தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 06, 2022

டிக்கி லோனா

 

ஜனவரியில் ஜனித்த ஜனனியோ
பிப்ரவரியில் பிறந்த பிரியாவோ
மார்ச்சில் மாறிடாத மாலாவோ
 
ஏப்ரலில் ஏமாற்றாத ஏஞ்சலோ
மேயில் மேய்ந்த மேகலாவோ
ஜூனில் ஜூட்விட்ட ஜூலியோ
 
ஜூலையில் ஜூஸ் ஜூலியட்டோ
ஆகஸ்ட்டில் ஆசை ஆஷாவோ
செப்டம்பரில் செல்ஃபி செல்வியோ
 
அக்டோபரில் அன்பு அனிதாவோ
நவம்பரில் நவாப்பழ நமிதாவோ
டிசம்பர் டில்லி டிக்கிலோனாவோ
 
எவளாவது ஒருத்தி எனக்கு கிடைக்க மாட்டாங்களா ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 

அன்பின் குவைத் ஜி அவர்கள் கடந்த 29.06.2022 தை தை தை என்ற பதிவுக்கு தந்த கருத்துரையால் உடனே அடுத்த பதிவு எழுதி விட்டேன் ஆனால் முந்தைய பதிவு வேட்டும், வேதமும் Scheduled-ல் இருந்ததால் இன்றுதான் வெளியிட முடிந்தது நன்றி.
 
சிவாதாமஸ்அலி-
அடி கொங்காச்சிறுக்கி, ஆசையற்ற புத்தரை இங்கேதான் பதிக்கணுமா ?
 

நட்பூக்களே... Notion Press இணையதளம் சிறுகதை போட்டியை அறிவித்து இருந்தது அதில் நானும் கதை எழுதி அனுப்பி இருக்கிறேன் கதையின் தலைப்பு கிளிநொச்சி, கிரிமினல் கிஷோர் இந்த இணைப்பில் சென்று படித்து, எனக்கு மதிப்பெண்கள் அளித்து நான் வெற்றி பெற்றால் இந்தத் தொகையில் ஐந்தில் நான்கு பங்கை சென்னை சிவாநந்தா குருகுலம் மற்றும் ஸ்ரீ சாரதா சக்தி பீடம் அனாதை செல்வங்களுக்கு வழங்கப்படும். ஒரு மடங்கு பணம் நான் தேவகோட்டையிலிருந்து சென்னை சென்று வருவதற்கு இதோ சுட்டிக்கு செல்லும் வழி https://notionpress.com/ta/story/ssc/20917/
நன்றி கில்லர்ஜி

30 கருத்துகள்:

 1. நல்லது... வெற்றி பெற வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. வாக்களித்து கருத்தும் சொல்லி உள்ளேன்... அருமை ஜி...

   நீக்கு
  3. ஆமாம் ஜி பார்த்தேன் நன்றி.

   நீக்கு
 2. இந்த மாதிரிப் பாடல்களில் உங்களை மிஞ்ச ஆளில்லை! சிறுகதையை நாளைக்குப் போய்ப் படிக்கிறேன். அநேகமாகத் தெரிஞ்சவங்க எல்லோருமே கொடுத்திருக்காங்க. :) பரிசு கிடைக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், கதையை படிப்பதற்கும் நன்றி

   நீக்கு
 3. சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ஆங்கில மாத வரிசையில் ஆரணங்கின் பெயர்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி. இணைப்புக்கு போனீர்களா ?

   நீக்கு
 4. வந்ததும் கருத்துகள் போட்டேனே எங்கே போச்சு?!!! பரவால்ல விடுங்க..

  துரை அண்ணா சொன்னதுமே உடனே எழுதிட்டீங்க...!!! மாதங்களில் அழகிகள்...நல்லாருக்காங்க!!

  கதை வெற்றி பெற வாழ்த்துகள் கில்லர்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பதிவை பாராட்டியமைக்கும், கதையை வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 5. உங்கள் கதைக்கான சுட்டிக்குள் சென்றேன். பதிவு செய்த பிறகு மீண்டும் லாகின் செய்ய முடியவில்லை. தவறு தவறு என்று வருகிறது. மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  கதை வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

  மாதங்களில் மங்கையைக் கோர்த்து எழுதியிருப்பது உங்கள் திறமை,.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கதையை படித்தமைக்கு நன்றி.

   முயற்சித்து பாருங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அழகாக மாதங்களின் பெயர்களோடு மங்கைகளின் பெயர்களும் இணைந்து விட்டன. சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சொல்லிய அடுத்த கணப் பொழுதில் சிறப்பாக எழுதிய தங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  நீங்கள் தந்த சுட்டிக்கும் சென்று கதையை படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. எழுதிய நல்லதொரு கதையை விட தாங்கள் அதற்கு கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் இல்லத்திற்கு நன்கொடையாக தருவது குறித்து சிந்தித்திருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்த மனம் யாருக்கு வரும்.? மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான இக்கதை வெற்றி பெற்று தாங்கள் எதிர்பார்த்தபடி பரிசு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 7. வெற்றி பெற வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
  பரிசு பணம் குழந்தைகளுக்கு கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 8. ஆங்கில மாத மகளிர் பேர்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 9. செப்டிக் செல்வி - நாட்டாமே... வரிய மாத்துங்க!...

  செப்டிக் - மோசமான அர்த்தம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உடன் மாற்றி விட்டேன் நன்றி.

   நீக்கு
 10. நேயர் விருப்பத்திற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 11. வெற்றிபெற வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 12. வெற்றி பெற வாழ்த்துகள் .
  ஜனவரி ரூ டிசம்பர் பெண்கள் ரசனை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு