தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 01, 2015

அவளும், நானும்

விபச்சாரியும், பட்டதாரியும்.
வேலையில், விடியலைத் தேடினாள் விலைமாது,
வேலையை, விடிந்ததும் தேடினான் பட்டதாரி.

காலையில், குளியலை நாடினாள் குடும்ப ஸ்திரீ,
காலையிலும், குடிக்கத் தொடங்கினான் குடிகாரன்.

மாலையில், மதில்களில் மயில்களின் கூட்டம்,
லீலையில், தொடர்ந்தன மதுசூதனர்களின் சூதாட்டம்.

ஆலையில், வேலை முடிந்ததும் சங்குகளின் ஓசை,
ஆரவாரமாய் புறப்பட்டான் புதுமாப்பிள்ளை சூசை.

ஓடையில் நீந்திய நீலகண்டன் நீச்சல் அறியாததால்,
பாடையில் ஏந்தினார்கள் கூச்சலுடன் குடும்பத்தினர்.

ஸ்டார் ஹோட்டல்களில் பணத்திற்காக அழகிகளின் ஆட்டம்,
ஸ்ட்ராப்போட்டு ஜூஸ் குடித்தனர் பணமுதலைகள் கூட்டம்.

உயிருள்ள உடலுக்கு ஒருதுளி தண்ணீர் கொடுக்காதவன்,
உயிரற்ற ஜடத்துக்கு ஒருவாளி கண்ணீர் தொடுத்தான்.

கட்அவுட் டுடன் நடிகை வீட்டுவாசலில் ரசிகன்,
கெட்அவுட் என்றாள் ரசிகனை நடிகை ரஸிகா.

திருட்டு இன்பத்தை நாடிய இருளப்பன்,
இருட்டு அறையில் துன்பத்தில் வாடினான்.

என்கண்ணே, காஞ்சனா உன் புருஷன் நோஞ்சானா,
அஞ்சலில் வாஞ்சையுடன் கொஞ்சினான் Ex பஞ்சாட்சரம்.

கோயில் பூட்டை உடைத்த பூஞ்சோலை பூபதிக்கு,
கையில் விலங்கை பூட்டினார் ஏட்டு ஏகாம்பரம்.

அரசியல்வாதி மேடையில் வீசினார் சொல்வீச்சு,
கேட்ட  தொண்டன் மேடைக்கு வீசினான் கல்வீச்சு.

முகிலாவுக்கு மாமியாரின் வார்த்தை வேதனைகள்,
ஷகிலாவுக்கு சாமியாரின் வார்த்தை போதனைகள்.

கூடுவாஞ்சேரியில், சேரிவாசிகள் நடத்தினர் சந்தனக்கூடு,
கூடுமானவரை கடல் பாசியை கடத்தினர் சந்தானத்தோடு.

தண்ணீருக்காகக் கண்ணீர் வடித்தாள் குடிசைவாசி,
தண்ணீருக்காகப் பன்னீர் குடித்தாள் குதூகுலதாசி.

வாடையில் கஷ்டப்படும்போது ஆடை கொடுக்காதவன்,
பாடையில் ஏற்றும்போது பட்டுஆடை போர்த்தினான்.

பலாத்காரமாய் சூறையாடினான் நாயகியை வில்லன்,
பவ்யமாய் சூறையாடினான் நாயகியை நாயகன்.

சூறையாடலுக்கு சூறையாடினாள் நாயகி,
தயாரிப்பாளர், தயாளனின் செக் புக்கை.
(With, Sign)

சாம்பசிவம்-
இதைத்தான், திங்கிறவன் திங்க திருப்பாலைக்குடியான் தெண்டங் கொடுத்தான்னு சொல்றாங்களோ ?

73 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கருத்துரையின்றி வாக்கு மட்டுமா ? இணைத்ததும் நீங்கள்தானே ?

      நீக்கு
  2. வார்த்தை விளையாட்டில் கருத்தும் சொல்ல முயல்வதற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி.

      நீக்கு
  3. பலாத்காரச் சூறைக்கு வில்லனா?
    பவ்யமாய்ச் சூறைக்கு நாயகனா?
    அடடா...
    அடுக்கிய அடிகள் யாவும்
    நாட்டு நடப்பை வெளிப்படுத்துதே!

    பதிலளிநீக்கு
  4. பவ்யமாய் சூறையாடிய நாயகனும்... பலத்காரமாக சூறையாடிய வில்லனும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தானே....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே... சேதாரம் இல்லாமல் செய்கூலி கிடைக்குதே...

      நீக்கு
  5. தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கப் போகிறார்கள் மதுரை வாசிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மட்டுமா ? தமிழ் நாடு மொத்தமே இனி இப்படித்தான்.

      நீக்கு
  6. அருமையான பதிவு. கருத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. வேலை முடிஞ்சு வந்து சமையல். சாப்பாடு.. அதுக்கப்புறம் தூங்கிட்டேன் ஜி..
    ஏதோ - ஒரு சொப்பனா.. சே..சே.. சொப்பனம்.. கனவு.. சலங்கை கட்டி சத்தம்..

    திடுக்கு..ன்னு எழுந்து Blog - உள்ள வந்தா.. உங்களோட பதிவு!..

    ஆஹா..வந்துட்டாரு.. சாம்பசிவம்!...

    தின்னவன் தின்னுட்டுப் போக -
    திண்ணையில கிடந்தவன் தெண்டங்கொடுத்தான்!..

    பட்டையக் கெளப்புங்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை உசுப்புவதற்க்கு சொப்பனத்தில் வந்த சொப்பனாவுக்கு(ம்) நன்றி.

      நீக்கு
  8. உயிருள்ள உடலுக்கு ஒருதுளி தண்ணீர் கொடுக்காதவன்
    உயிரற்ற ஜடத்துக்கு ஒரு வாளி கண்ணீர் தொடுத்தான்//

    உண்மைதான் சகோ

    என் கணினி சற்று பிரச்சனையில் உள்ளது. திறக்கவே பலதடவை முயன்று வந்தேன். கருத்து போடவும் சரியாக வரவில்லை. தட்டினால் கருத்து போனதா போகலையான்னு வேற தெரியவில்லை. அதான் பார்க்க வந்தேன். இதாவது போகுதான்னு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள்வருகை தந்து பதிவின் மிக முக்கியமான வரிகளை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. அருமை. ரசித்தேன்.வாடையில் கஷ்டப்படும் போது ..................... இந்த வரிகளை படித்தபோது வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. எதை எதையோ முடிச்சு போட்டு கலவையாய் போட்டிருக்கும் கலர் பதிவை ரசித்தேன் :)
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவும், இத்தாலியும், இங்கிலாந்தில் முடிச்சுப்போடவில்லையா ? அதைப்போல்தான் பகவானே....

      நீக்கு
    2. அய்... இது இன்னும் அழகு! (பாலிடிக்ஸ்?)

      நீக்கு
  11. விலைமாது, பட்டதாரி..... இருவருக்கும் சம்பந்தமில்லை என்றாலும், அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் சிறப்பாக இருக்கின்றன.

    விடிஞ்சதும் குடிக்கிறவன் தமிழன் மட்டுமே!!

    உயிரோட இருக்கும்வரை ஒரு டீ கூட வாங்கிக் குடுக்க மாட்டான், செத்தால் நெத்தியில் வைக்க 10 ரூபாய் நாணயமும் குடுப்பான்!! வதனையான நடைமுறை உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.

    சமூக அவலங்கள் கதம்ப மாலையாய் கோர்த்திருக்கிறீர்கள், கோர்க்கப் பட்ட மாலை பினத்துக்குதான் போடமுடியும் போலிருக்கு, நம் சமூகம் என்றாவது மாறுமா? சுப காரியங்களுக்கு போடும் வகையில் ஒரு கவிதை மாலையை கோர்க்கும் காலம் வருமா? ஏக்கமாய் இருக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோர்க்கப்பட்ட மாலை பிணத்துக்குத்தான் போடமுடியும் போல// அருமையாக சொன்னஈர்கள் சமூகம் மாறுமா ? என்ற தங்களது கேள்விக்கு என்னால் உறுதியாக பதில் சொல்லமுடியாது நண்பரே காரணம் நானும் தங்களைப்போலவே ஒரு சமூக அங்கஸ்தன்.
      வருகைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  12. படிக்கும் போது கலந்து கட்டி அடிச்சு ஆடியிருக்கீங்கன்னு நினைச்சாலும் கருத்துச் செறிவாய்....
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  13. இத இத இத இதத்தான் உங்க கிட்ட இருந்து எதிர்ரபார்த்தேன் . செம பதிவு அண்ணே

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான், அதான், அதுனாலதான் இப்படிக் கொடுத்தேன் எப்பூடி....

      நீக்கு
  14. அருமையான கருத்துக்கள் நாயகியை சூரையாடும் வரிகள் மிக அருமை அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  15. அழகான வரிகள்.
    த,ம.+1

    பதிலளிநீக்கு
  16. நண்பா!
    உமது பார்வை விடியலை நோக்கியா? விண்ணை நோக்கியா?
    (போட்டோவை பார்த்ததால் எழுந்த கருத்து)
    மேலான சிந்தனை, மேலான பார்வை, மேம்படட்டும் உமது எழுத்துப் பணி!
    முறுக்கு மீசைக் காராரின்(கில்லர்ஜி) நறுக்கான பதிவு!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுவை வேந்தனின் கருத்துரைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  17. மேலும் நற்கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி சகோ,

      நீக்கு
  18. அட! கில்லர்ஜி செமயா கவிதைல பில்லர்ஜி ! பின்னிட்டீங்க! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு! இப்படியெல்லாம் பட்டைய - சேய் இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைய கில்லர்ஜி கிட்ட சொல்லப்டாது...அவர் கில்லிடுவார்....- இப்படியெல்லாம் அனாயாசமாக எழுதியிருக்கீங்களே! அருமை ஜி! எங்கேயோ போய்ட்டீங்க.....(னான் எங்கேயும் போகல இங்கதான் சுத்திக்கிரு இருக்கேனு நீங்க சொல்றது காதுல விழுது...) ரொம்ப ரசிச்சோம் நண்பரே!

    இதே போல இன்னும் எழுதுங்க! நிறைய! வாழ்த்துக்கள்! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே போல இன்னும் எழுதுங்க... அப்படினா ? இதை காப்பி எடுத்து அடுத்த பதிவு போடவா ?

      நீக்கு
  19. பதில்கள்
    1. ஏன் ? கோபமா ? வாக்கு மட்டும் போட்டால் போதுமா ?

      நீக்கு
  20. மிகவும் அருமை. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன். உதாரணமாக வாடை, ஆடையும், நாயகன், வில்லனும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  21. ரத்தமும் சதையுமான சொல்கட்டமைப்பிற்குள்ளே ஒரு சிறு கதையே ஒளிந்து கிடக்கிறதே கில்லர்ஜி சார்,எழுதி முடித்து விடுங்கள் கையோடு/

    பதிலளிநீக்கு
  22. ரசிக்க வைக்கும் நல்ல சொல்லாடல் ஜி...

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  23. தயாரிப்பாளர் --> தயாரிப்பாளர்

    Germany Part, குடை வள்ளல் - இரண்டு பதிவுகளும் dashboard-ல் வந்துள்ளன... (?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாக குடை தைத்தேன் விரைவில் வரும்.

      நீக்கு
  24. வணக்கம்
    ஜி
    போங்க ஜி எங்கேயு போயிட்டீங்கள்.. செம அசத்தல்.... இரசிக்கவைக்கு வரிகள் பகிர்வுக்கு நன்றி. த.ம 16

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பா...

      நீக்கு
  25. சொற்களை எந்தெந்த அளவிற்குப் பயன்படுத்தலாம், அதே நிலையில் செய்தியையும் உள்ளீடாகத் தரலாம் என்பதை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற உங்களது பதிவுகளை மேம்போக்காக விட்டுவிடமுடியாது. ஆழமான செய்திகளும் உள்ளன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஸ்தாரமாய் அலசி, ஆராய்ந்து படித்தமைக்கு நன்றி முனைவரே...

      நீக்கு
  26. எதுகை மோனையுடன் வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே.!

    இரு வரி கவிதைகள் அருமை.! ஒவ்வொன்றும் இந்த சமுதாயத்தின் நிகழ்வுகளை, அவலங்களை சுட்டிக் காட்டுகின்றன.யோசித்து திறம்பட எழுதியிருக்கிறீர்கள்.!
    கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்.!

    இதனுடன் இன்னொரு பதிவாக," குடைவள்ளல்" என்று நேற்று தமிழ்மண முகப்பில் பார்த்தேனே.! அதை காணவில்லையே.? விபரத்திற்கு காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ குடையொன்று தைத்தேன் சிறிது குறையாகி விட்டது விரைவில் குடை விரியும்.

      நீக்கு
  28. சிந்தனை முத்துக்களா! சிந்தனையைத் தூண்டும் முத்துக்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் வருகைக்கும், கருத்துக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  29. படத்தில் நீங்க இருக்கீங்க....சரி, அவுகள காணோமே....????.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யேன் நண்பா, முதுகுல டின் கட்டிவிடப் பார்க்கிறீங்க ?

      நீக்கு
  30. ரைமிங் க்கும், டைம்மிக்கும் அட்டகாசம் அண்ணா! தொடர்ந்து கலக்குங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டெல்லாம் நல்லாத்தான்கீது, வருகைதான் மாசத்துக்கு ஒண்ணு ம்ம்.

      நீக்கு
  31. தாதம வருகைக்கு மன்னியுங்கள் ஜீ!
    அவளைச் சூறையாடியவர்களை அவளும் சூறையாடியது சரிதான்.
    அழகான சொல்லாடல். உரைவீச்சு என்று தமிழறிஞர் சாலய் இளந்திரையன் சொல்வார் இந்த இலக்கிய வகையை!
    உங்க ஊர்ல அப்படிச் சொல்வாங்களா, எங்க ஊர்ல,
    “திங்கிறவன் தின்னுட்டுப் போக
    திருவாலியாத்தான் தெண்டங்கட்டுனானாம்“ பாங்க. நல்ல ரசனையான படைப்ப

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டிற்க்கு நன்றி எங்கள் ஊரில் இப்படித்தான் சொல்வார்கள்.
      நண்பர் துரை செல்வராஜூ அவர்களும் இதையேதான் சொல்லியிருக்காங்க, நீங்க எல்லோருமே ஒரு ஏரியாதானே.

      நீக்கு
    2. பெயரில்லா3/03/2015 2:42 AM


      அப்பப்பா! பொல்லாத வம்பு தானே!
      வம்பு வரிகள்!....
      நல்லா எழுதியிருக்கீங்க!
      வேதா. இலங்காதிலகம்.

      நீக்கு
    3. இதிலென்ன வம்பு உள்ளதை உள்ளபடி எழுதினேன்.

      நீக்கு
  32. இது என்ன உங்கள் ஸ்டைல் திருக்குறளா நண்பரே.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிராக்டரை பார்க்கிங் செய்து விட்டு வருகை தந்து கருத்துரை கொடுத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  33. முண்டாசு கட்டிக்கொண்டு முரண்களின் அணிவகுப்பில் வார்த்தைகளை அநாயாசமாய் வைத்து விளையாடுகறீர்கள்.
    இரசனைக்கு உகந்த எழுத்துகள் படித்து முடித்த பின்னும் பல செய்திகளைச் சொல்கின்றன.
    நானும் இனி உங்களை நண்பரே என அழைப்பதை விடுத்துக் கவிஞரே என அழைக்கலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டுவி்ட்டது.
    வாழ்த்துகள் அய்யா!

    த மகூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே.... அழைப்பதில் பொய்யின்றி இருப்பது நன்று.

      நீக்கு