தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 11, 2022

பதிகள்

போலீஸ்காரரை திருமணம் செய்தது தப்பா போச்சா... ஏண்டி ?
ஆமாடி எதற்கெடுத்தாலும் லாக்கப்ல வச்சு கும்மிடுவேன்னு சொல்றார்டி.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
டாக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு ரொம்ப ரோதணையாப் போச்சு
ஏன்... என்ன செய்யிறாரு ?
பெட்ரூமுக்குள்ளே நுழையும்போது ‘’மே ஐ கம் இன் ஸார்’’னு கேட்டுட்டு வரணுமாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
விமலா உன்னோட வக்கீல் மாப்பிள்ளை என்ன சொல்றார் ?
நான் வாயத் திறந்தாலே வாய்தா கொடுத்துருவேன்னு சொல்றான்டி
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
ஏண்டி ரஞ்சிதா இஞ்சினியர் மாப்பிள்ளை என்ன செய்யிறார் ?
அதை ஏண்டி கேட்கிறே எந்த நேரமும் இஞ்சி தின்ன குரங்காட்டம் உர்ர்ர்ர்னு இருக்கான்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
தீயணைப்புத்துறையில் வேலை பார்க்கிறவனைத்தான் கட்டுவேன்னு சொல்லி கட்டுனியே உன் புருஷன் என்ன செய்யிறான் ?
ஸ்டவ்வை பத்த வச்ச உடனே குடத்து தண்ணியைக் தூக்கி அடுப்புல ஊத்தி அமத்திடுறான்டி
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
பஸ் கண்டக்டரை கல்யாணம் செய்தியே எப்படி இருக்கான் ?
வீட்டுக்குள்ளே நுழையிறதுலருந்து, சாப்பாடு போடுறது வரைக்கும் ஒவ்வொரு விதமா விசிலடிச்ச பிறகுதான் நான் செய்யணும்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
ஏண்டி மேனகா மெக்கானிக்கர் மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சுக்கிறாரா ?
அதை ஏண்டி கேட்கிறே ஏதாவது சத்தம் போட்டா இஞ்சின் மாதிரி பிரிச்சு மேஞ்சுருவேன்னு சொல்றார்டி...
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
சைக்கிள் கடைக்காரனை கட்டுனியே உன் புருஷன் நல்லா பார்த்துக்கிறானா ?
க்கும் எதுக்கெடுத்தாலும் என்னை பெண்டை நிமித்திடுவேன்னு சொல்லியே பயமுறுத்துறான்டி.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
கொத்தனாரை கட்டுனியே உன் புருஷன் என்ன செய்யிறான் ?
காலைய காபி போடும்போது ஒரு கரண்டி சிமெண்டுப் பாலும், ஒரு தட்டு மணலும் போடுனு சொல்றான்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
ஏண்டி செங்கமலம் எலக்ட்ரீஷியனை கல்யாணம் செய்தியே என்னடி சொல்றான் ?
நான் வாயத் திறந்தாலே ரெண்டு வயரை உரசிக் காண்பிச்சு வாயை மூட வச்சுறான்டி
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
கறிக்கடைக்காரனை கட்டுனியே உன் புருஷன் என்ன சொல்றான் ?
நான் என்ன சொன்னாலும் குடலை உறுவிடுவேன்னு சொல்றான்டி
? ? ?
* * * * * * * * * * 11 * * * * * * * * * *
 
கல்யாணத் தரகரை கல்யாணம் செய்தியே என்னாச்சுடி ?
சண்டை வந்தால் உடனே கைவசம் உள்ள ஜாதகத்தை இன்னைக்கே தாலி கட்டி கூட்டிட்டு வந்துருவேன்னு மிரட்டியே வச்சுருறான்டி.
? ? ?
* * * * * * * * * * 12 * * * * * * * * * *
 
Chivas Regal சிவசம்போ-
நம்ம ஆளு எவனும் மாப்பிள்ளையா வரலையே...
 
காணொளி

28 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா வித்தியாசமான கற்பனை.  செம...    அதிலும் தீயணைப்புத்துறை படித்ததும் வாய்விட்டே சிரித்துவிட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி வாய் விட்டு சிரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 2. ஹிஹிஹிஹிஹிஹிஹி. காலை வேளையில் நல்ல சிரிப்பு. சிரிப்பாய்ச் சிரிச்சேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இரசித்து சிரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 3. அந்தக் கறிக்கடைக் காரனும் சைக்கிள் ரிப்பேர் பார்க்கிறவனும் தான் சூப்பர்!..

  பதிலளிநீக்கு
 4. அதுசரி...

  பூச்சி மருந்து அடிக்கிறவன் ஒருத்தனும் அகப்படலையா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   பூச்சி மருந்து வைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்துட்டா... கொலைக்கேஸாகிடுமே...

   நீக்கு
 5. அப்போ வேலை வெட்டியில்லாத பசங்களோட கதி?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையே உல்டாவாகிடும் அதுக்கு வேற குரூப்பு இறக்கிடுவோம் ஜி.

   நீக்கு
 6. ஆகா, வித்தியாசமான கற்பனை. வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. ஏன் கில்லெர்ஜீ பதிவைப் பற்றி கருத்துரை கூற பயப்படுறே?
  அவர் பேரே கில்லெர்ஜீ ஆயிற்றே!  கொன்னுடுவாரே!

  Jayakumar

  பதிலளிநீக்கு
 8. நல்ல நகைச்சுவை. காணொளி கடைசியில் அந்த பெண்ணுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் குனிந்து கொள்கிறார்.
  நல்ல சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 10. இவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்களை யார் காப்பாத்துவது கில்லர்ஜி காப்பாத்துவாரா:)) இவர்களுள் நானும் அடங்கியுள்ளேனே என்ன செய்ய :) சிரித்து முடியாது. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது இறைவனின் திருவிளையாடல்.

   உலகில் 99.9 சதவீதம் மக்கள் விருப்பமின்றியே வாழ்கிறார்கள் இதில் நானே முதலாமாவன்.

   நீக்கு
 11. சிரித்து ரசித்தேன். நல்ல நகைச்சுவை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 12. ஹாஹாஹாஹா சிலது சத்தமா சிரிச்சிட்டேன். நல்லாருக்கு கில்லர்ஜி. ரசித்தேன்

  கீதா  பதிலளிநீக்கு
 13. அந்தக் குட்டிப் பாப்பா உங்க பேரனா கில்லர்ஜி?! செம அழகு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நல்ல நகைச்சுவை பதிவு. எல்லாமே பொருத்தமாக எழுதியிருக்கிறீர்கள். தீயணைப்புத்துறை, பஸ் கண்டக்டர், எலக்ட்ரீசியன் எல்லாமே வெகு பொருத்தமான வார்த்தைகளுடன் இணைத்தது அருமை. உங்கள் திறன் யாருக்கும் வராதது. எல்லாவற்றையும் படித்து ரசித்து சிரித்தேன். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அதுசரி.... உங்களுக்கு பிடித்தமான நடிகர் வேலையிலிருப்பரை மறந்து விட்டீர்களே:))

  காலையில் வர இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஆமாம் இது எனக்கு ஞாபகம் இல்லையே...

   நீக்கு