தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 16, 2022

ஜாதிகள் உள்ளதடி டாப்பா 1

மது தமிழ்ப்பெண்கள் தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும், திருணத்திற்குப் பிறகு கணவனின் பெயரையும் சேரத்துக் கொள்வது வழக்கம் இது சட்டப்படி சான்றிதழ்களிலும் சேர்ந்து விடுகின்றது ஆனால் அரேபியப் பெண்கள் கடைசிவரை தந்தையின் பெயரையே வைத்துக் கொள்கின்றார்கள் இந்த மாறுதலுக்கு காரணமென்ன ? என்று நான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு எனது மொட்டைத் தலையை தடவிக்கொண்டே யோசித்தேன் கிடைத்த விடை இதுவே.

கலைச்செல்வி நாகராஜன் என்ற பெயர் திருமணத்திற்கு பிறகு கலைச்செல்வி கில்லர்ஜி என்று மாறி வாழ்ந்து மரணகாலம்வரை அப்படியே இருந்து மறைந்தும் விட்டது இது நமது கலாச்சார முறை.

தமிழ்ப் பெண்கள் திருமணம் முடிந்ததும் தனது கடைசி காலம்வரை கணவனே துணை என்ற நிலைப்பாடே மேலோங்கி இருக்கின்றது. அதேநேரம் அரேபியப் பெண்களின் சூழல் வேறு தனது கணவன் தனக்குப் பிறகும் எத்தனை பெண்களை திருமணம் செய்வான் ? என்பதை தீர்மானிக்க முடியாதது மட்டுமல்ல, நம்மையும் எப்பொழுது விவாகரத்து செய்வான் என்பதையும் தீர்மானத்துக்குள் கொண்டு வரமுடியாது தன்னை அவன் விவாகரத்து செய்து விட்டான் என்பதற்காக இவர்களும் தனது வாழ்வு முடிந்து விட்டது என்று ஒருபோதும் நினைப்பது இல்லை.

விவாகரத்துக்காக தனக்கு சட்டப்படி வரவேண்டிய பாகத்தை பெற்றுக் கொண்டு இருவருமே யாரையும் எதிரியாக கருதாமல் ஒதுங்கி விடுவதோடு தானும் அடுத்த திருமணத்திற்கு தயாராகின்றாள். இதை ஆண்வர்கமும் அவள் முகத்தில் ஆசிட் அடிக்காமல், நமது தமிழ்ப்பண்பாடு போல அவள் தகுதி குறைந்தவள் என்று நினைப்பதில்லை. அவளை திருமணம் செய்யவும் ஒருவன் தயாராக காத்திருக்கின்றான். அங்கு இருவருக்கும் மீண்டும் வாழ்வு தொடங்குகின்றது அடுத்தும் விவாகரத்தாகி மீண்டும் மூன்றாம் நிலைக்கும் ஆயத்தம் ஆகலாம் என்பதும் உண்மை. இதில் இருவருமே வெட்கப்படுவதில்லை காரணம் ஒட்டு மொத்த சமூகமும் இப்படி என்பதே...

இதன் காரணமாக பெண்கள் கணவனின் பெயரை பின்னால் சேர்த்துக் கொள்வதில்லை எப்பொழுது வேண்டுமானாலும் பெயரை எடுக்க வேண்டிய நிலை வரலாம் பிறகு சான்றிதழ் மாற்றுவதில் குழப்பங்கள் வரும் அதேநேரம் பிறந்த நாள்முதல் மரணகாலம் வரை தந்தையின் பெயரை மாற்ற முடியாது என்பதும் உண்மையே ஆனால் ஜாதியின் பெயர் கண்டிப்பாக இடம் பெறும்.

நண்பர்களே... குழப்பமாக இருக்கின்றதா ? அரபு நாட்டில் மதம் மட்டும்தானே ? இதென்ன ஜாதி ? உண்டு நண்பர்களே... ஆம்.

நம் நாட்டில் ஐயர், செட்டியார், ஆச்சாரி, நாடார், தேவர், முதலியார், கோனார், வெள்ளாளர், வண்ணார், பள்ளர், பறையர், சக்கிலியர், ஊடகழி, மள்ளாங்கி, பொடுங்கி, கோவண்ணா, கருவா, காருவா, மடக்கு, மாடக்கூ என ஜாதி என்று பெயர் சூட்டி பிரித்து வைத்து இருப்பதுபோல் அரபு நாட்டிலும் (الطائفة) அல் தாயிஃபாத் என்ற பெயரில் அல்நஹ்யான், அல்ருமேத்தி, அல்ஹமாதி, அல்அலி, அல்மன்ஸூரி, அல்ஜாஆஃபி, அல்மர்ஜூக்கி, அல்முல்லா, அல்ஜர்ரோனி, அல்மெஹ்ரி, அல்காத்ரி, என்று சுமார் அருபத்து எட்டு (68) பிரிவுகள் இருக்கின்றது.

மேலும் நமது நாட்டில் பெயருடன் ஜாதிப்பெயரை எழுதுவது குறைந்து வந்ததது. இப்பொழுது மீண்டும் தலை எடுக்கிறது.... அங்கு தனது பெயருடன் தந்தை பெயரும், தாத்தா பெயரும், முடிவில் ஜாதிப்பெயரும் எழுத வேண்டும் சாதாரணமாக அவர்களின் பெயரை பேப்பரில் எழுதி முடித்தால் ஆறு இஞ்ச் நீளம் வரும் முடிவில் ஜாதிப்பெயர் கண்டிப்பாக வரும்.

புதிதாக இரண்டு நபர்கள் சந்திக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம் சலாம் சொல்லி முடித்தவுடன் பெயரைக் கேட்டதும் அஹமத் என்று சொன்ன பிறகு இவன் கேட்பான் அஹமத்.... என்ன.... ? என்று இழுப்பான் உடன் இவன் சொல்வான் அஹமத் முஹம்மத் ஜாபர் ஹஸைன் அல்ஹமாதி என்று உடன் அவனுக்குள் சட்டென இணக்கம் வந்து விடும் காரணம் அவனும் அல்ஹமாதி அல்லவா !

நமது ஊரில் முகம் தெரியாத நபரை சந்தித்து உரையாடும் பொழுது கேட்போமே...
நமக்கு எந்த ஊரு ?
தேவகோட்டை.
நீங்க.... என்ன ஆளுக.... ?
நாங்க ஊடகழி.
அப்படியா ? ரொம்ப சந்தோஷம் நெருங்கி வந்துட்டீங்க... ஹா ஹா ஹா
 
இந்த அமீரகத்தை உருவாக்கி உயர்த்திய மறைந்த மன்னரின் பெயர் இதோ...
ஷேக் ஸையித் பின் சுல்த்தான் அல் நஹ்யான்
இதில் ஷேக் என்றால் மன்னர் என்று பொருள்.
இன்றைய மன்னரின் பெயர்
ஷேக் கலீஃபா ஸையித் பின் சுல்த்தான் அல் நஹ்யான்.

அதேபோல் ஜாதியில் ஏற்றத்தாழ்வும் உண்டு சம்பளத்திலும் ஏற்ற இறக்கம் உண்டு உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு சம்பளமும் கூடுதல் வேலையும் குறைவு சிலர் வேலை செய்யவே மாட்டார்கள் ஒருவேளை மேலாளர் தாழ்ந்த ஜாதியாக இருக்கும் காரணத்தால் கேட்கவும் முடியாது.

எனது அலுவலகத்தில் நடந்த அனுபவம் ஒன்று.

தொடரும்...

56 கருத்துகள்:

  1. ஜாதிகள் உள்ளதடி பாப்பா

    அமெரிக்காவிற்குள்ளும் நம் ஜாதிகள் உள்ளதடி பாப்பா
    ஜாதிகள் மட்டுமைல்லை சாதிய சங்கங்களும் உள்ளன பாப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எங்குதான் இல்லை இந்த ஜாதி அரக்கன் ?

      நீக்கு
  2. அப்படீன்னாக்க, அரபிகளைத் தவிர மற்ற முஸ்லீம்களை அரபிக்கள் மதிப்பதில்லை என்பது உண்மைதான்.

    இங்குமே ஷாருக்கான், சல்மான்கான்.. போன்ற பலர் தாங்கள் ஒரஜினல் முஸ்லீம் வழித்தோன்றல் என்றும் இந்தியாவின் மற்ற முஸ்லீம்கள் மாற்றப்பட்டவர்கள் என்பதால் தங்களுக்கு இணையில்லை என நினைப்பதும் உண்மைதான் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கூற்றை ஆச்சர்யத்தோடு ரசிக்கின்றேன்...

      நீக்கு
  3. அங்கு 68 சாதிகளா?  சீக்கிரமே பல்கிப் பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  4. கேரளத்தில் ஒரு வழக்கமுண்டு.  அவர்கள் தங்கள் வீட்டுப்பெயரை வைத்தி இனிஷியலை வைத்துக் கொள்கின்றனர் -  ஆண், பெண் இருபாலாருமே.  சில வழக்கங்களில் தாய் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வோர் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி ஊரின் பெயரையும் வைத்தார்களே...

      மாத்தூர் கோபால் மேனன் ராமச்சந்திரன். MGR

      நீக்கு
  5. இங்கும் இப்போதெல்லாம் திருமணமானதும் உடனே கணவர் பெயருக்கு இனிஷியலை மாற்றிக் கொள்வது குறைந்து வருகிறது.  என் அலுவலகத்திலேயே ஒரு பெண் தன் தகப்பனாரின் பெயரைத்தான் இனிஷியலாக வைத்துள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இங்கும் விவாகரத்துகள் பெறுகி விட்டதே.

      நீக்கு
  6. என் பாஸுக்கு எப்படியும் S தான் இனிஷியல்!  அவர் தந்தை பெயர் முதலெழுத்தும் S தான் என்பதால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்ஷியலை தமிழில் எழுதப் சொல்லுங்கள் ஜி ஹா.. ஹா..

      நீக்கு
  7. ம்ம்ம்ம், ஆச்சரியமான விஷயம். பொதுவாக எல்லா மேல்நாடுகளிலும் இந்த ஜாதிப்பிரச்னை தெரிந்தும்/தெரியாமலும் இருந்து தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. திருமணம் ஆனதும் பெண்ணிற்குத் தானாகவெல்லாம் கணவன் பெயரைச் சேர்த்துவிட முடியாது. போட்டுக்கலாம். ஆனால் அது சட்டரீதியாக மாற்றுவதற்குக் கெஜட்டில் விளம்பரம் கொடுத்துப் பெயரை மாற்றிக்கொண்டே எனத் தெரிவிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ அப்படியா ? எனக்கு இது புதிய விடயம் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  9. எனக்குத் திருமணத்திற்குச் சில மாதங்கள் முன்னரே வேலை கிடைத்திருந்தாலும் போஸ்டிங் ஆகவில்லை. அதற்குள் திருமணம் ஆகிச் சென்னையும் வந்து விட்டேன். அதன் பின்னர் பரமக்குடியில் போஸ்டிங் ஆனதைச் சென்னைக்கு மாற்றிக் கொண்டேன். அப்போது முதல் நாள் அலுவலகம் சென்று வேலையில் சேர்ந்ததற்கான படிவத்தில் கையெழுத்துப் போடும்போது கல்யாணம் ஆகிவிட்டதால் "கீதா சாம்பசிவம்" எனக் கையெழுத்திட்டு அனுப்பினேன். அலுவலகத்திலும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மறுநாளே அந்தப் படிவம் திரும்பி வந்துவிட்டது. நாங்கள் தேர்ந்தெடுத்தது என்.ஆர்.கீதாவைத் தான். கீதா சாம்பசிவம் அல்ல. எனச் சொல்லிப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழில் உள்ள பெயரில் கையெழுத்திடச் சொல்லியும் அறிவுரை கூறி இருந்தார்கள். இதில் என் கணவருக்கு என்னைவிடக் கோபம். பின்னர் அவர் அலுவலகத்திலும் விசாரித்ததில் தான் இது தெரிய வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் என்ன பெயரில்/என்ன வயசில் இருக்கோமோ அதைத் தான் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியாக அது தான் செல்லும் என்பது எல்லாம். அதன் பின்னர் அலுவலக ரீதியாக எனக்கு என்ன கடிதம் வந்தாதும் திருமதி என்.ஆர்.கீதா என்றே பெயரிட்டு வரும். பல தேர்வுகளுக்கும் அப்படித் தான் பெயரைக் கொடுத்திருக்கேன். மாற்றி கீதா சாம்பசிவம் எனக் கொடுத்தால் அது திரும்பி வந்துடும். இப்போவும் ஆதார் கார்டிலே திருமதி என்.ஆர்.கீதா தான். பாஸ்போர்ட்டிலும் அது தான். கையெழுத்து எப்படி வேணாலும் போடலாம் என்பதால் "கீதா சாம்பசிவம்" என்றே போடுவேன். அதையும் பாஸ்போர்ட் புதிப்புக்கும்போது ஆக்ஷேபம் தெரிவித்தார் அங்கே இருந்த பெண்மணி. பின்னர் மேலதிகாரிகள் வரை போய் இந்தப் பெயரும் கையெழுத்தும் செல்லும் என அவங்க சட்டரீதியாக எடுத்துச் சொன்னபின்னர் ஒத்துக்கொண்டு புதுப்பித்தார்கள். ஆதாரிலும் நம்மவர் என் பெயரை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவங்க இன்னமும் என்.ஆர்.கீதா என்றே குறிப்பிடுகிறார்கள். பான் கார்டை ஆதாருடன் இணைக்கையில் பிரச்னை வந்தாலும் பின்னர் எப்படியோ சமாளித்து இணைத்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. பலருக்கும் பயன்படும் தகவல்கள்.

      நீக்கு
  10. இன்னமும் எனக்கு வயசு சட்டரீதியாகக் கூடுதல் தான். எஸ்.எஸ்.எல்.சி. பரிக்ஷையின் போது பதினைந்து வயது முடியாததால் அப்பா எனக்குப் பிறந்த வருஷம், தேதி, மாதம் எல்லாவற்றையும் ஒரு வருஷம் முன்னால் மாற்றிக் கொடுத்துவிட்டார். ஆகவே அது தான் பாஸ்போர்ட், ஆதார் கார்ட் எல்லாவற்றிலும் கொடுக்கும்படி ஆயிற்று. மாற்ற வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் வேண்டும். அப்போல்லாம் பிறப்புச் சான்றிதழில் அவ்வளவாக அக்கறை காட்டாததால் கிடைக்கவில்லை. எங்க குழந்தைகளுக்கு நாங்க வாங்கி வைச்சுக் கொண்டோம். பின்னாட்களில் அவங்களுக்குப் பயனும் தந்தது. அதோடு அவங்களைப் பள்ளியில் சேர்க்கையில் பிறப்புச் சான்றிதழும் கட்டாயமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்பொழுது எல்லா சான்றிதழ்களும் அவசியமான விடயமே...

      நீக்கு
  11. ஜாதி/சாதி - தமிழ்ச்சொல் கிடையாது... கயமைக் கூட்டம் செய்த வேலை அது...

    ஆனால் இங்கு தமிழ்நாட்டில் 99 சதவீதம், பெயரில் சேர்ந்து இருக்காது...

    பதிலளிநீக்கு
  12. ஜாதிப்பெயர் இல்லாமல் முன்னால் எல்லாம் பெயர்கள் இருந்தது இல்லை. மயூரம் வேதநாயகம் பிள்ளை/மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை/உ.வே.சாமிநாத ஐயர்/இவரை ஐயரவர்கள் என்றே சொல்லுவார்கள். ஏ.ராமசாமி முதலியார், ஏ.லக்ஷ்மணசாமி முதலியார் (சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்) இருவரும்
    இரட்டையர்களும் கூட. கோபால கிருஷ்ண பாகவதர், செம்மங்குடி ஶ்ரீநிவாச ஐயர், மதுரை மணி ஐயர், சூரியநாராயண சாஸ்திரிகள், காமராஜ நாடார் (பின்னாட்களில் நாடாரை விட்டு விட்டார்). ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனப் பலர் ஜாதிப்பெயரைத் தங்கள் பெயரோடு இணைத்துத் தான் இருந்தனர். ஆனால் பின்னால் அதெல்லாம் மாறியது அறுபதுகளில் எனலாம். ஆனால் முன்னால் எல்லாம் இப்படி ஜாதிப்பெயரை இணைப்பதை கௌரவமாகக் கருதினார்கள். அதோடு ஜாதிப்பெயரால் அழைப்பதை மரியாதையாகவும் கருதினார்கள். வெறும் பெயரைச் சொல்லி அழைப்பதை கௌரவக்குறைவு எனவும் மரியாதைக்குறைவு எனவும் கருதினார்கள். திருவள்ளுவர் என்னும் பெயரே அவருடைய ஜாதியைக் குறிப்பது தானே! இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்து உண்மையே.... இன்று மீண்டும் அனைவரும் ஜாதியை விரும்புகின்றார்கள்.

      நீக்கு
    2. வள்ளலார் சரிதம் படிச்சிருக்கீங்களா கில்லர்ஜி? அதில் ஒருவருக்கொருவர் பிள்ளைவாள், முதலியார்வாள், ஐயர் வாள் எனக் கூப்பிட்டுப் பேசிக் கொள்வார்கள் என்பதைப் படிக்க நேரலாம்.ஜாதிபெயரில் அழைக்கப்படுவது அந்த நாட்களில் கௌரவமான விஷயம்.

      நீக்கு
    3. நான் படித்ததில்லை ஆனால் கேள்விப்பட்டுள்ளேன்.

      நீக்கு
  13. மேலும் தியாகராஜன் செட்டியின் பெயரை வைத்துத் தான் சென்னைத் தி.நகர் எனத் தற்போது அழைக்கப்படும் தியாகராய நகர் உள்ளது. அங்கே கோபதி நாராயணச் செட்டியின் பெயரால் விளங்கும் தெரு/சாலையைத் தற்சமயம் ஜி.என்.செட்டி ரோடு என்கின்றனர். மற்றத் தெருக்களில் பெயருடன் கூடிய ஜாதிப் பெயரை நீக்கிய அரசால் இப்படிச் சிலத் தெருக்கள்/சாலைகளில் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்க முடியவில்லை. ஆனால் டிடிகே சாலை மட்டும் டிடி.கிருஷ்ணா சாலை என மாற்றப்பட்டது. அதில் உள்ள "சாரி"என்பதை நீக்கிவிட்டார்கள். இதற்கும் நிறைய உதாரணங்கள் உண்டு. :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாதியை ஒழிக்க மக்கள் நினைத்தாலும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

      நீக்கு
  14. தொகுதிகளில் பெரும்பான்மை ஜாதிகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசுகள் ஜாதி பார்ப்பதில்லை என்பது நகைமுரண்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மக்களும் நல்லவனுக்கு வாக்களிப்பதில்லை.

      தனது ஜாதிக்காரனை பார்த்தே வாக்களிக்கின்றார்கள்.

      நீக்கு
  15. கில்லர்ஜி பெரும்பான்மையான எல்லா நாடுகளிலும் ஜாதிகள் இருக்கத்தான் செய்கிறது. வெளியில் தெரிவதில்லை அல்லது நமக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்தியாவில் ஜாதி தலைதூக்கி இருக்கிறது என்று ஏதோ ஊர் உலகத்தில் இல்லாதது போல நாமே நம்மைத் தாழ்த்தி வெளியில் காட்டிக் கொள்கிறோம் என்றே எனக்குச் சில சமயம் தோன்றும்.

    கேரளத்தில் பெரும்பாலும் பெண்கள் திருமணத்திற்குப் பிறகும் அப்பா பெயரைத்தான் இனிஷியலாக வைத்துக் கொள்கிறார்கள். ஆண்களின் பெயரில் பெரும்பாலும் ஊர்ப் பெயர்/குடும்பப் பெயர் வந்துவிடும். அங்கு பெண்கள் அம்மாவின் பெயர் இனிஷியல் கூட வைத்துக் கொள்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எங்கும் ஜாதி இருக்கிறது ஆனால் நாம் மட்டும் அதை உயிராக நினைக்கிறோம்.

      நீக்கு
  16. அங்கும் கூட ஜாதி இருக்கிறது என்பது ஆச்சரியம் தான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் ஆச்சர்யம் இருக்கிறது.

      நீக்கு
  17. இத்தனை நேர்த்தியாகச் சொல்வதற்குத் தங்களால் மட்டுமே இயலும்..

    தொழுகையில் மட்டுமே ஒன்றாக நிற்பது.. மற்றபடிக்கு
    உயர்ந்த மரியாதையாகிய முத்தமிட்டுக் கொள்வதில் கூட இனத்துக்கு இனம் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதெல்லாம் இங்குள்ளவர்கள் அறியாதது..

    நாம் சொன்னால் கூட அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..

    நாற்பது வயதிலும் திருமணம் முடிக்காமல் வாழ்கின்ற பெண்கள் நிறைய பேர்..

    எகிப்திய பெண்களை மணந்து கொள்வது மட்டுமே அராபியர்களுக்கு எளிது... அரபிப் பெண்கள் எகிப்திய ஆண்களை விரும்புவது என்பது அபூர்வம்...

    இதற்கிடையில் பங்களாதேஷிகளும் நம்மூர் கோணங்கிகளும் அவர்களுக்கு தூசிக்குச் சமம்!..

    நீங்கள் வெளுத்துக் கட்டுங்கள் ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கும், கருத்து பங்களிப்புக்கும், மேலதிக தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  18. இங்குள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் அரபு தேசங்கள் என்றால் ஆகா.. ஓஹோ.. என்று.. ஆனால், நாட்டுக்குள் வராமல்
    பாலைவனத்திலேயே வாழ்ந்து மடியும் பூர்வ குடிமக்களைப் பற்றியும் சொல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி தாங்கள் கூறும் காட்டரபிகளைப்பற்றியும் பிறகு கண்டிப்பாக எழுதுகிறேன்.

      நீக்கு
  19. இது இப்போது தவிர்க்கமுடியாததாகிவிட்டது என்பதைவிட அவ்வாறு ஆக்கிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  20. பல கோப்புகள் (pdf) உள்ளன... வலைத்தள பதிவாக தேடியதில் ஒன்றின் இணைப்பை தந்துள்ளேன்... மற்றபடி சுருக்கமாக :-

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்

    https://www.vinavu.com/2019/06/28/a-brief-history-of-caste-system-hinduism-and-tamil-literature-division-of-labour/

    பதிலளிநீக்கு
  21. எல்லா நாட்டிலும் இந்த பிரிவினைகள் உண்டு. இங்கே அது அரசியல் ஆதாயத்திற்காக அதிகம் பயன்படுகிறது. இந்த விஷயத்தை வைத்தே கல்லா கட்டும் அரசியல்வாதிகள் இங்கே தான் மிக மிக அதிகம். அவர்கள் ஆட்டுவித்த படி ஆடுவதற்கு நம் மக்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மிக்க சரியாக சொன்னீர்கள். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. சாதிகள் உள்ளதுதடி பாப்பா என்று தான் சொல்ல வேண்டும்.
    சாதி மதம் எல்லாம் இப்போது உள்ள குழந்தைகள் பார்க்காமல் ஒற்றுமையாக வாழ்ந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பள்ளி குழந்தைகளிடம் முன்பு கிடையாது ஆனால் இப்போது இருக்கிறதே...

      நீக்கு
  23. உங்கள் பதிவு எல்லா நாட்டிலும் சாதிகள் இருக்கிறது என்று சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எங்குதான் இல்லை ? வெங்கட் ஜி அவர்கள் சொல்வது போல் நமது அரசியல்வாதிகளுக்கு லாபம்.

      நீக்கு
  24. பாரதி பாடிவிட்டு போனார் நிலமையோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  25. முஸ்லீம் மதத்தில் ஜாதி இல்லை என்று நிணைத்திருந்த என் எண்ணத்தில் கடல் அலை புகுந்து விட்டது..நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படியா ? நாளையும் வாருங்கள்.

      நீக்கு
  26. அரபு நாட்டில் ஜாதிகள் வியப்பைத் தருகின்றன.
    நம் நாட்டில் படித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் , தந்தையின் பெயரைத்தான் பயன்படுத்துகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  27. நம் நாட்டில் ஜாதிகள் உள்ளதடி பாப்பா என்பது சரிதான். ஆனால் அது பிற நாடுகளிலும் உள்ளது என அறிந்து வியப்புற்றேன். இப்போதெல்லாம் நம் ஊர் பெண்கள் திருமணத்திற்கு பிறகும் தன் பெயருக்குப் பின் வரும் தந்தை பெயரை மாற்றுவதில்லை.காரணம் திருமணத்திற்கு முன்பே கடவுச்சீட்டு முதல் ஆதார் அட்டை வரை தந்தை பெயர் உள்ளதால் தான். மேலும் நீங்கள் சொல்வதுபோல் இங்கும் விவாகரத்து ஆனால் திரும்பவும் பெயரை மாற்றவேண்டும் என்பதூம் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு