தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 26, 2024

குட்டிச்சுவரு...

ண்பர்களே... ஜெயிலர் என்றொரு திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள் ஒன்று என்னை மெய் சிலிர்த்து கேட்டு இரசிக்க வைத்தது அதனைக் குறித்து எழுத வேண்டுமென்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன். பாடலின் தொடக்க வரிகள் என்னவென்பதை என்னால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை காரணம் பின்னணி இசையின் மெல்லிய நீரோட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.
 
எனது மனதை மயக்கிய முக்கியமான வரி இதோ...
குட்டிச் சுவற்றை எட்டிப் பார்த்தா உசுரக் கொடுக்க கோடிப்பேரு...
 
ஆஹா என்னவொரு சந்தம் ‘’குட்டிச்சுவரு கோடிப்பேரு’’ கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறகு  சரியான பாடலாசிரியர் இல்லை என்ற மனக்கவலை தமிழக மக்களுக்கு தீர்ந்தது. பாடலாசிரியரின் பெயரைத் தேடினேன் வந்தது. புதிய பாடலாசிரியர் திரு. சூப்பர் சுப்பு அவர்கள். சரி பாடலின் உள்ளார்ந்த கருத்துக்கு போவோம். அதாவது உசுரக் கொடுக்க கோடிப்பேரு... இவர்கள் யார் ? சர்வ நிச்சயமாக ரசிகர்கள்தான் இது பாமரனுக்கும் தெரிந்த விடயம்.
 
அதாவது ரஜினி ரசிகர்களை மிகவும் உயர்வாகவே வைத்து இருக்கிறார். அடுத்து இந்தக் கோடிப்பேரு இதற்கு முன்னால் வரும் வரி குட்டிச் சுவற்றை எட்டிப் பார்த்தால் அதாவது இவர்கள் அந்தக் குட்டிச்சுவற்றின் பக்கமாக இருக்கின்றார்கள் அதாவது நிற்கின்றார்கள். அப்படித்தானே ? குட்டிச் சுவற்றின் பக்கம் நம்மூரில் நிற்பது எது ?
 
இதுதான் மக்களே எனது நெடுங்கால ஐயப்பாடு ரஜினி அவர்களுக்கு வேண்டுமானால் இதன் உள்ளார்ந்த அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பாடலாசிரியர் தமிழர்தானே ? அவருக்கு இதன் அர்த்தம் தெரியாமல் போவது எப்படி ? காலப்போக்கில் ரசனை மாற்றம் தேவைதான் அதற்காக இப்படி கருத்து மாற்றமும் தேவையா ? இப்பாடலும் அமோக வெற்றி பெற்று அடங்கி விட்டது அவ்வளவுதான். பாடலின் வரிகள் என்பது பாடலாசிரியரின் மறைவுக்குப் பிறகும் வாழணும் அதுதான் பாடல்.
 
இன்னும் எவ்வளவோ தத்துவார்த்தமான பாடல் வரிகள் நிறைந்து இருக்கிறது அவற்றில் சிலவற்றை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்...
 
தாய்க்கிழவி... தாய்க்கிழவி... தாய்க்கிழவி... தாய்க்கிழவி... இவ்வளவுதான் மீண்டும், மீண்டும் அதாவது கடைசி வரையில் இந்த வரிகள் மட்டுமே பாடல் முடிந்து விடுகிறது.
 
அடுத்து ஓட்டக் கருவாட்... ஓட்டக் கருவாட்... ஓட்டக் கருவாட்... ஓட்டக் கருவாட்... இதுவும் பாடல் முழுவதும் வந்து முடிந்து விடுகிறது.
 
மேலும் டானு, டானு, டானு... சீனு, சீனு, சீனு... மானு, மானு, மானு... டோனு, டோனு, டோனு... ஆஹா... என்னவொரு உண்மையை ஆசிரியர் கண்டு பிடித்து இருக்கிறார் பாருங்கள்.
 
அப்புறம் எவன்டி உன்னை பெத்தான் என் கையில கிடைச்சா செத்தான் இந்த தத்துவப்பாடலும் என் மனதை கவர்ந்தது.
 
மேலும் ஹேய் கோலி சோடாவே யேங் கறிக்குழம்பே உன் குட்டி பத்தினி நானே  ஆஹா... என்னவொரு உவமையை கையாண்டு இருக்கிறார்.
 
மேலும் தற்போதைய திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள், அதாவது சோகப்பாடலுக்கு நடனம் ஆடுவது அதுவும் என்னைக் கவர்ந்தது இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக எனக்கு தோன்றியது.
 
கில்லர்ஜி புதாபி

18 கருத்துகள்:

  1. இன்னும் பல பாடல்களின் ஆராய்ச்சியில் இறங்கினால், கண்ணதாசன் மற்றும் வாலியெல்லாம் கவிஞர்கள் என்ற சொல்லுக்குத் தகுதியானவர்களா? இந்த மாதிரி அர்த்தம் பொதிந்த இலக்கியத்தரமான பாடல்களை ஏன் அவர்களால் எழுத முடியவில்லை என்ற சந்தேகமும் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கூற்று உண்மைதான்.

      நீக்கு
  2. இப்போது இப்படி பட்ட பாடல்கள் தான் பிடிக்கிறது என்று சொல்லி கொண்டு குழந்தைகளை வேறு ஆட வைத்து ரசிக்கிறார்கள் பெற்றோர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ நிறைய பெற்றோர்கள் இப்படித்தான்...

      நீக்கு
  3. 'அட்றா அவளை...  வெட்றா அவளை...,'  'ஷூட் த குருவி ஷுட் த குருவி.'.போன்ற காவியப் பாடல்களை ஏன் விட்டு விட்டீர்கள்... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இது காவியப்பாடலா ? காவாலிப்பாடலா ?

      நீக்கு
  4. கலி காலம்! அவசர உலகம்! ஏதோ ஒரு பாடல் வேண்டும்! இசையை மட்டும் நம்பி எழு தப்படும் பாடல் தாத்தா வந்தாரு! கதற விட போறாரு! போன்ற உலக தத்துவ பாடல்களை கேட்க வேண்டி இருக்கிறது!


    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆராய்ச்சி! 'எவண்டி உன்னை பெத்தான் என் கையில் கிடைச்சா செத்தான்' டி ராஜேந்தர் இப்படி ரைமிங்காகப் பேசினாலும் கூட இந்த அளவு வார்த்தைகளைப் போட்டுக் கேட்டதில்லை என் நினைவு வரையில்.

    பழைய கவிஞர்கள் நினைவுக்கு வருகிறார்கள்! அருமையான பாடல்கள் சினிமாக்காலம் அது!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. சூப்பர் சுப்புவா!!! இவங்களே சூப்பர்னு வெச்சுக்குவாங்க போல!

    கில்லர்ஜி! முதல்ல நான் பாடல்கள் கேட்பது அபூர்வம் அதுவும் புதுப்பாடல்கள் பல தெரியவே தெரியாது. பழைய பாடல்களுமே வரிகளை விட மெட்டும் இசையும் தான் மனதில் முதலில் படும். அதனால நீங்க ஆராந்து சொல்லியிருக்கும் வரிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் மனதில் வேதனை தரும் விஷயம்

    இன்றைய பாடல்கள் ஒரு புறம் இருக்கட்டும், இந்தப் பாடல்களுக்கு ஆடி, பெரியவங்க ஆடறது பத்தாதுன்னு சின்னக் குழந்தைகளையும் ஆட வைச்சு ஷார்ட்ஸ்னு போடறாங்க பாருங்க....எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் focused life ஆக இல்லாமல் எதையோ நோக்கிச் சொல்வதற்குப் பெற்றோரும் துணை புரிவது மனதுக்கு வேதனை.

    அதனால்தான் நான் அடிக்கடி சொல்வது பெற்றோர் வளர்ப்பு, அந்தக்காலமானாலும் சரி இந்தக்காலமானாலும் சரி மிக மிக மிக முக்கியம் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எதிர்கால சந்ததியினரைப்பற்றிய கவலை இங்கு யாருக்கும் கிடையாது.

      நீக்கு
  7. எல்லாம் கருத்தாழமிக்க பாடல்கள்! என்ன சொல்ல! வேதனை தான்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இக்கால பாடல்களைப் பற்றி நல்ல அலசல். எனக்கு இந்த மாதிரியான இப்போதைய புதுப் பாடல்கள் எதுவும் தெரியாது. பாடல் வரிகள் மட்டுமின்றி அதன் தொடர்பான காட்சிகளும் பார்த்ததில்லை. இங்குதான் இப்படியான பாடல்களை படித்து தெரிந்து கொண்டேன். நீங்கள் கூறுவது போல் பழையனவைகள் என்றும் மறக்க இயலாத பாடல்கள்தாம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இவ்வகை பாடல்களை அறிந்து கொள்ளாமல் இருப்பதே நன்று.

      நீக்கு