தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 09, 2020

புதிய கோணம் புதிய பார்வை


ணக்கம் மாடசாமியண்ணே... நல்ல இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத் தேடி வந்தேன்ணே...
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனோம்... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

சுயநலமாக வாழுறதுக்கும், பொதுநலமா வாழுறதுக்கும் வித்தியாசம் என்னணே ? 
தம்பி இப்ப நாம அரசியல்வாதியாக இருக்கோம்னு வச்சுக்கோ மக்கள் பணத்தை கொள்ளையடிக்காமல் வாழ்ந்தால் பொதுநலம். கொள்ளையடித்து தனது மக்களுக்காக சேர்த்து வைத்தால் சுயநலம்.

சரிண்ணே பொதுநலமாக வாழ்ந்தால் நம்ம குடும்பம் சாப்புடுறது எப்படிணே ? 
நமக்கு வருமானம் நியாயமானதாக வந்தால் போதுமே... மேலும் கொள்ளையடித்து அந்த பாவப்பணத்தை தன்னோட குழந்தைகளுக்கு சேர்க்க வேண்டாம்னு நினைச்சு வாழுறவங்கதான் பொதுநலவாதிகள் தம்பி.

சரிண்ணே மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் அது பாவச்செயல் பிற்காலத்தில் தன்னோட குழந்தைகளை பாதிக்கும்னு பயந்து நியாயமாக வாழுறாங்க அப்படித்தானே ? 
ஆமாடாத்தம்பி சரியாப் புரிஞ்சுக்கிட்டே... சமர்த்து.

ஏண்ணே... இது சுயநலம் இல்லாமல் வேறென்ன ? 
என்னடாத்தம்பி சொல்றே.... ? 

ஆமாண்ணே... தன்னோட குழந்தைகளை பாதிக்ககூடாதுனு நல்லபடியாக வாழணும், நீண்ட ஆயுளோட இருக்கணும் அப்படினு கடவுளுக்கு பயந்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்காமல் பொதுநலமாக வாழுறது தனது குழந்தைகளுக்கான சொந்த சுயநலம்தானே... ? 
?  ?  ? 
ஏண்ணே கிரிக்கெட் விளையாடுறாங்களே ஒரு மரக்கட்டையை வச்சுக்கிட்டு குறி பார்த்து அடிக்கிறாங்க அவங்களுக்கு சம்பளம் கோடிக்கணக்குல கொடுக்கிறது நியாயமாணே ? 
என்னடாத்தம்பி இப்படிக் கேட்கிறே... அவங்க எல்லோருமே உலக அளவில் பிரபலமானவங்க அவங்க விளையாண்டால் பணத்தை கொட்டுறதுக்கு மா’’க்கள் கூட்டம் பெறுகுதுல... அதுல வர்ற பணத்துலதான் இவங்களுக்கு சம்பளம் கோடிக்கணக்கில் கொடுக்குறாங்க... மற்றவர்களை வச்சு விளையாட முடியாதுல அதான் தம்பி மவுசு.

சரிண்ணே இது உழைப்புக்கு ஏற்ற கூலினு சொல்றீங்களா ? 
ஆமாடாத்தம்பி கஷ்டப்பட்டு மழை,குளிர், வெயில்னு வந்தாலும் நின்று விளையாடுறாங்கள்ல... அதனாலதான் சம்பளம் கோடிகள் கிடைக்குது.

அப்படீனாக்கா... விளம்பரப்படத்தில் நடிக்கும்போது வெயில், மழை, குளிர் படாமல்தானே பங்களாவுக்குள்ளே நடிக்கிறாங்க அதுக்கு எதுக்குணே சம்பளம் கோடிக்கணக்குல கொடுக்கிறாங்க ? 
தம்பி அவங்க கையில மிளகு காமிச்சு இது கருப்புத் தங்கபஸ்பம் இதை சாப்பிட்டதாலதான் நான் இவ்வளவு நல்லா விளையாட முடியுதுனு அப்படினு சொல்லச் சொன்னால் மா’’க்கள் வாங்கி தங்கபஸ்பம்னு சாப்பிடுவாங்க... அதுக்குத்தான்டா சம்பளம் கோடிக்கணக்குல கொடுக்குறாங்க...

அப்படீனாக்கா கையில பீர் பாட்டிலை புடிச்சுக்கிட்டு இதுதான் சோடானு சொல்லி குடிக்கச் சொல்றது தப்பு இல்லையாணே ? 
தம்பி எல்லாம் பணத்துக்காகத்தான் நடிக்கிறாங்க தன்னோட குழந்தைகளுக்கு பணம் சேர்க்கணும்ல... அதுக்குத்தான்.

அப்படீனாக்கா... இவங்க குழந்தைகள் நல்ல இருக்க வேண்டாமாண்ணே ?  இது சுயநலமா... பொதுநலமாண்ணே ? 
?  ?  ? 

ChavasRegal சிவசம்போ-
அரக்கோணம், அரைக்கேனம் மரைக்கானம் மாதிரி பேசுறானே... ?

40 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹாஹா, தலை சுத்த வைச்சுட்டீங்க. ஒரு வகையில் பார்த்தால் முதலில் சொல்லி இருப்பதும் சரி, இரண்டாவது சொல்லி இருப்பதும் சரி. ஆனால் இரண்டிலேயும் அதிகப்படி சம்பாதிப்பது தான் சரியல்ல. அளவோடு இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அடடே தலை சுத்துச்சா ? ஹா.. ஹா..

      நீக்கு
    2. கிட்டத்தட்ட நம் நாட்டின் பொய்யன் வெங்கோலனைப் பற்றி எழுத நினைக்கும் குறளின் குரலை இங்கு கண்டேன் ஜி... நன்றி...

      நீக்கு
    3. வாங்க ஜி மிக்க மகிழ்ச்சி.
      வரட்டும் குறளின் குரல்.

      நீக்கு
  2. முதல் பாதி மிக அருமை! நல்ல சுத்தல் கேள்வி. இரண்டாவதையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. கில்லர்ஜி..... தலை சுத்த வைக்கிறீங்க.

    நம்ம பையன் நல்லா இருக்கணும் என்று நம்ம செய்யும் நல்ல செயல் எல்லாம் நம்ம கடமை. அது நியாயமா இருக்கற வரையில் தவறில்லை.

    ஒரு அரசியல்வாதிகூட நல்லவங்க இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒருத்தர்கூட இல்லை. (லட்சத்துல ஒருத்தர் இருந்தாலும், அவங்க இருக்கற கட்சி செய்யும் தேர்தல் தவறுகளும் போட்டி போடறவங்களைத்தானே சாரும்?) சட்டத்தை அவங்கள்ல யாருமே மதிக்கறதில்லை. சரி அவங்களை விடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று வாழலாம ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வாழவே முடியாது.

      இதுதான்
      இன்றைய
      இந்தியா

      நீக்கு
    2. பல நாடுகளில் இதே தான்.

      நீக்கு
    3. வருக தங்களது வரவு நல்வரவுவாகுக!

      நீக்கு
  4. Personalஆ, நான் எப்போதும் நினைப்பது... சில Professionல அளவுக்கு அதிகமா சம்பளம் கிடைக்குது. பொதுவா சம்பளம் என்பது ஸ்கில் மட்டுமல்ல, அவங்களால கம்பெனிக்கு எவ்வளவு லாபம் என்பதையொட்டியும் சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுது. ஏசில உட்கார்ந்துக்கிட்டு நான் செய்யும் வேலைக்கு லட்ச ரூபாய், மழை வெயில்ல உழைக்கும் உழைப்பாளிக்கு சம்பளம் ஆயிரங்களில். இந்த disparity to some extent கம்யூனிஸ்ட் தேசங்களில் மட்டும்தான் இருக்காது.

