தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 26, 2019

மூஸாலி கோயில் (7)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ந்தரத்திலிருந்து இறங்கிய தேவகோட்டை தேவையறிந்த தேவதை அம்மனைக் கண்டதும் மீண்டும் உயிர் வந்ததைப்போல் உணர்ந்தான் சிவமணி ஆஹா முகமே தெரியவில்லையே உடைகள் மட்டுமே பறக்கின்றது ஆண் முகம் போலவும் இருக்கின்றதே எப்படியோ இனி நமக்கு விடுதலை விடுதலை விடுதலை அனைவரும் நடுங்கிக் கொண்டு நின்றார்கள் தேவதை சிவமணிக்கு முன்னால் இறங்கி நின்றது சுடிதார் போன்ற உடையணிந்து எவ்வளவு அழகான முகம் தேவகோட்டை அல்லவா ஆணோ, பெண்ணோ எல்லோருமே அழகாகத்தானே இருக்கின்றார்கள் அப்படியானால் தெய்வமும் அழகாய்த்தான் இருக்கும் அதுவும் காக்கும் கடவுளாயிற்றே... கனிவான முகத்தைக் காட்டிய தேவதை சடக்கென்று திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது...


மொழுக்கியா மக்காஸி புல்லாலங்கடி
கூட்டத்தலைவன் பயந்து கொண்டே முன் வந்து மண்டியிட்டு வணங்கி....
பலாகூ... பலாகூ.. என்றான்.

ப்ரிட்டாங்கி மஸோத்தா.. பட்டுலுகூ தேவதை இப்படிச் சொன்னதுதான் தாமதம் அனைவரும் தேவதையிடம் மண்டியிட்டு...
பலாகூ... பலாகூ.. என்று சொல்லி விட்டு இடத்தைக் காலி செய்தார்கள்.

சிவமணியிடம் திரும்பிய தேவதை கையிலிருந்த மந்திரக்கோலை உயர்த்தி மிட்ஸூப்பீச்சீ என்று சொல்ல சிவமணியின் முகம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு உருமாறிக் கொண்டு வந்தது...    
தேவதை மீண்டும் தலைவன் பக்கம் திரும்பி பார்க்க..


உடன் தலைவன் எழுந்து போய் அருகிலிருந்த குட்டையில் குவளையில் கொண்டு வந்த தண்ணீரால் சிவமணியின் உடலி ஊற்றிக் குளிப்பாட்டினான் சிவமணிக்கு தண்ணீர் பட்டதும் உடலெங்கும் சிலிர்த்துக் குளித்தான் தலைவன் பக்கதிலிருந்த கொங்காளிச் செடியிருந்து பூங்களைப் பறித்து உடன் நாரைக்கொண்டு பிண்ணி மாலையாக்கி சிவமணியின் கழுத்தில் மாட்டிவிட.
சிவமணிக்கு பெருமையாக இருந்தது ஆஹா தேவதையால் நமக்கும் முதல் மரியாதை கிடைத்து விட்டதே.. மனம் ஆனந்தக் கூத்தாடியது...

தலைவன் மீண்டும் தேவதை முன் மண்டியிட்டு தலை குனிந்து நிற்க...
கொழுக்கானு மத்துஸி என்று தேவதை சொல்லவும் தலைவன் எழுந்து வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி மறைந்தான்..
சிவமணிக்கு அப்பாடா பிரச்சனை முடிந்தது தேவதைக்கு நாமும் நன்றி சொல்லி விட்டு நாம் வீட்டுக்கு போய் விடலாம்.


தேவதை சட்டென சிவமணியின் பக்கம் திரும்பி நகர்ந்து வந்தது அருகில் நின்று சிரித்த முகம் காட்டி விட்டு வானத்தை நோத்தி தலையை உயர்த்திய தேவதை புஸ்ஹாலு மந்தோங்கி என்று சொல்லி விட்டு திரும்பிய முகத்தில் வேர்கள் முளைத்த ஆலமரம் போல் விகாரமாகியது கண்டு பயந்து நடுக்கியவன் இது யாரென யோசிக்க மூட அவகாசமில்லை அதற்குள் சிவமணியை பிடித்து தூக்கி அவனது கழுத்தில் கோரப்பற்களை வைத்து கடித்ததுதான் தாமதம் சிவமணி அலறினான்..
‘’அய்யோ... ஆத்தா...’’

தொடரும்....

54 கருத்துகள்:

  1. வாவ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)).. என்னை விட ஆராவது 1ஸ்ட்டாக வந்திருந்தால்.. மூஸாலி கோயிலுக்குள் தள்ளிப் பூட்டிப் போடுவேன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் சாவி உங்களிடம் இருக்கிறது என்றால் ??? புதையல் ரகசியமும் தெரியும்தானே...?

      சி.பி.கி.பி.நா.பி. விசாரணை உங்கள்மீது வரலாம்.

      நீக்கு
  2. ////தேவகோட்டை அல்லவா ஆணோ, பெண்ணோ எல்லோருமே அழகாகத்தானே இருக்கின்றார்கள் ///
    ஹையோ என்னை விடுங்கோ மீயை ஆரும் தடுக்காதீங்கோ தடுத்தால் ஒரு கொலைகூட நடந்திடும்:)... என்னைத் தடுக்காதீங்கோ மீ தேம்ஸ்ல ஜம்ப்பாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவுக்கு ஏன் இத்தனை பொறாமை?!

      நீக்கு
    2. அதானே... உண்மையை சொன்னால் அதிராவுக்கு என்னாங்கறேன் ?

      நீக்கு
    3. அறிவுப்பசிஜி நீங்களுமா?:))

      நீக்கு
  3. ///
    மொழுக்கியா மக்காஸி புல்லாலங்கடி////
    ஹையோ ஆண்டவா கில்லர்ஜியை பல்லாங்குழி ஆடக் கூப்பிடுறா அந்த அழகுத் தேவதை அக்கா:) (ஹா ஹா ஹா பயத்தில மரியாதை வருதூ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லாங்குழியா...? அடப்பாவமே இது மகளிர் அணியின் விளையாட்டு ஆச்சே...

      நீக்கு
  4. என்னவாம் தேவதைக்கு கில்லர்ஜியின் உசுக்கி வாணாமாமாம்:) மிச்டுபிசி கேய்க்குதாமோ:) ஹையோ ஹையோ முடியல்ல முருகா...

    ஔயோ ஆத்தாவாமோ.. ஹா ஹா ஹா “மிஸ்த்ரங்கிசு பவ்மரியமி”:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி போதாதுன்னு அதிராவும் பயமுறுத்துறார். “கடஹுஸ்தி நங்ளே ஷர்க்கூ...ஷர்க்கூ!”[“கடவுளே எங்களைக் காப்பாற்று...காப்பாற்று”].

      நீக்கு
    2. பரவாயில்லை இடைக்கிடையே அதிரா டிரான்ஸ்லேட் செல்வதால் எனக்கும் மொழிகள் புரிகிறது.

      நீக்கு
    3. வருக நண்பரே கடவுளிடம் பேசும் மொழி உங்களுக்கு தெரிகிறதே...

      நீக்கு
    4. பாருங்கோ.. கில்லர்ஜி ஒரு கதை எழுதப்போய்.. எங்களுக்குள் ஒளிச்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வருது:)).. இப்பூடி எத்தனையோ பாசை தெரியுமமாக்கும் எங்களுக்கும்:)) ஆனாலும் எனக்குப் பாருங்கோ தற்பெருமை பேசுறது பிடிக்காது:)) அதனால தெரிஞ்ச பாசை எல்லாம் வெளியில சொல்றேல்லை:)) அப்போ மீ வரட்டோ போட்டு:))

      நீக்கு
    5. ஆமாம் உண்மைகள் உறங்குவதில்லை.

