தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 12, 2023

பொய் மெய்யல்ல...


கண்’’மை
விழியழகி உன் மை
சொல்கிறது உண்மை
இல்லையே என்று...
 
சவுரி
உனது நீண்ட முடி
உன்னுடையதல்ல
மாண்டதுகளின் மூடி
 
வாய்’’மை
உன் இதழின் சிவப்பு
உனை காண்பவரின்
இதயத்தில் இழப்பு
 
மொழி
பேசும்போது கிளியாக
முயற்சித்து பழகு
இப்படி கிழிக்காதே
 
பெண்மை
கண்ணில் எங்கே நாணம்
பார்க்கின்றேன் நானும்
துளியளவும் காணோம்

புதிய உடை
உடை அலங்காரமல்ல
பிறருக்கு அலங்கோலம்
இதன் பெயர் அமங்கலம்
  

குழிகள்
உன் தொப்புள் உறவை
கொஞ்சம் மறைத்து வை
பம்பரத்தோடு பையன்கள்
 
ஹை-கீல்ஸ்
காலில் ஏன் நாற்காலி
பாலியியல் தொல்லை
தரும் நிறைய காவாலி
 
மாராப்பு
எங்கே உன் துப்பட்டா
வெற்றிலை கிழவி
நினைப்பாள் துப்பட்டா
 
வளைவு
இதென்ன உன் இடையா
ஊட்டி மலைப்பாதை போல
இடையிடையே கவனி
 
பாட்டு
உண்மையாக நீ பாடுவாயா
வேண்டா ஜானகி கேட்டால்
நிறுத்திடுவார் பாடுவதை
 
நடனம்
நாட்டிய பள்ளி செல்வது
நடனம் ஆடவா உனது
நடையே தள்ளாடுகிறதே
 

உன்மை இப்படி கடைசி புகைப்படத்தில் தவறாக எழுதி இருந்ததை நான் பார்த்ததே...இக்கவி(?)தை எழுதியதின் ஆரம்பபுள்ளி.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. ​சுவாரஸ்ய எழுத்துகளைத் தந்த எழுத்துப்பிழை! ஒன்றிரண்டு ஹைக்கூ வாசனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. கடைசி புகைப்படம் கொடுத்த தாக்கம் அதிகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. ஆகா...
    அருமை..
    கலக்குங்கள்..

    பதிலளிநீக்கு
  4. தங்களது தளத்தில் உள்ளாடை விளம்பரங்கள் தாராளமாக வருகின்றனவே..

    தணிக்கை ஒன்றும் கிடையாதா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தணிக்கை செய்கிறேன் ஜி இருப்பினும் மீண்டும், மீண்டும் வருகிறது.

      மொத்தமாக எடுத்து விடுவதே உத்தமம்.

      நீக்கு
  5. ஹைகூ முயற்சியை மிகவும் ரசித்தேன்....கூடவே, நீங்கள் கூடாது என்று சொல்லியிருந்த படங்களையும்........ கில்லர்ஜி... நம்மை எதையும் ரசிக்க முடியாதபடி செய்துடுவார் போலிருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே...
      இது ஹைக்கூ... முயற்சிதானா ?
      இரசித்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  6. எழுத்துப் பிழை - உன்மை என்பது உன் மை என்றாகி அழகிய கவித்துளியானதே!! உன் மை அழகு கவித்துளியாய் உண்மையானது!

    எல்லாமே நல்லாருக்கு கவித்துளிகள், கில்லர்ஜி அதிலும் முதலும் குழிகளையும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒரு வார்த்தைப்பிழை தங்களின் கவிதைத்திறனை பெருக்கியது கண்டு மகிழ்ந்தேன். அதுவும் எல்லாமே ஹைக்கூ கவிதைகளாகி இருக்கின்றன. ஒவ்வொன்றையும் நன்றாக வார்த்தைகளை அமைத்து பொருத்தமாக எழுதியுள்ளீர்கள். நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. கருத்து மழை கவிதைகளில். அருமை

    பதிலளிநீக்கு
  9. இந்த விளம்பரங்கள் ரொம்பத் தொந்திரவு தருது. ஒவ்வொரு தரமும் நீக்க வேண்டி இருக்கு. உன் மை, உண்மையானதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மகிழ்ச்சி.
      விரைவில் சரி செய்கிறேன்.

      நீக்கு