தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 01, 2022

உள்ளதெல்லாம் பொய்

  நான் பல பெண்களிடமும் பார்த்து விட்டேன் தனக்கு அகவை கூடுவதை ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த எண்ணம் எல்லா வயது பெண்களிடமும் இருக்கிறது. ஒரு பெண்ணின் வயதை பார்வையிலேயே கணித்து விடலாம் மேலும் அவர்களது மக்கள், பெயரன், பெயர்த்திகள் இருந்தால் அதனை வைத்தும் ஓரளவு கணித்து விட முடியும்.
 
சில பெண்கள் தனது மக்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் தன்னை இளமையானவர்களாகவே நினைக்கின்றார்கள். மனதை இளமையாக வைத்துக் கொள்வதில் தவறேயில்லை. அது நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கைக்கும் நல்லதே... அதே நேரம் தான் அம்மாயியாக, அப்பத்தாவாக, ஏன் பாட்டியாக ஆனாலும்கூட ஏற்பதில்லை.
 
கீழ்காணும் காணொளியில் வெசய் தொலைக்காட்சியில் நாயா ? பேயா ? என்ற நிகழ்ச்சி நடத்தி கலாச்சாரக் கொலைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த வெங்கலச்சிறுக்கி இளைய தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம். பிறர் வீட்டு சின்னக் குழந்தைகள் தன்னை மம்மி என்று அழைக்க வேண்டுமாம், அல்லது பெயரைச் சொல்லி அழைக்கணுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் எதிர்காலத்தில் மரியாதையாக வளரும் வளரட்டும்...
 
இவர்களுக்கு வருமானம் வருகிறது என்பதற்காக புரட்சிப் பெண்டிர்களை வைத்துக் கொண்டு அவர்களது மானத்தை காற்றில் பறக்க விடுகின்றார்கள். இது இந்த முடுமைகளுக்கு தெரிவதில்லை. காரணம் நாமும் உலகம் அறிய தொலைக்காட்சிகளில் வருகிறோம் என்ற குறுகிய மனப்பான்மையின் போக்கு இங்கு ஒரு பெண்மணி தனது பெயரன், பெயர்த்திகள் தன்னை மம்மி என்று அழைப்பதையே விரும்புகின்றாராம். அப்படியானால் அவரது மருமகனோ, அல்லது மகனோ அவருக்கு என்ன உறவு ?
 
தன்னை பாட்டி என்று அழைப்பதை விரும்பாத ஜென்மம் தனது மக்களை திருமணம் செய்து கொடுக்காமல் வைத்து இருக்கலாமே... இல்லை எனில் தான் பிள்ளை பெறாமலே இருக்கலாமே... இல்லை தானே திருமணம் செய்யாமல் இருக்கலாமே... இளமை மாறாமல் கன்னியாகவே காலத்தை கடத்தலாம் இப்பொழுதுதான் திருமணத்துக்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நமது சமூகப் போராளி குசுப்பு சொல்லி விட்டாரே... இதை நாம் தவறென்று தட்டிக் கேட்கவில்லையே... அதனால்தானே தேர்தலில் நிற்கும்போது அவரது திருமுகத்தை காண கூட்டம், கூட்டமாக வெயிலில் காத்து நின்றோம்.
 
சமீபத்தில் சமூக சீர்திருத்தவாதி திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் உள்ளதெல்லாம் பொய் என்ற நிகழ்ச்சியில். வரும் நாற்பத்து ஐந்து வயது பெண் பதினேழு வயது பையனை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகின்றாள். அவளுக்கு இருபத்தி இரண்டு வயதில் பெண்ணும், இருபது வயதில் பையனும் இருக்கிறார்களாம். நமது நீதி தேவதை விசாரணையில் உனது வயது என்ன ? என்று கேட்கும்போது முப்பத்தி இரண்டு என்று சொல்லுகிறாள். பையனின் குடும்பம் தனது மகனை அவளிடமிருந்து விடுவிப்பதற்காக இந்த நீதி மன்றம் வந்து இருக்கின்றார்கள்.
 
இங்குகூட அவளது வயதை குறைத்து கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறாள் ஆளைப்பார்த்தால் எனது ஊடுறுவும் விழிகளுக்கு ஐம்பத்தி இரண்டாகவே தெரிந்தது என்பது வேறு விடயம். அட கொங்காக்சிறுக்கிகளா... திரைப்படக் கூத்தாடிகள்தான் தனது பட வாய்ப்புக்காக வயதைக் குறைத்து கூறுகின்றார்கள் என்றால் மேல் மட்டம் முதல் அடித்தட்டுவரை மக்களின் மனநிலை இப்படி பிற்போக்காகவே இருக்கிறதே... நமக்கு எப்போது முற்போக்கான சிந்தனைகள் வரும் ? நான் இன்றளவும் சரி எம்மிடம் வயதைக் கேட்டால் ? சற்றும் தயக்கமின்றி முப்பத்தி ஒன்றை தாண்டி விட்டதாக செவுட்டில் அடித்து சொல்கிறேனே....
 
Chivas Regal சிவசம்போ-
இவருக்கிட்டே வயதை கேட்டால் செவுட்டில் அடிப்பார் போலயே...
 
காணொளி

48 கருத்துகள்:

  1. ஹா..  ஹா..  ஹா...  வயதாவதை யார்தான் விரும்புகிறார்கள்?  ஏதோ என் போன்றவர்கள் எல்லாம் எங்கள் வயதை சரியாகச் சொல்லி விடுகிறோம்.  எனக்கு இருபத்தேழு முடிந்து இருபத்தெட்டு தொடங்குகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இப்பொழுது உங்கள் மகனின் வயதை யார் கேட்டது ?

      நீக்கு
  2. சொல்வதெல்லாம் உண்மை இன்னமுமா பார்க்கிறீர்கள்?  அந்நேரத்தில் வேறு நல்ல வேலை பார்க்கலாம், இல்லை, தூங்கலாமே ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதைப் பார்ப்பவன் என்று நினைக்கின்றீர்களா ? தொலைக்காட்சியே கிடையாது.

      நீக்கு
  3. குசுப்பு அப்படிச் சொன்னார்.  அதற்கு முன்னாலேயே ஒரு பெரியவர் திருமணத்துக்கு பின்னரும் கூட பெண்கள் எப்படி வேணும்னாலும் வாழலாம்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரவர் ? இப்படி சொன்னவர் பெரியவரே இல்லையே... ஜி

      நீக்கு
    2. அட? அந்தப்பெரியவரின் மண் எனத் தமிழகத்தை எல்லோரும் சொல்லுவாங்களே! உங்களுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் தான் கில்லர்ஜி. அவர் அது மட்டுமா சொல்லி இருக்கார்? பெண்களைத் தாலி கட்டிக்காதீங்கனும் சொல்லி இருப்பதோடு ஒருவரோடு மட்டும் வாழக் கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்காரே! என்ன போங்க! இது தெரியலையே உங்களுக்கு! :(

      நீக்கு
    3. வருக சகோ புரிந்து விட்டது எனக்கு பெரியாரின் பல கருத்துகளில் இன்றளவும் உடன் பாடில்லை.

      பெரியவர், உயர்ந்தவர் என்பதற்காக அவர்களது எல்லா கருத்துகளையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

      நீக்கு
  4. யாராவது தவறாக நம் வயதை அதிகமாக்கிக் கூறும்போதுதான் உண்மை வயதைச் சொல்லத் தோன்றும். பதிவின் கடைசி வரியான, முப்பத்தி ஒன்றைத் தாண்டிவிட்டேன்-- சூப்பர். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நான் சொல்வதெல்லாம் உண்மை.

      நீக்கு
  5. பின்னூட்டம் போடுவதே தலைவியாகிவிட்டது, புது கருத்துப் பெட்டியில். 30 வருடத்துக்கு முன்பே அம்மம்மா, அப்பப்பா சகஜம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கருத்துப்பெட்டி எல்லா தளங்களிலும் கஷ்டம்.

      நீக்கு
    2. அப்படி ஒண்ணும் கஷ்டமாகவெல்லாம் இல்லை. வசதியாவே இருக்கு.

      நீக்கு
    3. பழையது போல் பெட்டியில் எழுதி பார்த்த பிறகு வெளியிட முடியவில்லையே...

      நீக்கு
    4. அதனால் என்ன? பெட்டிக்குப் பதிலாக ஒரு கோடு. கோட்டின் மேல் எழுதிப் பழக்கப்பட்டிருப்போமே பள்ளி நாட்களில். கையெழுத்து நோட்டில் தினம் தினம் சின்னக் குழந்தைகள் மாதிரி எங்க பள்ளியில் எழுதிப் போய்க் காட்டணும். இதுவும் அது போலத் தான். பார்த்த பின்னரே நான் வெளியிடுகிறேன் தினமும்.

      நீக்கு
    5. எனக்கு அலைபேசியில் கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
  6. ஏதோ ஆண்கள்லாம் உண்மை வயசைச் சொல்வதுபோலச் சொல்றீங்க. நான் ஶ்ரீராமைப் பார்த்தபோது என் உண்மை வயசான 22ஐச் சொன்னால், அவர் உடனே அவர் வயதைக் குறைத்து என் வயசுதான்னு அநியாயபாச் சொல்றார்.

    பதிலளிநீக்கு
  7. நம்ம வெங்கோலன் சொல்லாத பொய் உண்டா...? போடாத வேசம் உண்டா...?

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    ஆகா. பதிவு அருமை.காணோளி பிறகு கேட்கிறேன்.

    /நான் இன்றளவும் சரி.. என்னிடம் வயதை கேட்டால் சற்றும் தயக்கமின்றி முப்பத்திரண்டு என உண்மை சொல்கிறேனே.../

    ஹா.ஹா.ஹா. இப்படி உண்மையையே பேசுகிறவர்கள் உண்மையை சொல்லும் போது அனைவருக்கும் (கருத்திடுபவர்களுக்கு) தங்களின் உண்மை வயதைதானே சொல்லத் தோன்றும். ஹா.ஹா.ஹா. (அதுதான் அவரவர் உண்மை வயதை சொல்லியிருக்கிறார்கள்.)
    உண்மை என்றும் தோற்றதாக சரித்திரம் கிடையாது. பதிவை ரசித்தேன். பதிவு காலைப்பொழுதை கலகலப்பாக்குகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. அப்படி யாரு உண்மையான வயசைச் சொல்லலை? புரியலையே! ஆனாலும் பெண்கள் மட்டுமில்லாமல் பல ஆண்களும் வயதைக் குறைத்துத் தான் சொல்கின்றனர். உங்க வயசு 32 என்றால் நானெல்லாம் இன்னும் பிறக்கவே இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டீர்களா ?
      பிறக்கவே இல்லையா ?
      இஹ்கி இஹ்கி...

      நீக்கு
    2. ஹாஹாஹா! காணொளியைக் கவனிக்கலை கில்லர்ஜி, சாப்பிட்டுட்டு மத்தியானமா வந்து பார்க்கிறேன்.

      நீக்கு
    3. காணொளி கண்டால் உங்களுக்கு கோபம் வரலாம் ?

      நீக்கு
    4. அதென்னமோ தெரியலை கில்லர்ஜி, காணொளியை நான் பலமுறை முயன்றும் திறக்கவே இல்லை. நீயா/நானா நிகழ்ச்சி தானே? எனக்கு அவ்வளவா ( மொத்தமா)ப் பிடிக்காது. அதனால் பரவாயில்லை.

      நீக்கு
    5. தெரியவில்லையே... ஏதும் பிரச்சனை போல..‌

      நீக்கு
    6. என்னால் காணொளியைக் காண முடிந்தது.  அந்த இளம்பெண் (அல்லது சிறுமியின்) ஆசையையும் கேட்க முடிந்தது!

      நீக்கு
    7. //இளம்பெண்// இஃகி இஃகி இஃகி

      நீக்கு
  10. நாயா.. பேயா.. நிகழ்ச்சிகளை எல்லாம் இன்னுமா பார்க்கின்றீர்கள்?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜி இந்தக் காணொளிதான் பதிவுக்கு வித்து.

      நீக்கு
  11. அன்பு தேவகோட்டைஜி,
    வயதைச் சொல்வதில் என்ன தப்பு.
    அதனால் வருடங்கள் ஓடாமல் நிற்கப்
    போகிறதா.
    இந்தப் பெண்கள் பேசுவதை எல்லாம்
    நல்ல வேளை கேட்பதில்லை.

    என் பேரக் குழந்தைகள் எல்லோருக்கும் நான் பாட்டி தான்.
    சில சமயம் மைலாப்பூர் பாட்டி.
    இன்னோரு பாட்டி தாம்பரம், அம்பத்தூரென்று இருப்பதால்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா நானும் பார்ப்பதில்லை வாட்ஸ் அப்பில் உலா வந்தது ஆகவே பதிவு எழுதினேன்

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. ஹாஹாஹா நீங்கள் சொல்லும் லிஸ்டில் நான் இல்லைப்பா!!!!!!! நானெல்லாம் என் தலைமுடி சின்ன வயதிலேயே நரைத்தாலும் கூடக் கறுப்பாக்கிக் கொள்வதில்லை கில்லர்ஜி. எப்போதும் வெள்ளைதான்! நான் பாட்டி போல 60 வயதுத் தோற்றத்தில் இருப்பதாகவும் சொன்னவர்கள் உண்டு. ஆமாம் எனக்கும் பாட்டி வயதுதானே வீட்டில் எத்தனையோ பேரக் குழந்தைகள் இருக்கிறார்களே! நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். (உடனே நெல்லை வருவார்....கீதா ரங்கன்(க்கா) இப்பவாச்சும் உங்க வயதை ஒத்துக்கிட்டீங்களேன்னு - ஆரு சொன்னா?!! நான் எங்கே ஒத்துக் கொண்டேன் மத்தவங்க சொல்றதைத்தானே சொல்கிறேன்!!!!!!)

    உங்கள் கடைசி வரி சிரித்துவிட்டேன்!!!!

    கீதாக்காவே இப்பத்தான் குழந்தை அப்படினா நானெல்லாம் எங்கே!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  13. உண்மைதான் கில்லர்ஜி பல பெண்கள் தங்கள் வயதைச் சொல்வதிலோ தங்கள் உண்மையான தோற்றத்தைக் காட்டிக் கொள்வதையோ விரும்புவதில்லைதான். விதிவிலக்குகள் உண்டு.

    எனக்கு டிவி நிகழ்ச்சிகள் பற்றித் தெரியவில்லை. காணொளி பார்த்தேன். இப்படியுமா என்று தோன்றியது. ஆனால் இப்படித்தான் எனும் யதார்த்தமும் புரிந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மனப்போக்கு தவறான பாதையில் செல்கிறது இது சமூகத்துக்கு ஆபத்து.

      நீக்கு
  14. என் தங்கைகளில் ஒரு தங்கையின் பெண்கள் இருவருமே என்னைப் பெரியம்மா என்று அழைப்பதில்லை பெயர் சொல்லி என்பதை விட குட்டிமா, குட்டிப்பா என்றுதான் அழைப்பார்கள். அது அவர்கள் விருப்பம் ஏனென்றால் அவர்களுடன் அவர்களுக்குச் சமமாக சிறு வயதிலிருந்தே விளையாடி அவர்களுக்கேற்றபடி பேசி நல்லதையும் சொல்லி நட்பாக இருப்பதால் அவர்களுக்கு அப்படி அழைக்கத்தான் பிடித்திருக்கிறது பெரியம்மா என்று அழைக்க முடியவில்லை என்றும்... ஆனால் அவள் குழந்தைகள் என்னை கீதா பாட்டி என்றுதான் அழைப்பார்கள். நேற்று இங்கு வந்து சென்றார்கள் அத்தனை சந்தோஷம் குழந்தைகளோடு இருந்த நேரம்.

    காணொளியும் பார்த்தேன். எனக்குக் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அவர்களின் அறியாமையை நினைத்து. வயது என்பது மனதில் நம் எண்ணங்களில் தானே அல்லாமல் தோற்றத்தில் அல்ல.

    நம் வீட்டில் டிவி யே கிடையாது. கணினியில் கூட இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை கில்லர்ஜி. விருப்பமும் இல்லை என்பதால். வேறு வேலை இல்லை அவர்களுக்கு. இதெல்லாம் டிவி வருமானம் அவ்வளவே. நமக்குப் பல முக்கிய வேலைகள் இருக்கிறதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டமைக்கு நன்றி. நானும் தொலைக்காட்சி பார்ப்பது இல்லை.

      நீக்கு
  15. மருத்துவமனைக்குச் சென்றால் வயதைக் குறைத்துச் சொல்ல முடியுமோ?!! மருத்துவரிடம் பொய் சொல்லக் கூடாதே!! என்றேனும் ஒரு நாள் ஆறடி மண்ணுக்குள் போகத்தானே போகிறோம்! அப்போதும் உண்மையான வயது வெளியில் வரும்...என்ன ஒன்று அவர்கள் இருக்க மாட்டார்கள் அவ்வளவுதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. உண்மையை விட பொய்க்கு தான் மதிப்பு அதிகம் நண்பரே!! உண்மையான என் வயதை சொன்னாலும்.... நம்ம மறுக்கிறார்கள் நண்பரே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மோடிஜி ஆட்சியில் இப்படித்தான்...

      நீக்கு
  17. தொ(ல்)லைகாட்சி பார்ப்பதே இல்லை. டி.வி. இல்லவும் இல்லை. இதெல்லாம் ஒரு வித மனநோய்..... ஒன்றும் செய்வதற்கில்லை. மனதில் இளமையாக நினைத்துக் கொள்வதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  18. காணொளி பார்த்தேன், ஏன் இப்படி சொல்கிறார்! என்றும் இளமையாக இருக்க நினைக்கிறார் போலும்.
    நல்ல நிகழ்ச்சிகள் நிறைய இருக்கிறது ஜி. இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் மனம் நொந்துதான் போவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மனம் அழுத்தமாகிறது தேவையில்லாத வேலையே...

      நீக்கு