தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 23, 2022

எலையை விட்டு எந்திரி...

 
நாம் எவ்வளவுதான் சிந்தித்து வாழ்க்கையை கடந்து வந்தாலும் ஒவ்வொரு தினமும் நாம் ஏதாவது பாடத்தை படித்துக் கொண்டே வருகிறோம். மேலேயுள்ள புகைப்படச்செய்தி எனக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்தது. இதென்ன பெரிய விடயமா ? என்று சிலர் நினைக்க கூடும். இந்த வளையத்துக்குள் வந்து நிற்பவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் வீச்சு புரியும், இதன் ஆழம் தெரியும் மற்றவர்களுக்கு இதுவொரு வாசகம் மட்டுமே
 
இதை நான் எனதோடும், எனது அன்புப் பெயர்த்திகளோடும் இணைத்துப் பார்க்கின்றேன். அதாவது நாம்தான் உரிமை இருக்கிறது என்று தவறாக கணித்து இருக்கிறோம் என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன். அவர்கள் தரப்பு தொடக்கம் முதலே ஒதுக்கி கொண்டே வருகின்றார்கள் இல்லை வந்து இருக்கின்றார்கள். ஓர் பழஞ்சொல் நினைவுக்கு வருகிறது. அவர்கள் எலையை விட்டு எந்திரி என்று சொல்லிக் கொண்டே வர... நான்தான் செவித்திறன் மழுங்கி எலை பீத்தல் என்று சொல்லிக் கொண்டே வந்து இருக்கிறேன்.
 
இதை அறிவும் மழுங்கிப்போன எனக்கு மேலேயுள்ள வாசகம் உணர்த்தி இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மாபெரும் தத்துவமே... எந்த மாமனிதர் எழுதியதோ... உரிமை இல்லாத பெயர்த்திகளை நான்தான் நினைந்து வாழ்கிறேன். மேலும் மக்களி... மன்னிக்கவும், இறைவனின் சித்தம் இப்படி என்கின்றபோது... நாம் என்ன செய்ய இயலும் ? இது உறவுகளுக்கு மட்டுமல்ல உலக வாழ்வில் எங்கும், எதற்கும் பொருந்தும். ஆயிரம் ஆறுதல்கள் எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும், பதவி சு... மன்னிக்கவும் பெயர்த்திகளின் நினைவலைகள் என்னை கொன்று வருகிறது.
 
இந்தப் பாழாய்போன இதயம் மறப்பதெப்போது ? இந்த இதயம் துடிப்பது நிற்கும்போதுதானா ? நல்லது நண்பர்களே... இதைப் படித்த பிறகு இதனைக் குறித்த கருத்தை மட்டும் எழுதவும். அதை விட்டு தேவையில்லாமல் எனது இடத்தில் ஓ.பி.எஸ்.சையும், எதிர்ப்புறத்தில் ஈ.பி.எஸ்.சையும் பொருத்திப் பார்த்து பெயர்த்திகள் மட்டும்தானா ? பதவி சுகம் இல்லையா ? என்று உங்கள் மனதில் பட்டிமன்றம் நடத்தி அரசியல் கிளர்ச்சியை தூண்டக் கூடாது.
 
எங்கிருந்தாலும் நமது பிள்ளைக.... ச்சே அதாவது எங்கு போனாலும் நமது கட்சி நல்லா இருந்தால் சரி என்று நினைத்து வாழ்ந்தால் சரிதான் என்றும் தாங்கள் கருத்துரை போடக்கூடாது. அப்படி செய்தீர்கள் என்றால் அரசியல் தெரியாத நான் ஏதோ அரசியல் உள்குத்து வைத்து பதிவு எழுதுவதாக ஊர் உலகம் நினைத்து விடும். ஆகவே முன்னெச்சரிக்கையாக ‘’ஜொள்’’ளிட்டேன்...
 
கில்லர்ஜி தேவகோட்டை 


Chivas Regal சிவசம்போ-
பதிவை முடிக்கையில் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைனது போலிருக்கே...
 
சாம்பசிவம்-
இது வீட்டு நடப்பா ? நாட்டு நடப்பா ?

27 கருத்துகள்:

 1. நீங்கள் அரசியலுக்காக எழுதினீர்களா நிஜமாகவே எழுதினீர்களா தெரியாது.  ஆனால் அந்த வாசகம் என் கண்களை திறந்திருக்கிறது.  தெரிந்த விஷயங்களையே நாம் மீண்டும் உணர நேரிடுகிறது.  நான் சொல்வது அலுவலகம் சம்பந்தமாக.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தெரிந்த விஷயங்களையே நாம் மீண்டும் உணர நேரிடுகிறது//

   சூப்பர் கருத்து ஜி உண்மை உணர சி நேரங்களில் தாமதமாகும்.

   நீக்கு
 2. உங்கள் பதிவை ரசித்தேன்.  பெயர்த்திகளோடு உண்மையான அன்புடன் இணைந்திருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சிருக்காது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றி. பிஞ்சு நெஞ்சை வெறுக்க முடியுமா ?

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஆனால், படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. முதல் வாசகம் உண்மை. எப்போதுமே நாம் உறவு, உரிமை என அதிகமாக நெருங்கி விட்டால், அவர்கள் விலகித்தான் போவார்கள். அதனால் மனம் காயப்படுவதும், தீராத மன வேதனைகள் ஏற்படுவதும் எல்லாமே நமக்குதான். வாசகம் எனக்கும் நன்றாக புரிகிறது. கவலைப்படாதீர்கள். எல்லாமே நல்லபடியாக நடக்கும்.

  எனக்கு அரசியல் பற்றிய விபரங்கள் தெரியாவிடினும், நீங்கள் எழுதிய உவமைகளை ரசித்தேன். தங்கள் பெயர்த்திகள் விரைவில் தங்களை புரிந்து கொண்டு, "இந்த அன்பான தாத்தாவுடன்தான் இனி வாழ வேண்டுமென" உங்களிடம் வந்து சேருவார்கள். "அவ்வாறு விரைவில் சேர்ந்திருக்க செய்து விடு " என நானும் மனதாற இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பாராட்டியமைக்கும், அரசியல் உவமையை ரசித்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 4. சரி தான் - அன்பு தவிர... அன்பு மட்டுமே எதையும் எதிர்ப்பார்க்காது... எதிர்ப்பார்க்கும் எண்ணம் வந்தாலே அது அன்பு கிடையாது... அதன் முன் எந்த தீர்மானமும் எடுபடாது... எவர் எப்படியோ நம்மை மாற்றாததே அன்பு...

  // உரிமையோ உரிமை என்று
  ஊரெங்கும் மேடை போட்டான்
  கடமையோ கடமை என்று
  காரியம் செய்தால் என்ன...?
  காரியம் செய்தால் என்ன...?

  சொல்லாதே யாரும் கேட்டால்
  எல்லோரும் தாங்க மாட்டார்... //

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நான் என்னை என்றுமே மாற்றிக் கொள்ள இயலாதவன்.

   நீக்கு
 5. உங்கள் பெயர்த்திகள் விரைவில் உங்களைப் புரிந்து கொண்டு மாசற்ற அன்பு காட்டுவார்கள். மற்றபடி நாம் உரிமை எல்லாம் எடுத்துக்க முடியாது யாரிடமும். அது ஏமாற்றத்தையும் மனக்கசப்பையுமே தரும்.

  பதிலளிநீக்கு
 6. உரிமை உள்ள பேத்திகள்தான்.
  காலம் மாறும். பேத்திகள் புரிந்து கொள்வார்கள்.
  இறைவன் அருளால் உங்களிடம் வருவார்கள்.
  உண்மையான அன்பு தோற்பது இல்லை.

  நீங்கள் அன்பாக அவர்களை வாழ்த்தி கொண்டே இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆறுதலான கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. D D அவர்களின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன். அன்பு எப்போதும் தரப்படுவது. கேட்டுப் பெறுவதில்லை. குழந்தைகள் எதையும் எப்போதும் நம்பி விடுவார்கள். விவரம் அறியும் வயது வந்தால் தான் பகுத்தறிந்து நல்லது எது கெட்டது என்பது அவர்களுக்கு புரியும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 8. உங்களின் உணர்வுகள் மனதை பாதித்தன.
  அனு தினமும் இத்தனை வருட ங்களின் வாழ்க்கை அனுபவங்களுக்குப்பிறகும் நமக்கு ஏதாவது பாடங்கள் கிடைத்துக்கொண்டே தானிருக்கின்றன. ' இதுவும் கடந்து போகும் ' என்று சொல்லிக்கொண்டு தான் நாம் எல்லாவற்றையும் கடந்து போகிறோம்.
  நல்ல பெற்றோர், நல்ல துணை, நல்ல மக்கள், நல்ல பேரக்குழந்தைகள் என்று எல்லாமே எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நல்ல கொடுப்பினை வேண்டும்.
  அந்த கொடுப்பினை கிடைக்காத போது மனதை அதிகம் வருத்திக்கொள்ளாமல் ' இதுவும் கடந்து போகும்' என்று செல்ல பழகிக்கொள்ளுங்கள்!
  அன்பு யாசகம் இல்லை. கிடைக்காத அன்பிற்காக உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 9. தங்களது பேத்திகள் /மற்றவர்களுக்கு என்ன வயதோ அந்தந்த வயதிற்கு தாங்களும் மாறிக் கொள்ளுங்கள்.. நீங்கள் தான் மாற்றிக் கொள்வதற்கு இயலாது என்று இருக்கின்றீர்களே..

  ஜி!.. கவலை வேண்டாம்.. காலம் கனியும் ஒரு நாள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. நம்முடைய, அன்பு என்ற பலவீனத்தால் ஈஷிக்கொள்கிறோம். அன்பு என்பது இரு பக்கத்திலும் இருக்கணும். அது மரியாதையுடன் கூடியதாக இருக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பெற்றோரின் அன்பு உண்மைதான்.

   பிள்ளைகள் பெற்றோர் ஆனபிறகு உண்மைதான்.

   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. உறவுகளின் உணர்வுகள் பற்றிய கருத்து சிந்திக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 12. எனக்கு செவித்திறன் குறைந்தவுடன் எல்லாம் தெரிந்துவிட்டது. தெரிந்து என்ன செய்ய... முதியவன் ஆகிவிட்டேன்.. அதாவது மூத்த குடிமகன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. காலத்தின் கோலத்தில் மாற்றங்கள். எதுவும் நிரந்தரமல்ல . மனதை தேற்றி வைத்திருங்கள் . உங்கள்அன்பை புரிந்து கொள்ளும் காலம் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆறுதலான கருத்துக்கு நன்றி.

   நீக்கு