகிழ்ந்து இருங்கள்.
  உங்கள் உறுதி மொழியும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகளும் நன்றியும்

   நீக்கு
 3. மேதின வாழ்த்துகள் கில்லர்ஜி.

  உங்கள் எண்ணம்போலவே உங்கள் வாழ்க்கை அமைய பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 4. உழைக்கும் கைகளுக்கு மே தின வாழ்த்துகள். விரைவில் உங்கள் சுற்றத்தாருடன் மனம் ஒன்றி மகிழ்வுடன் வாழவும் பிரார்த்தனைகள். உங்கள் நட்புகளுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்துரைக்கும் நன்றியும், இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகளும்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  ஆர்வத்துடன் அயராது உழைத்து வாழும் தங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். தங்களின் இன்றைய உறுதி மொழியும் அருமை. தங்கள் மனத்தாங்கல் இன்றிலிருந்து அகன்று மகிழ்ச்சி பொங்க மனமாற பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி
   இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்

   நீக்கு
 7. பதிவில் மகிழ்ந்தேன் நண்பரே,
  அழகான உறுதிமொழியில் இறுதிவரை
  உறுதியாக வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றியும், இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகளும்.

   நீக்கு
 8. இனியமேதினநல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்

   நீக்கு
 9. மே தின வாழ்த்துகள் கில்லர்ஜி...

  யாதும் ஊரே யாவரும் கேளிர்... நம்ம நன்மையை விரும்பும், நமக்குத் துரோகம் செய்ய நினைக்காத எவரும் நம் நண்பர்கள்தாம்.. நம் சொந்தங்களுக்கு நாம் செய்வது கடமைதான்.... வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் கடமையாகவே நினைத்தவன் ஆனால் பலன் நன்மை வேண்டாம் துரோகம் ஏன் ?
   இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்

   நீக்கு
 10. உழைப்பவர்க்கு என்றும் உயர்வான இடம் உண்டு. மே நாள் நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகிய கருத்துரைக்கு நன்றியும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துகளும்.

   நீக்கு
 11. உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. கில்லர்ஜி நலம்தானே? அதிராவை நினைவிருக்கோ?:).. இருக்காதே ஆனா தேம்ஸ் ஐ நினைவிருக்குமெல்லோ:)...

  நீங்க எல்லோரும் மே தினத்தைக் கொண்டாடுறீங்க ஆனா உங்களுக்கு மே தினத்துகு ஹொலிடே இல்லை உங்கட நாட்டில், ஆனா நாங்க கொண்டாடுவதெல்லாம் இல்லை, ஹொலிடே உண்டு:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே நலமே... நலமா ? நல்லவேளை பதிவுக்கு வந்தீங்க... இப்பத்தான் நினைத்தேன் ட்றம்புக்கு கால் செய்து ஸ்கோட்லாண்ட் ஏட்டய்யா நம்பர் கேட்போம்னு...

   நீக்கு
 13. எனக்கு யார் துரோகம் செய்யவில்லை என எண்ணினால் பிபி ஏறும்:).. எனக்கு யார் யாரெல்லாம் நன்மை செய்தார்கள்.. ஆறுதலாக இருந்தார்கள் எனத் தேடுங்கோ.. மனம் குளிர்ச்சியாகும்...

  பதிலளிநீக்கு
 14. சுய மரியாதையின் (Self Esteem) அடிப்படையில் அமைந்த சுய மதிப்பீடு (Self Evaluation). ஒவ்வொருவரும் இது போல சுய பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 15. நண்பரே! உழைப்பாளிகள் என்றும் சுரண்டுவதில்லை! உழைப்பாளிகளை சுரண்டுவது முதலாளிகளே!!

  பதிலளிநீக்கு
 16. தாமதமான தொழிலாளர் தின வாழ்த்துக்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 17. அன்பு தேவகோட்டை ஜி.
  என்னாளும் உழைத்து வாழ உறுதியான மனமும் கரங்களும் உங்களுக்கு உரம் கொடுக்க வாழ்த்துகளும் ஆசிகளும்.
  மனதைத் தேற்றுங்கள். நாம் மாறலாம். உலகமும் மாறும்.
  நமக்கு நாமே ஊன்றுகோல்.

  தொழிலாளர் தின நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகையும், வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 18. நானும் உங்கள் கொள்கை உடையவன்தான். நேர்மையாக இருப்போம். உழைப்போம்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி ஐயா ...உங்களை இப்பதிவின் மூலம் சந்தித்ததில் மகிழ்ச்சி....உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமிகு. ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

   நீக்கு
 20. தேவகோட்டை வரும் வேலை இருக்கிறது
  வாய்பிருந்தால் சந்திப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது தோழர் முன்பே அழைக்கவும். எனது சூழல் மாறி விட்டது.

   நீக்கு
 21. கில்லர்ஜிக்கு தாமதமான மே தின வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப அமைந்திட வாழ்த்துகள்!

  துளசிதரன், கீதா

  கீதா: கில்லர்ஜி நம்மைச் சுற்றி இருக்கும் நெகட்டிவ் மக்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு நல்ல எண்ணங்கள் உடையவர்களைப் பற்றிச் சிந்திப்போமே!! என்ன சொல்றீங்க!!! ?? எல்லோரைச் சுற்றியும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நல்லதை மட்டுமே நினைப்போம்...கெட்டதிலும் கூட நல்லது இருக்குமே அதை மட்டும் பிரித்தெடுப்போம். இல்லை என்றால் ஒதுங்கு நிற்போம்.....வாழ்க்கை ப்ளிஸ்ஃபுல்லாக ஆகும்!! சரிதானே கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...