சனி, மே 18, 2019

பாலனின் மனைவிலுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே.....
பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க ?
பதினெட்டு வருசம் ஆச்சு என்ன விசயம் திலீபன் திடீர்னு...

நான் இங்கே வந்து ஏழு வருசம் ஆச்சு எனக்குத்தெரிய நீங்க லஞ்சம் வாங்கியதே இல்லை இது எப்படி சார் சாத்தியம் ?
எனது மனைவிதான் காரணம்.

என்ன சார் மனைவிக்கு பயந்துக்கிட்டு லஞ்சம் வாங்காமல் இருக்கலாமா ? இதை எதுக்காக வீட்டுக்கு தெரியப்படுத்துறீங்க ?
திலீபன் நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... எனக்கு தேவைகள் அதிகம் இல்லை எனது மனைவி அவசியமில்லாத விசயங்களுக்கு ஆசைப்பட மாட்டாள், கொடுப்பதை வைத்து குடும்பம் நடத்துவாள், இன்றைக்கு இந்த ஆஃபீஸுலயே லஞ்சம் வாங்காத ஒரே ஆஃபிஸர்னு நான் பெயர் எடுத்து இருக்கேன்னா.... அதுக்கு எனது மனைவிதான் காரணம்.

என்ன சார் நீங்க... அப்புறம் எப்படி நாமலும் பணக்காரன் ஆவது... ?
எதுக்காக ஆகணும் ?

என்ன சார் கேள்வி இது ?
சொல்லுங்க திலீபன் எதுக்காக பணக்காரன் ஆகணும் ?

பணக்காரன் ஆனால்தானே நிறைய இடங்கள் வாங்கிப் போடலாம் ஊரு உலகம் நம்மளையும் மதிக்கும்.
இப்ப நமக்கு வீடு இல்லையா... சமூகத்துல மரியாதை இல்லையா ?

இருக்கு...... சார் இருந்தாலும்.... பெரிசா... எதிர் பார்ப்பது குற்றமில்லையே... ?
திலீபன் நான் சவால் விடுறேன் இன்றைக்கே நானும் லஞ்சம் வாங்கி நாளைமுதல் உங்களைப்போல பெயரெடுக்க முடியும், ஆனால் உங்களால என்னைப்போல லஞ்சம் வாங்காத ஆஃபிஸர்னு பெயரெடுக்க முடியுமா ?

என்ன சார்.... நீங்க... அதுசரி நீங்க மட்டும் எப்பொழுதுமே சிரிச்ச முகத்தோட இருக்கீங்களே... ஆஃபீஸுக்கு லீவும் போடுறது இல்லை இது எப்படி ?
வாங்க திலீபன் சரியான இடத்துக்கு நீங்களே வந்துட்டீங்க.... இதுக்குத்தான் நான் சுற்றி வளைத்து பேசினேன் உங்களுக்கு என்னை விட அதிகம் ப்ராபர்ட்டி இருக்கு ஐந்து வயசுல ஒரே மகன் மட்டும்தான் அதிகமாக லீவு எடுக்கறீங்க, மனைவிக்கு முடியலை, மகனுக்கு ஸ்கூல் சீட்டு வாங்கணும், பக்கத்து வீட்டுக்காரியோடு மனைவி சண்டை போட்டாள், ஆஸ்பெட்டல் போகணும், வாங்கிப்போட்ட இடத்தை ஒருத்தன் ஆக்கிரமிச்சுக்கிட்டான், வாங்கிய இடத்தில் மோடி வந்துட்டான். மோசடி செய்துட்டான், வாடகைக்கு விட்ட வீட்டை ஒருத்தன் காலி பண்ண மாட்றான் இப்படி ஏதாவது காரணத்துல லீவு எடுக்கிறீங்க.... மேனேஜர் சத்தம் போடுறாரு, அந்தக் கோபத்தை மற்ற ஸ்டாஃப்களிடம் காண்பிக்கிறீங்க, இதெல்லாம் எனக்கு இருக்கா ?

என்ன சார் இவ்வளவு சொல்றீங்க ?
முதல்ல எனது கேள்விக்கு பதில் சொல்லுங்க ?
அது வந்து...

நான் சொல்றேன் நமது ஆசைகள் கூடும் பொழுதுதான் நமக்கு பணத்தேவைகள் அதிகமாகுது என்னைப் பாருங்கள் பாரம்பரியமாக எங்கள் தாத்தா கட்டிய வீடு, பிறகு நான் சம்பாரித்து மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன். என்னாலான ஒரு இடமும் மகனுக்கு வாங்கிப்போட்டு விட்டேன் மகன் காலேஜ் முடிந்து வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான் எனது மனைவிக்கு அவசியமான நகைகள் வாங்கி கொடுத்து விட்டேன் சந்தோசமான மனைவி, மக்கள் ஆஃபீஸ் முடிந்ததும் மனைவி, மக்களோடு சந்தோசமாக பேசுவேன், விளையாடுவேன், சினிமாவுக்கு கூட்டிப் போவேன், வருசத்துக்கு ஒருமுறை சுற்றுலா போவோம் இந்த வயசுலகூட நாங்கள் வீட்டுக்குள்ளே குடும்பத்தோடு ஓடிப்பிடிச்சு விளையாடுவோம், இது பரந்த உலகம் ஆனால் இதற்குள் எனக்கென்று ஒரு சிறிய உலகம் இருக்கு எனக்கு எந்த கவலைகளும் இல்லை, எல்லோரிடமும் அன்பாக பேசுவேன் ஆகவே எனக்கு எதிரிகளும் இல்லை, நீங்க எப்பப் பார்த்தாலும் பணம் பணம்னு வேலை முடிந்ததும் அந்த பிசினஸ், கமிஷன் அது இதுனு ஓடுறீங்க... ஆனால் சந்தோசமாக வாழுறீங்களா ? இல்லைனு எனக்கு தெரியும் நான் அடுத்தவங்க பணத்துல இதுவரை வாழவில்லை இனிமேலும் இப்படித்தான் நமக்கு நமது வருமானம் எவ்வளவோ அதற்குள் வாழ்க்கையை  நடத்தப்பழக வேண்டும் லஞ்சம் வாங்குகின்றீர்களே.... யாராவது ஒரு மனுசன் சந்தோசமாக கொடுத்ததாக சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம் வயிறெரிஞ்சுதான் கொடுப்பாங்க, அதனால்தான் இன்றைக்கு பணிமிருந்தும் பலர் சிரமப்படுறாங்க இதுதான் உண்மை நியாயமாக வாழ்ந்தால் போதும் செய்வதெல்லாம் செய்துட்டு இதுல நீங்க எல்லா வருசமும் ஐயப்பன் கோயிலுக்கும் போயிட்டு வர்றீங்க.... அந்தச்செலவு பணங்கள் அனைத்துமே உங்களது உண்மையான உழைப்பா ? நான் கோயிலுக்கெல்லாம் அடிக்கடி போறது இல்லை, எப்பவாவது மனைவி அழைத்தால் போவேன் அதற்காக கடவுள் இல்லை அப்படினு சொல்ல வரலை திலீபன் நீங்க கேட்தற்காக இவ்வளவு விபரம் சொன்னேன் மற்றபடி உங்கள் மனதை காயப்படுத்த நினைக்கலை ஐயாம் வெரி ஸாரி...
இல்லை சார் எல்லாமே சரியாகத்தான் சொன்னீங்க.....

சற்று நேரம் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்

ஸார் கேட்டால் தப்பா நினைக்க மாட்டீங்களே.... ?
இல்லை கேளுங்கள் திலீபன்.

இவ்வளவு காலமும் உங்களது மனைவியை சந்தோசமாகத்தான் வைத்திருக்கோம்னு நீங்க உறுதியாக நம்புறீங்களா ?
ஆமா இதிலென்ன சந்தேகம் ?

உங்கள் மனைவியிடம் இதைப்பற்றி கேட்டு இருக்கீங்களா ?
இ....ல்லை.... ஆனால் அவ என்னோடு சந்தோசமாகத்தான் இவ்வளவு காலமும் வாழ்ந்திருக்கா...

சரி ஸார் ஏதோ கேட்கணும் தோணுச்சு அதான் இனி நானும் முயல்வேன் ஸார் உண்மையிலேயே பணம் சேரச் சேரத்தான் எனது நிம்மதி குறைஞ்சுக்கிட்டு வருது அது எனக்கும் இப்போ புரியுது.
நல்லது திலீபன்.

இருவரும் கைகளை கழுவி விட்டு மீண்டும் டேஃபிளுக்கு வந்தார்கள் பாலனுக்கு, திலீபனின் கேள்வி மனைதை குடைந்து கொண்டே இருந்தது.

நாம் செல்வியை சந்தோசமாகத்தான் வைத்திருக்கின்றோமா ? அவளிடம் இதைப்பற்றி இதுவரை கேட்கவில்லையே.... ஏன் மறந்தோம் ? ஆனால் அவள் நாம் வீட்டுக்கு போனதும் சந்தோசப்படுவாளே சிரித்த முகத்துடன் காஃபி போட்டுத்தருவாளே.... குழந்தைகளை வைத்துக்கொண்டு நம்மை காலை வாரிவிடுவதில் அவளுக்கு அலாதியான சந்தோசம் இருக்குமே... எத்தனை முறை கண்டு இருக்கின்றோம் எதற்காகவும் நம்மிடம் அவள் சலிப்பு காட்டியதில்லையே..... இதெல்லாம் நடிப்பா ? ச்சே அப்படி இருக்காது நடிக்க வேண்டிய அவசியம் மனக்குழப்பம தீர்க்க வேண்டுமே இன்றே ஏன் ? இப்பொழுதே கேட்டால் என்ன ?

மணி பார்த்தார் 3:25 pm உடன் மேலாளர் அறைக்கு சென்றவர் அவசர வேலையாக வீட்டுக்கு போகணும் இதுவரை கேட்காதவர் இன்று கேட்கின்றார் உடன் அனுமதி கிடைத்தது தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

தொடரும்...

64 கருத்துகள்:

 1. தொடரா ஆரம்பிச்சிருக்கீங்களா? எந்த மாதிரி கதை போகுதுன்னு தெரியலையே.... அவசரப்பட்டு, 'லஞ்சம் வாங்குபவனை' கஷ்டப்படுவான்னு நினைச்சா, நிஜ வாழ்வில் லஞ்சம் வாங்கி, கொள்ளை அடிப்பவனெல்லாம் ஜம்முனு இருக்கானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெல்லைத்தமிழன்:)).. கில்லர்ஜி இது உங்களுக்கே ஞாயமா இருக்கோ? இப்பூடி இந்தியாவின் நியூயோர்க்கில் எப்போது கொடுங்கோல் ஆட்சியை ஆரம்பிச்சீங்க?:)... எப்பவும் ஜாமத்திலதான் போஸ்ட்டில் கையை வைப்பீங்க இது பட்டப்பகலில் யாரும் எதிர்பாரா வேளையில் இப்பூடி பப்ளிஸ் பண்ணி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா இன்று லாஸ்ட்ட்டிலும் லாஸ்ட்:).. சரி அது போகட்டும் இதொன்றும் புதிசில்லையாக்கும் எனக்கு:))

   நீக்கு
  3. வாங்க அதிரா நீங்க காசி போயிட்டதாக ஜேம்ஸ் ஊரணியோரம் பேசிக்கிட்டாகளே...?

   நீக்கு
  4. நான் எப்பவோ போயிருப்பேன்ன்:) அஞ்சு வாறாவில்லையெல்லோ.. நான் என்ன பண்ணட்டும்:))

   நீக்கு
  5. உங்கள் மீது நம்பிக்கை இல்லையோ... என்னவோ...?

