தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 08, 2024

வசம்புவாயனும், வடிச்சகஞ்சியும்

ணக்கம் வசம்புவாயண்ணே நல்லா இருக்கியளா ?
வாடாத்தம்பி வடிச்சகஞ்சி நல்லா இருக்கியாடா ? என்ன இந்தப்பக்கம் ?
 
சில சந்தேகம் வந்துச்சு அதான் கேட்டுப் போகலாம்ணு...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
 
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் அப்படினு சுவத்துல எழுதிப்போட்டு இருக்காகளே அது எப்படிணே ?
தம்பி பக்கத்து தெரு பஞ்சாட்சரம் செத்துப் போயிட்டான்னு வச்சுக்க அது துக்கம், அவனுக்கு நீ பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கணும்னு வச்சுக்க அது சந்தோஷம்டா...
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
வாத்தியாருகள் எல்லோருமே பிள்ளைகளை படிக்கச் சொல்லி தொந்தரவு பண்ணுறாங்களே ஏண்ணே ?
படிச்சாத்தான்டா கலெக்டர். ஆகலாம், போலீஸ் அதிகாரியாகலாம், வழக்கறிஞர் ஆகலாம் அதுக்குத்தான்டா.
அப்படீனாக்கா... அவுங்க மட்டும் படிச்சுட்டு கலெக்டர் ஆகாம ஏண்ணே வாத்தியார் வேலை செய்யிறாங்க ?
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
அமாவாசை அன்னைக்கு சில பேரு வீட்டுல விரதம் இருந்து காக்காய்க்கு சோறு வக்கிறாங்களே ஏண்ணே ?
தம்பி இறந்து போன தகப்பனார் அன்னைக்கு காக்கா உருவத்துல வருவாரு அதுக்காகத்தான் சோறு வக்கிறாங்கடா...
அப்படீனாக்கா... உசுரோட இருக்கும்போது எதுக்குணே முதியோர் இல்லத்துல விடுறாங்க ?
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
பணத்தை செலவு செஞ்சு பிள்ளைகளை படிக்க வச்சு அத்தக் கூலிதானே கிடைக்கும் ?
படிச்சாத்தான்டா வேலை கிடைக்கும் நமக்கும் பெருமை, நல்ல இடத்துல சம்பந்தம் செய்யலாம் அதுதான் வேணும்..
பணத்தை தண்டச்செலவு செய்யிறதுக்கு படிக்காமல் அரசியலுக்கு போயிட்டா, கோடி கோடியா சம்பாரிக்கலாமேணே ?
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
படிக்கும்போது பொய் பேசக்கூடாதுனு சொல்லித் தருவாங்களாண்ணே ?
ஆமாடா படிக்கும் போதே நல்ல பழக்கம் வந்தால்தானே தொழில்ல நல்லபடியா முன்னேற முடியும்.
அப்படினாக்கா... வக்கீல் வேலைக்கு போனால் பொய் சொல்லாமல் முன்னேற முடியுமாண்ணே ?
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
நாம நாட்டுக்காக ஏதாவது நல்லது செய்தால் வரலாற்றில் இடம் பெறுவோம்னு சொல்றாங்களே உண்மையாண்ணே ?
ஆமாடா காந்தி நமக்காக உயிரை விட்டார் அதனாலதான் அவர் ரூபாய் தாளில் இடம் பெற்று மக்கள் மனதிலும் தினம் பேசப்படுறாரு...
அப்படினாக்கா... கொலை செய்த கோட்சேவை ஏண்ணே மக்கள் மனதில் வச்சு இருக்காங்க ?
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
நம்ம கிழக்குத்தெரு கிருஷ்ணன் தூக்குப் போட்டு செத்துட்டாராமே ஏண்ணே ?
ஆமாடா பயிர்த்தொழிலுக்கு நாற்பதாயிரம் கடன் வாங்கி இருக்காரு, அதை வங்கிகாரங்க கேட்டு நச்சரிக்கவும் தொல்லை தாங்காம மனுஷன் தொங்கிட்டாருடா...
அப்படினாக்கா... கோடிக்கணக்குல கடன் வாங்குன விஜய் மல்லையா, அதானி இவுங்கள்லாம் எப்பணே தொங்குவாங்க ?
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
கில்லர்ஜி புதாபி

14 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சரியாத்தான் கேட்கிறார் கேள்விகள்…

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கே உரித்தான பதிவு..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மிகவும் யதர்த்தமான அனைவரும் கேட்க கூடிய கேள்வி பதில்கள்! தொடரட்டும் தங்கள் பணி!
    https://www.krishnalaya.com
    https://atchaya50.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நல்வரவு.

      நீக்கு
  4. சிரித்துவிட்டேன் சிலது குறிப்பாகக் கடைசி.

    கில்லர்ஜி வக்கீலுக்கு அவர் வேண்டுமென்றே பொய் சொல்லலியே அது அவரது தொழில். தன்னிடம் வருபவரைக் காப்பாற்றுதல். ஆனா அதைவிடப் பொய் சொல்றவங்க அரசியல்வாதிகள் அவங்கள்லயும் படிச்சவங்க இருக்காங்களே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. சுவாரஸ்யமான கேள்விகள், நச் பதில்கள்.   பதிலுக்கு அப்புறமான கேள்வியும் நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கள் பாணியில் அமைந்த கேள்விகளையும், பதில்களையும் ரசித்து படித்தேன். அண்ணன், தம்பி பெயர்களை நீங்கள் எப்படித்தான் பொருத்தமாக கணிக்கிறீர்களோ? வாழ்த்துகள்.

    இந்த தடவை ரசித்து படிக்க நகைச்சுவை நடிகர்கள் செந்தில் கவுண்டமணியும் நேரிலேயே (படங்களில்) வந்து விட்டார்களே.? ஹா ஹா ஹா. தொடரட்டும் தங்களின் கேள்வி பதில்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. கேள்வியும்,பதிலும் அருமை. செந்தில், கவுண்டமணி குரலில் கேல்விகளும், பதில்களும் ஒலித்தன. நகைச்சுவை பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு