தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021

கொள்ளிவாயன் மாதஇதழ்

ணக்கம் ஐயா ஒற்றைவரி கொன்றை வேந்தன் அவர்களே.. யாருடைய கேள்விகளுக்கும் வெகு சாதுர்யமாக ஒற்றை வரியில் பதில்கள் சொல்லி அவர்களது வாயில் களி மண்ணை வைத்து அடைத்து விடுவதாக சொல்கிறார்கள். இருப்பினும் அந்த ஒற்றை வரியில் ஆழமான கருந்துகள் பொதிந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். தாங்கள் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லையாம், இதன் காரணமாக தங்களுக்கு ஊமைநாதம் என்ற பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள். அப்பேர்ப்பட்ட அறிவு மேதையை நாங்கள் பேட்டி காண்பதில் எங்களது கொள்ளிவாயன் பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது. பேட்டியை தொடங்கலாமா ?
நன்று

புனிதமான தமிழ் வார்த்தை ஒன்றை தமிழக மக்கள் கலங்கப்படுத்தி விட்டதாகவும், இனி ஆண்டாண்டு காலமாக சாதாரணமாக சொல்ல வேண்டிய இந்த வார்த்தையை தன்மானம் உள்ள தமிழர்கள் பொதுவெளியில் உச்சரிக்கவே சற்று தயங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும், இதற்காக கையெழுத்துப்பிரதி ஒன்றை நடத்தி மத்திய அரசிடம் ஒப்படைக்கப் போவதாகவும், சென்றமாத செங்கோடனில் வெளியாகிய... அந்த வார்த்தை என்னவென்று சொல்ல இயலுமா ?
அம்மா
 
அரசியல்வாதிகளையும் சரி, திரைப்படத் துறையினரையும் சரி அவர்களுக்கு மன்றங்கள் அமைத்து, வாழ்க கோஷமிட்டு, பாதாகைகள் கட்டி, அவர்களை புகழின் உச்சிக்கும், செல்வந்தர்களின் கோட்டை வாசலிலும் விட்டு வந்து மீண்டும் அடுத்த கோமாளிகளை தேடுபவர்கள் தமிழகத்திலேயே முக்கியமான நகரம் ஒன்றேயென்றுதான் என்று சொல்லி வருகின்றீர்களே... அந்த நகரம் எதுவென்று சொல்லுங்களேன் ?
மதுரை
 
இன்றைய இளைஞர்களை அறிவுரைகள் சொல்லி நல்வழியில் கொண்டு வருவது இனிமேல் சாத்தியமல்ல என்றும் இதற்கான ஒரேதீர்வு ஒரு குறிப்பிட்ட தொழிலில் உள்ளவர்களை வேறு தொழிலுக்கு செல்லும்படி அறிவுறுத்த வேண்டும் இல்லாத பட்சத்தில் இவர்களை நாடு கடத்தப்படணும் என்றும் தாங்கள் நீதிமன்றங்களுக்கு கோரிக்கை விட இருப்பதாக கேள்விப்பட்டோம் அது உண்மையெனில் அந்த துறையாளர்கள் யார் என்று சொல்ல முடியுமா ?
திரைத்துறையினர்
 
நாட்டில் விலைவாசியை குறைப்பதற்கு அரசு நிறைய ஆலோசிக்க வேண்டாம், எல்லாவற்றுக்கும் மூலதனமான ஒரேயொரு பொருளின் விலையை குறைத்தால் மற்ற அனைத்து பொருள்களின் விலைகளும் தானாகவே குறைந்து விடும் என்றும், அந்தப் பொருளுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரிகளை நீக்கி விட்டால் போதுமானது என்றும் அந்த பொருள் என்னவென்பதை வரும் ஏப்ரல் முதலாம் தேதி அறிவிப்பதாக சொன்னீர்களே அந்தப்பொருள் என்னவென்று இன்று சொல்லுங்களேன் ?
பெட்ரோல்
 
இராணுவ வீரர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டிய பட்டங்களை திரைப்படக் கூத்தாடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கொடுப்பதைக் கண்டித்து மத்திய அரசு அந்த வார்த்தைகளை உடனடியாக முடக்கி வைக்கும்படியும், இல்லாவிட்டால் அந்த நபர்களை உடனடியாக இராணுவத்தில் வேலை கொடுக்கும்படியும் மீறினால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கடந்த மாதம் அறிவிப்பு கொடுத்து இருந்தீர்களே... அது என்ன வார்த்தை ?
தளபதி, கேப்டன்
 
அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களின் இடத்தை பிடித்து விட்டார்கள். இது பெருமையான விடயமே இருப்பினும் இவர்கள் இந்த தொலைக்காட்சி நாடகங்களை புறக்கணித்தால் இன்னும் உயரங்களை தொடமுடியும் அதேநேரம் எக்காலத்திலும் ஒரேயொரு துறையை மட்டும் பெண்கள் நெருங்கவே முடியாது என்று சொல்கின்றீர்களே அது எந்த துறையென்று சொல்லுங்களேன் ?
கூர்க்கா
 
நடிகை ஜெயலலிதா அவர்களுக்கு புகழாரம் சூட்டுவதற்காக தமிழர்கள் சொல்லிய ஒரு சொல் தங்களை தூக்குக்கயிற்றை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் கூடுமிடமான மரத்தடி நிழலில் தொங்கும் அளவுக்கு கோபப்பட்டு போனதாகவும், தங்களை மக்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாகவும் சொல்லப்பட்டதே... நமது மரத்(துப்போன) தமிழர்கள் ஜெயலலிதா அவர்களை சொன்ன சொல் என்ன ?
தமிழர்களின் குலசாமி
 
நல்லது ஐயா தங்களது நேரத்தை ஒதுக்கித்தந்து எங்களது பொன்னான நேரத்தை பாழாக்கித் தந்து பேட்டி என்ற பெயரில் ஒற்றை முத்துக்களை உதிர்த்து இதையும் வாசகர்களை (பதிவர்களை) படிக்க வைத்தமைக்கு எங்களது கொள்ளிவாயன் மாதஇதழின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
 
சிவாதாமஸ்அலி -
நவரத்தினமாக சரியாக ஒன்பது வார்த்தையைத்தானே சொல்லி இருக்காரு... ?
 
சாம்பசிவம் -
இதுல நிருபர்தானே பேசுனான் இவன் வாயில கொள்ளிக்கட்டையா இருக்கு ?
 
ChavasRegal சிவசம்போ-
நாசமாப்போற மச்சான் நடுவீட்ல வச்சானு சொன்னது போல இருக்கு இவெங்களை கொள்ளிக்கட்டையை வைத்து கொளுத்த வேண்டியதுதான்...
 
காணொளி

22 கருத்துகள்:

  1. கொள்ளிவாயன் நல்லவாயன்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

      நீக்கு
  2. பொன்னான நேரத்தில் சொல்லப்பட்ட புண்ணான கருத்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி பன்னான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார் ஒன்றை வரியில் கொன்றை வேந்தன்,
    கொள்ளி வாயன் பெரிய கேள்விகளுக்கு.
    காணொளி மிக அருமை. இந்த வயதில் அருமையாக வாசிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஒரு வார்த்தை சொன்னாலும்
    சரியாகச் சொல்வதாகவே தெரிகிறது.
    நல்ல மொழிதான்.

    வயலின் இசைக்கும் அம்மா யாரோ.
    இத்தனை திறமையுடன் வாசிக்கிறாரே.
    மிக நன்றி மா அன்பு தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. ஏப்ரல் முதல் தேதி - சரிதான் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அந்த தேதியில்தானே ஏமாற்றுகிறார்கள்.

      நீக்கு
  6. காணொளி அசைஞ்சே கொடுக்கலை. ஆனால் இவங்க வாசிப்புக் கேட்டிருக்கேன். நல்லா வாசிப்பாங்க. ஒரே வார்த்தையில் சொல்லப்பட்ட பதில்களுக்கான ஒரு பத்திக் கேள்விகள் எல்லாமும் நல்லா இருக்கு. மூளை ரொம்ப வேகமா வேலை செய்யுது உங்களுக்கு. சிந்தனை கொடிகட்டிப் பறக்குது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இந்த வயதிலும் இவரது திறமையை வெளிப்படுத்துவது பெரிய விடயமே...
      மூளையை கண்ணேறு வைக்காதீங்க...

      நீக்கு
  7. நச்சென்று இருக்கிறதே... கொள்ளிவாயன் தொடர்வாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. நல்லதொரு நேர்காணல்! கேள்விகளுக்கான ஒரு வார்த்தை பதில்கள் - ஒரே வார்த்தையில் சொன்னால் கலக்கல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கலக்கல் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. பத்திரி்கையின் பெயரும் படமும் படு பயங்கரமாக...மன்னிக்கவும் அட்டகாசமா இருக்கே... வேட்டியும்..சே......பேட்டியும் சூபபர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவு பயங்கரமாக இருக்கிறதா ? இல்லை அட்டகாசமாக இருக்கிறதா ?

      நீக்கு
  11. மொத்தத்தில் இந்த பேட்டியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
    அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. கேள்வி பெரியது பதில் சிறியது.

      நீக்கு