   நீக்கு
 2. "வயிரெரிஞ்சுதான் கொடுப்பாங்க" - முக்காலும் உண்மை. எல்லாக் கழுதைகளும், நாங்க எங்க மேல உள்ளவங்களுக்குக் கொடுக்கணும் என்றெல்லாம் வியாக்யானம் சொல்லுவானுங்க. அப்போ, நம்ம கிட்ட சொல்லவேண்டியதுதானே, நான் நியாயவான்... எனக்கு மேல இருக்கறவனுங்க எல்லாம் அயோக்கியனுங்க. அதுனால என் பங்கு இதுல எதுவுமே கிடையாதுன்னு, மத்தவங்க 5000 வாங்குவாங்க, என் பங்கு 1000 கழிச்சுக்கிட்டு 4000 கொடுங்க, இல்லை வேற ஆபீசரைப் பாருங்கன்னு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதுவரை கொடுத்த லஞ்சங்கள் வயிறெரிஞ்சுதான் கொடுத்து இருக்கிறேன் நண்பரே.
   யாருக்கும் வெட்கமில்லை என்ற எம்மெஸ்வியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
 3. கில்லர்ஜி...பாலனின் மனைவி ஒழுங்கா இல்லைனா (அல்லது பாலன் டாமினேட் பண்ணலைனா), லஞ்சம் வாங்காதவங்கபாடு வீட்டுல கஷ்டம். இப்போ பாத்தீங்கன்னா, அரசாங்கம் 2000 ரூபாய் தர்றேன்னு சொன்ன உடனேயே (எலெக்‌ஷனுக்கு முன்னால), ஏகப்பட்டபேர் ரேஷன் கடைக்குப் போய் காசு வாங்கினாங்க. கோவில்ல கும்பிடறதுக்குக்கூட இத்தனை கூடம் இருக்காது.

  எதுக்குச் சொல்றேன்னா..... சம்பளத்தில் குடும்பம் நடத்தணும், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழணும்னு நினைக்கறவங்களே குறைந்துகொண்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இன்று மருத்துவமனைகளில் கூட்டம், சாமியார்களின் வீட்டில் கூட்டம், இதெல்லாம் மக்கள் நல்வழி விலகுவதையே எனக்கு உணர்த்துகிறது.

   நீக்கு
 4. கில்லர்ஜி நேரம் மாறிடுச்சு போல! மாலை வணக்கம்

  இதோ வரேன் பதிவு பார்த்துவிட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில் தாங்கள் அழைத்தபோது எனது பதிவு தாமதமாவதை குறிப்பிடுவது போன்ற உணர்வு ஆகவே உடனே...

   நீக்கு
 5. அட! கதை தொடராகவா!! நல்லாருக்கு கில்லர்ஜி.

  ஹையோ இப்ப பாலன் மனதிலும் ஒரு சிறு சலனம் ஏற்பட்டுடுச்சே. என்றுமே பெர்மிஷன் கேட்காதவர் இன்று கேட்டுக் கொண்டு போகிறாரே...வீட்டில் மனைவி என்ன சொல்லப் போறாங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலனின் சலனத்துக்கு காரணம் திலீபனின் குழறுபடியான குதர்க்கமான கேள்விதானே...

   நீக்கு
 6. கண்டிப்பாக வயிறு எரிஞ்சுதான் கொடுப்பாங்க லஞ்சம் கொடுக்கறவங்க...

  பாலனின் மனைவி நல்லாத்தானே குடும்பம் நடத்தறாங்க கிடைப்பதில். அப்படிச் செய்வதுதான் சிறப்பும் கூட.

  ஆனால் ஒன்று கில்லர்ஜி மனைவிகள் ஆசைகள் இல்லாமல் நல்லவர்களாக கொண்டுவரும் பணத்தில் குடும்பம் நடத்துபவராக இருந்தாலும் கூட ஆண்களும் ஸ்டேட்டஸ், பணம் சொத்து என்று லஞ்சம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இல்லை தன் இஷ்டப்பட்டி டாமினேட் செய்து மனைவியுடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்து கடன் வாங்குவது, கடனைத் தீர்க்க அவஸ்தைப் படுவது என்ற ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன் கில்லர்ஜி.

