நல்லவனாய்
மாண்டவனுக்கும்,
கெட்டவனாய்
ஆண்டவனுக்கும்,
மகிழ்வாய்
வாழ்ந்தவனுக்கும்,
கவலையில் வீழ்ந்தவனுக்கும்,
துன்பத்தில்
துவண்டவனுக்கும்,
இன்பத்தில்
திளைத்தவனுக்கும்,
கடனில்
காலத்தை கழித்தவனுக்கும்,
பெருமையில்
மகிழ்ந்தவனுக்கும்,
சிறுமையில்
இளைத்தவனுக்கும்,
வெற்றியில்
மிதந்தவனுக்கும்,
முழுத்தோல்வி
நேர்ந்தவனுக்கும்,
ஆறடி
நிலமே சொந்தமடா...
அதுவும்
ஆறு மாதத்து பந்தமடா..
ChavasRegal சிவசம்போ-
எரிச்சவனுக்கு ஆறு மாதம் இல்லை ஆறு மணி நேரம்தான்.
அது சரி.. சிலருக்கு மட்டும், 6 அடி நிலத்துக்கு மேலே 50 கோடி ரூபாய்க்கு மாளிகைகள் எழுப்பறாங்களே... 10 ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைக்கறாங்களே
பதிலளிநீக்குவருக தமிழரே...
நீக்குஅது கூத்தாடி பயல்களையும், சிறுக்கிகளையும் தெய்வமாக நினைக்கிற ஐந்தறிவு ஜீவிகளால் வந்த குளறுபடி.
சரி தான் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி.
நீக்குஉங்கள் எண்ணங்களை படித்தவுடன் நிறைய பாடல்கள் நினைவுக்கு வந்தன.
பதிலளிநீக்குஇப்போது ஆறடி நிலமும் சொந்தமில்லை ஜி..மின் மயானத்தில் எரித்து சாம்பலை கொடுத்து விடுகிறார்கள்.
ஒரு சிலரே புதைக்கிறார்கள்.
ஆம் சகோ இனிமேல் அரசால் மனிதர்களை புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்படலாம்...
நீக்குஒரு சின்ன சாம்பல் டப்பாதான் சொந்தம் கில்லர்ஜி
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகுழி ஒரே அளவுதான் ஆனால் அந்த குழிக்குள் போகும் பிணத்தோட மதிப்பு அவர்களின் வசதியை பொருத்தது. வசதியானவர்கள் என்றால் நல்ல மரத்தினாலான சவப் பெட்டியும் அதுதோட சேர்த்து தங்க நகைகளும் போகும், வசதி இல்லாவிட்டால் ஒலைப்பாய்யோடுதான் செல்லும்
வருக தமிழரே ஆம் உண்மைதான் தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஎன்னாது.. தங்க நகைகள் போகுதா? இவர், எகிப்தில் இருக்கும் மம்மியைப் பற்றிச் சொல்லியிருப்பாரோ? இந்தக்காலத்தில் அப்படிப் புதைத்தால், பூட்டுப் போட்டுக் காவல் காக்கணும்
நீக்குஎம்ஜாரோடு வாட்சு வைத்தார்களே...
நீக்கும்ம்ம்ம்ம்ம்ம், என்ன திடீர்னு? மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். எல்லாம் இறைவன் செயல். அவன் பார்த்துப்பான்.
பதிலளிநீக்குஆம் விதிப்படி நடப்பவை நடந்தே தீரும்.
நீக்குஉண்மை தான் நண்பரே. உங்கள் முத்தாய்ப்பு தான் கலக்கல்.
பதிலளிநீக்கு"அதுவும் 6 மாத பந்தமாடா ". பளீர் என்று அரைகிறது
வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குஉண்மை
பதிலளிநீக்குஆனாலும் அநேகர் உணர மறுக்கிறார்கள்
ஆம் நண்பரே தாங்கள் சொல்வது சரியே...
நீக்குஎத்தனையோ பேர்கள் சொல்லி விட்டார்கள். இப்போது உங்கள் முறை. உணரத்தான் ஒருவருமில்லை.
பதிலளிநீக்குவாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுன்பெல்லாம் மயானத்தில் அந்த ஆறடி நிலம் கூட ஒருவருக்கு சொந்தமில்லை. இப்போதெல்லாம் மரணித்தவரின் உறவுகளுக்கு உடனே சாம்பல், அதை கரைத்தல் என அவரை குறித்த நினைவுகளும் அதனுடேயே மறந்தும் போகிறது. காலங்கள் அதிலும் மாறி விட்டது. எல்லாம் விதி வசந்தான். நம் தலையில் எழுதியதுதானே நடக்கும்.(அது எந்த மொழி என்றுதான் தெரியவில்லை.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ ஆம் அவரது நினைவுகளும் அன்றோடு முடிகிறது.
நீக்குஇதனை உணர்ந்துவிட்டால் வாழ்வு சிறப்பே.
பதிலளிநீக்குஆம் முனைவர் அவர்களின் கருத்து உண்மையே...
நீக்கு//ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பதிலளிநீக்குபேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.//
திருமூலர் சொன்ன பாடல்.
எல்லோருக்கும் இதுதான் ஜி.
வருக சகோ சொன்னதுபோல் திருமூலர் பாடலை தேடி கொண்டு வந்தமைக்கு நன்றி.
நீக்குகுழி தோண்டுவது ஒரு சில சமூகங்களில் தான் இல்லையா ஜி. மனுஷனுக்கு 6 அடிக் குழியோ, ஒரு பிடி சாம்பலோ எதுவேணா ஆகட்டும் பணக்காரன் ஏழை யாரா இருந்தா என்ன கடைசில மக்கித்தான் போகப் போறோம் இதுல என்னத்த கொண்டு போகப் போறோம்? இறந்த பிறகும் பலர் மனதில் நாம் நிறைந்து நம்மை மகிழ்வுடன் நினைப்பதற்கு ஏற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுதான் முக்கியம். மனுஷன் எங்க உணருகிறான்...கடைசி நல்லாருக்கு ஜி.
பதிலளிநீக்குகீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குநண்பரே! சுடுகாட்டில் இடம் இல்லை என்பதால் எரித்து விடுகிறார்கள் நண்பரே!..இதோடு நான் ஐந்தடி 25 இன்ஞ் இருப்பதால் எனக்கு ஐந்தடி போதும் நண்பரே! அந்த ஐந்தடிக்கு உரிமை கேட்டு கோர்ட்டுக்கு போகவேண்டுமா? நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குதாங்கள் இதற்காக நீதி தேவதையை வதைக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பதிலளிநீக்குபேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடை கொண்டு போய்க் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.
எனும் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.
வாங்க ஸ்ரீராம்ஜி திருமந்திரத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
நீக்குஆறடி நிலம் - அது கூட சில நாட்களுக்கு மட்டும்! :(
பதிலளிநீக்குஆம் உண்மையே...
நீக்கு