தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 04, 2016

புதிய சட்டம்


இந்த புகைப்படத்தில் விமான நிலையத்துக்கு முன்பு இருக்கும் பாலத்தை எடுத்து விட்டு தங்களது பார்வைக்கு வைத்து இருக்கிறேன் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

(இதை நான் கடந்த 05.10.2012 அன்று அதிகாலை From U.A.E Capital City Abu Dhabi to Germany Capital City Frankfurt விமானத்தில் பறக்கும் பொழுது உறக்கம் வராத காரணத்தால் எழுதியது)

சில நேரங்களில்... கடத்தல்காரர்களால் விமானங்கள் கடத்தப்படுகிறது அதை மீட்க அரசாங்கம் பல வகைகளிலும் செலவு செய்து ராணுவத்தையோ காவல்துறை வீரர்களையோ அனுப்பி சில நேரங்களில் உயிர்களைக்கூட இழக்க வேண்டிய சூல்நிலை உண்டாகிறது இது எல்லோரும் அறிந்ததே ! சுங்க அதிகாரிகளின் கவனக்குறைவால் கடத்தல்காரர்கள் எப்படியோ நுழைந்து விடுகிறார்கள் சரி இதை இனியெனும் நடக்காமல் இருக்க அரசாங்கம் மாற்று யோசனை செய்யலாமே ? அல்லது மக்களிடமே கருத்துக்களை கேட்கலாமே ! 
உதாரணத்திற்கு விமான ஓட்டிகள் பணிப்பெண்களுக்கு கைத்துப்பாக்கி சுடபயிற்சி கொடுத்து இந்த மாதிரியான நேரங்களில் மட்டும் கடத்தல்காரர்களை சுடஅனுமதி கொடுக்கலாமே ! மேலும் கடத்தல்காரர்களை காயத்துடனோ, உயிருடனோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விருதும் பணமுடிப்பும் கொடுத்து கௌரவிக்கலாமே ! 
விமான ஓட்டிகளும் பணிப்பெண்களும் வேலை முடிந்தவுடன் துப்பாக்கியை விமான நிலையத்தில் ஒப்படைத்து விடவேண்டுமென புதிதாக ஒரு சட்டத்தை இயற்றலாமே.

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
யோசனை மஞ்சிவாடு வண்டி சகடைசப்பையாம் சகலைப்பாடிகளுக்கு தெரிஞ்சா மொதல்ல இவனை போட்டுத்தள்ள சட்டம் கொண்டு வந்துடப்போறாங்கே.

53 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஜி
    துப்பாக்கி கலாசாரம் வேண்டாம் ஜி சிறைச்சாலை போல உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே பல உயிர்களை இழப்பதைவிட அவசியமற்ற சில உயிர்களை களைவதில் தவறில்லையே என்று பயணத்தில் இருக்கும் பொழுது மனதில் தோன்றியது.

      நீக்கு
  2. மலேசியன் விமானத்தை பைலட்டே கடத்திக்கொண்டு போனார்.விமான பைலெட் வேடத்தில் தீவிர வாதிகள் ஆயுதங்களுடன் விமானத்தில் நுழையலாம்.விமானத்தில் செல்பவர் ஹோஸ்டஸ் கையில் உள்ள ஆயுதத்தைப் பறித்து விமானத்தைக் கடத்தலாம். ஆகவே பைலட்டுகளுக்கும் ஹோஸ்டஸ் களுக்கும் ஆயுதம் வழங்குவது சிறந்த ஏற்ப்பாடு அல்ல. ஒன்று கவனித்தீர்களா? தற்போது தீவிரவாதிகளின் விமானக் கடத்தல் என்பது இல்லாமல் ஆகி விட்டது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நணஅபரே தங்களது கருத்திலும் உண்மை இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருக முனைவரே எதிர் காலத்தில் இப்படி வரலாம்.

      நீக்கு

  4. நீங்கள் சொல்வது எளிதாக தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது கடினம். விமான பணிப்பெண்ணிற்கோ அல்லது விமானிக்கோ வந்திருப்பவர் விமானக் கடத்தல்காரர் என தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்து அவர்கள் துப்பாக்கியை எடுக்கும் முன் கடத்தல்காரர் தனது வேலையைக் காட்டிவிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சாதாரண நல்ல மனிதர்களைவிட கெட்ட சிந்தனையுள்ளவர்களுக்கு மூளை அதிகமாகத்தான் வேலை செய்கிறது

      நீக்கு
  5. வணக்கம் சகோ,

    நல்ல யோசனை சம்பந்தப்பட்டவங்க சிவசம்போ ,,,, ஆகாமல் இருந்தால் சரி,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பந்தப்பட்டவங்கதான் சிவசம்போ கூட்டாளிகளாக இருக்கின்றார்களே....

      நீக்கு
  6. எப்போ யாரு எங்க வர்றாங்கன்னே தெரிய மாட்டேங்குது...என்னத்தைச் சொல்ல சிவ சம்போ...

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விமானத்தை விட்டு கீழே இறங்கினால்தான் உயிருக்குி உத்தரவாதம்

      நீக்கு
  7. சாமியேய்.. சதாசிவோம்!...

    நம்ம கத்திக்குத்து கந்தசாமி, உலக்கையடி உலகநாதன் -
    இவங்களுக்கெல்லாம் இந்த விஷயத்தப் பத்தி தெரியுமா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அந்தக் கோஷ்டிகளெல்லாம் பாவம் ஜி அவுங்க என்றைக்கு விமானத்துல போகப்போறாங்க....

      நீக்கு
  8. கூர்ந்து கவனித்தேன் ,எதுவும் மாறுதலாய் தெரியலை ,நீங்களே சொல்லிடுங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பாலத்தை அழித்து விட்டு அந்த இடங்களில் விண்டோர் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்

      நீக்கு
  9. துப்பாக்கி கிடைத்த சந்தோசத்தில் முரண்டு பிடிக்கும் பயணிகளை போட்டுத்தள்ளினால்.......????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க நண்பரே உங்களுக்கு மட்டும் வித்தியாசமாக தோன்றுகிறதே எப்படி ?

      நீக்கு
  10. ஜி! முதலில் விமானப் பணியாளர்களுக்குத் துப்பாக்கி வழங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டும்.ஏனென்றால் தீவிரவாதிகள் எந்த ரூபத்திலும் உள் நுழையலாம்.

    எல்லாவற்றையும்விட இது போன்றவை பரம ரகசியமாகத்தான் செய்யப்பட வேண்டுமே அல்லாமல் வெளிப்படையாகச் செய்யக் கூடாது என்பது எங்கள் தாழ்மையான கருத்து. வெளிப்படை என்றால் எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்பது போல நாமே காட்டிக் கொடுத்துவிடுகின்றோம். காமெராக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது நம் எல்லோருக்கும் தெரிகிறது. ரகசிய காமெராக்கள் இருப்பது கூட இங்கே ரகசிய காமெரா கண்காணிப்பு என்ற போர்டு வைத்துள்ளார்கள். சிரிப்புத்தான் வருகின்றது. கிரிமினல் புத்தி உள்ளவர்களுக்கு இதெல்லாமுமா கடக்கத் தெரியாது? செக்யூரிட்டி விஷயம் என்பது மிக மிக ரகசியமாகச் செயல்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரை நாளைய எனது ஆச்சிக்கு சாரி ஆட்சிக்கு உதவும் என்று கருதுகிறேன் நன்றி உங்களுக்கு பாதுகாப்புத்துறை வழங்கலாம் என்று தோன்றுகிறது
      //இங்கு ரகசிய கேமரா இருக்கிறது//
      என்ற போர்டைப் பார்த்து நானும் சிரித்து இருக்கிறேன்.

      நீக்கு
  11. இப்படி நான் சொல்ல நினைத்த விஷயங்களை எல்லோரும் முன்னாலேயே சொல்லி விட்டால் நான் என்ன சொல்ல?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வழக்கமாக தாங்கள்தான் முதலில் வருவீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. இது சரியான சட்டமாக தெரியவில்லை நண்பரே! உங்களை எப்படி பிரதமாராக ஆக்குவது?
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் காமராஜரைப்போல மனமும், ஹிட்லரைப்போல அதிகாரமாகவும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையாளன் ஒருமுறை கொடுத்தான் பாருங்களேன்....

      நீக்கு
  13. யோசனை நல்லாத்தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்டிதான் சகடை சப்பையாக இருக்கிறதோ ?

      நீக்கு
  14. தமிழகம் திரும்ப ஆசை வந்துவிட்டதா?

    விரைவில் ஒரு கட்சி ஆரம்பியுங்கள்... அல்லது இருக்கும் கட்சிகளில் ஒன்றில் இணைந்து செயல்பட ஆரம்பியுங்கள் நண்பரே!

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கின்றது நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. வருக நண்பரே கட்சி ஆரம்பிக்க இந்த மக்கள் என்னை நம்ம மாட்டார்கள் நான் அடுத்தவன் கட்சியில் சேர்வதா ? அதற்கு தீவிரவாகள் இயக்கத்தில் சேரலாமே...

    பதிலளிநீக்கு
  16. தூக்கக் கலக்கத்தில் எழுதியது என்கிறீர்கள், தூக்கம் கலைந்த பின்னும் இம்மாதிரி யோசனைகள் சரி என்று படுகிறதா.? cctv காமிராக்கள் பொருத்தி இருப்பதைத்தானே கூறுகிறார்கள் ரகசிய காமிராக்கள் வேறு இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா CCTV கேமரா தெரிந்தே இருப்பது அபுதாபியில் பேரூந்து நிறுத்த கண்ணாடி அறைக்குள் கேமரா இருக்கிறது என்று எழுதி இருக்கும் ஆனால் எங்கு இருக்கிறது என்று பார்க்கவே முடியாது

      நீக்கு
  17. அன்புள்ள ஜி,

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது...
    அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது...

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது.

    பணிப்பெண்களிடம் எளிதில் துப்பாக்கியைப் பிடுங்கி... விமானத்தை மிக எளிதில் கடத்திவிட வாய்ப்பாகக்கூட அமைந்துவிடும்; யோசிக்க வேண்டும்.

    புதிய சட்டம் போடலாம்... இப்பல்லாம் சட்டம் போட யார் ஆதரவு கொடுக்கிறார்கள்... மெஜாரிட்டி இல்லாமல் தட்டுத் தடுமாறி அல்லவா நடக்ககிறது...!

    த.ம.10.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே தாங்கள் சொல்வதும் நடக்க வாய்ப்பு இருப்பது உண்மையே எல்லாவற்றையும் சமாளித்தால்தான் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

      நீக்கு
  18. நல்லாருக்கே....யோசிக்கனும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ யோசித்து உடன் முடிவை சொல்லுங்கள் மோடிக்கு கடிதம் எழுத வேண்டும்.

      நீக்கு
  19. என்னண்ணா இப்படி ஒரு சட்டம் கொண்டு வரச் சொல்லிட்டீங்க....
    எல்லாரையும் சுட்டுப் புடுவானுங்களே... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணிகளை சுடமாட்டாங்கள்ல பிறகென்ன நண்பரே

      நீக்கு
  20. விமானத்திற்குள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டால் என்ன ஆகுமோ
    தெரியவில்லையே
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பயிற்சி சரியாகத்தானே கொடுப்பாங்க...

      நீக்கு
  21. ஏதேது சிலர், பதிவைக் கண்டும் காணாது போல் இருந்தால்,
    அதற்கும் ஒரு புதிய சட்டம் இயற்றி விடுவீர்கள்போல்
    உள்ளதே?
    அம்போ என்று இருந்தவர்கள் எல்லாம் இனி சிவசம்போ என்றும் நிலை வந்து விடும்போல் இருக்கிறது நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நல்ல யோசனை கொடுத்தீர்கள் நண்பா பதிவுக்கு நன்றி

      நீக்கு
  22. ம்.. நல்லாதான் சட்டம் இருக்கு.....? இப்ப விமானியையே நம்பமுடியவில்லை. கீழேயிருந்து வேற சுடுறாங்க. என்ன நேரம் என்ன நடக்குமோன்னு தெரியல.நீங்க கூறியது போல விமானத்தைவிட்டு இறங்கின பின்னாடிதான் உத்தரவாதம்.
    ஆவ்வ்..berlin தான் captial city. இது எப்போ மாத்தினாங்க ஜேர்மனி capital city frankfurt ஆ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சாரி மறந்து விட்டேன் பெர்லின் பாராளுமன்றத்துக்கும் போய் வந்தேன் எழுதும் பொழுது நினைவில் நிற்க வில்லை.

      நீக்கு
  23. நேற்றிரவு படித்து ஒட்டும் போட்டேன், இரவில் பின்னூட்டம் இட முடியவில்லை,

    இங்கே ரயில்வேயில் நீண்ட நெடும் தூர பயணமெனில் செக்ரூட்டி உண்டு. அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள், ரயிலில் ஏதும் பிரச்சனை எனில் அதை அவர்கள் கையாள்வதை கவனித்திருக்கின்றேன். விமானத்திலும் யாருக்கும் தெரியாமல் ஸ்பெஷல் ரெயினிங்க் எடுத்த செக்ரூட்டிகளை இவர் தான் என எவருக்கும் சொல்லாமல் ஆனால் அவசர காலத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுத்து அனுப்பலாம்.

    விமானி விமானத்தை கடத்தினார் என்பதற்காக எல்லோரையும் நாம் அபப்டியே நினைக்க முடியாது,அதில் அவர் உயிரும் போய் இருக்கின்றது.விமான பணிப்பெண்களுக்கு துப்பாக்கி கையில் கொடுக்கா விட்டாலும் இம்மாதிரி தாக்குதல்கள் நேரம் சமாளிக்க்கூடிய வகையில் பயிற்சிகள் கொடுக்கலாம். சும்மா அழகுக்கலை மட்டும் கற்பித்து உதடு முழுக்க லிப்டிக்கோட வந்து நிற்காமல் இதையும் கற்கட்டுமே!கராட்டோ போன்ற தற்பாதுகாப்பு கலைகள் சின்ன தட்டில் விழும் படியான வர்மக்கலைகளை கூட கற்பிகலாம்.

    விமான கடத்தல் இரண்டு மூன்று பேர் தான் எனும் போது துணிவுடன் அதை எதிர் கொள்ளும் தைரியம் இருந்தால் இம்மாதிரி விடயம் தெரிந்த ஒரிருவர் விமானப்பயணிகளை கொண்டே அவைகளை முறியடிக்கலாம்.

    ஆனால் அட்டாக் என்றதுமே பலருக்கு ஹாட் நின்று விடுமே? அதற்கு என்ன செய்வது? எனக்கும் நின்று விடும்? அட்பைஸ் மட்டும் செமையா தருவேன்ல! ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      உண்மையிலேயே பணிப்பெண்களை அழகுப் பதுமைகளாக வந்து செயற்கை சிரிப்பு சிரிப்பதைவிட வர்மக்கலை விடயம் அருமை நான் தந்த சிறிய பதிவில் இவ்வளவு விபரங்கள் எழுதியது அறிந்து மகிழ்ச்சி
      உடனே நண்பர் திரு. Johann Schneider-Ammann அவர்களுக்கு கடிதம் எழுதுகிறேன்

      நீக்கு
  24. அட்பைஸ் இல்லை அட்வைஸ், அதாங்க ஆலோசனை என திருத்தி படிங்க!

    பதிலளிநீக்கு
  25. நல்ல யோசனையாகத் தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  26. விமானப் பணிப்பெண்களிடம் துப்பாக்கி கொடுக்கலாம்தான். ஆனால், தீவிரவாதிகள் மட்டும் என்ன துப்பாக்கி படக் குறுவட்டுடனா வருகிறார்கள்? அவர்களும் ஆயுதங்களோடுதானே வருகிறார்கள்? மேலும், ஆயுதம் இருந்தாலே தப்பி விடலாம் எனில் போர்களில் எந்தப் பக்கமும் உயிரிழப்பே இருக்காதே? ஆயுதம் தாங்கியவர்களின் எண்ணிக்கை, அவர்களின் திறமை எனப் பல கூறுகள் இதில் உள்ளன இல்லையா? ஆனால், something is better than nothing. தற்காப்புக்காக, ஒரு வாய்ப்புக்காகவாவது நீங்கள் கூறுவது போல் செய்யலாம்.

    ஆனால், எனக்கொரு கேள்வி! (ஆரம்பிச்சுட்டான்யா). அவ்வளவு கட்டுப்பாடுகளையும் பல 'மட்ட' சோதனைகளையும் தாண்டி எப்படித் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் விமான இருக்கை வரை வர முடிகிறது?! அந்தளவுக்குப் படுமட்டமாகத்தான் விமான நிலையங்கள் இயங்குகின்றன எனில், எதற்கு அவ்வளவு பாதுகாப்பு, சோதனைகள் எல்லாம்? பேசாமல், கோயம்பேடு பேருந்து நிலையம் போல் நடத்தி விட்டுப் போகலாமே விமான நிலையங்களையும்? செலவாவது மிஞ்சும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முடிவில் சொன்னீர்களே அதுதான் எனது கருத்தும் மெத்தப் போக்குதனம் நம் நாட்டில் நிறைய இருக்கின்றதே இதன் அடிப்படை காரணம் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  27. உங்கள் பதிவை கன்ட்ரோல் பண்ண ஒரு சட்டம் போடனும்,,,,, சும்மா நகைப்புக்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வக்கீல் செய்தாலும் செய்வீங்கோ...

      நீக்கு