  எப்போதுமே தவறு இருபக்கமும் உண்டு. இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "பட்டா" வாங்கணும், மின்சாரம் துண்டித்ததை திரும்ப கனெக்ட் பண்ணணும், டிரைவிங் லைசன்ஸ் வாங்கணும் என்று எதை எடுத்தாலும் இங்கு லஞ்சம் பரவி இருக்கிறது. (சொன்னா வெட்கம். நான் முதன் முதலில் பாஸ்போர்ட் வாங்கவே லஞ்சம் கொடுத்தேன். காரணம், உடனே பாஸ்போர்ட் கிடைக்கும், இல்லைனா ரொம்ப நாள் எடுப்பாங்க என்றெல்லாம் எனக்குச் சொல்லப்பட்டதால்). அவசிய தேவைகள் எதற்கும், அதிலும் அரசாங்கம் சம்பந்தப்பட்டது எதற்கும் ஒரு பைசா லஞ்சம் கல்ஃப் தேசங்களில் கிடையாது. தாமதமாக ஏதாவது நடந்தால், நாம் போய்க் கேட்டால் அதன் காரணம் சொல்லுவாங்க இல்லைனா உடனே சரி செய்துடுவாங்க.

   நான் ஒரு தடவை பணம் வங்கியில் கேஷியரிடமிருந்து வாங்கினபோது (வித்டிராயல்), அவர் கொடுத்த கட்டுகளை நான் எண்ணிச் சரிபார்க்கவில்லை (ஒவ்வொரு கட்டிலும் 100 தாள்கள் இருக்கான்னு). அதுல எனக்கு 175 தினார் (24,000 ரூபாய் அப்போ) வித்தியாசம் வந்தது. இதனை மாலையில் எக்ஸ்சேஞ் போகும்போதுதான் அவர்கள் சொல்லி எனக்குத் தெரியும். அங்கிருந்தே வங்கிக்குப் போன் பண்ணினேன். மறுநாள் காலை வரச்சொன்னார்கள். நான் என்ன பிரச்சனை என்று சொன்னதும், தனிக் கவரில் போட்டிருந்த 175 தினார் எனக்குக் கொடுத்தார்கள். டெல்லரின் தவறை ஷிஃப்ட் முடிவில் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். நம்ம ஊர்ல, கனவுலயாவது இது நடக்குமா?

   நீக்கு
  2. மனைவியிடம் ஆலோசனை கேட்டு வாழ்வைக் கடத்துபவர்கள் பெறும்பாலும் நிம்மதியாகவே வாழ்கின்றனர்.

   நீக்கு
  3. ஆம் நண்பரே இந்த நேர்மை தவறாமையின் தொடக்கமே மதம்தான். இங்கு மதம் தவறான போக்கில் புரிந்து கொள்ளப்படுகிறது

   சத்தியம் நமக்கு சர்க்கரைப் பொங்கலாகி விட்டதே... அங்கு சத்தியம் செய்ய பயம் கொள்கிறான் மேலும் மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி.

   நீக்கு
  4. கில்லர்ஜி - //தொடக்கமே மதம்தான்// - யோசித்துப் பார்த்தால் உண்மைதான். பெரும்பாலானவர்களிடம் போலி மத நம்பிக்கை இருக்கு. கடவுள் தண்டிப்பார்னு ஒரு எண்ணமே இல்லை. 20,000 லஞ்சம் வாங்கி, 200 ரூபாயை உண்டியலில் போட்டால் கடவுள், 'டீல் ஓகே' என்று சொல்லிடுவார் என்று நினைக்கிறாங்க. (உண்மையைச் சொன்னா... கடவுளை தரிசிக்கக்கூட லஞ்சம் கொடுப்பது இங்க சர்வசாதாரணம்)

   ஒரு தலித் (பொஸிஷனில் இருப்பவர்) இன்னொருவரிடம் சொன்னார்.... ஆமாம்..என் முன்னோர்களெல்லாம் கஷ்டப்பட்டு அடிமையாத்தானே இவர்கள் வச்சிருந்தாங்க, உழைப்பு ஏற்ற கூலிலாம் எங்க கொடுத்திருப்பாங்க. அதை நான் இப்போ 'லஞ்சம்' என்ற பெயரில் வசூல் செய்கிறேன் என்றார். லாஜிக் எப்படி இருக்கு பாருங்க..ஹாஹா (மத்த எல்லோருமே லஞ்சம் வாங்க சளைத்தவங்க இல்லை. இவர் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்ததால் பதிவிட்டேன்)

   நீக்கு
  5. இறைவனை தொழுவதற்கு பணம் கொடுப்பது இஸ்லாத்திலும் இல்லை, கிரிஸ்து மதத்திலும் இல்லை நண்பரே...

   ஆம் நண்பரே அவர் சொன்னதும் ஒருவகை பழி தீர்க்கும் முறைதான். இருப்பினும் நல்லாவே கதை விடப்பழகி விட்டார்கள் மக்கள்.

   நீக்கு
  6. இறைவனை தரிசிப்பதற்குப் பணமே இல்லை...

   முன்னால் நிற்க வேண்டும் என்ற வறட்டுக் கௌரவமே..

   அதையும் பழக்கி விட்டது அற நிலையத் துறை தானே!...

   நீக்கு
  7. ஆம் உண்மையே...
   மனமுருகி இறைவனை தொழுதாலும் ஏற்பார்தானே...

   நீக்கு
 7. மனைவி அமைவதெல்லாம் என்னும் பாட்டை மனை (வி)யை அமைப்பதெல்லாம் என்று மாற்றிப் பாட வேண்டி இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கருத்தும் சரியே வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. இப்போது ஆடம்பர வாழ்க்கை மிகவுமே நுழைந்துவிட்டது வீட்டிற்குள். எது முக்கியமான செலவு, எது முக்கியமற்றது என்ற பாகுபாடு இல்லாமல் அதற்குத் துணை போகும் ஊடகங்கள், மற்றும் சமூக வாழ்க்கை எல்லாமே ஒரு விதத்தில் வீட்டிலுள்ளோரை சலனப்படுத்துகிறது என்பது உண்மையும் கூட. அதாவது ஒரு சில இடங்களுக்குப் போகும் போது இது தெரிகிறது. சிம்பிளாக இருப்பவர்களிடம் பேசுபவர்கள் கூட்டம் குறைவாகவே இருப்பதையும் பார்க்க முடிகிறது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பணக்காரன் என்றால் அவனக்கு கிடைக்கும் உபசரிப்பே தனிதான். மனிதநேயத்துக்கு இடமில்லை.

   நீக்கு
 9. திலீபனின் கேள்வி சலனத்தை ஏற்படுத்த, இப்ப பாலன் வீட்டிற்குப் போவது அங்கன தான் ஏதோ விசயம் இருக்குன்னு தெரியுது...பார்ப்போம் என் கெஸ் சரியானு...நீங்க என்ன சொல்லப் போறீங்கனு...பார்க்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அவன் பொண்டாட்டி செல்வி எப்படியோ.... யாரு கண்டா ?

   நீக்கு
 10. தொடர்கதை? ஆஹா...

  திலீபன் பேச்சைக்கேட்டு பாலன் மாறாதிருக்க வேண்டுமேயென்று தோன்றுகிறது... ரெங்கா பட ரஜினி-கராத்தே மணிபோல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உடனே திரைப்படத்தோடு ஒப்பிட்டு விட்டீர்களே... ஹா... ஹா... ஹா...

   நீக்கு
 11. அழகான பதிவு , சுவாரசியாமா இருக்கு ,மனைவி சந்தோஷமா வாழ்றாளாங்கற சந்தேகம் வந்திடிச்சு...
  அடுத்தவனை போல வாழதான் பணம் தேவை,நாம் நாமாக வாழ பணம் கொஞ்சம் தான் தேவையென்பதை அழகாக சொல்லியிருக்கீங்க...
  அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லருக நண்பரே தங்களது அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 12. பாவம், பாலன், அவர் மனதிலும் சலனத்தைத் திலீபன் ஏற்படுத்தி விட்டார். பாலன் மனைவி எப்படியோ! தொடரா? தொடருங்கள். மத்தியானம் இரண்டரைக்குப் போட்டு அதுக்குள்ளே இத்தனை கருத்துப் பரிமாற்றங்கள்! நான் ஒரு மாதிரி ஊகம் செய்திருக்கேன், பார்க்கலாம், சரியா இருக்கா, இல்லையா என்பதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது யூகம் சரியெனில் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. சிறு சந்தேகம் வந்து விட்டதா...? ரைட்டு...!

