தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 01, 2024

ஆத்தூர், ஆதார் ஆராயி

 

தார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக் கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன செய்தோம் ? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத் தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.
 
சரி புகைப்படம்தான் இப்படி இருக்கிறது அகவையைக் கூடவா மாற்றி அடிப்பார்கள் ? அதுவும் நம்பவே முடியாத வகையில் 123 என்று இதனால் 41 அகவையுள்ள ஒரு பெண்மணி ஆதார் இருந்தும், எந்த வகையிலும் பயன் படாத முறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இப்படி வேலையில் கவனமின்மையாக செயல்படுவதின் அடிப்படை காரணம். ஆளும் அரசுகளின் கட்டமைப்பு இல்லாத நிர்வாகம்.
 
காரணம் மேலிடத்திலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரையில் இந்த மெத்தப் போக்குத்தனம் இருக்கிறது. தவறுகளுக்கு சரியான தண்டனை கொடுக்காதது. இருந்தாலும் அதனையும் மூடி மறைத்து சரி செய்து விடும். அயோக்கியத்தனம். சமீபத்தில் இடைத்தேர்தல் முடிந்தது அடுத்த இரண்டு தினங்களில் கேஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்வு. ஏன் முதல் வாரமே செய்யவில்லை ? இந்த மக்கள் எதையும் கேட்க வக்கு இல்லாதவர்கள் காரணம் வாக்கு அளிக்க பணம் பெறுவதால் அதன் கடன் முடிந்து விடுகிறது.
 
இது மத்திய அரசு, தேர்தல் மாநில அரசு என்று சொல்ல வேண்டாம் எல்லா அரசியல் கட்சிகளுமே நிழலில் ஓர் கூட்டும், நிஜத்தில் ஓர் கூட்டும் உள்ளவர்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் பேச்சு மாறும். காலம் முழுவதும் நாம் அரசியல்வாதிகளை குறை சொல்லியே நமது தவறுகளை மறந்து விடுகிறோம். நாம் செய்த தவறே அவர்களை குற்றம் செய்ய வைக்கும் அதிகாரத்தை கொடுக்கிறது என்பதை அறியா மடந்தைகளாக வாழ்கிறோம்.
 
வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது வேசித்தனமான செயல் என்பதை ஒவ்வொரு ஆண்-பெண் வாக்காளர்களும் உணர வேண்டும். இன்றாவது உணர்ந்து நமது பிள்ளைகளுக்கும் இந்த உண்மையை உணர வைப்போம். அவர்களும் நேர்மையாக வாக்களிப்பாளர்கள். அன்று நேர்மையானவர்களும் தேர்தலில் நிற்பார்கள். காரணம் அரசியல்வாதிகள் வானிலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல நமது பிள்ளைகளோடு, பிள்ளைகளாக வளர்ந்தவர்களே...
 
அரபு நாட்டில் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு பயந்து வேலை செய்வார்கள். நான் அனுபவித்த உண்மை. இங்கு மக்கள் அரசு ஊழியர்களுக்கு பயந்து வாழவேண்டிய நிலையை வைத்து இருக்கிறோம். அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் நமக்கு வாக்குரிமை உண்டு. வாக்கின் தன்மை உணராத நமக்கு வாக்கு எதற்கு ? இப்பொழுதே மன்னராட்சி போல நடக்கிறது. இன்றே சிந்திப்போம் நாளை நமது சந்ததிகளுக்காகவாவது...
 
கில்லர்ஜி புதாபி
 
Chivas Regal சிவசம்போ-
வயசு அடிக்கும்போது ஒன், ட்டூ, த்ரீ-னு அடிச்சுருப்பான்.

28 கருத்துகள்:

  1. உண்மையிலேயே பொறுப்பற்ற அரசு நிர்வாகங்கள். சுட்டிக்காட்டி சரி செய்யச் சொன்னால் கூட நம்மிடமே காசு கேட்பார்கள் - அதுவும் கட்டணம் என்ற பெயரில் அதிகாரபூர்வ லஞ்சமாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இது மாதிரி பொறுப்பற்ற தனங்களையோ, நம் வேலைகளை முடிக்க கடுமையாகவோ நடந்து கொண்டால் யார் நம்மை காலி செய்வார்கள் என்றே தெரியாமல் காலி செய்துவிடுவார்கள்.  பேப்பரில் இரண்டு வரிச்  செய்தி.  பொதுமக்கள் சிலபேர் உச் கொட்டுவார்கள்.  அப்புறம் வழக்கம்போல இதுவும் கடந்துபோய் மறந்து விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி தமிழனுக்கு தேசிய வியாதி - அதிரா அங்கிள்

      நீக்கு
  3. இனியும் மக்கள் காசு வாங்காமலோ, நியாய அநியாயம் கண்டோ வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்.  எவரும் திருந்தப்போவதில்லை.  புலம்பும் சிலர் மட்டும் புலம்பி கொண்டே இருக்க வேண்டியதுதான்.  முப்பது சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவே செல்வதில்லை.  அதை- தேர்தல் நாளை - ஒரு  ஜாலியான விடுமுறையாகக் கருதி மெதுவாக எழுந்து சினிமா பீச் மால் என்று சுற்றுவார்கள். 

    பொறுப்பான மக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கின் தன்மை தெரியாதவர்க்கு வாக்குரிமை எதற்கு ?

      நீக்கு
  4. ஆதார் அட்டைப் பிரச்சனைகள் ஒரு யுகத்திற்கு முந்தையது. மிகச் சுலபமாகச் சரிசெய்துவிடலாம். ஓரளவு எல்லா வசதிகளும் வந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      என்னைப் போன்ற பாமரர்களுக்கு ?

      நீக்கு
  5. ஏழைகள் நிறைந்த நூறு பேர் இருக்கும் பகுதியில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான அரசியல்வாதி ஐநூறு ரூபாய் கொடுத்து வாக்களிக்கச் சொன்னால், அவர்கள் வாக்களிக்காமல் என்ன செய்வார்கள்? வாக்களித்த பெட்டியில் வார்டு விவரங்கள் தெரிந்துவிடுமே, பிறகு ரௌடிகளை யார் எதிர்கொள்வது என நினைப்பார்கள், அடிப்படை வசதிகளே வீட்டில் இல்லை எனும்போது, ஐநூறு ரூபாய் ஐந்து நாட்களுக்குச் சோறு போடுமே. அது முக்கியமா இல்லை அரசியல் கணக்குகள் முக்கியமா?

    இதைவிட, வாக்களிக்காதவர்களுக்கு அடுத்த தேர்தல் வரை எந்தச் சலுகையும் கிடையாது, அரச்சின் எந்த உதவியும் அவர்களுக்குக் கிடையாது என்ற நிலைமை வந்தால் நல்லது. இருபது சத மக்கள் இந்திய ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. பதிவும் அதன் சிந்தனைகளும் அருமை!
    நெல்லைத்தமிழன் கேட்பது போல, படித்தவர்களே பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும்போது, அடுத்த நாள் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் ஒரு நாளாவது வயிறார சாப்பிட அந்தப் பணத்தை வாங்கத்தானே செய்வார்கள்?
    நீங்கள் சொல்வது போல, இங்கே அந்தப்பிரச்சினை இல்லை. இங்கேயே காலம் முழுவதும் வாழ்ந்து விட்டு, ஊருக்கு வரும்போது சின்ன சின்ன விஷயத்துக்கூட அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கத்தெரியாமல் முழிக்க வேண்டியிருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //லஞ்சம் கொடுக்கத் தெரியாமல் முழிக்க வேண்டியிருக்கிறது//

      ஆம் உண்மைதான் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. கில்லர்ஜி மக்கள் மாறாத வரையில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. படிச்சவங்களே அப்படி இருக்கறப்ப அடித்தட்டு மக்களை நாம் என்ன சொல்ல முடியும்?

    ஆதார் பத்தி சொல்லாதீங்க. முகவரி மாற்றணும்னா ஆன்லைன்ல மாற்றிடலாம்னு சொல்றாங்க. அது வீட்டுத் தலைவருக்கு மட்டுமே முடியுது. அவர் தயவில் இருக்கும் மனைவி குழந்தைக்கு முடிவதில்லை. அவர்களின் பெயரில் ஆதார் கேட்கும் ஆதாரங்கள் வேண்டும். நாங்க அந்த வீட்டுத்தலைவரின் கீழ் ஒரே முகவரிலதானே இருக்கோம்னாலும் அவருடைய ஆதாரங்கள் ஆதார் நம்பர் எதுவுமே செல்லுபடியாகாது. ஆன்லைனில் முடிவதில்லை. நம்ம பெயர்ல காஸ் சிலிண்டர் அல்லது ஏதேனும் ஒன்று இருக்கணும். அது இல்லைனா முடியாது முகவர் மூலம்தான் மாத்தணுமா இருக்கு ஒரு கார்டிற்கு 250 லருந்து 300 வரை ஆகுது ஒவ்வொரு முறையும். அது சரி அதே விவரங்கள்தானே முகவரிடமும் கொடுக்கிறோம் ஆனா அவரால எப்படிப் பெற்றுத் தர முடிகிறது? அதே விவரங்களை நாங்க வீட்டிலிருந்து கொடுத்தால் ஏன் கிடைப்பதில்லை?

    ஸோ....பல கேள்விகள் எழுகின்றன. நீங்கள் சொல்லியிருப்பது போல் கட்டமைப்பு சரியில்லை. ஆன்லைன் கூட ஒழுங்காக டிஜிட்டலைஸ் செய்யவில்லை.
    இப்ப சமீபத்தில் ஒரு வேலை முடித்து கொடுத்தேன் டிஜிட்டல் ஆகும் ஒரு விஷயம். ஆனால் அதில் கொடுக்கப்பட்ட விவரங்கள் கேள்விகள் எதுவுமே ஒழுங்காக இல்லை. ஆனால் டிஜிட்டலைஸ் செய்வதற்கான விவரங்கள் ஒழுங்காக இல்லை. அது வெளியில் வரும் போது எப்படி சரியாக இருக்கும்? அதுவும் பல மொழிகளில் வரும் போது? அரசு ஊழியர்களும் சரி, அவுட்சோர்ஸ் எடுக்கும் நிறுவனங்களும் சரி சரியாக அதைச் செய்யவில்லை என்று தெரிந்தது. நிறைய சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆதங்கத்தின் வெளிப்பாடு. பல விஷயங்களில் பல மாற்றங்கள் தேவை. ஆனால் மாற்றம் இங்கே வருவதில் பல சிக்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆமாம் சிக்கல் தீர்வதற்கு வழியில்லை

      நீக்கு
  9. இப்படியான பிழைகள் பொதுமக்களுக்கு மிகவும் பிரச்சனையாகிவிடுகிறது. நீங்கள் சொல்வது போல் அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் தேர்தலுக்குப் பின் என்று வகைப்படுத்தலாம். பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள் ஒருபுறம். என்ன சொல்ல? இப்படித்தான் என்று ஆகிவிட்டது. இப்போது காசு வாங்கும் தலைமுறைக்குப் பிறகு அடுத்த இளைய சமுதாயம் முன்னோட்டு வந்தால்தான் மாறும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மாற்றம் வரும் என்று நம்புவோம்.

      நீக்கு
  10. நாம் புலம்பி நம் மனதை ஆத்தி கொள்ள வேண்டியதுதான் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

    நான் உயிர்வாழ் சான்றிதழ் ஓய்வூதியம் வழங்க கருவூலத்தில் கொடுத்து வந்ததை சரியாக பார்க்காமல் வர வில்லை என்று மூன்று மாதம் ஓய்வூதியம் வரவில்லை. பின் தம்பி நேரில் போய் சான்றிதழை (நான் அனுப்பியதை) காட்டி வந்த பின் மூன்று மாத சேர்த்து அனுப்பினார்கள். மீண்டும் செய்தி அனுப்பி இருக்கிறார்கள் வரவில்லை, சான்றிதழ் நேரில் வரவும் என்று.

    இன்று ஒரு நகைச்சுவை நாடகம் பார்த்தேன், கணவர் பெயரை மாற்றி கொடுத்து இருக்கிறார்கள் ஆதார் அட்டையில் அவர் அந்த பெண் வீட்டுக்கு வந்து அர்சாங்கம் நீதான் என் மனைவி என்று சொல்கிறது, என் கூட நம்ம வீட்டுக்கு வா என்று அழைப்பதாக.

    41 வயது பெண்மணியை 123 என்று போட்டு அவரை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறார்களே! என்ன சொல்வது அவர்கள் பணியில் கவனமில்லாமல் இருப்பது வேதனைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. இங்கே பதிவில் சொல்வதை விட ஒரு ஆட்டு மந்தையிடம் இந்த கருத்துக்களை சொல்லலாம் அவைகளாவது நின்று கொண்டிருக்கும். அவரவர் ஜோலி அவரவருக்கு. தேர்தல் ஒரு சூதாட்டம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    ஆதார் அட்டையில் அந்தப் பெண்ணின் வயதின் மாற்றம் மிகவும் கண்டிக்கத்தக்கது. என்ன கவனமின்மையோ இல்லை, அலட்சியமோ, பணியில் இருப்பவர்களுக்கு. என்ன செய்வது!! மக்கள் பாடு இப்படி திண்டாட்டமாகி விடுகிறது. பாவம்.!

    பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு