தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 09, 2020

மாணிக்பாட்ஷா


வணக்கம் நட்பூக்களே...
மின்நூல் ஆசை மண்ணுள் போனாலும் விடாது கருப்பு போல ஆசையற்ற எனது சரீரத்திலும் இருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் மூன்றாவது மின்நூலாக எனது படைப்பின் தலைப்பூ மாணிக்பாட்ஷா. 

இந்நூலில் இரண்டு நட்பூக்களின் உன்னதமான இதயங்களை தங்களின் முன் விவரித்து வைத்து இருக்கிறேன். இப்படியும் மாமனிதர்கள் உண்டா ? என்று தங்களது மனதில் தோன்றினால் உண்டு என்பதே எமது ஆணித்தரமான வாதம், இவைகளில் நான் பார்த்தவைகளைவிட உணர்ந்தவைகளே அதிகம் என்பதும் எமது பிரதிவாதமாகும்.
 
கடந்த புதன் 01.09.2020 அன்று இந்நூலை வெளியிட்டு இருக்கிறேன் கிண்டில் கணக்கு உள்ளவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். இதுவொரு முழுநீள நாவல் போன்று எழுதி இருக்கிறேன். சற்றே நீளமானதே அதாவது நூறு பேப்பர்களை விழுங்கி இருக்கிறது.
 
இதன் விலை (70.00) எழுபது ரூபாய். மேலும் இது நான் சொல்லிய விதம் படிப்பவர்களுக்கு முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டதா ? என்பதை அறிய ஆவல் கொண்டுள்ளேன். நண்பர்கள் இதனை படித்து இதன் விமர்சனம் எழுதினால் நான் அறிந்து மகிழ்ந்து கொள்வேன். 
 
அட்டைப்படம் நண்பர் திரு. கரந்தையார் அவர்களுடன் பொறாமை கொண்டு நானே உருவாக்கினேன் என்பது இங்கு பறையடிக்கப்படுகிறது. அணில் போல் உதவிய திரு. வெங்கட்ஜி அவர்களுக்கு நன்றி.
 

இதோ மின்நூலின் இணைப்பு.
மாணிக்பாட்ஷா
 
எனது முந்தைய மின்நூல்களை அமேசானில் வாங்க கீழே சொடுக்கலாம்...
 
முதல் நகைச்சுவை மின்நூல்
நீடாமங்கலம், நீட் நீலாம்பரி
 
இரண்டாவது கவிதை மின்நூல்
ரம், ரம்மி, ரம்பா
 
வாங்கி படித்து வாழ்த்துங்கள் இன்னும் மூன்றடி வளர்கிறேன்.
உங்கள் கில்லர்ஜி தேவகோட்டை.

40 கருத்துகள்:

  1. வீறு நடை போடுக...வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் கில்லர்ஜி... மென்மேலும் வளருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆசை யாரைத்தான் விட்டது கில்லர்ஜியும் மாட்டிக்கொண்டார்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்..நீங்க முன்னாலே போங்க நான் பின்னாலே வாரேன்...

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    வளருங்கள் . அட்டைப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    புதிய மின்னூலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அட்டைப்படம் உங்கள் கைவண்ணத்தில் அழகான தயாரிப்பு. மேலும் மேலும் வளர்ந்து வளம் காண இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  7. வாழ்த்த வயதில்லை நண்பரே.
    ஆனால் நீங்கள் மென்மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வருக நண்பரே சந்தடி சாக்கில் இளைஞர் ஆகி விடப் பார்க்கிறீர்களா ?

      இன்னுமா 28 வயதை தாண்டாமல் இருக்கிறீர்கள் ?

      நீக்கு
    2. எனக்கு 20 வருடங்களாக 28 வயது தான் என்பது உங்களுக்கு தெரியாதல்ல நண்பரே

      நீக்கு
  8. இன்னும் பலப்பல படைப்புகளால் வலையுலகம் சிறப்புற வேண்டும்...

    அன்பின் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. வாழ்த்துகள் ஐயா!
    மென்மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளம் சேருங்கள்

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்ம் கில்லர்ஜி.

    தொடரட்டும் மின்னூல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. வாழ்த்துகள் கில்லர்ஜி! கின்டிலில் அன்லிமிடெடாகத் தரவிறக்கிப் படிக்கவும் பணம் கட்டணுமாமே! அதனால் தரவிறக்கம் செய்து படிக்க முடியவில்லை. மன்னியுங்கள்! :( மற்றபடி நான் புத்தகம் வெளியிடணும்னு நினைப்பது கனவாகப் போயிடுமோனு தோணுது! பார்க்கலாம். உங்கள் புதிய புத்தகம் விற்பனையில் சாதனை படைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அப்படியா ? சந்தாதாரர்களுக்கு இலவசம்தானே... தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. சிறப்பான அட்டைப்படம் பார்க்கையிலேயே கில்லர்ஜியின் கைவண்ணமாகப் பளிச்சிடுகிறது. நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
  14. அன்பு தேவகோட்டைஜி,
    வாழ்க்கைய்ல் இது நல்ல முன்னேற்றம்.
    புத்தகங்களை என்னாலும் படிக்க முடியவில்லை. அது ஒரு பெரிய வருத்தம்.
    புத்தக அட்டையே பிரமாதமாக வந்திருக்கிறது.
    அன்பு கீதாவைப் போல நானும்
    நூல் வெளியீட்டு ஆசையை விட்டு விட்டேன்.

    சின்னவர்கள் எல்லோரும் நன்றாக எழுதி
    வளம் பெற வேண்டும். வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. வாழ்த்துகள்! வாழ்க,வளர்க! படத்தைப்பார்த்துவிட்டு சூப்பர் பதிவு காத்திருக்கிறது  என்று நினைத்தேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இதுவொரு நெடும்நாவல் பதிவில் இடுவது சரியாக வராது என்றே கருதினேன்.

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. மிக்க மகிழ்ச்சி. இன்னும் இன்னும் எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  17. மூன்றாவது மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள். நல்லவர்பற்றி எழுதியிருக்கிறீர்கள். நல்லதே நடக்கட்டும் என்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. பாராட்டுகள் புதிய வெளியீட்டிற்கு! மென்மேலும் மின் நூல்கள் வெளியிட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு