தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

நடிகர் நடிகைக்கு ஜாதி கிடையாதா ?


ண்ணே வணக்கம் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும் சொல்லுங்கணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்லுறேன்.

அரசியல்வாதிகள் எல்லோருமே மக்களுக்காக உழைப்பேன்’’னு சொல்றாங்களே யாராவது அப்படி உழைச்சு இருக்காங்களாண்ணே ?
தம்பி அவங்க சொல்லும்போது இரண்டு எழுத்தை குறைவாக சொல்வாங்க... செய்யிறபோது தன் மக்களுக்காக என்று நிறைவாக செய்வாங்க சரிதானே...

திரைப்படத்துல கைவண்டி இழுக்கிற கூலித் தொழிலாளியை காதலிச்சு கைப்பிடிக்கிற நடிகைகள் சொந்த வாழ்க்கையில் பெருங்கொண்ட வெளிநாட்டு மாப்பிள்ளையை கல்யாணம் செய்யிறாங்களே இது எப்படிணே ?
அடேய் அவங்க படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்லும்போது நட்சத்திர விடுதிகள்ல தங்கி கை வண்டி இழுக்கிற தொழிலாளர்களை வலை வீசி தேடுவாங்க கிடைக்காத பட்சத்துல இந்த மாதிரி தொழில் அதிபர்களை திருமணம் செய்துக்கிறாங்க... மற்றபடி கை வண்டி தொழிலாளிக்கும், தொழில் அதிபருக்கும் சில எழுத்துகள்தானே வித்தியாசம்.

திரைப்படங்கள்’’ல நாயகனாக நடிக்கிறவரு ஒண்ணேகால் ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கணும், முக்கால் ரூபாய் கல்லூரி கட்டணம் கட்டணும்’’னு வசனம் பேசுறாங்களே சொந்த வாழ்க்கையில் அவங்க சரியா வருமானவரி கட்டுறது இல்லையே ஏண்ணே ?
அடேய் விளங்காமுடுமை அது வசனகர்த்தா எழுதி, இயக்குனரு யோசனையில எடுக்கிற காட்சி, நடிகைக்கு தாலி கட்டுறது மாதிரி காட்சி எடுக்கிறாங்க அதுக்காக அன்றைக்கே சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்கு தன்னோட வீட்டுக்கு நடிகர் கூட்டிட்டு போகமுடியுமா ? இல்லை அவனோட மனைவிதான் சம்மதிச்சுடுவாளா ? நடிக்கிறதோட நடிகரோட வேலை முடிஞ்சு போச்சு. நம்ம ரசிகர்ங்கிற வெட்டிக்கூ..........கள்தான் அவனை கடவுளாக நினைக்கிறாங்க மற்றபடி திரைப்படத்துல நடிக்க வந்தவன் பெரும்பாலானவன் வயிற்றுப்பசியை போக்குறதுக்கு வந்தவன்தான்.

ஏண்ணே கிரிக்கெட் விளையாடுற விராட் கோலி குடிக்கிற தண்ணீர் பாட்டில் எண்ணூறு ரூபாயாமுல உண்மையாண்ணே... விளையாட்டுக்கு வர்றதுக்கு முன்பும் இப்படித்தான் குடிச்சு இருப்பாராண்ணே ?
அடேய் தம்பி அவங்கே பகுசிக்கு பஞ்சர் பாக்குறவங்கே விளையாட வர்றதுக்கு முன்னாலே இவ்வளவு பணத்துக்கு தண்ணீர் குடிச்சு இருக்கணும்’’னா அவுக அப்பன் அம்பானி வகையறாவுல பிறந்து இருக்கணும். இலங்கையில 1980-ல நகைக்கடை முதலாளிகள் ஒரு மணி நேரத்துல தெருவுக்கு பிச்சை எடுக்க வந்துட்டாங்க... இதோ கொரானோவால எத்தனையோ பேர் வாழ்க்கை திசை மாறிப்போச்சு இறைவன் கொடுத்த செல்வத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில தொப்பி போடுவாங்கே...
ஏண்ணே முகேஷ் அம்பானியோட மனைவி காலையில குடிக்கிற தேநீர் மூணு லட்ச ரூபாயாமே... ஜப்பானிலிருந்து வர்ற தேயிலைத் தூளாமே ?
ஆமாடாத்தம்பி நானும் படிச்சேன் அவங்கள்லாம் பரம்பரை பணக்காரர்கள் அவங்களோட சொந்த பணத்துல செலவு செய்யிறாங்க... கேள்வி கேட்க முடியாது ஆனால் சிலபேரு பதவி அதிகாரத்துல இருக்கிறதால பதினான்கு லட்ச ரூபாய்க்கு மக்கள் பணத்தில் உடை எடுக்கிறாங்க.... சென்னை சிவாந்தா குருகுலத்துக்கு வெறும் இரண்டாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தால் போதும் அங்கு இருக்கிற முந்நூறு குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கொடுத்துருவாங்க... இது எத்தனை மனிதர்களுக்கு தெரியும் ? காலவினையடி கருமாரி

ஏண்ணே செல்வி ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம்னு சொன்னாங்களே அப்புறம் இவ்வளவு சொத்தும் எப்படிணே வந்துச்சு ?
அடேய் அந்த ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது உண்மைதான் ஆனால் இவ்வளவு சொத்தும் சம்பளத்துலதான் வாங்கணும்’’னு சட்டத்துல சொல்லி இருக்கா ? ஏதோ கூட இருந்தவங்க வாங்கி இருக்காங்க... கோப்புகள்ல கையெழுத்து போடும்போது கூட்டத்துல ரெண்டு மாறி விழுந்து இருக்கும் இதுக்குப் போயி அலட்டிக்கலாமா ?

தாயை கடவுளாக வணங்க வேண்டும்னு சொல்லி வைத்தது எந்த புராணத்துலணே ?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்றும், தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றும் சொல்லி வச்சதை மலையாளி எம்ஜார் இறந்த பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்த வார்த்தையை குத்தகைக்கு எடுத்து தன்னோட தெண்டங்களுக்கு போதிச்சது அதானாலதான் டயரை நக்குறதும், ஹெலிகாப்டரை வணங்குறதுமாக மக்களுக்கு போதிக்கிறாங்க...

திரைப்படங்கள்ல வரும் பாடல் காட்சிகள்ல ஐந்து நிமிட பாடல்கள்ல உலக நாடுகள் எல்லாம் சுற்றி வர்றாங்க சரி, அதை எல்லாம்கூட கனவுக்காட்சினு ஏத்துக்கிறலாம். ஆனால் ஊரில் நடக்கிற மாரியம்மன் கோயில் கூழு ஊத்துற காட்சிக்கு ஆடிப்பாடுற நாயகனும், நாயகியும் நிமிடத்துக்கு ஒரு உடை உடுத்தி வர்றாங்களே... எப்படிணே ?
தம்பி இதை நம்பி கவுந்த தமிழன் இன்றைக்கு நேற்று இல்லை பல மாமாங்கமாக நம்ம மாங்கா மாமாக்கமாரு கவுந்து விழுந்தது நம்மையும் இப்படித்தான் விழணும்னு நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு போய்ச் சேர்ந்துட்டாங்க பரம்பரை பரம்பரையா வந்தவங்கே இன்றைக்கு ஒருத்தன் நூறு நபர்களை அடிச்சாலும் நம்பி கை தட்டி, விசிலடிச்சு ஆரவாரம் செய்யிறோம். இந்த அடிப்படை ஜின் மாறணும். அதுக்கு எல்லாப்பயலுக்கும் அறுவைச் சிகிச்சை மூலமாகத்தான் மாற்றணும் ஆனால் அரசியல்வாதிகள் இவர்களை மாற விடமாட்டார்கள் காரணம் இப்படி கூமுட்டைகள்தான் இவர்களுக்கும் வேண்டும்.

நம்ம தெருவுக்குள்ளே யாராவது ஜாதி மாறி கல்யாணம் செய்துக்கிட்டா அவங்களே தூத்தியே கொன்னுபுறாய்ங்களே திரைப்பட நடிகர் நடிகைகள் கல்யாணம் செய்துக்கிட்டால் அவங்களை எவனுமே தப்பாக பேச மாட்றாங்களே ஏண்ணே ?
தம்பி சோத்துக்கு செத்த உனக்கும், எனக்கும்தான் ஜாதியும், மதமும் கமலதாசேன் வாணி கணபதியை கல்யாணம் செய்து முதல் பிள்ளையார் சுழி போட்டதோட சரி பிறகு மும்பையில போயி ரெண்டாம் தாரமாக சரிகாவை கல்யாணம் செய்தாரு, ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க பிறந்துச்சு அடக்க ஒடுக்கமாக தமிழ் நாட்டு கலாச்சாரத்தோட வளர்த்து விட்டாரு, அப்புறம் கௌதமியோட கௌரவமாக வாழ்ந்தாரு... இப்ப நான் நாட்டைத் திருத்தப் போறேன் அந்த கோட்டையை புடிக்கப் போறேன் அப்படினு அரசியல் கட்சி ஆரம்பிச்சு இருக்காரு... உனக்கு தகுதி இல்லைனு எவனாவது கேட்கிறானா ? கேள்வி கேட்கிற கில்லர்ஜியைதான் குற்றம் சொல்லுவாய்ங்கே...

அப்படீனாக்கா... விரல் நுணியில் ஆச்சி செய்யிறவருன்னு சொல்லுற  ரசினிஆந்து நல்ல மனுசராணே ?
அடேய் தம்பி வாயில ஏதாவது வந்துடப் போகுது மராட்டியத்துல ஏதோ தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவருனு சொல்லுறாங்கே, சென்னைக்கு வந்து பணம் பெருத்ததால ஒரு பிராமண வீட்டு பெண்ணை மணந்து, ரெண்டு பெண் பிள்ளைகளை பெற்று தேனிப்பக்கம் ஏதோவொரு ஜாதியில கல்யாணம் பண்ணிக் கொடுத்து, இரண்டாவது பெண்ணை ஏதோ கல்யாணம் செய்து கொடுத்து, பிறகு அந்த திருமணம் ஆடம்பரமாக நடத்தாத காரணத்தால் இரண்டாவது மாப்பிள்ளையை பார்த்து ரொம்ப ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுத்ததால உனக்கு தமிழகத்தை ஆள தகுதி இல்லைனு எவனாவது சொல்லப் போறானா ? ஒரு காலத்துல கில்லர்ஜியைத் தவிர தமிழ் நாட்டுல பல இளைஞர்களை சிகரெட் குடிக்க வச்சது இந்த குடிகார மட்டைதான் இப்ப இந்த மட்டை சொல்லுது எடப்பாடியை டாஸ்மாக்கை திறந்தால் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாதுனு அடுத்து நீ ஆட்சியை புடிக்கணும்னா இந்த மாதிரி அறிவுப்பூர்வமான விடயங்களை வெளியில விடலாமா ? இதுலருந்து என்ன தெரியுது... இது அரசியலுக்கு லாயக்கு இல்லை இது வரும்.... ஆனா வராது....

அப்படீனாக்கா... வேற நடிகர் நடிகைகள் யாரும் கௌரவமாக கல்யாணம் செய்யலையாண்ணே ?
நடிகர் நடிகைகள்ல கௌரவமாக கல்யாணம் செய்தவங்கனு பார்த்தால் ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், விஜயகுமார், பார்த்தீபன், சாவித்ரி, ஷீலா, மஞ்சுளா, லட்சுமி, ராதிகா, சீதா, ரேவதி, சரிதா, ஊர்வசி, அம்பிகா, தர்மேந்திரா ஹேமமாலினியை திருமணம் செய்யும்போது மதம் பார்க்கவில்லை, ஐஸ்வர்யாராய் கல்யாணம் செய்தபோது ஜாதி பார்க்கவில்லை சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்யும்போது மதம் பார்க்கவில்லை, அஜித் ஷாலினியை திருமணம் செய்யும்போது மதம் பார்க்கவில்லை, சிந்தர். சி. குஷ்புவை கல்யாணம் செய்து கணவராக வேலை செய்யிறாரு.. இதனால உங்களை நாங்க மதிக்க மாட்டோம்னு எவனும் சொல்லப் போறானா ? இப்படி மானங்கெட்ட கதைகள் நிறைய போயிக்கிட்டே இருக்கும்டா இவளுகள் ஒரு தொடர்கதை மூடுவோம் நாம் காதை.    

என்னண்ணே நீங்க எல்லோரையும் நொட்டம் சொல்லி கழுவி ஊத்துறீங்க... ஒருத்தர்கூட ஜாதியை ஒழிக்க வில்லையா ?
இருக்காங்கடா... தம்பி இருக்காங்க நம்ம கலைஞர் குடும்பம் ஜாதிகள் தொல்லையடி பாப்பா’’னு கலைஞர் குடும்பம் திருமணங்கள் செய்து ஜாதியை ஒழிச்சு இருக்காரு அவரு குடும்பத்துக்கு வந்த பெண்கள் எந்த ஜாதியிலிருந்து வரலைங்கிறேன் தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஜாதியிலும் திருமணம் செய்து புரட்சி செய்து இருக்காங்க.. இந்த புரட்சிக்கு பின்னால ஏதும் சூழ்ச்சி இருக்கானு எனக்கு தெரியாது. கீழே யாராவது சொன்னால் அவங்கள்ட்டதான் கேட்கணும்.

சரிண்ணே நான் கிளம்புறேன் நீங்க பத்திரமாக போங்கண்ணே ?
நல்லதுடா தம்பி பார்த்து பக்குவமாக பொழைச்சுக்கடா மோசடிக்காரங்கே வாழுற நாடு நாந்தேன் விபரம் இல்லாமல் பொழைச்சுட்டேன்.


சிவாதாமஸ்அலி-
எல்லா ஜாதியிலும் சம்பந்தம் பண்ணினால் எல்லா ஜாதி ஓட்டும் விழும்’’னு சூழ்ச்சி இருக்க வாய்ப்புண்டு’’னு நான் சொல்லவே மாட்டேனே...

சாம்பசிவம்-
காமராஜர், கக்கன், ஜீவா போன்றவர்கள் எல்லாம் மக்களுக்காக உழைச்சு மண்ணுக்குள்ளே போயும் மனிதர் மனங்களில் வாழவில்லையா ?

ChavasRegal சிவசம்போ-
இதென்ன காலவினையா இருக்கு மூணு லட்ச ரூபாய்ல ஜப்பானுக்கே போய் டீ குடிச்சுட்டு வரலாமே.... ?

64 கருத்துகள்:

  1. உப்புத் தண்ணியில நனைச்ச சவுக்கு..
    வெளுத்து வாங்குங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஊர்கூடி வெளுத்தால்தான் இவனுக அடங்குவானுங்க...

      நீக்கு
    2. பணம் இருப்பவர்கள் அனைவருக்குமே ஜாதி மதம் இல்லை.

      நீக்கு
    3. ஆமாம் ஜி உண்மையான வார்த்தை.

      நீக்கு
  2. கமால தாசேன் புள்ளப் பெத்துக்கிட்டது எப்போ?.. கண்ணாலம் கட்டிக்கிட்டது எப்போ?.. ஒரு கதா காலேட்சபமே இருக்கு..

    காலக் கொடுமையடா கந்தசாமி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அதுக்கு தனிபதிவு போடணுமே... நெல்லைத்தமிழர் கோவிச்சுக்கிருவாருனு பயமாகீது.

      நீக்கு
    2. இந்த துரை செல்வராஜு சாருக்கு ரொம்பத்தான் இது. முதல்ல வாணி கணபதியைக் கண்ணாலம் கட்டிக்கினு குழந்தை இல்லை. ரசிகர்கள் மத்தீல இது பெரிய பேச்சாப் போகவும்தான், அவுரு, சலங்கை ஒலில பரதநாட்டியக் கலைஞரா நடிக்கணும்னா மீசையை எடுக்க மாட்டேன்னு அடம் புடிச்சார் (இல்லைனா பொம்பளை மாதிரி தெரியும்னு). சரி... வேற எப்படி கொழந்தை பெத்துக்கறது? டிரை பண்ணி குழந்தை வந்த உடனே ரெண்டாவது கண்ணாலம் கட்டிக்கினாரு, டிரை பண்ணச்சொல்ல, வாணி கணபதிக்கு கோவம் வந்துக்கினு பிச்சிக்கினு போய்ட்டாங்க. அது சரி...நம்ம கதையவே எளுத நேரம் இல்லாமக் கீது, இதுல ஊர்ல இருக்குற கமலதாசன் பத்தி எளுதி எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணனும்?

      நீக்கு
    3. ஆஹா சரித்திரம் பூராம் வெளியே வருதே... உங்களிடமிருந்தே பெரிய பதிவு தேறும் போலயே...

      நீக்கு
  3. எல்லாம் ஏழைத் தாயின் மகன் செயல்...

    பதிலளிநீக்கு
  4. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நலமா ?
      ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. எல்லாமே ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. அதிலும் 'நடிகைகள் கெளரவமாக' பகுதி மிகுந்த சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடிகைகள் கௌரவமாக வாழ்வது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா ?

      நீக்கு
  6. அரசியல்வாதிக்கு மட்டும், அதிலும் முக்கியத் தலைவர்கள், பொதுவில் இருந்து ஊருக்கு உபதேசம் பண்ணுவதுபோல நடிப்பதால், அவங்க வீட்டுல சாதி பார்க்க முடியாது. இப்போ அழகிரியைக் கொண்டுபோய் தூத்துக்குடில நிற்கவைக்க மாட்டாரு. ஏன்னா, தூத்துக்குடி நாடார்கள் வாக்கு வங்கி உள்ள இடம். அதுனால அதுக்கு கனிமொழி. இந்த மாதிரி சாதிக்கொரு ஆள் வச்சிருக்காரு. ரொம்ப பணக்காரங்க வீட்டுல சாதிக்கு இடம் இருப்பது கடினம் (பொதுமக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்கணும்னு. இப்படித்தான் சீரஞ்சீவி பெண் டிரைவரோடு ஓடிப்போயிடுச்சு). ஜெ.வும் சாதி பார்த்த மாதிரி தெரியலை. இல்லைனா, வாரிசுன்னு சொந்த அண்ணன் பசங்களைக் கை காட்டாம, சம்பாதித்த பணம்லாம் (பரம்பரைப் பணம்) வீணாப் போகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஓட்டுகளை குறிவைத்து மணம் முடித்த தலைவர்கள் தமிழகத்தில் உண்டுதான்.

      சிரஞ்சீவி மருமகன் உயர்ந்த ஜாதியாயினும் அடித்து பிடித்து பிரித்து விட்டார்களே...

      நீக்கு
    2. இந்த 'உயர்ந்த' 'தாழ்ந்த' ஜாதின்னு சொன்னாலே சிரிப்பு சிரிப்பா வருது. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர். அவ்ளோதான்.

      நீக்கு
    3. நண்பரே நான் குறிப்பிட்டதற்கு காரணம் உயர்ந்த ஜாதிப் பெண்ணை தாழ்ந்த ஜாதி என்று இந்த சமூகம் தீர்மானித்து இருக்கிறது.

      ஆனால் சிரஞ்சீவி தாழ்ந்த ஜாதியாம் இங்கு பொருளாதாரம் ஏற்றத்தாழ்வை தீர்மானிக்கிறது.

      நீக்கு
  7. பல விஷயம் தெரிந்த உமக்கு வெளுத்து வாங்க ஒரு வாய்ப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      ஹா.. ஹா.. ஹா.. என்ன ஐயா இப்படி சொல்லிட்டீங்க... ?

      நீக்கு
  8. மனிதர் மனங்களில் வாழும் தலைவர்கள் அவர்கள் புகழ் என்று இருக்கும்.

    நீங்கள் சிவானந்தா குருகுலத்திற்கு உதவி வருவது மகிழ்ச்சி தரும் விஷயம்.
    அந்த குழந்தைகளின் மனதில் தேவகோட்டையார் என்றும் இருப்பார்.
    அன்பு செய்து வாழ்வது மகிழ்ச்சி தரும்.இல்லாதவர்களுக்கு கொடுப்பதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்ப்பதும் கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி தரும்.
    வாழ்க வளமுடன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. எப்படி நண்பரே இப்படி?
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் சரிண்ணே கடைசியா ஒரு கேள்வி. நீங்க ஏன் நடிகர் நடிகையர் மேல ரொம்ப காண்டா இருக்கீங்க?

    அடேய் நீ தான் கேள்வியிலேயே பதிலையும் சொல்லிட்டே. அவிங்க எப்போதுமே நடிக்கிறவங்க. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி நடிப்பாய்ங்க.உண்மையை எப்போதும் காட்ட மாட்டாங்க. கில்லெர்ஜீ  என்றைக்குமே நடிக்க மாட்டான். அதனாலதான்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      கேள்வியும், பதிலுமாக நீங்களே உண்மையை சொல்லிட்டீங்க... நன்றி.

      நீக்கு
  11. ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்துவிட்டால் எதுவும் கிடையாது...ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லை என்றாலும் எதுவும் கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே உண்மைதான். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. நீங்கள் சிவாநந்தா குருகுலத்துக்கு உதவி வருவதைப் பற்றி ஏற்கெனவே சொல்லி இருந்தீங்க. வாழ்த்துகள். ஆனால் விளம்பரமில்லாமல் ஏழைத்தாயின் மகன் தன் வருமானத்தைப் பல வகைகளிலும் உதவி வருகிறார். அவர் குடும்பத்தினர் யாரும் தில்லிக்கு வந்து அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணியதில்லை. குடும்பத்திற்காகச் சொத்துச் சேர்த்தது இல்லை. அவர் சகோதரர் மகள் மருத்துவ உதவிக்கு ஆள் இல்லாமல் இதய நோயால் இறந்து போனார். ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கிறார்.இன்னொருத்தர் அரசுப் பணியில் ஊழியராக இருந்து பென்ஷன் பணத்தில் ஜீவிக்கிறார். அவர் அம்மா இருப்பதும் ஓர் அறை உள்ள வீடு தான். எங்கே போவது என்றாலும் ஆட்டோவில் தான் பயணிக்கிறார். எக்ஸ், ஒய், இஜட் எந்தப் பாதுகாப்புக்களும் கிடையாது. சாதாரணமாகக் கிளம்பிப் போய் வருகிறார்கள். தங்கள் வேலைகளைப் பார்க்கிறார்கள். யாரும் இவர் எங்கள் சகோதரர் என்றோ அந்த ஏழைத்தாய் இவன் என் மகன் என்றோ பெருமையுடன் சொல்லிக்கொண்டு திரியவில்லை. அவர் கொடுத்திருக்கும் நன்கொடைகளைப் பட்டியலிட்டால் கோடிகளில் வரும்!ஆதாரங்களோடு சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினைந்து லட்சம் உடை என விளம்பரப்படுத்தப்பட்டது உண்மையில் அவ்வளவு விலை இல்லை. ஆனாலும் அந்த உடையும் ஏலத்தில் விடப்பட்டுப் பிரதம மந்திரியின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர் கிழிந்த உடையையா போட்டுக்கொள்ள முடியும்? நேருவில் ஆரம்பித்துப் பிரதமர்கள் எல்லோருமே விலை உயர்ந்த உடையைத் தான் அணிந்திருக்கின்றனர். லால்பகதூர் சாஸ்திரியையும், நரசிம்மராவையும் தவிர்த்து. இருவரும் கதராடைகளே அணிந்தனர்.

      நீக்கு
    2. வருக உதவிகளை பட்டியலிடும் தொகை கோடிகளை தொடுமா ?

      நேற்று ஒரு புகைப்படம் பார்த்தேன் கித்தார் வாசிப்பதுபோல் ஏதோ ஹிந்தி பட ஹீரோ போலிருந்தது.

      நாட்டு மக்கள் கொரோனாவில் செத்துக்கொண்டு இருக்கும் பொழுது பிரதமருக்கு இதெல்லாம் அவசியமா ?

      நீக்கு
    3. மூன்று கோடியில்கூட திருமண உடையணிந்த மணப்பெண்கள் உண்டு. அவர்கள் தனியார் தனிப்பட்ட செயல்பாடு.

      ஆனால் பிரதமர் என்பவர் நாட்டு மக்களின் சொத்து. அவர் அளவோடு வாசிக்கணும் (கித்தார் உள்பட)

      நீக்கு
    4. கில்லர்ஜி ஏழைத்தாயின் மகன் கட்டிய மனைவியை ஒடிவிட்டவந்தவர் அப்படிபட்டவாரா தன் குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் கவனிக்கப் போகிறார். தன்னை வளர்த்துவிட்ட அத்வானியை மதிக்க தெரியாதவர் அப்படிப்படவாரா தன் குடும்பத்தினர் பற்றி கவலைப்பட போகிறார்.. அதனால்தான் அவர் குடும்பத்தினர் இன்றும் அப்படியே இருக்கின்றனர்...


      சரி யோக்கிய சிகாமணி என்று சொல்லப்படும் ஏழைத்தாயின் மகன் PM Care என்ற பெயரில் வசூலித்த கொள்ளையை பற்றி வெளிப்படையாக இல்லாமல் இருப்பது பற்றிமட்டும் வாய் திறக்கமாட்டார்...

      நீக்கு
    5. வருக தமிழரே
      அத்வானியை அவர் உதாசீனப்படுத்துவதும், முன்பு அவர் காலில் விழும் காணொளியும் இப்பொழுது வைரலாக பரவுகிறது.

      PM Care அவசரப்படாதீர்கள் இவர்தானே நிரந்தர பிரதமர் ஆகவே மெதுவாக கேட்கலாம்.

      நீக்கு
    6. கிட்டார் வாசிப்பதெல்லாம் மாபெரும் குற்றம் எனத் தெரியவில்லை. திரு அப்துல் கலாம் அவர்கள் வீணை வாசிக்கும் படங்கள் (அவன் குடியரசுத்தலைவராக ஆன பின்னர்) வந்திருப்பதை அறிந்திருக்கிறீர்களா? எல்லாப் பிரதமர்களும் தனியாகத் தையற்காரர்களை வைத்துக்கொண்டு விலை உயர்ந்த ஆடைகளைத் தான் அணிந்து வந்திருக்கின்றனர். இந்திரா காந்திக்கு எனத் தனியான நெசவுகளில் நெய்யப்பட்ட புடைவைகள் தயாரிப்பார்கள். சொன்னால் எல்லோரையும் சொல்லவேண்டும், பாலிய வயதுத் திருமணத்தை அவர் ஏற்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய வயதில் விபரம் தெரியும் முன்னரே செய்து வைக்கப்பட்ட திருமணம் அது. ஆனால் அவர் 13,14 வயதுக்கே இமயமலைக்கு தீக்ஷை பெறப் போய்விட்டார். அதன் பின்னரும் தனக்குத் திருமணம் ஆனதையோ மனைவி பற்றியோ நினைக்கவில்லை. பிரமசாரியாக இருந்து தொண்டு செய் என குருவிடமிருந்து வந்த ஆணையைத் தான் எடுத்துக் கொண்டு செய்து வருகிறார். மனைவியை நினைவு தெரிந்து குடும்ப வாழ்க்கை நடத்திவிட்டு விட்டுவிட்டு ஓடி வரவில்லை. தெரிந்து கொள்ளும் விஷயங்களை முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரைக் காரணமில்லாமல் வெறுப்பவர்கள் உண்டு. ஆனாலும் அந்த வெறுப்பு இங்கே உச்சத்தைத் தொடுகிறது. சாதுர்மாஸ்யம் எனப்படும் நான்கு மாதங்கள் முழுவதும் முழு உபவாசம் இருப்பார். உபவாசம் என்றால் பல ஆகாரங்களைச் சாப்பிடுவது இல்லை. ஒரே வேளை மட்டும். அதே போல் நவராத்திரி பத்து நாட்களும் கடுமையான உபவாசம். மனோபலம் இல்லாமல் இந்த உபவாசங்கள் எல்லாம் இருக்க முடியாது. பிடிக்கவில்லை என்னும் ஒரே காரணத்திற்காக வெறுப்பு அளவு மீறிப் போய் விட்டது. பாஜக கட்சியில் 80 வயதானவர்களை அரசியல் பதவிகளை அமர்த்த மாட்டார்கள். வாஜ்பாய் இன்று இருந்திருந்தாலும் இதே மாதிரி தான் நடந்திருக்கும். ஆகவே அத்வானிக்கு வயது ஆகிவிட்டதென்பதால் அவரை அரசியல் பதவியில் அமர்த்தவில்லை. இந்தக் கட்டுப்பாடு பாஜகவில் அனைவருக்கும் பொருந்தும். கட்சித்தலைவர் என்றாலும் சரி, அரசியல் பதவி என்றாலும் சரி! தேர்தலில் நிற்கவே அனுமதிக்க மாட்டார்கள். திடீரென அவர்கள் இறந்தால் மறு தேர்தல் நடத்தும்படி ஆகும். அதற்கு அதிகப்படி செலவாகும். இதை எல்லாம் யோசித்தே இம்மாதிரிச் செய்திருக்கின்றனர். கட்சியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்று.அவர் குடும்பத்தினரை அவர் கவனிக்காமல் அப்படியே விட்டிருப்பதால் தான் யோக்கியர்! குடும்பத்தின் உறவுமுறைக்கெல்லாம் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கவில்லை. பிஎம் கேர் நிதியிலிருந்து எடுத்து வீசவும் இல்லை.

      நீக்கு
    7. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் நிதி பற்றிய உங்கள் சந்தேகங்களை யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம்.

      நீக்கு
    8. நிறைய தகவல்கள் திரட்டி தந்து இருக்கிறீர்கள் முதலில் அதற்கு பெரிய நன்றி.

      அத்வானியின் பதவிபற்றி நான் பேசவரவில்லை. ஆனால் அவரை மனிதராக மதிப்பு கொடுக்கவில்லையே... ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது போன்ற பல காணொளிகளை நான் பொதுவிழாக்களில் கண்டு விட்டேன்.

      இது மாபெரும் தவறு.

      கிட்டார் வாசிக்கட்டும் அதற்கு இந்த கொரோனா காலம் சாத்தியப்படாது. ஏற்கனவே ட்ரெம் வாசித்தார் அது பேசப்படவில்லை.

      எனக்கு இந்த தகவல் அறியும் சட்டத்தின் இணைய முகவரி அனுப்பவும் நன்றி.

      எனக்கும் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

      நீக்கு
    9. எந்த மனிதனுக்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏதேனும் பொழுதுபோக்கு தேவை. அது அவருக்குப் பிடித்தமானதாக இருந்தால் இன்னும் ரசித்துச் செய்து மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவார்கள். இது கொரோனா காலமாக இருந்தால் சாப்பிடுவது கூடத் தப்பு என்று சொல்வீர்கள் போல! எப்போதையும் விட இப்போது தான் நாலாபக்கங்களில் இருந்தும் நெருக்கடி அதிகம் ஆக உள்ளது. அதிலிருந்து விடுபட அவருக்குப் பிடித்தவற்றைச் செய்கிறார். அவர் இதை செய்தியாக்கவில்லை. செய்தி ஆக்கி விமரிசனங்களுக்கு உட்படுத்துவது ஊடகங்களே! அதோடு அவர் கொடுத்திருக்கும் நன்கொடைகள் பற்றிய செய்திகள் எல்லாத் தினசரிகளிலும் முக்கியமாக தினமணி, தினமலரில் பத்து நாட்கள் முன்னர் கூட வந்திருக்கின்றன.

      நீக்கு
    10. https://tinyurl.com/y3jo9xqn சுட்டி நீளமாக இருந்ததால் சுருக்கி அனுப்பி உள்ளேன். இதைக் காப்பி, பேஸ்ட் செய்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

      நீக்கு
    11. நான் எப்பொழுதுமே யதார்த்தமாக எழுதுகிறேன் நீங்கள் பிஜேபி என்ற வகையில் பேசுகிறீர்கள்.

      நான் அனைத்து அரசியல்வாதிகளிடமும் குறை காண்கிறேன். நடுநிலையாளன் என்ற வகையில். கலாம் இயல்பிலேயே வீணை கலைஞர்.

      இங்கு எல்லா அசைவுகளும் விளம்பரமாக்கப்படுகிறது.

      இப்பதிவில் மோடி மட்டுமல்ல, கலைஞர் அவரது குடும்பம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கமல், ரஜினி, காமராஜர், கக்கன், ஜீவா, விராட்கோலி, ஓபிஎஸ் மேலும் பல திரைப்படக் கூத்தாடிகள் எல்லோரையும் இழுத்து இருக்கிறேன் என்பதை நினைவு கூர்க!

      மீள் வருகைக்கும், மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
    12. இணைய முகவரி தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
    13. கில்லர்ஜி, நானோ, என் கணவரோ எந்தக் கட்சியும் இல்லை. தேர்தல்களில் கூட எங்க தொகுதியில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று பார்த்துவிட்டே ஓட்டுப் போடுவோம். ஆகவே எந்தக் கட்சியையும் நாங்கள் சார்ந்ததில்லை. உண்மையை உரக்கச் சொல்லுவதால் இப்போதெல்லாம் அதை இந்துத்வா பேசுவதாகவும், சங்கிகள் எனவும் பக்தாள் எனவும் பார்ப்பான் எனவும் சொல்லுகின்றனர். இந்த உண்மையான ஆட்சியை எந்தக் கட்சி கொடுத்திருந்தாலும் பாராட்டுக்கள் கொடுத்திருப்பேன். காங்கிரஸில் பி.வி.நரசிம்மராவ், லால்பஹதூர் சாஸ்திரி ஆட்சிக்காலம் போலவோ ஜனதா கட்சியின் மொரார்ஜி ஆட்சி போலவோ இருந்தால் நன்றாகவே இருக்கும். அதோடு இல்லாமல் பிரதம மந்திரி அலுவலகத்தில் உறவினர்கள் இருக்கிறார்கள். அவங்க நரசிம்மராவ் பிரதமராக இருந்தப்போ இருந்து அதே அலுவலகத்தில் இன்னமும் தொடர்ந்து இருக்காங்க! இதனாலும் என் கணவர் மத்திய அரசுப் பணியில் இருந்ததாலும் (அதிலும் ராணுவம் சம்பந்தப்பட்ட வேலை) பல விஷயங்கள் தெரியவரும்/வருகின்றன. அவற்றில் உண்மை உண்டு என்பது தெரிந்தால் மட்டுமே ஆதரிப்பேன்/சொல்லுவேன். இல்லைனா சொல்லுவதில்லை. ஆகவே நீங்க என்னை பிஜேபி கட்சியைச் சேர்ந்தவள் என நினைக்க வேண்டாம். ஆதாரம் இல்லாமல் எதையும் நான் சொல்லுவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கேன்.

      நீக்கு
    14. உங்களது கொள்கைக்கு எமது இராயல் சல்யூட். இருப்பினும் மோடியை இம்பூட்டு ஆதரிப்பது கொஞ்சம் அதிகமாக தெரியுது.

      என்னைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை.

      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. பணக்காரர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்றும், நடிகர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்றும் சொல்ல முடியாது. விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அரசியலில் நடிகர்கள் ஈடுபடுவது என்பது முதல் அமைச்சர் பதவிக்காகவே! அது போலவே திரைப்படங்களில் புரட்சி பேசும் நடிகர்கள் பொது வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை. நடக்க முடியாததைச் செய்யும்படி திரைப்படங்களில் சொல்லுவார்கள். அரசைக் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் நடைமுறையில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா துறைகளிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டு.

      திரைப்படம் என்பதே மிகைப்படுத்துதல்தான்.

      விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. சில விஷயங்கள் இப்படித்தான். நாம் கேள்வி கேட்டு, நாமே பதில் சொல்லி நம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். இவர்களை நம்பி பின்னால் செல்லும் பல பேதைகளும், இளைஞர்களும் இருக்கும் வரை இவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

    கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      பதிவை பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  15. கேள்வி-பதில் பாணியில் நீங்கள் எழுதும் பதிவுகளில் சுவை அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படியா ? மகிழ்ச்சி அப்படியானால் தங்களுக்காக அடுத்த பதிவும் இதே பாணியில் முயல்கிறேன்.

      நீக்கு
  16. மோசடிகாரங்கே வாழுற நாடு.. இல்லீங்கோ....ஆளுற நாடுங்கோ...!!! இங்கே விபரம் இருந்தாலும் பொழைக்க முடியாதுங்கோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்தாடி நான் பிரதமரை தவறாக சொல்லமாட்டேன்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    தம்புயின் கேள்விளும், அண்ணனின் பதில்களும் அருமை. ரசித்தேன். நீங்கள் சிவானந்தா குருகுலத்திறகு உதவி செய்வது பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் நல்லெண்ணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. மிக அருமையான கேள்விகள்
    அறிவார்ந்த பதில்கள்.
    யாரையுமே நம்ப முடியாதபடியேதான் வாழ்க்கை
    போகிறது.
    நடிகர்கள் வாழ்க்கை ஆதி காலத்திலிருந்தே
    கேள்விக்குறி.
    அவர்கள் படங்களைப் பார்த்துவிட்டு வந்து விட வேண்டியதுதான்.
    உங்கள் சேவை தொடரட்டும்.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா திரைப்படம் என்பதே பொழுதுபோக்கு மட்டும்தான் என்பதை சமூகம் உணரவேண்டும்.

      வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  19. அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் பற்றி எவ்வளவோ எழுதலாம்.எவ்வளவோ சொல்லலாம்.ஆனால் மக்களின் ‘ஆதரவு’ அவர்களுக்கு இருக்கும் வரை நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  20. நடிகர்கள் தனி ஜாதி. கோபத்திலும், விரக்தியிலும் எழுதப்பட்ட  பதிவாக தெரிகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் கோபம்தான் இந்த சமூகத்தின்மீது வேறென்ன செய்வது ?
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. அனைவருக்கும் தருகின்ற சவுக்கடி போல் அல்லவா இருக்கிறது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நீங்கள் சொல்வதுபோல நான் அனைவரையும்தான் இழுத்து இருக்கிறேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. பதிலகளில் அஃமார்க் கில்லர்ஜி முத்திரை.

    பதிலளிநீக்கு