அலுவலகத்தில் வழக்கம் போல
மண்டையை காய வைத்து விட்டார்கள் வேறு யார் ? அரேபியப் பெண்கள்தான் (My Office Staff) வீட்டுக்கு வந்து
வழக்கம் போல் கணினியை திறந்து டாஸ்போர்ட்க்கு போனேன் அதிர்ச்சி பயப்படாதீர்கள் இன்ப அதிர்ச்சிதான்
அதுவும் 1400 வோட்ஸ் இருக்கும் என்று நினைக்கிறேன் அப்படி என்ன அதிர்ச்சி ?
எனது இனிய
நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்
''அன்பு நண்பரே
வணக்கம் விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்''
என்று நண்பர்
கணித்திருக்கிறார் என்றால் சரியாகத்தானே இருக்க வேண்டும் அப்படியானால் எனக்கு(ம்) தகுதி
இருக்கிறாதா ? என ஆலோசித்து கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு நண்பர் 'தளிர்' சுரேஷ்
அவர்களிடமிருந்தும் ஒரு விருது ஆஹா என்ன செய்வேன்... ஏற்கனவே காய்ந்த மண்டை
இப்பொழுது தலைகால் புரியாமல்.... இதைப்பெற சில விதிமுறைகள் கொடுத்திருந்தார்கள்.
01. விருதினை கொடுத்த தளத்தினை பகிர வேண்டும்.
(பகிர்ந்திடுவோம்)
02. விருதினை தளத்தில் பதிய வேண்டும்.
(பதிந்திடுவோம்)
03. குறைந்தது ஐந்து பேருக்கு விருதினை பகிர வேண்டும்
(பகிர்ந்திடுவோம்)
04. விருதினை பெற்ற நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டும்
(இங்கேதான் இடிக்குது
என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு ?)
வேறு வழியின்றி என்னுள்
என்னைத் தேடினேன்...
01. அம்மையப்பன் வைத்த
திருநாமம் – கில்லர்.
02. அடியேன் போட்டுக் கொண்ட
நாமம் – கில்லர்ஜி.
03. தி கிரேட்
தேவகோட்டைக்காரன் எல்லாம் தெரியாது என்றாலும் ஏதோ தெரிந்து கொண்டவன்.
04. படிப்புத்தகுதி எனது
இரு கைகளில் ஒரு கையில் உள்ள விரல்களைக்கூட முழுமையாக விரிக்க முடியாத அளவு, தற்போது
எழுத, படிக்க, தட்டச்சு செய்யத் தெரிந்த மொழிகள் ஐந்து மட்டுமே, இது மேலும்
தொடரலாம்.....
05. உங்களால் மூச்சு விடாமல்
இருக்க முடியுமா ? ஆனால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது, காரணம் தமிழ் எழுத்தே எமது
மூச்சு.. 2010-ல் வலைப்பூ தொடங்கியவன் அது தற்போதுதான் பூத்து மணம் வீசத் தொடங்கியுள்ளது...
காரணம் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்கு
06. சமூகம் என்னை உயர்வாய் மதிக்க வேண்டும் என்ற குருட்டு ஆசையால் நமது இனிய இந்தியாவை விட்டு கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பணவாசம் தேடி (U.A.E) வந்து பேராசைக் கடலில் தத்தளித்துக் கொண்டு இருட்டுக்குள் வாழ்கிறேன்... வருகிறேன் கரையை நோக்கி இன்னும் சிறிது தூரமே எனக்கு கரைகள் தென்படுகின்றன.... தொட்டு விடும் தொலைவில் எனது பொக்கிஷங்களுடன் வாழும் சூழல்.
07. என்னுள் எழுந்த எனது ஆசைகளை என்னவள் மண்ணுள் புதையும்போது இணைத்து விட்டு, எனது இரண்டு பொக்கிஷங்களுக்காக (அன்புமகன் தமிழ்வாணன் & இனியமகள் ரூபலா) ஆசையின்றி வாழ்கிறேன் நடைபிணமாக... உயிருடன்.
விருது கொடுத்து
கௌரவித்தவர்கள்
http://karanthaijayakumar.blogspot.com
http://thalirssb.blogspot.com
எனக்கும் விருது கொடுத்த நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், நண்பர் ''தளிர்'' சுரேஷ் அவர்களுக்கும், என்னை ஊக்குவித்து கருத்துரை வழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னைப் பெற்ற அன்னைக்கும், தாய்மொழி தமிழுக்கும் எனது வந்தனங்கள்.
அடுத்து நானும் நண்பர்களுக்கு
பகிர்ந்து வழங்க வேண்டுமாம்.
எனது அன்புக்குறியவர்கள்..
இதோ...
02. சகோதரி திருமதி. ஆர்.
உமையாள் காயத்ரி
03. சகோதரர் திரு. இ.பு.ஞானப்பிரகாசன்
04. சகோதரி திருமதி. கமலா
ஹரிஹரன்
05. சகோதரர் திரு. சே.குமார்
06. சகோதரி திருமதி. துளசி
ஸ்ரீநிவாஸ்
07. சகோதரர் திரு.
கிங் ராஜ்
08. சகோதரர் திரு.
வலிப்போக்கன்
09. சகோதரர் திரு. சாமானியன்
10. சகோதரர் திரு. உலகளந்த நம்பி
நன்றி... நன்றி... நன்றி..
தன்னடக்கம்
பதிலளிநீக்குதமிழ் முழக்கம்
நிறைந்த நண்பருக்கு
எனது வாழ்த்துகள்!
வாழ்த்துக்களை நன்றியுடன் ஏற்றேன் நண்பரே....
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவிருதிற்கு முற்றிலும் தகுதியானர்தான் நீங்கள்
தங்களின் கைகளால் பெற்ற விருது தகுதிக்குறியவனாக முயற்சிப்பேன் நண்பரே....
நீக்கு‘பல்திறப் புலமை விருது’ பெற்ற தங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்! தகுதியுள்ள உங்களுக்கு இந்த விருதை வழங்கிய நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! எனக்கும் இந்த விருதை கொடுத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்கு17-12-2012 ஆண்டு ‘அடையார் அஜீத்’ என அன்புடன் அழைக்கப்படும் நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் ஏற்கனவே இந்த விருதை எனக்குக் கொடுத்து சிறப்பித்திருக்கிறார்கள். இரண்டாம் முறையாக தங்களிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி!
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...
நீக்கு17-02-2012 ஆண்டு என்பதை தவறுதலாக 17-12-2012 என தட்டச்சு செய்துவிட்டேன்
பதிலளிநீக்குவிருது பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரியாரே...
நீக்குவிருதுக்கு நன்றி அண்ணா...
பதிலளிநீக்குதேவகோட்டைக்காரரான உங்கள் கையால் எனக்கொரு விருது...
மிக்க சந்தோஷம்....
அலுவலகம் கிளம்பிவிட்டேன்...
மாலை வந்து தாங்கள் சொல்லியிருக்கும் முறைப்படி விருதைப் பகிர்கிறேன் அண்ணா... நன்றி.
நன்றி நண்பரே... தொடர்வோம் நட்பில்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குவிருதினை பகிர்ந்தளித்த நல்உள்ளம் கண்டு மகிழ்கிறேன் மேலும் பல விருதுகள் வந்தடைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் ஆசையை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிப்பேன்.
நீக்குஅன்பு நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குமேலும் பல விருதுகளைப் பெற வேண்டும்!.
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...
நீக்குதமிழார்வம் வியக்க வைக்கிறது ஜீ. உங்களைப்பற்றி அறியாதவைகளை அறிந்து கொண்டேன். 5 மொழிகளில் தட்டச்சு தெரிந்ததை இவ்வளவு அடக்கமாக சொல்லும் போதே நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் ஜீ. விருது பெற்றதற்கும், அதை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஜீ...
பதிலளிநீக்குநன்றி நண்பா,,, கற்றுக்கொள்கிறேன் தங்களிடமிருந்தும்.... துளியளவு.
நீக்குஇனிய நல் வாழ்த்துக்கள் சகோதரரே!
பதிலளிநீக்குவிருந்தாகக் கிடைத்த அரிய விருதாலும் வலையுலகில் பெருகும் நட்பு!
மிக அருமை!
உங்களிடமிருந்து விருதினைப் பெறுபவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி...
நீக்குவிருது பெற்றதற்கு நிறை மனதுடன் வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குதாங்கள் விருது வழங்கும் பட்டியலில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி.
குழந்தைகளுக்காகவேனும் மனத் துயரங்களைக் குறைத்துப் புத்துணர்ச்சி பெறுங்கள் கில்லர்ஜி.
நன்றி.
தங்களின் வாழ்த்துக்களும், ஆறுதல்களும் மனதுக்கு தேறுதல் தருகிறது நண்பரே...
நீக்குஅன்பு நண்பர் கில்லர் ஜீ வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குதங்களின் எண்ணம் போல் இருக்கட்டும்.
நீக்குஹலோ! கில்லர் ஜி வாழ்த்துக்கள்! நண்பரே! தங்கள் எழுத்துக்கள் தங்களை உயர்த்தியுள்ளது! எனவே எழுதுங்கள்! எட்டாத உயரத்தைத் தொடும் அளவு!! வாழ்த்துக்கள்! நண்பரே!
பதிலளிநீக்குசொல்லப் போனால் தாங்களும் எங்கள் லிஸ்டில் இருந்தீர்கள் ....தங்களுக்குப் பகிரப்பட்டது தெரிந்ததும்....இப்படிப் பலர்...எல்லா வலை அன்பர்களுக்கும் பகிர ஆசைதான்...
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே... எனது லிஸ்டில் தாங்கள் இருந்தீர்கள். சகோதரி மைதிலி தந்து விட்டார்கள்.
நீக்கு'பன்முகப் பதிவர் விருது' பெற்ற நண்பர் கில்லர்ஜிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇதை எனக்கும் பகிர்ந்த உங்கள் நட்பு உள்ளத்துக்கு அன்பு ததும்பும் நன்றி! நீங்கள்தாம் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்!! நன்றி! மிக்க நன்றி! விரைவில் இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, இன்ன பிற நெறிமுறைகளையும் நிறைவு செய்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற கொள்கையாளன் நான். எனது சகோதரன் பெறவேண்டுமென நினைக்க மாட்டேனா ?
நீக்குமகள் பெயர் ரூபலாவா? என்ன, ராஜேஷ்குமாரின் தீவிர விசிறியோ நீங்கள்?
பதிலளிநீக்குபிடித்து விட்டீர்களே நண்பா... பாய்ண்டை ''தமிழ்வாணன்'' கூட தி கிரேட் தேவகோட்டை எழுத்தாளர் ஆயிற்றே....
நீக்குவிருதுகள் பெற்றமைக்கு மிக்க வாழ்த்துக்கள் சகோதரரே....ஆனா என்னைப்போயி வம்புக்கு இழுக்கிறீங்க பாருங்க அங்க தான் கொஞ்சம் இடிக்குது. மிக்க நன்றி எமக்கும் பகிர்ந்தமைக்கு.
பதிலளிநீக்குபகுத்துண்டு பலருக்கும் தூவுதல் நன்று.
நீக்குஎன்று சொன்னார், ஞானி ஸ்ரீபூவு அன்று.
ஞானி ‘ஸ்ரீ பூவு வேறு என்ன சொன்னார்.
பதிலளிநீக்குநிறைய சொல்லியிருக்கார் ஒவ்வொன்றாகத்தான் சொல்லச்சொன்னார் எம்மிடம், என்பதை சொல்கிறேன் உம்மிடம்.
நீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குஅதுவும் யாரோ ஒரு புண்ணியவான் கையால் விருது பெற்றதற்கு பாராட்டுக்கள்.
ஆனா, அவர் கையை விடவே மாட்டேன்னுட்டீங்களாம்!!! (அவர் என்னைய கூப்பிட்டு, உங்க நண்பரிடம் கை கொடுக்கும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக கொடுங்கள், மனுஷன், சாமானியத்துல கையை விட மாட்டாருன்னு ஒரே அட்வைஸ் மழை)
தங்களால் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்வாணன் மற்றும் ரூபலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே அரேபியர்கள் கை கொடுத்தால் குறைந்தபட்சம் 2 நிமிடமாவது கை குலுக்குவார்கள் இது அவர்களின் மரபு.
நீக்குvazhthukkal sago..aindhu mozhi arindhu thamizhil ezhudha virumbuvadhu paaraattirku uriyadhu :)
பதிலளிநீக்குஎன்ன ? சகோதரி இப்படிச்சொல்லி விட்டீர்கள் ? எனது தந்தை ஐந்து மனைவிகளை மணந்திருந்தாலும் என்னைப்பெற்ற அன்னையைத்தானே ''அம்மா'' என்றழைக்க முடியும். வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
நீக்குஇனிய நண்பரே,
பதிலளிநீக்குஇந்த பதிவின் இறுதி வரிகள் என் மனதை கணக்க வைத்துவிட்டது ! நாம் இருவருமே ஒரே படகில் தோழனே !!
எல்லா வகையில் பெருமைபடக்கூடிய தந்தையை பெறும் பாக்கியம் பெற்ற உங்கள் செல்வங்கள் நிச்சயம் சிறப்பான வாழ்வு வாழ்வார்கள்.
நன்றி
சாமானியன்
நாமிருவரும் ஒரேஜாதி என்பதை தங்களது பதிவுகளின் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கணித்திருந்தேன், எனது செல்வங்களை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...
நீக்குமுதல்முறையாக தங்களின் தளம் வந்தேன்...
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...
நண்பரின் முதல் வருகையிலேயே விருது பெற்றமைக்கு வாழ்த்து நன்றி தொடர்ந்தமைக்கு....
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குபல்திறப்புலமை விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்..! பரிசு பெற்ற விபரம் குறித்த பதிவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்..! தங்களுக்கு அவ்விருதை நல்கிய நல்ல உள்ளங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்..! தங்களுக்கு கிடைத்த அந்த விருதை, என்னையும், ஒரு பொருட்டாக தாங்கள் மதித்து எனக்கும் பகிர்ந்து கொடுத்தமைக்கு மிகுந்த நன்றிகள் சகோதரரே..! என்னைப் போல் தங்களிடமிருந்து விருதை பகிர்ந்து கொண்ட ஏனைய சகோதர, சகோதரிகளுக்கும், என் அன்பான வாழ்த்துக்கள்..! நானும் விருதை பகிர்ந்து கொண்ட மகிழ்வில் பதிவு ஒன்றை பதிந்துள்ளேன்..!
“என்னையும்” தேடி வந்த விருது…
http://kamalathuvam.blogspot.in/2014/09/blog-post_21.html
மீண்டும் நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்..
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி தங்களின் பதிவுக்கு வந்தேன் கருத்துரையிட்டேன் என்னை புகழ் மழையில் நனைத்து விட்டீர்கள் எமக்கும் தகுதியுண்டோ ? எனத் தேடித்தவிக்கின்றேன் தங்களின் பதிவு அருமை. தலைப்பை ''தேடி வந்த விருது'' எனவைத்திருக்கலாம் என்பது எமது கருத்து ''என்னையும்'' எனச்சேர்த்திருப்பது எனக்கென்னவோ... மன உறுத்தலாக இருக்கின்றது.
நீக்குதங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ. அதை தாங்கள் பகிர்ந்த அனைத்து சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇங்கு வந்து பார்த்த எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. நன்றி சகோதரரே.
சந்தோஷத்துலயே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான்.
நீக்குஇதைச்சொன்னது
கே.பாக்கியராஜ் அல்ல !
மஹாத்மா காந்தியும் அல்ல !
முதன் முதலில் சொன்னது ''பகவத்கீதை''
இதற்க்குமுன் எந்த மானிடனாவது சொல்லியிருக்க முடியுமா ?
உங்க பயோடேட்டாவை படிக்கப்படிக்க உங்க மேல மரியாதை கூடுது அண்ணா! விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! தாமதத்திற்கு இந்த தங்கையை மன்னிப்பீர்களா:(((
பதிலளிநீக்குஇதில் மன்னிப்பதற்க்கு ஒன்றுமே இல்லை பயோடேட்டாவை படித்தமைக்கு நன்றி சகோதரி இப்போது எமது தவறுகளை நீங்கள் மன்னிக்கலாமே.... இதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் அதுவும் தாங்கள் ஆசிரியர் மறக்க வேண்டாம் நன்றி.
நீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎனக்குமா...விருது... நன்றி சகோதரரே.
சகோதரியை சிறிதுகாலமாக காணவில்லையே...
நீக்குதகுதியுள்ள தங்களுக்கு விருது கொடுப்பதில் வியப்பென்ன ?
விருதுக்கு எல்லா தகுதியும் உங்களுக்கு(ம்) இருக்கு அண்ணா...
பதிலளிநீக்குஅய்யனாரே சொல்லும்போது அப்பீல் ஏது ?
நீக்குஅன்புள்ள தேவகோட்டைக்காரரே!
பதிலளிநீக்குவணக்கம். A versatile personality (பல விஷயங்களில் திறமையுள்ள தங்களுக்கு) The versatile Blogger Award கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமுடையதாகும். பாராட்டுகள்...வாழ்த்துகள்.
கர்ம வீரர் காமராஜர் கூட விரல்கள் அய்ந்தையும் விரிக்க முடியாதவர்தான்...தன்னலமில்லா செயல்வீரராக...கல்விக்கண் திறந்தவர் அல்லவா? அவரைப்போல நீங்களும் வளைத்தளத்தில் முதல்வராக வர வேண்டுகிறேன். (ஆகட்டும் பார்க்கலாம்ன்னே)
விருதுகொடுத்து திரு.கரந்தை ஜெயக்குமார் & திரு.‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா தங்களின் பெயரின் இரகசியத்தை சொல்லி வீட்டிர்களே!
தங்களுக்கு கிடைத்த ஞாயிற்றையும் (நானும் ஞாயிறும் ஒன்று) திங்களையும் பொக்கிஷங்களாக போற்றிப் பாதுகாத்திடுங்கள் தாயுமானவரே!
‘ வேலையில் இருப்பவருக்கு சும்மா இருப்பது சுகம்...
வேலை இல்லதவருக்கு சும்மா சோகம்’ -மு.மேத்தா அவர்கள் சொல்வார்கள். தாங்கள் வேலையில் இருந்தாலும் சும்மா இருக்காமல் தமிழையே சுவாசித்துக் கொண்டு... சோகத்திரையை விலக்கி சுகமாக வாழ்கிறீர்கள்.
இவையெல்லாம் சிலராலேதான் முடியும்!
தி கிரேட் தேவகோட்டையாரே...!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspsot.in
காமராஜரைப்போலவே பேசி வாழ்த்திய மணவையாருக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குungal padivai padika aagum nearathai vida pinnutam padika athika neram aaguthu g g. vaalthukal. unga eluthin suvai arumai.
பதிலளிநீக்குஆஹா இதை நான் ரசித்தேன் நண்பரே...
நீக்குஅன்பு தேவகோட்டை ஜி, விருதுகளுக்கு மனம் நிறை வாழ்த்துகள். எனக்குக்
பதிலளிநீக்குகிடைத்த விருதுகள் ப்ளாகர் விழுங்கிவிட்டது.
இந்த விருதுகளை பத்திரமாகப் பாதுகாக்கவும். இன்னும் வெகு அழகாக
எழுதி உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வணக்கம் அம்மா தவறுதலாக இது டேஷ்போர்டில் வந்து விட்ட பழைய பதிவு.
நீக்குஆஆஆஆஆஆஆ மீ த 1ஸ்ட்டாக ஓடி வந்து பார்த்து அதுக்குள் 53 கொமெண்ட்ஸாஆஆஆஆஅ என வேர்த்து விறுவிறுத்து விக்கித்துப் போய்ப் பார்த்தால் பழைய போஸ்ட்டை புரட்டிப் போட்டிருக்கிறீங்க ஏன்.. ஏன்..ஏன்ன்...?
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் மன்னிக்கவும் தவறுதலாக இது டேஷ்போர்டில் வந்து விட்ட பழைய பதிவு.
நீக்குதிரும்பிப் பார்க்கும் விருதுகள்?
பதிலளிநீக்குமன்னிக்கவும் இது பழையது
நீக்குபெற்றவரும் தகுதியானவர், தந்தவர்களும் தகுதியானவர்கள். பெற்றவருக்கு பாராட்டுகள். தந்தவர்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமன்னிக்க, தவறுதலாக வந்து விட்டது.
நீக்குதப்பாய்ப் போட்டுட்டீங்க போல! சகோதரி கமலா ஹரிஹரனை முன்னரே உங்களுக்குத் தெரிந்திருப்பது ஆச்சரியம். எனக்கு இப்போது எங்கள் ப்ளாக் மூலம் தான் அறிமுகம். நல்ல பதிவு தான். விருதுகள் பெற்ற உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்றே பார்த்தேன். தவறுதலாக வந்திருப்பதால் மறுபடியும் மாற்றி விடுவீர்களோ என நினைத்தேன். பரவாயில்லை..! மலரும் நினைவுகளை இந்த விதத்திலும் ரசிக்கலாம் இல்லையா? அந்த வாய்ப்புக்கு நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே.
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குவிருதுகளை படித்தவுடன் தெரிந்து விட்டது பழைய பதிவு என்று.
பதிலளிநீக்குஇருந்தாலும் மிக அருமையான பதிவு.
விருது பெற்ற உங்களுக்கும், விருதுபெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு விடயத்தை சரி செய்தபோது தவறுதலாக வெளியாகி விட்டது மன்னிக்கவும்.
நீக்குதட்டச்சு செய்ய ஐந்து மொழிகள் தெரியும்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு.
குழந்தைகளுடன் இப்போது மகிழ்ச்சியாக் உங்கள் பொழுதுகள் போகும்.
இன்னும் கொஞ்ச நாளில் பேரன் பேத்திகளுடன் மேலும் மகிழ்வாய் இருக்க வாழ்த்துக்கள்.
தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குகடைசிப் படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், 'இப்போ அழகுக்கு என்ன குறைச்சல்' என்று சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.
பதிலளிநீக்குவிருதுக்கு பாராட்டுகள்.
சிறிய குழப்பத்தால் வெளியான பழைய பதிவு பலரும் வந்து படித்ததில் மகிழ்ச்சி.
நீக்குமீண்டும் துவங்கிவிட்டதா விருத்து கொடுப்பதும் பெறுவதும் வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஐயா பழைய பதிவு மீண்டும் தவறுதலாக வந்து விட்டது மன்னிக்கவும்.
நீக்குவிருதுக்கு தாங்கள் கொடுத்து விளக்கம் மிகச் சிறப்பு ஐயா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
மிக்க நன்றி சகோ
நீக்குநானும் டாஷ் போர்ட் பார்த்து இப்போதான் வந்தேன் :)
பதிலளிநீக்குபழைய பதிவா இருந்தாலும் அதை இப்போ தெரியாம பகிர்ந்தாலும் நல்லதே .நாம எல்லாருமே நல்ல நினைவுகளை recap செய்ய இவை உதவும் ..
வருக சகோ மிக்க நன்றி
நீக்குThanks For Sharing The Amazing content. I Will also share with my
பதிலளிநீக்குfriends. Great Content thanks a lot.
positive thinking stories tamil
வருக நண்பரே பகிர்தலுக்கு நன்றி.
நீக்கு