  பதிலளிநீக்கு
 14. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்:) பாலனின் மனைவியின் படத்துக்குப் பக்கத்தில.. பாலனின் பெயர் தானே வரோணும்?:).. இதெப்பூடிக் கில்லர்ஜி பெயர் வரலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ எதை எதோடு ஒப்பிடுவது ? செல்விக்கு தெரிந்தால் உங்களுக்குதான் பிரச்சனை.

   நீக்கு
 15. ஹா ஹா ஹா உண்மை.. அழகாக நகருது பாலன் திலீபன் கதை.. ஆனா ஏதும் டுவிஸ்ட்டூஊஊஉ இருக்கும் என எதிர்பார்க்கிறேன் அடுத்த வாரம்:))

  பதிலளிநீக்கு
 16. அடுத்தவன் நன்றாக இருந்தால் பொறுக்காத உள்ளம் சிலருக்கு,
  கொளுத்தி போட்டு விட்டாரா திலீபன்.
  பாலன் மனதில் கேள்விகள் வந்து விட்ட்தே! நல்ல விடை கிடைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ
   உண்மை கெட்டவனுக்கு பிறரும் நம்மைப் போலவே இருக்கணும் என்று நினைப்பதே மனித இயல்பு.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  தொடர் கதையா? கதை நன்றாக போகிறது. பாலன் தன் வழியில் நிம்மதியாக இருந்தார் ஆனால் மனநிம்மதி என்பது எப்படி நேர்மையாக நடந்து கொண்டாலும் ஒருவருக்கு கிடைக்காது போலிருக்கிறது.

  மனதில் பல சலனத்தை உண்டாக்க விதி வெவ்வேறு வழிகளில் தன் திறமைகளை பயன்படுத்தி நகர்ந்து வரும் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் அன்று பார்த்து அந்தப்பேச்சே உருவாகியிருக்காது. பார்க்கலாம்.! மனைவியின் மனதில்தான் பாலனின் வரும் மற்றைய காலங்களின் சந்தோஷம் அடங்கி இருக்கிறது. நல்லபடியாக முடிந்தால் நமக்கும் மகிழ்ச்சி.. அதை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விதியின் விளையாடுதலை அழகாக விளக்கி கருத்துரை தந்தீர்கள்.

   தொடர்பவமைக்கும் நன்றி

   நீக்கு
 18. ஆஹா.. தொடர்கதையா..?

  அருமை அண்ணா..

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நல்லது நடந்தால் மகிழ்சி.

  பதிலளிநீக்கு
 20. லஞ்சத்திற்கு துணைவியாரும் ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்களோ

  பதிலளிநீக்கு
 21. நல்லவனை வாழ விடாமல் இருக்கப் பாதகம் சொல்லும் நட்புகள் இருந்தால் சலனம் வரத்தான் செய்யும்.
  பாலனின் மனைவி சந்தேகத்து அப்பால் தான் இருப்பாள்.

  நன்மையே நடக்கும் என் நம்பிக்கை,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது நம்பிக்கை வீண் போககூடாது. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. தொடர் விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், ஆவலுக்கும் நன்றி.

   நீக்கு
 23. ஐயையோ, பாலன் மனது கலங்கி விட்டதா? சகுனிகள் சாவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் நல்ல உள்ளங்களுக்கு இறுதி காலம்வரை சோதனையே....

   நீக்கு
 24. ஆகா...ஞான உபதேசம் மாதிரி இருக்கிறதே! ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னாரே....!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 25. பாலனின் உணவுக் கொள்கை தீர்க்கமானது. இது போன்ற மனிதர்கள் என்னுடன் பணியாற்றியுள்ளனர்.

  பதிலளிநீக்கு
 26. ஆடம்பரம்...

  அது ஒன்றினாலேயே
  இன்றைய மனிதன் அடிமை ஆனான்...
  அறிவை இழந்தான்...

  பதிலளிநீக்கு
 27. பாலனின் ஐயம் தீர்ந்ததா என அறிய அடுத்த பதிவை படிக்க இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...