தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 05, 2020

தமிழனின் நிலை


மிழன் தமிழ் நாட்டில் உழைத்து பிழைப்பதற்கு இப்படி வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவனின் படங்களை தனது செலவில் போட்டு வைத்து பிழைக்க வேண்டியது இருக்கிறது இது தமிழனுக்கு அவமானில்லையா ? இவன் மட்டுமில்லை பல கூத்தாடிகளின் புகைப்படமும் இருக்கிறது. இதே தமிழனின் புகைப்படத்தை வெளி மாநிலங்களில் போட இயலுமா ? இதை தமிழன் சிந்திக்க மறுக்கிறான். தமிழ் நாட்டில் வந்தவனை எல்லாம் வளர்த்து விடுவதில் மதுரைக்காரர்கள்தான் முன்னிலையானவர்கள்.

மதுரையில் எந்த திசைகளுக்கு சென்றாலும் சரி சுவர்களில் சுவரொட்டிகளை காணலாம் இன்று ப்ளக்ஸ் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் ஊரில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் அதற்கும் வாழ்த்து சொல்லி ப்ளக்ஸ் இவர்கள் யாரென்றே தெரியாது இதில் இன்னொரு கூத்து தெரியுமா ? இவர்களுக்கு அடைமொழி வைத்து பெயர் வேறு சிங்கம் என்றும், சிறுத்தை என்றும், புலி என்றும் ஐந்தறிவை கேவலப்படுத்திய பட்டங்களோடு... இதை நான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வருகிறேன் நடிகர் சாமிக்கண்ணுக்கு ரசிகர் மன்றம் வைத்தவர்கள் மதுரைக்காரர்கள் என்பது எனக்கு தெரியும் ஏன்... ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கும் ரசிகர் மன்றம் வைத்தவர்கள். திரையில் ஒரு கூத்தாடி புதிதாக தோன்றி விட்டால் அவர்களுக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் வைப்பது மதுரையில்தான்.

இன்று நடிகர் அர்னால்டின் நிவிலையை பார்த்தீர்களா ? சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகப்பெரிய ஹோட்டலின் முன்புறத்தில் அவருடைய சிலையை நிறுவி வைத்து இருக்கின்றார்கள் இவர் அறையில் தங்குவதற்காக கேட்டு இருக்கிறார் இவர் யாரென்று தெரிந்து இருந்தும் இவருக்கு அறை காலியில்லை என்று சொல்லி விட்டார்கள். மனம் நொந்து போனவர் தனது சிலையின் காலடியில் பெட்ஷீட்டை விரித்து படுத்து விட்டார். காரணம் என்ன ? இவரது மதிப்பு இறங்கி விட்டது இவர் மேயராக இருந்தவர்.

அதேபோல் கிராமராஜன் இவரது நிலை தெரியுமா ? சென்னையில் சலவைக்கடையில் தனது உடைகளை சலவைக்கு போடப்போய் இருக்கிறார் உடைகளை கண்ட கடைகாரர் இவரிடமே என்ன ஸார் நீங்க ராமராஜன் ரசிகரா ? என்று கேட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர் மன்றம் வைத்து வாழ்க கோஷம் போட்ட முடுமைகள் எல்லாம் இன்று புடுங்கவா போனாங்கே ?

பாக்கியராஜின் பிறப்பு இந்தியாவின் சிறப்பு என்று சொல்லி கோஷமிட்டு கே.பாக்கியராஜூக்கு ரசிகர் மன்றம் வச்சவங்கே இப்போ எங்கே போனாங்கே ? விஜய.டி.ராஜேந்தருக்கு ரசிகர் மன்றம் வச்சவங்கே இப்போ எங்கே போனாங்கே ? இப்படித்தான் மார்கெட் உள்ளவரைதான் இவங்கே சுற்றி வருவாங்கே... அப்புறம் காணாமல் போயிடுவாங்கே... இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இன்றைய முன்னணி நடிகர்களே... எப்படியோ நாட்டை நாசமாக்கி விட்டு நல்லவங்களையும் கேவலப்படுத்துறீங்களேடா.... தமிழனை பிற மாநிலத்தவன் எப்படி பேசுகின்றான்னு அயல் நாடு தேசங்களில் வாழ்ந்தவன், வாழுறவனுக்குதான் தெரியும்.


Chivas Regal சிவசம்போ-
ஏமாளி நாட்டுல கோமாளிதான் ஆளுவான்.

சிவாதாமஸ்அலி-
எப்படியோ மோடி இல்லாமல் இருந்தால் செரிதேங்கிறேன்...

காணொளி

66 கருத்துகள்:

 1. கில்லர்ஜி நான் மதுரைக்காரன் அல்ல....... ஹீஹீ

  பதிலளிநீக்கு
 2. இடுகையைப் படித்ததும்நல்லவேளை நான் நெல்லைத்தமிழன் மாட்டலை. மதுரைத்தமிழன் துரை நல்லாவே கில்லர்ஜிட்ட மாட்டிட்டாரேன்னு சந்தோஷப்பட்டேன்.

  ஆமாம்.. இந்த மதுரைத்தமிழன் யாருக்கு (எவளுக்கு) ரசிகர்மன்றம் வைத்திருக்கிறார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நீங்கள் நல்லாவே மாட்டி விடுறீங்களே...

   அவரு யாருக்கு ரசிகர் மன்றம் வச்சாருனு ஸ்ரீராம்ஜி வந்து சொல்வார்.

   நீக்கு
  2. நாராயணா... நாராயணா.... எனக்கெப்படித் தெரியும்?!!

   நீக்கு
  3. உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற விபரம் எனக்குத் தெரியாது ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 3. குஷ்பூவுக்கு ரணிகர் மன்றம் என்ன, கோவில் கட்டியவர்கள் எங்கள் மதுரைக்காரய்ங்க...! எப்படி எப்படி பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு காசு பார்க்கலாம்னு சட்சட்டெனத் தோன்றுவது எங்க மதுரைக்குத்தேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத்தமிழர் நான் மதுரை இல்லை என்கிறார். சென்னைத்தமிழர் நாங்க மதுரை என்கிறார் நெல்லைத்தமிழர் வந்து தேவகோட்டை தமிழனுக்கு விளக்கவும்.

   நீக்கு
  2. மன்னிக்கவும். குஷ்புவுக்குக் கோவில் கட்டப்படவில்லை என்பதே உண்மை.  கட்டுவதாக இருந்தார்கள்.  அவ்வளவுதான்!

   https://www.vikatan.com/oddities/miscellaneous/29895--2 

   நீக்கு
  3. கட்டியது உண்மையே நண்பரே திருச்சி பர்மா காலனியில்... வருடம் 1992 டிசம்பர்

   பாபர் மஜித் இடித்த தருணம் நான் மும்பை போய் பத்தே தினங்கள் கலவரத்தில் தெரித்து வந்தவன் நான் பின்னாளில் கோயிலை இடித்தும் விட்டார்கள்.

   குஷ்பாம்பிகாளே போற்றி என்று ஐயர்கள் சரணம் விளித்தார்கள்.

   நீக்கு
 4. தங்களது கோபம் நியாயமானதே...

  இருப்பினும் இதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?...
  நடிகர்களைப் புறக்கணிக்கலாம்!... அவ்வளவு தான்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூத்தாடிகளைக் கொண்டாடுற பத்திரிகைகளையும் புறக்கணிக்கணும்.

   நீக்கு
  2. ஆமாம்... சரியாகச் சொன்னீர்கள்...

   சிறார்கள் கெடுவதற்கு ஆபாசப் படங்களும் ஒரு காரணம் என்று
   சொல்லிவிட்டு அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளின் படங்களை
   வெளியிட்டுக் கொண்டிருக்கும் தினமலர் என்றொரு பத்திரிக்கை...

   நீக்கு
  3. குவைத்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
  4. நண்பர் பசி பரமசிவம் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
  5. நடிகர்களைப் புறக்கணிக்கணும், பத்திரிகைகளைப் புறக்கணிக்கணும், தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்கணும் என்று ஆரம்பித்தால் நம் வீட்டில் நம் அறைக்குள்தான் உட்கார்ந்துகொள்ளணும்.

   'கலைச் சேவை'ப் படங்கள் இல்லாத ஊடகமே இல்லை. நேர்மையாளனுக்கு 2000 வாக்குகள் கூட வருவதில்லை. நயனதாரா போன்றவர்கள் வந்தால் எந்த ஊரிலும் லட்சங்களில் மக்கள் கூடுகிறார்கள் என்றால் தவறு நடிகர்கள் மீதா இல்லை மக்களின் மீதா?

   நீக்கு
  6. மா'க்கள் மீதுதான் நண்பரே....

   நீக்கு
 5. // உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
  உலகம் உன்னை மதிக்கும் - உன்
  நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
  நிழலும்கூட மிதிக்கும்...

  மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
  மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது...//

  சூப்பர் சங்கியையும் மதுரைக்காரன் மிதிப்பான் ஜி...

  பதிலளிநீக்கு
 6. மதுரைக்காரர்களுக்கு இன்ப துன்பத்திலும் சினிமா பாடல் வேண்டும். மதுரைக்காரர்கள் நல்ல ரசிகர்கள்.
  அங்கு படம் ஓடுவதை வைததுதான் சினிமா எடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதும், கவலையாக இருப்பதும் என்று எஸ்.ரா ஒரு முறை பேசினார் அதை முன்பு பதிவு போட்ட போது நீங்களும் இந்த பளாக்ஸ், ஸ்டிக்கர் பற்றி எல்லாம் சொன்னீர்கள்.

  காலம் மாறும் காட்சிகள் மாறும் அது போல் ரசிப்பும் மாறுகிறது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவர் பிடிக்கிறார்கள் போலும்.

  காணொளி சொல்லுவதும் இதுதான் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவான உண்மைகளை அழகாக விளக்கியமைக்கு நன்றி

   நீக்கு
 7. இது கோரோனோ வைரஸ் மாதிரி, ஒருத்தரை பார்த்து மற்றவர்கள்.. நான் கடலூரில் இருந்தபோது ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தவருக்கு ஏதோ ஒரு புடலங்காய் போஸ்டிங் கிடைக்கவில்லை. அப்போது வளர்ந்து வந்த நடிகருக்கு மாலை போட்டு மன்றம் ஆரம்பித்து நகர செயலாளர் ஆகிவிட்டார். வெளியே `நமக்கு முக்கியமான போஸ்டிங் கொடுத்திருக்காங்கன்னு` பெருமை வேறே. இவனுங்களை திருத்த முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இதில் நடிகனின் பெயரை தனது பெயருக்கு முன்னால் போடும் முடுமைகளும் உண்டு.

   நீக்கு
 8. உங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருவதால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது .... சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகர் , நடிகைகள் மீது நீங்கள் மகா ''காண்டாக'' இருக்கிறீர்கள் ... தங்களுடைய இந்த வெறுப்பிற்கு காரணம் என்னவோ? தாங்கள் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட வெறுப்போ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படி அபாண்டமாக பழி சுமற்றலாமா ? அரசியல்வாதிகளையும்தான் பிடிக்காது அதற்காக... மோடிமீது கோபப்பட முடியுமா ?

   நீக்கு
  2. ஆமாம், ஆமாம், இந்தியாவின் ஒரே அரசியல்வாதி மோதி மட்டும் தானே! மத்தவங்க எல்லாம் பொதுமக்களுக்காகப் பாடுபட்ட தியாகிகள்!

   நீக்கு
  3. இந்த மோதி காலம் முடிந்து நாளை ஒரு போதி வந்தாலும் இதே நிலைப்பாடுதான் எனது எழுத்தும் இதே வழிதான்.

   நீக்கு
  4. அடக் கடவுளே, அப்போவும் மோதி தானா பழி? :)))))

   நீக்கு
  5. மோதி நிரந்தர பிரதமர் அல்ல! நாளையொரு போதி தர்மர் வரலாமல்லோ...

   நீக்கு
  6. உண்மையை சொல்லுங்கள் ... நீங்கள் போதி தர்மர் என்று சொல்வது நம்ம ''அமித்ஷா ஜி'' யை மனதில் வைத்து தானே?

   நீக்கு
  7. நண்பரே நான் அரசியலில் பூஜ்ஜியம் எனக்கும், அமித்ஷா ஜி-க்கும் பகை மூட்டி விடாதீர்கள்.

   நீக்கு
 9. அர்னால்ட் செய்தி மிகவும் பழையது. இப்போது பதிந்துள்ளீர்களே?

  பதிலளிநீக்கு
 10. மதுரைக்காரங்கள் எப்போதுமே கொஞ்சம் ஓவர் ரியாக்சன் காட்டுபவர்கள். சண்டை என்றால் வெட்டு குத்து அளவுக்கு போய் விடுவார்கள். அதே சண்டை போட்டவர்கள் அடுத்த நாள் வா மச்சான் பண் பரோட்டா கோழி சாப்பிடலாம் என்று தோள் மீது கைபோட்டுக் கொண்டு செல்வார்கள். பொய் சொல்லாவிட்டாலும் முழு உண்மையை சொல்ல மாட்டார்கள். ஏன்யா இப்படி செஞ்சே என்று கேட்டால் நீ அதைப்பற்றி என்கிட்டே கேட்டியா என்று திருப்பி அடிப்பார்கள். Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா மதுரை வீரர்களைப்பற்றி சரியாக கணித்து வைத்துள்ளீர்கள்.

   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. தமிழன் என்றோர் இனமுண்டு அவர்க்கே தனியே ஓர் குணமுண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஸூப்பர் வசனம்.

   நீக்கு
  2. தமிழன் என்றொரு இனம் உண்டு,
   தனியே அவர்க்கொரு குணம் உண்டு.
   அமிர்தம் அவனது மொழியாகும்
   அன்பே அவனது வழியாகும்.
   கலைகள் யாவினும் வல்லவனாம்,
   கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்.
   நிலைகொள் பற்பல அடையாளம்,
   நிந்தனை இன்னும் உடையோனாம்.
   மானம் பெரிதென உயிர் விடுவான்,
   மற்றவர்க்காக துயர் படுவான்.
   தானம் வாங்கிடக் கூசிடுவான்,
   தருவது மேல் எனப் பேசிடுவான்.
   சாதிகள் தொழிலால் உண்டெனினும்,
   சமரசம் நாட்டினில் கண்டவனாம்.
   நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
   நிறை குறையாமல் பண்ணினவன்.
   மானம் பெரிதென உயிர் விடுவான்

   இதைப் பாடியவர் நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்

   நீக்கு
  3. பாடலை முழுமையாக தந்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 12. என்னத்தைச் சொல்ல! எங்க ஊரு மானத்தை இப்படிப் போட்டு வாங்கறீங்களே! மதுரைக்காரங்க வெள்ளந்தியாக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே பிறந்தகமா ?

   நீக்கு
  2. அட, அது தெரியாதா உங்களுக்கு? ஒரிஜினல் அக்மார்க் மதுரைத் தமிழச்சியாக்கும் நான்! :)))))

   நீக்கு
  3. ம்... முன்பு பெரியம்மா வீடு உள்ளதாக பதிவில் படித்த நினைவு

   நீக்கு
 13. கில்லர்ஜி பொயிங்காதீங்கோ:)).. ஆரம்பம் என ஒன்றிருந்தால் முடிவும் இருக்குமெல்லோ:)).. அதுக்குத்தான் இப்போ கொரொனா தலைவிரிச்சாடுது:)).. இந்த நேரம் ஆரையும் திட்டாதீங்கோ:)).. ஹா ஹா ஹா கடவுளே கொரொனாவிலிருந்து காப்பாத்து எனப் பிரே பண்ணுங்கோ எல்லோரையும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயிற்றில் புளியைக் கரைக்காதீங்கோ... இந்தியாவுக்கு கொரானோ வராது.

   நீக்கு
  2. இந்தியாவுக்குத்தானே வராது:) நியூயோர்க்குக்கு வராலாமெல்லோ:))

   அப்போ டெல்லியில ஸ்கூல் மூடியது என்னவாம்ம்?:))

   ஊசிக்குறிப்பு:
   இனியும் ஆராவது நியூயோர்க்கில் இருக்கிறேன் எனச் சொல்லுவினமோ:)) கோட்டைக்குள்ளிருந்து:))

   நீக்கு
  3. தேவகோட்டை தேவதூதர்கள் வாழுமிடமாம்.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. சினிமாவும், அரசியலும் கலந்திருப்பதால், கொஞ்சம் புரியவில்லை. ஆனால் இதிலுள்ள தங்கள் கோபம், வருத்தம். ஆதங்கம் புரிகிறது இதில், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால், தங்கள் ஆதங்கம் குறையும். புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் இனிமேலாவது வரட்டும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனிமேலும் இங்கு மாற்றம் வரும் சூழல் இல்லை.

   நீக்கு
 15. மோகம் - நம் மக்களுக்கு ரொம்பவே அதிகம் தான் - அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும்!

  உங்கள் பாணி பகிர்வு - நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. நீங்க எழுதிய அர்னால்ட் செய்திக்கு ஏதாவது ஆதார இணைப்பு இருந்தால் இங்கே கொடுக்கவும். தெரிந்து கொள்வதற்காக.

   நீக்கு
  3. வருக நண்பரே புகைப்படத்துடன் கூடிய பெட்டிச் செய்தியே ஆதாரம் இதுவும் பழையது.

   நீக்கு
 16. சாமீ நான் பாதி மதுரைங்கிறதை கில்லர்ஜீக்கு யாரும் சொல்லிறக்கூடாது :)
  இப்போதைக்கு லண்டன்தான் சொந்த வாழும் ஊர் எனக்கு :) சகோ நம் ஊரில் எதுவும் நிரந்தரமில்லை , எல்லாத்தையும் பார்த்துட்டோம் இனி வரதையும் பாப்போம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரியுமே!

   நீக்கு
  2. அடடே ரகசியம் வெளிவருதே...

   இனிவருவது இன்னும் கஷ்டமே...

   நீக்கு
 17. தங்களின் கோபம் நியாயமானது நண்பரே

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான். மக்களாகப் பாத்து திருந்தும் வரை இந்த அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இது மாறும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மாறட்டும் நலமே விளையட்டும்.

   நீக்கு
 19. நியாயமான கோபம்.
  கட்அவுட்டுகள் மனித உயிரை கொல்லும்.ஏழைக் குழந்தைகளுக்கு குடிக்க பாலில்லை போஸ்டர்களுக்கு பால் அபிஷேகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இதுதானே தமிழகத்தில் தொடர்கிறது...

   நீக்கு
 20. நடிகைக்கே கோவில் கட்டிய திருச்சி மக்களை மறந்து விட்டீர்களே நண்பரே.

  பதிலளிநீக்கு