தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 03, 2015

சிலிர்க்க வைத்த, ஸ்ரீலங்கா



அன்பு நெஞ்சங்களே.... இது எமது ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் அல்ல ! அபுதாபியில் இருந்து நம் இனிய இந்தியா வரும் போழுது கொழும்பில் இற(ங்)க்கிய விமானம் என்னை சுமார் 35 மணி நேரம் காத்திருப்பு கணக்கில் இருக்கச் சொன்னார்கள் 24 மணி நேரம் என்றாலே தங்குவதற்கு உணவுகளோடு தங்கும் அறையும் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை நான் கேட்டதற்கு சுங்க அதிகாரிகள் சொன்னார்கள் நீ இணையத்தில் எடுத்த ‘’இந்த’’ பயணச் சீட்டுக்கு அதெல்லாம் வராது என்றார்கள் சரி நான் 35 மணி நேரம் என்ன செய்வது ? இங்கேயே இருங்கள் எனக்கு வந்துச்சு கோபம் நான் யு.ஏ.இ. அரசாங்கத்தில் வேலை செய்கிறேன் எனது கடவட்டையில் உள்ள குடியுரிமை முத்திரைத்தாளை காண்பித்தேன் நான் இங்கேயுள்ள யு.ஏ.இ. தூதரகத்துக்கு பேசமுடியுமா ?  
(என்னை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்தார்கள், எனது லெட்சணமும் அப்படித்தானே இருந்துச்சு அதாவது கீழே கீழே பாருங்களேன்)

இதோ இப்படித்தான் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஏன் ?
நான் பேசணும் உடனே அவர் மற்றொரு அதிகாரியுடன் சிங்களத்தில் கடகட கடகட கட் என்று பேசி முடித்தார்கள் மெதுவாகத்தான் பேசினார்கள் பாலசிங்கம் என்ற வார்த்தை மட்டும் தெளிவாக விளங்கியது.

நீங்க ஏன்  ஸார் இந்த மாதிரி பயணச்சீட்டு எல்லாம் எடுக்குறீங்க ?  
(அப்படினா  ஆஃப்பர் போடுவீங்க, வந்து மாட்டுனா ஆப்பு வைப்பீங்களாடா ?  சே. குமாரின் ‘’மனசு’’ கேட்டது) 
உங்களுக்கு தங்கும் வசதி எல்லாம் கொடுக்க முடியாது ஸார், இப்ப என்ன செய்ய சொல்றீங்க ?  நான் வெளியே போகணும் எனது செலவில் தங்கி கொள்கிறேன் நாளைக்குத்தானே திருச்சி விமானம் நாளை காலை சரியாக 05.30 am இங்கே இருப்பேன். சரி இங்கே யாரையாவது தெரியுமா ? 

எனது நண்பர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் தெரியும் சரி இந்த படிவத்தில் அனைத்து விபரங்களும் அவருடைய தொலைபேசி இலக்கமும் எழுதுங்கள் எழுதிக் கொடுத்தவுடன் 24 மணி நேத்திற்கான அனுமதி முத்திரையை எனது கடவட்டையில் குத்தி (கோபமாக) கொடுத்தார்கள், கைச்சுமையை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.


விமான நிலையத்தில் 35 மணி நேரம் சும்மாவே இருக்க முடியுமா ? சாப்பிடப் போனால், யு.ஏ.இ. திர்ஹாம்ஸ் செல்லாது, தி கிரேட் இந்திய ரூபாய் செல்லாது, இலங்கை சல்லியும் செல்லாது, டாலர் வேண்டுமாம் முருகன் டாலரோ, ஐயப்பன் டாலரோ, கேட்டால் கழுத்தில் கிடப்பதை கழட்டிக் கொடுத்து விட்டு தேவகோட்டை வாரச்சந்தையில் போய் வாங்கி கொள்ளலாம் அமெரிக்க டாலர்தான் வேண்டுமாம் அதுவும் நம்ம கிட்டேருந்து எப்பூடி ? 

வச்சோமா ஆப்பு என்று நினைத்துக் கொண்டேன். வக்கப்போறாங்கே ஆப்பு என்பது தெரியாமல், வெளியே வந்து இலங்கை ரூபாய் 6000 மாற்றிக் கொண்டேன் மகிழுந்து பிடித்தேன் நீர் கொழும்பு கடகோத்தினி தங்கும் விடுதிக்கு போ என்றேன், தெரிந்த இடம் போல... சும்மா இருக்கும் நேரத்தில் சும்மாகாச்சுக்கும் இணையத்தில் மேய்ந்து வைத்தது இப்போது உதவியது (?)  

அப்பகே உத்தரவாதி - என்னோட உத்ரவாதம்.



இலங்கை, கொழும்புவில் HOTEL லில் ROOM எடுத்து தங்கினேன், ரம்மியமான சூழல், ரசிக்கத்தான் முடியவில்லை காரணம், அது ஒரு பிரபலமான ஒருவரை கொன்று இருந்த நேரம். லிலும் சரி, விலும் சரி எந்த நேரமும் ஒரே டமால், ட்டுமீல் ன்ற சத்தம் எனது செவிகளில் முத்தமிட்டுக் கொண்டே  இருந்தது.



எங்கும், ஒரு தமிழரைகூட பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை. இந்நிலையில் விஜயன் என்ற ஒரு சிங்கள ஆட்டோ டிரைவர் கிடைத்தார், அவருடன்தான் ஊர் சுற்றினேன். எங்கும், கட்அவுட்கள் அதில் சிங்கள எழுத்துக்களே என் கண்ணில் பட்டன ! தமிழ் அழிந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எங்கு போனாலும் என்னை வினோதமாக பார்த்தார்கள் காரணம் எனது தோற்றம் தேடப்படும் ஒரு முக்கிய நபரைப்போல் இருந்தது. ஐந்நூறு மீட்டருக்கு, ஒரு ராணவவீரர் துப்பாக்கி சகிதம், ஒவ்வொருவரிடமும் எனது கடவுச்சீட்டை காண்பித்து விபரம் சொல்ல வேண்டியதாகி விட்டது. இந்த நிலையிலும் நான் அவர்களுக்கு தெரியாமல், வீடியோ எடுத்து வந்தேன். 
(வீடியோவை பார்க்கும்போதே புரியும். அவர்கள் வரும்போது மறைத்திருப்பேன்) 
ROOMக்கு வந்தால் MILITERY POLICE நின்றிருந்தார்கள், எனது பெட்டியைப் பிரித்து பறத்திப் போட்டு சோதனை செய்து, நான் இலங்கையில் எடுத்திருந்த வீடியோவை மட்டும், அழித்து விட்டு.
(எந்த ஒரு பொருளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை) 
எனது கடவுச்சீட்டை சோதித்து விட்டு போய் விட்டார்கள். நல்லவேளை மற்றொரு CHIP CARDடை அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் போனவுடன் பழக்கதோஷம், பிரித்துப் போட்டதையும் வீடியோ எடுத்து வைத்தேன்.



மறுநாள் அதிகாலை விமான நிலையம் செல்லவேண்டும், ஆட்டோ டிரைவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன், அவர் வரவில்லை நடந்தே போய் விடலாம் இருப்பினும் அதிகாலை நேரம் என்பதால், HOTELகாரர்கள்,  POLICE பிரச்சனை அதிகமென, வேறு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அவசரத்திற்கு உதவிய மனிதநேயமுள்ள, அந்த சிங்களருக்கு பேசிய தொகையும், மிச்சமுள்ள இலங்கை ரூபாயுடன், இந்திய நன்றியும், இலங்கை இஸ்தூத்தியும் சொல்லி விட்டு வந்தேன்.



மனிதநேயம் என்பது நாடு, மொழி, ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. இது உள்ளவன் புனிதனாகிறான், இல்லாதவன் மிருகமாகிறான். நாம் புனிதனாக வேண்டாம் சராசரி மனிதனாகவாது வாழ முயற்சிப்போமே ! 

காணொளி

சரி அடுத்து அமெரிக்கா போவோமா ?  

90 கருத்துகள்:

  1. புலிவாலைப் பிடிக்கிறதா நினைச்சுக் கொண்டு -
    புலியையே அல்லவா பிடித்திருக்கிறானுங்கள்!..

    கேட்டியளா - அவனுங்களுக்கெல்லாம் விவரம் பத்தாது?..

    பதிலளிநீக்கு
  2. இன்னா பாஸ் இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க, தமிழர் இடங்களான ஸீ ஸ்ட்ரீட் எல்லாம் போகவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாக்கேட்டீங்க கேள்வி போனாப் போயிருப்பேன்.

      நீக்கு
  3. இலங்கையிலும் ஒருநாள் பயணம் செய்து அதிரடியாக சாதனை பண்ணிவிட்டீர்கள்! சூப்பர்ஜி!

    பதிலளிநீக்கு
  4. காணொளி - இப்பத் தான் காணக் கிடைச்சது..
    திகில் படம் பாக்கிற மாதிரியல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  5. புள்ளையார் டாலர் இருக்கு.. முருகன் டாலர் இருக்கு.. ஐயப்பன் டாலர் கூட இருக்கு!.. ஆன பய புள்ளங்க அமரிக்க டாலர்..ல்ல கேக்கான்.. ஆத்தா கொடுத்துடலயே!..

    பதிலளிநீக்கு
  6. மீசைக்காரக் கில்லர்ஜி - உன்
    பதிவைப் படித்துக் கொஞ்சம்
    ஆடித்தான் போய் விட்டேன்.
    எனது நடைபேசி எண்ணுக்கு
    அழைப்புக் கொடுத்திருந்தால்
    உடனே நேரில் வந்து
    முடிந்த உதவிகளைச் செய்திருப்பேனே!
    இலங்கைச் சூழலைப் படம்பிடித்துக் காட்டி
    சிறந்த பதிவைத் தந்தமைக்கு
    எனது பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அடுத்த முறை வீட்டிற்க்கே வந்து விடுகிறேன்.

      நீக்கு
  7. திக் ... திக் ... ஆனால் தில்லான பயணம்தான் செய்து இருக்கிறீர்கள். போட்டோவிலும், மதுரையில் நேரில் உங்களைப் பார்த்தபோதும் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். அப்புறம் உங்களை நீங்களே ஏன் தாழ்வாக நினைத்துக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே... ஏனோ தெரியவில்லை படிக்காத காரணத்தால் தாழ்வு மனப்பான்மை அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கின்றது.

      நீக்கு
  8. புகைப்படத்தில் இருப்பது மாதிரியே நீங்கள் அமெரிக்கா போனா, கண்டிப்பா ஹோட்டலுக்கு போக மாட்டீங்க. உள்ள தான் போவீங்க. பார்த்துக்குங்க.
    “//தமிழ் அழிந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது//” – நம்மால் உணரத்தான் முடியும் நண்பரே. வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவுக்கு எப்படிப் போனேனு சொல்லத்தானே போறோன் வந்து பாருங்க... கலக்கிட்டோமுள்ள....

      நீக்கு
  9. நண்பா!
    'சிலிர்க்க வைத்த, ஸ்ரீலங்கா' என்பதற்கு பதிலாக
    "கடுப்பை கடுகாக பொறிந்த ஸ்ரீலங்கா" என்று தலைப்பு இட்டு இருந்தால்
    மிகவும் பொறுத்தமாய் இருந்திருக்கும்.
    எங்களுக்கும் அங்கு அது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. ஆனால்
    எங்களுக்கு ஹோட்டலில் ரூம் போட்டு தந்தார்கள்.மூல காரணம்
    முன்னுக்கு வந்து நிற்குது நண்பா!
    எல்லாம் மீசை படுத்தும் பாடு!
    இது எப்படி இருக்குது?
    (அடிக்க வரும் முன்னரே அழுது விட்டேன் நண்பா)

    சுகம் தரும் சுற்றுலா பதிவு சூப்பர் ஜீ!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகம் தரும் சுற்றுலாவா ? எனது வாழ்நாளிலேயே மரணத்தை கண்டு பயந்ததில்லை ஆனால் அன்று முதன் முதலாக தோன்றியது எனது செல்வங்களை பார்த்து விடுவேனா ? என்று காரணம் எங்கும் டமார் எதிலும் டுமீல்.
      நீங்ககூட தமிழ் மணத்துல டுமீல் போட்டீங்க போலயே...

      நீக்கு
  10. அருமையான பதிவு..! நானே சுங்க அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது போல் அத்தனை ரியலாக இருந்த்தது. உங்கள் எழுத்து..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  11. நான் கூட இனிமையான பயணம் என்று இருந்தேன். ஏமாந்த பயணம் என்று சொன்னால் என்ன கொளரவ குறைச்சல் வந்ததது? அவரவர் நாட்டு மொழிக்கும் பணத்துக்கும் மரியாதை இல்லை. நாம் இன்றும் மறைமுகமாக அடிமையாகத்தான் உள்ளோம். கடைசியில் ஒரு மனிதநேயம் உள்ள மனிதரைச் சொன்னீர்களே அவர்க்கு எங்கள் நன்றிகள். நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. இது தான் இனி காலத்திற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சரியாக சொன்னீர்கள் மறைமுக அடிமைகள் உண்மையே...

      நீக்கு
  12. இந்தப் பதிவு என்னைக்குப் போட்டீங்க? தேதி தேடிப் பார்க்கிறேன். எங்கேயும் காணலியே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனது பதிவில் தேதிகளை காண முடியாது.

      நீக்கு
    2. அது என்ன மாய மந்திரமுங்க?

      நீக்கு
  13. இலங்கையிலும் போய் கலக்கிட்டீங்க......கணினி வரவும் மொய் வைக்க வரேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கலக்கினேனா ? கலங்கிப்போயி வந்துருக்கேன்.

      நீக்கு
    2. ஒட்டு போட வரலையே...? முயற்சித்து முயற்சித்து....வரலையே பிறகு வருகிறேன்

      நீக்கு
  14. அன்புள்ள ஜி,

    இலங்கையில் இருண்ட நாள்... இருந்த நாள் கண்டு வியந்தேன்! உயிரைப் பணயம் வைத்து ஒரு பயணம்... திகில் பயணம்... படம் சுட்டதையும் பார்த்து மகிழ்ந்தேன்!

    யாழ்பாவாணர் அய்யா காசியைக் கண்டு வந்திருக்கலாம்...! விரைவில் விடியும் ... அப்பொழுது இலங்கையைக் கண்டு மகிழலாம் என்று வந்து விட்டீர்களோ?

    அமெரிக்கப் பயணத்தைச் சொல்லுங்க ஜி....எங்களால் முடியாததைக் கேட்டாவது அறிந்து கொள்கிறோம்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே நன்றி விரைவில் போவோம் அமெரிக்கா.

      நீக்கு
  15. ஜி! கலக்கிட்டீங்க!
    என்னத்த?
    வவுத்தயும், மனசையும்....சரி நீங்கதானே சிரிலங்காவுல ...உங்க மனசு கேட்ட கேள்விய அது என்ன உங்க ஊர்லருந்து பாவம் சே குமார் மனசு ரிங்குச்சுனு....!!!
    அப்படியா, நன்றி! ஆமாம். குமார் மனசு எனக்காக ரிங்கினா உங்களுக்குப் பொறணி? நண்பேண்டா!
    அட என்ன ஜி கலக்கிடுச்சுனு சொல்லுறோம், நன்றின்றீங்க! பொறணி எல்லாம் இல்ல பாவம் "மனசு"ன்னு தோணிச்சு......வம்புக்கிழிக்கிறீங்களோனு....
    பின்னே, என் அனுபவப் பதிவு உங்கள அசர அடிச்சுச்சுனா நன்றிதானே சொல்லணும்...நண்பன் "மனசு" எனக்காக ரிங்கக் கூடாதா..
    ம்ம் ரிங்கட்டும்சரி வுடுங்க அத...கல்யாண வீட்டுலதான் மொய் வைப்பாங்க இங்க சிலிர்க்க வைக்கிற வீட்டுல கூட மொய் வைச்சுருக்கோம்...அந்த மொய் நீங்க அடுத்த வாட்டி சிரிலங்கா போகும் போது உபயோகப்படுமா பாருங்க....டாலரு அது...கதிர்காம முருகன் டாலரு இல்லைங்க.....அமெரிக்க டாலர்ல மொய்யி....
    ஓ! நன்றி! அடுத்த பதிவு அமெரிக்கான்றதுனாலத்தானே..
    ஆமாம் ஜி அதுக்கும் சேத்துத்தான் அந்த மொய்யி.....ஆஸ்திரேலியாகாரரு வைச்ச டாலரு எல்லாம் செல்லுபடியாகாது....உங்களுக்கு..
    ஆமாம் ல அவர போயி புடிக்கறேன்...இருங்க...
    (ஹை மாட்டிவிட்டுட்டோம்ல...நாங்க வைச்ச மொய்யி அக்மார்க் இந்திய மொய்யிதான்....)
    அங்க என்ன ரகசியமா ரெண்டுபேரும் சலசலப்பு..
    இல்ல உங்களுக்கு டாலர் மொய்யி வைச்சுருக்கோம்ல...அதனால உங்ககிட்ட சிரிலங்கா சதம் எல்லாம் வாங்கிட்டு சிரிலங்கா போய்ட்டு வரலாமானு யோசனை...
    ஆஹா விட்டா ஆப்பு வைச்சுருவீங்க போல...
    ஐயோ இல்லை ஜி....கீதா அங்கதான் மூணாம்ப்பு வரை படிச்சது எல்லாம்...உங்க வீடியோ எல்லாம் பாத்தவுடனே கீதாக்கு சிரிலங்கா போகணும் போல ஆசை வந்துருச்சு....அதான்..
    அதுக்கு நாந்தான் கிடைச்சேனாக்கும்.. ...ஏற்கனவே சிரிலங்கா இப்ப அழுகைலங்காவா இருந்துச்சு நான் போகும் போது.....ம்ம்ம் .நண்பர்..யாழ்ப்பாவாணனைப் புடிங்க....இல்ல தம்பி ரூபனைப் புடிங்க..
    தம்பி ரூபன் மலேஷியாவுல இல்ல உக்காந்துருக்க்து.....சரி ஜி நாங்க பாத்துக்கறோம்...ஏதோ கீதா சிரிலங்கா போணும்னு......வர்ரோம் ஜி...மொய்ய பத்திரமா பாத்துக்கங்க...
    இவிங்க என்ன மொய்ய பத்தியே பேசிக்கிட்டுருக்காங்க...அதுல ஏதோ தில்லு முல்லு இருக்கு போல.. இந்தத் தில்லையகத்துக்காரங்கள நம்பக் கூடாது....
    என்ன ஜி..அப்படி ஒரு பார்வை? மீசைய முறுக்கிக்கிட்டு.... பயமா இருக்குது..
    இல்ல இல்ல நீங்க போய்ட்டு வாங்க....உங்கள அப்புறமா கவனிச்சுக்கறேன்....
    ஹை அப்ப சிரிலங்கா, அமெரிக்கா எல்லாம் கூட்டு போறேன்றீங்க..ஒரு 10 டிக்கெட் போட்டுருங்க.....நன்றிங்க....



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க கருத்துரை மூலம் ஒரு குட்டி பதிவே போட்டீங்க... இதற்காகவே உங்களை அமெரிக்கா கூட்டிப்போவேன்.

      நீக்கு
  16. இந்தப் பயணம் மேற்கொண்டது எப்போ. இது எப்போதைய கெட் அப்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஐயா இப்படி கேட்டுப்புட்டீங்க கெட்அப் னு இது ரியல் லைஃப்...
      இது 2009 மே மாதம். பிரபாகரன் கொல்லப்பட்ட தருணம்.

      நீக்கு
  17. சிலிர்க்கதான் வைத்துவிட்டது ..‘ஸ்ரீ.....லங்கா.... நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கே சிலிர்த்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும்.

      நீக்கு
  18. ஆளைப்பார்த்தாலே கொஞ்சம் டவுட்டா தான் இருந்திருக்குமோ ?
    பத்திரமா வந்து சேர்ந்தா சரி. அழகிய இலங்கைத்தமிழ் அழிவது மிக்கவருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டவுட்டுலதானே, இப்படியாகிப் போனேன்.

      நீக்கு
  19. அப்பாடி!!! திக்கு திக்குன்னு இருக்குதுன்னா மேட்டரு!!! அசப்புல ஆண்டன் பாலசிங்கம் மாறித்தானே இருக்கீக, அதான் அலையவுட்டாணுக:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச்சொன்னீங்க அதனாலதான் சுத்துல விட்டாங்கே...

      நீக்கு
  20. இலங்கையில் 35 மணி நேரம் தங்கினீர்களா?...

    நான் 2008-ல் ஊரில் இருந்து வரும் போது ஒரு நாள் தங்கியிருக்கிறேன்... அவர்களே ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று தங்க வைத்தார்கள்... வழியெங்கும் மிலிட்டரி... அறிவிப்பு பலகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம்... கடற்கரையோர ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள்... நல்ல சாப்பாடு, காபி என கவனிப்பும் அருமை....

    மற்றொரு முறை 8 மணி நேரம் விமான நிலையத்துக்கு உள்ளேயே சாப்பாடு கொடுத்து அமர வைத்து விட்டார்கள்... வெளியில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லி...

    அருமையான ஊர்...

    காணொளி அருமை அண்ணா...

    என்னோட மனசும் பேசியிருக்கு பாருங்க... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  21. இலங்கையில் ஒரு முக்கிய தலைவர் கொள்ளப் பட்ட நேரம்.

    சந்தேகப்படும் தோற்றம்.

    தமிழன்.

    இத்தனை பிரச்சினையிலும் இலங்கையில தனியா சுத்தியிருக்கீங்க!!


    என்ன கில்லர்ஜீ !! உயிர்ப் பயம் உங்களுக்கு சுத்தமாக இல்லை போலிருக்கே!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      மரணபயம் எனக்கு எப்பொழுதுமே கிடையாது காரணம் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியாக இருக்கலாம், எனது செல்வங்கள் நானின்றி இந்த சூழ்ச்சியான உலகில் வாழமுடியும் என்ற நிலைவரை இந்தப்பாழும் நான் உலகில் இருந்தால் போதும் இதுவே எனது அவா.

      நீக்கு
  22. என்ன இப்படி திடீர்னு திரில்லர் எழுத்தாளராயிட்டீங்க ஜீ?
    இது எப்ப நடந்தது? இப்போதா? இந்தியா வந்திருக்கிறீர்களா? எவ்வளவு நாள் இருப்பீர்கள்? விமானப் பயணமெனில், வழியில் உள்ள நாட்டு நண்பர்களின் முகவரி, தொலைபேசி எண்களையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டுமோ? நல்ல (கெட்ட?) அனுபவம்தான்... மறக்க முடியாத பதிவாகி விட்டதே! இந்தியா தமிழ்நாடு வந்திருந்தால் அன்பு கூர்ந்து அழையுங்கள். தங்களை மீண்டும் நேரில் சந்திக்க ஆவல். மதுரையில் சிவப்பு ரோஜாக்கள் தொப்பியுடன் பார்த்தது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பவம் நடந்த்து 2009ல் நண்பரே இந்தியா வந்திருந்தால் ? தொடர்பு கொள்ள மாட்டேனா ?

      நீக்கு
  23. திகிலான அனுபவம் ஜி... நகைச்சுவையாக சொன்னாலும் மனம் எவ்வளவு பதறச் செய்யும் என்பது புரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி அன்று நினைத்தேன் ஆழம் தெரியாமல் காலை விட்டோமோ ? என்று.

      நீக்கு
  24. தங்கள் மீசையைப் பார்த்து அச்சப்பட்டுவிட்டார்கள். நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல் ஸ்ரீலங்கா காவல்துறையினருக்கு தங்கள் நாட்டுக்கு வருபவர்களை எல்லாம் தீவிரவாதிகள் என நினைத்துவிட்டார்கள் போலும். பதிவை வழக்காம் போல் சுவைபட எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இடைவெளி விடாமல் வருகை தந்தால் சந்தோஷமே...

      நீக்கு
  26. உங்களுடைய இலங்கை பதிவு மிகவும் பதட்டமான பதிவு. பயத்துடன் படித்து முடித்தேன்.

    வருகின்ற 6 ஆம் தேதி என்னுடைய ப்ளாக் 3rd anniversary ! அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் சகோ. Advance Thanks சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்ச உங்களுக்கே பயமாக இருந்தால் ? அப்பாவியான எனக்கு அப்படி இருந்திருக்கும்.
      அட்வான்ஸ் வாழ்த்துகளுடன் 6ம் தேதி காலை வருவேன்.

      நீக்கு
  27. ;நீங்கள் துணிவு மிக்க தனிப் பிறவி! ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தாங்கள் தவறாமல் எனது பதிவுக்கு வருவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறத. நன்றி.

      நீக்கு
  28. நீங்க அப்பவே அப்படித்தானா :)
    த ம 8

    பதிலளிநீக்கு
  29. முதலில் இந்த ஆப்பரில் போகும் பயணத்தை நிறுத்த வேண்டும் என்ற என் கோபம் அரபுலகம் ஊடக காத்து இருந்து இந்தியா போகும் நிலை!ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கோபம் நியாயமானதே நண்பரே...

      நீக்கு
  30. ஆனால் இலங்கையில் அப்படியில்லை அதுக்கான முக்கிய புள்ளிகளின் அன்பு அரவனைப்பு நன்றி சொல்லி சிலதை கொடுக்கணும் [[[[[[[[[[

    பதிலளிநீக்கு
  31. ஏன் பாஸ் இலங்கை ஊடாக போறன் என்று ஒரு வார்த்தை அங்கே பார்க்கும் இடங்கள் பற்றி தனிமையில் மெயில் போட்டிருந்தால் நல்ல முக்கிய இடத்தை பார்க்கும் வசதி செய்து இருப்பேன் நண்பா நட்புக்காக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா இது ஒரு திட்டமிடாத செயல் சொல்லிட்டீங்கள்ல..... இது போதும்.

      நீக்கு
  32. எப்படியோ இலங்கையின் நிஜவுலகம் நேரில் பார்த்த பின் உங்கள் மனசு கோபிப்பது/ கொதிப்பது போலத்தான் மீனம்பாக்கம் இறக்கத்தில் ஈழத்தவன் நிலையும் பாஸ்§

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, முன் கை நீண்டதால் முழங்கை நீள்கிறது.

      நீக்கு
  33. எப்படியோ மீசைக்கார நண்பன் இலங்கையின் நிஜம் பற்றி இன்னும் பல நாட்டுக்கு சொல்லி இருக்கின்ற பகிர்வு கண்டு சந்தோஷம்! நன்றி !வோம ஸ்தூத்தி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து விரிவான கருத்துரையும், வாக்கும் அளித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  34. நண்பரே, 2010 ஆம் ஆண்டு ஒரே ஒரு நாள் இலங்கைக்கு சென்றிருக்கிறேன் நண்பரே. விமானதளத்தில் இந்திய ரூபாயினைக் கொடுத்து இல்ங்கை பணத்தை மாற்ற முயற்சித்தேன், இந்தியப் பணத்தினையே வாங்குவதில்லை என மறுத்து விட்டார்கள். சிங்கப் பூர் பணத்தினைக் கொண்டுத்து இலங்கைப் பணத்தினைப் பெற்றேன்
    எங்கெங்கும் இராணுவம்,இராணுவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  35. ஆஹா !தங்களின் அனுபவத்தை ஹாலிவுட் காரன் பார்த்திருந்தால் இந்நேரம் ஒரு படமே எடுத்திருப்பான் . இவ்வுலகில் மனிதனின்றி பிற உயிர்கள் அனைத்தும் வாழும் . ஆனால் ஒரு எறும்பு இல்லாவிட்டால்கூட மனிதனால் வாழமுடியாது . தொடர்ந்து மனிதர்கள் வாழவேண்டுமெனில் மனிதநேயம் என்பது கண்டிப்பாக தேவை .

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ,ஃபிளைட் சூடாறிப்போச்சே நம்ம ஆளைக்காணோமேனு நினைச்சுக்கிட்டே இருந்தேன். அருமையான வாழ்வியல் உண்மையை சொன்னீங்க நண்பா... நன்றி.

      நீக்கு
  36. ஏதோ ஆங்கிலத்திரைப்படம் பார்ப்பதுபோல இருந்தது. அந்த நிலையிலும் தாங்கள் துணிச்சலாக எதிர்கொண்ட விதம் ஆச்சர்யமாக இருந்தது. அதுசரி, வித்தியாசமான தமிழ்ச்சொற்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள். கில்லர்ஜி அகராதி என ஒரு அகராதியே தாங்கள் போடலாம் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரும் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டிற்க்கும் நன்றி ஏதோ எனக்குத் தெரிந்தவைகளை வித்தியாசமாக எழுத முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  37. புனிதனாக வேண்டாம் சராசரி மனிதனாக இருப்போம்-உண்மையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  38. என்ன ஒரு அனுபவம் சகோ, பத்திரமாக வந்தீர்களே, மகிழ்ச்சி!
    ஆமாம் இனம், மொழி, மதம்,நாடு எல்லாம் கடந்து மனித நேயம் இருக்கத்தான் செய்கிறது.
    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதும் அவர்களைப் போன்றவர்களுக்காகத்தான்.

      நீக்கு
  39. வணக்கம் சகோதரரே.!

    பதிவை படிக்க, படிக்க முடிக்கும் வரை ஒரே பரபரப்பாகத்தான் இருந்தது. எப்படித்தான் பயமில்லாமல் தைரியமாக சமாளித்து, நாடு திரும்பினீர்களோ.? உங்கள் தைரியத்திற்கும் பாராட்டுக்கள்.!

    ஆனால், மனித நேயமுள்ளவர்கள் எந்த நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை தங்கள் மூலம் உணர முடிகிறது..

    இறைவன் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்க பரிபூரணமாக பிராத்திக்கிறேன்..
    அடுத்து அமெரிக்கா பயணத்தில் என்ன திக்.. திக்...அனுபவங்களோ.?

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் மனிதநேயம் உள்ளவர்கள் அனைத்து நாட்டிலும் இருக்கின்றார்கள் இதுதான் இறைவனின் செயல்.
      விரைவில் அழைத்துச்செல்கிறேன் அமெரிக்கா.

      நீக்கு
  40. பெயரில்லா7/19/2015 4:14 PM

    ஓ! இதொன்றும் புதினமல்ல...
    இது தான் இலங்கை...
    பயம்!...பயம்!...பயங்கரம்...

    பதிலளிநீக்கு
  41. ஒரு கணம் நீங்களும் அனுபவித் திருக்கிறீர்கள்.ம்...ம் எங்கள் துயரம் எப்படிப் பட்டது என்பதை கொஞ்சம் புரிந்திருப்பீர்கள் இல்லையா . ம்..ம் எப்படித் தவறவிட்டேன் இதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ வேதனையாகத்தான் இருந்தது, இருக்கிறது.

      நீக்கு
  42. உணர்வுள்ள தமிழரான உங்களை அவர்கள் உயிரோடு விட்டதே பெரிது. ஆனால் அதற்காக, "இனி இப்படிப்பட்ட விபரீத விளையாட்டுக்களில் இறங்காதீர்கள்" என்று சொல்ல மாட்டேன். காரணம், அப்படி நான் சொன்னால் நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள் என எனக்குத் தெரியும். அதை நான் படிக்க விரும்பவில்லை. தமிழராக இருந்து கொண்டு சிங்கள அலுவலர்களிடம் இவ்வளவு வாயாடியிருக்கும் உங்கள் வீரத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது மனதில் மரணபயம் சிறிதளவில் எட்டிப் பார்த்தது(ம்)உண்மையே..

      நீக்கு
    2. அப்படியே இருந்தாலும், அதை இப்படி வெளிப்படையாகப் போட்டு உடைக்கவும் ஒரு துணிச்சல் வேண்டுமே!

      நீக்கு