தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 13, 2024

ஜெய்ஹிந்த்புரம், ஜெயின் ஜெயந்தி

கோவைக் கனியே என்றேன்
தேவை மணியே என்றாள்
சேலத்து மாம்பழம் என்றேன்
வேண்டும் சம்பளம் என்றாள்
 
அவளை நீ நிலவு என்றேன்
மனதை களவு கொண்டாள்
அவளை கரும்பால் இழுத்தேன்
என்னை இரும்பால் வழித்தாள்
 
அவளை விழியால் அழைத்தேன்
என்னை வாளியால் அடித்தாள்
தங்க ஜெயின் கொடுத்தேன்
எனக்கு ஜெயில் கொடுத்தாள்
 
கில்லர்ஜி அபுதாபி
 
காணொளி

14 கருத்துகள்:

  1. கவிதை நன்றாக இருக்கிறது.
    காணொளி பார்த்தேன். இவ்வளவு தங்க ஜெயின் கொடுத்தீர்களா?
    அன்பு உள்ளம் கொண்டவர் என்றால் "புன்னகை போதும் பொன்நகை வேண்டாம்" என்று இருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது. வார்த்தை சொல்லாடல்களை ரசித்தேன்.

    காணொளியும் அருமை.
    /அவளை விழியால் அழைத்தேன்
    என்னை வாளியால் அடித்தாள்/

    ஹா ஹா ஹா அந்த வாளிகள் நிரம்ப எடுத்து குவித்த தங்க கழுத்தாபரணங்களோ அவை.? கவிதைக்கு பொருத்தமான படம்.

    அவள்தான் ஆரம்பத்திலேயே "தேவை மணியே" எனக்கூறி விட்டாள் என குறிப்பிட்டிருக்கும் வரிகளும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. ரசித்தேன். 

    தங்கச்செயினா, ஜெயினா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் ஜெயின் என்று எழுதுகின்றார்களே ஜி

      நீக்கு
  4. இப்படி மாட்டிக்குவீங்களா!!!! ஹாஹாஹாஹா

    ஜெயின்?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கொள்ளையடித்த நகைகளா? நான் அபுதாபியில் உள்ள நகைக்கடையோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றாக இருக்கிறது தங்களின் கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  7. கவிதை நன்று. காணொளியும் கண்டேன். தங்கம் மீதான மோகம் எப்போது குறைவது? அதன் மீது அதீத ஆசை வைத்திருக்கிறார்கள் அனைவருமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு