தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2021

பில்லாக்கரை, பில் பில்லா

 பில்லாக்கரை இந்த ஊரில் பில்லா என்று ஒருவன் இருந்தான். இவனை பில், பில்லா என்றே அனைவரும் சொல்வார்கள் காரணம் எதற்கெடுத்தாலும் பில் போட்டு வசூலித்து விடுவான். இவ்வுலகில் உள்ள அனைத்து நல்ல செயல்களுக்கும் எதிர்ப்பதமானவன் அவ்வளவு தூரம் அயோக்கியத்தனம் செய்வான்.

 
இவனிடம் யாராவது மணி என்ன ? என்று கேட்டாலும்கூட சொல்லி விட்டு பில் கொடுப்பான். இதனாலேயே இவன் வருவதை கண்டால் ஊரின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பனிடம் இவனிடமிருந்து என்னை காப்பாற்று என்று மனதில் வேண்டிக் கொண்டு சுமார் பதினெட்டடி தூரம் ஒதுங்கி நடப்பார்கள். முரட்டு ரௌடி இவனை திட்டாதவர்களே கிடையாது.
 
பிறந்த குழந்தைகள் வாய் பேசத் தொடங்கியதும் பில்லா நாசமாப் போவான்னு சொல்லு என்றே ஊரில் உள்ள தாய்மார்கள் சொல்லிக் கொடுப்பார்கள் அந்த அளவுக்கு ஊர் மக்களுடன் பகையை வளர்த்து வாழ்கிறான். பெரும்பாலும் அவன் நிற்குமிடம் ஊரின் எல்லையாகத்தான் இருக்கும். புதியவர்கள அந்த ஊரின் பெயர்ப் பலகையை கடந்தவுடன் பில் போட்டு பணம் வாங்கி விடுவான் பில் பில்லா.
 
பாடி ஃபில்டர் இல்லாவிட்டாலும் அதனைப்போல் பந்தா காண்பித்துக் கொள்வான் யாரையும் சட்டென கை நீட்டி விடுவான். பிறகு இவனது கை ஒடிக்கப்படும் என்பது வேறு விசயம். இப்படி ஒடிக்கப்பட்டு பலமுறை குன்றக்குடியில் மாக்கட்டு போட்டு வருடத்தில் பதினொறு மாதங்கள் இப்படித்தான் வாழ்கிறான் என்பதே வரலாறு. இதை மறைப்பதற்காக நகரத்தின் எல்லா திசைகளிலும் அவனைப் போலவே கெட்டப்பில் அடியாட்களை நிறுத்தி வைத்திருப்பான். பில்லா என்று நம்ப வைத்து பில் போடுவான். பில் பில்லா.
 
நாளை இவனுக்கு "ஏதாவது" ஆகிவிட்டால் ஊரே திரண்டு கண்ணீர் வடிக்கும் அதாவது ஆனந்தக் கண்ணீராகும். ஊரில் பெருங்கொண்ட நிறுவனம் முதல், தியேட்டர், உணவகங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிறிய பெட்டிகடைகள், தள்ளு வண்டிகள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள், காவல் நிலையத்தில் வேலை செய்பவர்கள்கூட மாமூல் கட்டவேண்டும் ஆனாலும் எல்லோருக்கும் பில் கொடுத்து விடுவான். பெரிய அளவில் மாமூல் கொடுப்பவர்கள் ஜிஎஸ்டி போட்டு பில் வாங்கி கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Chivas Regal சிவசம்போ-
ஜிஎஸ்டி பில் கொடுப்பதுதானே... முறை. பில் பில்லாவிடம் இந்த நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.

34 கருத்துகள்:

  1. பில் பில்லாவாக நீங்களும் மாறி ிந்த தளத்தில் நுழைபவர்களுக்கு ஜி.எஸ்.டி போடுங்க சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனக்கு இப்படி பேராசை கிடையாதே...

      நீக்கு
  2. நம்ம வெங்கோலன் ஜி-க்கு மட்டும் இது தெரியவே கூடாது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி யாரும் லிங்க் கொடுத்துடாதீங்க....

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஐயோ என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்கள் ?

      நீக்கு
  4. டோல்கேட்-யை நடந்து, கடந்து சென்றால் வரி கட்ட வேண்டுமாம், அதற்கு நெற்றியில் ஒட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய அதிநவீன பொட்டு (+28% GST) தயாரிப்பில் உள்ளதாக தகவல் வருகிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் வரப்போகிறதோ... இந்த ஹிட்லரால்...

      நீக்கு
  5. ஆனால் ஒரு வித்தியாசம் கவனித்தீர்களா ஜி, படத்தில் உள்ள இந்த பில் பில்லாவுக்கு இரு பக்கமும் தாடி பறக்குது...!

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹா நீங்க சொல்ல வர்றது ஏதோ புரியற மாரி இருக்கு நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படீனாக்கா... புரியலையோ...?

      நீக்கு
  7. நகைச்சுவை பகிர்வில் ஒரு செய்தி சொல்லி விட்டீர்கள். உங்கள் பதிவுக்கு ஏற்ற ஊர் கிடைத்து இருக்கே! எங்கு இருக்கிறது இந்த ஊர்?

    பில்லாக்கரை பில்லா வரலாறு அறிந்தேன். படங்கள் அருமை.
    எல்லோரையும் பதினெட்டாம் படி கருப்பன் காப்பற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்த ஊர் ஆனந்தூர், சருகனி, சூராணம் அருகில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஹா... ஹா... ஹா... ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  9. எதெடுத்தாலும் பில் கொடுப்பவனைத் தட்டிக் கேட்க ஆளில்லையா.
    அனியாயமா இருக்கே.
    அருமையான பில்லாக்கரை படம்.
    நச் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பூனைக்கு மணி கட்டுவது யாரு ?

      நீக்கு
  10. வாங்குகிற மாமூலுக்குப் பில் கொடுக்கிறானே பில்லா. கெட்டவனுக்குள்ளேயும் ஒரு நல்லவன் இருக்கிறான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே...
      தப்பு செய்தாலும் சரியாக செய்யணும் என்ற கொள்கையாளனாக இருப்பானோ ?

      நீக்கு
  11. பில்லாவிடம் மாட்டிக்கொண்டீர்களோ? அதிக ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே நான் மட்டுமா ?

      இந்திய மக்கள் அனைவரும்தான் என்பது போலிருக்கிறது வந்த கருத்துரைகளின் கருத்து.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நல்ல நகைச்சுவையான பதிவு. பெயரும், ஊரும் சிரிப்பை வரவழைக்கின்றன. பிறந்த குழந்தை அது பேசக் கற்று கொண்டவுடன் அரிச்சுவடி பாடம் ... சிரித்து விட்டேன். நன்றாக யோசித்து ஒவ்வொரு பதிவையும் சுவைபட எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். பதிவுலகத்திற்கு நேற்று வர இயலவில்லை. அதனால் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை (உண்மை சம்பவத்தை) ரசித்து படித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. கெரோனாவுல..பதினெட்டாம்படி கருப்பு மட்டும் எப்படி பில் பில்லா கிட்ட காப்பாத்துவார்...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது நண்பரே. .

      நீக்கு
  14. ஹாஹா... பதிவின் வழி சொன்ன விஷயங்களை ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  15. முதல்லே புரியவே இல்லை. சம்பந்தமே இல்லையேனு நினைச்சால்! கருத்துரைகளைப் படிச்சதும் தான் "உள் குத்து" இருக்குனே புரியுது! என் ம.ம.வில் ஏறவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதிலும் உள்குத்து இருக்கிறதா... ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு