தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 05, 2020

மனதுள் மனிதம் வாழ்கிறதா ?


    ல்லோரும் மனிதர்களே ஆனால் மனதுள் மனிதம் வாழ்கிறதா ? என்றால் எங்கும், எதிலும் இல்லை, இல்லை. இல்லவே இல்லை. நல்லவர்கள் போலவே நடக்கிறார்கள், கோயில்களுக்கு செல்கிறார்கள் வணங்குகிறார்கள், குழந்தைகளுக்கும் இறையை வணங்கும் முறையை கற்பிக்கிறார்கள். சத்தியம் தவறாத உத்தமன் போலவே பேசுகிறார்கள்.

ஆனாலும்... சில உறவுகளின் மற்றும் நட்புகளின் வீடுகளுக்கு சென்று வந்தேன் குடும்ப நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் நெருக்கமான பழக்கம். சில பெண்மணிகள் தனது தாய்-தந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கரை கொண்டவர்கள் தனது மாமனார்-மாமியாருக்கு ஏதும் நிகழ்ந்தால் அது பிரச்சனை இல்லை என்பது மட்டுமல்ல கூடுதலாக மகிழ்கின்றார்கள். சின்னஞ் சிறுசுகள் ஏதோ குழந்தைத்தனமாக அப்படி நினைக்கிறார்கள் என்று மன்னித்து விடலாம். பெற்றோர்களும் அப்படியே பேசுவது முறையா ? ஒரு குடும்பத்தலைவர் என்னிடம் சொல்கிறார் தனது மகளோட மாமியார் என்று சாகிறாளோ அன்றைக்குத்தான் எனது மகளுக்கு விமோசனம் என்று இது முறையா ? ஒருவருக்கு மரணம் வருவதில் நமக்கு மகிழ்ச்சியா ?

அதேநேரம் அந்த பெண்மணி செய்வதும் தவறே இல்லை என்று சொல்ல முடியாது காரணம் தனது மருமகள் தனது மகனிடம், சிரித்து மகிழ்ந்து பேசினால் மாமியாருக்கு பிடிப்பதில்லை வெளிப்படையாகவே பேசுகிறார் எனக்கு இது பொறுக்கமுடியலை என்று. அதாவது தனது மருமகள் தனது மகனிடம் சிரித்து பேசி மகிழ்கிறாள் என்றாள் தனது மகனும் மகிழ்கிறான் என்றுதானே அர்த்தம். இது ஏன் அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை ? அதேநேரம் மகள் தனது மருமகனிடம் சிரித்து பேசி மகிழ்ந்தால் பிரச்சனை இல்லை இது ஓரவஞ்சனை இல்லையா ? இருப்பினும் இதற்காக சம்பந்தியை இப்படி சொல்லலாமா ? மரணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும் அதுவரை நாம் நல்லதையே நினைப்போமே... அந்தப் பெண்மணியிடம் பக்குவமாக எடுத்து வைப்போமே...

பெண்மணிகளே மாமனாரை தந்தையாகவும், மாமியாரை தாயாகவும் பாவித்துப் பாருங்கள் அவர்களும் உங்களை மகளாக கருத வேண்டும் இதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. யாராவது முதலில் முன் கையை நீட்டிப் பாருங்கள் பிறகு முழங்கைகள் உங்களை நோக்கி வரும். வாழும் காலம் கொஞ்சமே போகும் காலம் தூரமே... இதில் மனைவியை இழந்த மாமனாரின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ? நீ சமைத்து வைத்தாலும் மாமியார் அடுப்படியில் போய் தனக்கு வேண்டியதை போட்டு சாப்பிட்டுக் கொள்வார். ஆனால் மாமனார் அடுப்படிக்குள் வர இயலுமா ?

சமீபத்தில் நம்மை கொரோனா வீட்டுச்சிறையில் வைத்திருந்தபோது மதுரையில் கணவர், குழந்தையோடு மட்டும் இருந்த ஓர் பெண்மணிக்கு தனது தாய்வீடு திருச்சிக்கு போகவேண்டும். இந்த தருணத்தில் போககூடாது என்பது மட்டுமல்ல, போக வேண்டிய அவசியமும் இல்லை என்பது வேறு விசயம். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போய், பொய் கடிதம் வாங்கி வர தனது கணவரை அனுப்பி வைக்கிறார் கணவரும் மனைவி சொல்லிக் கொடுத்தபடியே போய் மனு எழுதிக் கொடுக்கிறார் தனது தந்தைக்கு உடல் நலமில்லை என்று எழுதும்போது அவருடைய ஆதார் எண் கேட்கப்படுகிறது உடன் உறவினருக்கு அலைபேசியில் அழைத்து தந்தையின் ஆதார் எண் வேண்டுமென்று கேட்க நேரிட உறவினர் எதற்கு ? என்றபோது விசயங்கள் வெளிவருகிறது.

மதுரையில் இருக்கும் உனது அப்பாவுக்கு நலமில்லை என்றால் காவல்துறை விசாரித்தால் மதுரையில் அவர் இருப்பது தெரிந்து, நீதானே மாட்டிக் கொள்வாய் ? மாமனார் வீட்டுக்கு திருச்சி போக நினைக்கும் நீ உனது மாமனாரோ, மாமியாரோ நலமில்லை என்று எழுதுவதுதானே முறை ? உனது மனைவி அப்படி சொல்லி விடவில்லையோ... ? போடா வெட்டிப்பயலே உனது தகப்பனுக்கு தெரிந்தால் எவ்வளவு வேதனைப்படுவான்.

நண்பர்களே தனது இரத்தத்தில் உதித்து பெற்று வளர்த்து, ஆளாக்கிய மகன்களே இப்படி இருக்கும் பொழுது எங்கிருந்தோ, வேறு ஒருவனுக்கு பிறந்த மருமகள் மாமனாரின் மீது பாசம் வைத்து விடவா போகிறாள் ? மேற்படி மதுரைக்காரருக்கே இந்நிலையெனில் மனைவியை இழந்த தேவகோட்டையான் போன்றவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் ?

பந்தபாசமே அது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
சொத்தின்மேல் கண் வையடா
அது உனை காப்பது மெய்யடா

சாம்பசிவம்-
காலம்போன காலத்துல சங்கரா... சங்கரா....னு போன கதையாவுல இருக்கு. அதிர்ஷ்டம் உள்ளவன் அள்ளி முடியிறான் அவ்வளவுதான் வாழ்க்கை.

ChavasRegal சிவசம்போ-
1980-லேயே இது கிடையாதே... இப்ப போயி.... என்னத்த சொல்ல...

காணொளி

42 கருத்துகள்:

  1. காலச் சூழல் குணம் கெட்ட மனிதனை இன்னும் கேடுகெட்டவனாக்கிப் போகிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே...
      மனிதனின் போக்கு அழிவை நோக்கியே செல்கிறது.

      நீக்கு
  2. வளர்ப்பு முறை சொல்வதா...? வளர்ந்த முறையை சொல்வதா...? ம்... இன்னும் நிறைய உள்ளது...!

    பேரன்களும் பேத்திகளும் அன்பால் ஆட் கொள்ளும் போது, 'ராசி உள்ள ராஜா' என்று தெரியும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வளர்ப்புமுறை எப்படி என்பதே தெரியாத தலைமுறை தொடங்கி விட்டது.

      நீக்கு
  3. சமூக அவலத்தை சொல்கிறது பதிவு.
    சோகப்பாடல் பாடும் சாம்பசிவம் பாட்டு கேட்டேன்.

    அன்புதான் நம்மை காப்பாற்றும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அன்பே சக்தி அனைத்தையும் அடக்கி விடும்.

      நீக்கு
  4. பொதுவா இது எல்லாத்துக்கும் காரணம், திருமணம் செய்துகொடுக்கும்போது மகளிடம் இப்படி இப்படி இருந்துகொள் என்று சொல்லிக்கொடுக்கும் தாயார்தான் என்று நினைக்கிறேன். காலம் போனபிறகு புத்தி வந்து என்ன பிரயோசனம்? நீங்கள் சொல்லியிருப்பதுபோல நானும் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.

    நீங்கள் சொல்லியிருக்கிறபடி, காசின் மேல் கண் வையடா, அது உன்னைக் காப்பது மெய்யடா கதைதான்.

    என் அப்பாவும் ஒரு சம்பவம் சொல்லியிருக்கிறார். வீடு அதன் முன் சிறு இடம் என்று இருந்த பெற்றோரிடம், அந்த சிறு இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று மகன் சொல்ல, சரி.. பிழைத்துக்கொள்ளட்டும் என்று அப்பா அனுமதி தந்தாராம். பிறகு தொழிலை கொஞ்சம் விரிவு படுத்துக்க்றேன், நாங்களும் உங்களோடயே இருந்துக்கறோம் என்று ஆரம்பித்து கடைசியில் அப்பாவுக்கு வீட்டில் இடமே இல்லாமல் செய்துவிட்டானாம் மகன். காலம் அப்படிப் போய்க்கொண்டிருக்கிறது (என் அப்பா சொன்னது 30 வருடங்களுக்கு முந்தைய சம்பவம்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாயார் சொல்லிக் கொடுக்கணும் என்பதே மிகச் சரியான வார்த்தை.

      தங்களது தந்தையின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  5. மனதை உற்சாகமாய் வைத்துக் கொள்ள வழி என்ன என்று பாருங்கள் சகோ.
    பேத்தியை போய் பார்த்து வாருங்கள். அவளின் மழலை பேச்சு உங்கள் மனக்கவலையைப் போக்கும்.
    ம்களை கொஞ்ச நாள் உங்கள் வீட்டில் இருக்கச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  6. //மாமனாரை தந்தையாகவும், மாமியாரை தாயாராகவும்// - ஹாஹா... ஒரு சில இடங்களில்தான் அப்படிக் கண்டிருக்கிறேன். அதையும் மிஸ் யூஸ் செய்து, அதட்டி கண்டிப்பாக இருக்கும் மாமனாரையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நல்லவங்கன்னா ஏறி மிதிக்கும்போது, திருமணமாகி வந்த பெண் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லையோ? இதனால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வருத்தத்துக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாமனாரை அப்பா என்று அழைக்கும் மருமகளை நான் கண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  7. மருமகள் என்னதான் விழுந்து விழுந்து எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாலும் அதையும் குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார், நாத்தனார் இருக்காங்க கில்லர்ஜி! முழுக்க முழுக்க மருமகளையே தப்புச் சொல்ல முடியாது. தன் பிள்ளைக்குச் சாப்பாடு கூடத் தான் தான் போடணும் என மருமகளை அப்புறப்படுத்திவிட்டுத் தானும் தன் பெண்ணுமாகச் சாப்பாடு போடும் தாய், சகோதரிகள் இருக்காங்க. இவங்க சாப்பாடு போடும்போதே அந்தப் பிள்ளையின் மனைவியின் மேல் தங்களால் இயன்றவரை தப்பான கருத்தை உள் செலுத்துவாங்க. அந்தப் பிள்ளை சுதாரித்துக்கொண்டால் இது தன்னையும், தன் மனைவியையும் பிரிக்கச் செய்யும் சதி என்பதைப் புரிந்து கொள்வான். ஆனால் சிலர் உண்மையிலேயே தாய்க்குத் தன் மேல் பாசம் மீதூர்ந்துச் செய்கிறாள் என நினைத்துக் கொள்கிறார்கள். கடைசியில் கஷ்டப்படுவது அந்த மருமகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ நல்ல மருமகளை அரவணைத்து செல்லத் தெரியாத மாமியாரும் உண்டுதான்.

      தனது மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு வேறு நியாயம்.

      நீக்கு
  8. நீங்க முதல்லே மெல்ல மெல்ல உங்க பிள்ளை, மருமகள், பேத்தி ஆகியோரிடம் நெருங்கிப் பழக ஆரம்பியுங்க. குறைந்த பட்சமாகப் பேத்தியையாவது கொஞ்சி மன ஆறுதல் பெறப் பாருங்க. "குழந்தை முகம் பார்த்தால் கோடி துக்கம் போகும்!" என்பார்கள். குழந்தைக்கு மனம் களங்கமாயும் இருக்காது! ஆகவே குழந்தையின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள். விரைவில் உங்கள் சொந்தம் எல்லாம் உங்களை வந்து சேரப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  9. இது வரை தோன்றாத தனிமை இந்த கொரானா வந்து கில்லர்ஜீயை மிகவும் படுத்துகிறது.
    மாமனார் ஆனபோது தெரியவில்லை. தாத்தா ஆனபோது தெரியவில்லை. கொரானா லாக்டவுன் வந்தபோது மிகவும் வாட்டுகிறது.  தனிமையிலே இனிமை காண ஏதாவது போக்குகள் கண்டுபிடித்து பின் பற்றவும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இப்படி சொன்னதும் உண்மைதான்.

      நீக்கு
  10. பெயர்த்திக்கு ஒரு கடிதம் 
    http://vsrivats.blogspot.com/2020/07/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்றேன் நிறைய படிக்கணும் மீண்டும் செல்வேன்.

      நீக்கு
  11. உங்களை போன்ற நல்ல மனிதருக்கு எப்போவுமே நல்லது தான் நடக்கும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. சுயநலத்தன் வெளிப்பாடுதான் இந்த மனித மனச் சிதைவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மைதான். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    உங்கள் கட்டுரை மனதை கலங்க வைக்கிறது. என்னதான் மனைவி சொல்ல மந்திரம் என்றாலும், தன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என எப்படி அந்த கணவனுக்கும் பொய் சொல்ல தோன்றிற்று.? கொடுமை.. இதைப்பார்க்கும் போது ஒவ்வொரு மனிதனும் (ஆண் பெண்) தன் தாய் வயிற்றுக்குள் என்று ஜனிக்கிறானோ அன்றிலிருந்தே சுயநலமெனும் கருத்துடனே வளர்த்து வெளி வருகிறானோ எனத்தான் எண்ணத் தோன்றுகிறது. இதைத்தான் பிறவி சுபாவம் என்கிறோமோ..!

    இதைப் பற்றியெல்லாம் நினைத்து கலங்காமல் மனதை தைரியமாக இறை நம்பிக்கையில் செலுத்தி வாருங்கள்.அவன் நம் அன்பை புரிந்து கொள்ளும் மனிதர்களாய் நம் உறவுகள் அனைவரையும் மாற்றும் வாய்பை ஏற்படுத்துவார். இந்த இறை நம்பிக்கை அப்போதைய கவலைகளை அகற்றி நமக்கென்று உள்ளதை இறைவன் தருவான் ஒரு திடநம்பிக்கையையும் நிச்சயமாகத் தரும். (தைரியங்களைப்பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும், இது உங்களுக்கு ஆறுதலைத் தரும் சொற்கள்.) நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது விரிவான கருத்துரை அருமை.

      ஆறுதல் மொழிகள் தந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  14. மிக மிக உண்மை.
    உணர்ந்து சொன்ன வார்த்தைகள்.
    இனி நானும் நல்ல வார்த்தைகள் சொல்லி,
    மற்றவர்களிடமும்
    நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள
    இறைவன் அருளால் முயற்சிக்கிறேன்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற படத்தின் பாட்டு -

    புருசன் வீட்டில் வாழப் போகும்
    பெண்ணே தங்கச்சி கண்ணே!..

    இந்தப் பாட்டில் சொல்லப்படும் சில விஷயங்கள் இன்றைக்கு ஒத்து வராது..

    எனினும் சில வரிகள்..

    மாமியாரை மாமியாரை மதிக்கணும் உனக்கு
    மாலையிட்ட கணவனையே துதிக்கணும்!..

    இதைச் சொல்றவன் - அண்ணன்..

    இன்றைக்குச் சொன்னால் போடா போக்கத்தப் பயலே!.. என்பார்கள்..

    நிலைமை அந்த அளவுக்கு மோசம்...

    மாமியாரை மாமனாரை விரட்டணும் உனக்கு
    மாலையிட்ட கணவனையே மிதிக்கணும்!.

    என்றால் ஏகத்துக்கும் குஷி...

    இந்தப் பாட்டிலேயே இன்னொரு வரி..

    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே!..

    இன்னைக்கு பிரியாணி கொடுத்தவனுக்காக
    பெற்ற பிள்ளைகளைக் கொன்ற நாரீ.... மணிகள் பெருகி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அருமையான பாடலை குறிப்பிட்டீர்கள்.

      பிரியாணிக்காக... ஆமாம் ஜி கேவலமான சிந்தனைகள்.

      தங்களது வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  16. இப்போது அன்பு என்பதானது உதட்டளவில்தான் பெரும்பாலும் உள்ளது. உண்மையான அன்பு செலுத்துவோரும் ஆங்காங்கே உள்ளனர் என்பதை மறக்கவேண்டாம். நேர்மறை எண்ணங்களை நினைப்போம். நம் வழியில் செல்வோம். அநாவசிய சிந்தனைக்கு முடிந்தவரை இடம் தர வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  17. 'மனிதம் வாழ்கிறதா?" என்கிறீர்கள். மனிதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது...ஊஹூம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. சூழல்கள் இப்படி பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது ஜி. ஆனாலும் பல விஷயங்களை நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். “இதுவும் கடந்து போகும்” என்று தெரிந்து கொண்டால் கவலையில்லை!

    மாற்றங்கள் நிறைய வேண்டும் - யாரிடம் - அனைவரிடமுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  19. இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      பயனுள்ள தகவல்கள் நன்றி.

      நீக்கு
  20. மனதுள் மனிதம்..இங்கொன்றும் ..அங்கொன்றுமாக வாழ்கிறது. விரைவில் அதுவும் மடியும்.....

    பதிலளிநீக்கு
  21. ‘மூக்கு உள்ளவரை சளி இருக்கும்’ என்பார்கள். அதுபோல் மாமியார்கள் இருக்கும் வரை மருமகளோடு பிணக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். இதில் விதி விலக்கும் உண்டு. மாமியார் மருமகள் இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்து போகவேண்டும். இருவருக்குமிடையே நல்லுறவை மேம்படுத்தும் பங்கு மகனுக்கும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடப்பதில்லை. அதுசரி. தேவகோட்டையார் ஏன் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படவேண்டும். எல்லாம் நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்.
    ஔவைப் பாட்டியின்
    உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
    உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
    மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
    அம்மருந்து போல்வாரும் உண்டு.
    என்று ‘மூதுரை’ யில் சொல்வதை மனதில் இருத்துங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஔவையின் பாடலோடு எடுத்துக்காட்டி, தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு