தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 19, 2022

சதிகள்

என்னடா மாப்ளே டாடா மாதிரி உள்ளவர் மகளைத்தான் கட்டுவேன்னு மும்பைக்கு போனியே என்னாச்சு ?
போடா அவள் டாட்டா காண்பிச்சுட்டு போயிட்டாடா.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
டாக்டருக்கு படிச்சவளைத்தான் கல்யாணம் செய்வேனு சொன்னியே செய்ஞ்சியா ?
பெட்ரூமுக்குள்ளே போனதும் தூக்க மாத்திரையை போட்டு தூங்க வச்சுப்புறாடா.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
வக்கீல் பெண்ணை கல்யாணம் செய்தியே எப்படிடா இருக்கே ?
வாதம் பண்ண ஆரம்பிச்சா வாயை விடியும்வரை மூட மாட்றாடா
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
ஏண்டா கரகாட்டக்காரியை கல்யாணம் செய்யப் போனியே என்னாச்சு ?
அதை ஏண்டா கேட்கிறே என்னை குரங்காட்டம் ஆட்டி வைக்கிறாடா
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
நர்ஸ் வேலை செய்யிற பெண்ணை கல்யாணம் செய்தியே சந்தோஷமா இருக்கியா ?
நடுராத்திரியில எந்திரிச்சு டூட்டிக்கு போயிறாடா
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
பூசாரி மகளை கல்யாணம் செய்தியே எப்படி போகுது வாழ்க்கை ?
வாரத்துல எட்டு நாளைக்கும் விரதம் இருக்கிறாடா.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
சர்க்கஸ்காரர் மகளை கல்யாணம் செய்தியே எப்படி இருக்கே மாப்ளே ?
அதை ஏண்டா கேக்கிறே ராத்திரி முழுக்க ஜம்ப் பண்ணியே அடிக்கிறாடா
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
மிலிட்டரிமேன் மகளை கட்டுனியே எப்படி போகுது ?
எதுக்கெடுத்தாலும் துப்பாக்கியை காட்டியே மிரட்டுராடா.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
சித்தாளை வளைச்சுப் போட்டு கல்யாணம் கட்டுனியே நல்லா இருக்கியா ?
அவ எல்லாத்தையும் பூசி மொழுகி விட்றாடா.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
சொத்தை எல்லாம் எழுதிக் கொடுத்து திரைப்பட நடிகையை திருமணம் செய்தியே எப்படி போகுது வாழ்க்கை ?
2028 வரை எனக்கு கால்ஷீட் கிடையாதுனு சொல்லிட்டாடா...
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
ஏண்டா பேராண்டி கருவாட்டுக்காரியை கல்யாணம் கட்டுனியே உன்னை எப்படி வச்சுக்கிறா ?
பக்கத்துல வந்தாலே நாத்தம் குடலை உறுவுது பாட்டி.
? ? ?
* * * * * * * * * * 11 * * * * * * * * * *
 
கூடை பின்னுறவளை கூட்டிக்கிட்டு ஓடுனியே எப்படி இருக்கே ?
ராத்திரி ஆனாலே பின்னி எடுக்குறாடா.
? ? ?
* * * * * * * * * * 12 * * * * * * * * * *
 

காணொளி 

40 கருத்துகள்:

 1. பொருத்தமாக ஒவ்வொன்றுக்கும் ஒரு பதில் சொல்லி "கொன்னுட்டீங்க ஜி!!

  பதிலளிநீக்கு
 2. கும்மு கும்மு என்று கும்மும் காணொளி சூப்பர்!

  பதிலளிநீக்கு
 3. துணியைத் தோய்த்தா பாராட்டறீங்க. ஹஸ்பண்டை வெளுத்தா குறை சொல்லலாமா? அது சரி... பசங்க யாரைத்தான் திருமணம் செய்துகொள்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே எதிர் காலத்தில் பசங்க திருமணமே வேண்டாம் என்ற நிலையில் வாழ்வார்கள்.

   நீக்கு
 4. சமையல் கலையும் 'சல்லாபக் கலை'யும் மட்டும் கற்ற பெண்களே இல்லையா கில்லர்ஜி?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்றைய பெண்களுக்கு சமையலே தெரியாது, இதில் கலையேது ?

   மற்றவை இங்கு பகிர்ந்து கொள்ள இயலாது.
   தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. அதான் சுக்கிக்காரன் வந்துட்டானே.. சோறு, பிரியாணி கொடுக்க..

   பொண்ணுங்க வேற சமைக்கனுமாக்கும்!..

   நீக்கு
  3. கல்யாணம் ஆனவளோ ஆகாதவளோ Facebook Reels ல ஒட்டுத் (!) துணியோட குத்தாட்டம் போட்டா பத்தாது?..

   நீக்கு
  4. வாங்க ஜி ஸ்விக்கிகாரன் சொல்லிட்டான் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கட்டப்படும் வீடுகளில் சமையலறை இருக்காதாம்.

   நீக்கு
 5. அடித்து துவைத்து போடும் காணொளியில், நல்ல பாட்டு ஜி... இதுவும் அன்பு தான்...

  நல்ல மனையாளின் "அடிதடி" ஒரு கோடி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அன்பு மிகுதியால் மிதிக்கிறாள் போல்...

   நீக்கு
 6. ஆகா.. பதிவுக்குக் காரணம் நான் தானா!..

  பதிலளிநீக்கு
 7. அண்ணன் தம்பி யாரும் இல்லை உதவுறதுக்கு.. அதனால அடி தான் உதவுது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இரண்டு வீட்டிலும் ஒற்றை செல்வங்கள்தானாம்....

   நீக்கு
 8. இன்னிக்கு தினமலர் செய்தி: BA படிச்ச பெண் ஒருத்தி அந்தப் பக்கத்து பிரபல ரவுடியைக் காதலிச்சு கை புடிச்சுக்குறா.. ஒரு கட்டத்துல கசந்து போய்டுது.. அவன விட்டு விலகி தோழி ஊட்டுக்குப் போய் தங்கிடுறா.. அவளோட புருசனும் பெரிய ரவுடி தான்..

  நாளா வட்டத்துல தோழியும் அவளோட புருசனும் சேர்ந்துகிட்டு இவள கரு முட்டை கொடுக்கச் சொல்லி வற்புறுத்த அடிதடியில முடியுது..

  இவ மறுபடியும் பழய புருசன் கிட்டயே ஓடிப் போய் விசயத்தச் சொல்றா.. இப்போ அவனுக்கும் இவனுக்கும் அடிதடியாகி போலீஸ் கஸ்டடிக்குள்..

  கோழி முட்டை ஏவாரத்தை விட
  கருமுட்டை ஏவாரம் நாட்ல ஜோரா நடக்குது போல!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நான் என்றுமே சொல்வது விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...

   நீக்கு
 9. இப்படி விளக்க மாத்து அடி வாங்குறதுக்கு சந்நியாசம் எவ்வளவோ தேவலாம்..

  இதுக்காக
  எல்லாரும் சந்நியாசி ஆகிட்டா - அப்புறம் பிச்சை போடறது யாரு?..

  பதிலளிநீக்கு
 10. ஆண்களை விடவும் பெண்கள் தான் அதிகமா பிச்சை போடுறாங்களாம்.

  பதிலளிநீக்கு
 11. 2028 வரை கால் சீட் தான் இல்லை. பெட் சீட் உண்டோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்காலம் கார் ஷெட்டில்தான் உறக்கமாம்.

   நீக்கு
 12. உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். ஆனால் பெண்கள் நடந்து கொள்வது? பலரும் இதை நியாயப்படுத்தினாலும் விரைவில் குடும்பம் என்னும் கருத்துக் காணாமல் போய்விடும். அதிக நாட்கள் இல்லை. இப்போவே பெண்கள் சுய வேலை சுய சம்பாத்தியம், சுய மரியாதை என எண்ணிக் கொண்டு யாரையும் மதிப்பதில்லை. பெண் சுயச் சார்பு உடையவளாய் இருக்கணும் என்பது இப்போது விபரீத அர்த்தத்தில் போய் முடிஞ்சிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது சிறப்பான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   மறுக்க இயலாத நிகழ்கால உண்மை.

   நீக்கு
 13. நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் பசங்க திருமணம் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.
  காணொளியில் நல்ல பாட்டு காட்சி பயங்கரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்றைய நிலைப்பாடு உண்மைதானே... தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பதிகளுக்கு போட்டியாக வந்த சதிகளையும் ரசித்தேன். இப்படிபட்ட பதி, சதி களையும் வாழ்வில் இணைத்து வைத்து பார்ப்பதே இறைவனின் சதிதானே...

  எல்லாவற்றையும் பொருத்தமாக அமைத்து எழுதியிருக்கும் தங்கள் அதி அற்புதமான கற்பனை கலந்த திறமைக்கு பாராட்டுக்கள். ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன். பூசாரியின் மகள் என்பதால் அவள் வசதிக்காக வாரத்திற்கு எட்டு நாட்களாக அமைத்துக் கொண்டு விட்டாளோ ? ஹா.ஹா.ஹா.

  காணொளி அருமை. நடிகர் வடிவேலு, கோவை சரளா காமெடி நினைவு வருகிறது. இரண்டாவது காணொளி யாருமே எதிர்பார்க்காத அடி. புதுமை பெண்களாக தலை நிமிர்ந்து உலகில் இருக்க வேண்டுமென ஆசைப்பட்ட பாரதியார் இப்போது இருந்திருந்தால், தன் சொல்லை வாபஸ் வாங்கியிருப்பார்.:)))) பகிர்வுக்கு மிக்க நன்றி. இன்று வலைத்தளத்திற்கு வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை இரசித்து விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 15. காணொளியை இப்போத் தான் பார்த்தேன். என்னால் சிரிக்க முடியவில்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரிக்க வைக்க எத்தனையோ கேலிக்கூத்துகள் நடக்கிறது. மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. தொழில் முறை நகைச்சுவை அருமை. இளவட்டங்களுக்குக் கல்யாண ஆசையே போய் விடும், போங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ஹா.. ஹா.. ஹா.. தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. உங்கள் கற்பனை திறமை அருமை. வார்த்தையில் விளையாடியிருக்கிறீர்கள். நல்ல நகைச்சுவை.

  காணொளியும் கண்டேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 18. நகைச்சுவையை ரசித்தேன் கில்லர்ஜி. ஆனா பெண்கள் இவ்வளவு மோசமாவா இருக்காங்க!!!!!!
  காணொளிக்கும் சேர்த்துதான். ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இன்றைய சூழலில் இது கற்பனை என்றாலும் பரவலாக அடி விழுந்து கொண்டுதான் இருக்கிறது.

   நீக்கு
 19. பல பையன்கள் அதுவும் வெளிநாட்டில் இருப்பவர்கள் திருமணம் வேண்டாம் என்றே சொல்கிறார்கள் இங்கும் விரைவில் இதே நிலை வரும்.

  நன்றாக ரசித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ரசித்து சிரித்தமைக்கு நன்றி

   நீக்கு