தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 26, 2017

சுயமரியாதை


நட்புகளே... ஆல்ப்ஸ் தென்றல் தளத்தின் நிர்வாகி ஸ்விட்சர்லாண்ட் திருமதி. நிஷா அவர்கள் இதோ
என்ற பதிவு எழுதி இருந்தார்கள் நானும் இதனைக்குறித்து எமது கருத்தை பதிவேன் என்று சொல்லி இருந்தேன் ஆகவே சற்றே தாமதமே இப்பதிவு.

வலைப்பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதிவு இவையும் இதன் பாதிப்புதான் இதோ கீழே அதன் இணைப்பு.

இவ்வுலகில் ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை. 

நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல விஞ்ஞானத்திலும் கூட நிரூபித்தது உண்மைதான் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் விளைவை பார்த்தீர்களா ? பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளை, வேலை செய்யும் இடங்களில், கல்லூரிகளில், பொது இடங்களில், பேருந்து பயணங்களில், எத்தனை வகையான பிரச்சனைகள், இதன் அடிப்படை காரணம் எங்கே தொடங்கியது ? உங்கள் மனதில்தான். இது இன்றல்ல, நேற்றல்ல பல மாமாங்கமாகி விட்டது இதன் விளைவு நீங்கள் பெற்ற குழந்தைகளையும் பாதிக்கிறதே என்பது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையே அதுதான் வேடிக்கை. கணவன் வேலைக்கு போய் உழைத்து ஊதியத்துடன் வர, அதில் மனைவி சமைத்து தன் கணவன், குழந்தைகளுடன் தானும் உண்டு உறங்கி, குழந்தைகளின் வளர்ப்பில் முழுக்கவனம் செலுத்தி வந்தார்கள் வேலை முடிந்து களைத்து வீடு வந்த கணவனின் கால்களைப் பிடித்து விட்டு, சிற்றின்ப சுகம் கொடுத்து பேரின்ப சுகம் கண்டார்கள், அன்றைய பெண்கள் அவர்கள் வாழப்பிறந்தவர்கள் இது தவறு ஆணாதிக்கம், பெண்ணடிமை என்ற கோட்பாடு என்று உங்கள் மனதில் உதித்ததோ அன்று தொடங்கியது உங்களுக்கு பிரச்சனைகள்.

அன்றைய காலங்களிலே தேவதாசிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் பொக்கிஷம் போலபோற்றி வளர்ப்பார்கள் தங்களின் குலத்தொழிலுக்கு வேண்டி, அதேநேரம் ஆண் குழந்தை பிறந்தால் கொன்று விடுவார்கள் ஏன் தெரியுமா ? நாளை அவனை இந்த சமூகம் கையாலாகதவன் என்றோ ? கூட்டிக் கொடுப்பவன் என்றோ ? சொல்லக்கூடாது என்பதற்காக (அதற்காக குழந்தையை கொன்றது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. தேவதாசிகள் தேவையா ? என்பதை வேறு SUBJECT டில் பார்ப்போம்) அன்று தேவதாசிகள் என்பது சிறு பாகமாக இருந்தது ஆனால் இன்று அந்தப் பாகத்திற்குள் கற்புக்கரசிகள் மட்டுமாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. பெண்களும் படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், என்றதின் நோக்கம், திரைப்படங்களிலும் நடிக்கலாம் என்பதில் நுழைந்ததின் காரணமாய் இன்று விவாகரத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகி விட்டது பெண்களை இந்த சமூகம் ஒரு போதைப் பொருளாகவே உபயோகப்படுத்துகிறது அதன் விளைவாய் விபச்சாரம் இன்று தலை விரித்தாடுகிறது, கடைசியில் இதன் முழுப்பலன் பெண்களின் சுயமரியாதை இழந்ததுதான் மிச்சம்.

பெண்ணினமே நீங்கள் வாழவில்லை என்பதற்கு ஒரு சான்று கூறட்டுமா ? உங்கள் பாட்டி, அப்பத்தா, அம்மாயி எத்தனை குழந்தை பெற்றார்கள் ? தெரியவில்லை எனில் உனது அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள். இதிலேயே புரிந்து கொள்வாய் நீ எத்தனை சதவீதம் வாழ்ந்தாயென... இறைவன் மனிதனை படைத்தது வாழ்ந்து பயன் பெறவே அதற்காகத்தான் கொடுத்தான் இரவே மனிதன் உணர்ந்து வகுத்துக் கொண்டதுதான் கணவன்-மனைவி உறவே...

வெற்றி பெற்றதும் பெற்றுக் கொண்டிருப்பதும் உண்மையே ஆனால் அதற்கு தாங்கள் கொடுத்த விலை ? சுயமரியாதை.
கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன் ?

ஒரு சில விடையறியா விட்டில் பூச்சிகளே ! உங்களால் பெண்ணினம் ஒட்டு மொத்தமாக களங்கமாகிறதே... இனியெனும் உணர்ந்து பாருங்கள்.

இவ்வுலகில் ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை

- தேவகோட்டை கில்லர்ஜி -

124 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு. பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது இதற்கு காரணம் பல சொல்லலாம் ஜி

   ஒன்று பெண்களின் கவர்ச்சி உடையும்கூட

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஆம் நண்பரே ஆனால் இதை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முழு உரிமை கிடைக்கவில்லை

   நீக்கு
 3. பெண்ணுரிமை என்பது பெரிய சப்ஜெக்ட். வாதங்களும், விவாதங்களும் நிறைந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜி தாங்கள் சொல்வதுபோல் இது பெரிய விடயமே...நானும்கூட இன்னும் விளக்கம் கொடுத்து இருக்கலாம்.

   நீக்கு
 4. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.. என்றார்கள் ஆன்றோர்கள்..

  கல்வி கண்ணைக் கொடுக்குமா.. கெடுக்குமா?.. தெரியவில்லை...

  இத்தகைய செயல்களால் - பெண்ணிற் பெருந்தக்க யாவுள.. எனும் வார்த்தை பொய்யாய்ப் போய்விடுமோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இதனால் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெயர் கெடுகிறதே...

   நலல குடும்பத்து பெண்களையும் விடுதியில் சேர்க்க பயமாக இருக்கிறது.

   நீக்கு
 5. நல்ல பகிர்வு. குடும்பம் என்பது அன்பை கொடுத்து அன்பை பெறுவதே . அன்பும் ஆதரவும் கொடுக்க நேரம் இல்லாமல் இப்போது மனிதர்கள் பறந்து கொண்டு இருக்கிறார்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மனிதர்கள் பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருப்பதால் மனிதம் மட்டுமல்ல குடும்ப உறவுகளும் மறந்து விட்டது அவரவர்கள் தனக்கு தெரிந்தபடி வாழ்கிறார்கள்

   இவர்களை வழி நடத்த வீட்டில் முதியோர்கள் இல்லையே...

   நீக்கு
 6. நீங்களே சொல்லீட்டிங்க நண்பரே..இரைவன் மனிதனை படைத்துவிட்டான் என்று பிறகு எதற்கு அப்பத்தா..அம்மாயி..ஆட்டுகுட்டி...முட்டை..என்று தட்ஸ்ஆல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இந்த உறவு முறையாளர்கள் அனைவருமே "வாழ்ந்து" அனுபவித்தவர்கள்.

   நீக்கு
 7. அன்பின் ஜீ இது ஒரு பெரிய வாதத்துக்குரிய விஷயம் இதில் ஒட்டுமொத்தமாக யாரையும் குறை சொல்ல முடியாது ஆனால் பொருளாதார செக்யூரிடி கிடைத்து விட்டதால் அதை எப்படிஉபயோகிப்பது என்று தெரியாமல் பெண்கள் இருக்கிறார்கள் என்பதும் ஒரு வாதம் பெண்கள் அணி திரண்டு வந்து பின்னூட்டங்கள் இடுவார்கள் என்று நம்பலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நானும் ஒட்டு மொத்தமாக சொல்லவில்லை ஒரு சிலரால் எல்லோருக்கும் அவப்பெயர் வருகிறதே இதுவே எமது ஆதஙகம். ஐயா.

   நீக்கு
 8. இதெல்லாம் சொல்லித் திருந்தாத கேஸ்,இதுக்குரிய பலன் கிடைக்கும் போது உணர்வார்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணரும் பொழுது அவர்களுக்கு வயதுக்கு வந்த மகள் இருக்கின்றாளே... ஜி

   நீக்கு
 9. 7ம் வோட்டுப் போட்டு உங்களை தமிழ் மணத்தில் மகுடம் சூட்டப்பண்ணிட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

  ஏதோ திடீரென மனதில் நினைவு வந்த ஒரு கவிதை.. ஹைக்கூ..

  அன்று பல லட்சங்கள் கேட்டு
  வாங்கித் திருமணம் முடித்தவர்
  இன்று பல மேடை மேடையாய்
  ஏறிப் பேச்சு நடத்துகிறார்
  சீதனத்தை ஒழிப்போம் என
  ஏனெனில் அவர்
  4 பெண்களின் தந்தையாம்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. த.ம. நுழைத்து விட்டமைக்கு நன்றி

   கவிதை மிகவும் அருமை இரசித்தேன்

   நீக்கு
 10. காலம் மாறிவிட்டது. போட்டதைச் சாப்பிட்டுவிட்டு, வயல் வேலையைப் பார்த்துவிட்டு, கூட்டுக்குடும்பமாக இருந்து, வீட்டுக்கு ஆண் வந்தது அந்தக் காலம். அது மாறும்போது, பெண்கள் மட்டும் மாறாமல் இருக்கமுடியுமா?

  இது ஒரு மாறும் (TRANSITION) காலம். அதுனால, அவங்களை மட்டும் 'இப்படி இரு', 'இருந்தால் சமூகத்துக்கு நல்லது' என்று எப்படிச் சொல்லமுடியும்?

  எனக்கென்னவோ இது ஆணின் பார்வையில் உதித்த கருத்தாகத்தான் இருக்கிறது. ஒழுக்கம், ஒழுங்கீனம் இரண்டும் இரு பாலாருக்கும் பொது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நிச்சயமாக ஒழுக்கம் இருபாலருக்கும் உள்ளது.

   இன்று இருவரும் திசை மாறிவிட்டார்கள் ஆசிரியரின் கண்டிப்பு இல்லை காரணம் அவர்களால் கண்டிக்க முடியாத சூழலை பெற்றோர்கள் உருவாக்கி விட்டார்கள்.

   இதற்கு முதல் காரணவாதிகள் திரைப்படத் துறையினரே...

   நீக்கு
  2. திரைப்படம் சூழலை காரணம் காட்டி சாக்குப்போக்கு சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

   மதுவும் மாதுவும் மலிந்த நாட்டில் கற்பழிப்புக்களும் திராவக வீச்சுக்களும் குற்றங்களும் அரிதென்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் அல்லவோ? இப்படியான சூழலில் வளரும் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்தெடுக்கும் போது அங்கே எப்படி சாக்குப்போக்கு சொல்ல முடியும்.

   நீக்கு
  3. உங்கள் வழியிலேயே வருகிறேன்.
   திரைப்பத்துறையினர் சேவை செயவதற்கு வரவில்லை நாலு சல்லி உண்டாக்குவதே எண்ணம் அதை நல்ல விடயங்களை கொடுத்து சம்பாரிக்கலாமே...

   யார் பார்க்க சொன்னா என்று கேட்பீர்கள் ஐந்து நபர்களில் நான்கு நபர் காணும்பொழுது கடைசி நபர் முட்டிளாக காணப்படுகின்றார் ஆகவே அவரும் இவர்கள் வழியே...

   இது இருபாலருக்கும் பொருந்தும்.

   நீக்கு
  4. சேற்றில் செந்தாமைரை மலர்வது போல் பாற்கடலிலும் கள்ளிச்செடி முளைக்கும் சார்.சினிமாக்களும் சீரியல்களும் நடப்புக்களை படம் பிடித்து காட்டுகின்றது என்பதற்கான அதனால் தான் அனைத்து குற்றங்களும் என்பதை தான் நான் மறுக்கின்றேன்.

   சினிமா என்பது வெறும் பொழுது போக்கு.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் பொழுது போக்கை பொழுது போக்காக மட்டும் எடுத்துக்கொள்ளத்தெரியாத சமூகம் பாற்கடலாக இருந்தாலும் கள்ளிச்செடிகளை தான் முளைப்பிக்கும்,

   நல்லதும் கெட்டதும் நான் எடுத்துக்கொள்ளும் வகையிலே தான் எனும் போது எதை தவிர்க்க வேண்டும், எதை நமக்கு பாடமாக்கிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யத்தெரியாத சுய சிந்தனை இல்லாத சமுகத்தினையா உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்?

   சினிமாவிலும் உலகத்தினை அறிந்திட, புவியியல், விஞ்ஞானம், தொழில் நூட்பம் நாடுகள் பாராம்பரியங்கள் என பல விடயங்களை நாம் அறிய முடியும், வன்முறையும் வக்கிரமும் மட்டும் சினிமாவில் காட்சிப்படுத்தப்படவில்லை. நாம் செய்யும் தப்புக்கு நமக்கு சரியென தோன்றுவதை சட்டென குற்றமாக்கி விடுகின்றோம்.தீயதை சட்டென பற்றிக்கொள்ளும் நாம் நல்லவைகளை கற்கவும் பின் பற்றவும் தயங்குவதேன்?

   சினிமாவிலும் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல் தான் வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பது போல் முடித்திருப்பார்கள் எனும் போது அதை நாம் பின்பற்றும் போது நமக்கும் அதுவே முடிவென எப்படி உனராமல் அல்லது உணர்த்தப்ப்டாமல் போனோம்?

   எப்போதும் நம் தவறை எதன் மீதாவது போட்டு தப்பிக்க்கொள்வதை விட.. நான் எப்படி என சிந்திக்க ஆரம்பித்தாலே போதும் சார்.

   நீக்கு
  5. இன்றைய தலைமுறைகளுக்கு கெட்டது மட்டும் உடன் பிடித்து விடுகிறதே என்ன செய்வது ?

   நீக்கு
 11. உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை, சிந்தனையை எதிர்பார்க்கவில்லை நண்பரே! மிக மிக மிக இழிவான பதிவு!
  பெண்கள் படித்ததும், வேலைக்குப் போகத் தொடங்கியதும், ஆணுக்கு நிகராக அறிவும் விடுதலையும் பெற்றதும்தாம் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா சமூகச் சீரழிவுகளுக்கும் காரணம் என்கிறீர்களா? எனில், பெண்கள் படிக்காமல், வேலைக்குப் போகாமல் வீட்டோடு கிடந்த காலத்தில் எல்லாம் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தனவா? அப்படியானால், எல்லாமே நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த அந்த சமூகத்தைக் கெடுக்கும் விதமாக பாரதியார், பெரியார் போன்றோர் ஏன் பெண் விடுதலை பேசிப் பெண்களைத் தூண்டி விட்டார்கள்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், எல்லாமே அருமையாக இருந்த பூவுலக சொர்க்கம் இல்லையா அந்தக் காலக்கட்டம்? அதை ஏன் மாற்ற அவ்வளவு துடித்தார்கள் அன்றைய சமூகச் சிந்தனையாளர்கள்? அவர்களெல்லாரும் கிறுக்குப் பயல்களா?
  பெண்களை என்னவோ ஆண்கள் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தது போலவும் (அல்லது பெண்கள் கணவன்மார்களுக்கு அடங்கிக் கிடந்ததால் பெண்கள் தவிர குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எல்லாரும் மிக நன்றாக இருந்தார்கள் என்பது போல) பெண்கள்தாம் கொழுப்பெடுத்துப் போய் அந்தக் கட்டமைப்பைச் சிதைத்து இன்றைய சமூகச் சீரழிவுகளுக்கெல்லாம் வழிவகுத்து விட்டார்கள் என்பது போலவும் எழுதியிருக்கிறீர்கள்!
  உண்மையில், நீங்கள் சொர்க்க உலகம் என வருணிக்கும் அந்தக் காலக்கட்டத்தில் ஆண்கள் பெண்களைக் கொத்தடிமைகளைப் போல் நடத்தினார்கள் என்பதுதான் உண்மை. ஆண்கள் குடித்தார்கள். கூத்தடித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு மனைவி, ஊருக்கு ஒரு கூத்தியாள் வைத்துக் கொண்டார்கள். கேட்டால் அதுதான் ஆணுக்குப் பெருமை என்று மீசையை முறுக்கினார்கள்.
  எல்லாவற்றையும் விட, ஒழுங்காக வேலைக்குப் போகாமல் தலைமுறைச் சொத்துக்களை உட்கார்ந்து தின்றே அழித்தார்கள். (அப்படி அழிந்த பல குடும்பங்களை எனக்குத் தெரியும்). சொத்து இல்லாதவர்கள் கூட, அன்றன்றைக்கு வருகிற வருமானத்தை ஒழுங்காகச் சேர்த்து வைக்காமல் மது, மாது, சூது எனப் பணத்தைத் தண்ணீராய்ச் செலவிட்டார்கள். ஆண்களின் மற்ற ஒழுங்கீனங்களையெல்லாம் தாங்கிக் கொண்ட பெண்களால் இதைத் தாள முடியவில்லை. பிள்ளைகளையும் படிக்க வைக்காமல், இருக்கிற சொத்தையும் அழித்து விட்டால் (அல்லது வருகிற வருமானத்தையும் ஒழுங்காக வீட்டுக்குக் கொடுக்காவிட்டால்) தன் பிள்ளைகளின் எதிர்கால நிலைமை என்னாகும் என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு ஆண்கள் பதிலெல்லாம் சொல்லவில்லை; எட்டி உதைத்தார்கள். “நான் ஆம்பளடி அப்படித்தான் இருப்பேன்” என்றார்கள். ஊரும் “ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க” என்று ஆண்களுக்குத்தான் ஒத்து ஊதியது.
  இப்படி ஆண்களின் சோம்பேறித்தனத்தாலும் தீய பழக்கங்களாலும் செல்வம் கொழித்த எத்தனை குடும்பங்கள் தெருவுக்கு வந்தன தெரியுமா? வீட்டுக்குக் கூட ஒழுங்காகக் காசு கொடுக்காமல் வருகிற பணத்தையெல்லாம் தன் மேனாமினுக்கித்தனத்துக்கே செலவு செய்து திரிந்த ஆண்களால் பசியும் பட்டனியுமாய் வளர்ந்த பிள்ளைகள் இந்த நாட்டில் எத்தனை எத்தனை பேர் என்பது உங்களுக்குத் தெரியுமா? கட்டிய மனைவிக்கு ஒழுங்காகச் சோறு போடக் கூட வக்கில்லாமல் தான் மட்டும் மூக்கு முட்டச் சாராயம் குடித்து விட்டு வந்து பெண்களை மேலும் மேலும் பிள்ளைகள் பெற வைத்தே கொலை செய்த ஆண்களும் பேறுகாலத்திலேயே செத்த பெண்களும் எத்தனை பேர் என்கிற கணக்கு உங்களுக்குத் தெரியுமா?
  உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் தெரியாது; யாருக்குமே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். மேற்படி பாதிப்புகளில் ஏதேனும் ஒன்று அந்தக் காலத்தில் எல்லாக் குடும்பங்களிலும் இருந்தது; நாம் பார்த்திருக்கிறோம் என்பதுதான் அது!

  (தொடரும்-1)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கு முதலில் நான் அனைத்து பெண்களையும் இப்படி என்று சொல்லவில்லை பாரதியார், பெரியார் எல்லாம் பெண்ணடிமையை உடைத்தெறிய பல வகைகளிலும் முயன்றதால்தான் இன்று பெண்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்க முடிகிறது

   சமீபத்திய எனது பதிவில்கூட

   http://killergee.blogspot.com/2017/04/sir-post.html

   பெண்கள் தங்களது மதிப்பை உணராமல் அவசியமின்றி இழந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்தி எழுதினேன்

   அதை தாங்கள் படிக்கவில்லை அதன் தலைப்பு Sir, Post

   பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்பதில் பாரதியைக் காட்டிலும் ஒண்ணேமுக்கால் காணி தாராளமானவன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

   நீக்கு
 12. பகுதி - 2

  இப்படி ஆண்கள் வைத்ததே சட்டம்; குடும்பத்தை எவ்வளவு சீரழித்தாலும் தன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அத்தனையையும் பெண்கள் பார்த்துக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் சும்மாவே இருக்க வேண்டும்; அப்படி இருந்தால்தான் அவள் குடும்பப் பெண். இல்லாவிட்டால், அவள் குடும்பப் பெண் இல்லை என்கிற இந்த அட்டூழியப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரத்தான் பெண்கள் படிக்கத் தொடங்கினார்கள், வேலைக்குப் போகத் தொடங்கினார்கள், பெண்ணுரிமை பேசத் தொடங்கினார்கள். ஆகவே, முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக, ஏதோ பெண்களையெல்லாம் இந்த சமூகம் கோவிலில் வைத்துப் பூசித்துக் கொண்டிருந்தது போலவும் அவர்களாகவே கருவறையிலிருந்து இறங்கி வந்து இன்று கெட்டுக் குட்டிச் சுவராகி விட்டது போலவும் அபாண்டமாய் எழுதாதீர்கள்!
  மேலும், நீங்கள் எழுதியிருப்பவற்றையெல்லாம் பார்த்தால், பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் ஏதோ இந்தத் தலைமுறையில்தான் புதிதாக நடப்பது போல இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை.
  சங்கக் காலத்தில் தொண்ணூற்றாறு பெண் புலவர்கள் இருந்தார்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள். புலவர்கள் எண்ணிக்கையே - அதுவும் சங்க நூல்கள் என்கிற பெயரில் ஆவணப்படுத்தி வைக்கும் அளவுக்கு உச்சத்தர இலக்கியங்களில் பங்களித்த பெண்களின் எண்ணிக்கையே - இவ்வளவு என்றால், உங்களைப் போல் என்னைப் போல் எளிய படிப்பறிவு கொண்டவர்களில் பெண்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்!
  ஆக, பெண்கள் படிப்பது என்பது பண்டைத் தமிழகத்தில் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது; பெண் கல்வி அன்று வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதுதானே இதிலிருந்து தெரிய வருகிறது! பெண்கள் படிப்பறிவும் விடுதலையும் பெறுவதுதான் எல்லாச் சமூகச் சீர்கேடுகளுக்கும் காரணம் என்றால், பெண்கள் எல்லாரும் படித்தவர்களாக இருந்திருக்கக்கூடிய சங்கத் தமிழ்க் காலமும் சீர்கெட்ட சமூகமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால், அப்படியா இருந்தது? சங்கக் காலம் காட்டும் தமிழர் வாழ்க்கை முறை பற்றிப் படிக்கும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூட ‘இப்படி ஓர் அருமையான வாழ்க்கை முறையா’ என வியக்கிறார்களே! சமத்துவம், பண்பாடு, நாகரிகம், இயற்கையோடியைந்த வாழ்வியல் என எல்லாவற்றிலும் இன்றும் என்றும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கை முறையாகத்தானே சங்கக் காலத் தமிழர் வாழ்க்கை முறை இருந்திருக்கிறது? இதைச் சிந்தித்தீர்களா?
  சங்கக் காலம் மட்டுமில்லை, மனித சமூகத்தின் எந்தக் காலக்கட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்களின் உழைப்பும் பங்களிப்பும் இல்லாமல் இந்த சமூகம் இருந்ததில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
  மனிதர்கள் வேளாண் சமூகமாக வாழ்ந்தபொழுது ஆண்கள் உழவோட்டுவது, கவலை இழுப்பது போன்ற கடின வேலைகளைச் செய்தால், பெண்கள் நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை செய்வது போன்ற கொஞ்சம் கடுமை குறைந்த வேலைகளைச் செய்தார்கள்.
  அடுத்த தொழிற்புரட்சி காலக்கட்டத்தில், ஆண்கள் பொறிகளை இயக்குவது, மேலாண்மை செய்வது போன்ற வேலைகளைச் செய்தபொழுது பெண்கள் பஞ்சாலை வேலை, தீப்பெட்டித் தொழிற்சாலை வேலை, பீடி சுற்றும் வேலை போன்ற வேலைகளைச் செய்தார்கள்.
  இது மின்னணுப் புரட்சிக் காலம். இன்றைக்குப் படிப்பும் அது சார்ந்த அறிவும்தான் எல்லா வேலைகளுக்கும் அடிப்படை என்பதால் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சரிநிகராகப் பணியாற்றுகிறார்கள்.
  ஆக, நீங்கள் எந்தக் காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்களின் வியர்வை இல்லாமல் பூமி சுழன்றது கிடையாது. பெண்களின் பங்களிப்பின்றி மனித இனம் இவ்வளவு தொலைவுக்கு முன்னேறி வந்து விடவில்லை. இதை நீங்கள் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை!

  (தொடரும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலும் வார்த்தைகளை நான் எந்த இடத்திலும் கடினமாக எழுதவே இல்லை அதேநேரம் தங்களது கருத்துரையில் இல்லை இதை பதிவு என்றும் சொல்லலாம் வார்த்தைகள் இழிவாக நான் சொன்னது போல குறிப்பிட்டு இருப்பது நன்றல்ல...

   அன்றைய பெண்களின் உழைப்பு ஆணுக்கு நிகராக இருந்து இருக்கின்றது ஆகவேதான் நெற்களஞ்சியங்கள் முறையாக வீடு வந்து சேர்ந்தது.

   நீக்கு
  2. திரு ஞானப்பிரகாசன் ஐயா அவர்கள் பதிவுக்கும் கில்லர்ஜி அவர்கள் பதிவுக்குமிடையில் என்ன வித்தியானமுண்டு?

   கில்லர்ஜீயும் அக்காலத்தில் பெண்கள் வீட்டுப்பணி செய்து வாழ்ந்ததனால் இழந்தவை ஏதுமில்லை என்கின்றார்.கல்வியும் செல்வமும் தரும் செருக்கினால் உங்கள் வாழ்க்கையை சீரழிக்காதீர் என்கின்றார். இதை ஐயா அவர்கள் அக்கால பெண்கள் அனைத்திலும் மேம் பட்டிருந்தார்கள். அடிமைப்படுத்தப்படாமல் சம நிலையில் நடத்தப்பட்டு கல்வியிலும் சிறந்திருந்தார்கள் என்கின்றார், கல்வியில் சிறந்திருந்தாலும் அவர்கள்தங்கள் வீட்டுப்பணியை மறக்காமல் வயலிலும்வீட்டிலும்வியர்வை சிந்தி உழைத்து குடும்பத்தினை உயர்த்தியதாக சொல்கின்றார். இருவர் கருத்தும் ஒன்றே.

   கல்வியும் செல்வமும் பெண்ணுக்குள் சுதந்திரத்தினை, தன்னம்பிக்கையினை, விடுதலையை விதைப்பதில்லை என்பதற்கு குப்பத்தும் ஏழைகளின் வீட்டு பெண்களும் கூலித்தொழிலாளிகளான பெண்களும் நமக்கு நல்ல உதாரணங்கள் தான், குப்பத்து பெண்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை தைரியம் படித்த பட்டம் பெற்ற பெண்களிடம் இல்லையே

   நீக்கு
  3. ஐயோ! ஐயோ! ஐயோ! நான் எந்தச் சுவரில் போய் முட்டிக் கொள்வது?

   அம்மா நிஷா! நான் சொன்ன காலக்கட்டம் வேறு, கில்லர்ஜி சொன்ன காலக்கட்டம் வேறு. நான் சொன்ன கோணம் வேறு அவர் சொன்ன கோணம் வேறு.

   நான் பெண்களின் கல்வி, விடுதலையான வாழ்க்கை முறை செழித்திருந்த காலக்கட்டம் எனச் சொன்னது கில்லர்ஜி குறிப்பிடுகிற நம் பாட்டி, அப்பத்தா காலக்கட்டத்தை இல்லை; பழந்தமிழ்ச் சங்கக் காலத்தை.

   அவர் சொன்னது, வீட்டு வேலை செய்து மட்டுமே பெண்கள் வாழ்ந்த காலம் சிறப்பானது என்று. நான் சொன்னது, எந்தக் காலத்திலும் வீட்டு வேலை செய்பவர்களாக மட்டுமே பெண்கள் வாழ்ந்திருக்கவில்லை என்பது. இரண்டுமே ஒன்றுக்கொன்று நேர் எதிர்.

   என்ன ஆயிற்றோ தெரியவில்லை! இந்தப் பதிவில் நான் எது எழுதினாலும், எல்லோரும் தப்புத் தப்பாகவே புரிந்து கொள்கிறார்கள்! விழி பிதுங்குகிறது!

   நீக்கு
 13. பகுதி - 3

  ஆகவே, பெண்கள் வீட்டோடு கிடக்காமல் தெருவில் இறங்குவதால்தான் சமூகம் கெட்டுப் போகிறது என்றால் இந்த சமூகம் என்றைக்கோ கெட்டுப் போயிருக்க வேண்டும். மாறாக, இன்றைக்கு மட்டும் இவ்வளவு சமூகச் சீர்கேடுகள் நடக்கின்றன என்றால் அதற்குக் காரணங்கள் வேறு.
  முதல் காரணம் குடி! அந்தக் காலத்திலும் ஆண்கள் குடித்தார்கள்; பெண்கள் கூடக் குடித்தார்கள்! ஆனால், அன்று ஆவர்கள் குடித்தது கள்ளும் சாராயமும். எந்த மருந்து சாப்பிட்டும் எவ்வளவு ஊட்டம் நிறைந்த உணவைச் சாப்பிட்டும் தேறாத சிறுவர்களுக்குக் கூட ஒரு மரத்துக் கள்ளைக் குடிக்கச் சொல்லித் தேற வைப்பார்கள் அந்தக் காலத்து நாட்டு மருத்துவர்கள். அந்தளவுக்கு ஊட்டம் நிரம்பியது இந்த மண்ணின் போதைப்பொருளான கள். ஆனால், இன்று அதை விட்டுவிட்டுக் கண்டவற்றையும் குடிக்கிறான் ஆண். மிகச் சில நாட்களிலேயே நரம்பு தளர்ந்து மனைவி மீது ஐயம் கொள்ளத் தொடங்குகிறான். அடிக்கிறான், உதைக்கிறான், தெருவில் நின்று இழிவான சொற்களால் அவள் மானத்தைக் காற்றில் பறக்க விடுகிறான். “அவள் நல்லவள்தான். உன் குடிதான் அவளைத் தவறானவளாகக் காட்டுகிறது” என மற்றவர்கள் எடுத்துச் சொன்னால், எடுத்துச் சொல்பவனையும் மனைவியையுமே சேர்த்து வைத்துப் பேசுகிறான்.
  இப்படிப்பட்ட இழிபிறவிகளோடு வாழப் பிடிக்காமல்தான் பல பெண்கள் மணவிலக்குப் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். மாநிலத்தில் பெறப்படும் முக்கால்வாசி மணவிலக்குகளுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ குடிதான் காரணமாக இருக்கிறது என நான் சொல்லவில்லை வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.
  அதனால்தான் டாசுமாக்கை மூடச் சொல்லிப் பெண்கள் இன்று தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், அப்பொழுதும் போராடுகிற பெண்களின் மண்டையை உடைக்கக் காவலர்கள் எனும் பெயரில் ஆண்கள் அங்கேயும் முன்வந்து நிற்கிறார்கள்.
  தவிரவும், மணவிலக்கு என்பது இன்று சட்டப்படியான நடைமுறையாக இருப்பதால் எவ்வளவு பேர் மணவிலக்குப் பெறுகிறார்கள் என்கிற எண்ணிக்கை வெளியே தெரிகிறது. ஆனால், இப்படி ஒரு சட்ட வழிமுறை இல்லாத அந்தக் காலத்திலும், தனக்குப் பிடிக்காத வாழ்க்கைத்துணையிடமிருந்து பிரிந்து வாழும் வசதி இருக்கவே செய்தது.
  “பெண் ஒருத்தியின் வேறு கணவனுக்குப் பிறந்த பிள்ளைகளும், ஆண் ஒருவனின் வேறு மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளும் ஒன்றாக விளையாடுவதை நானே என் சிறு வயதில் கண்ணால் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்குப் பாலியல் விடுதலை கொண்ட நம் சமூகம் இன்று இந்த அளவுக்குப் பாலியல் கொடுமை நிறைந்த சமூகமாக மாறியது ஏன் என்பது பற்றி நான் எழுத வேண்டும்” என்றார் ‘கரிசல் காட்டு எழுத்தாளர்’ கி.ராஜநாராயணன் அவர்கள்.
  எனவே, அந்தக் காலத்தில் என்னவோ மணவிலக்குகள் குறைவாக இருந்தது போலவும் உரிமை பற்றிப் பெண்கள் பேசத் தொடங்கிய பின்புதான் மணவிலக்குகள் கூடி விட்டது போலவும் நினைப்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.

  (தொடரும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை (குறிப்பு நான் சொல்வது வீட்டோடு இருக்க வேண்டும் தாங்கள் குறிப்பிட்டது கிடக்க வேண்டும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கின்றது)

   பெரும் பாலான பதிவுகளில் நான் டாஸ்மாக்கையும், குடிமகனின் அவல நிலையையும் எழுதி வருகிறேன் அதை எல்லாம் தாங்கள் படிக்கவே இல்லை,

   பெண்களை நான் எவ்வளவு தூரம் மதிக்கின்றேன் என்பதும், அவர்களைப்பற்றிய எனது கருத்துகளையும் பல பெண் பதிவர்களும் தொடர்ந்து படித்து வருகின்றார்கள் என்னை அறிந்தவர்களும்கூட என்பது தங்களுக்கு அறியாயாததே.....

   காரணம் தாங்கள் என்றாவது ஒருநாள் தலைப்பு நன்றாக இருந்தால் வருபவர் என்பது நமக்குள் அறிந்த விடயமே...

   நீக்கு
 14. பகுதி - 4

  அடுத்து, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்.
  இதற்குக் காரணம், உங்களைப் போன்ற பண்பாட்டுக் காவலர்களின் அறிவுரைகள்! பெண் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தான் சிரிக்க வேண்டும், இப்படித்தான் உடுத்த வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும். மணமாகும் முன் வெளியில் காலை எடுத்து வைக்கவே கூடாது, மணமான பின்னும் தன் கணவனைத் தவிர வேறு யாருடனும் சேர்ந்தோ தனியாகவோ பெண் வெளியில் போகவே கூடாது எனத் தலைமுறை தலைமுறையாகக் கத்தைக் கத்தையாக எழுதி வைத்திருக்கிறீர்களே கட்டுப்பாட்டுக் குப்பைகளை? அவற்றையே அருள்வாக்காக நம்பும் ஆண் திமிர் பிடித்த கும்பல்தான் “அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை மீறும் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என அகங்காரத்தோடு உளறித் திரிகிறது. இதையும் நான் சொல்லவில்லை, இப்படிப்பட்ட வழக்குகளில் விலங்கிடப்பட்ட அந்த விலங்குகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.
  மேலும், கி.ரா அவர்கள் கூறியது போல் பாலியல் விடுதலை இல்லாமை, ஒழுக்கம் எது, ஒழுக்கம் இன்மை எது என்கிற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் மனம் தொடர்பான ஒழுக்கம் என்பதை உடல் தொடர்பானதாகப் பார்க்கும் பிழையான பார்வை, பாலியல் வெறியைத் தூண்டும் இணையத்தளங்கள் என எத்தனையோ காரணங்கள் நாட்டில் இருக்க, பாதிக்கப்படுகிற பெண்கள் மீதே அந்தப் பாதிப்புக்கான காரணத்தையும் சுமத்திப் பழிபோடும் விதமாகப் பெண்கள்தாம் பாலியல் தாக்குதல்களுக்குக் காரணம் எனக் கூறுவது கொடுமையிலும் கொடுமை!
  இதில் இன்னொரு வேடிக்கையான வேதனை என்னவென்றால், உண்மையில் பெண்ணியம் பெண்ணுரிமை பற்றி முதலில் பேச்செடுத்தவர்கள் யாரும் பெண்களே இல்லை; முன்பே சொன்னது போல் பாரதியார், பெரியார் போன்ற ஆண்கள்தாம்.
  கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் என வீட்டுப் பூனைகளாகக் கிடந்த பெண்களை “அடங்கிப் போய்க் கொண்டே இருக்காதே! பெண்கள் இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருப்பதால்தான் ஆண்கள் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள்! பெண்களின் அடிமைப் போக்கு அவர்களை மட்டுமில்லாமல் எதிர்காலத் தலைமுறையையும் பாழுங்கிணற்றில் தள்ளுகிறது” என்றெல்லாம் பேசிப் பேசிப் புத்தெழுச்சி கொள்ள வைத்தவர்களே ஆண்கள்தாம். ஆனால், இப்பொழுது பெண்கள் வளர்ந்தவுடன் “ஏன் வளர்கிறாய், வீட்டோடு கிட!” என ஆண்கள் பாடத்தை மாற்றி ஓதுகிறீர்கள்! ஆண்களே! நமக்கு என்னதான் பிரச்சினை? பெண்கள் எப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறோம் நாம்? அப்படியிருந்தாலும் குற்றம் இப்படியிருந்தாலும் குறை என்றால் பெண்கள் என்னதான் செய்வது? பெண் என்கிற இனமே இருக்க வேண்டா என்கிறீர்களா?
  தவிர, பெண்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி, வீட்டு வேலைகளை அவர்கள்தாம் செய்கிறார்கள். இப்பொழுது அண்மைக்காலமாகத் தென்படும் இன்னொரு பெருங்கொடுமை என்னவென்றால், பெண்கள் வேலைக்குப் போகாமல் இல்லத்தரசியாக இருந்து வீட்டைக் கவனித்துக் கொண்டால் அவளுக்கு சமூகத்தில் மரியாதை இல்லை. குறிப்பாகப் பிள்ளைகள் மதிக்க மாட்டேன்கின்றன. “எல்லார் அம்மாக்களும் வேலைக்குப் போகிறார்கள். என் அம்மா சோம்பேறி. வீட்டிலேயே தின்றுவிட்டுத் தின்றுவிட்டுத் தூங்குகிறாள்” என்கின்றன.
  மாறாக, வேலைக்குப் போனாலோ, அவள்தான் ஆணைப் போல் தானும் வேலைக்குப் போய் வருமானம் ஈட்டுகிறாளே என்பதற்காக வீட்டுக்கு வந்ததும் ஆணுக்குக் கொடுப்பது போல் பெண்ணுக்கும் ஓய்வு கொடுக்க இந்தக் குடும்ப அமைப்பு ஆயத்தமாக இல்லை. வேலைக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, வீட்டு வேலைகளை அவள்தான் செய்தாக வேண்டும்.
  ஆக, பெண் வேலைக்குப் போனால் – திமிர் பிடித்தவள், ஒழுக்கம் கெட்டவள், குடிகாரி, உங்கள் பாணியில் சொன்னால் - வாழ்வின் உட்பொருள் என்ன என்பதே தெரியாமல் இன்பமயமான வாழ்வைத் தொலைத்து விட்டு விடுதலை எனும் பெயரால் பொருளற்ற வாழ்க்கையை வாழும் முட்டாள்.
  அவளே இல்லத்தரசியாக இருந்தால், சோம்பேறி, தின்னிப் பண்டாரம், ஒன்றும் தெரியாதவள், கோழை, அறிவிலி, ஆணோடு சமமாக மதிக்கத் தகுதியில்லாதவள்.
  ஆக, இந்த சமூகத்தைப் பொறுத்த வரை, பெண் என்பவள் வேலைக்குப் போய் உழைத்துக் கொண்டு வந்தும் கொட்ட வேண்டும், வீட்டு வேலைகளையும் ஒன்று விடாமல் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த அழகில் நாம், “என்ன இருந்தாலும் ஆண்தானே பெண்ணை விட வலிமையானவன்” எனப் பெருமை வேறு பீற்றிக் கொள்வோம். எவ்வளவு வெட்கம் கெட்ட பிறவிகள் நாம்!

  (தொடரும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதிலும்கூட வார்த்தைகளை கடுமையாக கையாண்டு இருக்கின்றீர்கள்
   சமீபத்தில் கல்லூரி ஒன்றுக்குள் சென்று வரவேண்டிய சூழல்,

   இரண்டு ஆணுக்கு மத்தியில் ஒரு பெண்
   மற்றொரு இடத்தில்
   இரண்டு பெண்ணுக்கு மத்தியில் ஒரு ஆண்

   எனக்கு இவைகளை கண்டு பொறுக்க முடியவில்லை வாழ்வில் முதல்முறையாக கல்லூரியை பார்க்கிறேன் ஆகவே எனக்கு அதிசயமாக இருந்திருக்கலாம்.

   அவ்வழியே செல்லும் ஆண்-பெண் ஆசிரியர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை காரணம் இப்பொழுது ஆசிரியர்கள் கண்டிக்கவே கூடாது என்ற நிலையை பெற்றோர்கள் உருவாக்கி விட்டார்கள்.

   நீக்கு
  2. இரண்டு ஆணுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் இரண்டு பெண்ணுக்கு மத்தியில் ஒரு ஆணும் அமர்ந்திருப்பதனால் என்ன குற்றம் கண்டீர்கள் கில்லர்ஜீ சார்.

   ஆண் பெண் பேதமற்ற் பழகும் அவர்கள் மனதில் ஆண் பெண் வேறுபாட்டு விஷத்தினை நாம் ஏன் கலக்க வேண்டும், இந்த விடயத்தில் உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன்.

   முதலில் பிள்ளைகள் மனதில் கள்ளம் கபடம், காமம் புகுத்தப்படாமல் அனைவரும் நல்ல நட்பென உணர்த்தப்படுதல் எதிர்காலசமுதாயத்துக்கு நல்லதே.

   ஆணையும் பெண்ணையும் பிரித்தே வைத்து பெண் வெறும் போகப்பொருள் தான் என உணரசெய்யும் ஒன்றாக இருப்பதை நான் கண்டிக்கின்றேன்.

   நீக்கு
  3. உண்மையில் ஐயா இந்த வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் பெண்ணின் வீட்டு வேலைச்சுமை குறித்து நாம் விவாதிக்கத்தான் வேண்டும். இங்கும் அடிப்படை தவறும் தாய் எனும் பெண்ணில் இருந்தே ஆரம்பிக்கின்றது அல்லவா?

   நம் கலாச்சாரத்தில் ஆண் என்பவன் வீட்டு வேலை செய்யக்கூடாது, சமைக்க கூடாது, துணி துவைக்க கூடாது. விளக்குமாறை தொடவே கூடாது என ஆண் எனில் அவன் தனித்துவம் என சொல்லித்தானே பிறப்பு முதல் வளர்க்கின்றோம். அப்படி வளர்த்து விட்டு நாளை அவன் திருமணமாகி மனைவி வந்தபின் வீட்டில் எதுவும் உதவி செய்வதில்லை என எப்படி குறை சொல்லமுடியும்,

   வளரும் போதே ஆணும் பெண்ணும் சரி என சொல்லி வீட்டு வேலைகளை பங்கிட்டு வளர்க்காதது ஏன்? என் வீட்டில் ஆண் பெண் பேதம் இலலி. யாருக்கு நேரமிருக்கின்றதோ அவர்கள் துணி துவைக்க வேண்டும், கிச்சன் பாத்திரம் கழுவ வேண்டும், வீட்டை கூட்டி துடைக்க வேண்டும் என சிறுவயது முதல் கற்பித்தாலும் என் மகன் இன்றும் எனக்கு உதவி தான். இப்படி வளரும் பிள்ளை நாளை தன் மனைவிக்கும் உதவுவான் என்பது நிச்சயம் தானே.. அப்போ இதிலும் அடிப்படை ஆரம்பம் எங்கே தடம் மாறுகின்றதென உணர வேண்டியதும் பெண் தானே ஐயா!?

   நீக்கு
  4. வணக்கம் நான் கல்லூரில் அவர்கள் அமர்ந்திருந்ததை மட்டுமே குறிப்பிட்டேன் இல்லையா.... மரபு மீறக்கூடாது என்பதால் அவர்களின் செய்கைகளை நான் இந்த பொது இடத்தில் எழுதவில்லை..

   எனது கோபம் அவர்கள்மீது என்பதைவிட இவைகளை கண்டு கடந்து சென்ற ஆசிரியர்கள்மீதே...

   நான் அவர்களை கேட்க முடியுமா ? பிறகு எனது தேவைகள் அங்கு பூர்த்தியாகுமா ?

   மனம் புழுங்கி கடந்து விட்டேன்.

   நீக்கு
  5. சோஸியவ் என்ற பெயரில் வறம்பு மீறுவது வேதனையானது

   இதை அவர்களது பெற்றோர் கண்டால் எவ்வளவு வேதனைப்படுவார்கள் ?

   நீக்கு
  6. தொட்டு பேசுவதும், கிண்டல்களும் இன்றைய இளையோரிடம் சகஜம் தானே சார். எல்லாம் நாம் பார்க்கும் பார்வையும், புரிந்து கொள்ளும் புரிதலிலும் தான் சார்.

   நீக்கு
 15. பகுதி - 5

  பெண்கள் என்பவர்கள் சமூகத்தின் சரிபாதியினர். ஒரு சமூகத்தின் சரிபாதி பேரை வீட்டோடு அடக்கி வைத்து விட்டுத்தான் ஒரு சமூகம் ஒழுக்கமாக இருக்க முடியும் என்று சொன்னால், அந்த அளவுக்கு அந்த சமூகம் ஒழுக்கத்தில் கீழ்த்தரமானது என்பதுதான் பொருள். ஒரு சமூகம் எவ்வளவு இழிவான, கட்டுப்பாடு இல்லாத, எதிர்பாலினத்தவரைப் பார்த்தாலே மேலே பாய்கிற அளவுக்குப் பாலின வெறி பிடித்த ஆண்களின் சமூகமாக இருந்தால் பெண்கள் என்றென்றும் வீட்டோடு அடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை அங்கே வலியுறுத்தப்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்!
  நீங்கள் சொல்வது போல, ஒரு சமூகத்தில் பெண்கள் எல்லோரும் எந்த உரிமையும் கேட்காமல், ஆணின் காலைப் பிடித்து விட்டுக் கொண்டு, அவன் கொண்டு வருகிறவற்றை மட்டுமே வைத்துக் குடும்பம் நடத்திக் கொண்டு, அவனுக்கு உடல் இன்பம் அளித்துக் கொண்டு வாழ்ந்தால்தான் அந்த சமூகத்தில் அவர்கள் அமைதியாக வாழ முடியும்; இல்லாவிட்டால் கணவனோடு இணைந்து வாழ அவளுக்கு வாய்ப்புக் கிடையாது என்பதாக இருக்குமானால் அது எப்பேர்ப்பட்ட கேடு கெட்ட அமைப்பு! எனில், பெண்களைப் பார்த்து அந்த சமூகத்து ஆண்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதானே பொருள்? எப்பொழுது ஒருவன் அடுத்தவரை வளர விடாமல் கீழேயே இருக்க வலியுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களோடு இணைந்து வாழ்கிறானோ, அப்பொழுதே அவன் ‘எதிராளி கொஞ்சம் வளர்ந்தால் எங்கே தன்னை மிஞ்சி விடுவானோ’ என அஞ்சுகிற, கோழையிலும் கேடு கெட்ட கோழை என்பது உறுதியாகி விடுகிறது.
  ஆக, பெண்களை வீட்டோடு அடங்கிக் கிடக்கச் சொல்லும் இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பெண்களை மட்டுமில்லை ஆண்களையும் சேர்த்தே இழிவுபடுத்தி விட்டீர்கள்! அதுவும் என் அன்பு நண்பரான நீங்கள் இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறீர்களே என நினைத்து நான் வேதனைப்படுகிறேன்!
  இவ்வளவுக்கும் பிறகும், “இல்லை இல்லை! ஆணோ பெண்ணோ, யாராவது ஒருவர் வீட்டோடு இருப்பதுதான் நல்ல குடும்ப அமைப்புக்கு, நல்ல சமூக அமைப்புக்கு ஏதுவாகும்” என்பது உங்கள் கருத்தாக இருக்குமானால், அப்படி வீட்டோடு அடங்கிக் கிடக்கிற வேலையைப் பெண்களுக்கு பதிலாக இனி ஆண்கள் ஏன் செய்யக்கூடாது என்கிற கேள்வியை நான் உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன்!
  ஏனெனில், இயற்கை அமைப்பு அப்படித்தான் இருக்கிறது. மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராயும் மனிதவியலாளர்கள் (Anthropologists) “மனித இனமே தாய்வழி சமூக அமைப்புடையதுதான்” என்கிறார்கள். அதாவது சிங்கம், புலி போன்ற விலங்குகளில் எப்படிப் பெண் விலங்கு வேட்டையாடியாகவும் ஆண் விலங்கு வீட்டோடு இருந்து தின்று தின்று தூங்கியும் பெண்ணின் இனப்பெருக்கத்துக்கு உதவி செய்தும் மட்டுமே வாழ்நாளைக் கழிக்கிறதாகவும் இருக்கிறதோ, அதே போலத்தான் மனித இனமும் என்கிறார்கள். “பெண்தான் முதலில் வேட்டையாடியாக இருந்தாள். பின்னர் அவள்தான் ஆணுக்கு வேட்டையாடக் கற்பித்தாள். அப்புறம், மனிதர்கள் வேளாண் சமூகமாக மாறிய பிறகுதான், பெண் வீட்டில் இருப்பவளாகவும் ஆண் வேலைக்குச் செல்பவனாகவும் மாறினார்கள்” என்பது ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ள உண்மை.
  ஆக, யாராவது ஒருவர் வீட்டில் அடங்கிக் கிடக்கத்தான் வேண்டும் என்றால் இயற்கையாலேயே வீட்டில் அடங்கிக் கிடப்பதற்கெனப் படைக்கப்பட்டுள்ள ஆணே ஏன் அந்த வேலையைச் செய்யக்கூடாது? இயற்கையே வேட்டையாடுதலுக்கான மூளை அமைப்போடு படைத்துள்ள பெண்ணே வெளி வேலைக்குச் செல்லட்டுமே? என்ன சொல்கிறீர்கள்?!

  (முற்றும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிவில் நான் இரண்டு பாலினத்தையும் தவறாக சொல்லி விட்டதாக சொல்வது போல நீங்கல் சொல்லி விட்டீர்கள்

   ஒழுக்கம் இருபாலருக்கும் பொதுவானதே.... இதில் எனக்கு என்றுமே மாற்றுக்கருத்து இருந்ததில்லை.

   ஒரு பதிவில் நான் கேட்டது போல...
   இந்த சமூகத்திலே பொண்டாட்டி செத்துட்டா புருசன் புது மாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருசன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணா ஆகுறது இல்லையே ஏன்
   என்று நிறைய கேள்விகள் கேட்டு இருந்தான் வேண்டுமானால் இந்த இணைப்புக்கு செல்லுங்கள்

   http://killergee.blogspot.com/2015/02/my-long-time-confusion.html

   தலைப்பு – My, Long Time Confusion
   2015 – பிப்ரவரி.
   எப்படியோ இந்த தலைப்பு தங்களை அழைத்து வந்ததற்கு மனம் நிறைந்த நன்றி

   தாங்கள் இதை பதிவாகவே எழுதி இருக்கலாம் நண்பரே....

   நீக்கு
  2. என்னுடைய கருத்துக்களை மதி்த்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விடை அளித்ததற்கு முதலில் நன்றி நண்பரே!

   ஆம்! நான் சில இடங்களில் சொற்களைக் கடுமையாகக் கையாண்டிருந்தேன்; உண்மைதான். ஆனால், நல்ல பதிவு எழுதும்பொழுது பாராட்டுபவனுக்குக் கெட்ட பதிவுக்கு எதிராகக் கண்டிக்கும் உரிமையும் உண்டு என்று நினைத்தேன். நட்புக்கு அந்தக் கடமை உண்டு என்று நினைத்தேன். இல்லை என்கிறீர்களா?

   உங்களுடைய எல்லாப் பதிவுகளையும் நான் படிகக வருவது இல்லைதான். புதுமையான, என்னை ஈர்க்கக்கூடிய தலைப்பு இருந்தால் மட்டுமே வருகிறேன்; மறுக்கவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக உங்கள் பதிவைப் படிப்பவன் எனும் முறையில், நீங்கள் பெண்கள் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர் என்பதுதான் என் நம்பிக்கை. அதைப் பாதிக்கும் வகையில் உங்களிடமிருந்து ஒரு கருத்து வந்தால் அதை எதிர்க்கும் உரிமையும் எனக்கு உண்டு இல்லையா?

   என் கருத்துக்களுக்கான விடையாக நீங்கள் உங்களுடைய பழைய பதிவுகளை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அதையேதான் நானும் சொல்கிறேன். அப்படியெல்லாம் பதிவு எழுதிய உங்களுக்கு இன்று என்ன ஆயிற்று என்பதுதான் என் வியப்பே!

   நீங்கள் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை என்கிறீர்கள். நல்லது, அதை நீங்கள் பதிவிலும் குறி்ப்பிட்டிருந்தால் நான் இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருந்திருக்காது. பெண்கள் என இல்லை. எந்தத் தரப்பினராக இருந்தாலும், குறை சொல்லும்பொழுது, குற்றம்சாட்டும்பொழுது பொத்தம்பொதுவாக இல்லாமல் குறிப்பாக யாரைச் (அல்லது எப்படிப்பட்டவர்களை) சொல்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு எழுதினால், நான் மட்டுமி்ன்றிப் புதிதாகப் படிப்பவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாதிருக்கும்.

   இவ்வளவு கடுமையான கருத்துக்கும் இவ்வளவு பெருந்தன்மையோடு பதில் எழுதிய உங்கள் அன்பினுக்கு நன்றி! நேரம் கிடைத்தால் வலைப்பூப் பக்கம் வந்து பாருங்கள்! உங்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது.

   நீக்கு
  3. கடைசியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். இந்தக் காலத்திலும் பெண்கள் ஏராளமானோர் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்கள்; அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்களில் யாரோ சிலர் தவறு செய்வதை வைத்து எல்லாரையும் பொத்தம்பொதுவாகக் குறை சொல்லாதீர்கள் என்பதுதான். அப்படிச் சொல்வது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழாத பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற குற்ற மனப்பான்மையைத் தூண்டுவதாக அமையும்! ஏற்கெனவே இன்றைய ஆண்கள் பலர் அப்படி இருக்கிறார்கள். அந்த மனப்போக்கை மேலும் மேலும் தூண்டும் விதமாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!

   நீக்கு
  4. கருத்துரை எப்படி இருந்தாலும் அதற்கு மறுமொழி கொடுக்க வேண்டியது பதிவரின் கடமை.

   பாராட்டுகளை சந்தோஷமாக ஏற்கும் நான் முரண்பட்ட கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் என்னைப்போன்ற கத்துக்குட்டி பதிவர்களுக்கு அழகு.

   மேலும் தாங்கள் படித்தவுடன் சட்டென உணர்ச்சி வசப்பட்டுவிடுகின்றீர்கள் இதை நான் பலமுறை அறிந்தவன்.

   நான் ஆணோ, பெண்ணோ தவறுகளை சுட்டிக்காட்டவும், நன்மைகளை பாராட்டவும் தயங்குவதில்லை

   நீக்கு
  5. மேலும் தவறுகளை சுட்டிக்காட்டுவது நல்ல நண்பர்களின் கடமையும்கூட...தயக்கம் வேண்டாம்

   இன்று செவ்வாய்க்கிழமை வடக்கே சூலம் ஆகவே நாளை புதன்கிழமை தங்களது தளம் வருகிறேன்.

   நான் செல்லில் மறுமொழி கொடுப்பதால் விரிவாக எழுத இயலவில்லை நன்றி வாழ்க நலம்.

   நீக்கு
  6. இவ்வளவுக்கும் பிறகும் நான் வெறும் உணர்ச்சிவசப்பட்டுத்தான் அந்தக் கருத்துக்களை எழுதியிருக்கிறேன் என நீங்கள் நினைக்கிறீர்கள். நான் எதற்காகச் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டேன்கிறீர்கள். வருந்துகிறேன்!

   //இன்று செவ்வாய்க்கிழமை வடக்கே சூலம்... புதன்கிழமை வருகிறேன்// ஹாஹ்ஹாஹா!!

   நீக்கு
  7. வடக்கில் சூலம் வந்தால் தெற்கில் போயிருந்து விவாதியுங்கள். இதுக்கெல்லாமா நேரம் காலம் பார்ப்பீர்கள்.

   நீக்கு
  8. பெண்கள் ஏராளமானோர் ஒழுக்கமாய்த்தான் இருக்கின்றார்கள். அங்கொங்கும் இங்கொன்றுமாய் //////////////////// ஹாஹாஹாஹாஹா ஐயா நீங்கள் இந்த பூலோகத்தில் தானே ஐயா இருக்கின்றீர்கள். ஐயோ ஐயோ.. ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயோ. இதை கேட்க ஆளே இல்லையா.. இந்த ஐயாவுக்கு.. கொஞ்சம் ஊருலகத்தை பத்தி சொல்லுங்கப்பனே! இப்போது எங்க பெண்ணிடம் பொறுமையும், நிதானமும் உண்டு ஐயா. போட்டியும், பொறமையும், பெருமையும், ஆடம்பரமும், அதிகாரமும், ஆணவமும் அல்லவோ மலிந்து கொண்டுள்ளது.

   உங்கள் வீட்டில் மாமியார் மருமகள் சண்டை வருவதில்லையா ஐயா?

   வீட்டு வேலை செய்ய பிடிக்காத சமைக்க பிடிக்காத பெண்கள் கொண்ட மின்னல் ச்முதாயம் உருவாகிக்கொண்டுள்ளது ஐயா.

   நீக்கு
  9. நிஷா அவர்களே! என்ன நினைப்பில் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்? என்னதான் சொல்ல வருகிறீர்கள்? மாமியார் - மருமகள் சண்டை வந்தால், அப்படிச் சண்டையிடும் பெண்கள் நல்ல பெண்கள் இல்லையா? அப்படியெல்லாம் பார்த்தால் உலகில் யாருமே நல்ல பெண்கள் இல்லை.

   பெண்ணடிமைத்தனம் என்பது சமூகத்தைப் பல்லாண்டுகளாகப் பீடித்திருக்கும் நோய். பாரதியார், பெரியார், இராசாராம் மோகன்ராய், மரு.முத்துலட்சுமி போன்ற முன்னோடிகள் பலரின் அயரா உழைப்பும் தொடர் போராட்டமும் காரணமாக அண்மைக்காலமாகத்தான் பெண் விடுதலை என்பது ஓரளவுக்காவது சாத்தியமாகி இருக்கிறது. பல காலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தரப்பினர் புதிதாக விடுதலையைப் பெறும்பொழுது அந்த விடுதலையை எப்படிப் பயன்படுத்துவது எனும் வரைமுறை தெரியாமல் கொஞ்சம் அத்துமீறுவது இயல்பே. இது பெண்களுக்கு மட்டுமில்லை, அடக்கி வைக்கப்படும் எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். அதற்காக, பெண்கள் யாருமே சரியில்லை, அவர்களை மீண்டும் அடக்கி வைத்தாள வேண்டும் என உங்களைப் போன்றோர் (கில்லர்ஜி உங்களையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறேன்) எழுதக் கிளம்பியிருப்பது பெண்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்களையும் இன்ன பிற தாக்குதல்களையும் இன்னும் பெருக்கும் என்பதை உணருங்கள்!

   எழுதப்பட்ட பதிவே தவறு என்பது ஒருபுறம் இருக்க, அதிலுள்ள தவற்றை எடுத்துக்காட்டினாலும் புரிந்து கொள்ளாமல் செய்த தவற்றை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தி எழுதும் உங்களைப் போன்றோரின் பதில்கள் என் சீற்றத்தை மேலும் மேலும் தூண்டுகின்றன. வேண்டா! இத்தோடு நிறுத்திக் கொள்வோம். அதுதான் பதிவுலக ஒற்றுமைக்கு நல்லது!

   நீக்கு
  10. நண்பர் கில்லர்ஜி அவர்களே!

   நான் நேற்றைய கருத்தோடு போயிருப்பேன். ஆனால், இன்று நிஷா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் என்னை மேலும் உசுப்பி விட்டு விட்டன. எனவே, என் மனதில் இருப்பதைக் கடைசியாக ஒருமுறை தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

   நான் உணர்ச்சிவசப்பட்டு எழுதி விட்டதாக நீங்கள் கூறுவதைப் பார்த்தால், "எல்லாப் பெண்களையும் நான் சொல்லவில்லை" என்று நீங்கள் கூறிய சமாதானத்தை ஏற்று என் கண்டனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாக நினைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படி இல்லை. உங்களுடைய அந்த சமாதானத்தை நான் ஏற்றுக் கொண்டது நட்பு நாகரிகம், அவை நாகரிகம் கருதித்தான். ஒரு விவாதம் என வரும்பொழுது ஒருவர் தன் கருத்திலிருந்து கொஞ்சம் இறங்கி வந்தால்தான், அடுத்தவரும் தன் இடத்திலிருந்து இறங்கி வந்து நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார் என்பதற்காகத்தான். அந்த நாகரிகம் கருதித்தான், நான் கூறும் பிரச்சினையில் உள்ள தீவிரத்தை உங்களுக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுடைய அந்த சமாதானத்தை நான் ஏற்பதாகக் கூறினேனே தவிர, முழு மனதோடு ஏற்கவில்லை. ஏன் ஏற்கவில்லை எனக் கேட்டால், நீங்கள் கூறுகிற அந்த சமாதானக் காரணம், இந்தப் பதிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாதது.

   பெண்கள் குடிப்பது, புகை பிடிப்பது, ஒழுங்கீனமாக நடப்பது போன்றவற்றை நீங்கள் கண்டித்திருந்தால் நானும் உங்களோடு இணைந்து கண்டிக்கவே செய்திருப்பேன். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், உங்கள் பதிவு அவற்றைப் பற்றியதே இல்லை. பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவளாகவே இருக்க வேண்டும், விடுதலை உணர்வு இருக்கக்கூடாது, வெறுமே ஆணுக்கு உடல் இன்பம் அளிப்பதும் பிள்ளை பெற்றுத் தருவதும் மட்டுமே அவள் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் பதிவின் சாரம். இந்தப் பெண்ணடிமைக் கருத்துக்கள் தவறு என்பதே என் வாதம். இவற்றை நீங்கள் எல்லாப் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கூறுகிறீர்கள். ஆக, இதில் "எல்லாப் பெண்களையும் குற்றம் சொல்லவில்லை" என்கிற விளக்கத்துக்கே இடம் இல்லை.

   ஆகவே, இப்பொழுதும் சொல்கிறேன். உங்கள் பதிவு தவறு, தவறு, முற்றிலும் தவறே!

   மனம் புண்படும்படி ஏதாவது பேசியிருந்தால், அதற்காக வேண்டுமானால் உங்களிடம், நிஷா அவர்களிடம், கீதா சாம்பசிவம் அம்மையாரிடம் என அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இந்தப் பதிவும் இதை நியாயப்படுத்தும் விதமாய் நீங்கள் கூறுபவையும் தவறு என்கிற என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காரணம், என்னுடைய அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் அளவுக்குச் சரியான எந்த ஒரு வாதத்தையும் நீங்கள் யாரும் முன்வைக்கவில்லை. ஆண்கள், பெண்கள் என நம் பதிவுலகில் இருக்கும் அனைவருமே இந்த அளவுக்கு பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துபவர்களாக இருப்பது கண்டு நான் மிகவும் வேதனையும் மன உளைச்சலும் அடைந்துள்ளேன்! எனவே, இனியும் இது தொடர்பாக நான் ஏதும் பேசுவதாக இல்லை. ஆகவே, யாரும் இது தொடர்பாக என் கருத்துக்களுக்கு பதிலளித்தோ, என் பெயரைச் சொல்லி விவாதத்தை முன்னெடுத்தோ மேலும் என்னை வேதனைப்படுத்த வேண்டா! வருகிறேன்! நன்றி! வணக்கம்!

   நீக்கு
  11. நண்பருக்கு பெண்களை அடக்கி வைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை.

   கிடைத்த பெண்ணுரிமையை மாசு படுத்த வேண்டாம் என்ற கருத்தை வலியுருத்தியே எனது எண்ணங்களை பதிந்து இருக்கிறேன்.

   பாரதி சொன்ன புதுமைப்பெண் இவர்கள் அல்ல!
   அவர் உயிருடன் இருந்தால் வேதனையே பட்டிருப்பார் அவர் போராடிப் பெற்றுத்தந்த பெண்ணுரிமை இன்று அலங்கோலப் படுகிறது இதுதான் நடைமுறை உண்மை.

   நீக்கு
  12. நண்பருக்கு கருத்து மோதல்களால் பல விடயங்கள் இரு புறமும் மட்டுமல்ல பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

   யாரும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை அது நட்பூ'க்கு களங்கம்.

   நீக்கு
 16. நிஷாவின் பதிவையும் படிச்சுட்டு வரேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்து கருத்தும் இட்டமைக்கு நன்றிமா

   அறிமுகத்துக்கும் நன்றி கில்லர்ஜி சார்

   நீக்கு
 17. ம்ம்ம்ம் நிஷாவின் பதிவையும் படித்தேன். அவர் சொல்லி இருக்கும் கோணம் ஏற்கக் கூடியதே! இங்கே திரு ஞானப்பிரகாசன் அவர்களின் கருத்துக்களையும் படித்தேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்தை படித்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
  2. ஆல்ப்ஸ்தென்றலிலும் இங்கும் உங்கள் கருத்தினை இட்டமைக்கு நன்றி கீதா சாம்பசிவம் அம்மா.

   என் எழுத்துக்கள் அனைத்தும் அனுபவத்தில் இருந்து எழுதப்படுபவை. நான் ஷோஷியல் வோர்க்கரும் என்பதனால் குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள்ளான மனஸ்தாபங்கள் நேரம் அப்பிரச்சனைக்காக அடித்தளம் என்ன என்பதை ஆராய்ந்து ஆலோசனை தரும் வேளையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக பெண்ணீல் மன மாற்றமே அவசியமாக இருபப்தை உணர்ந்ததனாலும். பெரும்பாலான குடும்பங்களில் ஆண் என்பவன் குடிகாரனாயிருந்தாலும் பெண் எனும் ஆணி வேர் சரியாக திடமாக இருந்தால் அக்குடும்பம் சீராகவே செல்லும் என்பதையும் உணர்ந்ததனால் எழுதப்பட்டதே என் பதிவு. இதுவே ஆண் நல்லவனாயிருந்து பெண் சரியில்லாத வீட்டில் சாத்தியமாவதே இல்லை.

   பெண் சரியாக இருக்கும் வீடு கோயில் போலவும், பெண் சரியில்லாத வீடு சந்தைமடம் போலவும் இருபப்து தானே உண்மை. பெண்களாக நாங்கள் இதை புரிந்து கொள்ளாமல் எடுத்ததுக்கெல்லாம் குற்றம் குறை சொல்லாமல் நம்மை நாம் உணர வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு,.

   இதில் விதிவிலக்குகள் உண்டு. ஹிட்லர் போல் அடிமைப்படுத்தும் ஆண்களை குறித்தும் பெண் எனில் வீட்டு வேலைக்காரி எனும் புரிதலில் அடிமையாக ந்டத்தும் சிலர் குறித்தும் நான் கருத்திடவில்லை. பெரும்பான்மை சூழலை மட்டுமே கருத்தாக்கினேன்.

   நீக்கு
 18. திரு ஞானப்பிரகாசம் அவர்கள் பெண் விடுதலை என்பது அவள் படித்து முன்னேறுவதிலும் ஆணுக்கு நிகராகப் பெண் வேலைகளுக்குச் செல்வதிலும் இருக்கிறது என்கிறார். உண்மை! ஆனால் அதோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. சுதந்திரம் என்னும் பெயரால் நவநாகரிகப் பெண்கள் செய்யும் ஒரு சில தேவையற்ற செயல்களைத் தான் கண்டிக்கிறோம். அதனால் ஒட்டு மொத்தப் பெண் சமூகத்துக்கேக் கெட்ட பெயர் உண்டாகிறது. பல குடும்பங்களில் இப்போதைய காலகட்டத்தில் ஆண் "தாயுமானவனாக" இருந்தே வருகிறான். ஆனாலும் ஆண் என்பதால் அவனுக்கு வாய் விட்டு அழ முடியாது! அவன் கௌரவத்தைக் காத்துக்கொண்டே வாழ வேண்டி உள்ளது. டாஸ்மாக்கை நாடிச் செல்லும் ஆண்களைக் குறித்து இங்கே பேச்சில்லை. நிஷா சொல்லி இருப்பதும் சரி, கில்லர்ஜி சொல்லி இருப்பதும் சரி. பெண் என்பவள் அன்பால் அடக்கி ஆளவேண்டும், அதிகாரத்தாலோ, போட்டி போட்டோ ஆணை அடக்கியோ செய்ய வேண்டியதில்லை என்பதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தாங்கள் சொல்வது போல சிலரால் ஒட்டு மொத்த பெண்ணினமும் பாதிக்கப்படுகின்றதே இதையே நானும் வலியுறுத்துகிறேன்.

   சில இடங்களில் ஆண் தாயுமானவனாய் இருக்கின்றான் உண்மை நானும் பார்த்து, கேட்டு இருக்கிறேன்.

   ஒரு உண்மைச்சம்பவம்...

   ஆணொன்று, பெண்ணொன்று பெற்ற குடும்பம் மனைவி இன்னொருவனுடன் கள்ளக்காதல் பிரச்சனையாகி பஞ்சாயத்து கணவன் மனைவியை பிரித்து விட்டார்கள் கணவனோடு பெண் பிள்ளை, மனைவிக்கு பாதுகாப்புக்கு ஆண் பிள்ளை வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.

   கணவன் பெண் பிள்ளையோடு வாழ்கிறான்

   மனைவி ஆண் பிள்ளையோடும், கள்ளக் காதலனோடும் காலம் போக போக பிள்ளை வளர்கிறான் இந்த வளர்ச்சி கள்ளக்காதலனுக்கு இடையூறு முடிவு ஆண் மகனை கிணற்றில் தூக்கிப்போட்டு விட்டான் காரியம் முடிந்து விட்டது வேறு வழி மனைவியும் கள்ளக்காதலனோடு ஊரைவிட்டு ஓட எவ்வளவு நாள் ? போலீஸ் பிடித்து இருவரும் ஜெயிலில்....

   அந்தக்கணவன் ஆண் மகனை கட்டிப்பிடித்து அழுதததை காண வேண்டுமே....

   கோவையில் நடந்த சம்பவம்.

   இதைப்போல இருபாலரும் தவறாக நடக்கத்தான் செய்கின்றார்கள்,

   நீக்கு
  2. மதிப்பிற்குரிய கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வணக்கம்!

   உங்கள் கருத்து ஒருதலையாக இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். டாசுமாக்கை நாடிச் செல்பவர்கள் குறித்துப் பேச்சில்லை என்கிறீர்கள். கட்டுரையிலோ பெண்கள் குடிக்கும் படம் வைக்கப்பட்டிருக்கிறது! அப்படியிருக்க டாசுமாக்கைப் பற்றிப் பேச்சில்லை என எப்படிச் சொல்ல முடியும்?

   மேலும், கட்டுரையின் மையக் கருத்தே, பெண்கள் தன்மானம் எனும் பெயரால் தங்கள் வாழ்வைக் கெடுத்துக் கொள்கிறார்கள், மணவிலக்குப் பெறுகிறார்கள் என்பதுதான். ஆனால், நான் அதை மறுத்து, பெண்களின் வாழ்க்கை (ஆண்களின் வாழ்க்கையும் சேர்த்து) கெடுவதற்குக் காரணமே ஆண்களின் குடிப் பழக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தாம் என்கிறேன். ஆக, இதில் குடிப் பழக்கம் குறித்துப் பேசவில்லை என்பது பொருந்தாது. அவர் பேசவில்லைதான். ஆனால், அவர் அதைப் பேசாமல் விட்டது, சிந்திக்காமல் விட்டதுதான் தவறு என்பது என் வாதம்.

   மேலும், ஆண்கள் தாயுமானவனாக இருக்கிறார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அதை ஏன் நான் என் கருத்தில் குறிப்பிடவில்லை என்றால், இந்தக் கட்டுரை போன தலைமுறைப் பெண்கள் வாழ்ந்த முறை சரி, இந்தத் தலைமுறைப் பெண்கள் வாழும் முறை தவறு என்கிற அடிப்படையிலானது. எனவே, இப்படிப்பட்ட ஒரு கட்டுரையில் நான் அந்தக் காலத்து ஆண்கள் பற்றித்தான் பேச முடியுமே தவிர, இந்தக் காலத்தில் பெண்களுக்கு உதவியாக வீட்டு வேலை செய்வது முதல் பிள்ளை வளர்ப்பது வரை அனைத்திலும் பங்கு கொள்ளும் புதிய தலைமுறை ஆண்கள் பற்றிப் பேச இடமில்லை அல்லது அது தேவை என நான் நினைக்கவில்லை.

   பொதுவாக, உங்களுக்கும் சரி, நண்பர் கில்லர்ஜிக்கும் சரி, நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். இந்தக் காலத்திலும் பெண்கள் ஏராளமானோர் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்கள்; அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்களில் யாரோ சிலர் தவறு செய்வதை வைத்து எல்லாரையும் பொத்தம்பொதுவாகக் குறை சொல்லாதீர்கள் என்பதுதான். அப்படிச் சொல்வது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழாத பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற குற்ற மனப்பான்மையைத் தூண்டுவதாக அமையும்! ஏற்கெனவே இன்றைய ஆண்கள் பலர் அப்படி இருக்கிறார்கள். அந்த மனப்போக்கை மேலும் மேலும் தூண்டும் விதமாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!

   நன்றி! வணக்கம்!

   நீக்கு
  3. நண்பருக்கு நானோ... சகோ கீதா அவர்களோ.. எந்த இடத்திலும் ஒட்டு மொத்த பெண்களையும் குற்றம் சொல்லவில்லை ஒரு சில பெண்களால் பெண்ணினத்தின் பெயர் களங்கமாகிறது என்பதையே சொல்லி இருக்கிறோம்.

   இந்தக் காலத்திலும் பெண்கள் ஒழுக்கமுடன் வாழத்தான் செய்கிறார்கள் அதற்கு வெளியே தேடவேண்டாம் நமது குடும்பங்களே சாட்சி.

   மேலும் தவறான வார்த்தைகளை நான் எந்த இடத்திலும் உபயோகப் படுத்தவில்லை என்பதையும் ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.

   மீள் வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
  4. திரு ஞானப்பிரகாசம், நான் ஒட்டுமொத்தப் பெண் குலத்தையும் இங்கே சொல்லவில்லை என்பதை என் கருத்திலே தெரிந்து கொள்ளலாம். டாஸ்மாக்கைப் பற்றி ஏன் பேசவில்லை என்றால் இதில் அதிகம் பாதிப்படைந்திருப்பது தற்கால நவநாகரிகப் பெண்களே! பல பெண்களும் கூட இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே ஆணை மட்டும் குற்றம் சொல்லி என்ன செய்ய முடியும்? ஆணோ, பெண்ணோ தவறாக நடந்து கொண்டால் கண்டிக்கத் தான் வேண்டும். நீங்கள் சொன்னதில் ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை வாழாத பெண்களை ஆண்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள், அவர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பது உண்மையே! ஆனால் எல்லாப் பெண்களிடமும் ஆண்கள் இப்படி நடந்து கொள்வதற்கு உங்கள் பதில் என்ன? கொஞ்சம் சிரித்துப் பேசினாலே "காதல்" என்று முடிவு செய்பவர்களை, அந்தப் பெண் "காதல்" இல்லை என்று சொன்னால் அதற்காக அவள் முகத்தில் ஆசிடை ஊற்றியோ, அல்லது அந்தப் பெண்ணைக் கொலை செய்தோ தன் சுயத்தைத் திருப்தி செய்து கொள்ளும் ஆண்களை என்ன சொல்வது? தினசரியை எடுத்தால் திருமணமான பெண்களின் கள்ளக்காதலும், கல்லூரி, வேலைகளுக்குச் செல்லும் பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஆணும் பழி வாங்கியது தான் செய்தியாக வருகிறது. ஆகவே தான் இங்கே இருபாலருக்கும் தேவையான ஒழுக்கம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றோர் ஒழுக்கம் நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டும்.

   நீக்கு
  5. சமீபத்திய கருத்து என்னவெனில் "ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்கும் பெற்றோர்" தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே! அதே ஒழுக்கம் பெண் குழந்தைகளுக்குத் தேவை இல்லையா? அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தாக வேண்டாமா? ஒரு தலைப் பட்சமாகச் சொல்லக் கூடாது அல்லவா?

   நீக்கு
  6. கீதா சாம்பசிவம் அவர்களே! நீங்கள் நான் சொல்ல வருவதை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை.

   நீங்கள் எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லவில்லை என்பது எனக்குப் புரிகிறது. நன்றி!

   ஆனால், டாசுமாக் பற்றிப் பேசாமல் தவிர்த்ததற்கான காரணமாக நீங்கள் குறிப்பிடுகிற காரணம் பொருந்தாது. "பெண்களும் இப்பொழுது குடிக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே, ஆணை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?" என்கிறீர்கள். இதற்கும் நான் டாசுமாக் பற்றி எழுதிய கோணத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பெண்களும் இந்தக் காலத்தில் குடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், டாசுமாக் பற்றி நான் குறிப்பிடுவது அது தொடர்பானதே இல்லை. மணவிலக்கு, கணவனோடு இணைந்து வாழாமல் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வது ஆகியவற்றுக்குக் காரணம் பெண்கள் விடுதலை கேட்பதுதான் என்று கில்லர்ஜி எழுதியிருக்கிறார். அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் பெண்களின் விடுதலை உணர்வு இல்லை; ஆண்களின் குடிப் பழக்கம் என்கிறேன் நான். குடிப் பழக்கத்தால் குடி கெடுகிறது என நான் சொல்லிவிட்ட பிறகு குடிப்பது ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? இரண்டையுமே நான் கண்டிக்கிறேன் என்பதுதானே பொருள்? இதற்கும் பெண்களின் விடுதலை உணர்வு காரணமாகத்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள் எனக் கில்லர்ஜி எழுதியிருப்பதற்கும் என்ன தொடர்பு?

   மேலும், நான் எழுதிய இன்னொரு கருத்தையும் முற்றிலும் தவறான கோணத்தில் புரிந்து கொண்டு கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள். "கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழாத பெண்களை ஆண்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள். தவறாக நடந்து கொள்கிறார்கள்" என்று நான் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டு, "எல்லாப் பெண்களிடமும் ஆண்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி உங்கள் பதில் என்ன" என்று என்னைக் கேட்டிருக்கிறீர்கள். நான் அப்படி ஒரு பொருளில் எழுதவேயில்லை! நீங்கள் எப்படி இந்த அளவுக்குத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் என நான் வியக்கிறேன்!

   நான் சொல்லியதே வேறு. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் சிரிக்க வேண்டும், இப்படித்தான் உடுத்த வேண்டும் என ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகளை இட்டு வைத்து, அவற்றை இப்படிப்பட்ட பதிவுகள் மூலம் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருந்தால், இப்படியெல்லாம் இல்லாத பெண்கள் தவறான பெண்கள் போல, அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல என்கிற மனப்பான்மை ஆண்களிடம் வளர்கிறது என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

   அதாவது பெண்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்காதீர்கள்; குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் பெண்களை இப்படியெல்லாம் தூற்றாதீர்கள் என்பதுதான் நான் உங்களுக்கும் கில்லர்ஜிக்கும் சொல்ல வந்தது. இங்கே நான் கட்டுப்பாடு என்று குறிப்பிட்டது பெண்களுக்கு மட்டுமே என வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை. அதாவது பெண் என்பவள் படிக்கக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது, இரவில் தனியே போகக்கூடாது, ஓசை எழும்பச் சிரிக்கக்கூடாது எனப் பெண்களுக்கு மட்டுமே எனச் சில கட்டுப்பாடுகளை இந்த சமூகம் வைத்திருக்கிறது. அதைத்தான் கில்லர்ஜியும் கட்டுரையில் வலியுறுத்தியிருக்கிறார். ஆகவே, "அப்படிப் பெண்களுக்கு மட்டுமே எனக் கட்டுப்பாடுகளை இடக்கூடாது. அப்படிச் செய்வது தவறு. இது பெண்ணடிமைத்தனம். இப்படிப் பெண்களை அடிமைப்படுத்தும் தவறான கட்டுப்பாடுகளை நாம் வலியுறுத்தினால் அந்தத் தவறான கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் சரியான பெண்களையும் தவறான பெண்கள் என ஆண் சமூகம் கருதும். அப்படிக் கருதும் போக்கு இன்று வளர்ந்திருக்கிறது. அதை மேலும் தூண்டாதீர்கள்" என்பதுதான் நான் சொன்னது.

   ஆனால், நீங்களோ நான் ஏதோ பெண்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது போல, அப்படிப்பட்ட கட்டுப்பாடான பெண்களையும் தாக்கும் ஆண்கள் பற்றி என் கருத்து என்ன என்று கேட்டிருக்கிறீர்கள்! நீங்கள் என் கருத்துக்கள் அனைத்தையுமே முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்! மிக மிக வருந்துகிறேன்!

   நீக்கு
  7. அடுத்ததாக, "ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும்" என அண்மைக்காலமாக வலியுறுத்தப்படுவது பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கருத்து.

   நீங்கள் இதையும் தவறான கோணத்திலேயே அணுகுகிறீர்கள். மேற்படி கருத்து வலியுறுத்தப்படுவது நீங்கள் சொல்லும் கோணத்தில் இல்லை. ஆண்கள்தாம் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்துகிறார்கள், திராவகம் வீசுகிறார்கள், பெண் என்பவள் தனக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் யாரும் ஆண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவோ, திராவகம் வீசியதாகவோ, கணவன் தன் காலடியில் இருக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்துவதாகவோ எங்கும் காணோம். எனவேதான், இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்கள், மனப்பாங்குகள் இல்லாமல் ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்கிற கோணத்தில் மேற்படி கருத்து கூறப்படுகிறது. இதை எப்படிப் பெண்ணுக்கும் சேர்த்துக் கூற முடியும்? இவையெல்லாம் ஆணுக்கு மட்டுமே உள்ள கெட்ட பழக்கங்கள். எனவேதான், ஆண் குழந்தையை ஒழுக்கமாக வளர்க்குமாறு கூறுகிறார்கள். மற்றபடி, நீங்கள் கூறுவது போல் ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவானதுதான். குடி, புகை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது, கற்போடு வாழ்வது போன்றவையெல்லாம் இரு பாலருக்கும் சேர்த்துத்தான். அப்படிப்பட்ட விதயங்கள் குறித்துப் பேசும்பொழுது இவையெல்லாம் இரு பாலருக்கும் சேர்த்தேதான் வலியுறுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் காணலாம்.

   நீக்கு
  8. ஐயா! உங்கள் கருத்திலேயே உங்களுக்காக பதில் உண்டே.ஆணூக்காக குணம் என ஏதேனும் வரையறைப்படுத்தியது உண்டோ? ஆணும் பெண்ணும் பெண் எனும் தாயின் கருவரையில் உருவாகி.. பெண்ணால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்படும் போது பெண் தனக்கான கடமையை சீராக செய்யும் போது ஆண் ஏன் தடம் மாறுகின்றான்?

   கற்பழிப்புக்கள், தீராவக வீச்சுக்கள் நடத்திய சம்பவத்தில் பின்னனியிலிருக்கும் ஆணின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்து பாருங்கள். அவன் வாழ்க்கையில் இவ்வாறு செயல்பட அவள் வளர்ப்பும் வளர்ந்த சூழலும் அவன் குடும்பமும் நிச்சயம் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கும்.

   குப்பையில் மாணிக்கங்கள் கிடைப்பது மிக மிக அரிதாய்த்தானே? ஆனால் சேற்றினில் செந்தாமரை மலர வைக்க முடியும் ஐயா.

   கற்பு விட்யம் ஆணுக்கும் பெண்னுக்கும் பொது என சொன்னாலும் அதன் விளைவுகளும் தொடர்ச்சிகளும் பெண்ணுக்குத்தான் பாதிப்பை தருவதனால் இவ்விடயத்திலும் இருவரையும் ஒரே தராசில் நாங்கள் நிறுத்தி பார்க்க முடியாது.

   பெண் பெண் தான்.
   ஆண் ஆண் தான்.

   மலையேறினாலும், மரமேறினாலும், விண் மேவினாலும், பெண்ணுக்காகதை பெண் அனுபவித்தே ஆக வேண்டும் எனும் போது அவள் தனக்காகதை தான் தான் உனர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டும்,

   பல நேரங்களில் பெண்ணுக்கு நிகராக ஆண்கள் வரவே முடியாது. பெண்ணுக்காக உயரம் தொட எவஃராலும் முடியாது என்பதை பெண் உணர வேண்டும்.

   நீக்கு
  9. நிஷா அவர்களே! உங்களைப் போல் நான்கு பேர் இருந்தால் போதும். பெண்கள் மீண்டும் அடுப்படிப் பொறிகளாகவும் படுக்கையறைப் பாவைகளாகவுமே ஆகி விடுவார்கள்!

   நீக்கு
  10. நண்பருக்கு....
   கருத்து மோதல்கள் வரலாம் ஆனால் வார்த்தைகளில் மரபு மீறவேண்டாம் அதுதான் தமிழனின் பண்பாடு...

   செல்லில் எழுதுவதால என்னால் மேலும் விளக்கம் தர இயலவில்லை.

   நீக்கு
  11. ஞானப்பிரகாசன் ஐயா, முதலில் நீங்கள் என்னுடைய அனைத்து பின்னூட்டங்களையும் படியுங்கள். உலகைசுற்றி பாருங்கள். என்னைப்போல் நான்கு பேர் இருந்தால்.......... ? எனக்கு உங்களை யாரென தெரியும். உங்களுக்கு என்னை யாரென தெரியாததும் உங்கள் அனுபவமும், வயதும் வார்த்தைகளை கட்டுப்படுத்தினாலும் எழுத்தில் மட்டும் சுதந்திரத்தினை காட்டி வாழும் பெண் நான் அல்ல. என் எழுத்துக்களை என்னை நேரில் பார்த்து பழகி நன்கறிந்தோர் பலர் படிக்கின்றார்கள். நான் விதைப்பதும் அறுப்பதும் எவை என நான் மட்டுமல்ல என்னை சார்ந்தோரும் நன்கே அறிவார்கள்.

   நீங்கள் இட்ட கருத்துக்கள் பெண்ணுக்கு சார்பானதென நான் பெருமைப்பட முடியாது. இன்றைய உலகில் உண்மை எங்கள் முகத்தில் மிக மிக மோசமாக அறைந்து நிற்கின்றது. நாளைய எதிர்கால பெண்கள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

   பெண் சுதந்திரம் எனும் பெயரில் சீரழியும் குடும்ப வாழ்க்கை, கட்டுப்பாடுகள் டேட்டிங்குகள், டிஸ்கோத்தேக்கள், முறையற்ற பாலியன் உறவுகள் மேலைத்தேய நாடுகளை விட கலாச்சார தொன்மை கொண்டை எங்கள் மக்களை அதிகமாக பாதித்து கொண்டிருக்கின்றது.

   கானல் நீரை நிஜமென நம்பும் கிணற்றுத்தவளைகளாக இருக்காமல் உலகையும் ஊரையும் சுற்றிப்பாருங்கள். உங்கள் வீட்டுப்பெண்களை வைத்து மட்டும் உலகத்து பெண்களை எடை போடாதீர்கள்.

   பெண் சுதந்திரம் எனும் பெயரில் எழுதும் எழுத்துக்களிலும், நடத்தையிலும் செய்கையிலும், வன்முறை, வரைமுறையின்றி பாலியல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி, எழுதும் பெண்கள் அதிகமாகிகொண்டிருக்கின்றார்கள். பேஸ்புக்கில் போய் பாருங்கள் ஐயா. பெண்ணுக்கான சுதந்திரம் எப்படி தாறுமாறாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ரது என்பது புரியும்.

   நீக்கு
  12. அதெல்லாம் இருக்கட்டும் ஞானப்பிரகாசன் ஐயா!
   அடுப்படி பாவையாக இருந்து தன் குடும்பத்துக்கு சுவையாக சமைத்து தன் பிள்ளைகள் கண்ட இடத்தில் சாப்பிடாமல் தன் வீட்டார் ஆரோக்கியம் பேணி அக்கறையோடு அன்பையும் சேர்த்தே சமைப்பதும்... தன் கணவன் அடுத்த பெண்ணை தேடி செல்லாமல் அவன் விருப்பம் உணர்ந்து படுக்கயறை பாவையாவதும் தப்பென யார் சொன்னார்கள் ஐயா?

   அடுப்படியும் படுக்கையறையும் சரியான நேரத்தில் சரியாக இருந்தால் ஊருலகில் கற்பழிப்புக்களும்,திரவாக வீச்சுக்களும், முறையற்ற பாலியல் வக்கிரங்களும் கொலைகளும் கொள்ளைகளும் இன்னபிற பல பெண்களை மௌயப்படுத்தும் குற்றங்களும் நிச்சயம் குறையும் ஐயா.

   தீர்வுகள் நம்முள் இருக்க நாம் தீர்வை தேடி.. செவ்வாய்க்கிரகம் செல்ல தேவையில்லை.

   இன்ன வயதில் மனிதனுக்காக உணர்வுகள் இப்படித்தான் என உணர்த்தி சீராக வளர்க்கபப்டும் பெண்ணால் வளர்க்கபப்டும் ஆணோ பெண்ணோ தங்கள் சிந்தனையில் செயல்பாடுகளிலும்தூயமையாகவே இருப்பார்கள்.

   முதலில் தனி மனிதன்,
   இரண்டாவது குடும்பம்,
   மூன்றாவது அவன் சார்ந்த சூழலும்,உறவுகளும்,
   நான்காவது அவன் வாழும் கிராமம்

   சமுதாய மாற்றங்கள் இப்படித்தான் உருவாக்கபப்ட வேண்டும்.


   நீக்கு
  13. உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி நிஷா அவர்களே!

   நான் கிணற்றுத் தவளை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், நான் என் வீட்டுப் பெண்களை மட்டும் வைத்து உலகை எடையிடுபவன் இல்லை. நாட்டில் நடப்பவற்றையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படிப்பட்ட பெண்களைக் கண்டிப்பது பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் மீண்டும் நான் சொல்வதெல்லாம், பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதைக் கண்டிப்பது வேறு, பெண்களுக்கு விடுதலை என்பதே கூடாது - அவர்கள் ஆண்களுக்கு இன்பம் தருபவர்களகளாகவும் பிள்ளை பெற்றுத் தரும் பொறிகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும் எனச் சொல்வது வேறு என்பதைத்தான். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர முயலுங்கள் - முடிந்தால். காரணம், அதுதான் மேற்படி பதிவின் சாரம்!

   நீங்கள் கூறிய அறிவுரைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். முடிந்தால், நான் என்ன சொல்கிறேன், எதற்காகச் சொல்கிறேன் என்பதை ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க முயலுங்கள்! அவ்வளவுதான்.

   நீக்கு
  14. டிப்ஸ்*** உங்களுக்கு ஒரு செய்தி ஐயா.. நான் சுவிஸில் ஈவன்ஸ் மனேஜ்மேண்ட் நிர்வாகி. என்னிடம் இரண்டு திருமண மண்டபம் பிளஸ் 50 பேர் அமரும் உணவகம். தினம் 100 பேருக்கு சாப்பாடு போயிட்டிருக்கும் ரூரிஸ்ட் குருப்புக்காக புரோஜெக்ட் என எப்போதும் பிசியாக பத்துக்கு மேல் வேலையாட்கள் இருந்தும் என் வீட்டு வேலையை என் பிள்ளைகளுக்கு சமைப்பதை, வீட்டில் துவைப்பதை, கழுவுவதை, நேரத்துக்கு சாப்பாடு கொடுப்பதை நான் தான் இன்று வரை கவனிக்கின்றேன். என் ஹோட்டலில் 1000 பேர் கலந்து கொள்ளும் விருந்து நடந்தாலும் என் பிள்ளைகளுக்கு நேரத்துக்கு சாப்பாடும் கவனிப்பும் தான் எனக்கு முதலில் முக்கியமாக படும்,


   இன்றைக்கு என் மகனுக்கு வயது 10, மகளுக்கு வயது 16.
   ஊருலகத்தில் பெற்றோர் கவலைப்படும் படி தம் நடத்தையினால் செய்கையினால் தாந்தோன்றியாக சொல் பேச்சு கேளாமல் திரியும் பிள்ளைகளால் பெற்றவர் படும் மனக்கவலைகளை நான் அறிவேன்.என் பிள்ளைகளோ எனக்குள் இன்றும் பெருமிதம் தருபவர்களாக வளர்ப்பில் செயலில் குணத்தில் பண்பில் ஏனையோர் பாராட்டும் படி தான் இருக்கின்றார்கள். நான் பணிசுமையை காரணம் காட்டி என் வீட்டில் வேலை செய்ய ஆட்களை நியமித்து பிள்ளைகளை வளர விட்டிருந்தால் இன்றைக்கு என்னால் உங்களிடம் இப்படி எழுத முடியுமா?

   வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண் வளர்க்கும் பிள்ளைகள் குறித்து இங்கே பேசப்படவில்ல்லை. சாதாரணமாக வேலையிலும் பார்க்க பத்து மடங்கு நிர்வாகமும், பணிச்சுமையும் கொண்ட என்னை வைத்தே இங்கே கருத்திட்டேன்.

   முதலில் எனக்கு எது முக்கியம் என பெண்ணாக நான் தான் திட்டமிட வேண்டும், தீர்மானிக்க வேண்டும்,

   எனக்கு பணத்தை, புகழை விட என் குடும்பம், பிள்ளைகள் எதிர்காலம் தான் முக்கியமாக பட்டது. அதிலும் கடந்த இருவருடம் முன் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும் மகள் தனிமையாக உணர்வதாக சொல்ல.. அவளுக்காக நன்றாக நடந்து கொண்டிருந்த உணவு விடுதியை மூடி பிள்ளையின் தேவைகளை முதலாக்கினேன். இன்று அவளே அம்மா இனி நான் காலேஜ் போனால் காலை போய் மாலை தானே வருவேன். நீங்கள் ஹோட்டலை நடத்துங்கள் என சொல்லும் நிலையில் பிள்ளைக்கு அம்மாவின் அன்பும் வழிகாட்டலும் தேவையான போது முழுதாக கொடுத்தேன்.மனம் தடுமாறும் வயதில் பிள்ளைகள் அருகில் இருக்க முடியாமல் ஊரை திருத்தவும், புகழ் பொருள் தேடவும் முக்கியம் என நினைக்கும் கொண்ட பெண்கள் நாளைய கலாச்சார சீரழிவுகளை அவர்கள் பிள்ளைகச்ள் மூலமே விதைக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்ளத்தானே வேண்டும்.

   நீக்கு
  15. பெண்ணுக்கு விடுதலை கூடாது என இப்பதிவில் எங்கும் இல்லையே ஐயா. கிடைத்த விடுதலையை சுதந்திரத்தினை சரியாக படுத்துங்கள் என்பது தானே பதிவின் சாரம். ஒருவேளை நான் புரிந்தது தவறோ?

   கிடைத்திருக்கும் சுதந்திரத்தினை, விடுதலை வாய்ப்பை சரியாக பயன் படுத்துங்கள் என தான் கில்லர்ஜி பதிவில் சொல்கின்றார். எனக்கு அப்படித்தான் புரிந்தது.

   நீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  17. வணக்கம் பதிவின் சாராம்சமே இதுதான் இதுவே நான் சொல்லும் மையக்கருத்து.

   நீக்கு
  18. அடுப்படியும் படுக்கையறையும் சரியாக இருந்தாலே திராவக வீச்சுக்களும், இன்ன பிற கொடுமைகளும் குறையும் என்கிறீர்கள். அதாவது, பெண்கள் சரியில்லாததால்தான் இவையெல்லாம் நடக்கின்றன, அப்படித்தானே? சரி, திராவகம் வீசப்பட்ட பெண்கள், பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், அல்லது இந்தக் கொடுமைகளைச் செய்த ஆண்கள் ஆகியோரில் எத்தனை பேரின் வாக்குமூலங்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள்? இப்படிப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்கில் பெண் தரப்பிலான தவறு காரணமாகவோ அல்லது ஆண் வளர்ந்த சூழல் காரணமாகவோ இந்தத் தவறுகள் நடந்திருக்கின்றன? இவை பற்றிய விரிவான புள்ளிவிவரம் உங்களுக்குத் தெரியுமா?

   எனக்கும் தெரியாது. [கிணற்றுத் தவளைகளுக்கு எப்படித் தெரியும்? :-)] ஆனால், ஒன்று எனக்குத் தெரியும். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இப்படித்தான் நடக்க வேண்டும் எனும் இப்படிப்பட்ட கருத்தாக்கங்கள், ஆண் மனதில் பெண்ணுக்கு எதிரான குற்ற மனப்பான்மையைத் தூண்டுகின்றன என்பது தெரியும். அதைத்தான் கில்லர்ஜி செய்திருக்கிறார். அதனால்தான் நான் அவரைக் கண்டிக்கிறேன். நண்பர் இதை மறுப்பார். ஆனால், அவருக்கே தெரியாமல் அவர் தவறாக எழுதி விட்டார் என்பதுதான் உண்மை.

   நீக்கு
  19. நிஷா அவர்களே! பெண்ணுக்கு விடுதலை கூடாது என இப்பதிவில் எங்குமே சொல்லவில்லையே என்றும், ஒருவேளை நீங்கள் புரிந்து கொண்டது தவறோ என்றும் கேட்டிருந்தீர்கள். நீங்கள் கட்டுரையை அதை எழுதியவரின் கோணத்திலேயே படித்ததால் உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லை. ஆனால், பொதுப் பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது இது முழுக்க முழுக்கப் பெண் விடுதலைக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது என்பதே உண்மை. சில எடுத்துக்காட்டுகள் இதோ:

   //நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் விளைவை பார்த்தீர்களா ? பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளை, வேலை செய்யும் இடங்களில், கல்லூரிகளில், பொது இடங்களில், பேருந்து பயணங்களில், எத்தனை வகையான பிரச்சனைகள், இதன் அடிப்படை காரணம் எங்கே தொடங்கியது ? உங்கள் மனதில்தான்// - இதற்குப் பொருள் என்ன?

   //வேலை முடிந்து களைத்து வீடு வந்த கணவனின் கால்களைப் பிடித்து விட்டு, சிற்றின்ப சுகம் கொடுத்து பேரின்ப சுகம் கண்டார்கள், அன்றைய பெண்கள் அவர்கள் வாழப்பிறந்தவர்கள் இது தவறு ஆணாதிக்கம், பெண்ணடிமை என்ற கோட்பாடு என்று உங்கள் மனதில் உதித்ததோ அன்று தொடங்கியது உங்களுக்கு பிரச்சனைகள்// - பெண்கள் வீட்டிலேயே அடங்கி இருக்க வேண்டும்; வேலைக்குப் போகக்கூடாது; ஆணுக்கு இன்பம் அளிப்பதும் பிள்ளை பெற்றுத் தருவதும் தவிர வேறு எதுவும் செய்யாமல் பெண்கள் இருந்த காலத்தில் எல்லாம் சரியாக இருந்தன என்பது தவிர இந்த வரி வலியுறுத்தும் அரிய கருத்து வேறென்ன?

   //அன்று தேவதாசிகள் என்பது சிறு பாகமாக இருந்தது ஆனால் இன்று அந்தப் பாகத்திற்குள் கற்புக்கரசிகள் மட்டுமாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது// - தேவதாசி முறையை நியாப்படுத்துவது தவிர இந்த வரிகள் சொல்ல வரும் நற்பொருள் வேறென்ன?

   //பெண்ணினமே நீங்கள் வாழவில்லை என்பதற்கு ஒரு சான்று கூறட்டுமா ?உங்கள் பாட்டி, அப்பத்தா, அம்மாயி எத்தனை குழந்தை பெற்றார்கள் ? தெரியவில்லை எனில் உனது அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள். இதிலேயே புரிந்து கொள்வாய் நீ எத்தனை சதவீதம் வாழ்ந்தாயென... இறைவன் மனிதனை படைத்தது வாழ்ந்து பயன் பெறவே அதற்காகத்தான் கொடுத்தான் இரவே மனிதன் உணர்ந்து வகுத்துக் கொண்டதுதான் கணவன்-மனைவி உறவே...// - படுக்கையறைப் பாவையாகவும் பிள்ளை பெற்றுத் தரும் பொறிகலனாகவும் பெண் இருப்பதே நல்ல வாழ்க்கை முறை என்பதைத் தவிர இந்த வரிகள் கூறும் நற்கருத்து வேறெது?

   //ஒரு சில விடையறியா விட்டில் பூச்சிகளே ! உங்களால் பெண்ணினம் ஒட்டு மொத்தமாக களங்கமாகிறதே... இனியெனும் உணர்ந்து பாருங்கள்// - இந்த இடத்தில் மட்டும்தான், "நான் எல்லாப் பெண்களையும் குறை சொல்லவில்லை" எனும் நண்பரின் வாதம் பொருந்துகிறது. ஆனால், இதையும் அவர் எந்தப் பொருளில் சொல்லியிருக்கிறார்? தான் மேலே கூறியிருக்கிறபடி, ஆணை மகிழ்விப்பவளாகவும், பிள்ளை பெற்றுத் தருபவளாகவும் மட்டுமே இருக்கிற பெண்கள்தாம் நல்ல பெண்கள்; அப்படி இல்லாமல் தன்மானம், பெண்ணியம் எனப் பேசுகிற பெண்களால் அந்த நல்ல பெண்களுக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது என்கிற பொருளில்தானே?

   மேற்படி கருத்துக்களைத் தவிர, பெண்கள் ஒழுங்கீனமாக நடப்பதைக் கண்டித்தோ நாகரிகம், பெண்ணியம் எனும் பெயர்களால் பெண்கள் தவறான வழியில் போவதைக் கண்டித்தோ இந்தப் பதிவில் என்ன இருக்கிறது? அப்படி ஏதேனும் இருந்தால் இப்பொழுதும் சொல்கிறேன், நான் இந்தப் பதிவுக்கு இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்க மாட்டேன்; மாறாக, ஆதரவுதான் அளித்திருப்பேன். ஆனால், இந்தப் பதிவு வலியுறுத்துவது பெண்கள் ஒழுங்கீனமாக இருக்கக்கூடாது என்றோ நல்லபடியாக நடக்க வேண்டும் என்றோ இல்லை. மாறாக, பெண்கள் பழையபடி வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று மட்டும்தான். அதானல்தான் எதிர்க்கிறேன்.

   நண்பர் கில்லர்ஜி அவர்கள் எதையோ எழுத நினைத்து வேறு என்னென்னவோ எழுதி விட்டார். சில மாதங்கள் கழித்து இந்தப் பதிவை அவர் படித்துப் பார்த்தால் அவருக்கே புரியும், நான் சொல்பவை சரிதாம் என.

   நீக்கு
  20. நண்பருக்கு தவறுகளை திருத்திக் கொள்ளும், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எனது சிறிய அகவை தொட்டு என்னிடம் உள்ளது.

   நான் பெண்கள் தங்களின் மதிப்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த பதிவை பகிர்ந்தேன்.

   நீக்கு
  21. நிஷா அவர்களே!

   நான் இவ்வளவு சீற்றமும் சிடுசிடுப்புமாகக் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க, நீங்களோ உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பெருந்தன்மையான மனம் கண்டு மிகவும் வியக்கிறேன்! உங்கள் வீட்டில் மாமியார் - மருமகள் சண்டை வருவதில்லையா என்று நீங்கள் கேட்டது, தனிப்பட்ட முறையில் என் வீட்டுப் பெண்களை வம்பிழுப்பது போல் அமைந்திருந்ததால் பதிலுக்கு நானும் பேசி விட்டேன். அதற்காக வருந்துகிறேன்!

   இவ்வளவு மும்முரமான பணிகளையும் செய்து கொண்டு சரியான இல்லத்தரசியாகவும் திகழும் உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்! கண்டிப்பாக நீங்கள் சிறந்த அம்மா மட்டுமில்லை வெற்றிகரமான பெண்மணியும் கூட. ஆக, பெண் விடுதலை கண்டிப்பாகத் தேவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகிறேன்!

   ஆனால், பெண்கள் சரியாக இருந்தாலே ஆண்களும் சரியாக இருப்பார்கள் என்பது தவறான நம்பிக்கை என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். எத்தனையோ குடும்பங்களில் பெண் தன் அன்பை எவ்வளவோ எடுத்துக்காட்டியும் திருத்த முடியாத கணவர்களை நான் பார்க்கிறேன். ஈகை விளக்குகளாகத் திகழும் பெண்களை ஏமாற்றித் திரிகிற சுரண்டிக் கொழுக்கிற ஆண்களை நான் சந்திக்கிறேன். "நடு இரவில் ஆண் நண்பனுடன் வெளியில் போகிறாள் என்றாலே அவள் தவறான பெண்ணாகத்தானே இருப்பாள்? அவளை எப்படிச் சீரழித்துக் கொன்று போட்டால் என்ன? அதில் என்ன தவறு?" எனக் கேட்கும் மனித விலங்குகளின் எண்ணிக்கை கூடி வருவதை நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட வயது வரை தன் பாலின வேறுபாடே உணராமல் பழகி வந்த காலம் போய், இன்று "ஐய! அது பிங்க் கலர் - கேர்ள்ஸ் கலர். எனக்கு வேண்டாம்! நான் என்ன கேர்ளா?" எனப் பெண்ணாக இருப்பதே ஏதோ அருவெறுப்பான ஒன்று என்பது போல நேற்றுப் பிறந்த வாண்டுகள் கூடப் பேசுவது கண்டு நான் திகைக்கிறேன்.

   ஆகையால்தான், இப்படிப்பட்ட சூழலில் பெண் விடுதலை குறித்து இன்னும் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை என்பதை நான் வலியுறுத்துகிறேன். அது மட்டுமே பெண்களுக்கு எதிரான பார்வைகளையும் வன்முறைகளையும் குறைக்கும் என நான் நம்புகிறேன். அதனால்தான் பெண் விடுதலையைப் போகிற போக்கில் மட்டந்தட்டும் இப்படிப்பட்ட பதிவுகளைக் கண்டு நான் பதறுகிறேன். நாட்டில் இருக்கும் பெண்ணுக்கு எதிரான வன்மப் பார்வையை இது இன்னும் கூட்டுமோ என நான் அஞ்சுகிறேன். மற்றபடி, வேறொன்றுமில்லை.

   உங்கள் அன்பினுக்கு நன்றி!

   நீக்கு
  22. நண்பர் கில்லர்ஜி அவர்களே!

   நீங்கள் நல்ல நோக்கத்தில்தான் இந்தப் பதிவை எழுதியிருப்பீர்கள் என்பதை நான் நம்பவே செய்கிறேன். ஆனால், பொதுப் பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது இந்தப் பதிவு அப்படிப்பட்ட பொருளில் தென்படவில்லை என்பதே நான் சொல்ல வந்தது. மற்றபடி, உங்கள் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை.

   நீக்கு
  23. நான் கணினியில் கருத்துரை தரமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

   அன்று 10 பிள்ளைகள் சாதாரணமாக பெற்றார்கள் இன்று ஒன்று பெறுவதே கஷ்டம்

   அன்று வாழ்ந்து இருக்கின்றார்கள் கணவன் - மனைவி இருவரும்தான் ஆதாவது ஆணினமும், பெண்ணினமும் இதுதானே பிறவிப்பயன்.

   இன்று சொகுசான வாழ்க்கை பொன்னும் பொருளும் ஆனால் பிறவிப்பயன் ?

   பெரும்பாலான திருமணங்கள் விவாகரத்து வாழ்க்கை சீரழிந்து பாதை மாறிவிட்டது

   நீக்கு
  24. அந்த மணவிலக்குக் காரணம் என்ன என்பதுதானே இங்கு கேள்வி! நீங்கள் பெண்களின் விடுதலை மனப்பான்மைதான் அதற்குக் காரணம் என்கிறீர்கள். நான் உயர்ந்து வரும் குடிகாரர் எண்ணிக்கை காரணம் என்கிறேன். போதும் ஐயா! நிறையப் பேசியாகி விட்டது. விடுங்கள்! ஆக மொத்தம், பெண்ணுக்கு விடுதலை தேவை என்கிற அடிப்படைக் கருத்தாக்கத்தை ஒப்புக் கொள்கிறீர்கள் இல்லையா? அது போதும்! இத்தோடு இந்தப் பதிவு தொடர்பான வாதமும் போதும்! பிறகு வேறொரு பதிவில் ச(சி)ந்திப்போம்! வரட்டுமா? நன்றி! வணக்கம்!

   நீக்கு
  25. ஐயா நான் ஏற்கனவே எழுதி விட்டேன். என் எழுத்துக்கள் என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்தும் வரும் உண்மைகள் மட்டுமே. நான் பின்பற்றாத என்னால் பின்பற்ற முடியாததை மற்றவர்கள் மேல் ஆலோசனைகளென சொல்லளவில் கூட எழுதுவதில்லை. அதனால்தான் என்னைக்கொண்டெ சில விளக்கங்கள் தர முயன்றேன். அத்தோடு என் கருத்துக்கள் சீற்றமோ மன அழுத்தத்துடனோ வரவில்லை. நிதானத்தோடு நான் கண்ட அனுபவங்களை மட்டுமே எழுத்தாக்கி இருக்கின்றேன்.

   மாமியார் மருமகள் பிரச்சனைகள் உட்பட பல சூழல்களில் பெண்கள் தங்களிலிருந்து தாங்கள் விடுதலை பெற வேண்டிய நிலையில் இருப்பதை தான் குறிப்பிட்டேன். பெண் விடுதலை என்பது பெண்ண்ணின் எண்ணங்கள், சிந்தனைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமே தவிர வெளிப்பிரகாரமான தோற்றத்தில் அல்ல. தனிப்பெண் சுயமாக தான் இயங்க முடியும் என நம்பும் நாளில் அவளுக்கான கட்டுக்கள் அவிழ்க்கப்படும், கில்லர்ஜி அவர்களின் கருத்தினை முழுதாக நான் ஏற்கவும் இல்லை. அவருக்கும் மாற்றுக்கருத்துக்களை இட்டிருக்கின்றேன்.

   பெண்ணுக்கு எதிரான வன்மப்பார்வையாக இவைகல் மாறக்கூடாது என்ப்தனால் தூங்கிக்கொண்டிருக்கும் அவளை விழிக்க சொல்லி தான் இப்பதிவுகள் இடப்படுகின்றதே தவிர தூங்கிக்கொண்டிருக்க சொல்லி அல்ல ஐயா. இப்பதிவுகளினால் தான் இனிமேலும் வன்முறை அதிகரிக்கும் என்பதையும் நான் மறுக்கின்றேன்.

   நீக்கு
  26. நண்பரே ஆண் மகன் குடித்து விட்டு சாலையில் கிடக்கின்றான் இருப்பினும் அவனுக்கும் இந்த சமூகம் பெண் கொடுக்கின்றது

   அதேநேரம் ஒரு பெண் இப்படி நடந்து கொண்டால் அவளுக்கு திருமணம் நடக்குமா ?

   இப்படி ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியாய் நியாயமின்றி வகுத்துக்கொண்ட கேடுகெட்ட சமூகத்தில் பெண்கள் இப்படி வாழக்கூடாது என்றுதான் சொல்ல வருகிறேன்

   எனது வாழ்க்கையைப்பற்றி தாங்களும் அறிந்தவரே "ஒருவனுக்கு ஒருத்தி" இதுவே எனது கொள்கை நான் பெண்களை மிகவும் மதிப்பவன் இதற்கு எனது வாழ்க்கையே சாட்சி.

   நீக்கு
  27. இருவரின் கருத்துக்களுக்கும் நன்றி!

   நீக்கு
  28. நாம் ஒரு பதிவை எழுதும் போது அதை புரிந்து கொள்வதை வைத்து தான் பின்னூட்டங்கள் இடுகின்றோம்.அவ்வகையில் கில்லர்ஜி அவர்களின் பதிவில் புரிந்து கொண்டது .. கிடைத்த சுதந்திரத்தினை உங்கள் செய்கைகளால் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்பதுவே.

   அக்காலத்தில் வேலைக்கு சென்று வரும் ஆணின் கால்களை வீட்டு பெண் பிடித்து விட்டது போக இக்காலத்தில் வேகைக்கு சென்று வரும் பெண்ணின் கால்களை பிடித்து விடும் ஆண்களும் உண்டு. இங்கே குற்றம் , அடிமைத்தனம், விடுதலை என்கின்றோமே தவிர பெண் யாரிடமிருந்து விடுதலை பெற வேண்டும், யார் அவளை அடிமைப்படித்தினார்கள் என்பதை உணர மறுக்கின்றோம்.

   மாமியார் எனும் பெயரில் மருமகளை அடிமைப்படுத்தும் சமூகமும், நாத்தனார் கொடுமைகளும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றது. ஆண் என்பவன் எப்போதும் தாய், மனைவி மகள் சகோதரி தோழி என ஏதோ ஒருவகையில் பெண்ணுக்கு பின்னால் தான் தன்னை வெளிப்படுத்துகின்றான். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருபப்து போல் அவனின் வீழிச்சியிலும் பெண் இருப்பாள். இருக்கின்றாள். பெண்கள் யாரிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை பெண்களே இன்னும் புரிந்து கொள்ள வில்லை மருமகளாய் இருக்கும் போது தான் அடைந்ததை மாமியாராகும் போது தன் மரும்களுக்கு நடத்த கூடாது என நினைக்கும் பெண்கள் அரிதாய் அல்லவோ இருக்கின்ரார்கள்.

   உண்மையை உண்மையாக நாம் உணர வேண்டும், பெண்கள் இன்னமும் அடிமைப்படுத்தப்படுகின்றார்கள், அதீத பணிச்சுமைகள் வீட்டு வேலைகள், அலங்காரப்பொம்மைகள் போல் நிறுத்தப்படும் நிலை என பல விதங்களில் பாலியன் ரிதியிலும் மன ரிதியிலும் துன்பப்படுகின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதன் பின்னனி என்ன என்பதை நம ஆராய்ந்திட வேண்டும்.

   பெண்னுக்காக பெண் விடுதலைக்காக குரல் கொடுப்போராய் ஆண்கள் தான் இருக்கின்றார்கள். தங்களுக்காக பேசப்படும் ஒரு விவாதத்தில் கூட தன் கருத்தினை வெளிப்படையாக தெரிவிக்கும் தன்னம்பிக்கை தைரியம் பல பெண்களிடம் இல்லை. இல்லை என்பதை விட அனுமதி இல்லை எனவும் சொல்லலாம். அரட்டையும், சினிமாவும் சீரியலும், அலங்காரமும், சமையலும் மட்டுமே தங்களுக்க்கானவை எனும் புரிதல் பல பெண்களிடம் உறங்கி கொண்டிருக்கும் போது நாங்கள் பெண்களை தான் விழித்தெழுங்கள், உணந்து கொள்ளுங்கள் என சொல்ல முடியும்,

   கில்லர்ஜி அவர்களின் பதிவில் இருக்கும் தேவ தாசிகள் உதாரணம் கூட.. சமுதாயத்தின் சீர் கேட்டை தவிர்க்க இன்றைக்கும் மேலை நாட்டினர் சட்டபூர்வமாக நடத்தும் வழிமுறைகள் தான்.தேவ தாசிகளுக்கு நிகராக நீங்கள் உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் என அவர் எழுதியதாக தான் நான் புரிந்து கொண்டேன்.

   குற்றங்களின் பின்னனியில் என்ன எது எவர் காரணம் என ஆராய்ந்தால் பல குற்றவாளிகள் வளர்ந்த சூழலை தான் காரணமாக்கி கொள்வார்கள்.


   நீக்கு
  29. என் மகளுடன் படிக்கும் பிள்ளைகள் பலரின் தாய் தகப்பன் பிரிந்து விட்டவர்கள். இதனாலேயே பல பெண் பிள்ளைகள் தங்கள் டீன் ஏஜ் வயதில் தடம் மாறி போகின்றார்கள். 16 வயதில் சிகரட் புகைத்தலும் பியர் அருந்துவதும் இங்கே சர்வசாதாரணம். கடந்த வருடம் மட்டும் இப்படி தாய் தகப்பன் பிரிந்ததனால் தன் டீன் ஏஜில் குழம்பமான மன நிலையில் பிரிந்து விட்ட தாய் தன் இரண்டாம் கணவனுடன் வாழ்வதை ஏற்க மறுத்து குடும்பத்துடன் இருக்க முடியாது என அடம்பிடித்த இரண்டு பெண் பிள்ளைகளை கவுன்சிலிங்க நோக்கில் என்னிடம் பராமரித்தலுக்கும், மேற்பார்வைக்கும் சீர் திருத்தலுக்குமாக விட்டிருந்தார்கள். அவள் படிக்கும் பாடசாலை ஆசிரியர் மற்றும் வழி நடத்தும் நிர்வாகி அவளின் தாய் என ஒருவகை சங்கிலித்தொடர் கண்காணிப்பில் இரண்டு மாதம் என் வீட்டில் தான் வசித்தாள். இப்படி பல பெண் பிள்ளைகள் என் மகளின் தோழிகள் பத்து பேருக்கு மேல் சரியான வழி காட்டுதல்கள் இன்றி தாயின் பாதுகாப்புக்காக ஏங்கி தவறுகளை நோக்கி வழி நடத்தப்படும் சூழலில் நான் வழி காட்டி இருக்கின்றேன். அவ்வகையில் என் புரிதல் பெண் பிள்ளைகளை வழி நடத்த தாய் தகப்பன் இருவருக்குமே கடமைகள் உண்டாயிருந்தாலும் தாயின் பணி என்பது சற்று அதிதமாக தேவைப்படுகின்றது. அதிலும் டீன் ஏஜ் வயதில் மிக முக்கியமாக படுகின்றது. இது ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும், தகப்பன் குடிகாரன் என்பதனால் தான் சீர் கெட்டேன் என எந்த பிள்ளையும் சொன்னதில்லை. என் அப்பா குடிகாரன், குடும்பத்தினை கவனித்ததில்லை ஆனால் எங்கள் அம்மா எங்களிக்கு தாயுமானவளாய் இருந்து வழி காட்டினாள் என சொல்வோர் தான் அதிகம். பெண்கள் வீட்டின் கண்கள் தான். குடிகார, கொடுமைக்கார கணவனாயிருந்தாலும் பெண் சரியாக இருக்கும் வீட்டில் பிள்ளைகளும் மாணிக்ககங்கள் தான்.

   தகப்பன் விட்டு பிரிந்து இன்னொருத்தியை தேடிப்போனால் அதைக்குறித்து பிள்ளைகள் அதிகம் சிந்திப்பதில்லை, மனவியல் ரிதியில் பாதிக்கபப்டுவதும் அரிது, அதுவே தாய் செய்\தால் பிள்ளையானவன் மனவியல் ரிதியில் எல்லா பெண்களும் இப்படித்தான் எனும் உளைச்சல் நிலைக்குள் தள்ளப்படுகின்றான் . இதுவும் தவறு தான் எனினும் இது தான் உண்மை.

   இங்கே ஆணுக்கொரு நீதி பெண்ணூக்கொரு நீதி எனும் போது சமுதாயச்சீரழிவுகளை தடுக்கும் சக்தியாக பெண் தான் இருக்கின்றான். இருக்க வேண்டும்,

   நள்ளிரவில் நடுத்தெருவில் தனியே நடந்து செல்லும் பாதுகாப்பான சூழல் இப்போதெல்லாம் ஆண்களுக்கே கூட இல்லை எனும் போது ஒரு பெண் அப்படி நடந்து செல்வாளானால் அதனால் வரும் பாதிப்புக்களை எதிர் கொள்ளத்தான் வேண்டும். எங்கள் சமூகம் சூழல் எப்படிப்பட்டதென நமக்கு புரிந்து இருக்க வேண்டும். வேலியில் செல்லும் ஓணாணை நூக்கி காதில் போட்டு விட்டு குத்துதே குடையுதே என சொல்லக்கூடாது.

   என்ன தான் பெண்சுதந்திரம் விடுதலை என பேசினாலும் என் மகனும், மகளும் வீட்டை விட்டு சென்று இரவு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பா விட்டால் மனம் பதறத்தான் செய்கின்றது. போன் மேல் போன் எங்கே எப்போ என கேள்வி மேல் கேள்விகள் எங்களை அலைக்கழிக்கின்றது. பாம்பென தெரிந்த பின்னும் நான் பாம்பை தொட்டு விளையாடுவேன் என்பது இக்கால பெண் சுதந்திரம் எனில் அது வேண்டவே வேண்டாம்.

   சமைப்பதும் துவைப்பதும், எங்கள் பணி எனும் அடக்குமுறையும் வேண்டாம், அவரவர் பணியை அவரவர் உணர்ந்து ஒருவரோடுவர் புரித்துணர்வோடு கலந்து பேசி விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை தான் உண்மையான் சுதந்திரம். விடுதலை. அதை நோக்கி மட்டும் செல்வோம்,

   நீக்கு
  30. நிஷா அவர்களே! உங்களுடைய விரிவான புதிய கருத்துக்களுக்கு நன்றி!

   உங்கள் கருத்துக்களில் பெரும்பாலானவற்றை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை போன்றவற்றை எடுத்துக்காட்டி பெண்கள் விடுதலை பெற வேண்டியதே பெண்களிடமிருந்ததுதான் என்பதை ஏற்க முடியாது. மாமியார், நாத்தனார் போன்ற பெண்கள் அத்தகைய அடக்குறை மனப்பான்மைக்குப் போனது எப்படி? அதன் காரணம் என்ன? இதன் பின்னிருக்கும் உளவியல் என்ன? இவற்றையெல்லாம் ஆராயாமல் மேப்போக்காக நீங்கள் கருத்துக் கொண்டுள்ளீர்கள் எனத் தோன்றுகிறது. உளவியல் மருத்துவர் ஷாலினி அவர்களின் ‘உயிர்மொழி’ நூல், மனிதவியல் (anthropology) வரலாற்று நூல்கள் போன்றவற்றைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்! இந்தப் பதிவு குறித்தும் இது தொடர்பான பிற விதயங்கள் பற்றியும் நிறையவே பேசியாகி விட்டது. இதுவே போதுமென நினைக்கிறேன். வேறு ஏதாவது இருந்தால் பேசுவோம். நன்றி! வணக்கம்!

   நீக்கு
  31. இன்னொரு விதயம்! அப்பன் குடிகாரன் என்பதால் தான் சீர்கெட்டுப் போனதாக எந்தப் பிள்ளையும் சொன்னதில்லை என்கிற உங்கள் கருத்து திகைப்புக்குரியது. தமிழ்நாட்டுக்கு நீங்கள் வந்து வெகு காலமாகிறதோ!

   அப்பன் வழியில் பிள்ளைகள் சென்று விடக்கூடாது எனப் பாடுபடும் பல பெண்களின் கண்ணீர்க் கதைகளைத் தொடர்ந்து இதழ்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒழுக்கம் கெட்ட தகப்பனுக்குப் பிறந்ததாலேயே, இயல்பிலேயே அதே போன்ற ஒழுக்கம் கெட்ட நடத்தையுள்ள பிள்ளைகளையும் நான் நேரிடையாகப் பார்த்திருக்கிறேன்.

   நீங்கள் எனக்குச் சொன்ன அறிவுரையையே திருப்பிச் சொல்கிறேன். உங்கள் அனுபவங்களை மட்டுமே வைத்து அதுதான் உலகளாவிய உண்மை என நம்ப வேண்டா! :-)

   நீக்கு
 19. பெண்ணுரிமை கொஞ்சம் சிக்கலானது நீங்கள் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள். பலர் உண்மையை சொல்வதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் நடக்கும் உண்மைகளையே சொன்னேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. சிந்திக்க வேண்டும் இன்றைய நவ நாகரிக மங்கையர் என்பதை சிம்பலிக்கா சொல்லிவிட்டீங்க ஜீ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 21. வணக்கம் ஜி !

  சிந்திக்க வைக்கும் தங்கள் பதிவில் யதார்த்தமான சில உண்மைகளைச் சொன்னீர்கள் ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவதுதான் இங்கே சுதந்திரம் என்றாகிவிட்டது ..பாட்டி அப்பத்தா என்போர்களிடம் எதைக் கேட்க்கச் சொல்கிறீர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக இல்லையே இப்போதெல்லாம் ! எதுக்கு சுதந்திரம் வேண்டும் எதற்கு வேண்டாம் என்று ஒரு வரன்முறையே இல்லாத சமூகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன ஜி !
  தொடரட்டும் தங்கள் சமூக அக்கறை நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவலரே ஒன்றைப்பெற ஒன்றை இழப்பது வாழ்க்கைக்கு என்றுதான் நான் படித்து இருக்கிறேன் இப்பொழுது சுதந்திரத்திற்கும் இது சேருமா ?

   வருகைக்கு நன்றி பாவலரே.

   நீக்கு
 22. தம்பி! - தங்கள்
  பதிவை விட - தங்கள்
  பதிவிற்குக் கிடைத்த கருத்துகள்
  என்னைத் தாக்கி விட்டன...

  படம் பகிர்ந்ததில் தவறில்லை
  (நானும் இவ்வாறான படங்களை பகிர்ந்துள்ளேன்)
  இவ்வாறான படங்களை
  முதலில் பகிர்ந்தவர் எவரோ
  அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!

  மேல்நாட்டு நாட்டம் (மோகம்)
  நம்நாட்டுப் பெண்களையும்
  மாற்றிவிட்டது...
  நம்நாட்டுப் பண்பாடு
  காற்றிலே பறக்கிறது...
  குடி, புகை எல்லாம்
  இன்றைய இளம் பெண்களில்
  உலா வருவது நல்லதல்ல...

  சற்று விழிப்புணர்வு ஊட்டியமைக்கு
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே எனக்கு இணையத்தில் கிடைத்தது இப்படி புகைப்படம் எடுத்ததே தவறு மேலும் அதை இணையத்தில் விடுகிறார்கள் என்றால் இவர்கள் கெட்டது மட்டுமல்ல சமூகத்தையும் கெடுக்கின்றார்கள்.

   நீக்கு
 23. கில்லர்ஜி இது மிகவும் விவாதத்திற்குரிய ஒரு சப்ஜெக்ட். எனக்கு இதில் நிறைய சொல்ல உண்டு.....ஒரு சில மாற்றுக் கருத்துகளும் உண்டு...ஆனால் இது மொபைலில் இருந்து அடிப்பதால் விரிவாகச் சொல்ல இயலவில்லை....ஜி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றுக்கருத்தாயினும் தங்கள் வரவை எதிர் பார்த்தேன்.

   நீக்கு

 24. பதிவிலிருக்கும் காரத்தினை விட பின்னூட்டம் செம்ம காரமாக இருக்கின்றது. இம்மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இடுவது எனினும் விவாதங்களை தொடர்வதெனில் வேலை வெட்டியை விட்டு விட்டு நானும் இங்கே முழு நேரம் ஐக்கியமாகினால் தான் முடியும். ஆனால் முடியாதே!

  திரு ஞானப்பிரகாசம் ஐயாவின் ஆக்ரோசமான கருத்துக்களை படித்ததும் பெண்கள் சார்பான வாதத்தினை பெண்களை விட ஆணித்தரமாக எடுத்துரைத்தும் இவர் வீட்டுப்பெண்கள் பாக்கியசாலிகள் என்று தோன்றுகின்றது.

  பல இலக்கியவாதிகள் எழுத்தாளார்களை தாயை தெய்வமாக எழுதி இருபபர்கள். ஆனால் நிஜத்தில் அவன் வீட்டில் தாய் நாய்க்கு நிகராக நடத்தப்படுவாள். பெண்ணுக்கான சுதந்திரமும், மதிப்பும் கனமும் அவளாக எடுத்துக்கொண்டால் தான் உண்டு.

  என்னைப்பொறுத்தவரை குடும்பத்தில் பல குழப்பங்கள் சீராகி குடும்பமானது சமாதானம் சந்தோஷமாக திகழ பெண் தான் சுமை தாங்கியாகின்றாள். விட்டுக்கொடுத்தல்கள், புரிதல்களுடனான அன்பினால் தம்மை நிறைத்திருக்கும் பெண் வாழும் வீட்டில் பிரச்சனைகளுக்கு இடமிருப்பதில்லை. குடிகாரக்கணவனாயிருந்தாலும் பெண் தன் அன்பினால் அவனை திருத்த முயன்றால் முடியாது என சொல்ல முடியாது. எங்கேனும் ஒரிருவர் விதிவிலக்காக இருந்தாலும் அன்புக்கும் அணைப்புக்கும் அடங்காத எவரும் இவ்வுலகில் இல்லை.

  அதே போல் மேலே படத்தில் இடப்பட்டிருக்கும் சம்பவங்கள், மது போதைகள் வரம்பு மீறல்கள், ஆண்பெண் தவறான உறவுகள் போன்ற கலாச்சாரசீரழிவுகளை பெண் எனும் குடும்பத்தலைவி சரியாக இருக்கும் பட்சத்தில் தடுக்க முடியும் என்பது என் அனுபவம் .

  எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லது ஆவதும் தீயது ஆவனும் அன்னை வளர்ப்பினிலே.. இது தான் உண்மை. அன்னை எனும் அன்பு அனைத்துக்கு வரமாயிருந்தால் ஆணி வேரானது பலமாயிருந்தால் அதன் கிளைகள் சரியாகவே வளரும்.

  பெண் சுதந்திரம் எனும் பெயரில், பணமும், பதவியும், படிப்பும் இன்றைக்கு விதைத்திருப்பது வீண் ஆடம்பரங்களையும், ஊர் மேய்தல்களையும், அழகுசாதனப்பொருட்களுக்காக விளம்பர விற்பனைகளையும்,குடும்ப சீரழிவுகளையுமே அன்றி வேறில்லை என்பேன். தன் குடும்பத்தினை சரியாக நடத்த தெரியாத எந்த பெண்ணுக்கும் அடுத்தவர் குடும்பத்தை திருத்தும் உரிமையும் இல்லை ஆலோசனை சொல்லும் அருகதையும் இல்லை என்பேன் நான்.

  முதலில் தன் குடும்பத்தை, தன் பிள்ளையை சரியாக வளர்த்து எதிர்கால சந்ததிக்கான விதையை விருட்சமாக்காமல் ஊரைதிருத்த புறப்படும் பெண் சுதந்திரம் எனும் போர்க்குரலை நான் ஏற்பதும் இல்லை. பின் பற்றுவதும் இல்லை.

  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது. அவ்வளவு தான் .

  இந்தியா இலங்கை போன்ற தேசங்களில் வாழ்வோர் பெண்ணும் சரி ஆணும் சரி தங்கள் பிள்ளைகளோ அடுத்தார் பிள்ளைகளோ தவறு செய்யும் போது சூழ்னிலைகளை, சினிமாவை சீரியல்களை, இன்னபிற சமூகத்து நிகழ்வுகளை காரணமாக்கிடும் போது நான் எனக்குள் சிரிக்கவே செய்வேன்.

  அத்துணை பண்பாடான காலாச்சாரத்தில் வாழும் மக்கள் நடக்கும் தப்புக்களுக்கு சூழலை சாக்கு சொன்னால் அனைத்தும் மலிந்து மதுவும், மாதுவும் போதையும் சந்திக்கு சந்தி தலை விரித்தாடி... விட்டில்களை போல் விழும் சூழலில் வாழும் எங்கள் பிள்ளைகளை க்குறித்து நாங்கள் எப்படி சொல்ல வேண்டும்?

  என் பிள்ளை தவறினால் நான் எவர் மேலும் எதன் மேலும் தவறு சொல்வதில்லை. என் வளர்ப்பில் தான் எங்கோ எதிலோ தவறென உணர்ந்து என்னை திருத்துவேனே தவிர செய்யும் குற்றங்களை சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழிப்பதில்லை. ஆலோசனை சொல்லும் நானே அதற்கு தகுதியில்லாமல் போனுமானால் நான் சொல்லும் ஆலோசனைக்கு என்ன பயன் இருக்க முடியும்?

  பெண்ணாய், தாயாய் எதிர்கால சமுதாயத்தினை உருவாக்க முதலில் நான் என் பிள்லைகளை சரியாக வளர்த்தெடுக்கவும் சமுதாய சிந்தனை கொண்டவர்களாக உணர்விக்கவும் சரியான நேரத்தில் கற்பிக்காது போனபில் அடுத்தவரை நோவதினால் ஆவதென்ன?

  பணமோ, அறிவோ பெண்ணுக்கு சுதந்திரம் தருவதில்லை. பெண் முதலில் தன்னிலிருந்து தான் விடுதலை பெற வேண்டும். அதன் பின் அனைத்தும் அவளாலே ஆகும். அவளாலன்றி அணுவும் அசையாதென்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான நடைமுறை உண்மையை அழகாக சொன்னமைக்கு நன்றி

   நீக்கு
 25. என் பதிவினை க்குறித்தும் கருத்திட்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவினை விளம்பரப்படுத்திய தொகைக்கான இரசீது அனுப்பி வைக்கிறேன் எனது ஸ்விஸ் கணக்கில் போட்டு விடவும்.

   நீக்கு
  2. அதை வாங்கிட்டு தானே பதிவே போட்டீர்கள்??????

   இதென்ன இரண்டாம் தடவையும் கேட்கின்றீர்கள். அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் துக்க்லா நல்லவா வல்லவா என விளம்பரப்படுத்துங்கோ.. கொஞ்சூண்டு கூட்டி தருவதை பத்தி யோசிக்கின்றேன்.இப்ப இந்த விளம்பரம் மூலம் கீதாமா மட்டும் தான் பிரெசெண்ட் ஆனாங்களாக்கும், அவ்வ்வ்வ்

   நீக்கு
  3. ஹலோ நான் உங்களது கணக்குதான் சொன்னேன் அவசியமில்லாமல் கோர்த்து விடக்கூடாது

   நீக்கு
 26. திரு ஞானப்பிரகாசம் அவர்களின் கருத்தைக் காலையிலேயே படித்து விட்டேன். ஆனால் கருத்துச் சொல்லிக் கொண்டே போனால் நிறையச் சொல்லும்படி ஆகி விடும். நிஷா அவர்கள் உண்மையைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எங்கே எந்த வீட்டில் பெண் சரியாக இல்லையோ அந்தக் குடும்பம் தத்தளிப்பதை நானும் பார்த்துத் தான் வருகிறேன். என் முக்கியமான கவலையை இங்கே வெளியிடுகிறேன். இதைச் சொல்ல வேண்டாம் என்பதாலேயே காலையில் பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்போது தேவையாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 27. அதோடு நிஷா சொல்லி இருப்பது போல் பெண் சுதந்திரம் என்பது முற்றிலும் தவறான கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக நான் பார்த்த திரைப்படங்களில் கவனிக்க நேர்ந்த ஒரு முக்கியமான விஷயம்! பெண் தன் திருமணம் வரையிலும் ஒழுக்கமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்பதே! இதை சர்வ சகஜமாகப் பெற்றோர் முன்னிலையிலேயே சொல்லவும் சொல்கின்றனர். பெற்றோரும் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். இது என் மனதை மிகவும் பாதித்த ஒரு விஷயம்! கட்டுப்பாடு என்னும் எல்லைக்கோடு அங்கே தகர்த்து எறியப்படுகிறது, இந்தப் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கும் இதே மாதிரித் தானே தோன்றும்! சமூக ஒழுக்கம் என்பது சுக்குச் சுக்காகச் சிதறிப் போகும் வாய்ப்புகள் உண்டே!
  "பிங்க்" என்னும் படத்திலும் சரி, நேற்றுப் பார்த்த "பிகு" படத்திலும் சரி நான் கவனித்த முக்கியமான விஷயம் திருமணத்திற்கு முன்னரே தனக்குப் பிடித்தவனுடன் சேர்ந்து இருந்ததே ! இதை அந்தப் பெண்கள் சர்வ சகஜமாகச் சொல்கின்றனர். பெற்றோரும் ஏற்றுக் கொள்கின்றனர். சிறு வயதில் பிடித்த நண்பனுடன் சேர்ந்து இருக்கலாம் எனில் அதைப் பெற்றோரும் ஏற்கிறார்கள் எனில் சிறு வயதுத் திருமணத்தை எதிர்ப்பது ஏன்? இதை விமரிசனத்தில் அப்பட்டமாக எழுத யோசனையாக இருந்தது! :( கிட்டத்தட்ட ஓர் கலாசார அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. இதை எல்லாம் பார்க்கும் பெண்கள் திருமணத்துக்கு முன்னர் எப்படி வேணா இருக்கலாம் என்று தானே நினைப்பார்கள்! அதிலும் இரண்டு படத்திலும் தேவை இருக்கும்போது நினைத்தவனுடன் இருப்பது தவறில்லை. பசி, தாகம் போன்றதொரு உணர்வு தான் அதுவும் என்று மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே தவறில்லை என்னும் கோணத்தில் பார்க்கப்படுகிறது. அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆன பின்னரும் அந்தப் பெண்களுக்கு அப்படி நினைக்கத் தோன்றாதா? :( அதிர்ச்சியாகவே இருக்கிறது! திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், விளம்பரங்களுமே பெண்களைக் கேவலமாகச் சித்திரிக்கின்றன. அதை எந்தப் பெண்ணும் எதிர்ப்பதும் இல்லை! :(

  பதிலளிநீக்கு
 28. என்னால் விவாதத்தில் கலந்து கருதது சொல்ல இயலவில்லை காரணம் கணினியில் இணையம் இல்லை பிறகு வருவேன்

  பதிலளிநீக்கு
 29. கீதாம்மாவின் கருத்துரைக்கு நன்றி, இரவு மீண்டும் தொடரலாம்.

  சமுதாய சிந்தனை மிக்க விவாதங்கள் எவரையும் புண்படுத்தாமல் தொடர்வது நல்லதே. இதனால் யாரும் சங்கடப்படுவதும் காயப்படுத்தப்படுவதும் இல்லை.

  விவாதங்கள் மூலம் கருத்துக்கள் விரிவு படுத்தப்பட்டு பலரை சிந்திக்க செய்வதனால் யாரும் மன்னிப்பு கேட்கவும் வேண்டாமே ஐயா

  பதிலளிநீக்கு
 30. நீண்ட விவாதம் ,அவரவர் கருத்துக்களைத் தெளிவு படுத்துகிறது !படுக்கையறைப் பாவை ,கிணற்றுத் தவளை போன்ற சொற்கள் மனதைக் காயப் படுத்துவதால் தவிர்த்து இருக்கலாம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி நானும் இதையே மறைமுகமாக சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
  2. பகவான்ஜி ஐயா!

   ‘படுக்கையறைப் பாவை’ எனும் சொல்லைப் பயன்படுத்தாமல், மற்றபடி பெண்கள் அப்படி இருந்த காலத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது என்று கில்லர்ஜி எழுதியிருந்தது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லை; ஆனால், அந்தச் சொல்லை நான் பயன்படுத்திப் பெண்கள் அப்படி ஆகி விடக்கூடாது என்று வலியுறுத்தியது உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது என்றால் நான் என்ன சொல்ல?

   ‘கிணற்றுத் தவளை’ என்று என்னை நிஷா அவர்கள் குறிப்பிட்டது பற்றி நான் பெரிதாக வருந்தவில்லை. காரணம், கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது கடலளவு. எனில், எல்லாருமே இங்கு கிணற்றுத் தவளைகள்தாம். அவரவர் கிணற்றை அவரவர் எவ்வளவு ஆழப்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முதன்மையானது. என் கிணற்றை நான் தொடர்ந்து ஆழப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். மேலும், அஃது இப்பொழுதே பெரும்பான்மையோரின் கிணறுகளை விட நன்கு ஆழமாகவே இருக்கிறது. ;-)

   நீக்கு
  3. அடடா? விவாதத்தின் வேகத்தில் வந்து விழுந்த வார்த்தைக்காக மனமார்ந்து மன்னிப்பை வேண்டுகின்றேன். ஐயா உங்களை நான் கனவில் கூட அப்படி நினைக்கவில்லை. பெண்கள் குறித்த இன்றைய நிலைக்கான கருத்தாகவே நான் கருத்திட்டேன். எவரையும் தனிப்பட்ட நோக்கில் சுட்டிக்காட்டி அல்ல. மாமியார் மருமகள் பிரச்சனை இல்லையா என கேட்டதும் பெண்களுக்குரியதான் மனப்போக்கிலிருந்து விடுதலை அடைய வேண்டியது அவர்களே எனும் புரிதலுக்காக மட்டுமே.யாரையும் காயப்படுத்தும் நோக்கம் என்ஞுள் இல்லை.

   அதீத வேலைப்பளு உங்கள் பதிவு கண்டும் பதிலிட தாமதத்தினை தந்து விட்டது. மன்னியுங்கள்

   நீக்கு
  4. பெண்கள் மீதான உங்கள் புரிதல் மதிப்பு ஆதங்கம் எதிர்பார்ப்பு கண்டு பெண்ணாக நான் மகிழ்ச்சியடைகின்றேன் ஐயா. அதே நேரம் இப்பதிவிலும் பெண்ணுக்காக ஆணாக நீங்கள் வாதாட தங்கள் சார்பாக கருத்துரைக்க இந்த வலையுலகில் எப்பெண்ணுக்கும் நேரமில்லை, விருப்பமில்லை என்பதை புரிந்திடுங்கள். இது தான் இன்றைய உண்மை. தனக்கு என்ன தேவையோ அதை தேர்ந்தெடுக்க, கேட்டுப்பெற முடியாத நிலையில் தான் பெண்கள் என்றும் எங்கும் இருக்கின்றார்கள். இந்த நிலை மாறாத வரை நம என்னதான் கத்தினாலும் புலம்பினாலும், எழுதினாலும் மாற்றங்கள் சாத்தியமே இல்லை.

   குடிகார கணவன், பிள்ளைகளை நன்கு வளர்த்தெடுக்க பாடுபடும் தாய்க்கு உதாரணமாக என் அம்மாவையும் நான் உதாரணமாக்குவேன். இன்னும் பல விவாதங்கள் பலருடைய சொந்த அனுபவங்கள் கண்டவை கேட்டவைகள் என பல சம்பவங்களின் உண்மைகளை கொண்டே என் பதிவுகளை எழுத்தாக்கினேன். ஓரிருவரை வைத்து அல்ல ஐயா. இவ்விடயம் குறித்து நாம் எத்துணை பேசினாலும் எழுதினாலும் முடிவென்பது பெண்கள் கைகளில் தானே?

   நீக்கு
  5. மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் வேண்டா நிஷா அவர்களே! விவாத வேகத்தில் இவை இயல்பே! மற்றபடி, காயப்படுத்தும் எண்ணம் நம் இருவருக்குமே இல்லை என்பது நாமறிந்ததே!

   கூடுதல் கருத்துக்களுக்கும் நன்றி! ஆம்! நாம் எவ்வளவுதான் விவாதித்தாலும் முடிவு பெண்கள் அல்லது சமூகத்தின் கையில்தான். ஆனால், அந்த முடிவை அவர்கள் எடுக்கும்பொழுது இத்தனை கோடி பெண்களில் யாராவது ஒருவருக்கு இங்கு நாம் பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் நல்முடிவெடுக்க உதவலாம் இல்லையா? அந்த நம்பிக்கையிலேயே பதிவு எழுதுவது, பகிர்வது, கருத்திடுவது எல்லாமே! பார்ப்போம்! தொடர் வேலைகள், உலவிச் சிக்கல்கள் காரணமாக எனக்கும் பதிலளிக்கத் தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்!

   நீக்கு
 31. வணக்கம் நண்பரே!
  இந்தப் பதிவு இவ்வளவு விவாதங்களையும் கருத்துமோதல்களையும் ஏற்படுத்தும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். பதிவும் அதனோடு ஒட்டிய விவாதங்களும் இதனை வாசித்தவர்கள் தங்களது எழுத்துகளை ஒட்டி எவ்வளவு நேரத்தைச் சிந்தனையைச் செலவு செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

  பல ஆண்டுகளுக்கு முன் என்னுடன் உயர்கல்வி படித்த நண்பன் ஒருவனின் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அக்கிராமத்தின் பெரும்பான்மை ஆதிக்கச் சமூகத்தைச் சார்ந்தவன் அவன். அவனது தாயார் தேர்தலின் மூலம் அக்கிராமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  நாங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கூட்டம் எ எங்களது வாகனத்தை வழிமறித்தது. என் நண்பன் சடுதியில் இறங்கி, என்ன என்று கேட்டான். அவர்களில் சிலர் குடித்திருந்தார்கள். கிராமத்தில் அவர்கள் வசிப்பிடத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சினையைச் சொல்லி அதில் அவன் தாயார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூச்சலிட்டார்கள்.
  கெட்டவார்த்தைகளை உரக்கக்கூவினார்கள். இவன் கோபப்பட்ட போது அவனது சட்டையைப் பிடித்துத் தள்ளினார்கள். கீழே விழுந்தவன் மெதுவாக எழுந்து, அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவிட்டு வண்டியிலேறிய பின் என்னிடம் , ” இந்த …………………………………………. பசங்களுக்கு சம உரிமை கொடுத்தா இப்படித்தான். இவனுகள வைக்க வேண்டிய இடத்தில வைக்கனும். சும்மாவா அந்தக் காலத்தில அப்படி வைச்சிருந்தாங்க ” என்றான் கண்கள் சிவக்க.

  இச்செய்கை தவறானதெனில் அதற்கான கண்டனத்தை அவன் பதிவு செய்வதில் தவறில்லை. அவர்கள் வேறு சமூகமாயிருந்தாலும், அவன் சார்ந்த சமூகமாயிருந்தாலும் அவர் செய்கை தவறெனப்பட்டால் மற்றவரும் அவர் செய்கையை எதிர்க்கலாம்.
  ஒருசிலர் செய்யும் தவற்றிற்காக, ஒரு காலகட்டம்வரை, மனித மாண்பிற்கு முற்றிலும் மாறாக நடத்தப்பட்டு, நம் சமூகமா இப்படியெல்லாம் சகமனிதனைக் கொடுமைபடுத்திற்று என இன்று நாம் எண்ணி எண்ணி, வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதும் அந்த முன்னோர் இழிசெயலை மகத்துவமாக எண்ணி முழங்கி மார்தட்டுவதும் நிச்சயம் அருவறுப்பானதுதான்.

  பெண்கள் புனிதமென்ற பேரில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள். அந்தப் புனிதம் அவர்களுக்குச் சிறையாகவும் விலங்காகவும் இருக்கும் நிலை இன்று மெல்ல மாறிக்கொண்டிருக்கிறதே ஒழிய பெண்கள் அனைவராலும் அதிலிருந்து இன்றுவரை விடுதலை அடையமுடிவில்லை என்பதே நிதர்சனம். அவர்கள் இன்றிருக்கும் இந்த நிலையை அடையவே குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது.

  எனவே, சமுதாய ஒழுங்கிற்கு மாறாகக் கேடாக நடப்பது ஆண் – பெண் யாராயினும், பேதமின்றி அதைக் கண்டிப்பதும், கருத்துக் கூறுவதும் திருத்த முயல்வதும் அறமாகுமேயன்றி, அதனை ஆண் செய்தால் வழக்கம்தான் என்று இயல்பாகக் கடந்துபோவதும் பெண் செய்தால் புனிதம் போயிற்றெனப் புலம்புவதும் ஆதிக்க மனப்பாங்குதான். இது மீண்டும் பெண்களைப் புனிதத்தின் பெயரால் இருளில் தள்ளுதற்கு வழிகோலும்.

  இறுதியாய், எனது தளத்தில் எழுதிப்பதிவிட்டதொன்றை இதனோடு இணைத்தல் தகுமென நினைக்கிறேன்.

  வெடிப்புறுங் கவிச்சூரியன்.

  கால முண்ட கண்மணிப் பூக்களின்
  கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
  ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
  ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!


  கள்ளிப் பாலிலும் நெல்மணி யூட்டியும்
  கரைந்த பெண்சிசு கண்ணீர் பெருகிட
  முள்ளாய் முகிழ்த்த ஆண்மரத் தோப்பினை
  மூட்டி யழித்துதீ முகிழ்த்திடக் காண்கிறேன்!

  வேட்டை யாடும் விலங்குக ளாகியே
  வெற்றுச் சதையெனப் பெண்மை நினைந்தவர்
  ஓட்ட மெடுத்திட ஓங்கு மறிவினில்
  ஒளிநு தலினள் வளருதல் காண்கிறேன்!

  அச்சத் தளைகளில் அடிமைக ளாக்கியே
  ஆயி ரம்பல வாயிர மாண்டுகள்
  துச்ச மென்றே தூற்றியோர் சிந்தனை
  தூக்கி லேற்றுவோர் துடித்தெழக் காண்கிறேன்!

  அடுப்புக் கரிமுகம் ஆணினச் சாட்டையில்
  அடிப டத்துடித் தடங்கிய பெண்மையுள்
  வெடிப்பு றுங்கவிச் சூரியன் தோன்றியே
  விடியல் காட்டவோர் விழிசெயக் காண்கிறேன்!

  உள்ளக் கல்லறை உலரவோர் மூலையை
  உலக மென்று காட்டுவார் ஊமையாய்த்
  தள்ளி வைத்துநீ தகவிலாள் என்றதைத்
  தகர்த்தெ ழுந்துபெண் முகிழ்த்திடக் காண்கிறேன்!

  வீட்டு வேலையில் வெந்து கருகுதல்
  விதியெ னத்தமை விற்ற வாழ்க்கையை
  ஓட்டுங் கல்வியால் ஓங்கு வாளெனெ
  ஒளிந்த பெண்ணினம் ஒளிருதல் காண்கிறேன்!

  இதன் வரிகளுள் ஊமையின் கனவும் கலந்ததுதான்.

  நன்றி.

  ...........................................தொடரேன்.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லருக கவிஞரே நிச்சயமாக எதிர் பார்த்தேன் அதேநேரம் இப்படி அல்ல பல நபர்களிடமிருந்து...

   தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   என்னால் செல்லில் விரிவாக எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.

   நீக்கு
  2. நீங்கள் என்ன யாரிடமிருந்து எதிர்பார்த்தீர்கள்? ஒரு வேளை என் பதிவு அதீதமானதோ சார்?

   நீக்கு
  3. நான் எதிர் பார்த்தது பல பெண்பதிவர்களிடமிருந்து... என்று

   தங்களது விவாதம், கருத்துகள் நியாயமே

   நீக்கு
  4. ஐயா ஜோசப் விஜு அவர்களின் கருத்துக்கள் மிகவும் நடுநிலையானவை. அதே நேரம், இப்பதிவு பற்றிய தன் கருத்துக்களைப் பூடகமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். அவருக்கு நம் நன்றி! அவருடைய வீரியம் செறிந்த கவிதையை இங்கு பகிர முன்வந்தமைக்கும் நம் நன்றி!

   நீக்கு