      நீக்கு
  5. தேவகோட்டை தெரிந்த தேவதை இவ்வளவு பயங்கரமான ஆளா?! சிக்கிக்கொண்டிருக்கும் சிவமணி பாவம்...எப்போது இந்த பய, திகில் நரகத்திலிருந்து விடுதலையோ....!

    பதிலளிநீக்கு
  6. தேவக்கோட்டை அல்லவா?....உங்கள் ஊரின் பாசம்...

    பதிலளிநீக்கு
  7. தேவதை வந்தாள் சிவமணியை காப்பாற்றுவாள் என்று நினைத்தால் இப்படி ஆச்சே!
    ஆட்டை குளிபாட்டி பொட்டு வைத்து அழகாய் அலங்கரித்து பலி கொடுப்பது போல் சிவமணியை குளிப்பாட்டி அலங்காரம் செய்தது ரத்தம் குடிக்கதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தேவதை ஏதுமில்லை.

      நீக்கு
  8. படங்கள் , அவர்கள் பேசும் மொழி பயம் கொடுக்குது.

    பதிலளிநீக்கு
  9. கடைசி வரிகள் கதிகலங்க வைத்து விட்டது..அப்புறம் என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோரப்பற்கள் கழுத்தில் பாய்ந்தால் என்னாகும் ? அடுத்து பார்ப்போம் ஐயா.

      நீக்கு
  10. சரி..
    பாம்புக்கும் கீரிக்கும் எப்போ தான் சண்டை வுடுவீங்கோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதானே ஜவ்வா.... இழு....க்கு...தே....

      நீக்கு
  11. தேவக்கோட்டை அல்லவா.ஆணோ பெண்ணோ எல்லோரும் அழகாகத்தானே இருக்கிறார்கள். என்று சொல்லி எங்களை பொறாமைப்பட வைத்தீர்கள். பின்னர் எப்படி அந்த தேவதையின் முகம் விகாரமாக மாறிற்று. ஒருவேளை அது தேவக்கோட்டையைச் சேர்ந்தது இல்லையோ? விவரம் அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடந்து கொண்டு இருந்தது உண்மையே... கடைசி தருணத்தில் காரைக்குடி ஏரியாவை சேர்ந்த துர்சக்திகளின் ஊடுறுவல் தேவதையினுள் புகுந்து இந்த தவறான செயலை செய்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.

      பார்ப்போம் அடுத்த பகுதியில்...

      நீக்கு
  12. இதென்ன புதுப் பிரச்சனை தேவதை...!?

    பலாகூ... பலாகூ... ஐயோ...!

    வாழைகூஊ... வாழைகூஊ... வேண்டாமா...?

    மாகூ... மாகூ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      புதுசு புதுசா முதல்வர்கள் வருவது போல... தேவதைகளும், சாத்தான்களும் வர்றாங்களே...

      சிவமணியின் ஜாதகத்தில் ஏதும் தோசை ஸாரி... தோஷம் இருக்குமோ ?

      நீக்கு
  13. இம்மாதிரிஎழுத மனப்பேய் குடிகொண்டிருக்க வேண்டும் தயை செய்து சிவமணியைக் காப்பாற்றுங்கள் சவ மணியாவதற்கு முன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அதற்காகத்தான் வியாழக்கிழமை தெட்சணாமூர்த்திக்கு விரதம் இருக்கிறேன். எல்லாம் நலமாகட்டும்.

      நீக்கு
  14. வரேன்,மெதுவாப் படிக்கணும். ஆனால் மிட்சுபிசி எல்லாம் வந்திருக்கு போல! :)))) தேவதையைக் காப்பாற்றணுமா, சிவமணியைக் காப்பாற்றணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஒருவேளை இவர்களின் மொழியிலிருந்துதான் மிட்சுப்பிஸி கம்பெனிக்காரன் பெயர் வைத்து இருப்பானோ...?

      நீக்கு
    2. இருக்கும், இருக்கும்.

      நீக்கு
    3. கொழுக்கானு மத்துசின்னா உப்புக் கொழுக்கட்டையா?

      நீக்கு
    4. ஐயய்யோ! தேவதைக்கும் பேய் பிடிச்சுடுச்சா என்ன? இல்லைனா பேய் தான் தேவதை வேஷத்தில் வந்ததா? சிவமணிக்கு என்ன ஆகும்? இதுக்கு அவன் முகத்தை நேர் பண்ணாமலே தேவதைப் பேய் அவன் ரத்தத்தைக் குடிச்சிருக்கலாம்.

      நீக்கு
    5. ஆஹா எல்லோருமே மொழி பெயர்ப்பாளராக இருக்கின்றீர்கள். நான்தான் முழி பிதுங்குகிறேன்.

      நீக்கு
    6. //தேவதைக்கும் பேய் பிடிச்சுடுச்சா என்ன ? இதுக்கு அவன் முகத்தை நேர் பண்ணாமலே தேவதைப் பேய் அவன் ரத்தத்தைக் குடிச்சிருக்கலாம்//


      சகோ கோமதி அரசு அவர்கள் சொன்னது போல ஆடு வெட்டப்படுவதற்கு முன் அலங்கரிப்பது இல்லையா... அதேபோல்தான்.

      நீக்கு
  15. ஆஹா,அதென்னப்ரிட்டாங்கி மஸோத்து பட்டுலுகூ? எங்க குஞ்சுப் பட்டுலுவும் இங்கே வந்திருக்கா? :)))) ப்ரிட்டாங்கினா பிரிட்டானியா மஸோத்து னா பிஸ்கட்டா? இல்லைனா மஸ்கோத்தா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்க குடும்பத்து பெரிய மனுசரும் வந்துட்டாரே...

      பிஸ்கெட் கம்பெனியும் வந்துருச்சு.

      நீக்கு
  16. தேவதையும் ரத்தம் குடிக்கவே வந்திருக்கிறாரா? நடக்கட்டும்.... இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ? என்னவெல்லாம் பேசப் போகிறார்களோ?

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாரைத்தான் நம்புவது ஒண்ணும் புரியலையே...

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இது என்ன புது குழப்பம்? தேவதை வந்து
    சிவமணியை "தேவகோட்டையாக" கட்டி விடுவிப்பாள் என்று பார்த்தால், இவ்வளவு நாட்களாக சுற்றி இருப்பவர்கள் செய்யாததை (குரல் வளையில் கோரப்பற்களை பதித்து கடிப்பது) செய்து விட்டாளே!

    இனி சிவமணியையும் பழைய மனிதனாக பார்க்க முடியாது போலிருக்கே! பேயின் கோரப்பற்களால் கடிபட்டதும் அவனும் பேயாக மாறி யாரை கடிப்பானோ? (தீடிரென வரும் தவசியையா?) படங்களும், வாயில் நுளைந்து வெளி வராமல் சிக்கித் தவிக்கும் சொற்களும் வழக்கம் போல நன்றாக இருக்கிறது.

    திகில் தொடர் எப்படியெல்லாம் மாறப் போகிறது என தெரிந்து கொள்ள ஆவலோடு அடுத்த பகுதிக்கும் காத்திருக்கிறேன்.

    நெட் படுத்ததினால் தாமத வருகை. வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ தேவதை நம்மை வதைப்பாள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

      பார்ப்போம் குரல்வளையை கடித்தால் என்னாகும் என்று...

      நீக்கு
  18. ஸலீக்கா... ஸளீக்கா.. அபய்க்கோ, அந்தராத்மீ அபய்க்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸார் இது முரட்டு மந்திரமாக இருக்கும் போலயே...

      நீக்கு
  19. நண்பர் ஒருவருக்கு தங்கள் பக்கத்தை படிக்கச் சொன்னேன்... விட்டல்ஆச்சர்யா படம் போல் இருக்கிறது என்று சொன்னார்....அப்படியா..? நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. விட்டலாச்சார்யா எனது பெரியப்பாதான் நண்பரே...

      நீக்கு