தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

இருளோடு கில்லர்ஜி

 

புதாபி வெங்கலக்கடைத்தெரு பஜாரில் நடந்து போனபோது எதிரும் புதிருமாக சந்தித்து கொண்டது முன்பொரு காலத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த நண்பர்கள் இருவரும் ஒரே நொடியில் பார்த்துக் கொண்டனர். வதனத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மூன்று திசைகளிலும் ஓடியது. 

கில்லர்ஜி சௌக்கியமா ?
அடடே இருளு... நல்லா இருக்கேன், ரொம்ப காலமாச்சே நீ எப்படி இருக்கே ?
 
நல்லா இருக்கேன், ஊருல குழந்தைகள் சௌக்கியமா ? நல்லா படிக்கிறாங்களா ?
நல்லா இருக்காங்க, உன் வீட்டில் அம்மா, மனைவி, குழந்தைகள் எப்படி ?
 
எல்லோரும் நலம்தான்.
இன்னும் அங்கேதான் வேலை செய்யிறியா ?
 
ஆமா ஒட்டகம் கெட்டா குட்டிச்சுவரு... ஏதோ காலம் ஓடிருச்சு...
ஊருக்கு போகலியா ?
 
போன வருசம்தானே போயிட்டு வந்தேன்,  இன்னும் ஒன்றரை வருசம் போகணும்... உன்னை மாதிரியா அரசாங்கத்துல வேலை செய்யிறேன் வருசா வருசம் ஊருக்கு போக, ஆமா நீ எப்போ ஊருக்கு போறே ?
ஆமா போகணும் ஏதும் சாமான் வாங்கித் தர்றதாக இருந்தால் முன்னாடியே வாங்கித் தந்திடு பெட்டியை கட்டணும்.
 
தேதியை சொல்லு வாங்கித் தர்றேன், நீ மூணு மாசத்துக்கு முன்பே பெட்டி கட்டுவியே... கட்டிக்க போனவாரம்தான் ஒருத்தன் போனான். சாமாங்கே கொடுத்து விட்டேன். ஒரு வளையல் வாங்கித் தர்றேன். கொழிஞ்சிக்காடு போயி என் மனைவிகிட்டே கொடுத்திடு.
ஒரு வளையல் வாங்கிக் கொடுத்தால் உன் மனைவி கோவிக்காதா ?
 
ஒரு ஜோடி வளையல்தான்யா. சரி என்றைக்கு போறே ?
வர்ற மார்கழி இரண்டாம் தேதி.
 
ஒழுங்கா சொல்லுய்யா... ?
ஒழுங்கானா... அதான் சொன்னேன்ல மார்கழி இரண்டு.
 
ஆங்கிலத்துல சொல்லுய்யா
ஓஹோ உங்களுக்கு ஆங்கிலத்துல சொல்லணுமோ... ஐயாம் கோயிங் ட்டூ வெக்கேஷன் மந்த் ஆஃப் மார்கழி ட்டூ தர்ஸ்ட்டே
 
மறுபடியும் தமிழ்ல சொல்றே... ?
ஆங்கிலத்துலதானய்யா சொன்னேன்.
 
நீ இன்னும் திருந்தவே இல்லியா ?
நான் கெட்டா போனேன்... திருந்துறதுக்கு ?
 
யோவ் ஆங்கில மாசத்து தேதியை சொல்லு.
அதையாவது தமிழ்ல சொல்லவா ? ஆங்கிலத்துல சொல்லவா ?
 
தமிழ்லயே சொல்லு
பதினேழு.
 
மாசத்தை சொல்லு
டிசம்பர்.
 
அதாவது டிசம்பர் பதினேழு சரியா...
ஆமா மறுபடியும் முழுசா சொல்லவா ?
 
வேண்டாம் ஏற்கனவே மரை கழண்டு போயிருச்சு மேற்கொண்டு குழப்பாதே...
சரி வளையல் எப்போ தர்றே... என்னோட அலைபேசி எண் இருக்கா ?
 
இன்னும் வாங்கலை நான் அளவு வளையல் கொண்டு வர்றேன் புறப்படுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வெள்ளிக்கிழமை மாலை அஜந்தா ஜூவல்லர்ஸூக்கு வந்துரு நீதான் வளையல் தேர்வு செய்யணும். எனக்கு தெரியாது வாங்கிட்டு அப்படியே நீ கொண்டு போயிரு நான் முஷஃபா போயிருவேன் சரி உன்னோட அலைபேசி எண் சொல்லு...
தமிழ்ல சொல்லவா ? ஆங்கிலத்துல சொல்லவா ?
 
எதுலயாவது சொல்லித் தொலை.
ஃபிப்டித்ரீ லாக்ஸ், ட்வெண்ட்டி ஸிக்ஸ் தௌஸண்ட் அன்ட் எயிட் ஹண்ட்ரட் ஃபோர்ட்டி
 
ய்யேன்... வளையல் கொண்டு போக முடியாதுனா... நேரடியா சொல்ல வேண்டியதானே ?
நான் எப்போ உனக்கு வளையல் கொண்டு போக மாட்டேனு சொன்னேன் ?
 
இப்படி கழுத்தறுக்காம தமிழ்ல சொல்லு.
ஐம்பத்து மூணு லட்சத்து, இருபத்து ஆறாயிரத்து, எண்ணூற்றி நாற்பது.
 
நான் புறப்படும்போதே வாசல்ல பங்களாதேஷ்க்காரன் குறுக்கே போனான்.
யாரு மஞ்சப்பொடியா ?
 
ஆமா நீ முதல்ல தமிழ்ல எண்களை வரிசையா தனித்தனியா சொல்லுய்யா ?
நீ முதல்லயே சொல்லலாம்ல...
 
சரி சொல்லித்தொலை.
ஐந்து, மூன்று, இரண்டு, ஆறு, எட்டு, நான்கு, பூஜ்ஜியம்.
 
எத்திசாலத்தா....  த்தூவா ?
எத்திசாலத்து.
 
இரு முதல்ல அடிச்சுப் பார்க்கிறேன்... நீ சுத்துல விட்டாலும் விடுவே...
இருளிடமிருந்து கில்லர்ஜிக்கு இணைப்பு சென்றதும் அலைபேசி இசைத்தது...
//சொப்பன வாழ்வில் மகிழ்ந்து... ஸுப்ரமண்ய ஸ்வாமி  எனை மறந்தார்//
சாலையில் சென்றவர்கள் கில்லர்ஜியை திரும்பித் திரும்பி பார்த்தார்கள்.
 
நீ இன்னும் அப்படியேதான் இருக்கியா ? போன வாரம்கூட நம்ம பழைய கேம்ப் வார்டன் காண்டீபன் தாத்தா கேட்டாரு... தமிழ்ப்பண்டி கில்லர்ஜி எப்படி இருக்கான்னு...
அவரு இன்னும் இருக்காரா ? பழைய நண்பர்கள் எல்லோரையும் கேட்டதாக சொல்லு... சரி வா காஃபி சாப்பிடலாம்.
 
இருவரும் பக்கத்திலிருந்த தேநீர் கடைக்கு செல்ல...
 
இங்கே குடிப்போம்.
வேண்டாம் இது மஞ்சப்பொடி கடை குடிக்கிற காஃபியில் எச்சியை துப்பிடுவாங்கே.. அதோ ஃபரீதா தமிழ்க்டைக்கு போவோம். நல்லா இருக்கும்.
 
உள்ளே நுழைந்து இரண்டு காஃபி சொல்லி விட்டு அமர்ந்து பேசினார்கள்.
 
எல்லோருடைய பெயரோடு கார்டு நம்பரை வார்டனுக்கு தமிழ் எண்கள்ல எழுதிக் கொடுத்தியே அதை இன்னும் எல்லோரும் சொல்லி சிரிப்போம் அந்த வசனம் யாரும் மறக்க முடியாது எவன்டா அவன் தமிழ்ப்பண்டி....
ஹா... ஹா... அதை இன்னும் மறக்கலையா... ? முடுமை, முடுதாரை எல்லாம் கேட்டதாக சொல்லு.
 
நீ வச்ச பேரு எல்லாம் இன்னும் நிலைச்சு இருக்குது... அதே கேம்ப்லதான் இருக்கோம்... யாரும் உன்னை மறக்கலை.
ஹா.. ஹா.. ஹா..
 
பழைய பொற்கால நிகழ்வுகளை சிரித்து பேசியபடி மீண்டும் வராது என்ற ஏக்கமுடன் விடை பெற்றனர் இருளாண்டியும், கில்லர்ஜியும்.
 
ChavasRegal சிவசம்போ-
ரெண்டும் நல்ல வெங்கலக் கிராக்கிகளா இருக்கும் போலயே...

38 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவு அருமை. பழைய நட்புறவு நினைவுகளை நண்பர்கள் அசை போட்டு பேசிய விதங்களை ரசித்தேன். ஒருவருக்கொருவர் வேடிக்கையாய் புனைப் பெயர்களிட்டு அழைத்துக் கொள்வது நல்ல நட்புகளால்தான் முடியும். தமிழ் பண்டிதர் என்ற பெயர் தங்களுக்கு மிகப் பொருத்தம்தான். இடையிடையே உங்கள் இயல்பான குறும்பு பேச்சுக்கள் ரசிக்க வைத்தன.(ஒரு வளையல்) வதனத்தில் மூன்று திசைகள். சிரித்து விட்டேன். தலைப்பு நன்றாக பொருத்தமாக உள்ளது. அருமை. உங்களின் அனேக பதிவுகளுக்கு வர இயலவில்லை. இதோ இதற்கு உடனே வந்து விட்டேன். என் நலம் குறித்து விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவர்கள் ''தமிழ் பண்டி'தர்'' என்று சொல்லாமல் கடைசி இரண்டு எழுத்தை மறந்து விட்டார்களே...

      தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. //வெக்கேஷன் மந்த் ஆஃப் மார்கழி// - செமயா எழுதியிருக்கீங்க.

    அந்தக் காலம் சிறப்பானதுதான் கில்லர்ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே... தாங்களும் இவ்வகை உதவிகள் செய்திருப்பீர்களே...

      நீக்கு
  3. இரு நண்பர்கள் சந்திப்பு அருமை.

    பழைய பொற்கால நினைவுகள் அருமை. மீண்டும் மனம் ஏங்க வைக்கும் தான்.
    தமிழ் பேரு வைத்தவரை எப்படி மறக்க முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் உண்மைதானே... தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. அபிதாபி வெங்க்கல கடைத்தெரு படம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நான் (பெரிய)கோயில் குளத்துத் தவளை. தென்னந்தியாவைத் தவிர வேறு எங்கும் போனதில்ல. அபுதாபி, துபாய் பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க கில்லர்ஜி.

    உரையாடல் படு படு சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இயன்றவரை பழமைகளை அசை போடுவேன்...

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா, மதுரை வெங்கலக்கடைத்தெரு அபுதாபிக்குப் போயிடுச்சா? நல்ல கற்பனை போங்க. இருளோடு என்றதும் இருட்டிலே தனியாப் பேசினீங்களாக்கும்னு நினைச்சா உங்க நண்பர் பெயர் இருளாண்டியா? கடைசியிலே வளையல் வாங்கிப் போய்ச் சேர்ந்ததா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இது மதுரையில் மட்டும்தான் இருக்குமா ? அபுதாபியில் இருக்காதா ? தங்களது ரசனைக்கு நன்றி.

      நீக்கு
  7. நண்பர்களின் சந்திப்பு குறித்து சிறப்பாக எழுதி இருக்கீங்க ஜி! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பதிவை மட்டும் எழுதினோம் என்று இல்லாமல், மெனெக்கெட்டு படங்களும் (போட்டோஷாப் செய்ததோ இல்லை பதிவுக்குச் சரியாக உள்ள படமோ) காணொளியும் என்று அசரடிக்கிறீங்க. உங்க உழைப்புக்குப் பாராட்டுகள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  9. உரையாடல் கலாய்ப்பு தான். ஆமாம் உண்மையிலேயே உங்கள் பெயர் தமிழ் பண்டி தானா? தெலுங்கில் பண்டி என்றால் பன்றி என்று அர்த்தம். இப்படி கூப்பிடாதே என்று சொல்லிவிடுங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தெலுகுவில் பண்டி என்றார் கார் என்றுதானே அர்த்தம்.
      தங்களது கருத்து என்றுதான் சுபமாக இருந்தது ? இன்று இருக்க ?

      வருகைக்கு நன்றிகள் பல.

      நீக்கு
    2. அது bandi. இது pandi. Pandi) mean in Telugu? English Translation. pig. More meanings for పంది (Pandi). pig · Jayakumar

      நீக்கு
  10. கற்பனை கலாய்ப்பு அருமை கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கற்பனையா.... உ.ச. தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. தமிழ் ஆங்கில மாசம், தேதி குழப்பம் ரசித்தேன்.  அலைபேசி எண்..   பாவம்தான் இருளு..!!

    பதிலளிநீக்கு
  12. ஹாஹாஹா கில்லர்ஜி செமையா இருளை இன்னும் குழப்பி இருட்டாக்கிட்டீங்களே!!!!

    அலைபேசி எண் சொன்ன விதம் ஹாஹாஹா செமை...

    அது சரி அபுதாபில வெங்கலக் கடைத் தெரு அதுவும் படத்துல கடையையே காணமே...!!!

    டக்குனு பார்த்திபன் வடிவேலு ஜோக் நினைவுக்கு வந்துச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அது அபுதாபி வெங்கலக்கடை தெருதான் இன்னும் டெவலப் ஆகலை போல....

      நீக்கு
  13. அந்த பார்த்திபன் எல்லாம் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அட்டகாசம் போங்கள்! மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. பதிவு முழுவாதும் விரவிக் கிடக்கும் நகைச்சுவை மனதை
    தெளிவாக்கியது.
    தங்கள் இருவரின் தோழமையும்,
    சிரிப்புப் பேச்சும் அருமையோ அருமை.

    அபிதாபி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  15. நெல்லை தமிழரின் கருத்து தான் எனக்கும்.
    எப்படி தான் பண்றீங்களோ படங்களை.
    உங்கள் கற்பனை பாராட்டத் தக்கது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  16. பழையவை பொன்னானது. - அதனை
    மீட்டது அழகோ அழகு.

    பதிலளிநீக்கு