திங்கள், செப்டம்பர் 21, 2020

போக்கு மாறிய நாக்குகள்...


     1999 அபுதாபி நான் அன்று அரபி பேசிப்பழகிய காலம் பால் வடியும் குழந்தை முகமாக இருந்ததால்  அலுவலக பையனாக வேலை கிடைத்து செய்து கொண்டு இருந்தேன். அரபு எழுதப்படிக்க தெரியாது தெரிந்து இருந்தால்... இந்தப்பதிவும் வந்து இருக்காது. காலையில் காஃபி, டீ, காவா, துர்கீஷ் என்று அரேபியர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒன்பது மணியைப்போல கட்டிடத்தின் பக்கத்தில் இருக்கும் எஜிப்தியன் உணவகத்தில் போய் சிற்றுண்டி வாங்கி வந்து கொடுப்பதும் எமது வேலைகளுள் ஒன்று. சூடானி ஒருவன் பெயர் யாஸ்ஸின் இஸ்மாயில். என்னை அழைத்து...
கில்லர்ஜி ஜீப் ஸபாத்தி வாஹத் ஒத்தி மத்பஹ் தாக்கல் அனா ஈஜி பாதின்.
கில்லர்ஜி ஒரு ஸபாத்தி வாங்கிட்டு வந்து அடுப்படியில் வை நான் பிறகு வர்றேன்.

கை விரலை மேஜையில் வைத்து வட்டமாக வரைந்து காட்டினான் எனக்கு புரிந்து விட்டது. அட பரவாயில்லையே சூடானியும் நம்ம ஊரு சப்பாத்தியை சாப்பிட்டு பழகிட்டான் போலயே.. ஒன்று வாங்கினால் இவனுக்கு போதுமா.... நானும் வெளியில் போய் அவனுக்காக மலையாளி உணவகத்தில் ஒரு சப்பாத்தி வாங்கி வந்து அடுப்படியில் வைத்து விட்டேன்.

பிறகு நான் மேலேயும், கீழேயும் அலைந்து கொண்டு இருப்பேன் காரணம் அலுவலகம் மூன்று தளங்களிலும் இருந்தது. இவன் அடுப்படியில் வந்து தேடி இருக்கிறான் நான் சப்பாத்தியை தெரிவது போல்தான் வைத்து இருந்தேன். பிறகு நான் வந்தவுடன் கோபமாக கேட்டான்.
ஒயின் ஸபாத்தி ?
ஸபாத்தி எங்கே ?
அதா மௌஜூத்
இதோ இகுக்கு.
என்று பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தேன், வாங்கி பிரித்தவன்...
சூ அதா ?
என்ன இது ?
சப்பாத்தி
சூ சப்பாத்தி ? அனா ரீத் ஸபாத்தி

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்னாடா இது சப்பாத்தியைதானே கேட்டான் இப்ப என்னமோ மாதிரி சொல்லி மறுபடியும் அதையே கேட்குறானே... அவனுக்கு பசி எடுத்து விட்டது கத்த ஆரம்பித்து விட்டான்.

இந்தே மாஃபி மாலும் ஸபாத்தி ? அதா ஈஜி மின் ஹலீஃப்..
உனக்கு ஸபாத்தி தெரியாது ? அது பாலிலிருந்து வரும்...
எனது தேவகோட்டை மூளையின் மூலையில் பொறி தட்டியது போலிருக்க...
மின் ஹலீஃப் ஈஜி தாணி ரோப் ஷா ?
பாலிலிருந்து வர்றது வேற தயிர் சரியா ?
ஐவா... ஐவா... அதா ஒயின் ?
ஆமா... ஆமா.... அது எங்கே ?

இந்தே குல் சப்பாத்தி அக்கில் மால் இந்தி.
நீ சொன்னே சப்பாத்தி இந்திய உணவு.
இந்தே மாஃபி மாலும் அரபி ஸபாத்தி, ரோப் இத்தினீன் வாஹத்
உனக்கு அரபி தெரியலை ஸபாத்தி தயிர் இரண்டும் ஒன்றுதான்.

இந்த சூடானி மூதேவி சூடான் அரபியில் சொல்லியிருக்கு நான் பொதுவான அரபு மொழியில் தெரிந்தது ரோப் என்றால் தயிர் இவனுங்க.. ஸபாத்தி என்று சொல்லவும் நான் நம்ம ஊரு சப்பாத்தி கேட்கிறானு நினைச்சு வாங்கிட்டேன் பிறகு இதையும் தின்று பார்ப்போமே என்று தின்று விட்டான்.

நமது தேவகோட்டை இலக்கியத் தமிழில் அமருங்கள் என்று சொல்வதை சென்னைத் தமிழில் குந்து என்று சொல்வார்கள் இல்லையா ? நாமும் அதைப் புரிந்து கொண்டு வாழ்கிறோம். ஹூம்.. இலக்கியத்தமிழ் பேசுற தேவகோட்டையை விட்டுப்புட்டு கொச்சையாக பேசுற சென்னையை போயி மாநிலத் தலைநகரமாக வச்சு இருக்காங்க பாருங்க இதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு இதுக்குத்தான் நான் பல விசயங்களை வெளியில் சொல்வது கிடையாது.

அப்புறம் அந்த சூடானி மூதேவி சப்பாத்தி ருசியை கண்டது மறுநாளும் சப்பாத்தி கேட்டது ஸபாத்தி அல்ல... மேலும் மற்ற சூடானிகளுக்கும் ருசியின் பக்குவம் சொல்ல, தினமும் எஜிப்தியன் உணவான ஜாத்தர், ஜிப்னே, பலாப்ஃபில், ஃபூல் தின்பதை மறந்து விட்டு எல்லா சூடானி, பாலஸ்தீனி நாக்குகளும் சப்பாத்தியே கேட்டது.
மறுதினம் நானும் மலையாளியிடம் பேரம் பேசினேன்..

இங்கே பார் தினமும் இருபது சப்பாத்திக்கு மேல் தேவைப்படும் எனக்கு காலை டிஃபன் கொடுத்தால் வர்றேன் இல்லைனா... வேற கடைக்கு போறேன்.
பரவாயில்லை அண்ணா நீ வந்ததும் சாப்பிடு உனக்கு ஃப்ரீ பிறகு வாங்கிக்க, மற்ற புட்டு, கட்டதோசை, ஆப்பம், கடலை எல்லாம் அரபிகளுக்கு சொல்லிக்கொடு.
..
காணொளி

46 கருத்துகள்:

 1. சப்பாத்தியும் ஸபாத்தியும்! ஹாஹா....

  உணவக மலையாளியிடம் போட்ட டீல்! :)

  ரசித்தேன் ஜி. காணொளி பிறகு தான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உடனடி வருகைக்கு நன்றி காணொளி சிறியதுதான் பாருங்கள்.

   நீக்கு
 2. ஹா... ஹா... இது போல் சிரிப்பதை எழுதுவதற்கு மட்டுமே சில மொழிகளை கற்றுக் கொள்வோம் ஜி...

  இப்போதுள்ள புண்ணாக்குகேசியும் புலிகேசியும் ஒன்னு...!

  (மறந்து போன காணொளி...!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   ஆம் நகைப்பதற்கு எதையும் பயன் படுத்தலாம்தான். காணொளியும் கண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 3. அத்தனை களேபரத்திலும்
  காலை டிபனை கரெக்ட் செய்தது கச்சிதம்..

  இதான் தே.கோ ஊருணித் தண்ணியோட மகிமையோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   எவன் எக்கேடு கெட்டாலும் கெடைக்கு இரண்டு ஆடு நமக்கு வேணும்.

   தேவகோட்டை தண்ணி தேன்சுவை தண்ணீர் ஆயிற்றே...

   நீக்கு
 4. இந்த மாதிரி நகைச்சுவை சம்பவங்கள் ஏராளம்...

  சில தினங்களுக்கு முன் இதே மாதிரி வார்த்தைப் பிரயோகம்.. சட்டென அதை ஒரு கதையாக மாற்றியிருக்கிறேன்.. இன்னும் முழு வடிவம் வாய்க்கவில்லை...

  ஸ்ரீராம் அவர்களது கணினி சரியானதும் அதை அனுப்பி வைத்து நீங்கள் எல்லாம் படிக்க இன்னும் ஏழெட்டு மாதங்கள் ஆகலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது ஜி வெளியிடுங்கள் படித்து மகிழ்கிறோம்.

   நீக்கு
 5. நம்ம ஊரிலேயே - வருவாய் ஆய்வாளரைத் தேடிச் சென்ற ஒருவர் அந்தத் தெருவில் எதிர்ப்பட்ட பெரியவரிடம் விவரம் கேட்க

  அவர் இவரை இரண்டு தெருக்களைக் கடந்து அழைத்துச் சென்று ஒரு குடிசையின் முன் நிறுத்தி -

  ஆராயி!.. ஒன்னைத் தேடி யாரோ வந்துருக்காங்க பாரு!.. என்று சொல்ல இவர் திடுக்கிட்டுப் போனார்..

  நான் கேட்டது ஆரை (RI) சர்ட்டிபிகேட்ல எல்லாம் கையெழுத்து போடுவாரே!.. அவர் வீடு!..

  - என்றதும் எல்லாரும் கிடந்து சிரித்திருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 6. சப்பாத்தி , ஸபாத்தியும் பகிர்வு நன்றாக இருக்கிறது. அவருக்கு சப்பாத்தி பழக்கியது உங்களுக்கு காலை டிபனுக்கு உதவியது தானே! அப்புறம் அவரை திட்டலாமா?

  காணொளி பார்த்தேன். ஒரு எழுத்து ப் அதிகமாக வருவதால் சண்டையா! பதிவுக்கு பொருத்தமான காணொளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் திட்டவில்லையே... மகிழ்ச்சிதான்.

   காணொளி கண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 7. ஹாஹாஹாஹா, சபாத்தி, சப்பாத்தி இரண்டையும் வைச்சு ஒரு பதிவு! நல்ல சுவையான பதிவு, சப்பாத்தியைப் போலவே! அப்படியே உங்களுக்குக் காலை உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டது நல்ல விஷயம். இவங்களுக்கெல்லாம் உழைச்சுட்டு நமக்கு அதற்கேற்றவாறு இதாவது கிடைக்குதே! உங்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையும் மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அங்கு வாங்க வருபவர்களுக்கு டிப்ஸ் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து வளைப்பது இன்றும் தொடர்கிறது.

   நீக்கு
 8. அல் மராய் தயிரைப் பார்த்ததும் கண்ணில் நீர் வராத குறைதான். எத்தனை வருடங்கள் அதனுடன் வாழ்ந்திருக்கிறேன்.

  தயிரைத் தவறா புரிஞ்சுக்கிட்டதுல ஒரு நன்மையும் உங்களுக்குக் கிடைச்சிடுச்சு போலிருக்கே. அப்போவும் கடைக்காரன் புத்தி, எல்லாப் பொருட்களையும் விக்கறதுலயே இருந்திருக்கே.. சப்பாத்தில அவ்வளவு லாபம் இல்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அல் மராய் சுவைக்காதவர் உண்டோ ?

   எப்படியோ நமக்கு காலை நாஸ்தா சிறிது காலம் ஓடியது.

   நீக்கு
 9. //தேவகோட்டை இலக்கியத் தமிழில் அமருங்கள்// - இந்த இடுகையிலேயே அந்த ஒரு வார்த்தை தவிர மற்றதெல்லாம் சென்னைத் தமிழா?

  இ.அ.23ம்.பு - ரொம்ப நல்லா எடுத்திருப்பாரு. இப்போ இருக்கும் காலத்துக்கு ஏற்ப.சராசரியா 60 வருஷம் கூட வாழப்போறதில்லை...ஆனால் தேவையில்லாத பிரச்சனைகளில் எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு, சாதி மதம் என்று வம்பு பேசி.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே எனது எழுத்துகள் இலக்கியமும் இல்லாமல் நடைமுறையிலும் சேராமல் இயன்றவரை தமிழில் எழுதுகிறேன்.

   வெட்டியாக வெட்டிக்கொல்லும் வெட்டி வீரர்கள் சாதிச் சண்டையில்...

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தலைப்பும் நன்றாகத்தான் உள்ளது. சென்றவுடனேயே நன்றாக அரபு மொழி பயின்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  சப்பாத்தி ஸபாத்தி ஒரே எழுத்தில் அர்த்தம் ஒரே மாதிரி இருந்தாலும்,எவ்வளவு பிழை வந்து விட்டது. ஆனாலும் அந்த பிழை கூட உங்களுக்கு ஒரு சௌகரியத்தை தந்து விட்டது. கடைகாரருக்கும் நல்ல லாபம்.

  காணொளி கண்டேன். ரசித்தேன். அந்த படம் முழுவதுமே இப்படிபட்ட ஏடாகூடமான பேச்சுக்கள் வரும். எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்தது. பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது ரசிப்புக்கும், விரிவான கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 11. அன்பு தேவகோட்டைஜி,
  சபாதி சப்பாத்தி மகா ஜோர்.

  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  எங்க தேவகோட்டையாருக்கு எல்லாமே ஆயுதம். ஹஹ்ஹாஹா.

  வெகு புத்திசாலி நீங்கள்.
  அந்த சூடானியை வளைத்துப் போட்டு
  மூன்று பக்கங்களிலும் நன்மை செய்து விட்டீர்கள்.

  எல்லா வேளை சாப்பாட்டுக்கும் ஏற்பாடு
  செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  காணொளி மிக அருமை. வடிவேல் எப்பொழுதும் பிடிக்கும்.
  இந்தப் படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா
   பதிவை ரசித்து படித்தமை அறிந்து மகிழ்ச்சி.

   ஹா.. ஹா.. சூடானியை நான் வளைக்கவில்லை அம்மா அவர்களாகவே வளைந்து வந்து விட்டார்கள்.

   இத்திரைப்படம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.

   நீக்கு
 12. மொழிக்குழப்பத்தில் அவர்களுக்கு புதிய உணவு அறிமுகம்! சப்பாத்திக்கு சைட் டிஷ் என்ன கொடுத்தார் அந்த மலையாளி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சப்பாத்திக்குள் குருமா வைத்து சில்வர் பேப்பரில் சுருட்டி சாண்ட்விச் போல தருவார்கள்.

   உணவைவிட, ருசியைவிட, விலையைவிட, பேக்கிங் அழகு முக்கியம்.

   நீக்கு
 13. எப்படியோ
  கடைக்காரரிடம் டீல் போட்டீர்கள் அல்லவா
  பிரமாதம்

  பதிலளிநீக்கு
 14. \\1999 அபுதாபி நான் அன்று அரபு பேசிப் பழகிய காலம்...//

  அபுதாபி போய்த்தான் அந்த மொழியைக் கற்றிருக்கிறீர்கள். அந்த நாட்டு மொழி தெரியாமலே அங்கே போய், கற்றுத் தேர்ந்து,கடுமையாய் உழைத்து, படிப்படியாய் முன்னேறி, நல்ல சம்பாதனையுடன் நம் ஊர் திரும்பியிருக்கிறீர்கள்!

  இன்றைய இளைஞர்கள் உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   நம்பிக்கையும், மொழி கற்கும் ஆர்வமும் இருந்தால் உலகில் எந்த மொழியும் சாத்தியமே...

   பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 15. மொழி சரியாக தெரியாததால் பிரச்சனைகள் பல எழும்... அது பெரிய பிரச்சனையாகதவரை நல்லது

  பதிலளிநீக்கு
 16. மொழி தெரியாமல்நடை பெறும் நகைச்சுவைகள்சில நகர் கோவிலில் திருமண்ம்ஒன்றுக்கு சென்றிருந்தொம் அவர்களில் ஒருவர் பெண்ணு கொள்ளாமோ என்று கெட்டார் நாங்கள் இங்கெல்லாம் பெண்கொள்வதில்லை என்று பதிலளித்தார் புரிந்தவர்கள் எஅகைச்சுவையை ரசித்தனர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நகைச்சுவைகள் சில யதார்த்தமாக நடக்கும். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. எப்படியோ.. கல்லடி படாம.... வாயடிபட்டே ஒரு மொழியை கத்திகிட்டிங்களே!! நண்பரே!! பெரிய விசயம்....

  பதிலளிநீக்கு
 18. இப்போதுகூட பால் வடியும் குழந்தை முகம்தான் நண்பரே..என்ன அந்த மீசைதான் வேறுபாடு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 19. இதே போன்ற பதிவுகளை நீங்கள் அடிக்கடி எழுதிவந்தால் உங்கள் புண்ணியத்தில் நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக "அரபி" கற்றுக்கொள்வோம். உங்களுக்கும் புண்ணியமாக போகும்.... அதுவரை இங்கு இருக்கிற அரசியல் அடிபொடிகள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்போல் "அரபி எதிர்ப்பு போராட்டம்" என்று எதையாவது கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நான் தொடர்ந்து இதுபோல் எழுதி வருகிறேன் நீங்கள்தான் படித்ததில்லை. தங்களது கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 20. பதிவுக்கு பொருத்தமான காணொளி(லி)யை வெளியிட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள். மொழிப் பிரசின்னை உங்களுக்கு நன்மையைத்தான் தந்திருக்கிறது. பதிவை இரசித்தேன். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ரசிப்புக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 21. ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை! தலைப்பை பார்த்து விட்டு யாரையோ திட்டப் போகிறீர்கள் என்று நினைத்து இரண்டு மூன்று நாட்களாக உங்கள் தளத்திற்கு வராமல் இருந்தேன். blessing in disguise என்பார்களே, அது போல் நீங்கள் தவறாக புரிந்து கொண்டது கூட ஒரு நன்மையை செய்திருக்கிறது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பை பார்த்து வராமல் இருந்தீர்களா ? பொதுவாக தலைப்பை பார்த்துதான் வந்தேன் என்றுதான் சொல்வார்கள்.

   நான் நான்கு தினங்களுக்கு ஒரு பதிவு போடுகிறேன்.

   நீக்கு
 22. இரண்டு மூன்று நாட்களாக உங்களை அதிகம் நினைத்துக் கொள்கிறேன். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கேஸைத் தோண்டத் தோண்ட என்னனென்ன அசிங்கங்கள் வெளிவருகின்றன! நீங்கள் நடிகர்களை கூத்தாடிகள் என்று நிந்திப்பது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூத்தாடிகளைப்பற்றி பேசினால் அது நாறிப்போன பெருங்கதை. மூடுவோம் நம் காதை.

   கடந்த பதிவை படியுங்கள் நிறைய செய்தி இருக்கிறது.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...