    இந்தியா மாதிரி, அதிலும் தமிழகம் மாதிரி அரசு அலுவலர்கள் என்றாலே ஊழலில் திளைப்பவர்கள், ஒரு வேலையையும் செய்ய மாட்டாங்க, ஆனா சம்பளம் ஆகாயம் அளவு, பத்தாததுக்கு பென்ஷன்... இந்த நிலை எந்த தேசத்திலும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நாம் அனைவருமே அரசியல்வாதிகளை குற்றம் சுமத்துகின்றோம்.

      ஆனால் நாம் நேர்யாளராக வாழ்கிறோமா ? என்பதை எண்ணிப் பார்ப்பதில்ஸையே...

      விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. அப்படி ஆனால் வாழறதே சுயநலம் தான். சம்பாதிப்பதும் சுயநலம் தான். வக்கீலாக போக வேண்டியவர் எங்கேயோ தவறு பண்ணி குண்டக்க மண்டக்க பதிவு எழுத வந்துட்டீங்க. சரி இதுவும் சுயநலம் தான். வருகையாளர் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பு. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்.... சுயநலம் என்ற ஒன்றுதான் மனிதன் வாழ்வதற்கான ஆதார சுருதி. அது இல்லாதவர்களைப் பார்க்கவே முடியாது. யாருக்காவது, சுயநலம் இல்லாத ஒருவர் தெரிந்திருந்தால் சொல்லுங்க பார்க்கலாம். வேலை பார்க்கறதுலேர்ந்து, காசு சம்பாதிக்கறதுலேர்ந்து, திருமணம், குழந்தை, வீடு, கார், வாட்ச் என்று எதுவுமே சுயநலம்தான்.

      நீக்கு
    2. வாங்க ஐயா
      //வருகையாளர் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பு//

      ஹா.. ஹா.. உண்மையே ஏற்கிறேன்.

      நீக்கு
    3. ஆம் தமிழரே சுயநலமில்லாத மனிதரை காணவே முடியாது.

      இருமணம் செய்வதுகூட சுயநலம்தான்.
      (தன் சுகத்திற்காக)

      மறுமணம் செய்யாமல் வாழ்வதும் சுயநலம்தான்.
      (குழந்தைகள் நலத்திற்காக)

      இதில் முருகன் வள்ளியை கணக்கு பண்ணியதை சேர்க்க வேண்டுமென நான் சொல்லவே இல்லை நண்பரே...

      நமது நண்பர் திரு. நித்தியானந்தாவின் பொதுநல வாழ்வுகூட, சுயநலம்தான் என்றும் நான் ஜொள்'ளவே இல்லையே...

      நீக்கு
  6. நல்ல அருமையான பதிவு..
    நான் என்னைச் சேர்ந்தவர்களுக்காக நல்லவனாக வாழ்வது சுய நலம் தான்.. அந்த சுய நலத்தால் யாரொருவருக்கும் துன்பம்பில்லை என்னும் போது அது எனது நடத்தையால் விளைந்த பொது நலம் தான்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அருமையான கருத்தை பதிவு செய்தீர்கள் நன்றி.

      நீக்கு
  7. சுயநலம் தவறுனு நினைக்கிறிங்களா?
    சுயநலம் சட்டி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்ப நினைத்தேன் ? அதுதானே உண்மை நிலவரம்

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. சுயநலம், பொது நலம் பற்றிய இரண்டு விதமான விளக்கங்கள் சந்தேகம் கேட்க வந்தவரால், சந்தேகமற நிவர்த்தியானது அருமை. அவர் கேட்ட இரண்டு கேள்விகளும் சிறப்பு. ரசித்தேன். அவரைப் போய் சிவசம்போ இப்படி "அரைக்கேனம்" என்று சொல்லி விட்டாரே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை இரசித்து விவரித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      ஆமாம் சிவசம்போவுக்கு தெரிந்தது இவ்வளவுதான் போலும்.

      நீக்கு
  9. படம், நான் இணையத்தில் சுட்டதுதான். நன்றி எதுக்கு நண்பரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எடுத்தது தங்களது தளத்தில்தானே...

      நீக்கு
  10. \\கடவுளுக்குப் பயந்து கொள்ளையடிக்காம வாழுறதும் சுயநலம்தானே?// -கலக்கல் கேள்வி.

    கடவுளும்(இருந்தால்) உங்களைப் பாராட்டுவார் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் என்னை பாராட்ட ??? வந்தால் உதவிகோரி இந்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் உடனடி (உயிர்) விடுதலை கொடுக்க வைப்பேன்.

      நீக்கு
  11. லஞ்சம் என்பது நம் ரத்தததில் கலந்தது கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பவர் அல்லவா நாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கடவுளுக்கு முதன் முதலில் லஞ்சம் கொடுத்தது தெருவில் அடித்த சிதறு தேங்காய்தான்.

      அதையும் சாமி திங்கமாட்டார் என்று நாமே பொருக்கி எடுத்து வந்து விடுவோம் சட்னி வைக்க...

      நீக்கு
  12. இது கில்லர்ஜி பக்கமோ இல்ல மாறி எங்கள்புளொக் புதன் கிழமைக்கு வந்திட்டனோ என ஒருகணம் திடுக்கிட்டு விட்டேனாக்கும்:))..

    நல்ல அண்ணேவும் நல்ல தம்பியும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலமா ?

      ஆடிக்கும், அமாவாசைக்கும் வந்தால் இப்படித்தான் வழி மாற்றம் தெரியும்.

      உங்களது பதிவுகள் வரவில்லையே... ஏன் ?

      நீக்கு
    2. என்னாதூஊஊஊஊஊஉ என் பதிவுகள் வரவில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. போஸ்ட் போட்டு ரெயினும் புறப்படப்போகிறது, நீங்கள்தான் இம்முறை இன்னமும் வந்து ஏறவில்லையாக்கும்:))

      நீக்கு
    3. இதோ வருகிறேன்...

      நீக்கு
  13. அன்பு தேவகோட்டைஜி,
    இந்தக் கேள்விகள் இங்கே சூடு கொண்டு பறக்கின்றன.
    மிக மோசமான அரசியல் வாதியின் கையில் அகப்பட்டுத் திணறுகிறது ஜன நாயகம்.

    சுதந்திரம் வந்ததிலிருந்து கண்ட அரசியல் வாதிகளில்
    பெருமைகொண்டு சுய நலம் பார்க்காதவர்கள் திரு.காமராஜ், திரு கக்கன், திரு.லால்பஹதூர் சாஸ்திரி.
    இப்போதும் நிலைமை மாறியதோ தெரியவில்லை.
    கிரிக்கெட் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
    சினிமாவில், கிரிக்கெட்டில் கோடிகள் புரள்கின்றன.
    ஏமாந்தவனும் பணம் கொடுத்து
    அவர்களை உச்சியில் வைத்துவிடுகிறான்.

    ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
    நல்லபடியாகச்சிந்திக்க வைத்ததற்கு மிக நன்றிமா.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...
      இறுதியாக சொன்னீர்களே ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் வாழ்வான்.

      இவன் விழித்துக் கொண்டால் அவன் அழிந்து விடுவான்.

      அழகிய கருத்துரைக்கு நன்றிமா

      நீக்கு
  14. கடைசி கேள்வியையும், அதற்கான பதிலையும் அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  15. கேள்வி பதிலாக ஒரு பதிவு - நன்று. ரசித்தேன் ஜி.

    பொதுநலம் - அப்படின்னா கிலோ எவ்வளவு விலை! என்று கேட்கக் கூடிய ஆட்களே இங்கே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் இன்றைய நிலை அப்படித்தான்.

      நீக்கு