தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 30, 2024

ஆண்ட பரம்பரை

01.  கன்னி அவளை
   கண் வைக்காதே
 
02.  கல்யாணம் செய்ய
   கடன் வாங்காதே
 
03.  காளி வீட்டை
   காலி செய்திடு
 
04.  காவ்யாவை
   காய விடாதே
 
05.  கிளியவளை
   கிழித்திடாதே
 
06.  கீர்த்தனாவுக்கு
   கீர்த்தனை செய் 
 
07.  கொட்டடியில்
   கொட்டியதா தேள்
 
08.  மோதியோடு
   மோதி விடாதே
 
09.  பட்டம் விற்றாவது
   பட்டம் வாங்கி விடு
 
10.  புலால் உண்ணாமல்
   புலனை அடக்காதே
 
11.  அம்மாவுக்காக
   அப்பாவை நேசி
 
12.  அன்பைத்தேடி
   அலையாதே
 
13.  உறவுகளுக்காக
   உதவி செய்திடு
 
14.  சதி அவளை
   சதி செய்யாதே
 
15.  நயவஞ்சகனை
   நம்பி விடாதே
 
16.  நண்பன் மீது
   நம்பிக்கை வை
 
17.  நித்தியாவை
   நினைத்திடு
 
18.  மனைவிக்காக
   மனை வாங்கு
 
19.  மரத்தின் பலனை
   மறந்து விடாதே
 
20.  மலர் அவளை
   மறந்து விடாதே
 
21.  கூலி கிடைப்பதால்
   கூஜா தூக்காதே
 
22.  ஊர்ந்து போயாவது
   ஊர்மிளாவை பார்
 
23.  குற்றம் செய்வதை
   குறைக்க முயற்சி
 
24.  ஆண்ட பரம்பரை நீ 
   ஆண்டியாகி விடாதே
 
கில்லர்ஜி தேவகோட்டை 
 
Chivas Regal சிவசம்போ-
யாரு எங்கே எவுகளை ஆண்டாங்கனு சொல்லலையே... ஊருல நிறையப்பேரு இப்படித்தான் சொல்லுறாங்க...

3 கருத்துகள்:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்றாக இருக்கிறது
    தலைப்பு வரி கடைசியில் வந்து விட்டது.
    மரத்தின் பலனை மறந்து விடாமல் இருக்க வேண்டும் உண்மை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் வரிகளை அமைத்த விதத்தை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு