தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 10, 2016

லால்குடி, லொள்ளு லோகநாதன்


01. எவ்வளவுதான் பெரிய ஆளாயிருந்து, AK-47 துப்பாக்கியில சுட்டாலும் அதை வச்சு அவரால ஒரு சப்பாத்தி சுடமுடியுமா ? இதுதாங்க WORLD.

02. எங்க அப்பத்தா நான் 16 புள்ளயப் பெத்தேன்னு பீத்திக் கொண்டாலும் எங்க தாத்தா இல்லைனா பெத்துருக்க முடியுமா ? இதுதாங்க LIFE.

03. கொன்னுட்டாங்கன்னா கொலைனு சொல்றோம், தன்னால செத்துட்டான்னா தற்கொலைனு சொல்றோம் அதுக்காக இங்கிலீஷுல தற்கொலைக்கு தற்மர்டர்னு சொல்ல முடியுமா ? இதுதாங்க LANGUAGE.

04. பங்களாதேஷ்ல பங்களாவே சொந்தமாக இருந்தாலும் துபாய்க்கு வந்தா தூப்பாய் கழுவனும் சவுதிக்கு வந்தா சகதியில நிற்கணும் இதுதாங்க வெளிநாட்டு WORK.

05. கணக்கு வாத்தியார் மகளை கணக்கு பண்ணலாம் அதுக்காக விளையாட்டு வாத்தியார் மகளோட விளையாட முடியுமா ? இதுதாங்க REALITY.

06. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் எல்லா வேலைக்கும் ஆள் வச்சுக்கிறலாம் அதுக்காக முதலிரவுக்கு கூலிக்கு ஆளை விட முடியுமா ? இதுதாங்க TRUE.

07. எனக்கு பிடிச்சபடி நான் வாழுறேன் சமூகத்தைப் பத்தி கவலை இல்லை என்று ரோட்டுல நிர்வாணமா நடக்க முடியுமா ? இதுதாங்க SOCIETY.

08. புன்னகையே பெண்களுக்கு பொன் நகை அப்படினு சொல்றதுக்காக புன்னகையை அடகு கடையில வைக்க முடியுமா ? இதுதாங்க SITUATION.

09. அண்ணன் பொண்டாட்டியை அண்ணினு சொல்றோம் அதுக்காக தம்பி பொண்டாட்டியை தண்ணினு சொல்ல முடியுமா ? இதுதாங்க RELATIONSHIP.

10. தமிழன் எவ்வளவுதான் படிச்சு இங்கிலீஷுல பேசுனாலும் காலில் முள்ளு குத்தினா மம்மினு கத்த முடியுமா ? இதுதாங்க  MOTHER’ s LOVE.

11. முள்ளை முள்ளாலே எடுக்கணும் வைரத்தை வைரத்தாலே அறுக்கணும் என்பதற்க்காக மரத்தை மரத்தாலே அறுக்க முடியுமா ? இதுதாங்க NATURE.

12. எனக்கு அடுத்தவன் உதவி தேவையில்லை என்பதற்க்காக பாடையை தூக்க வேண்டாம் சுடுகாட்டுக்கு நடந்தே வர்றேனு சொல்ல முடியுமா ? இதுதாங்க DEATH.

13. அவரு100 ஆபரேஷனுக்கு மேலே செய்த டாக்டர்னுங்கிறதுக்காக அவருடைய கிட்னி ஆபரேஷனை அவரே செய்ய முடியுமா ? இதுதாங்க MEDICAL STUDIES.

14. மாணவன் தப்பு செய்தால் வாத்தியார் அடிக்கிறாரு வாத்தியார் தப்பு செய்தால் மாணவன் அடிக்க முடியுமா ? இதுதாங்க TEACHER.

15. மனுசன் அடிச்சான்னா திருப்பி அடிக்கிறோம் நாய் கடிச்சா திருப்பி கடிக்க முடியுமா ? இதுதாங்க நாய்க்கடி (Dog bite)

CHIVAS REGAL சிவசம்போ-
துப்பாக்கியை பார்த்தா, AK-47 மாதிரி இல்லையே குருவி சுடுறது மாதிரி இருக்கு.


சாம்பசிவம்-
லோகு கடிச்சது போதாதுன்னு ஓங்கடி வேற...

திங்கள், பிப்ரவரி 08, 2016

என் நூல் அகம் 7


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் ’’கம்பன் தமிழும் கணினித் தமிழும்’’

சனி, பிப்ரவரி 06, 2016

16-ம் பெற்று தெருவில் விற்று


இந்த உலகத்தில் நானும் வாழ்ந்திருந்ததற்கு அடையாளமாக எதையாவது, விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்து, எழுந்து கீழே விழுந்து கொண்டே..... இருக்கிறது நான் வரும் பொழுது எதையுமே கொண்டு வரவில்லை வாழும் காலங்களுக்காக நான் இரவல் வாங்கிய உடைகளைக் கூட போகும்போது எடுத்துக் கொள்வார்களே அய்யகோ நான் வேறு எதை விட்டுச் செல்லமுடியும் ?

01
எனது பற்களை கொடுப்போம் என்றால் இனிப்பான கோபால் பல் பொடியில் பல் துலக்கியதால் இனிப்போடு சேர்த்து பற்களைப் பூராம் பூச்சி தின்று விட்டது,

02 
வாயை யாருக்காவது கொடுப்போம் என்றால் இது ஒரு உளறுவாய் தேவையில்லை என்று சொல்லி 
விட்டார்கள்,

03
எனது மூக்கை கொடுப்போம் என்றால் அலிபாபா குகை போலிருக்கு வேண்டாமென சொல்லி விட்டார்கள்,

04 
எனது காதை கொடுப்போம் என்றால் அது கேட்காது என்று சொல்லி விட்டார்கள்,

05
எனது கண்ணை கொடுப்போம் என்றால் கணினி ஏற்கனவே மண்ணை அள்ளி போட்ருச்சு,

06 
எனது முடியை கொடுப்போம் என்றால் மூடிக்கிட்டுப் போ என்று சொல்லி விட்டார்கள்,

07
எனது மண்டையோட்டை கொடுப்போம் என்றால் இப்பொழுது திருவோடு தூக்கி கொண்டு யாரும் தெருவோடு போவதில்லையாம்,

08
எனது மூளையை கொடுப்போம் என்றால் அது உன்னிடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்,

09
எனது இதயத்தை கொடுப்போம் என்றால் இரண்டாவது படிக்கும் போதே இனியா திருடிக்கொண்டு போய் விட்டாள்,

10 
எனது குடலை கொடுப்போம் என்றால் ஏற்கனவே பசிக் கொடுமையிலே சிறுகுடலை பெருங்குடல் தின்னுருச்சாம்,

11
எனது கல்லீரலை கொடுப்போம் என்றால் அது கல்போல ஆகிவிட்டது,

12 
எனது ரத்தத்தை கொடுப்போம் என்றால் NAPOLEAN உதவியால் அதில் பித்தம் கலந்து விட்டதாம்,

13
எனது கிட்னியை கொடுப்போம் என்றால் நான் உழைத்து... உழைத்து இரண்டுமே சட்னியாகி விட்டது,

14
எனது கைகளை யாருக்காவது கொடுப்போம் என்றால் லஞ்சம் வாங்கி... வாங்கி கறை படிஞ்சு போச்சாம்,

15
எனது கையிலுள்ள ரேகைகளை கொடுப்போம் என்றால் ஏற்கனவே கேது எட்டாம் வீட்டுல வாடகை கொடுக்காம பனிரெண்டு வருசமா குடியிருக்கான்,

16
எனது கால்களை கொடுப்போம் என்றால் நீ நடக்கும்போது கால் வடக்கு திசை நோக்கிப் போகுது... என்று வேண்டாமென சொல்லி விட்டார்கள்.
  
தனக்கு ஆறறிவு என போட்டுக் கொண்ட மனிதர்கள்...

ஆயினும் மனிதனால் ஓரறிவு எனகொடுக்கப்பட்ட ''கரையான்கள்'' என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ள காத்திருக்கின்றன.... என்னால் மனிதனுக்கு எதையும் விட்டுச்செல்ல முடியவில்லை எனினும் இந்த உடல் முழுவதும் கரையானுக்காகவாவது விட்டு செல்ல முடிகிறதே...... என்றும் இந்த விசயங்களையாவது ஆறறிவு மனிதனுக்கு www.killergee.blogspot.com மில் போட்டு செல்ல முடிகிறதே... என்ற சந்தோஷத்துடன் வடக்குதெரு நோக்கி நடந்து செல்கின்றேன்.

வியாழன், பிப்ரவரி 04, 2016

புதிய சட்டம்


இந்த புகைப்படத்தில் விமான நிலையத்துக்கு முன்பு இருக்கும் பாலத்தை எடுத்து விட்டு தங்களது பார்வைக்கு வைத்து இருக்கிறேன் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

(இதை நான் கடந்த 05.10.2012 அன்று அதிகாலை From U.A.E Capital City Abu Dhabi to Germany Capital City Frankfurt விமானத்தில் பறக்கும் பொழுது உறக்கம் வராத காரணத்தால் எழுதியது)

சில நேரங்களில்... கடத்தல்காரர்களால் விமானங்கள் கடத்தப்படுகிறது அதை மீட்க அரசாங்கம் பல வகைகளிலும் செலவு செய்து ராணுவத்தையோ காவல்துறை வீரர்களையோ அனுப்பி சில நேரங்களில் உயிர்களைக்கூட இழக்க வேண்டிய சூல்நிலை உண்டாகிறது இது எல்லோரும் அறிந்ததே ! சுங்க அதிகாரிகளின் கவனக்குறைவால் கடத்தல்காரர்கள் எப்படியோ நுழைந்து விடுகிறார்கள் சரி இதை இனியெனும் நடக்காமல் இருக்க அரசாங்கம் மாற்று யோசனை செய்யலாமே ? அல்லது மக்களிடமே கருத்துக்களை கேட்கலாமே ! 
உதாரணத்திற்கு விமான ஓட்டிகள் பணிப்பெண்களுக்கு கைத்துப்பாக்கி சுடபயிற்சி கொடுத்து இந்த மாதிரியான நேரங்களில் மட்டும் கடத்தல்காரர்களை சுடஅனுமதி கொடுக்கலாமே ! மேலும் கடத்தல்காரர்களை காயத்துடனோ, உயிருடனோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விருதும் பணமுடிப்பும் கொடுத்து கௌரவிக்கலாமே ! 
விமான ஓட்டிகளும் பணிப்பெண்களும் வேலை முடிந்தவுடன் துப்பாக்கியை விமான நிலையத்தில் ஒப்படைத்து விடவேண்டுமென புதிதாக ஒரு சட்டத்தை இயற்றலாமே.

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
யோசனை மஞ்சிவாடு வண்டி சகடைசப்பையாம் சகலைப்பாடிகளுக்கு தெரிஞ்சா மொதல்ல இவனை போட்டுத்தள்ள சட்டம் கொண்டு வந்துடப்போறாங்கே.

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

100 முட்டாள்க(ல்)ள்

உலகம் சமநிலை பெறவேண்டும்.
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்.

ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில், ஒரு ஊரில், ஒரு தெருவில், ஏன் ? ஒரு வீட்டில்கூட இந்நிலை வரவில்லையே... காரணம் என்ன ? மனிதமனம் சுருங்கி விட்டது நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் இல்லை எல்லோருமே சுயநலவாதிகள் இதற்கு அடிப்படை காரணம் இறை பயமில்லை அதற்கும் காரணம் மக்களைப்போல தெய்வங்களும் பெருக்கி விட்டது தனது தலைவன் அரசியலில் ஊழல் செய்துதான் இத்தனை சொத்துக்களும் சேர்க்க முடியும் என்பது தொண்டனுக்கு நன்றாகவே தெரிகிறது இருப்பினும் தலைவனை குற்றவாளி என்றோ ? தண்டனை கொடுப்பதையோ ? ஏற்க மறுக்கிறான் ஆனால் ? அந்த தலைவனோ.. குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு தத்துவம் பேசுகின்றான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தொண்டனுக்கு அறிக்கை விடுகிறான் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதீர்... பேரூந்துகளுக்கு தீ வைக்காதீர் என்கிறான் இதன் முழு அர்த்தமென்ன ? இதைச்செய் என்பதுதான் இதை அன்றே 1971ல் வெளியான முகம்மது பின் துக்ளக் என்ற திரைப்படத்தில் நடிகர் சோ அவர்கள் வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் பாமரப்பயல் தொண்டனுக்கு இதன் சூத்திரம் தெரிவதில்லை காரணம் அறியாமை இதற்கு காரணமென்ன ? இவனுடைய தந்தை இந்த தலைவனின் அப்பனுக்கு கொடி பிடித்தவன் நாளை இந்த தலைவனின் மகனுக்கு கொடி பிடிக்கப் போவதும் இந்தத் தொண்டனின் மகனே வாழையடி வாழையாக இதுதானே நடக்கிறது இந்தியாவின் மக்கள் தொகை கூடிக்கொண்டே இருக்கிறது இதில் பெருமையா ? ஒரு நாட்டில் 100 முட்டாள்கள் இருப்பதைவிட 5 அறிவாளிகள் போதுமே நாட்டை வளர்க்க... படித்தவன்கூட திரைப்பட நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் இருந்து கொண்டு தன்னை மாவட்டத் தலைவர் என்றும், மாவட்டச் செயலளார் என்றும், மாவட்டப் பொருளாளர் என்றும் போட்டுக் கொள்கிறான், இதைவிட மானக்கேடு தந்தையின் பெயரைச் சேர்க்க வேண்டிய இடத்தில் அந்த நடிகனின் பெயர் தற்போது கிரிக்கெட் மோகம் வேறு உயிரை கொடுக்கத் தயாராக இருக்கிறான் கிரிக்கெட் கிறுக்கன் இப்படிப்பட்டவர்களால் நாடு முன்னேறுமா ? இல்லை பின்னேறுமா ? நாடு இளைஞர்களின் கையில் இருக்கிறது என்று சொன்னாரே மதிப்பிற்குறிய ஐயா திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இதன் அர்த்தம் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லையே ! என்பதே எமது ஆதங்கம்.