தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 03, 2022

வேட்டும், வேதமும்

ணக்கம் நண்பர்களே... ‘’பாட்டும் நானே பாவமும் நானே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
வேட்டும் நானே வேதமும் நானே
தேடும் உனை நான் ஓட வைத்தேனே
வேட்டும் நானே வேதமும் நானே
தேடும் உனை நான் ஓட வைத்தேனே
வேட்டும் நானே வேதமும் நானே
 
வாட்டும் வசையும் ஆத்தின் பிறையும்
ஆட்டும் மண்ணிடம் அதை வெல்ல வந்தாயோ
வேட்டும் நானே வேதமும் நானே
தேடும் உனை நான் ஓட வைத்தேனே
வேட்டும் நானே வேதமும் நானே
 
தசையும் இருளில் அசையும் தானே
வாடும் சிலையின் நாயகி வீணே
அதிலும் தயங்கும் தயக்கம் தானே
இன்னிசை வென்றால் மடங்கும் அழகே
 
நான் இசைந்தால் இசையும் இதிலும் எல்லாமே
தெரிவாய் புனிதா தன் மானுடம் அரிதா
கோணவாயனோடு மூட வந்ததொரு
மூடுவாயை சனி ஓட வந்ததொரு
வேட்டும் நானே வேதமும் நானே
தேடும் உனை நான் ஓட வைத்தேனே
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1965
படம்: திருவிளையாடல்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி.மஹாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
 
இதோ கவிஞரின் பாடல் வரிகள்
 
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
 
கூட்டும் இசையும் கூட்டின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
 
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே
 
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனோடு பாட வந்தவனின்
பாடும்வாயை இனி மூட வந்ததொரு
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=yEG8e7PW3SQ
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
 
குறிப்பு- இப்பாடலை கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்கள் எழுதியதாகவும் ஒரு சொல் வழக்கு உண்டு அதேநேரம் இந்த வரிகளின் வலிமையான ஆளுமை திரு.கண்ணதாசன் அவர்கள் எழுதியதாகவே தெரிகிறது. மற்றொரு கோணத்தில் பார்க்கும் பொழுது திரு கா.மு.ஷெரீஃப் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் இந்தப் பாடல் வரிகள் அனைத்துமே இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்தவைகளாகவே இருக்கிறது என்பதும் எமது தனிப்பட்ட கருத்து. இப்படத்தின் படைப்பாளிகள் எவருமே இன்று இவ்வுலகில் இல்லை ஆகவே இதன் உண்மை நிலை யாரறிவார் கூகுளாரும் பல இடங்களில் குழப்பங்களைத் தருகிறார்..

26 கருத்துகள்:

  1. பாடல் உல்ட்டா வரிகளை ரசித்தேன்.

    கா மு ஷெரீப்பின் மகன்  கூடஇது பற்றி சொல்லி இருந்தார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. உல்டா வரிகள் நல்லாருக்கு கில்லர்ஜி. ஆனால் ஒரு சில வரிகள் பொருள் ஒன்றவில்லையோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் எனக்கும் சில குழப்பங்கள் வந்தது.

      நீக்கு
  3. ஓ இந்த வரிகள் யார் எழுதியது என்ற குழப்பம் உண்டா!!? இதுவரை தெரியாது கில்லர்ஜி இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இப்பாடல் இன்று வரையில் சர்ச்சைதான்...

      நீக்கு
  4. அடுத்த பதிவில் சந்திக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சந்திக்கலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய நல்ல நாளில் சிவனைப்பற்றிய நல்ல பாடல். அந்தப் பாடலுக்கான தங்களின் மாற்றுப் பாடலும் அருமையான உள்ளது. பாராட்டுக்கள்.

    திருவிளையாடல் சினிமா பாடலை எழுதியவரின் பெயர் தெரியா நிலையையும் இன்று தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. பள்ளிப் பருவத்தில் பாடிய பாடல்... ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறேன்... மரத்தடியில் தான் வகுப்பு...! - இவ்வாறு பல நினைவுகள் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகி இருந்த பாடல் உங்கள் கைவண்ணத்தில் கண்டோம்.

    கா மு ஷெரீப் பற்றியும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்பதிலும் குழப்பமா? அறியாத செய்தி! ஆனாலும் "ஆச்சி"ரியர் ரொம்பவே "ஆச்ச"ரியப்பட வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      தாங்கள் அறிந்தவரை யாரென்று முயற்ச்சியுங்கள்.

      நீக்கு
  9. உல்டா வரிகளில் திறமை தெரிகிறது, ஆனால் பொருள் பொதிந்ததாக இல்லை. வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருக்கிறது. பொறுமையா, யோசித்து எழுதுங்கள். உங்களால் இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

      அடுத்து கொஞ்சம் கவனம் வைக்கிறேன்.

      நீக்கு
    2. பாட்டுக்கு அல்ல மெட்டுக்கு ஒரு புலவர் அய்யா தாங்கள்.. நண்பர்க்கு வாழ்த்துகள்!

      நீக்கு
    3. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. கவிஞர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. மாற்றி அமைத்த பாடல் நன்றாக இருக்கிறது.
    கா.மு ஷெரீப் எழுதிய பாடல்கள் பல பின்னால் வந்த பிரபலங்கள் எழுதியதாக நினைத்து கொள்வார்கள்.
    முன்பு பாடல் ஆசிரியர் பேர், பாடல் இசை அமைத்தவர் பேர், மற்றும் பாடியவர் பேர் ,
    படத்தின் பேர் எல்லாம் சொல்லி தான் வானொலியில் பாடல் ஒலிபரப்புவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் கா.மு.ஷெரீஃப் அவர்கள் குறைந்த பாடல்களே எழுதி இருந்தாலும் சிறப்பான பாடல்கள்.

      அவரை ஆபாசமாக பாடல் வரிகள் எழுத சொன்னதால் அவர் விலகி கொண்டார்.

      நீக்கு
  12. இந்த பாட்டிற்கு பின்னால் இத்தனை சர்ச்சைகள் இருக்கின்றன என்பதனை... இப்போது தங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.... உடனே கூகுள் ஆண்டவரிடம் கேட்கலாம் என்று அங்கு போய் பார்த்தால் அவர் குழப்பத்திலிருந்து இன்னும் மீளவில்லை... ம்....ம்ம்... கவிஞர்கள் என்றாலே அன்றும் இன்று குழப்பத்திற்கு குறைவில்லை போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு